பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 02, 2010

டைடுக்கு ரின் செய்யும் விளம்பரம்

பாசத்தலைவனுக்கு நன்றி பாராட்டும் விழாவை இரண்டு நாட்கள் கலைஞர் டிவியில் பல விளம்பரங்களிடையே ஒளிபரப்பினார்கள்.

பல குத்தாட்டங்களை சென்சார் செய்யாமல், அஜீத் பேச்சை மட்டும் சென்சார் செய்தார்கள்.

இந்த ஒளிபரப்பில் என்னை கவர்ந்தது இரண்டு - ஸ்டாலின் புத்தக விளம்பரம், டைடுக்கு ரின் செய்த விளம்பரம்.

இந்த விளம்பரம் பற்றி தமிழ் நாளிதழ்கள் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. டிவிட்டர் மக்கள் கூட தூங்க போகும் முன் இதை பற்றி பேசவில்லை.

செய்தி படிக்க விரும்புகிறவர்கள் இங்கே படிக்கலாம்

இன்று டைடு நிறுவனத்தினர் கேஸ் போட்டிருக்கிறார்கள்....


டைடு சலவை பவுடர் P&G நிறுவனத்தினுடையது. ரின் இந்துஸ்தான் யுனிலீவர்யுடையது.
கடந்த வெளிக்கிழமையிலிருந்து ரின் நிறுவனத்தின் விளம்பரத்தில் டைடு சலவை பவுடரை நேரடியாக தாக்கியது. இதை எதிர்த்து P&G நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது.

டைடு மல்லிகை, ரோஜா போன்ற வாசனையில் வந்தது. அது மட்டும் இல்லாமல் டைடு குறைந்த விலைக்கு கிடைத்ததால், ரின் பவுடர் விற்பனை பாதிக்கப்பட்டது. மக்கள் இப்ப எல்லாம் விலையை பார்த்துவிட்டு எது கம்மியோ அதை தான் வாங்குகிறார்கள். இதனால் ரின் மார்க்கெட்டை டைடு அபகரித்தது. எவ்வளவு நாட்கள் தான் நீல கலர் சலவை சோப்பு வாங்குவார்கள் ?

பொதுவாக போட்டி நிறுவனத்தின் தயாரிப்பை நேரடியாக காண்பித்தோ, பெயரைச் சொல்லியோ விளம்பரங்கள் வருவதில்லை. கோக் பெப்சி போன்ற விளம்பரங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. சட்டப் பிரச்னை எதற்கு என்று இவர்கள் நேரடியாக தாக்குவதில்லை. தற்போது முதல்முறையாக(?) நேரடியாக தாக்கி விளம்பரம் வெளியிட்ட யுனிலீவர் மீது P&G வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த விளம்பரம் கீழே "Schematic representation of superior whiteness is based on Whiteness Index test of Rin Vs Tide Naturals as tested by Independent lab" இதை எவ்வளவு பேர் பார்பார்கள் ? சட்டம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். ( பார்க்க : http://www.ascionline.org/regulation/code.htm )என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்பது நமது வேலை !

பிகு: உங்க வீட்டில் என்ன சலவை சோப்பு ? ( சைடு பாரில் ஓட்டு )

29 Comments:

kggouthaman said...

ஆமாம் ஆமாம் - நாங்க கூட சந்தடி சாக்கில் இதோ ஒரு விளம்பரம் கொடுக்கிறோம். இட்லி வடையை விட அதிகம் சிரிக்க வைப்பது, எங்கள் பிளாக். தினமும் படியுங்க.

sivaG said...

me the first!?

sivaG said...

அஜித் பேச ஆரம்பித்தபொழுது மின்சாரம் தடை பட்டுவிட்டது ."பல குத்தாட்டங்களை சென்சார் செய்யாமல், அஜீத் பேச்சை மட்டும் சென்சார் செய்தார்கள்".So தகவலுக்கு நன்றி.

Vikram said...

these guys are figthing over "powder" - so the side bar title should be "ungal veetu salavai powder" and not "soap".
PS : enga veetla oru masam Rin, adhutha masam Tide - in rotational basis - ellame namma controla thaan irrukku:-)

SUBBU said...

என்னமோ நல்லது நடந்தா சரி :!!!

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு, நடக்கட்டும்.

Not Good said...

"சொட்டு நீலம் டோய், சொட்டு நீலம் டோய்."

kggouthaman said...

இதுவரை பதிவாகியிருக்கும் வோட்டு விவரங்களை வைத்துப் பார்க்கும்பொழுது, மைனாரிட்டி ரின் மற்றவைகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு - அமோகமாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தெரிகிறது!

விளம்பரக் காரன் said...

உங்க வீட்டுல என்ன சோப்பு

குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிட்டுடுவேன்.

அதில்ல ராஜா... என்ன சோப்பு,

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால் அதை கட்டி இழுத்தால் போதாதென....

டேய்... ராஜா ... உன் வீட்டுல என்ன சோப்பு,

உட்வர்ட்ஸ் கொடு, நீ குழுந்தையா இருக்கச்சே அதுதான் கொடுத்தேன்..

ஹலோ... இட்லி வடை சார், விளம்பரம் எல்லாம் யாரு பாக்குறா. ஒண்ணுக்கு தண்ணிக்கு எந்திரிச்சு போறதுக்கு டிவி கம்பெனி போடுற பிரேக்தான, ஆக்ஸிலேட்டர்ல கால் வைச்சு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பிகு: உங்க வீட்டில் என்ன சலவை சோப்பு ? //

பொதுவாகவே விளம்பரங்கள் எல்லாமே சலவை சோப்தான். (மக்கள் மூளையை சலவை செய்வதால்)
நான் எப்போதும் உபயோகிப்பது "நீ அழகாய் இருக்கிறாய்" என்ற சொப்பைததான் (பொண்டாட்டிகிட்ட இதை யூஸ் பண்ணினாதான் வேலை நடக்குது, என்ன செய்ய?)

ஜெயக்குமார் said...

உன்னுடைய சட்டை என்னுடையதைவிட வெளுப்பா, எப்படி?

டேய் நான் தொவைக்கிறேன், நீ தொவைக்கிறதில்லைடா..

மயில்சாமி வசனம், சில பத்தாண்டுகளுக்கு முன்பு கேட்டது...

Anonymous said...

FAKE IPL PLAYER IS BACK

http://www.fakeiplplayer.com/

jaisankar jaganathan said...

//எங்கள் பிளாக். தினமும் படியுங்க.
//

எங்கள் பிளாக்க நானே ஏன் படிக்கவேண்டும்

தென்னரசு said...

"டிவிட்டர் மக்கள் கூட தூங்க போகும் முன் இதை பற்றி பேசவில்லை. "

நம்பள follow பண்ணுங்க :-)
http://twitter.com/thennarasu/status/9826169189

வரதராஜலு .பூ said...

கொஞ்ச நாள் முன்னாடி ஹார்லிக்ஸ் - காம்ப்ளான் கம்பெனிகாரங்க டைரக்டா அடிச்சிக்கிட்டாங்க, இப்ப இவங்களா?

//என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்பது நமது வேலை !//
வேற என்ன செய்ய முடியும். வேடிக்கை பார்ப்போம்.

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.,

" அவனுடைய சட்டை என்னுடையதைவிட வெளுப்பா இருக்கே , எப்படி?"

"டேய் உன் சட்டை கலரே மஞ்சக் கலர்டா .."

" ஓ! அதானே பார்த்தேன்!"

சில பத்தாண்டுகளுக்கு முன்பு என் கல்லூரியில் ஒரு நாடகத்தில் கேட்டது...

நன்றி!

சினிமா விரும்பி

இலவசக்கொத்தனார் said...

பாரகபுரியில் பாதி விளம்பரங்கள் இப்படி அடுத்தவங்களைத் தாக்கியோ அவங்களோட ஒப்பிட்டோதான். விளம்பரத்துறையில் இருக்கும் என் உறவினர் வந்த பொழுது இவன் காசில் அவனுக்கு ஏன் விளம்பரம் பண்ணறாங்க எனக் கேட்டார்! :)

Anonymous said...

This is not the first time... Few days back there was an ad from Complan directly criticizing Horlicks.

ஸ்ரீராம். said...

//எங்கள் பிளாக்க நானே ஏன் படிக்கவேண்டும்//

நம்ம முகம்தான் ன்னாலும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தால்தானே தெரியும்..?

Anonymous said...

Not related to this post.
பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source:http://www.nakkheeran.in/users/frmnews.aspx?N=28029

R. Jagannathan said...

A different subject: I expect criticism of Nithyanandha's adventures in the bed with an actress. Kumudam has to take its share of the blame for advertising this scum by publishing his articles. I strongly suspect many Hindu samiyars are like this person only - after reading about Kanchi Sankaracharya, Devarajan, Premananda and now this fellow. A channel telecast live Sivarathri function from an Ashram and there was not even a picture of Siva / Lingam and there were unworthy dances like in discos, loud beating of drums without any rhythm etc. This man is also publicised by Kumudam and Vikatan. There is one Kalki who gives out advertisements in all magazines every week! When will our Press start acting responsibly? Hussein will now draw more filthy sketches of Hindu gods and Samiyaars from Qatar and we cannot question him. I am frustrated after reading these news. - R. Jagannathan

Anonymous said...

நிறைய பேர் வஞ்ச புகழ்ச்சி தான் செய்தார்கள்.

ரஜினி பேசுகையில், "இந்த இடம் உண்மையில் வறுமையில் இருக்கும் சினிமாதுரையினருக்கு போய் சேரவேண்டும்" என அழுத்தம் தெரிவித்தார்.

பாரதி ராஜா, "உங்களுடைய சாதனைகளில் நாங்கள் சொல்லியவைகளுள் **சொல்லாதவையும்** ஏற்றுகொள்ளுமாறு" என திட்ட முடியாதவைகளை சொன்ன மாறி இருந்தது.

கமல் பேசுகையில், "இவருக்கு வயது என்பத்தேழு..., இன்னும் கொஞ்ச நேரத்தில் பேசுவார் பாருங்க.., இருவத்தேழு போல பேச்சு இருக்கும்" என அவரது விரச பேச்சை சொன்னாரோ என்னவோ.

ஆனால் அமிதாப் இங்கே எதுக்கு வந்தார் என்பது தான் புரியவில்லை. அவருக்கு என்ன புரிஞ்சுதோ? பாலச்சந்தர் மட்டும் கொஞ்சம் பகுத்தறிவோடு சில நிமிடங்கள் ஆங்கிலத்தில் (அனுமதி வேண்டிவிட்டு) பேசினார். மற்றபடி அவரை உட்காரவைத்து கலாய்த்த மாறி தான் இருந்தது.

லாரென்ஸ் நிறைய உடல் ஊனமுற்றவர்களை வைத்து டான்ஸ் ஆட வைத்தார். பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது.
ஊனமுற்றவர்களுக்கு அது உற்சாகத்தை தருமானால் இத்தகைய செயல்களை ஒத்துக்கொள்ளலாம். எனக்கு அவர்களை இத்தகைய செயல்கள் வருத்துவதாகவே தோன்றுகிறது. அப்புறம் லாரென்ஸ் விட்டா லிப் டு லிப் அடிப்பார் போல இருக்கு.. ஜால்ரா அட் இட்ஸ் பிக்.

Anonymous said...

சாருவோட பழைய குப்பைகள் காணாமப் போனதுக்கும் நித்யாவோட லீலை வெளில வந்ததுக்கும் எதுனா தொடர்பிருக்குமா? இட்லிவடை குழுமம் விசாரணை செய்து அறிக்கை கொடுக்குமா?

Anonymous said...

Blog Advertisement

http://www.youtube.com
/watch?v=nyeJ2dhtvjQ

thanks

Anonymous said...

சரி.. ROAST and GROUND விளமபரன்களைப் பற்றீ ஒரு கே;ள்வி HUL-க்கு.
அது காபி பவுடர் என்று ஒரு இடததிலேயும் ஏன் சொல்வதில்லை.? அதில் பாதிக்கு பாதி சிக்கரி பவுடர் இருக்கிறது. ( காபி பவுடர்: 53% சிக்கரி 47% இதை எவ்வளவு பொடி எழுத்தில் போட முடியுமோ அவ்வளவு போடியாக பச்சை கலருக்கு மேல் கருப்பு கலரில் அச்சடித்து இருக்கிறார்கள்.
இரண்டாவது டிகாகஷன் முதல் டிகாகஷன் போல் இருக்குமாம்.
சாதாரண காபிப் பொடி 25 கிராமில் யில் 100 மில்லி தண்ணீர் கொட்டுகிறோம். டடிகாக்‌ஷன் வருகிறது. சரி ROAST AND GROUND’ல் 100 மில்லி கொட்டிகிறோம் 100 மில்லி டிகாகஷன் கிடைக்கிறது. பிறகு இரண்டாவது தடவை 100 மில்லி தண்ணீர் கொட்டுகிறோம் 100 மில்லி டிகாக்க்‌ஷன் கிடைக்கிறது. ( முதல் டிகாகஷன் போலவே!?) ஆக 200 மில்லீயா கிடைக்கும்?

Gayathri said...

Hi IV,
I think this is not the first time for a product to compare itself to it's competing product. This has already happened with Horlicks and Complan comparing them in 2 different ads. I guess IV followers remember that. It was advertised sometime 6 months back

Preethi said...

THIS S NOT FIRST TIME. ALREADY HORLIKS AND COMPLAN STARTED FIGHTING DIRECTLY..

jaisankar jaganathan said...

//நம்ம முகம்தான் ன்னாலும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தால்தானே தெரியும்..?
//

தத்துவம் நம்பர் 1000000000000

kggouthaman said...

369 வோட்டுகளுடன் வோட்டெடுப்பு முடிந்தது என்று வந்தது - வோட்டளிப்பு நேரம் முடிந்த பிறகு - யாரோ ஒருவர் கள்ள வோட்டு போட்டிருக்கிறார். யார் அது?