பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 23, 2010

ஒரு வீடு, ஒரு குடும்பம் - ஒரே அரசியல்

முலாயம் சிங், கல்யாண் சிங், ராஜ்நாத்சிங், மன்மோகன்சிங், மாயாவதி, ஜெயலலிதா, பால் தாக்கரே இவர்கள் ஒன்றாக சந்தித்தால் ? மித்தாய் லால் - சந்திரசேனா தம்பதிக்கு ரொம்ப தான் தைரியம் ஜாஸ்தி இவர்களை சந்திக்க வைத்துள்ளார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்த தம்பதிகளுக்கு ஏழு குழந்தைகள். முலாயம் சிங், கல்யாண் சிங், ராஜ்நாத்சிங், மன்மோகன்சிங், மாயாவதி, ஜெயலலிதா, பால் தாக்கரே இப்படி தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளார்கள்.

ஏன் இந்த மாதிரி விபரீத ஆசை என்று கேட்டால், "எங்க மிகவும் ஏழை. எங்களுடைய குழந்தைகளாவது எதிர்காலத்தில் வசதியாக இருக்க வேண்டும் என்று இந்த பெயர்களை வைத்தோம்" என்கிறார்கள்.

"டேய் மன்மோகன் சிங் ... ஊர்சுற்றாதே, மாயவதிக்கு திமிர் ரொம்ப ஜாஸ்தி, ஏன் ஜெயலலிதா சேட்டை பண்ணாதே" என்றபடி தன் குழந்தைகளை செல்லமாக வளர்க்கிறார். ஏன் சார் சோனியா காந்தி மட்டும் மிஸ்ஸிங் என்று கேட்டாள் அதற்கும் பதில் வைத்திருக்கிறார் - "என் மனைவி இப்போதே கர்ப்பமாக இருக்கிறாள், இந்த தடவை நிச்சயம் பெண் குழந்தைதான் பிறக்க போகும் குழந்தைக்கு சோனியாவின் பெயரை ரிசர் செய்து வைத்துள்ளேன் என்கிறார்.

இவருக்காக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்

பிகு; இது கொஞ்சம் பழைய நியூஸ், இவருக்கு ஆண் குழந்தை பிறந்ததா பெண் குழந்தை பிறந்ததா என்று நீங்கள் விசாரித்துக்கொள்ளலாம்.

18 Comments:

padma said...

அட இது ரொம்ப நல்ல இருக்கே

kggouthaman said...

சோனியாவுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைக்கு, இட்லிவடை என்று பெயரிட்டால் நன்றாக இருக்கும்.

shanmuganathan said...

செய்தி நன்றாக இருக்கிறது...அவருக்கு வாழ்த்துக்கள்..புது முயற்சி...இருந்தும் நாட்டின் நலன் கருதி அவர் ஒரு டாக்டரை பார்ப்பது நல்லது.மக்கள் தொகை தாங்காது..இன்னும் வேணும் விழிப்புணர்வு..

Guru said...

அன்புள்ள இட்லிவடை,
அதெல்லாம் சரி. இப்பொழுதெல்லாம் அடிக்கடி மொக்கை நியூஸ் வருதே என்ன காரணம். சரக்கு மாஸ்டர் ஊர்ல இல்லையா?
இன்று மாவீரர்கள் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் நினைவு தினம்.ஏதாவது சிறப்பு கட்டுரை வெளியடலாமே. கலைஞர்,ஜெயலலிதா,தேர்தல்,மாயாவதி,பணமாலை,பட்ஜெட்,அப்துல்லாஹ் இதையெல்லாம் வைத்து கல்லா கட்ட நிறைய வலைமனைகள் இருக்கிறது.

Anonymous said...

"எங்க மிகவும் ஏழை"
ஏழை மக்கள் ஏன் அதிகம் குழந்தைகளை பெறுகிறார்கள்?

யதிராஜ சம்பத் குமார் said...

கடைசி குழந்தை ஆணாக பிறந்திருக்க வேண்டுமே என்று ப்ரார்த்திக்கிறேன். என்னவோ!! சுப்ரமணிய ஸ்வாமியின் வெப்சைட்டை அவருக்கு யாராவது படித்து விளக்க வேண்டும்.

Arun Kumar said...

konjam illeenga...romba palaya news

jaisankar jaganathan said...

//இந்த தம்பதிகளுக்கு ஏழு குழந்தைகள்//

தம்பதிகளை தூக்குல போடுங்க

ppage said...

ஏழு குழந்தைகள் இன்றைய தேதிக்கு நெம்ப ஓவர்.
இதுல அரசியல் கட்சி தலைவர் பேரு சூப்பர் ஓவர்.
இன்னும் ஒண்ணு ஸ்டாக்ல இருக்கு சோனியான்னு பேர் பிக்ஸ் பண்ணிருக்கேன் என்பதை என்னன்னு சொல்ல.

எல்லாவற்றுக்கும் சிகரம் இட்லி வடையின்

* இறை பிரார்த்தனை
* ஆம்பள பிறந்தா எனும் கவலை
* ரிசல்ட் விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க

என்றாலும் தலைவர்களை திட்டியது தித்தித்தது.

டாப் 10 பாணியில் சொன்னா....

இட்லி வடை இனிக்கும் வடை.

படுக்காளி

வலைஞன் said...

ம்ம்ம்ம்..... என்ன சொல்ல!!!
பைத்தியம் முத்தி போச்சு!
GOD SAVE INDIA & INDIANS

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சாதாரணமாவே, இப்போ பங்காளிச் சண்டை அதிகம். அதிலும், பெயரிலேயே எதிரிங்களா இருக்கறவங்க, நிச்சயம் குடும்பத்தைக் கூறு போடாம விட மாட்டாங்க. அது தவிர, இப்ப இருக்கற ஒரு முலாயம், ஒரு மாயாவதி இவங்களை வச்சு கஷ்டப் படறோம், ஹூம்! எதிர் கால இந்தியாவை நினைச்சா...........ரொம்ப கஷ்டம் சாமி!

Anonymous said...

//இட்லிவடை என்று பெயரிட்டால் நன்றாக இருக்கும்// - U mean last name?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா என்ன இங்கு ஒரே கலவரமா இருக்கே !
வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !

ஜெயக்குமார் said...

இட்லிவடைன்னு பேரு வைக்கனும்னா என்ன புள்ள பெத்துக்கிறனும்? ஆம்பளைப் புள்ளையா, இல்லை பொம்பளைப் புள்ளையா?

Madhavan said...

'இட்லி' & 'வடை' ரெண்டுமே.. (இரட்டை குழந்தையா இருந்தா)

கிரி said...

குடும்ப அரசியல் பண்றவாள பாத்துருக்கோம். அரசியல குடும்பத்துல கொண்டு வந்தவாளப் பத்தி இப்போதான் கேள்விப் படறோம். பேஷ் பேஷ் ஓய்!

Anonymous said...

அவங்க பசங்க வெச்ச பேருக்கு ஏத்த மாதிரியே ஆகிட்டால், இந்தியாவின் பெயர் மித்தாய் லால் தேஷ் என்று மாற்ற ஒரு ஐடியா இருக்காம். - டில்லி பல்லி

Anonymous said...

ஆண் குழைந்தையாக இருந்தால் சுக் ராம் என்று பெயராம். அவங்க ஒரு (நோட்டுக்)கட்டுப் பெட்டி குடும்பமாம்!
==சில்லறை