முனிக்கு அவசரக் கடிதம்...
மைடியர் முனி,
இந்த கடிதம் அவசரத்தில் எழுதுவது. என்ன அவசரம் என்று பிறகு சொல்லுகிறேன். முதலில் ஒரு செய்தி கேட்டேன் உண்மையா பொய்யா என்று தெரியாது. உண்மையாக இருந்தால் 'நான் அப்பவே சொன்னேன்' என்று வறட்டு ஜம்பம் அடித்துக்கொள்ளலாம். இதுநாள் வரை தமிழக அரசு முத்திரையாக விளங்கி வருவது ஸ்ரீவில்லிப்புத்தூர் ராஜகோபுரம். ஆனால் இந்த முத்திரைக்கு பதிலாக கன்னியாகுமரியில் உள்ள அய்யன் வள்ளுவர் சிலையோ அல்லது சென்னையில் இருக்கும் வள்ளூவர் கோட்டப் படமோ வரலாம் என்று ஒரு வதந்தி பரவியுள்ளது. செம்மொழி மாநாடு, புதிய சட்டசபை கட்டிடம் - Does that ring a bell?
சன் டிவி அதனுடைய வெப் சைட்டில் "CODE OF CONDUCT" என்ற பகுதியில் இப்படி இருக்கு.Honest and ethical conduct of business: The Board and senior management shall act in accordance with the highest standards of professional ethics, honesty, integrity and free from fraud or deception. Professional ethics refer to adherence to accepted professional standards of conduct.
ஆனால் திரும்ப திரும்ப நம் வீட்டு டிராயிங் ரூமில் டிராயர் அவுத்த சீனை போட்டு எல்லார் வீட்டையும் பிட் தியேட்டர் ஆக்கியது இந்த வருடத்தின் சாதனை. சினிமாவில் இந்த மாதிரி இல்லையா என்று கேட்கலாம், இருக்கும் ஆனால் முக்கியமான சமயத்தில் ஹீரோவும், ஹீரோயினும் வெளிநாட்டில் டான்ஸ் ஆட போய்விடுவார்கள்.
நேற்று நிஜம் நிகழ்சியில் டிஸ்கிளைமரருடன் முழுப் படத்தையும் ஓட்டினார்கள். ஆன்மிகவாதி லீலை பற்றி படம் போட்ட இவர்கள் அரசியல் வியாதிகளையும் இதே போல் படம் பிடித்துப் போடத் துணிவார்களா?
குமுதம் கடந்த வாரம் வரை இவரை( அதாவது 140 வாரம் தொடர் கட்டுரை பாகம் இரண்டு இது ) பெரிய யோகியாக முன்னிறுத்தியது, ஆனால் இன்று அவர்கள் செய்யும் விளம்பரம் என்ன? "நித்தியானந்தாவின் காம வேட்டைகள்", 'செக்ஸ் லீலைகள்..." இவர்களுக்கு கொஞ்சம் கூட ... சரி வேண்டாம்.
சினிக்கூத்து போன்ற சில்லரை புத்தகங்களை விற்பனை செய்யும் நக்கீரன் போன்ற பத்திரிக்கை ராத்திரியோட ராத்திரியாக 7/= ரூபாய்க்கு ஸ்பெஷல் எடிஷன் ஒன்று கொண்டு வந்து காசு பார்த்தார்கள். இதில் என்ன சமூக அக்கறை இருக்க போகிறது? சென்னை மக்கள் காலை பேப்பருக்கு பதில் 'அந்த' ஸ்பெஷல் எடிஷன் கொடுங்க என்று போட்டி போட்டு கேட்டு வாங்கியது நம் சமுகத்தின் அவல நிலையை வெளிச்சம் போட்டிக் காட்டியது.
திடீர் என்று 2008ல் எழுதிய என் பதிவுக்கு கமெண்ட் வர ஆரம்பித்தது. என்ன என்று பார்த்த போது சிரிப்பு தான் வந்தது."ஒரு விஷயம் நூறு பேருக்குத் தெரிய வேண்டுமானால் டெலிபோன் வேண்டும்; ஆயிரம் பேருக்குத் தெரிய வேண்டுமானால் டெலிவிஷன் வேண்டும்; லட்சம் பேருக்குத் தெரிய வேண்டுமானால் 'ஒரே ஒரு பெண் போதும்". இதை சொன்னவர் யார் ? விடை கீழே....
பரமஹம்ஸ(பரமஹிம்ஸர்?) நித்யானந்தர்
என்னே ஒரு தீர்கதரிசனம்!!
எனக்கு தீர்கதரிசனம் என்றால், பிரசன்னாவுக்கு தீர்கமான தரிசனமே கிடைத்துள்ளது. ! பலர் பிரசன்னா என்ன படம் எடுத்தார் என்று கேட்டுள்ளார்கள். அவர்களுக்காக 2008ல் பிரசன்னா எழுதிய புத்தகக் கண்காட்சி பதிவு மீள்பதிவாக இங்கே....இன்று கூட்டம் பெரிய அளவில் வந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லும்படியாக இருந்தது. இரண்டரை மணிக்கு திடீரென பரபரப்பு, சலசலப்பு. ஏகப்பட்ட புகைப்பட ஃப்ளாஷ்கள். யாரோ அரசியல்வாதி வருகிறார் என நினைத்தால், காவியுடையில் வந்தார் சுவாமி நித்யானந்தா. கூட்டம் சூழ, ஒரு கூட்டம் எதிர்கொண்டழைக்க, லேசான பெண்மையின் முகச்சாயலில் புன்னகை பூத்தபடி வேகமாக நடந்துவந்தார் சுவாமி நித்யானந்தா. அவரது அரங்கு கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்தப் பக்கம் இந்தப்பக்கம் செல்லமுடியாமல் புத்தகத்தை வாங்கவும் உத்திராட்சம் போன்ற மாலையை வாங்கவும் (ஒரு மாலை நூறு ரூபாய்!) கடும்கூட்டம் அலைமோதியது. நான் புகைப்படம் எடுக்க முனைந்தபோது, சுவாமியின் பக்தகோடி ஒருவர் அவரது கைகொண்டு கேமராவை மறைத்தார். ப்ளாஷ் விழக்கூடாது என்று செய்கிறார் என நினைத்து, சில படங்கள் எடுத்தேன். சட்டென என் கையிலிருந்து கேமராவை பறித்தார் இன்னொரு சிஷ்யகோடி. என்ன ஏதென்று கேட்காமல் கேமராவில் இருந்த புகைப்படங்களை அழித்துவிட்டு, படம் எடுக்கக்கூடாது என்றார். நான் கேட்டேன்,அவரது ஆளுயர கட்டவுட் வைத்திருக்கிறீர்கள், இதை ஏன் எடுக்கக்கூடாது என்று. அதற்கு அவர், எடுக்கக்கூடாது ஸார் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவரது ஸ்டாலில் உள்ள புத்தகங்களில் அவர் விதவிதமாக, க்ளோஸ் அப்பில், லாங் ஷாட்டில், சிரித்துக்கொண்டு, தியானம் செய்துகொண்டு, தபேலா வாசித்துக்கொண்டு என போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அனைத்தும் வண்ணப் படங்கள். அதை எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். சுவாமிஜியின் காலில் பக்தர்கள் விழ ஆரம்பிக்க கடும் கூட்ட நெருக்கடி ஏற்பட்டது. நான் விலகி வந்துவிட்டேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால், சுவாமி உடனடியாக அரங்கை விட்டுப் போகவில்லை. பொறுமையாக நிறைய அரங்கில் சென்று புத்தகங்களைப் பார்வையிட்டார். நிறைய பேர் புகைப்படம் எடுக்க ஆரம்பித்திருந்தார்கள். நான் மீண்டும் அந்தப் பக்கம் சென்றபோது, எனது புகைப்படங்களை அழித்தவரிடம், இப்ப மட்டும் புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன். என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு சிஷ்யகோடி சொன்னார், ஒண்ணு ரெண்டு எடுக்கலாம் என்று. நான் ஒன்றை எடுத்துவைத்தேன்.
(நன்றி: ஹரன்பிரசன்னா).
கிட்டத்தட்ட 8 மணி வாக்கில்தான் சுவாமி நித்யானந்தா புத்தகக் காட்சியிலிருந்து சென்றார். அவரது சிஷ்யகோடிகள் செய்த ஓவர் ரீயாக்ஷன் எனக்கு எரிச்சலைத் தந்தாலும், கிட்டத்தட்ட 5 மணி நேரம் புத்தக அரங்குகளை அவர் பார்வையிட்டது கொஞ்சம் ஆச்சரியத்தை எனக்கு அளித்தது என்றே சொல்லவேண்டும். மொத்தத்தில் இன்று சுவாமி நித்யானந்த தினம்.
இஸ்லாமிய புக் டிரஸ்ட் சார்பாக புத்தகங்கள் வெளியீட்டு விழா அரங்க பொது மேடையில் நடந்தது. தமிழினியின் புதிய மாத இதழ் 'தமிழினி' இன்றுதான் கைக்குக் கிடைத்தது. வழக்கம்போல தமிழினியின் புத்தகங்கள் பாணியில் சிலை ஒன்று புத்தகத்தின் அட்டையை அலங்கரித்தது. எழுத்தாளர் ஷாஜி, சாரு நிவேதிதா, தேவதேவன், எஸ்ரா,ஜே.டி.க்ரூஸ் போன்றவர்களையும் ரோஸா வசந்த் போன்ற பதிவுலக நண்பர்களையும் காணமுடிந்தது.
சரி அவசரமா போகிறேன். திரும்ப வருகிறேன்.
இப்படிக்கு,
இட்லியானந்தா
கடைசி செய்தி: கலைஞர் அறிக்கை. மற்ற பகுதிகள் எல்லா பேப்பரிலும் இருக்கு, ஆனால் இந்த பகுதி நிறைய பேப்பரில் இல்லை. அதனால் அது மட்டும் இங்கே... அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத்தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்-அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டுமேயல்லாமல்- தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது என்பது மட்டுமல்ல; இத்தகைய தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாகவும் ஆகிவிடும்.
அருவருக்கத்தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே” என்று சில ஏடுகளும், தொலைக் காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை; மேலும் கள்ளையூற்றி திருத்த முடியுமா? அது போலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கு நிச்சயம் கலைஞரை பாரட்டலாம் ! பொறுப்புடன் பேசியுள்ளார்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 04, 2010
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 4-3-2010
Posted by IdlyVadai at 3/04/2010 03:56:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










25 Comments:
:>
முனியானந்தாவுக்கு இட்லியானந்தா எழுதியுள்ள கடிதம் படு ஆனந்தமாக உள்ளது.
இப்படிக்கு,
கௌதமானந்தா.
குமுதம் எப்பவும் அப்படி தான்.
இத்தனை புகழ்ந்து எழுதிய எழுத்தாளர் சாறு (!?) ஒரு ரெண்டு நாள் துக்கம் கூட அனுஸ்டிக்காம அவரை திட்டுவதற்கு கிளம்பிடாரே !!
"உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” என்ற கவியரசரின் பாடல் தான் நித்தியாவின் விஷயத்தில் இனி நடக்கும் என்று ஒரு பதிவில் படித்தேன்.
அவர் முகத்திரை கிழிந்ததில் சந்தோஷம் தான் என்றாலும், இரு தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கம் இப்படி அசிங்கப்படுவதில் அய்யோ பாவம் என்றே சொல்லத் தோனுது
he he ...
So fast world
Kadavulin Thoothuvar Yarum Illai
\\என்ன அவசரம் என்று பிறகு சொல்லுகிறேன்\\
\\சரி அவசரமா போகிறேன். திரும்ப வருகிறேன்.\\
kadaisi varaikkum enna avasaramne sollalaye - vera edvadhu video skkidichha???!!!
பாவம் கலைஞர், என்ன செய்வார், மானாட ம்யிலாட அரங்கில் செய்வதை இருவர் தனியறையில் செய்வதை போல் வெளிச்சம் போட்டு காண்பித்தால் கோபம் வரத்தானே செய்யும்?
வாழ்க அவர் தொண்டு.
\\இதற்கு நிச்சயம் கலைஞரை பாரட்டலாம் ! பொறுப்புடன் பேசியுள்ளார் \\
Is it because this was aired by SUN TV & not by Kalaignar TV :)
பிற் சேர்க்கையைப் படித்தவுடன் தோன்றியது, - அடாடா - இந்த விவகாரத்தை - அரசு போலீஸ் ஆகியவற்றிற்கு முதலில் சொல்லியிருந்தால் - கட்சிக்கும் குடும்பத்திற்கும் - ஆசிரமத்திலிருந்து நல்லா கறந்திருக்கலாமே - வடை போச்சே !!!
நல்லாவே இருக்கு இட்லியானந்தா கலைஞராணந்தாவை பாராட்டியது.
அன்புடன்,
ஸ்ரீலஸ்ரீ மஞ்சள் ஜட்டியானந்தா.
//முனியானந்தாவுக்கு இட்லியானந்தா எழுதியுள்ள கடிதம் படு ஆனந்தமாக உள்ளது.
இப்படிக்கு,
கௌதமானந்தா.//
எத்தனை ஆனந்தாக்கள்டா சாமி.
இப்படிக்கு
ஜெய்சங்கரானந்தா
IV,
Here is an interesting analysis by Raman on Manmohan's visit to s
audi.
http://ramanstrategicanalysis.blogspot.com/2010/03/indian-eggs-in-saudi-basket.html
சன் TV ன் அராஜகம் கண்டிக்கத்தக்கது. அதற்காக சாமியார் என்றாலே உங்கள் விமர்சனத்தில் பரிவும், பிடிக்காத பத்திரிக்கைகளை தாக்குவதும் உங்களுக்கே தவறாக தெரியவில்லையா ?
Dear KG,
நீங்கள் வேறொரு நல்ல பெயராக வைத்துக்கொள்ளுங்கள். கௌதமானந்தா என்றால்,"இரா"ஜசேகரன் (நித்யா) சன் டிவியைக் கேட்பது போல இருக்கிறது, கவுத்த-மானம்-தா என்று!
enna manjal commente kanom?? Avvalavu avasarama??
அய்யோ பாவம், மக்கள், அங்க பார்ரா, அம்மணமா போறான்னு ஒருத்தனப் பாத்து கத்துறாங்க. நான் உங்களுக்கு மெய்யாலுமே ஒன்றைச் சொல்கிறேன். இது ஏசு வருகையைக் குறிக்கிறது. பாதிரிகள் சிறுவர்களையும், சிறுமிகளையும், நண்களையும் பலவந்தப்படுத்துவதும், மதரசாக்களில் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதும், இந்து மதச் சாமியார்கள் இப்படிக் கேவலப்படுவதும் எல்லாம் ஏசு வரப்போகிறார் என்பதன் அடையாளம். பாவிகளே மனம் திரும்புங்கள்.
தினமலர் இது தான் சாக்கு சொல்லி தன்னுடைய பழைய நடிகை விபசார மேட்டர் நியாய படுத்தினார்கள்.
இப்போ NDDTV கூத்த பார்த்தீங்களா
http://www.ndtv.com/news/photos/album-details.php?id=6934&Album=PHOTO_GALLERY&AlbumTitle=Bangalore+godman+:+Modi+a+follower
நல்லா அரசியல் பண்ணுராங்க...
kalaingar TV kku kodukkama Sun TVkku Tape kodutha engalukku kobam varatha?
Gujaalanandha
//இப்படிக்கு,
இட்லியானந்தா//
நல்லா இருக்கு :))
Good Letter To Muni.. Great Idly Vadai
Nakkeeran 7 Rs Special Edition kum Idly vadai avasara kadithathukkum enna vithiyasam. manjal comment enge..poonool niligiradhe...
- divyan
Vikatan only promoted him earlier by publishing "Kathavai thira kaatru varattum". Please dont forget that. Stop buying Vikatan and Kumudam.
//அருவருக்கத்தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே” என்று சில ஏடுகளும், தொலைக் காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை; மேலும் கள்ளையூற்றி திருத்த முடியுமா? அது போலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கு நிச்சயம் கலைஞரை பாரட்டலாம் ! பொறுப்புடன் பேசியுள்ளார் //
********
அப்படியா சொல்றீங்க...
அந்த “காம சீரியல்” கேசட் கலைஞர் டி.வி.க்கு கிடைக்காமல் சன் டி.வி. கைக்கு போய்விட்டதால் வந்த வெறுப்பில் பேசினார் என்று ஒரு செய்தி உலவுகிறதே...
(எதோ நம்மால முடிஞ்சது பத்த வச்சாச்சு.....)
//அய்யோ பாவம், மக்கள், அங்க பார்ரா, அம்மணமா போறான்னு ஒருத்தனப் பாத்து கத்துறாங்க. நான் உங்களுக்கு மெய்யாலுமே ஒன்றைச் சொல்கிறேன். இது ஏசு வருகையைக் குறிக்கிறது.//
இவர பெயரை பார்க்கிறதுக்கும், சொல்ற விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லையே.இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்கள் அதிகமாக இட்லிவடையில வருது. எனக்கென்னமோ இவரு"போலியான இசுலாமியன்னு" பெயரை மாத்திக்கிட்டு கருத்து சொல்றதுதான் சரி.
நல்ல சாமியார் ... நல்ல சன் டிவி .... கலாச்சாரம் சீரழிந்து விட்டாதே ... என்று கூப்பாடு போட்டு , ஆஷ்ரமம் மீது கல்லெறியும்
சகோதரர்கள் (33 % சகோதரிகளும் சேர்த்து ) ஏனோ ஒன்றை மறந்து விடுகிறார்கள் ... உண்மையாக கலாச்சாரம் பாழாகிறது என்று நினைத்தால், அந்த கற்களை முதலில் எரிய வேண்டியது ... நக்க்கீரனந்தா மீதும் சன் டீவியானந்தா மீதும் தானே? ஒரு வேளை, இதுக
இப்படித்தான் என்று தெரிஞ்சதாலே யாரும் கண்டுக்கலையா ??
Post a Comment