பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 21, 2010

சன்டேனா இரண்டு (21-3-10) செய்திவிமர்சனம்


இந்த வார செய்திகள்...சில ஆச்சரியங்கள்.செய்தி # 1

ஒரு வீட்டின் கிரக பிரவேச நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அங்கு நான் கண்ட ஆச்சரியமான(!) விஷயம்..நடுத்தர வயதில் இருக்கும் வீட்டின் உரிமையாளர் , அவரது வயதான தந்தை மற்றும் கல்லூரியில் படிக்கும் அவர் மகன் அனைவரும் 'உற்சாக பானம்' அருந்திவிட்டு , தள்ளாடியபடி இருந்தனர். (தலைமுறை இடைவேளை காணோம்!) .

இன்று குடிக்கும் வழக்கம் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே பரவ தொடங்கி இருக்கிறது என்கிறது ஒரு சர்வே. 'தண்ணி அடிக்கறது தப்பு இல்லை. ஆனா, சைலண்டா வந்த படுத்தா போதும் ' என்று பெண்களும் புரட்சிகரமாக சிந்திக்க தொடங்கி விட்டனர்.விரைவில் அவர்களும் களத்தில்(?) இறங்குவார்கள் என தெரிகிறது. அண்ணாமலை பலகலை கழகத்துக்கு உட்பட்ட ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்கு 'பீர்' கேன்கள் ரகசியமாக ஆட்டோவில் சென்றதை நான் பார்த்து இருக்கிறேன்.

ஆச்சாரமான ஐயர் குடும்பத்து கல்யாணத்தில் கூட, 'பக்கத்துக்கு ஹோட்டல இருக்கு. போயிட்டு வந்துடுங்கோ' என்று 'சரக்கு' பார்ட்டி நடைபெறும் அளவுக்கு பெரும் மறுமலர்ச்சி ஏற்ப்பட்டு உள்ளது. டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழ் நாட்டில் ''குடிகாரர்களின்' எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து இருப்பதை தி.மு.க வின் சாதனை பட்டியலில் குறிப்பிட்டே ஆக வேண்டும்..

இதில் புழங்கும் கோடிக்கணக்கான வருவாயை கருத்தில் கொண்டு, யாரும் வாய் திறக்காத நிலையில், பென்னாகரம் தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் ராமதாஸ் மட்டும் ஜோக் போன்று ஒன்று சொன்னார். " நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல் படுத்துவோம்' என்று தொடர்ந்து கூறி வருகிறார் அவர்.

த.மு.மு. க எனப்படும் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் அரசியல் முகமான மனித நேய மக்கள் கட்சி, மார்ச் முதல் வாரம் முதல் பெரிய அளவிலான போராட்டத்தில் குதித்தன. "மதுகடை மறியல் போர் " என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

"மனித நேயத்துக்கு, மனித தன்மைக்கு எதிரான மது கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு " என்கிறார் த.மு.மு.கவின் தலைவர் திரு.,ஜவஹிருல்லா.இதில் ஹைலைட்டான விஷயம்...முஸ்லிம் பெண்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

பொதுவாக, த.மு.மு.க. ஒரு போராட்டம் நடத்துகிறது என்றால் அது, டிசம்பர் 6 நினைவு நாள் அல்லது முஸ்லிம் சமுக பிரச்சினை சார்ந்துதான் இருக்கும்.

ஆனால், மதுக்கடைகள் ஒழிப்பு போன்ற ஒரு பொது பிரச்சினைக்கு, அவர்கள் போராடுவது ஆச்சரியம் தானே?


இன்னொரு ஆச்சரியம் : கடந்த வாரம் சேஷாசலம் என்கிற பெரியார்தாசன் என்கிற சித்தார்த்தன் என்கிற நபர் , டாக்டர் அப்துல்லா என்று முஸ்லிம் மதத்தை தழுவினார்.

இது தனது பத்து ஆண்டுகள் கனவு என்று கூறிய அவர் "உலகத்தில் இருக்கும் எல்லா வேதங்களையும் அடுக்கி வைக்கலாம். இந்து மதம் பின்பற்றும் வேதங்கள், யூதர்கள் பின்பற்றும் தவ்ரா வேதம், கிறித்தவர்களின் பைபிள் வேதம் இவற்றையெல்லாம் அறிவு பூர்வமாக ஆராய்ச்சி செய்து பாத்தால் இவற்றில் இறைவன் நேரடியாக சொன்னதாக ஏதாவது வேதம் உள்ளதா? கிருஷ்ணசாமி சொன்னதாக முனுசாமி சொன்னதாக சின்னசாமி சொன்னதாக தான் உள்ளது.


1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன் தான். இப்போது அறிவு ஜீவிகள் எந்தப் பக்கம் வரவேண்டும் என்பதை புரிய வேண்டும்".

என்று கூறி இருக்கிறார் 'கருத்தம்மா' புகழ் அப்துல்லா.
"முருகன் கொலை செய்தால், முருகன் கொலை செய்தான் என்றும், நெல்சன் கொள்ளை அடித்தால், நெல்சன் கொள்ளை அடித்தான் என்றும் சொல்கிறார்கள். ஆனால், முகமது தவறு செய்தால், இஸ்லாமிய தீவிரவாதி என்கிறார்கள். அதற்குதான் நான் களத்தில் இறங்கி இருக்கிறேன் " என்று பேசி இருக்கிறார் அவர் .

பெரியார் கொள்கைகளை கடை பிடிப்பதில், வீரமணியை விட அதிகம் நம்பிக்கை தந்த பெரியார்தாசன், டாக்டர் அப்துல்லா ஆன ஆச்சரியம் நடந்து இருக்கிறது.

செய்தி # 2

அடித்தட்டு மக்களுக்கு இலவச கல்வி, சேவை உணர்வோடு பணி புரியும் ஆசிரியர்கள், ஒழுக்கமுடன் சிந்தனைக்கு இடம் தரும் கல்வி, தூய தமிழ் வழி கல்வி, அதே சமயம் ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு சிறப்பு வகுப்புகள் தரும் பள்ளி....எதோ கனவு திட்டம் போல இருக்கிறதா?

மேலே சொன்ன அனைத்தும் நடைமுறையில் சாதித்து காட்டி இருக்கிறது திண்டிவனம் அருகே உள்ள உரோசனையில் இருக்கும் தாய் தமிழ் பள்ளி. தாய்தமிழ் பள்ளிகள், பேராசியர் கல்யாணி மற்றும் தோழர் தியாகு ஆகியோரால் தொடங்கபட்டு, இன்று தமிழ் நாடு முழுவதும் இருக்கின்றன.

இங்கு படிப்பவர்கள் அனைவரும் ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளே. ஒரு பைசா கூட கட்டணம் இல்லை. அறிஞர் அ. மார்க்ஸ், சட்ட மன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் நடிகர் சூர்யாவின் அகரம் போன்றவர்களின் நன்கொடைகள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை கொண்டு இப்பள்ளிகள் நடை பெற்று வருகின்றன.

"இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு தங்கள் சமுக நிலை, பெற்றோர்கள் படும் கஷ்டங்கள் அனைத்தும் தெரியும். இவர்களது திறமை மற்றும் ஒழுக்கம் கண்டு திண்டிவனம் பகுதி முழுவதும் எங்கள் மாணவர்களுக்கு நல்ல பெயர் உள்ளது " என்கிறார் உரோசனை தாய்த்தமிழ் பள்ளியின் மேலாளர் திரு. முருகப்பன். ஆனால், சரியான நிதி வசதிகள் மற்றும் அரசின் ஆதரவு இல்லாததால் இன்னும் தொடக்க பள்ளி நிலையிலேயே இருக்கின்றன இந்த பள்ளி..

"ஆண்டு தோறும் 750 கோடி வண்ண தொலைகாட்சி பெட்டிகளுக்கு செலவு செய்யும் அரசு, ஒரு 15 கோடி ஒதுக்கினாலே சுமார் 456 தாய்தமிழ் பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக மற்ற முடியும் " என்கிறார் பேராசிரியர் கல்யாணி.

"வோட்டு கண்ணாடி' யை கழற்றிவிட்டு, தொலை நோக்கு பார்வையோடு என்றைக்குதான் பார்க்க போகிறார் நம் முதல்வர்?.

தாய் தமிழ் பள்ளிக்கு நீங்கள் உதவிட விரும்பினால் அல்லது சென்று பார்வையிட விரும்பினால் 94426 22970 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் (நன்றி : புதிய தலைமுறை, மார்ச் இதழ்). நானும் விரைவில் அங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவிக்கும் தாய் தமிழ் பள்ளிக்கு சென்று சிறு உதவி செய்ய முடிவு எடுத்து உள்ளேன்.

கூடுதல் ஆச்சரியம் : முல்லை பெரியார் விவகாரத்தில், கேரளாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றாக உள்ளன. காவிரியில் கர்நாடகாவின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றே. ஆனால், நம் தமிழகத்தில் அவ்வாறு இல்லாததே நம் அனைத்து மாநில அளவிலான பிரச்சினைகள் 'கன்னிதீவாய்' தொடர்வதறுக்கு காரணம்.

முதல் முறையாக ஒரு 'ஆச்சரியம்', மாமல்லபுரத்தில் நடந்து இருக்கிறது. அங்கு உள்ள அண்ணா நகர் மக்கள் , பட்டா கேட்டு போராட, அதற்க்கு ம.தி.மு.க ஏற்ப்பாடு செய்தது. அதில், உள்ளூர் தி.மு.க மற்றும் அ. தி.மு.க பிரநிதிகள், பா.ம.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள, கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் மற்றும் பாஜகவில் இருந்து டாக்டர் தமிழிசை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மக்கள் பிரச்சினைக்காக, அனைத்து அரசியல்கட்சிகளும் பாகுபடு இன்றி கலந்து கொள்ளும் இதை போன்ற 'ஆச்சரியமான' போராட்டங்கள் தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஆச்சரியங்கள் தொடருமா?

(நன்றி..இனி அடுத்த வாரம்).

- இன்பா

43 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

பெரியாருடைய பிரச்சாரங்கள் எல்லாம் பெரியார்தாசனிடமே எடுபடவில்லை என்பதில் மிக்க மகிழ்ச்சியே!!

இஸ்லாத்திற்கு சென்று பழைய நினைவுகளில் மூழ்கி பெண்ணுரிமை பற்றி பேசாதிருத்தல் நலம். இல்லாவிடில் தனது தேடல் தொடர்கதையாகி ரோமுக்குச் சென்று சாமுவேலாக வேண்டியிருக்கும்.

ராகவன் பாண்டியன் said...

நச்சுனு.....இரண்டு செய்தி! வாழ்த்துக்கள்...இனிய காலை வணக்கம்!

kggouthaman said...

கடைசி இரண்டு பாராக்கள் தமிழகத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஒளியை வீசுகிறது.

Muthu said...

Yathiraj...

Vayiru eriyuthaa??? venthayam saapidungal..romba nallathu!!

நல்லதந்தி said...

//இஸ்லாத்திற்கு சென்று பழைய நினைவுகளில் மூழ்கி பெண்ணுரிமை பற்றி பேசாதிருத்தல் நலம். இல்லாவிடில் தனது தேடல் தொடர்கதையாகி ரோமுக்குச் சென்று சாமுவேலாக வேண்டியிருக்கும்.//

எப்படி தலையில்லாமல் போவாரா?

Anonymous said...

//சேஷாசலம் என்கிற பெரியார்தாசன் என்கிற சித்தார்த்தன் என்கிற நபர் , டாக்டர் அப்துல்லா என்று முஸ்லிம் மதத்தை தழுவினார்//

இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. முன்பே எதிர்பார்த்ததுதான். பார்ப்பனிய எதிர்ப்பு என்ற மட்டையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்ததால் தான் ஈவெ.ரா ஒரு நாத்திகராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் அவரும் இஸ்லாத்தைத் தான் தழுவியிருப்பார்.

எனக்கு என்னவோ கமலாதாஸின் ஞாபகம் வருகிறது. ஆனால் டாக்டர் அப்துல்லாவிற்கு அந்தநிலை ஏற்படாது என்றே நம்புவோம். நான் ஏன் இஸ்லாமியன் ஆனேன்? என்ற தொடரை விரைவில் எதிர்பார்ப்போம்.

// த.மு.மு. க எனப்படும் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் அரசியல் முகமான மனித நேய மக்கள் கட்சி, மார்ச் முதல் வாரம் முதல் பெரிய அளவிலான போராட்டத்தில் குதித்தன//

பாராட்டப்பட வேண்டிய விஷயம். எதிர்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை த.மு.மு.க செய்ய முன் வந்திருப்பது நல்லது. தொடர்ந்து மக்கள் நலனுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் ஆதரவு பெருகும்.

// வீட்டின் உரிமையாளர் , அவரது வயதான தந்தை மற்றும் கல்லூரியில் படிக்கும் அவர் மகன் அனைவரும் 'உற்சாக பானம்' அருந்திவிட்டு , தள்ளாடியபடி இருந்தனர்//

இது போன்ற சம்பவங்களை இப்போது அதிகம் பார்க்க முடிகிறது. குடிப்பது தவறில்லை, அது சமூக அந்தஸ்து தரும் ஒரு விஷயம் என்பது ஆண்களிடம் மட்டுமில்லாமல் பெண்களிடமும் பரவலான கருத்தாக உள்ளது.

//ஆச்சாரமான ஐயர் குடும்பத்து கல்யாணத்தில் கூட, 'பக்கத்துக்கு ஹோட்டல இருக்கு. போயிட்டு வந்துடுங்கோ' என்று 'சரக்கு' பார்ட்டி நடைபெறும் அளவுக்கு பெரும் மறுமலர்ச்சி ஏற்ப்பட்டு உள்ளது//

ஆச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது. எல்லாம் போலி வேஷம் சாமி. இவர்கள் தான் இப்போது அதிகம் குடிக்கின்றனர். இவர்களைப் பார்த்து மேல் உயர்தர வர்க்கம், மற்றும் நடுத்தர வர்க்கமும் செயலில் இறங்கி விட்டனர்.

பூஜையின் போது மட்டும் ‘மடி’யாக சாமி கும்பிட்டால் போது. மற்ற நேரங்களில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதே பலரது கருத்து. (உண்மையிலேயே ஒழுக்கமாக, ஆசாரமாக இருப்பவர்களும் ஒரு சிலர் இருக்கின்றனர் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். நான் அவர்களைச் சொல்லவில்லை. பெரும்பான்மையோரைக் குறித்துத் தான் பேசுகிறேன்)

சாஸ்திரிகள், குருக்கள், வைதீகர்கள் போன்றோரெல்லாம் பகிரங்கமாகவே டாஸ்மாக்கிற்கு வந்து சரக்கு வாங்கிச் செல்கின்றனர். (சிலர் ஏரியா விட்டு ஏரியா மாறி வந்து வாங்கிச் செல்கின்றனர். அல்லது ஆளனுப்பி வாங்கி வரச் செய்கின்றனர்)

ஒரு பெண் நினைத்தால் எதையுமே சாதிக்கலாம். ஆனால் அவளே ஆணுக்குச் சமமாய்ச் சீரழிந்து போக குடிக்க முன் வரும்போது என்னத்தைச் சொல்வது?

ஒழுக்கம் என்பது நமது கல்வி முறையில் சரியாக போதிக்கப்படாததும், நுகர்பொருள் கலாசாரமும், பெருகிவரும் பப் கலாசாரங்களும்தான் இதற்குக் காரணம். இதன் பயனை விரைவிலேயே சமூகம் அனுபவிக்கும்.

- அம்பி

யதிராஜ சம்பத் குமார் said...

முத்து சார்...


வயத்தெரிச்சல் எல்லாம் எதுவும் இல்லை சார். உங்க ஆளுங்க பெரியார்தாசனோட பழைய பெண்ணுரிமை, பெரிய வெங்காய பேச்செல்லாம் கேட்டுட்டு அவர் மேல பத்வா போடாம இருக்கணுமேங்கறதுதான் என்னோட கவலை.

padma said...

படித்தவுடன் சிறு கவலை பற்றிகொள்கிறது .

மாயவரத்தான்.... said...

அம்பி என்ற பெயரில் கமெண்ட் அடித்திருக்கும் அல்லக்கையின் கொண்டை 'தொப்பி'யைத் தாண்டி தெரிகிறதே.

Anonymous said...

முகமது கொலை செய்தால், கொள்ளை அடித்தால் இஸ்லாமியத் தீவிரவாதி கொலை செய்தான், கொள்ளை அடித்தான் என்று யாருமே சொலவதில்லை. ஏன் தான் இப்படி பினாத்துகிறாரோ?

'தவறு செய்தால்' என்று சொல்லியிருக்கிறாரே, அது 'என்ன தவறு' என்றும் சொல்லியிருந்தால் 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்று சொல்வதற்கு விளக்கம் கிடைத்திருக்கும்.

Madumitha said...

1. மது ஆரோக்கியக் கேடா
என்று பார்த்தால் போதும்.
ஆச்சாரக் கேடா என்று
பார்க்க வேண்டாம்.
த.மு.மு க்கு குறிப்பாக
பெண்களுக்கு சல்யூட்.
2. திரு.அப்துல்லாவுக்கு
அவர் தேடுவது கிடைக்க
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திகிறேன்.
3. இத்தகையப் பள்ளிகள்
ஊக்கப்படுத்தப்படவேண்டும்.

வலைஞன் said...

ஆச்சாரமான ஐயர் குடும்பத்து கல்யாணத்தில் கூட, 'பக்கத்துக்கு ஹோட்டல இருக்கு. போயிட்டு வந்துடுங்கோ' என்று 'சரக்கு' பார்ட்டி நடைபெறும் அளவுக்கு பெரும் மறுமலர்ச்சி ஏற்ப்பட்டு உள்ளது//

ஐயராவது, ஆட்டுக்குட்டியாவது!

இன்று சமுகத்தில் இரண்டே பிரிவுதான் ஓய்!
பணக்காரன்!
ஏழை!!

jaisankar jaganathan said...

// அவர் மேல பத்வா போடாம இருக்கணுமேங்கறதுதான் //

அவர் இந்துவா இருக்குறப்ப பேசினது எல்லாம் இப்ப பேசினா சங்குதான்

ரிஷபன் said...

பெரியார் தாசனுக்கு போய் எதுக்கு இவ்வளவு விளம்பரம் தர்றீங்க ? அவர் அத்தனை கவனிக்கத் தகுந்தவரா ?

எந்த பத்திரிக்கையாவது குமரிமுத்து அரசியலுக்கு வருவாரா என்று கவர் ஸ்டோரி வெளியிட்டு பார்த்து இருக்கீங்களா ?

Anony8 said...

Please allow this comment, I don't think this is blasphemous or offensive.

Wasn't Mohammed a person? Why Quran is considered to be a word of God, when it was actually written by a living individual.

Anony8 said...

Kudos to TMMK, I've never seen them protesting for a social cause. Everytime they used to do it only for THEIR own non-sense reasons.

Periyardasan's move is a clear sign once again that all so-called Dravidians' neutral and atheist stand is fake and a cover for their anti-Hindu rhetorics.

SAN said...

IV,
A link to get a padma award!!!

http://www.dailypioneer.com/243637/It%E2%80%99s-official-Bait-Modi-get-rewarded.html

Anonymous said...

முகமது கொலை செய்தால், கொள்ளை அடித்தால் இஸ்லாமியத் தீவிரவாதி கொலை செய்தான், கொள்ளை அடித்தான் என்று யாருமே சொலவதில்லை.

----------

Needless to say a non-Muslim never uses his religious texts, quotes and "orders" for planning and indulging in a crime, even if the crime was communal/religious in nature.

Madhavan said...

ஹிந்து பெயரை வச்சிக்கிட்டு, கடவுள் இல்லைன்னு சொல்லி சாசு பண்ணுற கூட்டத்தோட சேர்ந்து பெயர மாத்திகிட்ட ஒரு நாதாரி, கல்லா ரோம்பாததுனால மதம் (புத்தி) மாறி குல்லா போட்டுக்கிட்டதலாம் ஒரு நியுசா போட்டு தேவையிலாம உங்க, எங்கடயத்த வேஸ்ட் செய்ய வேண்டாம்னு சொல்லிக்கிறேன்.

//Anonymous said..."ஆச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது. எல்லாம் போலி வேஷம் சாமி. இவர்கள் தான் இப்போது அதிகம் குடிக்கின்றனர்."//
Plz. do not generalize ur statement. There are still 'pure', 'Aachaara seelarkal' exist. 'Black sheeps' are everywhere.. that does not mean the entire group / sect. are 'black sheeps'.

Anonymous said...

//ஆச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது. எல்லாம் போலி வேஷம் சாமி. இவர்கள் தான் இப்போது அதிகம் குடிக்கின்றனர். இவர்களைப் பார்த்து மேல் உயர்தர வர்க்கம், மற்றும் நடுத்தர வர்க்கமும் செயலில் இறங்கி விட்டனர். //

போலி வேஷம் கட்டாத மத்த ஜாதி ஆளுங்க (நம்ப அம்பி மாதிரி) எல்லாம் வாயில ஊத்தினாக்கூட முழுங்க தெரியாதவங்க. இதுக்கு கூட ஐயர்தான் சொல்லிக்குடுக்கனும்...

sridhanakumar said...

இன்று சமுகத்தில் இரண்டே பிரிவுதான் ஓய்!
பணக்காரன்!
ஏழை!!

SUPER SIR ............

(ITHUTHAN UNMAI)

ஆராய்வு said...

பெரியார் தாசன் என்ற பெயரை வைத்துக்கொண்டு அந்தாள் செய்தது பெரும் அயோக்கியத்தனம். மத வெறியர்களை விட மோசமான ஏமாற்றுக்காரர்கள் இந்தமாதிரியான பிரகிருதிகள்.

ஆராய்வு - Jeevendran

உண்மையான இஸ்லாமியன் said...

குடிக்கும் பழக்கம் நாகரீகத்தின் சின்னமாக கருதப்படுகிறது. ஆனால் குடும்பமே நாசமாகும் நிலை வெகு சீக்கிரம் வரும்.

”அவனது குடியில் குடும்பமே தள்ளாடுகிறது” என எப்போதோ படித்த பொய்க்கூ ஞாபகம் வருகிறது. இப்போது குடும்பத்தின் குடியில் எது தள்ளாடும் எனத் தெரியவில்லை.

பள்ளிகளில் குடிக்கும் வழக்கம் என்பது ஆசிரியர்களைப் பார்த்து வருவது. சொல்லிக்குடுக்குற வாத்தியார் நின்னுகிட்டு ஒன்னுக்குப் போனா, படிக்கிற பையன் ஓடிகிட்டு ஒன்னுக்குப் போவான்கிறது பழமொழி.

வாத்தியார், அப்பா, மற்றும் வயதிற்கு வந்த அண்ணன் ஆகியோர்களைப் பார்த்தும், கனாக்காணும் காலங்கள் போன்ற சீரியல்கள் செய்கின்ற வேலைகள் இவை.


//ஆச்சாரமான ஐயர் குடும்பத்து கல்யாணத்தில் கூட, 'பக்கத்துக்கு ஹோட்டல இருக்கு. போயிட்டு வந்துடுங்கோ' என்று 'சரக்கு' பார்ட்டி நடைபெறும் அளவுக்கு பெரும் மறுமலர்ச்சி ஏற்ப்பட்டு உள்ளது. //

இதெல்லாம் நாகரீகம் என்ற பெயரில் இருக்கும் சில நல்ல குணங்களையும் இழப்பது.

/கடந்த வாரம் சேஷாசலம் என்கிற பெரியார்தாசன் என்கிற சித்தார்த்தன் என்கிற நபர் , டாக்டர் அப்துல்லா என்று முஸ்லிம் மதத்தை தழுவினார்.//

இதெல்லாம் ஞானத்தேடல். கொஞ்சம் அவசரப் பட்டுவிட்டார். கிறிஸ்துவராய் மாறிவிட்டு பின்னர் இஸ்லாமியராய் ஆகியிருக்கலாம். இனிமேல் கிறிஸ்தவம் இஸ்லாத்தைவிட சிறந்தது எனக்கூடச் சொல்ல முடியாது என்பதும், விமர்சனம் செய்தால் பரலோக பிராப்தி அடைந்து விடுவார் என்பதையும் சொல்லிவைக்க வேண்டும்.


தமிழ் பள்ளிக்கூடத்தை அதரித்தால் ஓட்டு கிடைக்குமா?

பிரச்சினைகள் இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் எப்படித்தான் அரசியல் செய்வது? அறிக்கை விடுவது.. ஒற்றுமைக்கும், தமிழக அரசியலுக்கும் ரொம்ப தூரம்.. ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் ஒற்றுமையாய் இருப்பது பற்றி கனவு காண்கிறீர்கள். காங்கிரஸில் ஒரே பிரச்சினைக்கு எல்லோரையும் ஒரே குரலில் பேச வையுங்கள் பார்க்கலாம்..

இந்தவாரம் சன்டேனா இரண்டு, நன்று.

Shafeeq said...

//Wasn't Mohammed a person? Why Quran is considered to be a word of God, when it was actually written by a living individual.//

Dear Anony8,
திருக்குரஆன் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எழுதப்படவில்லை. அவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. இருந்தும் 1400 ஆண்டுகளாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், எந்த அறிவியல் கோட்பாட்டிற்கும் எதிராகத வேதம், சமயம் மட்டுமின்றி சட்டம், சமூகம், அரசியல், மருத்துவம், வானியல் என அனைத்து துறைகளையும் பற்றி பேசும் வேதம் என்பதாலயே இதனை we are saying as "WORD OF GOD". For More information please read Quran.

Anonymous said...

TTMK wants no liquor, no freedom of expression,purdha for women, islamic banking and right to have four wives for muslim men. If liquor is a social and health issue let us tackle it on those grounds and not on moral grounds.Because for TMMK morality is another name for islamic conservatism.So dont support TMMK.

Anonymous said...

Periyardasan chose islam.Why make a big fuss about it.Wait and watch and see whether he is happy there.

Anonymous said...

/* "ஆண்டு தோறும் 750 கோடி வண்ண தொலைகாட்சி பெட்டிகளுக்கு செலவு செய்யும் அரசு, ஒரு 15 கோடி ஒதுக்கினாலே சுமார் 456 தாய்தமிழ் பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக மற்ற முடியும் " என்கிறார் பேராசிரியர் கல்யாணி. */

750 கோடியில் கமிஷன் அடிக்க முடியும். ஆனால்15 கோடியில் கமிஷன் அடிக்க முடியாதே!!!!

Anonymous said...

வீரப்பனை விடுதலை செய்யச் சொல்லியும் இன்னும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கும் ஆதரவு தெரிவித்து வரும் கல்யாணி, சுகுமாரன் குரூப்பு பள்ளிக் கூடம் நடத்தினால் அது எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை நாம் இங்கு யூகிக்க வேண்டியதேயில்லை. தீவீரவாதத்தையும் தனித் தமிழ் நாடு, நக்சலைட் இயக்கம் போன்ற தேசப் பிரிவினைவாதிகளுக்கும் ஆஸ்தான ஆலோசகர்களே இந்த கல்யாணியும் சுகுமாரனும் இந்த மாதிரி பயங்கரவாத தீவீரவாதிகள் நடத்தும் பள்ளிக்கு இட்லி வடை பதிவில் விளம்பரம் கண்டு நான் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். என்ன ஆச்சு இட்லி வடைக்கு? ஐயா உங்களுக்குத்தான் பொது அறிவு இல்லையென்றால் விபரம் தெரிந்தவ்ர்கள் யாரிடமாவது கேட்டு விட்டாவது இந்த மாதிரியான பயங்கரவாதிகள் நடத்தும் பள்ளிகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாமே. கிழிஞ்சது. இந்தப் பள்ளிக் கூடத்தில் என்ன மாதிரியான போதனைகள் நடத்தப்படும் என்பது கூடவா இட்லி வடைக்குத் தெரியாமல் போய் விட்டது. மற்ற பள்ளிகளில் காந்தியைச் சொல்லிக் கொடுத்தால் இவர்கள் வீரப்பனை அல்லவா தேசப் பிதா என்று சொல்லித் தருவார்கள். விகடன் குரூப்பை ப்ளாக்மெயில் செய்யும் அயோக்கிய மாஃபியா கும்பல் கடத்தி விட்டதைப் போல இட்லி வடையையும் இணைய தீராவிடக் கும்பல் எதுவும் கடத்தி விட்டதா? என்ன நடக்கிறது இங்கே?

வருத்தத்துடன்
விஸ்வாமித்ரா

Anony8 said...

Dear Anony8,
திருக்குரஆன் முஹம்மது நபி(WBAH) அவர்களால் எழுதப்படவில்லை. அவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது.

-----
Ofcourse, some1 else wrote based on his dictations after "enlightnings" in his mind. How can it be said as written by so-called God himself(herself)??? as has been projected now.

Anonymous said...

For More information please read Quran.

--------
For the exact and literal translations read it here.

http://www.thereligionofpeace.com/Pages/History.htm

மகாராஜா said...

"ஆனால், மதுக்கடைகள் ஒழிப்பு போன்ற ஒரு பொது பிரச்சினைக்கு, அவர்கள் போராடுவது ஆச்சரியம் தானே?"" என்ன சார் இதுல என்ன ஆச்சரியம் இருக்கு அரசியல் கட்சி என்றால் எல்லாவித போராட்டம் இருக்கும்.

ராமன் இந்தியா said...

டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு வருமானம் 15000 கோடி (போகும் மானம் பற்றி கவலை இல்லை!! ).. மது விலக்கு பற்றி நினைக்கக் கூட அரசுக்கு சிந்தனை கிடையாது !! பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அரசு வருமானத்துக்காக மது விலக்கை தளர்த்துவது பற்றி சொன்ன போது அவர் சொன்னது --- ""இப்பதான்யா.. குப்பனும் சுப்பனும் வீட்டில் ரெண்டு அலுமினியம் தட்டும் பாத்திரமும் வாங்கி இருக்கிறான் ... அது பொறுக்கலியா ?? "" .அரசு வருமானத்தை விட மக்கள் நலம் பேணப்பட்ட காலம் அது !! தமிழர் களை எல்லாம் குடிகாரன் ஆக்காமல் இனி தமிழ் நாடு ஓயாது-- என்னே லட்சியம்??

R.Gopi said...

என்னிய பத்தி இவ்ளோ எல்லாம் பேச வேணாமே... நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லைங்க...

இப்படிக்கு : சேஷாசலம் என்கிற பெரியார்தாசன் என்கிற சித்தார்த்தன் என்கிற டாக்டர் அப்துல்லா

சைவகொத்துப்பரோட்டா said...

செய்தி - 2- இல் அந்த பள்ளி பற்றிய செய்தி, நம்பர் - 1.

Anonymous said...

//வருத்தத்துடன்
விஸ்வாமித்ரா//
விஸ்வாமித்ரா, இதே எண்ணத்துடன் தான் இந்த வார பதிவைப் படித்தேன். இந்த வார சன்டேன்னா இரண்டு அமர்க்களம் என்ற ரீதியில் இதற்கு பின்னூட்டங்கள் வேறு.

இன்பா, யாரையும் பாரட்டுவாதானாலும் சரி திட்டுவதானாலும் சரி கொஞ்சம் நிதானமா செய்யலாம்

Narayanan

Srinivas said...

inba sir,
Waiting for your 50th post. Write something different.

shiva said...

//டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழ் நாட்டில் ''குடிகாரர்களின்' எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து இருப்பதை தி.மு.க வின் சாதனை பட்டியலில் குறிப்பிட்டே ஆக வேண்டும்//

well said Mr.Inba

sundayna rendu news good.

Baski said...

//இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன் தான். இப்போது அறிவு ஜீவிகள் எந்தப் பக்கம் வரவேண்டும் என்பதை புரிய வேண்டும்"//
நீங்க சொல்லிடீங்கல.... நாங்களும் மாறிடுறோம்... பார்த்து போட்டு கொடுக்க சொல்லுங்க....
உங்க பகுத்தறிவு சும்மா பட்டய கிளப்புது.... உங்க பேச்சில் காமெடி இருக்கலாம்... ஆனா உங்க பேச்சே காமெடியா போச்சே?
இதற்க்கு முன் இவரோட உளறல்லை youtube இல் பார்த்தேன். எல்லா இந்து கடவுள்களையும் சாடி ... கிறித்துவ மத போதகர் மாறி பேசிகிட்டு இருந்தார்... இப்போ வேற கம்பெனி இல் சேர்ந்துட்டார் போல


//ஆனால், முகமது தவறு செய்தால், இஸ்லாமிய தீவிரவாதி என்கிறார்கள். அதற்குதான் நான் களத்தில் இறங்கி இருக்கிறேன்//

அப்போ மேல சொன்னது சும்மா லுல்லுளாய்கா?

//திண்டிவனம் அருகே உள்ள உரோசனையில் இருக்கும் தாய் தமிழ் பள்ளி. தாய்தமிழ் பள்ளிகள், பேராசியர் கல்யாணி மற்றும் தோழர் தியாகு ஆகியோரால் தொடங்கபட்டு, இன்று தமிழ் நாடு முழுவதும் இருக்கின்றன.//
Good to know about such initiatives. Thanks for sharing the details.

Anonymous said...

இடஒதுக்கீட்டிற்கு இடம் அளிக்காத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

smk981 said...

பெரியார் தாசனால் எப்படி பெரியாரின் கருத்துக்களை பிரசாரம் செய்து ,பின்பு அதை பின்பற்றமுடிய வில்லையோ ,அதை போல தான் நித்யானந்தரால் பிரம்மச்சரியம் பற்றி பிரச்சாரம் செய்து அதை பின்பற்றமுடிய வில்லை . நித்யானந்தர் செய்தது அயோக்கிய தனம் என்றால் பெரியார் தாசன் போன்ற வர்களும் அயோக்கியர்களே. பெரியார் தாசனின் பேச்சை கேட்டு நாத்திகர் ஆனவர்கள் இப்போது என்ன செய்வார்கள் .இரண்டு மனிதர் களும் சாதாரண மனிதர்களே .அவர்கள் எல்லாம் தெரிந்த வர்கள் என்று நம்பியது ஏமாந்தவர்களின் குற்றம் அன்றி இவர்கள் குற்றவாளி கள் அல்ல என்பது என் கருத்து .இனிமேல் மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆக வேண்டும்.

ராகவன் பாண்டியன் said...

விஸ்வாமித்திரா கூறியிருப்பது உண்மையா? விளக்கம் அளியுங்கள் இ.வ

Anonymous said...

விஸ்வாமித்ரா சொல்லியிருப்பது உண்மையே . இந்த சுகுமாரனும் கல்யாணியும் வீரப்பனின் கூட்டுக் களவாணிகள் . பழைய செய்திகளைப் படித்தாலே தெரியும் மேலும் இஸ்லாமியப் பயங்கர வாதியான மதானி என்பவனை சிறையில் இருந்து விடுவிக்க இதே சுகுமாரன் கையெழுத்து வேட்டை எல்லாம் நடத்தினான் சுகுமாரனும் கல்யாணியும் நக்சல் மற்றும் தனித் தமிழ் நாடு கேட்ட்க்கும் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள் மேலும் அனைத்து விதமான நாசகார கும்பலுக்கும் ஆதரவு அளிப்பவர்கள் இந்திய தேசியத்தின் எதிராளிகள் இபப்டிப் பட்ட ஒரு பயங்கரவாதிகள் நடத்தும் நிறுவனத்திற்கு இட்லி வடை பதிவில் ஆதரவு வந்திருப்பதுதான் வருத்தத்தை தருகிறது. இட்லி வடை இந்த செய்தியை உடணே நீக்க வேண்டும் அல்லது தக்க விளக்கம் கொடுக்க வேண்டும். இன்ப என்பவர் உண்மை அறியாமல் செய்த பிழை என்றே நினைக்கிறேன் . பயங்கரவாதிகளுக்கு இட்லி வடை மூலமாக ஒரு பைசா க்யூட போய் விடக்கூடாது

ra.murugappan said...

அன்பினிய நண்பருக்கு வணக்கம். நான் முருகப்பன். ரோசனை தாய்த் தமிழ் பள்ளியின் மேலாளர். தங்களுக்கு மிகுந்த நன்றியும், பாராட்டும். எமது பள்ளியைப் பற்றிய தகவலுக்கு. யார் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர்கள் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது தேவை இல்லை. ஏனெனில், பெயர் சொல்லாமல் சொல்வது எல்லாம் பொய்தான். கல்யாணியும், சுகுமாரனும் சமூக மாற்றத்திற்கு செயலாற்றுபவர்கள். வீரப்பன் சம்பவத்தில் தலையிட்டது அதிரடிப்படை செய்த அட்டூழியங்களை வெளிக்கொணரவே. சுகுமாரன் மதானி விசயத்தில் தலையிட்டது, இசுலாமியர் கள் என்பவதற்காகவே வெறும் விசாரணைக் கைதியாகவே பல ஆண்டுகளுக்கு வைத்திருக்கும் கொடுமையை என்ன சொல்வது. மனித உரிமை அடிப்படையில்தான் இந்தத் தலையீடு ஆகும். மதானி என்பதால் வெளியில் தெரிந்தது. எத்தனையோ பேருக்கு இன்று வரை செய்கின்றோம். பொடா சட்டத்தை எதிர்த்து செயலாற்றிக்கொண்டிருந்தபோது நாங்கள் கூறியது, அப்போது சங்கராச்சியாரை பொடாவில் கைது செய்திருந்தாலும் அது தவறுதான் என்று கண்டிப்போம். விடுதலை செய்யக் கோருவோம். இந்த அறிவு நாணயமும், நேர்மையும் எங்களிடம் உண்டு. பெயர் சொல்ல தைரியமில்லாத உங்களிடம் உண்டா? எமது பள்ளி நடைபெறும் பகுதி தாழ்த்தப்பட்டோர் வசிக்கின்ற பகுதி. பள்ளியில் படிக்கின்ற 95% குழந்தைகள் தலித் குழந்தைகள். அவர்களின் பெற்றோர்கள் காலை 7 மணிக்குள் வேலைக்கு சென்றுவிடுவார்கள். இரவு 6 மணிக்கு மேல்தான் திரும்புவார்கள். கேட்பாரின்றி, கவனிப்ப்பாரன்றி இருக்கும் அந்தக் குழந்தைகளின் அவலம், வலி, வேதனை உணர முடியாது பெயர் சொல்ல தயங்கும் உங்களால். அந்தக் குழந்தைகளுக்கு கல்வி அளித்து, உணவளித்து சமூகத்தில் மனிதர்களாக வளர்ப்பது சாதாரண செயல் அல்ல. வெறும் அவதூறுகளை பரப்பாமல். வாய்ப்பிருப்பின் வந்து பாருங்கள் பள்ளியையும், உருவாகி வரும் புதிய இளந்தலைமுறைகளையும்.

ra.murugappan@gmail.com