பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 11, 2010

சாரு நிவேதிதா 'ப்ளஸ் மைனஸ்' பேட்டி

பல நண்பர்கள் கேட்டுக்கொண்ட தால் இந்த பதிவு.
சாருவின் ஜூவி பேட்டி !

அந்த சாமியார் அதை சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே..

நித்திய ஆனந்த சுவாமிகளின் வீடியோ காட்சிகள் விஸ்வரூபம் எடுத்ததுமே அவருக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றிய விவாதங்களும் பெரிதாக வெடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாரு நிவேதிதா பற்றி! நித்யானந்தரின் புகழ் பாடும் பீரங்கியாக மாறி இணையதளங்களில் இவர் எழுதிக் குவித்ததும் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் நாம் சாரு நிவேதிதாவிடம் பேசினோம். நேற்றைய பக்தர் - இன்றைய பித்தர் என்று அவர் கலந்துகட்டி அடித்த பதில்கள் செமயோ செம ரகம்!

''நித்யானந்தாவுடன் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? அவருடைய பெரிய விசிறியாக நீங்கள் மாறியது எப்படி?''

''அவர் எழுதிய 600 பக்கங்களுக்கும் மேலான ஆங்கிலப் புத்தகம் ஒண்ணு எனக்கு

கிடைச்சது. அதை வாசிச்ச மாத்திரத்திலேயே நான் திகைச்சுப் போயிட்டேன். 35 வருஷ காலமாக எழுத்துலகத்தில இருக்கிறவன் நான். என்னை அந்த எழுத்துகள் உலுக்கிப் போட்டிடுச்சு. ஓஷோ, புத்தா போன்றவங்களோட கருத்துகளை எல்லாம் விஞ்சத்தக்க விஷயங்களை நித்யானந்தர் அந்தப் புத்தகத்தில சொல்லி இருந்தார். சாதாரண ஆட்கள் இத்தகைய கருத்துகளைச் சொல்ல வாய்ப்பே இல்லை. என்னோட மனசுல ஏற்பட்ட இந்த வியப்பை அப்படியே என்னோட இணையத்தில எழுதினேன். அதைப் பார்த்த நடிகை ராகசுதா என்னை போன்ல கான்டக்ட் பண்ணி, 'சுவாமியைப் பார்க்க வாங்களேன்...'னு கூப்பிட்டாங்க. பொண் ணுங்க கூப்பிட்டாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச் சிடுமில்ல... அதனால 'அவசியம் வரேன்'னு சொன்னேன்.

இந்த இடத்திலதான் நீங்க இன்னொரு ஆச்சர்யத்தைக் கேட்கணும்... அப்போ நான் புதுச்சேரியில இருந்து சென்னைக்கு வந்துக்கிட்டு இருந்தேன். எதிரில் நித்யானந்தா ஒரு ஜீப்ல போய்க்கிட்டு இருக்கார். என்னோட நண்பரும் அதைப் பார்த்தார். நான் உடனே ராகசுதாவுக்கு போன் பண்ணி, 'நான் நித்யானந் தரை ஜீப்ல பார்த்தேன்'னு சொன்னேன். உடனே அவங்க சிரிச்சுக்கிட்டே, 'அதான் சுவாமியோட மகிமை. சுவாமி இப்போ பெங்களூருல இருக்கார். அவர் எப்படி புதுச்சேரி ரூட்ல வந்திருக்க முடியும்!'னு சொன்னாங்க. நான் மெரண்டு போயிட்டேன். ஆதிசங்கரர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு விளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்!''

''நித்யானந்தர் மாய மந்திரம் செய்ததை எல்லாம் ஒரு பெரியாரிஸ்ட்டான நீங்கள் எப்படி நம்பினீர் கள்?''

''நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும். என்னோட மனைவிக்கு கடுமையான கால் வலி. எத்தனையோ இடங்கள்ல காட்டியும் அவளோட கால் வலி தீரலை. ஆனா நித்யானந்தர் அவளோட காலை ஒரு தடவை தான் தொட்டார். அடுத்த நிமிஷமே அவளோட வலி சரியாகிடிச்சு. இதே மாதிரி எத்தனையோபேரோட வியாதிகளை அவர் குணப்படுத்தியதை என் கண்ணால பார்த்திருக்கேன். தன் மனைவியை வியாதியிலேர்ந்து மீட்டதுக்காக ஒரு மூத்த நடிகர் நித்யானந்தரோட கால்களை கட்டிப் பிடிச்சு அழுதார். இது மட்டுமில்லை... ரெண்டாயிரம் பக்கங்கள் கொண்ட 300 புத்தகங்களை நித்யானந்தர் எழுதி இருக்கார். அத்தனையும் ஞானத்தை கரைச்சு குடிச்ச எழுத்துகள். அதோட உலகத்திலேயே மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தில இருக்கிற ஒரு லட்சம் சுலோகங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்றவர் அவர்.

பர்ட்டிக்குலரா எந்த சுலோகத்தை குறிப்பிட்டுக் கேட்டாலும் டாண்ணு சொல்லுவார். 32 வயசுக்குள்ள இதெல்லாம் சாத்தியமே இல்லாததுதானே... அந்தளவுக்கு சக்தி படைச்சவன் (இதுவரை 'ர்' போட்டவர் சற்றே கோபமாகி 'ன்'னுக்குத் தாவியதை என்னவென்று சொல்ல!) வயாக்ரா மாத்திரையைப் போட்டுகிட்டு அசிங்கமான காரியங்கள் செய்வதை எங்கே போய்ச் சொல்றது? உனக்கிருக்கிற அசாத்திய சக்தியை நடிகைகிட்டே காண்பிக்கிறயே... நீயா சாமியாரு?''

''ரஞ்சிதாவை நீங்கள் நித்யானந்தரோடு பார்த்திருக் கிறீர்களா?''

''நடிகர் விஜய்யோட அம்மா ஷோபா, கோவை சரளா, நடிகர் அர்ஜுன் போன்றவர்கள் எல்லாம் சாமியாருக்கு பெரிய விசிறிங்க... ஏன் பாலிவுட் ஸ்டாரான விவேக் ஓபராய்கூட மாசத்துக்கு ஒரு தடவை சாமியாரை சுத்தி வந்திடுவார். இதோடு, பல முன்னாள் செக்ஸ் நடிகைகளையும் நான் சாமியாரோட பார்த்திருக்கேன். நைட் முழுக்க ஹோட்டல், பார்னு கூத்தடிக்கிற ஒரு கவர்ச்சி நடிகை ஆசிரமத்தில ஹீலிங் பயிற்சி பண்ணிக்கிட்டு இருப்பார். அதையெல்லாம் பார்க்குறப்பவே ஏதோ தப்புத்தண்டா நடக்குதுன்னு மனசுக்குள்ள தோணினச்சு. இருந்தாலும் நித்யானந்தாவோட எழுத்தும் பேச்சும் அபூர்வ சக்தியும் என்னைய நம்ப வெச்சிடிச்சு.''

''நித்யானந்தர் - ரஞ்சிதா சி.டி. காட்சிகள் உண்மை தானா?''

''அப்பட்டமான உண்மைதான். அந்தக் காட்சி களைப் பார்த்துப் பார்த்து நான் ரொம்பக் கடுப்பில இருக்கேன். 'ஏன் நீ பெரிய யோக்கியனா'ன்னு நீங்க கேட்கலாம். அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா 'நானொரு உமனைசர்'னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன். ஆனா நீ... பிரமச் சர்யத்தை போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே?

இந்த சாமியார்கள் விஷயத்தில எனக்கு ஒண்ணு மட்டும் விளங்கவே மாட் டேங்குது. செக்ஸுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரமம் தொடங்கினா யாரும் வெட்டவா போறாங்க? இந்த சாமியாரும் நிஜமான அந்த விஷயத்தை முதலி லேயே சொல்லிட்டு செஞ்சிருந்தா... இன்னிக்கு ரஞ்சி தாவோடு கொஞ்சிக் குலாவுறதை யாரும் தப்புன்னு சொல்ல முடியுமா?

அந்த சி.டி பதிவு இப்போ எடுக்கப்பட்டதே இல்லை. குறைஞ்சது நாலு வருஷத்துக்கு முன்னாலதான் அந்தக் காட்சி பதிவு பண்ணப்பட்டிருக்கு. இதுக்குப் பின்னால பெரிய அரசியலே ஒளிஞ்சிருக்கு. போன மாசம்கூட நான் ரஞ்சிதாவை சாமியாரோட பார்த்தேன். அதனால தான் இந்த உண்மையை இவ்வளவு அழுத்தமா சொல்றேன்.''

''நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''

''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''

பிகு: விளக்கம்
இன்றைய ஜூனியர் விகடனில் அடியேனின் பேட்டி வெளிவந்துள்ளது. அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி. அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது. பெண்களை நேசிப்பவன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். எழுத்தில் இருக்கும் வசதி பேச்சில் இல்லை. எழுத்தில் தவறான வார்த்தைகள் விழுந்தால் அடித்து மாற்றி விடலாம். ஆனால் பேச்சில் பேசியது பேசியதுதான். அப்படி விழுந்த வார்த்தை அது.


சாரு பிழிந்த சாறுக்கு, Z+ செக்கியூரிட்டி தேவைப்படும்.

(படம்: நடுவில் இருப்பது ஒரு புத்திசாலி, சுற்றி இருப்பது புத்திகாலி )

( நன்றி: ஜூவி, சாருஆன்லைன் )

37 Comments:

panchayathu said...

//அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது//

ஹி..ஹி..நித்யாவே தேவலாம்.

VELAN said...

அவர் அப்படி தான். அவர கண்டுக்காம விட்ருங்க. எனக்கு சாருவையும் பிடிக்கும் இட்லி வடையும் பிடிக்கும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

தான் ஒரு வுமனைசர் தான் என்று சாரு தன் பதிவுகளில் வேறெங்கோ பெருமையாக சொல்லிக் கொண்டிருந்ததைப் படித்த ஞாபகம்!

Anonymous said...

Adangoyaala.

Idlyvadai.Pls dont entertain this guy anymore.

He this he is a litrature king where he is only a dustbin.

Anonymous said...

அந்த சி.டி பதிவு இப்போ எடுக்கப்பட்டதே இல்லை. குறைஞ்சது நாலு வருஷத்துக்கு முன்னாலதான் அந்தக் காட்சி பதிவு பண்ணப்பட்டிருக்கு. இதுக்குப் பின்னால பெரிய அரசியலே ஒளிஞ்சிருக்கு. போன மாசம்கூட நான் ரஞ்சிதாவை சாமியாரோட பார்த்தேன். அதனால தான் இந்த உண்மையை இவ்வளவு அழுத்தமா சொல்றேன்...... thats the fact.but what the bastard did is sin

Anonymous said...

சாரு ஒரு பெரியாயரிச்டா? சொல்லவேயில்ல!

Anonymous said...

Atleast charu has the guts to show his identity in public. Does Idly Vadai have this guts to show who he or she is?

அனித்யானந்தா said...

// புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு.//
ஹூம் வுமனைசர் - என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் - மொழி பெயர்த்ததுக்கு பணம் எதிர் பார்க்கிறான் ஐயா - உலகம் ரொம்பக் கேட்டுப் போச்சு!

சேட்டைக்காரன் said...

//// Atleast charu has the guts to show his identity in public. Does Idly Vadai have this guts to show who he or she is? ////

முகம் பார்க்க நாங்களும்
முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்....

ஒரு முறையேனும்.... ஆஹாங்....
திருமுகம் காட்டும்..... ஆஹாங்...
வரம் தர வேண்டும்.... ஆஹாங்...

எனக்கு அது போதும்.....

என இட்லி வடையை பார்த்து பாடுவதால் என்ன பிரயோசனம்.

jaisankar jaganathan said...

//சாரு நிவேதிதா 'ப்ளஸ் மைனஸ்' பேட்டி"//
ஒன்லி மைனஸ் மட்டும் தான் இது

asir said...

எனக்கு சாருவையும் பிடிக்கும் இட்லி வடையும் பிடிக்கும்

repeat

ரிஷபன் said...

//அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது//


எந்த நேரத்தில் எதைப் பத்திப் பேசனும்னு இவருக்கு விவஸ்தையே கிடையாது என்று ஒரு வலைப் பதிவில் நக்கல் அடித்திருந்தார்கள்.

இவரை எல்லாம் எழுத்தாளர் என்ற அடை மொழியுடன் அழைப்பது ராமர் பிள்ளையை சையிண்டிஸ்ட் என்று அழைப்பது போல

சைவகொத்துப்பரோட்டா said...

//அவளோட காலை ஒரு தடவை தான் தொட்டார். அடுத்த நிமிஷமே அவளோட வலி சரியாகிடிச்சு//

மாண்புமிகு மருத்துவர்களே, அனைவரும் வேறு தொழில் கற்று
கொள்ளுங்கள் :))

Tamil MA said...

நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்...

Not Good said...

சாரு உன்ன சாறா பிழிந்தாலும் திருந்தமாட்டே

Madhavan said...

//Anonymous Anonymous said...

Atleast charu has the guts to show his identity in public. Does Idly Vadai have this guts to show who he or she is?//

Needless to say. How does it matter who IV is?

//Anonymous அனித்யானந்தா said...
ஹூம் வுமனைசர் - என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் - மொழி பெயர்த்ததுக்கு பணம் எதிர் பார்க்கிறான் ஐயா - உலகம் ரொம்பக் கேட்டுப் போச்சு!//

Ha. Ha.. Ha.... well said.

Could that translation be from/to other than English?

Anonymous said...

'அதோட உலகத்திலேயே மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தில இருக்கிற ஒரு லட்சம் சுலோகங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்றவர் அவர்.

பர்ட்டிக்குலரா எந்த சுலோகத்தை குறிப்பிட்டுக் கேட்டாலும் டாண்ணு சொல்லுவார்'

Does Charu know them in full.Otherwise how does he know that Nityanadana knows them by heart and in full.
Charu had claimed that he had benefitted from him physically and otherwise.Will he now give up those benefits as they were due to the 'grace' of a tainted person.
Let him do that first and then come clean.Had Nityanada been not exposed like this Charu would have had no problem even if Charu was aware of Nityanada having sex with actress(es). Charu is a traitor to the core to both his readers and to his ex-Guru.Perhaps he expected more from Nityananda's 'grace' but that avenue was shut now. To protect his name and 'respectability' he is writing and giving interviews and in the process is damaging his credibility even further.

யதிராஜ சம்பத் குமார் said...

சாருவும் கிட்டத்தட்ட கலைஞர் மாதிரிதான். என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்ற மனோபாவம் அவரிடத்தே அதிகரித்து வருகிறது.

நித்யானந்தாவை ஓஹோ ஆஹா என்று புகழ்ந்து தள்ளினார், அவருடைய நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள், அவருடைய புகைப்படங்கள் என தனது ப்ளாகில் அமர்க்களப் படுத்தினார். ஆனால் ஒரே நாளில் அவரை கபடவேடதாரி என்று வசைபாடும் அளவிற்கு ரசாயனமாற்றம் நிகழ்ந்து விட்டது அவருள். இதற்கும் நித்யானந்தாவின் அருள்தான் காரணாமாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு குமுதத்தை குப்பை என்று வர்ணித்தார். இன்னும் என்னவெல்லாமோ சொல்லி வசை பாடினார். இன்று குமுதம் ரிப்போர்ட்டரில் இவர் போற்றிய நித்யானந்தா பற்றி தூற்றல் தொடர் எழுதப் போகிறார்.

ATM இல் வெறும் 52 பைசாதான் இருக்கிறது என்றார். ஆனால் பாத பூஜை செய்ய 5000 மும், 25,000 மும், கும்பமேளாவிற்கு செல்வதற்காக ஒரு லட்சமும் எங்கிருந்து வந்ததோ?

முரண்பாடே!! உன் பெயர்தான் சாருவா?

யதிராஜ சம்பத் குமார் said...

'ஏன் நீ பெரிய யோக்கியனா'ன்னு நீங்க கேட்கலாம். அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா 'நானொரு உமனைசர்'னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன். ஆனா நீ... பிரமச் சர்யத்தை போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே?//

அசல் பிதற்றல்!! இந்த வுமனைசர் என்ற வார்த்தை வருகின்ற சீக்வன்ஸை கவனித்தால் இவர் இதனை அர்த்தம் தெரியாமல் ப்ரயோகப் படுத்தியிருக்க முடியாது. அப்படியே சாரு சொல்வது சரி என்றாலும், பெண்களை நேசிப்பவர்கள் எல்லாரும் வுமனைசர்களாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? நேசித்தலுக்கும், வுமனைசிங்கிற்கும் அதிக வித்யாசம் இருக்கிறது. நித்யானந்தாவை ரஞ்சிதா என்ன செய்தார் என்பதையும் ஆங்கிலத்தில் தனது ப்ளாகில் எழுதியிருக்கிறார். அதற்காவது அர்த்தம் தெரியுமா இல்லை அதையும் பதட்டத்தில் எழுதினேன் என்று சொல்வாரோ?

Anonymous said...

Premanandha, Jayendra Saraswathi, Nithyanandha, Kalki bhagavaan..next?

Anonymous said...

பத்திரிக்கைகள் தூக்கி விட்ட சாமியார் அன்று
தன்னிருகைகள் தூக்கி விட்ட சாமியார் இன்று

SAN said...

IV,
Why dont you comment on Paazee trading scam wherein a DSP and Inspector has raped the woman who was accused in the scam.This is the front page news in today's deccan Chronicle.

lok said...

tag:நகைச்சுவை.. இட்லிவடை குசும்பு :)

Anonymous said...

இந்த மாதிரி ஆளுங்க எழுதுற கழிசடை புத்தகங்களை காசு போட்டு வாங்கி படிக்கும் ஜென்மங்கள் திருந்தனும், இந்த காசுலதான் இவனுங்க ஆட்டம் போடுரானுங்க.

sekar said...

அண்ணே சாரு பீரு எல்லாம் டம்மி பீசு அண்ணே
இந்த சனியன் எல்லாம் எழுத்தாளரா இருந்தா பிணந்தின்னும் சாத்திரங்கள் தான் எழுத முடியும்

இதெல்லாம் பகவத் கீதையிலே கூட சொல்ல முடியாத (கலி) கருணாநிதி யுகமிண்ணே

உண்மையான இஸ்லாமியன் said...

சாருவின் இந்தப் பதட்டம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.. சாருவை பெரியாரிஸ்ட் என்று சொல்வதன் மூலம் பெரியாரிஸம் என்றால் என்ன எனத் தெரிந்துகொண்டேன்.

நன்றி இட்லிவடை

சாரு(எ)கலைஞர் said...

""சாருவும் கிட்டத்தட்ட கலைஞர் மாதிரிதான்""
இந்த பதிவிற்கும் கலைஞருக்கும் என்னைய்யா சம்பந்தம்? உங்களுக்கும் சோவுக்கும் கலைஞர் முதுக சொறியலனா ,தூக்கமே வராதா? அதான்..உங்கமாதிரி பாப்ஸ்க்கு வினவு 'வெக்றான் ஆப்பு 'கேள்விகள் மூலம்!!
அதுக்கு பதில் அங்க சொல்ல முடியுமா? (அது ஒரு சாக்கடை! அங்க கால வெக்க முடியாதுங்கறது வேற விஷியம்!ஆனா அந்த சாக்டலதானே முத்தான கேள்விகள் கிடக்குது!! ) அட அங்க சொல்ல முடியலனா இட்லிவ்டையிலாவது தனி பதிவா போடலாமில்ல!! இன்னிக்கு சாருவ சாடற நீங்க ,அன்னிக்கு 'சோ' அடிச்சாரே அந்தர் பல்டி ஜெயேந்திரன் விஷியத்துல, அத சாடுவீங்களா? மாட்டீங்க? ஏன்னா, அவாளெல்லாம் உங்களவா!
அட்லீஸ்டு சாருவுக்கு உண்மைய் பொதுவுல ஒத்துக்கிற நேர்மையும் தைரியமும் இருக்குது.!
உங்களுக்கு?...

உண்மையான இஸ்லாமியன் said...

சாரு நாளைக்கே நித்தியானந்தா பத்தி நான் சொன்னதாக குமுதம் ரிப்போர்ட்டரில் வந்ததெல்லாம் பொய்யினு சொல்லிட்டு அவரோட பிளாக்குல நித்தியானந்தா படத்தைப் போடாத வரைக்கும் அவரை நான் நம்பப் போறதில்லை.

அப்படிச் செஞ்சாதான் சாரு.

இவரை இண்டர்நெட் பிச்சைக்காரன்னு சொன்ன குமுதத்துல எழுதுற இவர் பிச்சைக்காரந்தானு மீண்டும் ஒருமுறை ஐயந்திரிபரச் சொல்லிவிட்டார், அங்கு எழுத ஒப்புக்கொண்டதன் மூலம். அதை மஞ்சள் பத்திரிக்கை என்று சொன்னவர் சாரு.

இவரை எழுத்தாளர்னு அவரேதான் சொல்லிகிட்டிருக்கார்.

ஜெயமோகன் தான் கரெக்டா இந்த ஆள் ஒரு பத்தி எழுத்தாளர்னு சொல்லிட்டார். ஆனா அதுகூடத் தப்பு.. இவர் ஒரு கிசு கிசு எழுதமட்டுமே லாயக்கான ஆளு.. சும்மா லத்தீன், கிரேக்கம் அது இதுன்னு படம் போட்டு, அத நம்பி பணம் அனுப்புற ஆளுகள நம்பியும், அரசியல்ல அதிகாரத்துல இருக்குற ஜெயமோகனை திட்டினா பணம் தரக்கூடிய ஆட்களுக்கு கூழைக்கும்பிடு போட்டு வாழும் வாழ்க்கையை நடத்துற இவரெல்லாம் ஒரு பிச்சைக்காரன் இல்லாம வேற யார்?

இன்றுவரை ஆபிதீன் என்பவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத அசிங்கத்திற்குச் சொந்தக்காரர்.

இவரை எழுத்தாளர் என்று சொல்வதன் மூலம் உண்மையான எழுத்தாளர்களுக்கு தீராத அவமானம்.

மஞ்சக் கமெண்ட்டு சூப்பர்னாலும், பாவம் அவரை நம்பி பயனடைந்தவர்கள் / ஏமாந்தவர்கள்.

உண்மையான இஸ்லாமியன் said...

//சாரு பிழிந்த சாறுக்கு, Z+ செக்கியூரிட்டி தேவைப்படும்.

(படம்: நடுவில் இருப்பது ஒரு புத்திசாலி, சுற்றி இருப்பது புத்திகாலி )//

நான் இதைச் சொன்னேன், மஞ்சள் கமெண்ட்டை அல்ல

Anonymous said...

""இந்த மாதிரி ஆளுங்க எழுதுற கழிசடை புத்தகங்களை காசு போட்டு வாங்கி படிக்கும் ஜென்மங்கள் திருந்தனும், இந்த காசுலதான் இவனுங்க ஆட்டம் போடுரானுங்க.""

நினைத்தேன் !!! சொல்லிவிட்டீர்க்ள்!!


!!!!!Premanandha, Jayendra Saraswathi, Nithyanandha, Kalki bhagavaan..next?!!!!!

NEXT SRI..SRI........ர், DANCE SAAMIYAR,KERALA SAMIYARINI...NEXT????

Kannan said...

திருப்பி திருப்பி இப்பிடியா! ஒரு இலக்கியவாதிக்கு, பல புத்தகங்களை எழுதியவருக்கு வுமனைசின்கிற்கும், நேசிப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் போனது எப்படியோ?. அது கிடக்கட்டும், மனிதத்தை பற்றி வாய் கிழிய பேசிவிட்டு இப்பொழுது முன்னால் செக்ஸ் நடிகைகளை மட்டமாக பேசுவது எப்படி மனிதத்தன்மை ஆகும்? செக்ஸ் அவர்களது வாழ்க்கை முறை அல்லது தொழில். அவர்கள் ஹீலிங் பயிற்சி செய்வது அவர்கள் விருப்பம். அதை நீங்கள் எந்த யோக்கியதையில் தரக்குறைவாக பேசுகிறீர்கள்? அவர்களுக்கும் மென்மையான உணர்வுகள் உண்டே? எழுத்தாளர் என்றல் உசத்தி, ப்ளூ பிலிமில் நடிப்பவர் மட்டம் என்ற நினைப்பிலா?

உங்களுக்கு நித்தியை இன்னமும் பிடிக்கும் என்றால் அதில் தவறில்லை. அது உங்கள் விருப்பம். தைரியமாக சொல்லலாம், இந்த உலகமே எதிர்த்து நின்றாலும்! ஒருவேளை நித்தியை உசத்தி எழுதியது அறியாமையால் என்றால் அதுவும் தவறில்லை. அறியாமை இல்லாத மனிதன் உலகில் உண்டா? இல்லாதது போல நடிக்கலாம் அல்லது நினைத்து கொள்ளலாம்.

மனிதன் said...

சாருவுக்கு எதிரி வேறு யாருமல்ல, அவரின் வாய் தான்..! நித்தியை சக்தின்னு சொல்லி எழுதி எழுதி மாய்ந்தார். அவர் பண்ணின தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் இவர் எழுதினப்போ அதை நம்பி எத்தனை பேர் அவன் ஆசிரமத்தில் சேர்ந்தாங்களோ தெரியல. குற்றம் செய்றவனுக்கு மட்டும் தான் தண்டனையா.அந்த குற்றத்துக்கு உடந்தையா இருந்த சாருவையும் பிடிச்சி உள்ளே போடணும்..!

இந்த ஆளுக்கு விவஸ்தையே கிடையாது. நித்தியானந்தம் ஒரு பொம்பளை பொறுக்கின்னு சொல்வார். கூடவே தன் பொண்டாட்டி அவனோட பக்தைன்னு சொல்வார். மொத்தத்தில் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை கதை தான்..

எப்ப பார்த்தாலும் ஆட்டோவுக்கு காசு இல்லை, தண்ணியடிக்க காசு இல்லை. ஆனா ராஜ குடிகாரன்னு பெருமை பேசுறது. பிச்சை எடுத்து குடிக்கிறதில என்ன ராஜ குடிகாரன் பெருமை வேண்டி கிடக்கு வெண்ணெய். இண்டர்நெட் பிச்சைக்காரன்னு சொன்னது ரொம்பவே பொருத்தம் தான்..!

கையில் அஞ்சு பைசா காசு இல்லாதவன் சாமியார் கிட்ட எப்படி 5000, 10000, இலட்சம்னு தூக்கி கொடுப்பான்.? கேட்கிறவன் கேனையனா இருந்தா வில்லு படம் வெற்றிவிழா கொண்டாடினது சொல்லுவானாம்..!!

உமனைசருக்கு அர்த்தம் தெரியாதாம்.. அடப்பாவி..நீயெல்லாம் ஒரு எழுத்தாளன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியிறே..வெளங்கிடும்..
ஆனா அந்தாள் சைட்லயே “தான் ஒரு உமனைசர்னு ஒத்துக்கிறேன்னு” சொல்லி எழுதினதை நான் படிச்சிருக்கேன். அர்த்தம் தெரியாமலேயே ஆங்கிலம் பேசுறார் அகில உலக எழுத்தாளர்..!!

இந்த புண்ணாக்கை எல்லாம் நம்பிட்டு இருக்காம போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கய்யா..!!

Krish said...

//இவரை எல்லாம் எழுத்தாளர் என்ற அடை மொழியுடன் அழைப்பது ராமர் பிள்ளையை சையிண்டிஸ்ட் என்று அழைப்பது போல///

absolutely right

Krish said...

////சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா.////

ICICI Bank la பணம் போடுங்க , பணம் போடுங்க ன்னு அக்கௌன்ட் நம்பர் கொடுத்து கூவுனது இதுக்குதான???

ஜெயக்குமார் said...

//கேட்கிறவன் கேனையனா இருந்தா வில்லு படம் வெற்றிவிழா கொண்டாடினது சொல்லுவானாம்..!!//

Kalakkal

Subramanian said...

சேட்டைக்காரன் said...
//// Atleast charu has the guts to show his identity in public. Does Idly Vadai have this guts to show who he or she is? ////
அட இங்க பாருங்க நியாயவாதியை..இவரே தமிழ் குழுமங்களில் தான் யாருங்கத்தை சொல்லமாட்டேன்னு அடம்புடிச்சி அதனால சண்டையே வந்து இப்பவும் அப்பப்போ (தயிர் வடை குழுமத்தில் மட்டும் இப்போ) மொக்கை போட்டுட்டு இருக்கார்,இவரு இட்லிவடை முகத்தை காமிக்கச் சொல்றாருப்பா..

மகாராஜா said...

ஐயோ பாவம் , சாரு நிவேதிதா! சாமியார்களை அதுவும் படித்தவர்கள் நம்புவது,மிக பெரியமுட்டால்தானம்.