பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 19, 2010

ராகுல் மேஜிக் வேலை செய்யுமா ?

காங்கிரஸில் இரண்டு வகை உண்டு. டெல்லி காங்கிரஸ், மாநில காங்கிரஸ். டெல்லியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வரும் காங்கிரஸுக்கு ஒரு மரபு உண்டு அது தமிழகம் வரும் போது தமிழகத்தில் இருக்கும் கூட்டணி தலைவர் கலைஞரை மரியாதை நிமித்தம் அவரது வீட்டில் சந்தித்துவிட்டு வெளியே இருக்கும் பிரஸுக்கு போஸ் கொடுப்பது.

முதல் முறையாக அது செப்டம்பர் மாதம் மீறப்பட்டது. அப்படி மரபை மீறியவர் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தி. இதற்கு முன்பு விஜய் தான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்று நியூஸை கசிய செய்தார்கள், பிறகு திமுக கொடுத்த பிரஷர் காரணமாக வேட்டைக்காரனின் அப்பா விஜய் பால் குடிக்கும் குழந்தை என்பது போல அறிக்கைவிட்டார்.

ஐந்து மாசம் கழித்து மீண்டும் ராகுல், பிரியங்கா தனி விமானம் மூலம் ( சிக்கன நடவடிக்கை ) திருச்சிக்கு வந்திருக்கிறார். இவர் திருச்சி வந்த வீடியோ காட்சிகளை பார்த்தால் ராஜிவ் காந்தியின் ஸ்டைல் நிறைய தெரியும்.

சரி இவர்கள் எதற்கு வந்தார்கள் ?

இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த. கிட்டத்தட்ட 13 லட்சம் இளைஞர்கள் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்கள். ( இலவசமாக பேட்ஜ் வாங்கியவர்கள் எல்லாம் உறுப்பினர்கள் என்று முடிவுக்கட்டிவிட்டார்கள். நம்ம மக்களுக்கு இலவசமா எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ).

அப்போது இளைஞர் காங்கிரஸாரின் பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்களிடையே உரையாடியிருக்கார் ராகுல். வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே அவர்களது அனைவரின் ஏகோபித்த கருத்தாக இருந்திருக்கிறது. இதற்கு ராகுல் அளித்த பதில் “YES”. இது இளைஞர் காங்கிரஸாரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராகுல் காங்கிரஸ் தலைமையை சரிகட்டிவிட்டால் இது நடக்கக் கூடியதே!! இதில எந்த கஷ்டமும் இல்லை, காங்கிரஸின் அடுத்த தலைமையே இவர் தான் என்று மன்மோகன் சிங்கே நினைக்கிறார்.

பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழகத்திற்கு அடிக்கடி வருவேன் என்று ராகுல் கூறியது பொய்க்கவில்லை. மிகவும் குறுகிய காலத்தில் இது தமிகத்திற்கு அவருடைய நான்காவது விஸிட். இதில் மிகவும் குறிப்பிட்த்தக்க அம்சம், அவர் ஒருமுறை கூட கோபாலபுரத்திற்கு செல்லவில்லை. ராஜிவை போலவே இவர் செல்லும் இடம் எல்லாம் மீடியா இவரை துரத்துகிறது.

இன்னொரு நியூஸ் படித்தேன் அது - புதிய சட்டமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்க துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர், சோனியா மற்று சில காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பை கொடுத்தார். ராகுலையும் சந்திக்க விருப்பம் தெரிவித்த போது, ராகுல் ஸ்டாலினை "வாங்க நாடாளுமன்ற காண்டீனுக்கு" அழைத்து அங்கெ அழைப்பை வாங்கியிருக்கிறார்.

நம்மை அலுவலகத்தில் சந்திக்க யாராவது விசிட்டர்கள் வந்தால் அவர்களை வாங்க காண்டீணுக்கு என்று அழைத்து சென்று பேச மாட்டோமா ? அது மாதிரி நடந்திருக்கிறது. ( இந்த மாதிரி நடந்திருந்தால், அது ராகுலுக்கு தான் இழுக்கு )


இந்த முறை சோனியாஜி திறப்பு விழாவிற்கு வந்த போது, அவர் முதல் முறையாக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றுள்ளார். அதற்கு பிறகு தான் விழாவிற்கு போய்யுள்ளார். இதனால் திமுகவை விட காங்கிரஸ் கட்சிகாரகள் மிகுந்த ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். பத்திரிக்கை கழுகு, குருவி எல்லாம் ஓவர் டைம் போட்டு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. சோனியா காந்தி ராகுல் காந்தி பேச்சை கேட்டுக்கொண்டு தான் இந்த மாதிரி செய்தார் என்றும் சொல்லுகிறார்கள்.

இன்னொரு விஷயமும் பத்திரிக்கையில் வந்துள்ளது அது ராகுல் காந்தி மத்திய அமைச்சர்கள் எல்லாம் ஊழல்கறை படியாதவர்களாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார் ஆனால் திமுக இந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை அதனால் ராகுல் கொஞ்சம் அப்செட் என்கிறார்கள்.

அடுத்த 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கட்சி ஆரம்பித்துவிடுவார்கள். முதல்வர் பதவி திமுகவிற்கு (ஸ்டாலின்?) , துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி என்று ஆரம்பித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.


புதிய சட்டமன்ற கட்டிடத்துக்கு எவ்வளவு மூட்டை சிமிண்ட் தேவைப்பட்டது என்று தெரியாது ஆனால் கூட்டணியை ஒட்ட வைக்க சில மூட்டை வஜ்ரம் சிமிண்ட் தேவைப்படும்.


27 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

சோ அடிக்கடி குறிப்பிடுவது போல் ராகுலிடம் ஏதோ ஒரு விசேஷத் தன்மை இருக்கத்தான் செய்கிறது. அதற்கு அவருடைய திமுக வினுடனான அணுகுமுறைகளே சான்று.

ராகுல் YES சொல்லி விட்டார். ஆனால் கலைஞர் ஆட்சியே காமராஜர் ஆட்சிதான் என லாலி பாடும் அறிவாலய எடுபிடிகளான தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் ராகுலின் முடிவிற்கு எப்படி ரியாக்ட் செய்வார்களோ?

ஜெயக்குமார் said...

He is not the guy whom congress wants now.. He believes in gimmicks, rather than actions.. Congress is a evergreen slave for Munnetra kazhagam parties..

SanjaiGandhi™ said...

//இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த. கிட்டத்தட்ட 13 லட்சம் இளைஞர்கள் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்கள். ( இலவசமாக பேட்ஜ் வாங்கியவர்கள் எல்லாம் உறுப்பினர்கள் என்று முடிவுக்கட்டிவிட்டார்கள். நம்ம மக்களுக்கு இலவசமா எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ).//

:)).. வழக்கம் போல சும்மா அடிச்சி விட்டிருக்கிங்க.. அதென்னங்க பேட்ஜ்? எனக்கு எதும் தரலீங்க.. 2 பாஸ்போட் சைஸ் போட்டோ, வயதுக்கான சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்ற்தழ் ஆகியவை இணைக்கப் படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளபடவில்லை. வாக்கு சாவடியில் , இளைஞர் காங்கிரஸ் வாக்காளர் பட்டியலில் பெயரும் அதற்கான புகைப்பட அடையாள அட்டையும் இல்லாத வாக்காளர்கள் வாக்கு பதிவுக்கு அனுமதிக்கப் படவில்லை. இவை அனைத்தும் 100% வெளிப்படையாக நடைபெற்றன. தவறாக யாரையும் சேர்க்கவில்லை.. பல கட்ட சரிபார்ப்பு பணிகளுக்கு பின்னரே சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். இதன் நோக்கமே நிஜமான உறுப்பினர்கள் எண்ணிகை தெரிந்து அதை அதிகரிக்க செய்வது தான். நீங்கள் சொல்வது போல் பேட்ஜ் எல்லாம் எதும் தரவில்லை.. :))

Prabhakaran said...

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாம் மகன்களையும், பேரன்களையும் அவங்க கொள்ளு பேரன்களையும் ஆட்சியல் வைத்து அழகு பார்க்க போறோமோ, இதற்க்குத்தான் சுதந்திரம் வாங்கினோம? வெள்ளைக்காரர்கள் சொன்னது போல நம்மை ஆளும் தகுதி நமக்கு இல்லையா?(சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்!!!!).

Prabhakaran

Don said...

Rahul has all qualities to be India's Obama!. But he still needs some grooming. Only recently his speeches started pulling crowds. He was totally frank in one of his speeches I heard in a college. Rahul is like a "tubelight"(all puns intended), the best and the worst. I home his sister would help him and the duo will be much more formidable than Rahul alone. Without proper leadership in TamilNadu Congress, I don't think they can beat DMK.

IdlyVadai said...

//SanjaiGandhi™ //

சரிங்க ஆபிஸர் ( கவுண்டமணி ™, இந்தியன் )

SanjaiGandhi™ said...

//இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த. கிட்டத்தட்ட 13 லட்சம் இளைஞர்கள் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்கள்.//
சரியான ஆவணங்கள் சமர்பிக்காததால் சரிபார்ப்புக்குப் பின் சுமார் 3 லட்சம் பேர் நீக்கப் பட்டார்கள்.

சிக்கன நடவடிக்கை அரசாங்கத்துக்கு தான்.. எந்த இயக்கத்துக்கும் இல்லை.. ராகுல் விமான பயண செலவு காங்கிரஸ் கட்சியோடது.. அரசாங்கத்தோடது இல்லை..

நேற்று ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து கோவைக்கு ஹெலிகாப்டரிலும் கோவையிலிருந்து தனி விமானம் மூலமும் சென்னை சென்றார்.. இது அவர்கள் கட்சிப் பணம். பிறர் விமர்சிக்க முடியாது. அதுபோல் தான் ராகுல் பயணமும்.

Anonymous said...

Rahul has one admirable quality, he lacks the sophistications/complexes of a politician. I haven't seen a person as simple,straight forward as Rahul Gandhi in power/politics. Even a kid can say what he thinks.

SanjaiGandhi™ said...

ஏன் வயித்தெரிச்சல் உடான்ஸ் ஆபிசர்? :) நீங்களும் அப்டி போட்டுக்கோங்க.. யாரும் திட்ட மாட்டாங்க.. :))

donukellam don said...

@don ஏன்பா டானு? உங்களுக்கு rahul gandhiஅ compare பண்ண ஒபமாவ விட்டா வேற ஆளே கிடைக்கலையா ? அவரே அங்க ரொம்ப கஷ்டபடுராறு..ஒரு வருஷம் back தான் அவரு ரொம்ப influential ஆ இருந்தாரு..இப்போ இல்ல..

jaisankar jaganathan said...

//அது ராகுல் காந்தி மத்திய அமைச்சர்கள் எல்லாம் ஊழல்கறை படியாதவர்களாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார்//

என்ன ஒரு ஜோக் இது. 50000 ரூபாய் சொத்து மதிப்பு காட்டினாங்க எலக்‌ஷன்ல. இது எநத காமடின்னு சொல்லுங்க

Don said...

Wow Rahul, You did it!
http://in.news.yahoo.com/248/20100318/1582/tnl-rahul-charm-sends-congman-to-school.html
This is how it starts.
First they ignore you, then they laugh at you, then they fight you, then you win.. - M.K Gandhi
How naturally this applies to Rahul.

jaisankar jaganathan said...

//இலவசமாக பேட்ஜ் வாங்கியவர்கள் எல்லாம் உறுப்பினர்கள் என்று முடிவுக்கட்டிவிட்டார்கள். நம்ம மக்களுக்கு இலவசமா எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது //

திருச்சில ஒரு சின்ன மாறுதல் கூட இல்லை ராகுல் காந்தியினால். அவர் வருகை வேஸ்ட் என்று நினைக்கிறேன்.
(விஜய்காந்த வந்தப்போ கூட பரபரப்பு இருந்துது)

jaisankar jaganathan said...

// 2 பாஸ்போட் சைஸ் போட்டோ, வயதுக்கான சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்ற்தழ் ஆகியவை இணைக்கப் படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளபடவில்லை//

இவ்வளவும் 13லட்சம் பேரிடமா? உங்களுக்கே இது ஓவரா தெரியலையா?

SanjaiGandhi™ said...

ஜெய்சங்கர், உங்கள மாதிரி தான் பலரும்.. ஆனா மேட்டர் என்னன்னா, இந்த 13 லட்சம் பேரோட பட்டியலும் விலாசம் மற்றும் புகைபடத்தோட இணையதளத்துல இருக்கு.. வேணும்னா சரி பார்த்துக்கோங்க..
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 1 அல்லது 2 தேர்தல் பொறுப்பாளர்.. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஒருவர்.. 5ல் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒருவர்.. மாநிலத்துக்கு 3 பேர்.. ஏன் முடியாது?

மேலும் இந்த தேர்தலை நடத்துவது காங்கிரஸ் கட்சி இல்லை.. முன்னாள் தேர்தல் ஆணையர் கேஜே ராவ் தலைமையினால FAME அமைப்பு.. அவர்களின் முடிவே இறுதியானது.. எந்த நிலையிலும் கட்சி தலையிடாது.. மேலும் விவரங்களுக்கு iyc.in பாருங்க.. சும்மா வெறுமனே காழ்ப்புணர்ச்சியில பேசாதிங்க..

யதிராஜ சம்பத் குமார் said...

சஞ்ஜய் காந்தி சார்....


தமிழ்நாட்டுல காங்கிரஸுக்கு ஆதரவா பேசறதுக்கு ஒரு ஆத்மா இருக்கறத நினைச்சா ரொம்ப புளகாங்கிதமா இருக்கு சார். ஏது அறிவாலயத்துல அனுமதி குடுத்துட்டாங்களா?

சிக்கன நடவடிக்கைன்னா பொதுவா என்ன? கட்சிப் பணம்னா எப்படி வேணும்னா செலவழிக்கலாம்னு அர்த்தமா? கட்சிக்கே பணம் போபர்ஸ், ஸ்பெக்ட்ரம் இதெல்லாத்துலேந்தும் வந்த பங்குங்கற பட்சத்துல அதுவும் மக்கள் பணம்தானே?

யதிராஜ சமபத் குமார் said...

மேலும் இந்த தேர்தலை நடத்துவது காங்கிரஸ் கட்சி இல்லை.. முன்னாள் தேர்தல் ஆணையர் கேஜே ராவ் தலைமையினால FAME அமைப்பு.. அவர்களின் முடிவே இறுதியானது.. எந்த நிலையிலும் கட்சி தலையிடாது.. மேலும் விவரங்களுக்கு iyc.in பாருங்க.. சும்மா வெறுமனே காழ்ப்புணர்ச்சியில பேசாதிங்க..///


பொதுத் தேர்தல்களை நட்த்தற இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் கூட நவீன் சாவ்லா தலைவரா இருக்கார். அப்படின்னா தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை அவர் முடிவுதான் இறுதியானதா? தமிழகத்துலேந்து தோத்துப் போனதா அறிவிக்கப்பட்டு அப்பறம் ஜெயிச்ச மத்திய அமைச்சர் வெற்றி கூட தேர்தல் ஆணையத் தலைவரோட இறுதி முடிவுதானா? இது பற்றி உங்க கருத்து என்ன?

Anonymous said...

Reforming the Tamilnadu congress would have been a more worthy move.Ignoring the power struggles in TNC only shows that the central command is afraid of meddling with it.

Anonymous said...

If the numbers were skewed, it's will only alert DMK.
I'm not sure what could have been the motive behind releasing such numbers.(ploy to ask more seats in next election??)
But I appreciate the fact that
Congress is increasingly seeking to replace these old and corrupt parties than having a relationship with them. Isn't that a good sign?
And Rahul's move to reform the youth congress instead of meddling with the aged folks, very much reflects his predicament. The senior leaders will start feeling ignored and try to attract his attention. He has clearly showed, what attracts him.
Watch out for senior congressmen falling in line with Rahul.

blogsenthil said...

well, whether we appreciate the dynastic politics or not; whether we like the congress party or not, ground reality is that Mr. Rahul Gandhi is emerging as a charming and promising leader in indian political arena. The best part is - not only did he distanced himself from conventional politics but also developing as a distinguished political figure who is promising in recent politics.

He got no-nonsense approach to reach out to people; showing enormous enthusiasm in bringing youthfulness to his political party; trying to transform and strengthen his party in states where its roots are corrupted or weakened.

He may not be the ideal leader we may deserve, but is the one of best choices we can have in forthcoming years.

(As this article is all about Rahul and not about his party, I restrict myself writing on him)

SanjaiGandhi™ said...

யதிராஜ் சார், உங்க அளவுக்கு எனக்கு அரசியல் தெரியாது சார்.. நான் பாவம் விட்ருங்க.. நீங்க செமத்தியா கிடுக்கிப் பிடி கேள்வி எல்லாம் கேக்கறிங்க போங்க சார்.. :(

Baski said...

// ஜெயக்குமார் said...
He is not the guy whom congress wants now.. He believes in gimmicks, rather than actions.. Congress is a evergreen slave for Munnetra kazhagam parties..
//
தமிழ் தாத்தா மேடையில பேசினத பார்த்தா வேற மாறி இல்ல தெரியுது.

//Prabhakaran said...இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாம் மகன்களையும், பேரன்களையும் அவங்க கொள்ளு பேரன்களையும் ஆட்சியல் வைத்து அழகு பார்க்க போறோமோ, இதற்க்குத்தான் சுதந்திரம் வாங்கினோம? வெள்ளைக்காரர்கள் சொன்னது போல நம்மை ஆளும் தகுதி நமக்கு இல்லையா?(சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்!!!!).
//

நீங்க சோனியாவை திட்டுறீங்க.. பேரு வேற பிரபாகரன் ..... நான் எஸ்கேப்

//சிக்கன நடவடிக்கை அரசாங்கத்துக்கு தான்.. எந்த இயக்கத்துக்கும் இல்லை.. ராகுல் விமான பயண செலவு காங்கிரஸ் கட்சியோடது.. அரசாங்கத்தோடது இல்லை..//
அது சரி தான்.. இட்லிக்கு அவர் கூட சைக்கிள் ல ராகுல கூட்டிகிட்டு போகணும்ன்னு நெனைகிறாரா? அவர் தனி விமானத்தில் வருவது தான் செலவு கம்மின்னு வேறு எங்கோ படிச்சேன். கேட்டில் கிளாஸ்(?) வந்தா பாதுகாப்பு/இதர செலவுகள் இன்னமும் அதிகமாம்.
இதே நம்ம தலிவரா இருந்தா விடியோ காண்பாரன்ஸ் பண்ணி இதை பார்த்திட்டு, அந்த பணத்த கொடுத்து இன்னும் கொஞ்ச பேர கட்சில சேர்த்திருப்பார். காசு கொடுத்தா போதும் என நினைக்காமல் தேர்தலை நேரில் வந்து பார்த்து உற்சாக படுத்த நினைத்த இவரை என்ன சொல்லி திட்ட?

//திருச்சில ஒரு சின்ன மாறுதல் கூட இல்லை ராகுல் காந்தியினால். அவர் வருகை வேஸ்ட் என்று நினைக்கிறேன். (விஜய்காந்த வந்தப்போ கூட பரபரப்பு இருந்துது)//
ராகுலுக்கு இன்னும் அரசியல் தெரியல ... கொஞ்சம் காசு செலவு பண்ணி கோழி/மட்டன் பிரியாணி சுட சுட போட்டிருந்தால் நீங்க எதிர்பார்த்த "பரபரப்பு" வந்திருக்கும். ஒருவேளை அவர் இந்த "பிரியாணி ராமன்கள்" வேண்டாம் என நினைத்துவிட்டாரோ?

jaisankar jaganathan said...

//ஒருவேளை அவர் இந்த "பிரியாணி ராமன்கள்" வேண்டாம் என நினைத்துவிட்டாரோ?
/
தயிர் சாதம் மட்டும்தான்

ஜீயார் said...

ராகுல் தமிழ்நாட்டில் காங்கிரஸை வளர்க்கணும்னு ஆசைப்படுகிறார். ஆனால் கலைஞர் எல்லாத்தையும் பாத்திட்டுதான் இருக்கிறார். ரஜினி விஜய் மேட்டரில் எப்படி ஜெயித்தாரோ அப்படியே ஜெயிப்பார். அப்புறம் தமிழ்நாட்டுக்காரன் என்னைக்குமே டெல்லி கட்டுப்பாட்டை விரும்பமாட்டான். தேசிய கட்சி தமிழ்நாட்டில் தேய்ந்ததற்கும் மற்றொன்று காலுன்றாதற்கும் அதுதான் காரணம். என்று தமிழக தலைவருக்கு டெல்லியை எதிர்த்து வாதிடும் அளவிற்கு சக்தி இருக்கிறதோ அன்றுதான் தமிழ்நாட்டில் இக்கட்சிகள் வளர வழியில்லை. காமராஜருக்கு பின் அப்படி ஒரு தலைவர் இல்லை. இனி வரவும் வாய்பில்லை. எனவே ராகுல் மற்ற மாநிலங்களை கவனிப்பது நலம்.

vignaani said...

1967 -லிருந்து இரண்டு கழகங்கள் ஆட்சி அலுத்துப் போய் விட்டது. எதாவது மாற்றம் வேண்டும் என பெரும்பாலான தமிழர்கள் (committed party workers excluded) விரும்புகிறார்கள் எனவே தோன்றுகிறது. விஜயகாந்த் கட்சி அமைத்து sincere ஆக புது குரல் கொடுத்தவுடன் பத்திரிக்கைகளும் பொதுமக்களில் ஒரு சிலரும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியது இதனால் தான். இது வரை தேர்தல்களை ஒரு சட்ட அவை இடம் தவிர வேறு ஒன்றும் வெல்ல முடியவில்லை. கூட்டணி அரசியல் அவர் ஒன்றும் பெரியதாக செய்வார் என்ற நம்பிக்கையை குறைத்து விட்டது. ஆகவே கலகங்களை தோற்கடிக்க கட்சி அமைப்பும், கொடியும், சின்னமும், அவசியம். காங்கிரஸ் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஓரளவு வந்து விட்டால், குழு அடிதடியையும் மீறி காங்கிரஸ் செய்யும் என்று சாமானியத் தமிழனுக்கு தோன்றினால் அவர்களும் தனியாக நின்றாலும் ஐம்பது-எழுபது சீட்டுகள் பிடிக்க முடியும்.; கொஞ்சம் பாராளுமன்றத்தில் எவ்வளவு கைகள் வேண்டும் என்று கணக்கு போட்டு இந்த கழகமா அந்த கழகமா என இரண்டு தேர்தல்களுக்கு காங்கிரஸ் நினைத்து விட்டால் அவர்கள் வருவது நடக்கக் கூடிய காரியமே. ராகுல் ஒரே எண்ணத்துடன் இதைப் பிடித்துக் கொண்டிருந்தால் 2011/2016 (அதற்கு முன்னமே வர சான்சே உண்டு), காங்கிரஸ் தனியாக இல்லாவிடினும், பெரிய கட்சி (அதிக உறுப்பினர்) என்ற நிலையில் ஆட்சி அமைக்க முடியும் தான். அது வரை, ராஹுளின் சின்ன சின்ன உளறல்களை, கிம்மிக்க்க்குகளை அடக்கி வாசித்து, மீடியா மேலும் இணை தளப் பதிவுகள் ,குறிப்பாக இட்லி வடை போன்ற நடுநிலை (?) அதை வரவேற்க வேண்டும்

SanjaiGandhi™ said...

பாஸ்கி.. ஹிஹி.. முடியல.. :)))

// Prabhakaran said...

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாம் மகன்களையும், பேரன்களையும் அவங்க கொள்ளு பேரன்களையும் ஆட்சியல் வைத்து அழகு பார்க்க போறோமோ, இதற்க்குத்தான் சுதந்திரம் வாங்கினோம? வெள்ளைக்காரர்கள் சொன்னது போல நம்மை ஆளும் தகுதி நமக்கு இல்லையா?(சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்!!!!).

Prabhakaran//

பிரபாகரன் சார், இப்டியே தூரமா இருந்து எத்தனை காலத்துக்கு நொட்டை சொல்லிட்டு இருப்பிங்க. எதுக்கு பேரன்களுக்கும் கொள்ளுப் பேரன்களுக்கும் வாய்ப்பு கிடைக்க விடறிங்க? நீங்க அரசியலுக்கு வாங்க.. உங்க செயல்பாட்டால மக்கள் செல்வாக்கை பிடிங்க.. அப்டியே ஆட்சியைப் பிடிங்க. மேட்டர் சால்வ்ட். உங்களை யாரும் தடுக்கலையே சார்...

காங்கிரஸ், திமுக விட்ருங்க.. வேற கட்சியைப் பாருங்க.. வாஜ்பாய், அத்வானி, கட்காரி, பங்காரு லச்சுமன், , ஜெயலலிதா, மாயாவதி, சரத்பவார், மம்தாபானர்ஜி, லாலு யாதவ், முலாயம் யாதவ், நிதிஷ்குமார், ஜோதிபாசு, பிரகாஷ் கராட் இவங்க எல்லாம் எந்த அரசியல் தலைவரோட வாரிசுகள் சார்? பேரன்களும் கொள்ளுப் பேரன்களும் வேண்டாம்னா இவங்கள ஆதரிங்க.. உச்சத்துல வைங்க.. நீங்க அரசியலுக்கு வாங்க.. இவங்கள மாதிரி ஆகுங்க.. பேரன்களௌ எதிர்த்து அரசியல் பண்ணுங்க.. ஏன் காலம் பூராவும் நொட்டையே சொல்லிட்டு இருக்கிங்க?

ஒன்லி ஒன் டவுட் சார்.. இந்தியாவின் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்தப் பதவியில் இருப்பது திறமையாலா? இல்லை யாருடைய பேரன் அல்லது கொள்ளுப் பேரன் என்ற தகுதியாலா?

இப்போ வரேன் காங்கிரசுக்கு.. சோனியா காந்தி காங்கிரஸ் மற்றும் ஆளும் கூட்டணிகளின் தலைவி மட்டுமே.. பிரதமரோ, மத்திய மந்திரியோ இல்லை.. ராகுல்காந்தி காங்கிரஸ் பொது செயலாளர் மற்றும் எம்பி மட்டுமே.. மந்திரியோ பிரதமரோ இல்லை.. ஏன் பேரன் கொள்ளுப் பேரன் காண்டு உமக்கு? குற்றச் சாட்டை சுமத்தும் முன் சற்றே யோசியும் பிள்ளாய்..

Anonymous said...

Sanjai Ghandi said..
//ஒன்லி ஒன் டவுட் சார்.. இந்தியாவின் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்தப் பதவியில் இருப்பது திறமையாலா? இல்லை யாருடைய பேரன் அல்லது கொள்ளுப் பேரன் என்ற தகுதியாலா?//

MMS is PM because he is a puppet to Sonia and her gang members.

Please read detailed history of Sonia/Antonia.

Sonia, Priyanka/Bianca and the drunkard/womanizer Raoul are remotely controlling administration.

They are working towards promoting Christians/Christianity and are anyways dangerous to the Nation.

-Patriot