பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 07, 2010

சன்டேனா இரண்டு ( 7-3-10) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்.. இரண்டு சர்ச்சைகள் .

செய்தி # 1

இந்தியாவில் இருந்தாலும் சரி..இல்லாவிட்டாலும் சரி..சர்ச்சைக்கு உரிய மனிதராகவே இருக்கிறார் ஓவியரும் , அகில உலக மாதுரி தீட்சித் ரசிகர்(?)மன்ற தலைவருமான திரு. எம்.எப்.ஹுசைன் அவர்கள்.

"நான் இன்னமும் இந்தியாவை விரும்புகிறேன். ஆனால்,இந்தியாவுக்கு நான் தேவைப்படவில்லை. என் இதயத்தில் வலியோடு இதனை சொல்கிறேன் " என்று கூறிஇருக்கிறார் அவர்.

சமிபத்தில் அவர் கத்தார் நாட்டு குடியுரிமை பெற்று இருக்கிறார். அந்த நாட்டு குடியுரிமை பெற்றதால், ஹுசைனுக்கு இருக்கும் இந்திய குடியுரிமை ரத்து ஆகும் என்கிறது ஒரு செய்தி.

"இந்தியா என் தாய் நாடு. தாய் நாட்டை எப்படி வெறுக்க முடியும். ஆனால், இந்தியா என்னை ஒதுக்கிவிட்டது. பின் எப்படி இந்தியாவில் நான் இருக்க முடியும் ? " என்று கூறினார் இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு.

தன்னை சங்க பரிவார் போன்ற அமைப்புகள் குறிவைத்த போது, அரசியல்வாதிகள், கலைஞர்கள் சார்ந்த இநதிய அறிவுஜீவி வர்க்கம் தமக்காக குரல் எழுப்பவில்லை என்றும், இனி இந்தியாவில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி இருக்கிறார் 92 வயது ஆகும் திரு. ஹுசைன்.

இநதிய அரசியல்வாதிகளுக்கு ஓட்டுக்கள் மட்டுமே பிரதானம் என்றும், தற்சமயம் கத்தார் நாட்டு குடியுரிமை பெற்றதும் அவர்கள் இந்தியா வருமாறு அழைக்கிறார்கள், முன்பு தனக்காக குரல் கொடுக்காத அவர்களை இனிமேலும் நம்பபோவது இல்லை என்று சொல்கிறார்.

சரஸ்வதி முதலான இந்து தெய்வங்களை அவர் நிர்வாணமாக ஓவியம் வரைந்தார் என்று அறிந்ததே. முதலில் அவர் தரப்பை வைத்து, அவருக்கு ஆதரவாக எழும் வாதங்களை பார்ப்போம்.

மாடல் பெண்களை வைத்து நிர்வாண ஓவியம் வருவது என்பது எந்தவொரு ஓவிய கலைஞர் அல்லது ஓவிய கல்லூரியில் இருக்கும் நடைமுறையான பாடத்திட்டம். ஒரு ஓவியனுக்கு எந்த கட்டுபாடுகளும் யாரும் விதிக்க முடியாது.

கோவில்களில் தெய்வங்கள் எல்லாம் நிர்வாணமாகவே உள்ளன. அவற்றை, வரைவதில் என்ன தவறு?

இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், "ஹுசைனின் ஓவியங்கள் கலை படைப்புகளே. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நீங்கள் யாரும் அதை பார்க்க வேண்டாம் " என்று கோர்ட் அதிரடியாக அறிவித்து இருக்கிறது.

ஹுசைன் அவர்கள்,பாரத ரத்னா தந்து பாதுகாக்க படவேண்டிய இந்தியாவின் சொத்து.அவரை வேறு ஒரு நாடு குடிமகனாக அழைப்பதும், அதை நமது அரசு வேடிக்கை பார்ப்பதும் தேசிய அவமானம்.

இப்படியான குரல்கள் எழுகின்றன.
அவருக்கு எதிராக இருக்கும் வாதங்களை பார்த்தால்,

நிர்வாண ஓவியங்கள் தவறு அல்ல. அதே சமயம், சில வரைமுறைகள் உள்ளன. கலை என்ற பெயரில் அவரால், தனது சகோதரிகள், தாய், அல்லது மனைவியை நிர்வாணமாக வரைய முடியுமா?முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த அவர், நமது இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக வரைய வேண்டிய அவசியம் என்ன? அது வேண்டும் என்றே,
உள் நோக்கத்தோடு செய்யபட்டது.

இரண்டு வாதங்களில், எது சரி???

"திரு.ஹுசைன் இந்தியா திரும்பினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அவருக்கு முழு பாதுகாப்பு தரப்படும் " என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், "ஹுசைன் இந்தியா திரும்பலாம் " என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அறிவித்துஇருக்கிறார்கள்.

எனக்கு எழும் கேள்வி ஒன்று மட்டுமே.

"நான் கத்தார் நாட்டில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது, கத்தார் எனது நாடு " என்று கூறி இருக்கும் ஹுசைன், கத்தார் பற்றி ஒரு முக்கிய கருத்தையும் தெரிவித்து இருக்கிறார். அது, " இங்கு எனக்கு முழு சுதந்திரம் தந்து இருக்கிறார்கள். இங்கு யாரும்,எவரது படைப்பு சுதந்திரத்தையும் கட்டுபடுத்தவில்லை" என்பது தான் அது.

சல்மான் ருஷ்டி அவர்களும் எழுத்து துறை கலைஞர்தானே? அரபு நாடுகள் ஏன் ஹுசைனை மட்டும் ஆதரிக்கின்றன?

எனது கேள்வி என்னவென்றால், ஹுசைனுக்கு படைப்பு சுதந்திரத்தை(!) தந்து இருக்கும் கத்தார் அரசு , "சாத்தானின் கவிதைகள் " எழுதிய சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்ரினுக்கும் தருமா?


( இன்பா, இன்று எனக்கு ஹிந்து என்.ராமுக்கு இதே கருத்தை கொண்டு எழுதிய ஆங்கில கடிதம் ஒன்று கிடைத்தது - இவ )


செய்தி # 2


சென்ற வருடம் நான் பழனி முருகன் கோவில் சென்று இருந்தபோது, சிறப்பு வழி தரிசனம் என்று ரூ. 200 மற்றும் அங்கு உள்ள அர்ச்சகருக்கு ரூ.100 என என்னுடன் வந்து இருந்த என் நண்பன் 'வெட்டி' யதில், பழனி ஆண்டவரை அவரது சந்நிதியில், அவரை தொடும் தூரத்தில் நின்று தரிசித்தோம். 'சாதாரண வழி'யில் , மணிகணக்கில் நின்று இருந்த பக்தர்கள் தொலைவில் இருந்தும் அவரை முழுமையாய் தரிசிக்க முடியாமல், விரட்டபட்டனர்.

நான் ரெகுலராக முடி வெட்டி கொள்ளும் சலூன் கடைக்காரர், எனக்கு ஒரு நாள் இனிப்பு வழங்கினார். அதற்க்கு,அவர் சொன்ன காரணம், அவரது கடைக்கு ஐ.எஸ்.ஒ எனப்படும் தரசான்று கிடைத்து இருக்கிறது என்பதுதான்.(தர சோதனை செய்ய வந்தவர்களுக்கு 'அன்பளிப்பு' வழங்கியதையும் சொன்னார்).

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.

அது, இனி கோவில்கள் ஐ.எஸ்.ஒ தர சான்றிதழ் பெற வேண்டும் என அறநிலையதுறை அறிவித்து இருக்கிறது.கோவிலின் கோப்புகளை சோதித்து, சுற்றுபுற சூழல் முதலிய அம்சங்களை சரிபார்த்து, வருடாவருடம் ஆடிட்டிங் செய்யப்படும் என்கிறது அறநிலைய துறை.

முதல் கட்டமாக வட பழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோவில் போன்ற கோவில்களில் ஆய்வு(??) நடத்தி இருக்கிறார்கள்.

"ஒரு பேச்சுக்கு வட பழனி கோவிலுக்கு ஐ.எஸ்.ஒ தருகிறார்கள் என்று வைத்து கொள்வோம். இதனால், மற்ற கோவில்கள் அந்தஸ்தில் குறைந்தது என்று ஆகி விடாதா? " என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் இந்து முன்னணியின் ராம.கோபாலன்.

"கடவுள், கோவில், மதம் போன்றவை புனிதமான நம்பிக்கை சார்ந்த விஷயங்கள். ஐ.எஸ்.ஒ தரபடுத்துவதற்கு அது ஒன்றும் லாப, நஷ்டத்தில் இயங்கும் வியாபார நிறுவனங்கள் இல்லை " என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இறைவன் முன்னால் இருக்கும் சிறப்பு தரிசனம், பொது தரிசனம் போன்ற நடைமுறைகளை நீக்குதல், சிதிலமடைந்து இருக்கும் பல புராதன சிறப்பு மிக்க கோவில்களை புதுப்பித்து பராமரித்தல், கோவில்களுக்கு போக்குவரத்து, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்தல் என்று ஏகப்பட்ட பணிகள் அறநிலைய துறை முன் இருக்க, கோவில்களை மேலும் வியாபார மையங்கள் ஆக்கும் ஐ.எஸ்.ஒ தேவையா??

கோவில்களுக்கு பதில் நமது நாட்டில் மூலைக்கு மூலை உருவாகி இருக்கும்,பரமஹம்ச 'வாத்சாயனர்களை' தரும் ஆசிரமங்கள், யோகா மையங்கள், மெடிடேஷன் சென்டர்கள் போன்றவற்றை,அரசு சோதனை செய்து, சான்றிதழ் வழங்கலாம்.

(நன்றி..இனி அடுத்த வாரம்).

-இன்பா

40 Comments:

♥Manny mazhaikalam.blogspot.com♥ said...

//கோவில்களுக்கு பதில் நமது நாட்டில் மூலைக்கு மூலை உருவாகி இருக்கும்,பரமஹம்ச 'வாத்சாயனர்களை' தரும் ஆசிரமங்கள், யோகா மையங்கள், மெடிடேஷன் சென்டர்கள் போன்றவற்றை,அரசு சோதனை செய்து, சான்றிதழ் வழங்கலாம்.//

சரியாச் சொன்னீங்க..ஆனால் இப்படி ஆசிரமத்துக்கு ஆடிட்டிங் போகுற யாரும் அந்த மாதிரி வீடியோ-ல வராம இருக்கணும்..!! அது தான் முக்கியம். :-)

Jokes apart. I agree what you said.

ஆசிர் said...

முதல் செய்தி வாசிக்கும் போது ஏனோ நித்தியா நியாபகம் வந்து தொலைக்கின்றது .

"நித்தியாவின் செயல்கள் அனைத்தும் யோக நிலையே . உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நீங்கள் யாரும் அதை பார்க்க வேண்டாம் "

இது போல செய்திகளும் வருமோ ??!!!

any how IV congrats ..

Anonymous said...

Some points to be noted on MF Hussain.

1. He always wanted to draw anything he hated in Nude and he has said that too.

-It's more than obvious that he hates Hindu Gods.

2. He immediately withdrew his movie "Meenaxi" from all the cinemas, when there was a protest by Muslims saying it affects their sentiments.

-Sentiments are to be and shud be respected only for non-Hindus???

3. Cong. and it's media never talk about art literature or freedom of expression, when it comes to critics/observers/whistle blowers of non-Hindus.

- In India Freedom of expression is allowed only if it "expressed" against Hindus.

4. Nude Bharat mata, Saraswathi, Hanuman, Lakshmi were not just drawn in nude, but also in incest, which is totally un-acceptable IN ANY STANDARDS.

- Blood Boils.

5. MF is an absconding criminal from the laws of the land for various cases filed by Indians.

- He has not fled fearing Hindu right wing Organizations.

6. RSS/VHP/SS now pursues him legally, but he has absconded from the courts of Law.

- Just imagine if it were something against Muslims or Islam, all hell wud've broken loose.

Anonymous said...

Regarding the nude sculptures in Konark, Ajantha, Ellora...

1. They are not "Pure" temples, not built in Aham and Vasthu sastras. It's built by Hindu rebellions and Buddhists then.

2. Those nude sculptures are not Hindu Gods. They are just "art" not anyone or any God in specific.

Anonymous said...

<>
சரி.. அதை இங்கனப் போடறது.

சைவகொத்துப்பரோட்டா said...

சாமிக்கும் ISO - வா!!, நடக்கட்டும்.

வீரராகவன் said...

தரத்தினை உறுதிபடுத்துவதே ஐ.எஸ்.ஓ என்கிற சான்றிதழ். எனவே பிரபலமான கோயில்களில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் தரம் குறைந்திருப்பது வருந்ததக்கது. இதற்காக அரசு நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன்.
கோயில் என்பது மனதை சுத்தப்படுத்தும் இடம் மட்டுமல்ல. உடலையும் சுத்தப்படுத்தப்படும் குளங்களுடன் இடமும் சுத்தமாய் இருத்தல் நல்லதுதானே. சனிப் பெயர்ச்சிக்காக திரு நள்ளாறு செல்பவர்களுக்கு இந்த உண்மை நன்கு விளங்கும். எனவே அதிக கூட்டம் வரும் கோயில்களில் தர நிர்ணயம் செய்வது அவசியமே. அப்போது iso inspection அடிக்க்டி நடக்கும். இதனால் அனைவருக்கும் பயன்.

Anonymous said...

//பரமஹம்ச 'வாத்சாயனர்களை' தரும் ஆசிரமங்கள், யோகா மையங்கள், மெடிடேஷன் சென்டர்கள் போன்றவற்றை,அரசு சோதனை செய்து, சான்றிதழ் வழங்கலாம்//

உண்மை. இதே போல தர்கா, பள்ளிவாசல், சபை, பெந்தகொஸ்தே குடில்கள், அவர்களது சிறார் பள்ளிகள், அல்லேலுயா ஆசிரமங்களையும் அரசு சோதித்துச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- பாஸ்டர் பரமஹம்ச ஜான் டேவிட்

Subbu said...

Huzzain issue is taken up big time by NDTV/CNN IBN.. as usual they chide the Hindu fundamentals. But, as Inba pointed out will Gulf countries allow obscene cartoons or Salman Rushdie's book?
Moreover he is not of that importance to this country right now.
Don't know why N.Ram (Hindu) is very upset over this? End of the day Hussain is doing business.. he is not giving away his art to Indian government or for charity.

Plz don't compare the art made by Hussain with Sculptures in temple (especially Khajuraho).

Anonymous said...

I have only one problem with this "artist ic freedom" concept, do the proponents take the same stand every time when it comes under attack ? Can Mr Hussain make a statement about Danish Cartoon fiasco while he's at Quatar ? Recently there were riots in Karnataka when a Kannada news paper published an article (translation of an very old article) by Tasleema ? Will Mr. Hussain ever issue a public statement decrying that act ? Where were these people when Tasleema was hounded out from Calcutta by CPM Govt ?

SAN said...

Hi IV & Friends,
Please visit the below mentioned site to view the double standards of Hussain

http://sundaramm.sulekha.com/blog/post/2007/07/does-m-f-hussain-deserve-award-or-punishment.htm

vijeeth said...

////பரமஹம்ச 'வாத்சாயனர்களை' தரும் ஆசிரமங்கள், யோகா மையங்கள், மெடிடேஷன் சென்டர்கள் போன்றவற்றை,அரசு சோதனை செய்து, சான்றிதழ் வழங்கலாம்//

உண்மை. இதே போல தர்கா, பள்ளிவாசல், சபை, பெந்தகொஸ்தே குடில்கள், அவர்களது சிறார் பள்ளிகள், அல்லேலுயா ஆசிரமங்களையும் அரசு சோதித்துச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- பாஸ்டர் பரமஹம்ச ஜான் டேவிட்//

http://www.thinnai.com/?module=displaystory&story_id=41003052&format=html

பல கிறிஸ்துவ பாதிரியார்கள் எழுபதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி வந்து பலாத்காரம் செய்து காணாமல் போக்கிய செய்தி. நடந்திருப்பது, கன்யாகுமரி, முகப்பேர் என்று நம் ஊர்களில்தான்.

http://www.e-pao.net/GP.asp?src=14..130210.feb10

இது நடந்திருப்பது தமிழ்நாட்டில்தான். தமிழ்நாட்டில் நடந்தால் நாங்கள் அதனை பற்றி பேசுவோம் என்று சால்ஜாப்பு சொல்லலாம் எனப்தால் இந்த செய்தி. வெறுமே priest என்று கூகுள் செய்தியில் தேடிப்பாருங்கள் வரும் செய்தியெல்லாம் கிறிஸ்துவ பாதிரியார்கள் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்து மாட்டிக்கொண்ட செய்தியாகத்தான் இருக்கும்.

இவைகளெல்லாம் தமிழ்நாட்டு உண்மை விளம்பிகளின் கண்களில் மாட்டிக்கொள்ளாமல் போவதன் மர்மம் என்ன?

vijeeth said...

http://www.mid-day.com/news/2010/mar/040310-swami-nityananda-actress-ranjitha-sex-video.htm

Interestingly, sources in the ashram revealed that Swami Nityananda was being blackmailed since a month.

The alleged sex video tape of a swami shown on SUN TV is doctored
Posted by : argyam
05 March 2010 08:01:22

The alleged sex video is without doubt doctored.

1. No man will lie down passively when a woman wants to make love.
He doesn't respond to her overtures, which is unnatural

2. You don't have ur clothes on while having sex !

3. He is not known to watch TV.

4. The room shown is confirmed not to be in the ashram.

5. SUN TV has not revealed the location of the room. The swami doesn't travel alone anywhere.
If they reveal the address where the alleged sting operation took place, it can be easily verified whether or not the swami was in that place.

6. Why is the voice not recorded? Because it is doctored, the voice would be a give away.

7. The lights get switched off at the critical moment !
When did a sex detecting sensor get invented to switch off lights automatically ?

kggouthaman said...

ஐ எஸ் ஒ தரச் சான்றிதழ் - இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, எண் ஒன்பதாயிர குடும்பம். இது பொருள் உற்பத்தி, மற்றும் சேவை ஸ்தாபனங்களுக்கானது. கோவில்கள் இந்தப் பிரிவில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இரண்டாவது வகை ஐ எஸ் ஒ பதினான்காயிரம் பிரிவு. இந்த தரச் சான்றிதழ்கள், 'சுற்றுச் சூழல் பாதுகாப்பு' பிரிவைச் சார்ந்தவை. கோவில்கள் வழி பாட்டு ஸ்தலங்கள் - போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், இந்த பிரிவில் கொண்டு வரப்படுதல் நல்லதுதான். மத இனப் பாகுபாடு இன்றி - மக்கள் எல்லோரும் இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு வகைகளை கருத்தில் கொண்டு அதன்படி நடந்தால் - எதிர் காலச் சந்ததியினருக்கு, குறிப்பாக ஆரோக்கியமான எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.

உண்மையான இஸ்லாமியன் said...

//"நான் இன்னமும் இந்தியாவை விரும்புகிறேன். ஆனால்,இந்தியாவுக்கு நான் தேவைப்படவில்லை. என் இதயத்தில் வலியோடு இதனை சொல்கிறேன் "//

அவர் விரும்பும் இந்தியாவில் இதர மதத்தினரை வெறுக்கும் ஓரிறைவன் கோட்பாட்டாளர்கள் மட்டுமே இருப்பார்கள் போல.. அவர் அந்த இந்தியாவுக்குத்தான் வர விரும்புகிறார். அது சாத்தியமில்லை என்றதும் அதுபோல நடக்கும் கத்தார் நாட்டிற்கு குடி பெயர்ந்துவிட்டார்.

//இந்தியா என்னை ஒதுக்கிவிட்டது. பின் எப்படி இந்தியாவில் நான் இருக்க முடியும் ? " என்று கூறினார் இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு.//

இந்தியாவின் சக குடிமக்களின் நம்பிகைகளை காலில் போட்டு மிதிப்பார், முகத்தில் காரி உமிழ்வார். அப்படிச் செய்தும் ஒதுக்காத இந்திய நாட்டை அவர் எதிர்பார்த்திருக்கிறார் என்பதும், அது கிடைக்காத விரக்தியில் இதைச் சொல்லியிருக்கிறார் என்பதும் தெளிவு.


//"இந்தியா என் தாய் நாடு. தாய் நாட்டை எப்படி வெறுக்க முடியும்.//

ஆமாம், உள்ளிருந்துகொண்டேதான் கேவலப்படுத்த முடியும். இவர் தாய்நாட்டை மதித்ததைத்தான் அடிக்கடி செய்துகொண்டே இருந்தாரே.. தொடர்ந்து சக தாய்நாட்டவர்களின் கடவுள்களை கேவலமாக சித்தரித்ததன் மூலம்.. அவங்க ஆளுங்கன்னா முழு ட்ரெஸ், மத்தவங்க சாமின்னா நிர்வாணம்னு தன்னுடைய கற்பனைய மதத்திற்கு தக்கவாறு இல்லை மாற்றிக்கொண்டார்.

//தன்னை சங்க பரிவார் போன்ற அமைப்புகள் குறிவைத்த போது, அரசியல்வாதிகள், கலைஞர்கள் சார்ந்த இநதிய அறிவுஜீவி வர்க்கம் தமக்காக குரல் எழுப்பவில்லை என்றும், இனி இந்தியாவில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி இருக்கிறார் 92 வயது ஆகும் திரு. ஹுசைன்.//

அடங்கொக்க மக்கா, இதுக்குமேல உங்களுக்கு சப்போர்ட் பன்னனும்னா இந்தியாவை இஸ்லாமிய நாடா ஆக்குனாத்தான் முடியும்.. கவலைப் படாதீங்க, உங்க பங்காளிங்க அதுக்கு ரொம்ப முயற்சி எடுத்துகிட்டுத்தான் இருக்காங்க..

//இநதிய அரசியல்வாதிகளுக்கு ஓட்டுக்கள் மட்டுமே பிரதானம் என்றும், தற்சமயம் கத்தார் நாட்டு குடியுரிமை பெற்றதும் அவர்கள் இந்தியா வருமாறு அழைக்கிறார்கள், //

இதை நீங்க இன்னும் உரத்த குரலில் சொல்லனும். அப்படியாச்சும் இங்க இருக்குற அரசியல்வாதிகளுக்கு தெரியுதானு பாக்கனும். ஓட்டுக்காக தேசத்தையே குழப்பத்தில் ஆழ்த்தக்கூட தயங்காதவர்களுக்கு மீண்டும் புரியனும். இப்படிச் சலுகைகளை தூக்கிக் தூக்கிக் கொடுத்துக்கொண்டிருந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு ஆணவமும், திமிரும் கொண்ட சமூகமாக ஆக்கிவைத்திருக்கிறார்கள்.இங்கு வாழ்ந்துகொண்டே அரேபிய முதலாளிகளுக்கு சொம்புதூக்கும் குணம் எல்லாம் வந்தது என்பதை அவர்கள் உணரட்டும். இப்பவும் உங்களை உங்கமேல இருக்குற பாசத்துல கூப்டலை என்பதை உணர்ந்திருக்கும் உங்கள் அறிவு பிரமிக்க வைக்கிறது.


நல்ல சண்டேனா இரண்டு.

வலைஞன் said...

இஸ்லாமிய,கிறிஸ்துவ மதங்கள்,பாரதத்தில் பிரபலமாகி கொண்டிருக்கும் முன்னொரு காலத்தில் ஹிந்து மத பக்தர் ஒருவர் இறைவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடம் ஹிந்து மதத்திற்கு பிற மதங்களால் எந்த தீங்கும் வரக்கூடாது என வரம் வேண்ட இறைவனும் ஒரு புன்சிரிப்புடன் "அப்படியே ஆகட்டும்" என அருளினாராம்.
அன்று முதல் ஹிந்து மதத்திற்கு வெளியிலிருந்து எந்த பிரச்சினையும் கிடையாது!
எல்லா பிரச்சினையும் உள்ளே இருப்பவர்களால் தான் !!
இப்பொழுதுகூட ஹுசைன் பற்றி அதிகம் கவலைப் படுவது ஹிந்து மத சிரோன்மணி திரு N.Ram அவர்கள்தான்.கூடிய விரைவில் ஹிந்து மத தீவிர பக்தர்கள் திரு.மு.க.,இளைஞர் உலக நாயகன்
ஆகியோரையும் இந்த குழுவில் எதிர்பார்க்கலாம்.
இதே N.Ram தனது தினசரியில் "நபி அவர்களின்" ஒரு கோட்டுச் சித்திரம் இடம் பெற்றதிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டவர் .
இவருக்கு சரஸ்வதி லக்ஷ்மி என்ன ஆனாலும் கவலை இல்லை.
வெட்கம்! வெட்கம் !!

Anonymous said...

Sreedharan from Sharjah Said,

If Hussain feels Qatar has got liberal freedom of expression and thought, will he dare to draw nude some islamic Gods and then talk?

By giving citizenship to Hussain, a wanted criminal in India,Qatar had insulted India.

Will Indian "secularists" and media look into this?

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Anyhow, i am happy that this criminal is afraid to enter India and beleive would die out of India and not spoiling the sacred soil of Bharath Matha

Anonymous said...

குஜராத் நிலைமை தெரியுமா?

1993 முதல் 2005 வரையில் வறுமைக்குறைப்பில் அகில இந்திய சராசரி 8.5 விழுக்காடாகும். ஆனால் குஜராத்தில் அது வெறும் 2.8 விழுக்காடு மட்டும்தான். நர்மதா திட்டத்தில் 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்கள். இதுவரை 29 விழுக்காடு பணிதான் நடந்துள்ளது. அதிலும் கட்டுமானப் பணியின் தரம் மிக மோசம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் 308 இடங்களில் உடைப்பு. 1999ல் 4 ஆயிரத்து 743 குஜராத் கிராமங்கள் குடிநீர் கிடைக்காமல் இருந்தன. இரண்டே ஆண்டுகளில் அது 11 ஆயிரத்து 390 ஆக உயர்ந்தது. 2001 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மீதான கடன் 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியாகிவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு பாலியல் பலாத்காரம், பெண்கள் மீது ஒரு நாளைக்கு சராசரியாக 17 தாக்குதல்கள், கடந்த பத்தாண்டுகளில் 8 ஆயிரத்து 802 தற்கொலைகள் மற்றும் "விபத்தால்" 18 ஆயிரத்து 152 பெண்கள் மரணம் என்ற புள்ளிவிபரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அரசால் தரப்பட்டுள்ளதாகும்.

vijeeth said...

\\வலைஞன் said...
அன்று முதல் ஹிந்து மதத்திற்கு வெளியிலிருந்து எந்த பிரச்சினையும் கிடையாது!
எல்லா பிரச்சினையும் உள்ளே இருப்பவர்களால் தான் !! \\

அப்படியே கொஞ்சம் மற்ற மதங்களுக்கும் சேர்த்து வரம் வாங்கிடுங்களேன்! இந்தியாவுக்கு வெளிய, பேயடி நாயடி இல்லை வாங்குறாங்க

Anony8 said...

One Doubt about India and Indian Media...

Pursuing someone legally in our Courts by Hindus which makes this B@$&@#d escape the country and citizenship is called right wing fundamentalism.

Immediately indulging in riots/violence damaging public properties and lives after every slightest of the provocations against Islam and Muslims is called secularism or anger.

This country is slowly becoming a pseudo arab Nation.

- PIO

Anony8 said...

Why does a country which immediately bans Lajja, Satanic Versus, Danish cartoons, Davinci-code and it's writers/artists after protests from 14% and 4 % of the people, not even giving a thought to ban these obscene blasphemic paintings even after silent protests by 85% of the people in this Land?????

Anonymous said...

// http://sundaramm.sulekha.com/blog/post/2007/07/does-m-f-hussain-deserve-award-or-punishment.htm //

'நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்துவிட்டால்...'

உண்மையான இஸ்லாமியன் said...

//இதே N.Ram தனது தினசரியில் "நபி அவர்களின்" ஒரு கோட்டுச் சித்திரம் இடம் பெற்றதிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டவர் .//

சிறுபாண்மையினர் மனசு புண்படலாமா? மத்தவனெல்லாம் மனுஷனே கிடையாது.. அவங்க எப்படிப்போனாலும் எனக்குக் கவலை இல்லை.. என்.ராம் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டது

Anonymous said...

Recently there was a controversy about male prostitution ring being exposed in the Vatican.

Why the silence in the Indian media ?

ஸ்ரீராம். said...

ஹுசைன் - சல்மான் கேள்வி சரியான கேள்வி.

பிறர் மனதைப் புண்படுத்தாமல் தனது கருத்துகளையோ, படைப்புகளையோ செய்யம் திறன் அற்று இருக்கிறார்கள் இவர்கள்.

I S O சான்றிதழ் இனி வீட்டுக்கு வீடு கொடுக்க வேண்டியதுதான் பாக்கி

Anonymous said...

Many think N Ram is a staunch supporter of Hinduism, just because he is born brahmin and due to his name. In reality, he is married to someone from another religion; also being a liberal pesudo intellectual, he does not give a damn about Hinduism.

jaisankar jaganathan said...

//எனது கேள்வி என்னவென்றால், ஹுசைனுக்கு படைப்பு சுதந்திரத்தை(!) தந்து இருக்கும் கத்தார் அரசு , "சாத்தானின் கவிதைகள் " எழுதிய சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்ரினுக்கும் தருமா?//

இந்த கேள்வி உண்மையிலேயே சூப்ப்ர். படைப்பு சுதந்திரம் மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்கவேண்டும்

Anonymous said...

//எனது கேள்வி என்னவென்றால், ஹுசைனுக்கு படைப்பு சுதந்திரத்தை(!) தந்து இருக்கும் கத்தார் அரசு , "சாத்தானின் கவிதைகள் " எழுதிய சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்ரினுக்கும் தருமா?//

டாவின்சி கோட் படத்தை இந்தியாவில் தடை செய்த நல்லவர்கள் நம் தன்மானச் சிங்கங்கள்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஹுசைன் விவகாரம் : என்னுடைய வீட்டுக்குள் என்ன தவறு இருந்தாலும் அடுத்த வீட்டுக்காரனுக்கு அதைக் கிண்டலடிக்கும் உரிமை கிடையாது. ஹுசைனுக்கு தைரியம் இல்லாததால், அடுத்த மதத்துக் கடவுள்களை அவமானப் படுத்தியிருக்கிறார். ஹிந்துக்களுக்கு இருக்கும் சகிப்புத் தன்மையை கேடு கேட்ட அரசாங்கங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன.

கோவில்களுக்கு ISO விவகாரம் : நமது தமிழக அரசுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையே தவிர, ஹிந்து கோவில்களின் மூலம் வரும் வருமானம் தேவை - அதற்கு ISO முதலான அங்கீகாரம் மேலும் வலுவூட்டும் என்ற நம்பிக்கை போலிருக்கிறது - நாத்திக அரசுக்கு ஜே!

ChamathuSiva said...

Looks like India is not going to lose anything by "missing" this person. However, it looks like the citizenship was granted without analyzing all the sensitivities involved. Days are not far off when rulers of the same country would repent their decision. As rightly pointed out in the link provided by one of the commentators here, double standards cannot lie hidden for long -- It will have to get exposed one day or other and that is when te world at large and Congress party in particular will realise what damage they are creating by turning a blind eye to such narrow-minded people as the artist in question.

கருப்பன் said...

கல்வெட்டு ராமசந்திரன் எம்.எப்.ஹுசைன் குறித்து :
//எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால், எங்கள் பெண்கள் உடலை முழுவதும் மறைக்கும் உடையுடன்தான் இருப்பார்கள். அவர்களிடம் நீங்கள் மிகுந்த கண்ணியத்துடன்தான் பழக வேண்டும். ஏனென்றால், நாங்கள் கட்டுப்பெட்டியானவர்கள். உங்கள் வீட்டுக்கு நான் வந்தால், உங்கள் வீட்டுப் பெண்கள் கவர்ச்சியாகவே உடை உடுத்தவேண்டும். நான் அவர்களுடன் மிக இயல்பாகவும் உரிமையுடனும் பழகுவேன், அவர்களுடைய ஆடையைப் பிடித்து இழுப்பேன், தொட்டுப் பேசுவேன். ஏனென்றால், நீங்கள் தாராள மனப்பான்மை உடையவர்கள் என்று வாதிடுவது போன்றதுதான் இது; தமிழ்நாட்டுத் தெக்கத்திக் கட்டப் பஞ்சாயத்துகளில் பேசப்படும் வாதம் போன்றதாகும்.//

http://solvanam.com/?p=6441

Matra said...

//8.5 விழுக்காடாகும். ஆனால் குஜராத்தில் அது வெறும் 2.8 விழுக்காடு மட்டும்தான்//

This is twisting or misinterpreting facts.

If someone is earning 2 lakhs per annum and the next year they increase to 2.40, then the increase is 20%.

If someone is earning 30 K per annum and increases to 40k, then the increase is 33%.

Of course 33% is bigger but who is doing better ?. There is no comparison really.

Gujarat is a much more prosperous state compared to others. And the figures stated may also be manipulated.

KVK said...

http://www.hindujagruti.org/activities/campaigns/national/mfhussain-campaign/


his paintings very worst...see above link friends

Don said...

Someone who doesn't respect the religious sentiments and doesn't appreciate the unity in diversity situation in India, doesn't deserve to live in India. I wish govt start voluntarily sending these people out, scraping their citizenship. This will be fit even for people like Thackerays. Funny, seeing someone asking to give him bharat ratna. Do you want his nude pictures to be called 'Indian' art?
My grandpa draws better pictures than him, I have asked him to draw some nude pictures if he wants to get famous like Husain.

Baski said...

///////
உண்மையான இஸ்லாமியன் said...

//"நான் இன்னமும் இந்தியாவை விரும்புகிறேன். ஆனால்,இந்தியாவுக்கு நான் தேவைப்படவில்லை. என் இதயத்தில் வலியோடு இதனை சொல்கிறேன் "//

அவர் விரும்பும் இந்தியாவில் இதர மதத்தினரை வெறுக்கும் ஓரிறைவன் கோட்பாட்டாளர்கள் மட்டுமே இருப்பார்கள் போல.. அவர் அந்த இந்தியாவுக்குத்தான் வர விரும்புகிறார். அது சாத்தியமில்லை என்றதும் அதுபோல நடக்கும் கத்தார் நாட்டிற்கு குடி பெயர்ந்துவிட்டார்.
//////

I am glad that these words are from a true Muslim.. appreciated.

//வீரராகவன் said...

தரத்தினை உறுதிபடுத்துவதே ஐ.எஸ்.ஓ என்கிற சான்றிதழ். எனவே பிரபலமான கோயில்களில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் தரம் குறைந்திருப்பது வருந்ததக்கது. இதற்காக அரசு நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன்.
கோயில் என்பது மனதை சுத்தப்படுத்தும் இடம் மட்டுமல்ல. உடலையும் சுத்தப்படுத்தப்படும் குளங்களுடன் இடமும் சுத்தமாய் இருத்தல் நல்லதுதானே. சனிப் பெயர்ச்சிக்காக திரு நள்ளாறு செல்பவர்களுக்கு இந்த உண்மை நன்கு விளங்கும். எனவே அதிக கூட்டம் வரும் கோயில்களில் தர நிர்ணயம் செய்வது அவசியமே. அப்போது iso inspection அடிக்க்டி நடக்கும். இதனால் அனைவருக்கும் பயன்.//

Veeraraagavan sir...Well said.. I feel same too..

R. Jagannathan said...

Dear IV, you have acknowledged the e-mail written to Hindu N.Ram (by a professor who has settled in Vadodhara). I too have received it and agree 100% with the writer. You should publish it or atleast send it to 'Inba' and ask his comments / response. You know, today MFH has returned his Indian Passport to the embassy in Qatar. He no longer deserves any support. - R. J.

bala said...

தர்மத்தின் வாழ்வுதன்னை சூதுகவ்வும் பின்னர் தர்மமே வெல்லும்.. இதையும் பாருங்க..
http://www.youtube.com/watch?v=E1xGrLrOS5Q

Tamil MA said...

நான் அப்படியே ஷாக்காயிட்டேன்

Matra said...

Here is the link to the email written by Mrs Hilda Raja of Vadodara to N Ram.

http://haindavakeralam.com/HKPage.aspx?PageID=10539&SKIN=M