பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 29, 2010

மண்டேனா ஒன்று

இருண்ட இதயங்கள்

”ஒருவருக்கு நமது இதயத்தில் இடமளித்துவிட்ட பிறகு அவரை எவ்வாறு மறக்க இயலும்?” இது ஏதோ ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனமாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். இல்லை!! இதுவரை வாழ்நாளில் திரைப்பட்த்தையே பார்த்தறியாத 25 வயது படைத்த பெண்ணினுடைய வார்த்தைகள். இவர் வீட்டில் தொலைக்காட்சியும் கிடையாது; தனது குடும்பத்தார் மற்றும் அண்டை வீட்டு சிறுமிகள் இருவர் தவிர இதுவரை யாருடனும் பழகியதும் கிடையாது.


சமியா முல்லாஹ் என்ற இப்பெண் தனது எதிர்காலக் கணவருடைய வருகைக்காக கடந்த ஏழு ஆண்டுகளாக்க் காத்திருக்கிறார். அவரின் எதிர்காலக் கணவர் வேறு யாருமல்ல, மும்பை செண்ட்ரல், முல்லுண்ட் மற்றும் வில்லே பார்லே ரயில் குண்டு வெடிப்புகளில் (2003) முக்கியத் தொடர்புடைய தீவிரவாதி!இன்னும் 19 நாட்களில் நடைபெறவுள்ள அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பொழுது 27 வயதுகள் நிரம்பியிருந்த அத்னான் முல்லா, மே 5, 2003 இல் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் பம்பாய் உயர்நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மாநில அரசு உயர்நீதி மன்றத்தின் ஜாமீன் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளது.


இதற்கிடையில், மறுபடியும் திருமண ஏற்பாடுகள் மணமகள் வீட்டில் துவங்கி விட்டன. அத்னான் இன்னும் சில நாட்களில் ஜாமீனில் வெளி வந்து, தன்னை திருமணம் செய்து கொள்வார் என சமியா உறுதியாக நம்புகிறார். மேலும் தான் சென்ற வருடம் மேற்கொண்ட ஹஜ் யாத்திரைக்கு அது அல்லாஹ் தரும் பரிசாக இருக்கும் எனவும் நம்புகிறார்.

“இதுதான் என்னுடைய விதி. எங்களுடைய விதியானது 80,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டுவிட்ட்தாக எங்களுடைய இமாம் கூறியிருக்கிறார்”, என்று சமியா சொல்கிறார். விதி என்பது எப்பொழுதுமே ஒரு வசதியான வார்த்தை, முட்டாள்தனமான வாதங்களுக்கு பைத்தியக்காரத்தனமான வர்ணங்கள் கொடுப்பதற்கு.

தீவிரவாதம், பொதுவாக நாம் அறிந்தது போல், ஆண்களுடைய குரலையும், முகத்தையும் காரணிகளையும் உடையது. அவர்களுடைய நோக்கங்களையும் நாம் அறிவோம். ஆனால் அவர்களைச் சார்ந்துள்ள பெண்களைப் பற்றி? அறிந்தோ அறியாமலோ, சட்டரீதியான சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தீவிரவாதிகளுடன் கட்டுண்டுள்ளவர்கள் பற்றி? இவர்கள் தங்களுடைய கறை படிந்த வாழ்க்கைத் துணைகளை மறுதலிக்கிறார்களா அல்லது அவர்களுக்குத் துணை நிற்பதில் உறுதியாக இருக்கிறார்களா அல்லது ஒரு மறுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்களா?

இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடி, உத்திரப் பிரதேசத்தின் மேற்கில் அமைந்துள்ள, “தீவிரவாதிகளின் ஆரம்பப்பள்ளி” என்றழைக்கப்படும் மாவட்டமான “ஆஸம்கார்க்” ற்குப் பயணம் மேற்கொண்டோம். அங்கு முதலில் செல்வதே பெரிய விஷயம், பிறகு அங்குள்ள பெண்களிடம் பேசுவது. அங்குள்ள பெண்கள் பேசா மடந்தைகளாகவும், அணுகுவதற்கே கடினமானவர்களாகவும் இருந்தனர். இவ்வாறான இடங்களில் அவர்களை நேரடியாக அணுகவும் முடியாது. அவர்களுக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதை விட எதுவும் தெரியாது என்பதே நிதர்ஸனம், அவர்கள் கதறி அழுவதை மட்டுமே நாம் காண இயலும்.


அங்கு நாம் ஆயிஷா என்பவரைச் சந்தித்தோம். அவருடைய கணவர், தாரிக் முகமது கஸ்மி, 32 வயதாகும் யுனானி மருத்துவர். 2007 இல் நடைபெற்ற பைசாபாத், பராபங்கி மற்றும் லக்னோ குண்டு வெடிப்புகளின் மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர். இவர்தான் உத்திரப் பிரதேச ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமியின் பிராந்தியத் தளபதியாக போலீஸாரால் கருதப்படுபவர்.


தாரீக் தற்போது லக்னோ அருகிலுள்ள உன்னாவ் சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கிறார். ஆயிஷா தற்போது சமோபூர் மற்றும் அன்வாக் கிராமங்களுக்கிடையே, அவருடைய தாய் வீட்டிற்கும் மாமியார் வீட்டிற்குமாக பந்தாடப்படுகிறார். 22 வயதேயுடைய அவர் இப்போது நான்கு குழந்தைகளுக்குத் தாய். மூத்த மகனுக்கு வயது 7, இளையவனுக்கு 3.


2007 இல் தாரீக் கைது செய்யப்பட்ட்திலிருந்து இதுவரை ஆயிஷா இவரை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. “சந்தித்தும் என்ன செய்யப் போகிறாள்?” இவர்கள் இருக்கும் கிராமத்திலிருந்து லக்னோ சிறைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்வதற்கு அரை நாள் தேவைப்படும். மிகவும் சிரம்மான பயணம் என அவரது தந்தை முகமது அஸ்லம் கூறுகிறார்.


அவரைப் பேச வைப்பதே மிகுந்த சிரம்மாக இருந்த்து. வெகு நேரம் மெளனமாகவே இருந்தார். “உங்களுக்குத் திருமணமாகி எவ்வளவு காலம் ஆகிறது?” என்று கேட்டேன். ஒன்பது ஆண்டுகள் என பதிலளித்தார். அப்பொழுது அவருடைய மகள் ஜோஹா வந்து அவரை அணைத்துக் கொண்டார். அப்பொழுதுதான் பள்ளிலியிலிருந்து திரும்பியிருந்தாள். நீங்களும் உங்கள் மகளைப் போன்று கல்வி கற்பதற்கு விரும்பவில்லையா என்று கேட்ட்தற்கு, நான் கல்வி கற்க மிகுந்த விருப்பமுடையவளாக இருந்தேன்; தவிர என் தந்தையிடம் அதற்காக மன்றாடியிருக்கிறேன் ஆனால் அவர் என்னை அனுமதிக்கவில்லை, என்று அவரது தந்தையைப் பாராமலேயே கூறினார்.


அவருடைய தந்தைக்கு தாரீக்கினுடைய தந்தையைத் தெரியும். ஆயிஷா தனது ஐந்தாம் வகுப்பு படிப்பை முடித்த்துவுமே இருவருடைய திருமணத்தையும் அவர்களுடைய தந்தையர் நிச்சயித்து விட்டனர். ஆனாலும் ஆயிஷா தனது திருமணத்திற்குப் பிறகே தாரீக்கை முதன் முறையாகப் பார்த்தார். ஆனாலும் அவர்களுடைய உறவு எவ்வித ச்ச்சரவுகளும் இல்லாமல் மிகுந்த சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது. இயல்பாகவே அவர் மிகவும் நல்லவர் என்கிறார் ஆயிஷா.

தாரீக் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்கு பத்து நாட்கள் பிறகே அவரைக் கைது செய்த்தாக போலீசார் கூறுகின்றனர். இதே போன்று இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், RDX வெடிமருந்து வைத்திருந்த குற்றத்திற்காக.


இந்தியாவில் தினமும் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு ஆசம்கார்கில் இருக்கும் இளம் முஸ்லிம் சிறுவர்கள்தான் காரணம் என்று சொல்லி உங்களை போலீசார் நம்ப வைத்து விடுவார்கள். ATS என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன Anti-Muslim Squad ஆ? என்று அப்துல் ரஹ்மான் என்பவர் குமுறுகிறார். இவருடைய 22 வயது மகனான சஃபியுர் ரஹ்மான் அஹமதாபாத், சூரத், ஜெய்ப்பூர் மற்றும் தில்லி குண்டுவெடிப்புகளில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

அரசாங்கம் ஒரு சட்டப்பூர்வமான விசாரணை நட்த்தி ஏன் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க்க் கூடாது?? இவ்வாறு கேட்பவர், முகமது ஹனீஃப் என்ற ஒரு கல்லூரி விரிவுரையாளர். எலெக்ட்ரானிக் இஞ்சினியரான இவரது மகன் முகமது சர்வார், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளி. அவருடைய மகன் கைது செய்யப்பட்ட்திலிருந்து, ஹனீஃப் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.டாக்டர்.ஜாவேத் அக்தர் என்பவருடைய மகன் தில்லி குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, இப்போது தலைமறைவாக இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் இதர உதவிகள் பெற்றுத் தருவதற்காக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார். நாங்கள் எங்களது சட்டரீதியான மற்றும் சமூக ரீதியான போராட்டங்களை கூட்டாகச் சந்திக்க முடிவெடுத்துள்ளோம் என்று கூறுகிறார் ஜாவேத் அக்தர். எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணரான இவர் கடந்த லோக் சபை தேர்தலில் போட்டியிட்டவர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மிகவும் ஆவேசமாக விவாதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், அவர்களைச் சார்ந்த பெண்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அவர்களுக்காகப் ப்ரார்த்தனை நிகழ்த்திக் கொண்டும், ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக் கொண்டும் இருக்கின்றனர். அவர்களது எண்ண ஓட்டங்களை அறிவது மிகவும் கடினமான விஷயம்.அவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை. என்றாவது ஒருநாள் அவர் சிறையிலிருந்து வெளி வருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆயிஷா. ஒவ்வொரு தினமும் அவருடைய குழந்தைகள் அவரைப் பற்றிக் கேட்கும்போது நான் என்ன சொல்வேன்? சில வேளைகளில் பள்ளியில் அவர்களுடைய நண்பர்கள் கேட்கும்போது என்ன சொல்வது? அல்லது அவர்களுக்கு அவர்களது தந்தையை நினைவுதான் இருக்கிறதா? என்று கண்ணீரைத் துடைத்தபடியே வேதனையுடன் கூறுகிறார் ஆயிஷா.டிசம்பர் 12, 2007 இன் நிகழ்வுகள் ஆயிஷா துயிலெழும் முன்பாகவே நடந்து முடிந்து விட்டன. அவருக்கு அது ஒரு சாதாரண தினமாகவே இல்லை. வழக்கத்திற்கு மாறாக உணவு கூட உட்கொள்ளாமல் அவருடைய கணவர் விடியற்காலை 6 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு சென்று விட்டார். அவர் எப்போதுமே உணவைத் தவிர்த்த்தில்லை. அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்ட்தாக நான் உணர்ந்தேன். அவரிடமிருந்து ஒரு அழைப்பு கூட இல்லை. மொத்த்த்தில் அன்று அவர் அவராகவே இல்லை.அதற்கு மறுதினமும் அவர் வீடு திரும்பாத நிலையில், ரானி கி சராய் காவல் நிலையத்தில் அவரைக் காண்வில்லை என புகார் அளிப்பதாகத் தீர்மானித்தோம். அவரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லை, டிசம்பர் 22 ஆம் தேதி அவரைத் தொலைக்காட்சி செய்தியில் சிலர் பார்த்த்தாகத் தெரிவித்தனர். ஏதோ ஒரு குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார், என நினைவு கூர்கிறார் ஆயிஷா.அவருடைய கணவர் மீது எவ்விதமான குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன என்பது ஆயிஷாவிற்கு சரியாகத் தெரியவில்லை. அவரும் அவரை தொலைக்காட்சி செய்தியில் பார்க்கவில்லை. தொலைக்காட்சி என்ற பொருளை இதுவரை ஆயிஷா பார்த்த்தே கிடையாது. சில ஹிந்தி மற்றும் உருது நாளேட்டுச் செய்திகளைப் படித்து விட்டு, எப்படி இவ்வாறான அடிப்படையற்ற பொய்ச் செய்திகளை இவர்கள் எழுதுகிறார்கள்?? என்று கோபத்துடன் கேட்டார்.மீடியா வெளியிட்ட செய்திகள் சமியாவையும் அதிருப்தியுறச் செய்தன. அவர்கள் எவ்வாறு இவ்வாறான பொய்யான ஜோடிக்கப்பட்ட செய்திகளை வெளியிடுகிறார்கள்?? இவர்கள் சித்தரிப்பது போன்றதான மனிதரில்லை அவர். அவர் எவ்வளவோ பேருக்கு பல உதவிகள் செய்துள்ளார், நீங்கள் ஏன் அதெல்லாம் எழுதக்கூடாது? என்று குமுறினார்.இப்பெண்கள், எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களது கணவன்மார்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதை தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாக நினைக்கிறார்கள். சில வேளைகளில் இவ்விஷயத்தில் அவர்கள் தவறுவதும் உண்டு. முகமது காலித் முஜாஹித் என்பவர் பைஸாபாத், லக்னோ மற்றும் பாராபங்கி குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக்க் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட போது, அவரது மனைவி ஷப்னம் பானு தான் ஏமாற்றப்பட்டதாகவே உணர்ந்தார்.இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே ஆகியிருந்தன. தனது கணவர் விசாரணைக் கைதியாக உன்னாவ் சிறையில் இருந்த போது தனது புகுந்த வீட்டிலேயே வசிப்பதாக ஷப்னம் முடிவு செய்திருந்தார். ஆனால் இம்முடிவு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர் நிரந்தரமாக தனது பெற்றோர் வீட்டிற்கே திரும்பி விட்டார். “ இப்போதிருக்கும் நிலையில் அவள் திரும்பி வருவாள் என்று நினைக்கவில்லை. அவள் தன்னுடைய எல்லா உடமைகளையும் எடுத்துச் சென்று விட்டார். சமாதானம் என்ற நிலையெல்லாம் இப்போது கடந்து விட்ட்து.” என்கிறார் ஜஹீர் ஆலம் சலாஹி, இவர் காலித் முஜாஹித்தினுடைய மாமா, தவிர, ஜமாத்-ஈ-இஸ்லாமியின் உறுப்பினர். அவளது துரோகத்தால் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. அவளால் விளைந்த மன உளைச்சலால் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இப்போது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன் என்கிறார்.மனைவி என்பவளுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. கணவர், அவர் சார்ந்தவர்கள் மற்றும் அண்டை அயலில் இருப்போர் அவர் வரும்வரை காத்திருக்குமாறு கூறுகின்றனர். அந்த நாள் எப்போது வரும் என்று அவர்களுக்குத் தெரியுமா அல்லது அந்த நாள்தான் வருமா என்றாவது தெரியுமா?வீட்டிலேயே அமர்ந்திருப்பது சஹிக்க இயலாத்தாய் இருக்கிறது. “ பழைய நினைவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன, அது நம்மை பைத்தியமாக அடித்து விடுகின்றன, என்கிறார் 23 வயதாகும் ஷஹிபா. அவர் அச்சூழலில் இருந்து வெளியேற நினைக்கிறார். ஆனால் எப்படி? தனது கணவன் மற்றும் புகுந்த வீட்டின் எதிர்ப்புகளுக்கிடையில் அவர் அங்கிருந்து வெளியேறி இப்போது ஆங்கிலத்தில் பட்டமேற்படிப்பிற்காக சேர்ந்துள்ளார்.நிதான புத்தியுடன் இருப்பதற்கு இது ஒன்றுதான் வழி. ஆனால் இவர்கள் இதனைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அதிருஷ்டவசமாக எனது பெற்றோர் என்னைப் புரிந்து கொண்டனர். ஆனாலும் அவளது பெற்றோர், அவள் தன் திருமண உறவை முறித்துக் கொள்வாள் என்று நம்பவில்லை. அவளுடைய கணவர் வெகு விரைவில் திரும்பிவிடுவார் என்று நம்புகின்றனர். ஆனால் ஷஹிபாவிற்கு சந்தேகம்தான். இதற்கிடையில் ஷஹிபா ஒரு வங்கியில் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். அவளது புகுந்த வீட்டினர் அதனை விரும்பவில்லை. ஆயினும் வேலை கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன், ஏதும் செய்யாமலேயே காலம் கட்த்த விரும்பவில்லை என்கிறார் ஷஹிபா.எல்லாவற்றையும் விட அவர்கள் தனித்து விடப்பட்ட நிலையிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள். எப்போதுமே உங்களுடைய வாழ்க்கை ஒருவரைச் சுற்றியே இருக்கும்போது, அவருடைய இல்லாமை நிலை, உங்களுடைய வாழ்க்கையை நிலையற்றதாக்கி விடுகிறது. நாம் பற்றிக் கொள்ள ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் நம்பிக்கை.ஆயிஷா, தனது கணவரின் சிறு நூலகத்தில் இருக்கும் மதம் தொடர்பான புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நிம்மதியை அடைகிறார். அவர் நிறைய நூல்களை வைத்திருக்கிறார். ஆனால் அவர் இங்கிருந்தபோது நான் எதையுமே படிக்க முயற்சித்த்தில்லை. இப்போது அவை எனக்கு நிம்மதியையும் ஆறுதலையும் தருகின்றன. “உங்கள் கணவருக்கு உண்மையிலேயே அந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளது என்பதை நீங்கள் அறிய நேர்ந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? என்று ஆயிஷாவிடம் கேட்டேன். அதற்கு அவர், “ அவரை அறிந்த யாரிடம் வேண்டுமானாலும் அவரைப் பற்றி நீங்கள் கேட்கலாம். இருக்கவே முடியாது என்றுதான் அனைவருமே கூறுவர், என்று ஆயிஷா பதிலளித்தார்.சமியாவும் இவ்வாறேதான் பதிலளித்தார். இதே கேள்வியை அவரிடமும் கேட்ட போது, “ அவர் குற்றவாளியே அல்ல!” என்று தனது முகத்தைத் தனது துப்பட்டாவால் மூடியபடியே பதிலளித்தார். அவர் மிகவும் அன்பானவர், அவரால் யாரையுமே காயப்படுத்த முடியாது, என்றார்.சமியா, தனது கணவருடைய அப்பாவித்தனத்தைப் பற்றி உறுதியாக இருக்கிறார். அவர்களது திருமணம் பத்தாண்டுகளுக்கு முன்னரே நிச்சயிக்கப்பட்டுவிட்ட படியால், அனைவரையும் விட சமியா அவரை நன்கறிவார்.பொதுவாக அனைத்து சட்ட வழக்குகளிலுமே பாலின பேதம் காணப்படுகிறது என்கிறார் ஃபர்ஹானா ஷா, பம்பாய் உயர்நீதிமன்ற வழக்கறிஞர். அவர் சில தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறார். குறிப்பாக, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு. சில சமயங்களில் விவாகரத்து வழக்குகளினால் குடும்ப நீதிமன்றங்கள் நிறைந்திருக்கும் போது, இந்த தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய மனைவிகள் தனிப்பட்டு உயர்ந்து நிற்கின்றனர், என்கிறார். இவர்கள் பொதுவாகவே பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தட்டு நிலையில் இருப்பவர்கள், தவிர போதுமான கல்வியறிவும் கிடையாது. ஆனால் தங்களது திருமண பந்த்த்தை நிலைக்க வைப்பதில் அவர்களுக்கு இருக்கும் முனைப்பு அலாதியானது, என்கிறார்.சமியாவிற்கு, வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வது என்பது அறவே நடவாத செயல். தன்னைத் தீவிரவாதியின் மனைவி என்று சமூகம் அழைத்தாலும் அதனைப் பொருட்படுத்த்த் தயாராக இல்லை. இதுதான் அவருடைய காதலின் பரிசு. அவர் தனது வாழ்க்கையில் பல துன்பங்களைக் கடந்து வந்தவர், இளவயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டார். நான் எப்படி அவரை நிர்க்கதியாக விட முடியும்? அவருடைய வலியோடு ஒப்பிடுகையில் என்னுடையது ஒன்றுமே இல்லை, என்கிறார் சமியா.தானே சிறையில் தன்னுடைய கணவரை சந்திக்கச் சென்றதை சமியா நினைவு கூர்கிறார். அவர் கேட்டாராம், என்னோடு இருந்தமைக்காக நீ வருத்தப்படுகிறாயா?. “ நான் சொன்னேன், “உங்களை எனது வாழ்க்கையில் அடைந்த்தை விட எனக்கு அதிர்ஷ்டம் ஏதும் இருக்க முடியாது”, என்று, என்று புன்முறுவலுடன் தெரிவிக்கிறார் சமியா.கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, சமியா வீட்டில்தான் இருக்கிறார், ஏதும் செய்வதற்கில்லாமல். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கும் செல்லவில்லை. ஏனெனில் அவரது தந்தை அதற்கு உடன்படவில்லை.சமியாவிற்கு அவளது சினேகிதிகளைப் போன்று திருமணமாகியிருந்தால், ஒரு குடும்பம் இருந்திருக்கும். ஆனால் அவள் இப்போது அவளது பெற்றோர் வீட்டில். அவளது சகோதரர்களின் மனைவிமார்களோடு சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வது மற்றும் அவர்களுடைய குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது என்று இருக்கிறார். தற்போது, அரபு மொழி இலக்கணத்தைப் பயின்று வருகிறார். அதுவும் திருமணம் வரைதான், பிறகு அத்னான் சம்மதித்தால் தொடர்வேன், என்கிறார். வேறு ஏதேனும் பொழுதுபோக்குகள் உண்டா என வினவினேன். ஆம் படிப்பேன், குரான், என்றார். வேறு ஏதேனும் படிப்பீர்களா என்று கேட்ட்தற்கு, படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் குரானிலேயே இருக்கும்போது வேறு எதையும் படிக்கத் தேவையில்லை, என்று மன உறுதியுடன் கூறினார்.[ இக்கட்டுரை சென்ற வார, “The Week” வாராந்திரியில் கவர் ஸ்டோரியாக வெளியிடப்பட்டிருந்தது, தமிழில் யதிராஜ் ]


பிகு: சண்டேனா இரண்டு வரும் வரையில் மண்டேனா ஒன்று என்று யதிராஜ் எழுதுவார் ( இன்னும் அவரிடம் கேட்கவில்லை, எழுதுவார் என்ற நம்பிக்கையில் )

43 Comments:

Anonymous said...

இட்லி வடை மெல்ல மெல்ல இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரப்புகளை வெளியிடும் ப்ளாகாக மாறி வருகிறதோ என்று சந்தேகப் பட வேண்டியுள்ளது. இப்படி எப்பொழுதாவது காஷ்மீரில் கணவனை இழந்த, குழந்தையை, இழந்த, வீடுகளை இழந்த, மானத்தை இழந்த, வீடு வாசல் சொத்து அனைத்தையும் இழந்து அநாதரவான பரிதாபத்திற்குரிய பண்டிட்களைப் பற்றி ஏதாவது கட்டுரை எழுதியிருக்கிறீர்களா? ஏன் நம் அருகில் கோயம்புத்தூரில் குண்டு வைத்துக் கொல்லபட்டு அநாதரவான குடும்பத்தை யாரும் பேட்டி கண்டதுண்டா? இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் நம்பிக்கை வைத்து இந்துக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு அனுதாப தேடும் இது போன்ற கட்டுரைகள் நம் மவுண்ட் ரோடு மாவோ , சர்தேசாய், பர்கத், காங்கிரஸ் தி மு க தான் வெளியிடும். இந்த கோஷ்டியில் எப்பொழுதிருந்து இட்லி வடையும் சேர்ந்தது. சென்றவாரம் வீரப்பன் கும்பலுக்கு ஆதரவு இந்த வாரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் தேடலா? எங்கே போய் கொண்டிருக்கிறது இட்லி வடை?

SAN said...

Hi IV,
Here is link to modi's response to SIT & Amitabh

http://deshgujarat.com/2010/03/28/modi-backs-amitabh-lashes-out-at-talibans-of-untouchability/

jaisankar jaganathan said...

//, படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் குரானிலேயே இருக்கும்போது வேறு எதையும் படிக்கத் தேவையில்லை, என்று மன உறுதியுடன் கூறினார்//

(a+b)(a-b) க்கு என்ன பதில் என்று குரானில் இருந்நால் பதில் போடவும்

sitrodai said...

இந்தயாவின் முதல் எதிரி பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்ல.

நமது மீடியாக்கள்தான்.

kggouthaman said...

// சண்டேனா இரண்டு வரும் வரையில் மண்டேனா ஒன்று என்று யதிராஜ் எழுதுவார்.//
அவரு ஐம்பதாவது பதிவுக்கு அப்புறம் தற்காலிக ஓய்வு என்று எழுதியிருக்கிறாரே - !!
ஐயோ - இ வ ஏன் இப்படி எங்களைக் குழப்புகிறீர்கள்?
நிற்க. கட்டுரை, மொழிமாற்றம் நன்றாக இருக்கிறது. பெண் கல்வி நாட்டு முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம் என்று தோன்றுகிறது.

nerkuppai thumbi said...

வீக் வார இதழில் வந்த கட்டுரையைப் பார்க்க நேர்ந்தது. அதில் இன்னும் ஒரு பெண்ணைப் பற்றியும் - மாலேகான் வெடிகுண்டு வழக்கில் கைதான புரோஹித் என்ற நபரின் மனைவி.- இருந்தது; அதை ஏனோ மொழி பெயர்த்து உங்கள் பதிவில் கொடுக்கவில்லை.

படிப்பவர் எவரும் புரோஹித்தின் மனைவி கல்வி அறிவு பெற்ற காரணத்தால் அந்த வழக்கை, நிலையை எவ்வாறு எதிர் கொள்ளுகிறார், ஆசம்கட் பெண்களின் நிலையினின்று எவ்வளவு மாறு பட்டது என விளங்கும்.
கட்டுரை ஆசிரியர் கூட காவல் துரையின் வழக்கு பதிவு செய்து, நடத்தவதில் குறைகளையே அல்லது கரைகள் உள்ளனவோ என எண்ணம் எழும் படி எழுதி இருப்பதாகத் தெரிகிறது. இது நம் நாட்டு பத்திரிகை காரர்களுக்கு உரித்தான "செக்குலரிசம்".
இன்னும் ஒன்று: ஒரு "பயங்கரவாதியின் மனைவியும் அவர் அவாறு செய்திருக்க மாட்டார் என நம்புகிறேன்; அவர் அவ்வாறு செய்திருந்தால் தவறு தான்; , விடுதலை ஆகி வந்தவுடன், அவரை மாற்ற முயல்வேன் எனச் சொல்லவில்லை என்பது என் ஆதங்கம்.

Anonymous said...

AN excelent article.another side of the coin.atleast now the hindus and paaps must come out from their brain washed imagination that all muslims are terrorist.what about these innocent muslims taken into custody as as suspect? what about their future if they have found not guilty?the government should take some serious steps to find the real culprit and realease these innocent.otherwise it will same like in com.bomb blast case whereby the innocents were realesd after 14 years.oneof them is going to be terrorist to take revenge.

But surprisingly this kind of article in IV and that too translated by yathiraja sampathkumar ????(normaly he translate/ write agonist muslims and non bramins?)
how did you managed IV?
Any way its good iv and yathiraj start poening their Eyes.Like this if hindus and other pappas can open their eyes, defenetly this country will improve.

Don said...

Regarding women's freedom, there are people who complain that men deny freedom for women. But the real fact is women build a cocoon around them and limit themselves to it. They denied freedom for themselves in the name of religion and custom. This attitude is main reason behind polygamy being more acceptable in places like afghanisthan,Iraq etc. I believe the huge population growth among muslims is also due to this servile attitude of women. Please refrain from converting to muslims(for obvious reasons) after reading this article.

Anonymous said...

//தனது கணவர் விசாரணைக் கைதியாக உன்னாவ் சிறையில் இருந்த போது தனது புகுந்த வீட்டிலேயே வசிப்பதாக ஷப்னம் முடிவு செய்திருந்தார். ஆனால் இம்முடிவு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர் நிரந்தரமாக தனது பெற்றோர் வீட்டிற்கே திரும்பி விட்டார். “ இப்போதிருக்கும் நிலையில் அவள் திரும்பி வருவாள் என்று நினைக்கவில்லை. அவள் தன்னுடைய எல்லா உடமைகளையும் எடுத்துச் சென்று விட்டார். சமாதானம் என்ற நிலையெல்லாம் இப்போது கடந்து விட்ட்து.” என்கிறார் ஜஹீர் ஆலம் சலாஹி, இவர் காலித் முஜாஹித்தினுடைய மாமா, தவிர, ஜமாத்-ஈ-இஸ்லாமியின் உறுப்பினர். அவளது துரோகத்தால் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. அவளால் விளைந்த மன உளைச்சலால் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இப்போது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன் என்கிறார்.//

அதாவது, தன மகன் வெடி குண்டு வழக்கில் கைது ஆனது அவருக்கு மன உளைச்சலோ, மாரடைப்போ தரவில்லை. ஆனால், மருமகள் (மன உறவை முறிக்கும் விதமாக நடந்துகொள்வது மாரடைப்பு வரக் காரணமாய் இருந்தது.
அல்லா தான் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.

anonymous: //AN excelent article.another side of the coin.atleast now the hindus and paaps must come out from their brain washed imagination that all muslims are terrorist//

The anaani has mentioned "paaps"; perhaps he refers to paappaans, like periyaar daasan and company refers to brahmins. Let it be clear to him that the hindus NEVER had imagination that ALL MUSLIMS ARE TERRORISTS. They were upset that the majority well-minded are not able to correct the misguided from taking to terrorism.

R.Gopi said...

சண்டேன்னா ரெண்டு பிறகு “மண்டேன்னா மூணு” இப்படி வரும்னு நெனச்சேன்...

ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சுபா...

ஜெய்சங்கர் ஜெகன்னாதன் கேள்விக்கு என்ன பதில்??

யதிராஜ சம்பத் குமார் said...

நெற்குப்பை தும்பி :

நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. இதுவே வழக்கத்தை விட மிகப்பெரிய கட்டுரையாக நீண்டுவிட்டது. தவிர பெட்டிச் செய்திகள் மற்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளையும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமெனில் இதை இரண்டு பாகங்களாக வெளியிட வேண்டிவரும் என்பதாலேயே முடிந்தவரை சுருக்கிக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு காரணங்கள் ஏதுமில்லை.

அனானி :

இது இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பதிவு என்று எப்படி முடிவு கட்டினீர்கள் என்று தெரியவில்லை. தீவிரவாதிகளுடன் உள்ள சமூகப் பிணைப்பால் அவர்களது மனைவியரது வாழ்க்கை எவ்வாறு தடம் புரண்டுள்ளது என்பதை சித்தரிக்கும் விதமான கட்டுரையே தவிர நீங்கள் கூறியது போல் எவ்விதமான தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் பதிவு இல்லை.

stop this nonsense said...

its time media stop sympathising with families of extremists who blow trains and buildings - both Hindu and Muslim. Its a matter of common sense that their families were aware of their terrorist connections and clandestine activities, well before the government does. Then why the hell is the media acting as if these family members are the victims when in actuality most of them are silent accomplices to their crimes?

யதிராஜ சம்பத் குமார் said...

I regret to have known that the intention of this article has completely been misconstrued by some of the commentators here. This is just to portrait how the better halves and children of those terrorits have been suffering and how their life has been derailed just because of being their better halves.

\\\But surprisingly this kind of article in IV and that too translated by yathiraja sampathkumar ????(normaly he translate/ write agonist muslims and non bramins?) ///

And as far as the abouve quoted is concerened, Its a "TOTAL GARBAGE". I have never been against any particular sector.

Anonymous said...

தண்ணீர் பஞ்சம்… தார்ப் பாலைவனத்துக்கு அடுத்த இடம் தமிழ்நாட்டுக்குத்தான்!
-- இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார்

தமிழ்நாட்டுக்கு அடுத்த இடம்தான் தார்ப்பாலைவனம்..! ஏனென்றால் தமிழகம் எதிலுமே முதலிடம்தான் என்பதைத்தான் கருணாநிதி விரும்புவார்…!

ஜீயார் said...

இது jaisankar jaganathan க்கான பதில்

//(a+b)(a-b) க்கு என்ன பதில் என்று குரானில் இருந்நால் பதில் போடவும்.//

(a*a)-(b*b) என்று இதற்கான பதில் குர்ரானில் இருக்கிறது. அதைப் படிக்கும் ஞானம் இருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மையான இஸ்லாமியன் said...

//இட்லி வடை மெல்ல மெல்ல இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரப்புகளை வெளியிடும் ப்ளாகாக மாறி வருகிறதோ என்று சந்தேகப் பட வேண்டியுள்ளது//

அட, அனானி, உனக்கு இப்போதுதான் சந்தேகம் வந்துச்சா?

நடுநிலை நாளிதழ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுமாதிரி இப்படி தீவிரவாதிக்கு கூஜா தூக்கும் வலைப்பதிவுகளுக்க்கு நடுநிலை பிளாக் என்று வலையுலகில் பெயர்..

பொது அறிவு வேனும் சார்..

jaisankar jaganathan said...

//அதைப் படிக்கும் ஞானம் இருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
//

அப்படின்னா உங்களூக்கு ராக்கெட் சயன்ஸ் தெரியும்னு சொல்லுங்க

உண்மையான இஸ்லாமியன் said...

Nothing will happen to this madarasa..because taking action against madarasa is anti secular act..

http://indiatoday.intoday.in/site/Story/90177/India/Madrasa+clerics+'sodomise+and+thrash'+students+for+2+months.html
In a classic case of protector turning predator, Clerics at a North
Delhi Madrasa allegedly sodomised four students for two months before
the victims managed to escape.

The students at Madrasa Tehfizul Kuraan on Roshanara Road told
chilling tales of abuse by their "teachers" at the "educational
institute". The boys narrated how the chief cleric, Maulana Imran,
used to call them to his room "after everyone went to sleep" and would
abuse them.

If the boys objected, they were beaten up mercilessly with sticks and
PVC pipes.

Three of the students hail from Bihar's Araria district while one
belongs to Sikandrabad town in Uttar Pradesh's Bulandshahr.

Victim Tahir (name changed), 14, said: "My parents had got me admitted
thinking I would be under proper care.

But the maulana beat us and performed evil acts." He added, "Around 11
pm, he (the cleric) used to call me to his room for massaging his head
and body. He then performed wrong acts." The boys claimed there were
other victims at the place.

"The madrasa had around 55 children when we joined. But now just half
are left. All of them were harassed," another student said.

Besides Maulana Imran, three other teachers - Maulana Bilal, Hafiz
Qadir and Hafiz Mushtaq - also abused them, the boys said.

The four boys escaped from the madrasa on Friday around 11.30 pm and
boarded a local train to Ghaziabad.

One of them, however, was caught by a madrasa 'spy' at the Shahdara
railway station on Friday itself and taken back to the madrasa.

The boy was kept in confinement and thrashed, but he managed to escape
again and met his friends in Ghaziabad at 6 am the next day.

The four children were noticed by a local journalist, who offered them
food and brought them to his house.

Till Saturday, no police complaint had been lodged. "We don't want to
go to the police.

If they (the clerics) come to know of it, they would beat us again and
harm our parents," one of the boys said.

Mohd Bilal, a madrasa teacher, said: " These are false charges. The
students fled because we were strict."

ஜீயார் said...

இது jaisankar jaganathan க்கான பதில்
]

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள எந்த ஒரு மதமும் தீவிர வாதத்தை ஆதரிக்கவில்லை. தீவிரவாதம் என்பது மனிதனிடம் இருக்கிறதே அன்றி மதத்தில் இல்லை. சில பட்டிமன்றங்களில் குடும்பத்தில் சிறந்தவள் மாமியாரா மருமகளா என விவாதம் நடப்பதுண்டு. மாமியாரில் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. அதே போல் மருமகளில் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். நன்றாக சிந்தித்தால் நல்ல குணம் கெட்ட குணம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணை சார்ந்ததேயன்றி மாமியார், மருமகள் என்ற அடைமொழியில் இல்லை. அதே போலவே தீவிரவாதமும். இன்றைய உலகில் இஸ்லாமிய மதத்தை சார்ந்த தீவீர வாதிகள் அதிகம் உள்ளார்கள். அதற்காக இஸ்லாமையோ குர்ரானையோ நாம் வெறுக்க கூடாது. இஸ்லாமிய மதத்தை சார்ந்த தீவிரவாதிகள் அதிகமாக இருப்பதற்கு சரித்திரமே காரணம். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் முஸ்லிம் கடுமையாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அதனால் அவர்களால் அதன்பின் எவரையும் நம்பமுடியவில்லை. அது மனநோயாக பாதிக்கப்பட்ட சிலர் தீவிரவாதியாகமாறியுள்ளனர்.

இந்தியாவை பொருத்தவரை இந்துக்கள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்களே. இங்கே வாழ்ந்த திராவிட இனத்தை கைபர் போலன் கணவாய் வழியாக ஆட்டு மந்தைகளை ஓட்டி வந்த ஆரிய இனம் அடிமை படுத்தியது என்பது முதல் வரலாறு. பாபர் முதல் இப்ராகிம் லோடிவரை ஆண்டது இஸ்லாம். கிழக்கிந்திய கம்பெனியாக வந்து இந்தியாவை கைப்பற்றியது கிறிஸ்தவம். இப்படி மூன்று மதங்களாலும் சிதைக்கபட்டு இந்தியா இன்று சிநைந்து கொண்டு இருக்கிறது. உண்மையான பூர்வீக இந்தியன் அடைமொழியின்றி அநாதையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

jaisankar jaganathan said...

இவ்வளவு பெரிய பதிலுக்கு நன்றி. ஜீயார்

jaisankar jaganathan said...

எல்லாம் சரி ஜீயார். என் கேள்விக்கு எந்த பக்கத்தில் பதில் உள்ளது என்று மட்டும் சொல்லவேயில்லை.

இந்தியர் அனைவரும் ஒரேஇனம் என்று அறிவியல் (DNA) மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஜீயார் said...

நீங்கள் எந்த பக்கம் வரை படித்திருக்கின்றீர்கள் jaisankar jaganathan.

ஜீயார் said...

//இந்தியர் அனைவரும் ஒரேஇனம் என்று அறிவியல் (DNA) மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.//

நாகாலாந்து, அருணாசலபிரதேசத்து இந்தியன் நம்மைவிட சீனாகாரனுடன் தான் தோற்றத்தில் ஒற்றுமையுடையவனாக இருக்கிறான். இலங்கை, பங்களாதேசத்து காரன் தோற்றத்தில் நம்மை போலவே இருக்கிறான். மார்வாடி பெண்கள் செளராஸ்டிரா பெண்கள் பிராமின்கள் மிக அழகாக இருக்கிறார்கள். கடலோர பரதர்கள் வித்யாசமாக இருக்கிறார்கள். இன்னும் ஒவ்வொரு பிரிவிலும் பல வித்யாசங்களை காணமுடிகிறது. இதில் நீங்க கூறிய டி.என்.ஏ சோதனையின் முடிவு என்ன? இந்த பரந்த இந்தியர்கள் அனைவரும் ஒருவரே என்று (முஸ்லிம்கள் உட்பட) என்று அந்த முடிவு கூறியிருந்தால் நிச்சயம் அது பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, இந்தியா மக்கள் அனைவரும் ஒருவரே என்று கூறியிருக்கும். இல்லையென்றால் உங்கள் அறிவியலில் பிழையிருக்கும். அந்த முடிவை கொஞ்சம் சொல்லுங்களேன்.

அடுத்து இந்த அறிவியல் முடிவை வைத்து நீங்கள் வைக்கும் வாதம் என்ன?

jaisankar jaganathan said...

//நீங்கள் எந்த பக்கம் வரை படித்திருக்கின்றீர்கள் //

எந்த பக்கம்னு சொல்லுங்க. அத மட்டும் படிக்கிறேன்

jaisankar jaganathan said...

//இந்தியாவை பொருத்தவரை இந்துக்கள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்களே. இங்கே வாழ்ந்த திராவிட இனத்தை கைபர் போலன் கணவாய் வழியாக ஆட்டு மந்தைகளை ஓட்டி வந்த ஆரிய இனம் அடிமை படுத்தியது என்பது முதல் வரலாறு. பாபர் முதல் இப்ராகிம் லோடிவரை ஆண்டது இஸ்லாம். கிழக்கிந்திய கம்பெனியாக வந்து இந்தியாவை கைப்பற்றியது கிறிஸ்தவம். இப்படி மூன்று மதங்களாலும் சிதைக்கபட்டு இந்தியா இன்று சிநைந்து கொண்டு இருக்கிறது. உண்மையான பூர்வீக இந்தியன் அடைமொழியின்றி அநாதையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
//

அறிவியல் முடிவு இதற்குத்தான். விக்கீபீடியாவில் படிங்க

jaisankar jaganathan said...

//இந்தியாவை பொருத்தவரை இந்துக்கள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்களே. இங்கே வாழ்ந்த திராவிட இனத்தை கைபர் போலன் கணவாய் வழியாக ஆட்டு மந்தைகளை ஓட்டி வந்த ஆரிய இனம் அடிமை படுத்தியது என்பது முதல் வரலாறு. பாபர் முதல் இப்ராகிம் லோடிவரை ஆண்டது இஸ்லாம். கிழக்கிந்திய கம்பெனியாக வந்து இந்தியாவை கைப்பற்றியது கிறிஸ்தவம். இப்படி மூன்று மதங்களாலும் சிதைக்கபட்டு இந்தியா இன்று சிநைந்து கொண்டு இருக்கிறது. உண்மையான பூர்வீக இந்தியன் அடைமொழியின்றி அநாதையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
//

அறிவியல் முடிவு இதற்குத்தான். விக்கீபீடியாவில் படிங்க

ஜீயார் said...

கீதையோ, விவிலியமோ, குர்ரானோ படிக்கறதா இருந்தா முழுவதும் படிக்கணும். இவையொன்றும் ரெஃரன்ஸ் புக் இல்லை. எனவே இதை தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருந்தா முழுவதும் படிங்க.

ஜீயார் said...

இந்த விக்கிபீடியா முடிவை சரியென்று நீங்கள் நம்புகின்றீர்கள். அதனால் இந்தியர் யாவரும் ஒன்றென்று உணருகின்றீர்கள். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. அல்லது உங்கள் வீட்டில் திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. அப்படி ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த விக்கிபீடியா முடிவை நம்பி நீங்கள் எந்த சாதியும் பார்க்காமல் உங்களைவிட குறைந்த சாதியிலும் பெண் எடுப்பீர்கள் அல்லது குடுப்பீர்கள் என்று உறுதி தரமுடியுமா?

jaisankar jaganathan said...

முஸ்ஸீமில் பல ஜாதிகள் உண்டு. நீங்கள் அரபு நாட்டில்(அரேபியா)பெண் எடுக்க இல்லை குடுக்க முடியுமா

jaisankar jaganathan said...

//இதை தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருந்தா முழுவதும் படிங்க/

(a+b)(a-b) தெரிஞ்சுக்க ஒரு புக்க முழுசா படிக்கனுமா.

விக்கிபீடியா தெரிஞ்சா எல்லா ஜாதியிலேயும் பெண் எடுத்து பெண் குடுக்கனுமா. என்ன ஜீயார் வெயில் ஜாஸ்தியா.

குரங்குல இருந்து மனுஷன் வந்த நீங்க குரங்குக்கு பெண் குடுப்பீங்களா

ஜீயார் said...

jaisankar jaganathan

//முஸ்ஸீமில் பல ஜாதிகள் உண்டு. நீங்கள் அரபு நாட்டில்(அரேபியா)பெண் எடுக்க இல்லை குடுக்க முடியுமா//

ஐயையோ நான் முஸ்லிம் இல்லிங்கோ. நான் இந்த மூன்றிலும் இல்லாத திராவிடன்.

ஆனால் கீதை, விவிலியம், குர்ரான் மூன்றையும் படித்தவன். நீங்கள் அல்ல யார் இந்த புனித நூல்களைபற்றி கூறியிருந்தாலும் நான் பதில் சொல்லியிருப்பேன்.

உங்கள் மனதில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அந்நியர்கள் என்று பதிந்துவிட்டு. ஆனால் மேல் ஜாதி இந்துக்களும் அந்நிய தேசத்தவர்களே என்ற உண்மை மட்டும் உங்களுக்கு கசக்கிறது. அதற்காக விக்கிபீடியாவை துணைக்கு அழைக்கின்றீர்கள். இங்க மட்டும் இல்லை இப்போதைய அமேரிக்கர்கள் அனைவரும் பூர்விக ஐயோரிப்பியர்கள் மற்றும் ஆப்ரிக்கர்களே. பூர்வீக அமேரிக்கர்கள் எண்ணிக்கையில் குறைவாக மலைவாசிகளாக இன்றும் அமேரிக்காவில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கோ தனித்தன்மை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதுவும் இல்லை.

jaisankar jaganathan said...

//மேல் ஜாதி இந்துக்களும் அந்நிய தேசத்தவர்களே என்ற உண்மை மட்டும் உங்களுக்கு கசக்கிறது//

ஐயா நானும் திராவிடன் தான். இந்தியா ஒரு வந்தேறிகளின் நாடுதான். ஒத்துக்கொள்கிறேன்

ஜீயார் said...

ஃஃஃஇந்தியா ஒரு வந்தேறிகளின் நாடுதான். ஒத்துக்கொள்கிறேன்ஃஃஃ

நன்றி jaisankar jaganathan உங்களுடன் விவாதம் செய்ததில் பேருவகை அடைகிறேன். மீண்டும் சந்திப்போம்.

Shri Hari said...

//மேல் ஜாதி இந்துக்களும் அந்நிய தேசத்தவர்களே என்ற உண்மை மட்டும் உங்களுக்கு கசக்கிறது//

I don't agree this statement.

Refer the below links to know more above historical and genetical DNA coding details....

http://www.archaeologyonline.net/artifacts/genetics-aryan-debate.html

http://www.tamilhindu.com/2008/08/aryan-invasion-theory-proven-false-india-part-1/

http://forums.familytreedna.com/showthread.php?t=1269

http://www.stephen-knapp.com/about_the_name_Hindu.htm

Instead of following your own assumption, please read the historical books... think

Shri Hari said...

Further...

http://www.dailypioneer.com/222382/UPA-now-admits-Saraswati-existed.html

Shri Hari said...

Refer below links to know further

http://www.hindujagruti.org/news/462.html

ஜீயார் said...

Shri Hari நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.

ஆகம விதிகள், சமஸ்கிருதம் படித்த பண்டிட்கள், பல சாஸ்திரங்கள், புஜையில் பால் பழம் நெய் போன்ற சைவ பொருட்கள் பகவத் கீதை என்ற புனித நூல், பகவான் கிருஷ்ணர் இப்படி ஒரு மதம்

அணைக்கு காவல் இருக்கும் அணைக்கரை மாடன், சுடுகாட்டிற்கு செல்லும் சுடலைமாடன், இசக்கியம்மாள், இன்னும் கருப்பசாமி, இடும்பசாமி, பலவேசக்காரன், மதுரைவீரன், சக்கம்மாள் என்பன போன்ற தெய்வங்கள், ஆட்டுகிடா, பன்றி, கோழி, மாடு என பலிகள், உணர்சிமயமாக ஆடும் சாமி கொண்டாடிகள், உயிரோடு ஈட்டியில் சொருகப்படும் சேவல். இப்படி ஒரு மதம்.

எப்படி இந்த இரண்டையும் நீங்கள் ஒரே வகையி்ல் சேர்த்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. சற்றே சிந்தியுங்கள். உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் மேற்கூறிய இரண்டும் எப்படி ஒரே மதவழிபாடாக இருக்க முடியும்? இந்த இரண்டு வித மதங்களை பின்பற்றுவோர் எப்படி ஒரே இனமாக இருக்கமுடியும்?

ஜீயார் said...

இது Shri Hari க்கு

நானும் தர்றேன் லிங்க் நல்லா படிங்க

http://www.tamilcircle.net/index.php?view=article&catid=73%3A2007&id=286%3A2008-04-14-19-20-00&option=com_content

http://www.tamilmanam.net/printer_friendly.php?id=465028

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15315

http://groups.google.com/group/anbudan/msg/efd9d64ae73a3488?pli=1

இன்னும் எவ்வளவோ இருக்கு நீங்கள் படிக்க வேண்டியது.

Shri Hari said...

உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் மேற்கூறிய இரண்டும் எப்படி ஒரே மதவழிபாடாக இருக்க முடியும்? இந்த இரண்டு வித மதங்களை பின்பற்றுவோர் எப்படி ஒரே இனமாக இருக்கமுடியும்?

I don't know why are taking it as vary serious issue :)

" மனசாட்சியை தொட்டுச்" we are discussing about the concepts and its origin... I don't know why you are so sensitive on this issue. In fact, i am suppose to be sensitive. Because you are questioning about my religion.

hmm.. From your statement, i understand that you haven't read Bagavat Githa... First i would like to thank for giving me an opportunity to explain the concept of Hindu Dhrama…

As you know, Hindu Dhrama is not organized by one individual / one single person / one human community…Even hinduisum itself is not a religion. For grouping the things...It is called as religious…

Definition of Hindu religious: Hinduism does not have a "unified system of belief encoded in declaration of faith or a creed",[19] but is rather an umbrella term comprising the plurality of religious phenomena originating and based on the Vedic traditions.

From wikipedia 

I think it clearly answers for your question. Let me answer for your question directly. I think you are not close to Hindus. If you want to learn / understand something you have interact with them. I too get a opportunity to interact with DK guys.. I even read the books offered by them. I don’t want to explain my experience here. It may change our discussion. Why I want to mention here is… I didn’t hesitate / hate to discuss with them. My humble request is… Please explore yourself by discussing with some scholars about Bagavath Gita.

You have mentioned only two contradict things…. Thank God you are aware of complete Hindu Dharama. Otherwise you would have asked more questions…. which will be very difficult for me to explain… To be honest, I still have lot of questions about Hindu concepts… Still searching to get answer… Am bit lazy fellow… won’t work hard to know everything 

Whatever mentioned / shown in the temples are not true exactly. it comes up with some inbuilt application…. Given based on the person’s capability… R&D person cant do sales person job / Sales person can’t do R&D job…

On concept base, Hindu… would say Sanathan Dhrama classified into fore…


* Bhakti Yoga - the path of love and devotion
* Karma Yoga - the path of right action
* Rāja Yoga - the path of meditation
* Jñāna Yoga - the path of wisdom

There are n numbers of classification in the Dhrama itself… Final objective, Reach the Goal / Understand the truth… route is different… Reaching the place is same…


I have read your links.

I couldn't find any scientifically proven / historically proven information. I would be helpful for me if you provide any such links..


Ref 1: http://groups.google.com/group/anbudan/msg/efd9d64ae73a3488?pli=1

hmm... Again there is no scientifically proven information... document prepared based on the assumption...


" அசுரர்கள்
கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். "

In my knowledge, All powerful Hindu God and goddess are black... Example Shri Rama chandra prabhu, Shri krishna, Bagvan shiva shankar, Ma kali devi, maha vishnu, Sanisvar Bagvan... The list goes on...

Will refer the links and answer soon

Shri Hari said...

I hope i have answered for your questions.

Again, i refered all your links. I couldnt find even a single proven information.
I dont see any proof... like
ancient scripts reference / Genitical reference / Archeological proof. Infact, it is not written by well known person. I will be helpful for me if you send such links..

I think you haven't read my links. It is okay.. this is not something which is new for me. I have met n number of people like you...

u said, aryans are outsiders. I too have some basic knowledge about upanistah.. In my knowledge, no where... the word called aryan is mentioned as a community. In sanskrit, Aryan means respectable. Of course, i couldnt find a word called ' Dravidian'... in any ancient tamil scripts. Since i dont have knowledge in tamil scripts..It will be very helpful If you provide me any ancient tamil script (b4 15th cen) which speaks / atleast says abt dravidians...

சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ்
மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய
ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்

Man... I dont know what to say for this... Is "நரகாசுரன்" tamil word?
If so, please explain me the meaning... Please explain me... which part of the area he was controling?

oops.. As per DK stories (wont say concept), there is no Monocracy (caste system) in dravidian world, how come we have a king dravidian world...

As per your concept, Hinduisum is from aryans world...

let me give you some more example,

if you refer bible you get lot of information about jeruslum and its surronding areas...

if you refer kuran you come to know about arabic deserts and its surrounding areas...

Do you see any such outside area details from so called aryan upanistah / vedas?

You said,aryans are outsiders...
can you tell me... from where these so called aryan came here?

Please define me... when you say they are outsiders... Please give some examples...

If you say they are from center part of Asis... their should be some Archueological proof na... where is the proof...

Let us go to your reference link again...

பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர
பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள்.
அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில்
குறிப்பிடப்படுகிறார்கள்

In my knoweldge, Asuras used to live in pathala logam... Means under ground... God how to answer for this... Do you think ... will they refer the community... based on what they drink... hmm...

God... Please through some light
i dont understand... on what basis, they are making... kind of commedy stories

ஜீயார் said...

Sorry hari,

பண்டைய காலங்களில் திராவிடர்கள் படிப்பறிவு இல்லாத பாமரர்களாகவே இருந்துள்ளனர். இதனால் தங்கள் வரலாற்றை எழுதி வைக்கவேண்டிய அவசியத்தை அவர்கள் உணரவில்லை. கிறிஸ்து, நபி காலங்களி்ல் நடைபெற்ற பல போர்களில், ஒரு மதத்தினர் மற்ற மதத்தினரின் நாடுகளை கைப்பற்றும் போது அவர்கள் முதலில் அந்த மதத்தினரின் விழிபாட்டுத்தலங்களை அழித்தனர். அதன்காரணம் பிற்காலத்தி்ல் அவ்விடங்களில் வேறுமதங்கள் இருந்ததில்லை என்பதை நிறுபிக்கவே அப்படி செய்தனர்.
ஆனால் தற்போது திராவிட வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நாம் ஆரியர்கள் எழுதிய நூல்களைத்தான் ஆதாரமாக எடுக்கவேண்டியதிருக்கின்றது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல். அயோத்தி மன்னன் தெற்கு நோக்கி படையெடுத்து இராமேஸ்வரம் வந்து பின் அங்கிருந்து கடல் வழியாக இலங்கையை அடைந்து பின் இலங்கையை வென்றான் என்றிருக்க வேண்டிய வரலாறு, தற்போது எப்படி இருக்கின்றது என்பதை நாம் யாவரும் அறிந்ததே.

Shri Hari said...

hmm... I think you know the meaning of classical language. If you want to know the definition please refer wiki :)

As you know tamil is one of the classical language.

From your comments, i understand that tamil is not Dravidian language.

In other way, Rich tamil language was made after so called aryans arrival... If Aryan arrival is true, they would have implemented Sanskrit language instead of promoting Tamil...

The best example is English... i think i no need to brief about this story

So called Aryans community is the mother of tamil language :)

I would like to conclude few things

we should never think about " Nathi mulam and rishi mulam "

That is the reason, Shri ram was praising ravana in the war.

Please read bagavathm to know more about Ravaneswar... If your concept is ture... Ramayan would have made like ( like Abrahamin religious) Ravana was praying devil (sathan)

Instead, it was told that ravana was a son of Great Maharishi ( of curse his mother is Asura)

And also he is great Shiva baktha.

the only religion in the world which accepts other religion is Hinduisum (Sananthan Dharama)

Of courser, there are some unwanted things.. people still follows / follows in wrong way

Because, the entire universe is created 'paramathma'. He is everywhere.... irrespective your religious...

Hinduisum is nothing but a tolerence. you have full freedom to question Hinduisum. Do you have such freedom in other religious

Atlast, Bhagavat gita itself is a consolidated Q/A document.

Arjuna was asking so many questions to Krishna... Krishna didn't say that... I am GOD... whatever i am saying you should follow...

Instead Krishna said... " i have told about Dhrama. I have done my job. Now you decide the right path "

Geeyar said...

Thanks hari, i have no question about Dhiravidan's language. In your words "arrival of aryans" you prove the aryans are strangers. Thank you.