பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 12, 2010

நான் முத்துமாரி ஆனது எப்படி ?


இந்த வார விகடனில் அந்த கட்டுரை...

புழுதி பறக்கும் கரிசல் காடுதான் முத்துமாரியின் முகவரி. தயங்கி வெளிப்படும் வார்த்தைகளின் உச்சரிப்பில் இன்னமும் நகரம் பழகாத ஒரு கிராமத்துப் பெண் தெரிகிறார். வாய்ப்புகளும் வசதிகளும் அற்ற விருதுநகர் பக்கத்துக் கிராமம் சத்திரரெட்டியப்பட்டியில் பிறந்த முத்துமாரி இன்று டெபுடி கலெக்டர்!

முதல் தலைமுறையாகப் பள்ளிக்கூடம் பார்த்து, முட்டி மோதி முன்னேறி வந்திருக்கும் கரிசல் மண் பெண்!

வாய்ப்புகள் சூழ்ந்திருக்க உச்சம் தொடுவதைக் காட்டிலும்; உண்ணவும், உடுக்கவும், படிக்கவும், பயணிக்கவும் வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்தில் இருந்து வெற்றியை எட்டிப்பிடிப்பது கூடுதல் சாதனை!

''விருதுநகர்ல இருந்து மதுரை போற ரோட்லதான் எங்க ஊரு. அப்பா சிவபாக்கியத்துக்கும் அம்மா பஞ்சவர்ணத்துக்கும் விவசாயம்தான் வேலை. சொந்தமா இருக்குற கொஞ்சம் நிலத்துல மழை பெய்ஞ்சா ஏதாச்சும் விவசாயம் நடக்கும். மத்த நாளெல்லாம் கூலி வேலை. நானும் அப்பப்போ அவங்ககூட வேலைக்குப் போவேன். பள்ளிக்கூடத்துலயும் எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. 'வீட்டுல நம்மளை கஷ்டப்பட்டுப் படிக்கவைக்காங்க. ஒழுக்கமாப் படிக்கணும்.' அது மட்டும்தான் தெரியும். அதனால, டீச்சர் என்ன படிச்சுக் குடுத்தாலும் உடனே படிச்சிருவேன். பத்தாங்கிளாஸ்ல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.

கள்ளிக்குடி பள்ளிக்கூடத்துல ப்ளஸ் ஒன் சேர்ந்த பிறகுதான் இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசை வந்து வெறியோடு படிச்சேன். எப்பமும் படிப்புதான். ப்ளஸ் டூ-ல 1026 மார்க் எடுத்து பள்ளிக்கூடத்துல இரண்டாவதா வந்தேன். எங்க ஊருக்கு அதெல்லாம் பெரிய மார்க். ஆனா, ஒண்ணுத்துக்கும் பயன்படலை. இன்ஜி னீயரிங் காலேஜ்ல பேமென்ட் ஸீட்டுதான் கிடைச்சது. அதுக்கு லட்சக்கணக்குல பணம் கட்டச் சொன்னாங்க. எங்க வீட்டுல முடியலை. அதுக்காக என்ன செய்ய?

பிறகு, விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்ட்ரி சேர்ந்தேன். 'நல்லாப் படிக்கிற பிள்ளையை இப்படி ஹிஸ்ட்ரில சேர்த்துவிட்டிருக்குறதப் பாரு'ன்னு ஊரெல்லாம் எங்க அம்மா, அப்பாவைக் கேலி பண்ணாங்க. 'வரலாறு படிச்சா அரசாங்க வாத்தியார் வேலை மட்டும்தான் கிடைக்கும். இப்பல்லாம் அரசாங்கத்துல ஹிஸ்ட்ரி வாத்தியார் வேலைக்கு ஆள் எடுக்குறது இல்லை' அப்படி, இப்படின்னு ஆளாளுக்கு சொன்னாங்க. அதைக் கேட்டு எங்க வீட்டுக்கும் வருத்தம். நானும் அழுவேன். மெள்ள மெள்ளத் தேறி, 'சரி எதுவா இருந்தா என்ன? படிக்கிறதை ஒழுங்காப் படிப்போம்'னு படிக்க ஆரம்பிச்சேன். டிகிரி ரிசல்ட் வந்தப்போ பி.ஏ.ஹிஸ்ட்ரியில நான்தான் யுனிவர்சிட்டி கோல்டு மெடல்.

அடுத்தது என்ன பண்றதுன்னும் தெரியலை. அம்மா, அப்பா ரெண்டு பேருமே படிக்காததுனால விவரம் சொல்ல யாரும் இல்லை. நாங்களா உக்காந்து பேசி 'டீச்சருக்குப் படிச்சா என்னிக்கு இருந்தாலும் வேலை கிடைச்சிரும்'னு முடிவு பண்ணினோம். சேலம் சாரதா பெண்கள் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., சேர்ந்தேன். ஒரு வருஷம் ஹாஸ்டல். அரசாங்க ஸீட்டுங்கிறதால பெருசாச் செலவு இல்லை. படிச்சு முடிக்கும்போது என்கூட காலேஜ்ல படிச்ச புஷ்பராணியைப் பார்த்தேன். அவங்க மதுரையில தங்கி ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராகிட்டு இருந்தாங்க. 'நானும் ஐ.ஏ.எஸ்., எழுதணும். என்ன பண்ணணும்?'னு கேட்டதுக்கு, 'தினமும் பேப்பரைப் படி. அதுல வர்ற அறிவிப்புகளைப் பார்த்துக்கிட்டே இரு'ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் வீட்டுல தினமும் பேப்பர் போடச் சொல்லி படிக்க ஆரம்பிச்சேன்.

அப்படித்தான் ஒருநாள் 'சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை' சார்பா சென்னையில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி கொடுக்கிற தகவல் தெரிஞ்சது. அங்கே போனேன். சின்ன தேர்வுவெச்சு சேர்த்துக்கிட்டாங்க. அதுவரைக்கும் சென்னைக்கு நான் வந்ததே இல்லை. ஆனா, அந்தப் பயமே தெரியாம அத்தனை அன்போடு அக்கறையோடு கவனிச்சுக்கிட்டார் துரைசாமி சார். இந்த ரெண்டு வருஷத்துல நான் சாப்பிட்ட சாப்பாடு, துணிமணி எல்லாம் அவர் தந்ததுதான். நானெல்லாம் சென்னைக்கு வந்து படிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கும்போது அதை சரியாப் பயன்படுத்திக்கணும்னு நினைச்சேன்.

2008-ல் நான் இந்த ஐ.ஏ.எஸ்., அகாடமியில் வந்து சேர்ந்தேன். சிவில் சர்வீஸ் எழுதுறதுதான் நோக்கம். ஆனா, 2009 ஆரம்பத்தில் குரூப்-1 எக்ஸாம் வந்தப்போ, எங்க குடும்ப நிலைமையை மனசுலவெச்சு அதை எழுதலாம்னு நினைச்சேன். அகாடமியில் சொன்னப்போ, 'தாராளமா எழுதுங்க'ன்னு சொல்லி அதுக்குரிய புத்தகங்கள் எல்லாம் வாங்கித் தந்தாங்க. ராத்திரி பகலா எனக்குப் படிக்கிறதுக்கு எல்லாரும் உதவி பண்ணாங்க. ஆரம்பக் கட்டத் தேர்வு, பிறகு எழுத்துத் தேர்வு, அப்புறம் நேர்முகத் தேர்வு எல்லாம் வரிசையா முடிஞ்சு போன மாசம்தான் தேர்வு முடிவு வந்துச்சு. முதல் முயற்சியிலேயே குரூப் -1 தேர்வுல ஜெயிச்சுட்டேன். இப்போ நான் டெபுடி கலெக்டர்!'' என்கிறார் முத்துமாரி கம்பீரமாக.

''இனி என் நோக்கம் ஐ.ஏ.எஸ்-தான். தொடர்ந்து சிவில் சர்வீஸ் எழுதுவேன். சத்திரரெட்டியப்பட்டியின் முதல் ஐ.ஏ.எஸ்., நானாக இருப்பேன்!''

வாழ்த்துக்கள் முத்துமாரி!

( நன்றி: விகடன், 17.3.2010 )
வரலாறு படித்து வரலாறு படைக்க இருக்கும் முத்துமாரிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

32 Comments:

padma said...

வாழ்த்துக்கள் .romba inspiring

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் Ms.முத்துமாரி.

Anonymous said...

i would say government should recognise this kind of students...

kasaikannan said...

முத்துமாரியின் முயர்ச்சி தமிழ்நாட்டு கிராமத்து பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்குமே வழிகாட்டியாகட்டும்
சைதை துரைசாமி போல இன்னும் சிலர் இருந்தால் தமிழகம் வாழும்.

முகிலன் said...

வாழ்த்துகள் முத்துமாரி... விரைவில் முத்துமாரி ஐ.ஏ.எஸ் ஆகப் பார்ப்போம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது..

ராஜ சுப்ரமணியன் said...

என்ன ஒரு விடாமுயற்சி, கடின உழைப்பு. வாழ்த்துக்கள், டெபுடி கலெக்டர் அம்மா!

இவரைப் போன்ற வரலாறு படைக்கும் சாதனையாளர்களை மகளிர் தினத்தில் ஊடகங்கள் கண்டு கொள்வதேயில்லை. Shame on the Editors.

வாழ்த்துக்கள் மீண்டும்.

யதிராஜ சம்பத் குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள். :-)

Kannan said...

போடறா சக்கை! சரியான உழைப்பு! குறி வைச்சு அடிச்சு இருக்கீங்க. சபாஷ்..கலக்கல் தொடரட்டும். பணியில் அல்லு சில்லுகளின் ஆட்டத்தை அடித்து நொறுக்குங்கள். உங்களுடைய அதிகாரத்தை மக்களின் நன்மைக்காக அள்ளி வீசுங்கள். நம் நாட்டில் பொருளாதாரத்தினால் ஒடுக்கபட்டவர்க்கு, உழைத்து முன்னேற துடிப்பவர்க்கு ஒரு உதாரணமாக திகழுங்கள்.

jaisankar jaganathan said...

இட்லி வடையின் உருப்புடியான பதிவு இது

விக்கி said...

வாழ்த்துக்கள் Ms.முத்துமாரி .. Very Nice post

மணியன் said...

Positively Positive. Keep it up !

ராமுடு said...

Ms.Muthukumari,

CONGRATULATIONS. But dont stop with IAS. Give back something to society and you are role model to everyone.. I admired about you.. Again my best wishes..

Madhavan said...

//Blogger jaisankar jaganathan said...

இட்லி வடையின் உருப்புடியான பதிவு இது//

Repeattu....

வரதராஜலு .பூ said...

வாழ்க வளமுடன் சைதை துரைசாமி

வரதராஜலு .பூ said...

சிலிர்ப்பு உடல் முழுவதும். வாழ்த்துக்கள் விரைவில் I.A.S. ஆகப்போகும் முத்துமாரிக்கு.

பகிர்விற்கு நன்றி இ.வ.

Itsdifferent said...

Congrats to Muthu Mari.
I think Saidai Duraisami, salutes to your efforts. We have to support him in all respects, give him good visibility and take this message to lots of people to avail such an opportunity.

subamgurunathan said...

Its somrething great to read.We should appreciate Mr.saidai duraisamy and other who are supporting like this.
cheers Ms.muthumari and all the best

சந்தோஷ் = Santhosh said...

வாழ்த்துக்கள் விரைவில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Anonymous said...

Sivanesa Chelvan Writes,
Tears Rolled Down From my Eyes when We read your story in I.V. We do not know if our congratulations will be reaching you at all !. Me and My wife felt as though our own daughter reaching these heights with all the adversaries. God Bless You , My Child ! And Wish You To See And Achive More Such Goals..

Anonymous said...

Congrats Saidai DuraiSami,
you are the role model for politicians to follow

Anonymous said...

சாரு பேட்டி மாதிரி சாக்கடை விஷயங்களைப் போட்ட பாவம் தேர இந்த போச்டிங போட்டு பிராயசித்தம் பண்ணிட்டிங்க. ( அதுக்காக நாளைக்கே
இன்னொரு சாககடை மேட்டரைப் போட்டுவிடப்போறீங்க.)
அந்த சைதை துரைசாமி படத்தையும்
அவர் நடத்தற அமைப்பைப் பற்றியும் ஒரு பாகஸ் மேட்டராவது போடறது... விகடன் போட்டிருப்பாங்க, ந்யனதாராவுக்கு சுண்டு விரலில் வலி என்ற மேட்டரும் பெரிய சைஸ் கவர்ச்சிப் படமும் கிடைச்சிருக்கும்! - டில்லி பல்லி

goindu said...

Valthukkal Nermaiyana Abisara Irunga Muthu!

Saidai Duraisami patri Erkanave Niraya Per Solranga, Thalai Vanangukiren avarin Sevaiku

kggouthaman said...

நிகழ்கால டெபுடி கலெக்டருக்கும், எதிர்கால ஐ ஏ எஸ் அவர்களுக்கும் 'எங்கள்' வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் மகளிர் அனைவருமே இவ்வாறு முன்னேறவேண்டும்.

ஜெயக்குமார் said...

அந்தா ரேஸ்ல மொதல்ல வர்ரான் பாரு அவந்தான் என்னோட பிரெண்டு அப்படினு சொல்லிக்கிறமாதிரி, இந்த டெபுடி கலெக்டர் எனக்குப் பக்கத்து ஊரு என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

வாழ்த்துக்கள் முத்துமாரி.

உண்மையான இஸ்லாமியன் said...

// kggouthaman said...
நிகழ்கால டெபுடி கலெக்டருக்கும், எதிர்கால ஐ ஏ எஸ் அவர்களுக்கும் 'எங்கள்' வாழ்த்துக்கள். //

இட்லிவடை குழுவினரின் வாழ்த்துக்கள் என்று சொல்லாமல் இதென்ன கண்ணாமூச்சி விளையாட்டு?

ஈ ரா said...

முத்து மாரிக்கும், சைதை துரைசாமி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ..

சைதை துரைசாமி அவர்களின் மனிதநேய அறக்கட்டளை பல்வேறு நற்செயல்களைச் செய்து வருகிறது...

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு.. :

1 ) உண்மையில் வசதி குறைவானவர்களுக்கு ஒரு மாபெரும் திருமண மண்டபம் சென்னை வேளச்சேரியில் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2 ) சென்னை சைதாபேட்டையில் பூக்க்காரத்தெருவில் மிகக்குறைந்த விலையில் சுவையான உணவு வழங்கப்படுகிறது...

Maruthiah said...

Touching.... வாழ்த்துக்கள் முத்துமாரி

Baski said...

Goodwork by Vikatan.

நல்லா copy/paste பண்ணறீங்க..
Are you a software engineer? :-P

Manickavasagam said...

வாழ்க வளமுடன்

Anonymous said...

HIGHLY MOTIVATING. HATS OFF TO SAIDAI.

Anonymous said...

Congratulations to Muthumari.... Let us also recognize and appreciate the efforts of Thiru Saidai Duraisamy. He is doing a lot of good things to the society.

R.Gopi said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் முத்துமாரி...