பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 22, 2010

மன்னார்குடி வெண்ணைத்தாழி விழா


பெயர் சொல்ல விருப்பமில்லை மன்னார்குடியில் இருக்கிறார். அங்கே பங்குனியில் இராஜகோபாலசுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி என்ற ஒரு உற்சவம் மிக பிரசித்தம். நேற்று நடந்த இந்த விழாவை எடுத்த படங்கள், மற்றும் சில குறிப்புக்களுடன் சுட சுட நேற்று இரவே எனக்கு அனுப்பிவிட்டார். நான் தான் கொஞ்சம் லேட்.... அனுப்பிய அவருக்கு நன்றி.


மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனிப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தமிழகக் கோவில்களில் தொடர்ந்து முப்பது நாட்கள் திருவிழா என்றால் அது இந்தக் கோவிலில் தான்.
முதல் நாள் கொடியேற்றத்தில் துவங்கி பதினேழாம் நாள் திருத்தேர் பவனி வந்து முப்பதாம் நாள் கோவில் திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

முதல் பதினாறு நாட்களில் தினமும் காலையில் பல்லக்கிலும் இரவில் விதவிதமான வாகனங்களிலும் திருவீதி புறப்பாடு நடைபெறும்.
முதல் நாள் - கொடிச் சப்பரம்
இரண்டாம் நாள் - புன்னை மர வாகனம்
மூன்றாம் நாள் - அன்ன வாகனம்
நான்காம் நாள் - கோவர்த்தன கிரி
ஐந்தாம் நாள் - பஞ்ச முக அனுமார் (கருடன், சிங்கம், வராகம், குதிரை மற்றும் அனுமார் முகங்களுடன்) ஆறாம் நாள் - கண்ட பேரண்ட பட்சி (இருதலைப் பட்சி) ஏழாம் நாள் - முத்துப் பல்லக்கு எட்டாம் நாள் - ரிஷிய முக பர்வதம் (இந்த மலையில்தான் வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் ஒளிந்திருந்ததாக ராமாயணம் கூறுகிறது) ஒன்பதாம் நாள் - சிங்க வாகனம் பத்தாம் நாள் - சூரிய பிரபை பதினொன்றாம் நாள் - சேஷ வாகனம் பன்னிரண்டாம் நாள் - கருட சேவை (இரவு நடைபெறும் இரட்டைக் குடை சேவை மிக பிரபலம்) பதின்மூன்றாம் நாள் - அனுமந்த வாகனம் பதினான்காம் நாள் - யானை வாகனம் பதினைந்தாம் நாள் - கோரதம் பதினாறாம் நாள் - காலையில் வெண்ணைத்தாழி மற்றும் இரவில் குதிரை வாகனம் பதினேழாம் நாள் - திருத்தேர் பதினெட்டாம் நாள் - சப்தா வர்ணம் (கொடி இறக்கம். ) பத்தொன்பதாம் நாள் தொடங்கி இருபத்தொன்பதாம் நாள் வரையில் விடையாற்றி உற்சவம்.
முப்பதாம் நாள் - தெப்ப உற்சவம்.

இன்று (21.03.2010) காலையில் வெண்ணைத்தாழி வழக்கம்போல் நடைபெற்றது.
உங்களுக்காக சில படங்கள் இங்கே: (Pl. see attachments)


முதல் போட்டோ : பெருமாள் ருக்மணி, சத்தியபாமாவுடன்
இரண்டாம் போட்டோ : இரட்டைக் குடையின் கீழ் கருட வாகனத்தில் பெருமாள்
மூன்றாம் போட்டோ : வெண்ணைத் தாழி


இது தவிர வெண்ணைத்தாழியின் போது பக்தர்கள் எறிந்த வெண்ணையினால் மேனி முழுதும் வெண்ணையுடன் கண்ணன் வீடியோவில்.

அன்புடன்
- பெயர் சொல்ல விருப்பமில்லை.

படங்கள்...


14 Comments:

Anonymous said...

ஏன் பேர் சொல்ல விரும்பாதவர் அன்றைய செட்டி அலங்காரம் பற்றி குறிப்பிடவில்லை?

Madhavan said...

// Anonymous said. "ஏன் பேர் சொல்ல விரும்பாதவர் அன்றைய செட்டி அலங்காரம் பற்றி குறிப்பிடவில்லை?"//

அவர் பேர்ல 'செட்டி' இருக்குதோ என்னவோ 'யார்' கண்டது ? விட்டுடுங்க சார்

Anonymous said...

where is the video link?

Regards

Aarveeyar from vellore

jaisankar jaganathan said...

நன்றி. நல்ல தகவல்

Harikrishnan said...

Hi Ittly Vadai,

It is the mannargudi rajagobala swami photo, but this is not the vennathali photo. this is taken from some other fasti....

BY
Harikrishna.L
Mannai Tamizhan.

Anonymous said...

இப்படி கடன் வாங்கிய சரக்கை வைத்தே எத்தனை நாள்தான் கடையை நடத்துவீர்கள்.

ரிஷபன் said...

பேர், மூஞ்சி காட்ட விருப்பமில்லை என்பவர்களுக்கு "இட்லி வடை" மாதிரி புனை பெயர்கள் இருக்கின்றன. அதுக்காக இவ்வளவு நீளமான புனை பெயரா ?

Madumitha said...

உங்களுக்கும்
பெயர் சொல்ல
விரும்பாதவருக்கும்
நன்றி.

kggouthaman said...

படங்களும், வீடியோவும் அருமை. மிக்க நன்றி.

வெடிகுண்டு வெங்கட் said...

பகிர்ந்தமைக்கு நன்றி.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி

R.Gopi said...

செய்தி, படங்கள், வீடியோவிற்கு நன்றி இட்லிவடை..பெயர் சொல்ல விருப்பமில்லை...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// Harikrishnan said...
Hi Ittly Vadai,

It is the mannargudi rajagobala swami photo, but this is not the vennathali photo. this is taken from some other fasti....
//

I am sorry Hari, it is the photo taken by me on the day of Vennaiththaazhi.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிக்க நன்றி இட்லிவடை. என் பெயர் முக்கியமில்லை. எல்லோரும் மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி அருள் மழையில் நனைய வேண்டும். அதுவே என் விருப்பம்.


//ஏன் பேர் சொல்ல விரும்பாதவர் அன்றைய செட்டி அலங்காரம் பற்றி குறிப்பிடவில்லை?//
அனானி, நன்றி! உங்கள் விருப்பம்போல் இன்னும் சில செய்திகள்...
பதின்மூன்றாம் நாள் அன்று மதியம் ஆண்டாள் திருக்கோலத்திலும், பதினாறாம் நாள் அன்று மதியம் செட்டி அலங்காரத்திலும் கோபாலனைத் தரிசிக்கலாம்.


ஆண்டாள் அலங்கார போட்டோவை இத்தோடு அனுப்பியிருக்கிறேன்.
செட்டி அலங்கார போட்டோ என்னிடம் இல்லாததால் அனுப்ப இயலவில்லை.
மன்னிக்கவும்.


அன்புடன்
பெயர் சொல்ல விருப்பமில்லை.

cho visiri said...

//Hi Ittly Vadai,

It is the mannargudi rajagobala swami photo, but this is not the vennathali photo. this is taken from some other fasti....

BY
Harikrishna.L
Mannai Tamizhan.//

Pl see the You tube video attached to the post.