பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 24, 2010

அன்புடன், மன்னார்குடி !

எனக்கு மன்னார்குடி அனுப்பிய கடிதம் !

அன்புள்ள இட்லிவடை,

மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா பற்றிய தங்களது பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுடைய வலைத்தளத்தில் மன்னார்குடி பற்றிய செய்திகள் வருவதில் மிக்க மகிழ்ச்சி. பங்குனி திருவிழா செய்திகளை திரட்டி வெளியிட்ட 'பெயர் சொல்ல விருப்பமில்லை' அவர்களுக்கும் நன்றி.

என்னுடைய வலைத்தளத்திலும் பங்குனி திருவிழா புகைப்படங்கள மற்றும் காட்சிகள் சிலவற்றை பதிவு செய்துள்ளேன்.
முகவரி : http://rajamannargudi.blogspot.com

தாங்கள் என் வலைதளத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
மன்னார்குடி

உங்க வலைதளம் என்ன மன்னார்குடிக்கே வந்து உங்களை பார்க்கிறேன் !

9 Comments:

மன்னார்குடி said...

தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி இட்லிவடை. மன்னார்குடிக்கு அவசியம் வாருங்கள். மன்னார்குடி உங்களை அன்புடன் வரவேற்கிறது. என்னுடைய வலைத்தளத்திக்கு வருகை தந்தது மட்டுமல்லாமல், தங்களது வலைத்தளத்திலும் எங்கள் வலைத்தளத்தை பற்றி குறிப்பிட்டு அறிமுகம் செய்துவைத்தமைக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
மன்னார்குடி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

யாரங்கே, மேளம், தாளம், தாரை, தப்பட்டை எல்லாம் தயாராகட்டும்!
வலையுலக சக்கரவர்த்தி, இட்லிவடை மன்னார்குடி பராக், பராக், பராக்!

IdlyVadai said...

//யாரங்கே, மேளம், தாளம், தாரை, தப்பட்டை எல்லாம் தயாராகட்டும்!
வலையுலக சக்கரவர்த்தி, இட்லிவடை மன்னார்குடி பராக், பராக், பராக்!//

சக்கரவர்த்தி என்றால் அது ராஜகோபாலன் தான்

ராஜகோபாலச்சாரி என்ற ராஜாஜிக்கும் சக்கரவர்த்தி என்று பெயர்.

Madhavan said...

I am also hail from the GREAT Mannargudi..

Thanks for the posts.

Anonymous said...

another mannargudu mafia in the offing :)

kggouthaman said...

எனக்கு மன்னார்குடி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருபது + வருடங்களுக்கு முன் பணியாற்றிய வேங்கடசுப்ரமணியன் என்கிற ஒருவரை மட்டும்தான் தெரியும். இரண்டு வருடங்களுக்கு முன் மன்னார்குடி சென்றிருந்தபொழுது, ஐ ஓ பி வங்கியில் பணிபுரியும் ஒருவருடைய வீட்டில் தங்கி அங்குள்ள தெய்வத் தலங்களுக்கு சென்று தரிசித்து வந்தேன்.

மாயவரத்தான்.... said...

நான் மன்னை நாராயணசாமியை சொல்லவில்லை!

மாயவரத்தான்.... said...

ஹும். மன்னார்குடி என்றாலே உடனடியாக நினைவுக்கு வர வேண்டியவரைப் பற்றி ஒருவரும் வாயைத் திறக்கவில்லையே?!

RVS said...

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மோகினி அலங்கார கோபாலன் அழகு, ராப்பத்து பகல்பத்து போது ரோஹினி மண்டப வாசலில் ஆழ்வார்கள் சுற்றும் அழகு, ஒற்றை வஸ்திரத்தை அணிந்து மாடு மேய்க்கும் கண்ணன் அலங்கார அழகு, வெண்ணைத்தாழி கண்ணன் அலங்கார அழகு, கோயில் அழகு, ஹரித்ராநதி குளம் அழகு.

N.H.S.Sஸில் படித்த ஏழு வருடங்கள் தொடர்ந்து ஸ்வாமி, தாயார் தேர் வடம் பிடித்தவன் என்கிற வகையில் எனக்கு ராஜகோபாலன் தான் ஒரே அழகு.
இப்பதிவுக்கு மிக்க நன்றி.

ஆர்.வி.எஸ்.எம்.