பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 20, 2010

தலை தப்பிய ஹெட்லி, தலை குனியும் இந்தியா !


கட்டுரை கீழே..

இது எங்களுக்குப் பின்னடைவு அல்ல. மீண்டும் வலியுறுத்துவோம். – திரு. ப. சிதம்பரம்.

அவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தால், அது இந்திய அரசைத் திருப்தி படுத்தும். திரு. ஜி.கே.பிள்ளை.

மேற்கூறிய இரண்டு கருத்துக்களும், பிடிபட்டுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கத் தீவிரவாதி டேவிட் ஹெட்லி குறித்து நம்மவர்கள் கூறியவை. இவ்வளவு நாட்களாக பிடி கொடுக்காமலிருந்த டேவிட் ஹெட்லி, தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரியுள்ளார். அமெரிக்க சட்டப்படி ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டால், மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையிலிருந்து தப்பிக்கலாமாம்.



நவம்பர் 26, 2008 இல் நடந்த மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு லஷ்கர்-ஈ-தொய்பாவிற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த்திலிருந்து, பல வசதிகளையும் டேவிட் ஹெட்லி செய்து கொடுத்துள்ளார். இது அமெரிக்க FBI ஆல் கண்டறியப்பட்டு, டிசம்பர் 8, 2009 இல் அதிகாரப் பூர்வமாக அவரை மும்பைத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாக அறிவித்த்து. இதற்கு முன்னமே டென்மார்க்கிலுள்ள பத்திரிக்கையலுவலகம் தாக்கப்பட்டு, அதில் சில அமெரிக்கர்கள் உயிரிழந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.



மும்பை தாக்குதலில் டேவிட் ஹெட்லிக்கு இருந்த தொடர்பால், அவரை இந்தியாவிற்கு கொணர்ந்து விசாரணை நட்த்த வேண்டுமென இந்தியா வலியுறுத்தி வந்த்து. ஆனால் அமெரிக்கர்களைக் கொன்ற வழக்கிலும் அவர் சிக்கியிருந்த்தால், அவரை இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே மறுத்து வந்த்து. இங்கு செய்த தவறுகளுக்கே அவர் மரண தண்டனையோ அல்லது பல நூறு ஆண்டுகள் சிறை வாசத்தையோ கழிக்க வேண்டியிருக்கும். அதன் பிறகே அவரை இந்தியா அனுப்புவது பற்றி பரிசீலிக்கப்படும் என அமெரிக்கா கைவிரித்து விட்டது.



இது போன்ற கையறு நிலை இது இந்தியாவிற்குப் புதிதல்ல. இந்திய மண்ணில் குற்றம் இழைத்து விட்டு அந்நிய மண்ணிற்குத் தப்பியோடிய எவரையுமே இதுவரை இந்தியாவிற்கு கொண்டு வர முடிந்த்தில்லை. தாவூத் இப்ரஹீம் துவங்கி, குவாட்ரோக்கி, இப்பொழுது டேவிட் ஹெட்லி. தாவூத் இப்ரஹீம் இங்கே காலடியிலுள்ள பாகிஸ்தானில் சர்வ சுதந்திரமாக உலவுவதோடு, நக்மாவோடு ஷார்ஜாவில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை இந்தியாவிற்குத் தர வேண்டுமென இன்றுவரை நமது அரசாங்கம் கெஞ்சி வருகிறது. குவாட்ரோக்கிக்கு பாதுகாப்பளிப்பதற்கு பெரிய குடும்பமும், அதன் எடுபிடியுமான சிபிஐ துணையிருப்பதால் அவரை இந்தியா கொண்டு வருவதும் பகல் கனவாகி, இப்பொழுது அவர் சுதந்திரம் பெற்று விட்டார். அடுத்த கெஞ்சும் படலம் பாகிஸ்தானிடம், லஷ்கர் தலைவரை ஒப்படைக்க வேண்டி!! அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.



இந்த பரிதாபமான நிலையில், டேவிட் ஹெட்லியையும் இப்பொழுது இந்தியாவிற்கே கொண்டு வர இயலாது என்ற நிலை தோன்றி விட்ட்து. டேவிட் ஹெட்லி மன்னிப்பு கோரி விட்ட்தால் அவரது தண்டனை குறைப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்ட்து. அவருடைய வக்கீலும், அவரை எங்கேயும் அனுப்ப இயலாது, அந்நிய அரசாங்கங்கள் வேண்டுமாயின் இங்கு வந்து விசாரணை நட்த்தலாம் என போனால் போகிறதென்று கூறியிருக்கிறார். இதையேதான் அமெரிக்க அரசாங்கமும் கூறுகிறது. காரணம், என்னை வெளிநாட்டிற்கு அனுப்பக் கூடாது என டேவிட் ஹெட்லி கோரிக்கை விடுத்திருக்கிறானாம். இப்பொழுது யார் குற்றவாளி என்றே தெரியவில்லை.



இந்த அவலங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், நாம் தீவிரவாத்த்திற்கெதிரான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டுவதில்லை என்பதே. இதுவரை இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதிகளின் மீது நாம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம்?? பல குண்டுவெடிப்புகள் துப்பு துலங்கவே இல்லை. இவர்கள் காரணமாக இருக்கலாம், அவர்கள் காரணமாக இருக்கலாம் என்ற ஹேஷ்ய நிலையிலேயே இருக்கின்றன. துப்பு துலங்கி பிடிபட்ட தீவிரவாதிகளையும் அரசாங்கம் ஓட்டு வங்கியை முன்னிட்டு காருண்யத்தோடு நோக்குவதால் வருடா வருடம் கருணை மனுவில் காத்திருப்போர் பட்டியலில் அவர்களுடைய பெயர் பின்தங்கிக் கொண்டே போகிறது. இன்னொருவருக்கு இன்னும் விசாரணை முடியவில்லை. அது முடிந்தாலும் முன்னவருக்குத் துணையாக அவரும் இருப்பார். ஆக இந்தியாவைப் பொருத்தவரை தீவிரவாத்த்திற்கெதிரான நடவடிக்கை வெறும் வாய்ச் சவடால்களும் கண்டன்ங்களும் மட்டுமே.



Enough is enough என்று மும்பை தாக்குதலின் போது தொண்டை வரள மீடியாக்களும் மக்களும் கதறினர். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற புனே தாக்குதலில் தொடர்புடையவர்கள் யார் என இன்றுவரை தெரியவில்லை. குற்றவாளிகள் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. நமது அரசாங்கமும் கண்டனம் செய்து விட்டு, விசாரணை நட்த்திக் கொண்டிருக்கிறோம் என இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கிறது. நாமும் அதனை மறந்து விட்டோம். இதுதான் லட்சணம்.

உலகிலுள்ள பல நாடுகளும் இன்றைக்கு இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டுப் பயணிகளை, சுற்றுலாவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றன. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு இது எவ்வளவு பெரிய தலைகுனிவு? இவையனைத்திற்கும் காரணம் தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கையில் நமது அலட்சியமான போக்கு. இதை இந்தியா எப்போது உணரப் போகிறது?

ஆக இதே போன்று தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கை விஷயத்தில் இந்திய அரசு சர்வ அலட்சிய மனோபாவத்துடனும், ஓட்டு வங்கியே குறிக்கோள் என்ற நோக்கத்துடனும் இருக்கும் வரை, இந்தியாவிற்கும், அதன் குடிகளுக்கும் தீவிரவாத்த்திலிருந்து விடிவில்லை

ஹெட்லி பற்றி ஓர் அளவு தெரிந்துக்கொள்ளலாம் இங்கே ஹெட்லீ, மதானி, The Departed

- யதிராஜ்

13 Comments:

jaisankar jaganathan said...

//இந்தியாவைப் பொருத்தவரை தீவிரவாத்த்திற்கெதிரான நடவடிக்கை வெறும் வாய்ச் சவடால்களும் கண்டன்ங்களும் மட்டுமே//
கடுமையான நடவடிக்கை(இஸ்ரேல் மாதிரி)எடுக்கவேண்டும்

சீனு said...

அது எப்படிங்க. டேவிட் ஹெட்லி (இந்தியாவில்) சிறுபான்மை இனத்தவர். அதனால், அவருக்கு தண்டனை எல்லாம் கிடைக்காது.

இதை போன்ற அபத்தங்களால் ஏதாவது ஒரு பெரிய தலை உருண்டாதான் புத்தி வரும்.

ஜெயக்குமார் said...

இதில் இந்தியாவுக்கு தலைகுனிவு என்பதைக் காட்டிலும், இன்னும் தீவிர கண்கானிப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கு வாக்களிக்கும்போது எவனெவன் யார் யாருக்கு சப்போர்ட் பன்றான், எவன் வீட்ல வச்சு சோறூ போட்ட்டு தீவிரவாதிய வளத்துவிட்டான் அப்படினு பாத்து அவனுக்கு அரசியல்ல சாவுமனி அடிச்சா திருந்துவானுங்க..

Anonymous said...

குண்டுவெடிப்புகளை நோட்டி பார்த்தால் ,நிறைய சாமியார்கள் தான் உள்ளே போவார்கள்..
சரியா???
இந்தியா, என்ன செய்தாலும் அதை ஆதரிப்பது தான் இந்திய குடிமகனுக்கு அழகு.இதை மாதிரி இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எழுத கூடாது.. சரியா????
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்த எப்ப தடை செய்ய போறாங்க?????

jaisankar jaganathan said...

//இதை போன்ற அபத்தங்களால் ஏதாவது ஒரு பெரிய தலை உருண்டாதான் புத்தி வரும்.//

அப்ப கூட சிறுபான்மைக்காக குரல் குடுக்க தலைவர்கள் இருப்பாங்க

SAN said...

IV,
Request our readers to visit Mr.Ramans blog on this subject.An excellent piece he has written.

http://ramanstrategicanalysis.blogspot.com/

Anonymous said...

We gave all the access to all the intels and terrorists to US, but in return US is not even considering our request to interrogate this mass murderer.

As long as we have this Terror-appeasing spineless UPA govt we have, Islamic terrorists will rule this country.

Anonymous said...

ஹெட்லிக்கு தலையும் போகாது; ஒண்ணும் போகாது. அவர் பேரே HEAD-லி ஆச்சே!- டில்லி பல்லி

ஸ்ரீராம். said...

இந்தியாவுல விசாரணை நடக்குற லட்சணத்துக்கு இங்க ஒப்படைக்காம இருக்கறதே நல்லது.

Madumitha said...

9/11 குற்றத்தில்
சம்பந்தப் பட்டவர்
குற்றத்தை
ஒப்புக் கொண்டால்
அமெரிக்கா
என்ன தண்டனைக்
கொடுக்கும்?

Subbu said...

//சரியா????
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்த எப்ப தடை செய்ய போறாங்க?????

March 20, 2010 12:56 PM
//
எப்போ உன்ன மாதிரி மற்றும் இஸ்லாமிக் தீவிரவாதிங்க இந்த புண்ணிய பூமிய விட்டு போராங்களோ அன்னிக்கு !!!

- JaiHind!

Subbu said...

//சரியா????
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்த எப்ப தடை செய்ய போறாங்க?????

March 20, 2010 12:56 PM
//
எப்போ உன்ன மாதிரி மற்றும் இஸ்லாமிக் தீவிரவாதிங்க இந்த புண்ணிய பூமிய விட்டு போராங்களோ அன்னிக்கு !!!

- JaiHind!

che said...

forget headley,this bullshit(congress) government is not even ready to speed up the kasab's trial and hang him asap,and what happened to that afsal guru(who is to be hanged for parliament attack)....no one knows
one thing is sure,until the govt takes some stern actions reg terrorism our people will die in the hands of those terrorists...