பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 17, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 17-3-2010

நேற்றே இந்த கடித்தை எழுத வேண்டும் என்று நினைத்து இன்று எழுதும் கடிதம். பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளிவிழாவை பார்த்தீரா? ஜெயலலிதா எல்லாம் தோற்று விடுவார் போலிருக்கிறது இவரிடம்.


இந்த கூட்ட்த்தில் எல்லோரையும் கவர்ந்தது மாயாவதிக்கு போட்ட மாலை. It was really noteworthy!. ஆமாம் எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாலான மாலை. இதில் எவ்வளவு ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறது என்று யாராவது சொன்னால் பரிசு கூட கொடுக்கலாம். சில 2 கோடி என்கிறார்கள், சிலர் 5 கோடி என்கிறார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் 20 கோடி என்றார்கள். அவர்களுடைய ரேன்ஞ் அப்படி. இந்த மாலை யார் போட்டார்கள் என்பது தான் ஹாட் டாப்பிக். முதலில் கர்நாடக மாநில பகுஜன் சமாஜ் கட்சியினர் அணிவித்தார்கள் என்றார்கள். வருமானவரித்துறை நடவடிக்கை என்றவுடனேயே அவர்கள் நாங்கள் போடவில்லை என்று எஸ்கேப் ஆகிவிட்டார்கள். கடைசியாக இந்த மாலையை கட்சி தொண்டர்களிடம் வசூலித்து போட்டார்கள் என்று சொன்னார்கள். இவர்களின் கட்சி தொண்டர்கள் எல்லாம் தலீத் இனத்தை சேர்ந்தவர்கள்.

இந்த மாலையை போடும் போது கூட்டதில் இருக்கும் தலீத் மக்கள் எல்லாம் கோரஸாக

”ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே”

என்ற பாடலை பாடியிருக்கலாம். என்ன ஒன்று, மாலையில் பூக்களுக்கு பதில் பணம்! பூக்கள் பூத்தவுடன் அவை சாமிக்கும் போகலாம் சாவுக்கு போகலாம் என்பார்கள் எவ்வளவு நிஜம்! தலித் மக்களுக்காகப் போராடுவதே தனது வாழ்நாள் லட்சியம் என்று வேறு மாயாவதி இந்த கூட்டத்தில் முழங்கியுள்ளார். ஐயோ பாவம் தலித் மக்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

(லேட்டஸ்ட் : முதல் மாலை சர்ச்சையே இன்னமும் முடிந்தபாடில்லை. அதற்குள் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள அடுத்த மாலையை கட்சித் தொடர்கள் இன்று அணிவித்துள்ளனர்.)

மாயாவதி மாநாட்டில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தேனீக்கள் கூட்டம் மேடைக்கு வந்து மாயாவதி தலைக்கு மேல் சுற்றியபடி வந்து தொல்லை கொடுத்தன.

அப்போது மாயாவதி தன்னை சுற்றி அரசியல் சதி நடக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட தொண்டர்கள் இந்த தேனீக்கள் கூட எதிர்க் கட்சிகள் கூறியதால்தான் மேடைக்கு வந்துள்ளன என்று பேசிக் கொண்டனர். இது எப்படி இருக்கு. எல்லாவற்றையும் அரசியல் செய்ய நாம ரெடியா இருக்கோம். இப்ப எப்படி இந்த தேனிக்கள் வந்தது என்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாயாவது. பரவாயில்லை IAS, IPS படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கு. முதலில் இந்த மாதிரி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

கதையல்ல நிஜம் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பித்துவிட்டது. லக்ஷ்மி வழக்கம் போல. அதில் கலைஞரை பார்க்க வேண்டும் என்று தன் கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொண்ட அந்த நோயாளியின் நிகழ்ச்சி நெகிழ்வாக இருந்தது. விஜய் டிவி என்பதால் இருக்கலாம். இதே கலைஞர் டிவியில் காண்பித்திருந்தால் திரைப்பட விழா போல தேனும் பாலும் ஓடியிருக்கும். நல்ல வேளை!

எதெதெற்கெல்லாமோ தடை வருகிறது. லண்டனில் வசிக்கும் ஒரு தம்பதியர் மீது வித்யாசமான தடையொன்று விதிக்கப்பட்டுள்ளது அந்த நாட்டு அரசு. பக்கத்து வீட்டு சிறுவன் தனது ஆசிரியையிடம் அளித்த புகாரால், அத்தம்பதியர் இரவு பத்து மணி முதல் காலை ஏழு மணி வரை தாம்பத்ய உறவில் ஈடுபட்த் தடை விதித்துள்ளது. இம்மாதிரியெல்லாம் கூட தடை விதிக்க முடியுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும், அத்தடையை எதிர்த்து அத்தம்பதியர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நம்மூரில் போலீசில் புகார் அளித்தாலே நடவடிக்கை வராது, இங்கிலாந்தில் ஆசிரியையிடம் அளித்த புகாருக்கு உடனடி நடவடிக்கை!! அதுவும் எதற்கு?? இத்தனைக்கும் அவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் கிடையாது. நம்ம ஊரில் தான் பழைய தம்பதிகளுக்கு விகடனில் டாக்டர் நாராயண ரெட்டி அட்வைஸ் தருகிறார். அங்கே எல்லாம் அந்த மாதிரி கிடையது போல..

இந்த ஜோக் எனக்கு ஒரு பிரபல வலைப்பதிவர் அனுப்பியிருந்தார்.

Before wedding...

He: I waited so long for this.

She: Do you want me to leave?

He: No, dont even think of it.

She: Did you love me?

He: Yes, I did, I'm doing and I'll do.

She: Did you ever cheat me?

He: I'll die than doing it.

She: Will you kiss me?

He: Surely, thats my pleasure.

She: Will you hurt me?

He: No way, I'm not such kind of person.

She: Can I trust you.

He: Yes

She: Oh, dear!

To know after wedding, read it from bottom to top.

அவருடைய அனுபவமாக கூட இருக்கலாம் யாருக்கு தெரியும்?

இந்த ஜோக்கை படித்தால்தான் சிரிப்பு வரும், பார்த்தால் சிரிப்பு வராது. ஆனால் கண்ணை பார் சிரிப்பு வரும், எப்படி என்று கேட்க கூடாது. குமுதம் ரிப்போர்ட்டரில் இரண்டு தொடர்களை திடீர் என்று நிறுத்தி விட்டார்கள். ஒன்று 'உ' என்று பா.ராகவன் எழுதும் தொடர், மற்றொன்று 'கண்ணை பார் சிரி' என்று சொக்கன் எழுதும் தொடர். What is common in them ? Common man wants to understand ! ஒரே குழப்பமா இருக்கு.


பாகிஸ்தான் அரசியல்தான் குழப்பம் என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் அதை விட குழப்பம். பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு கடந்த ஆறு மாத காலமாகவே அடுக்கடுக்கான படுதோல்விகள். ஷார்ஜாவில் நடைபெற்ற நியூசிலாந்திற்கெதிரான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியதையடுத்து அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் நீக்கப்பட்ட்தோடல்லாமல் அணியிலிருந்தும் கல்தா கொடுக்கப்பட்டார். பிறகு பொறுப்பு முகமது யூசூப்பிடம் அளிக்கப்பட்ட்து. பிறகு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 என அனைத்திலும் படுதோல்வி. அணியினரிடையே ஒற்றுமையில்லை என கேப்டன் முகமது யூசுப் வெளிப்படையாக்க் குற்றம் சாட்டியதையடுத்து அணியினர் ஒருவர் மீது ஒருவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். இப்பொழுது யூசூப், யூனிஸ் ஆகிய இருவருக்கும் காலவரையற்ற தடையும், அக்மல் சகோதர்ர்களுக்கு ஓராண்டு தடை மற்றும் 30 லட்சம் அபராதம் ஆகியவற்றை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் சூதாட்டப் புகார் வேறு பெரிதாக்க் கிளம்பியுள்ளது. ஆஸ்திரேலியத் தோல்விகள் அனைத்துமே சூதாட்ட்த்தால்தான் என குற்றச்சாட்டு வெடித்துள்ளதால் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? பாக்கிஸ்தான் அணிக்கு என்ன கவலை, அவர்களை சப்போர்ட் செய்ய தான் ஷாருக் கான் இருக்கிறாரே!


முன்னாள் ஆந்திர கவர்னர் என்.டி.திவாரியை அநேகமாக யாரும் மறந்திருக்க முடியாது. இவர் ஏற்கனவே ஒரு பெண்ணிடம் கள்ள உறவு கொண்டதன் மூலம் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாம். அக்குழந்தை நான் தான், இதனை சட்டப் பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ரோஹித் ஷர்மா என்ற 30 வயது நபர் தில்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 30 ஆண்டுகள் கடந்துவிட்டபடியால் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அது சரி, இப்படி ஒருவர் தனது தந்தை என்று கூறி ரோஹித் ஷர்மா ஏன் அசிங்கப்பட விரும்புகிறாரோ?


பி.ஜே.பி ராஜ்ய சபாவில் பெண்களுக்கு 33% சட்டத்தை சப்போர்ட் செய்துவிட்டது. பிறகு கட்சிக்காரர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை செய்ததில் நாம் சப்போர்ட் செய்தால் காங்கிரஸ் நல்ல பெயர் வாங்கிவிடும் என்று ஞானோதயம் பெற்று எப்படி 33% சட்டத்தை சமாளிக்கலாம் என்று யோசனையில் இருக்கிறதாம். இது ஒருபுறமிருக்க, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.கவின் ஆதரவின்றி இச்சட்ட்த்தை நிறைவேற்றியிருக்க முடிந்திருக்காது. ஆனால் காங்கிரஸ் மட்டுமே தனியாக நின்று இச்சட்ட்த்தை நிறைவேற்றியிருப்பதுபோல் அக்கட்சியினரும் அதன் அடிப்பொடிகளான சில வட இந்திய மீடியாக்களும் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. முன்னரே சமஸ்கிருத்த்தில் ஒரு பழமொழி ஒன்று இருக்கிறது....”பால நாயகம், பகு நாயகம், ஸ்த்ரீ நாயகம், அநாயகம் என்று; அதாவது சிறுவன் செய்யும் ஆட்சியும், கூட்டணி ஆட்சியும், பெண்கள் செய்யும் ஆட்சியும், நல்ல ஆட்சியாக இருக்காது என்று.


பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் இப்ப பெண்கள் பேயை பாட்டிலில் போட்டு வைத்துள்ளார்கள். செண்ட் பாட்டில் அளவு பாட்டிலில் நீல கலர் திரவத்தை ரொப்பி, அதில் பேய் சிறைப்பட்டிருக்கிறது என்று சொல்லி இரண்டு பாட்டிலை சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். இவை எல்லாம் தன் வீட்டில் பிடித்த பேய்களாம். ஒரு பேய்க்கு 90 வயசாம். எதற்கு வம்பு என்று இந்த பேய்கள் தானாகவே பாட்டிலில் உள்ளே போயிருக்கும். எவ்வளவு ஆண்கள் பாட்டில் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இப்ப வாங்கியவர்கள் சும்மா இல்லை, பாட்டிலை திறந்து பேய்களுக்கு விடுதலை தரலாமா, இல்லை பாட்டிலை புதைக்கலாமா என்று ஆலோசனை செய்கிறார்கள். எது எப்படியோ நல்ல பிசினஸ்.


பெண்கள் என்று சொன்னவுடன் தான் நினைவுக்கு வருது. நாகர்கோயில் பெண்கள் எல்லாம் புடவை கட்ட தெரிந்தவர்கள் என்று நடிகை சோனாவிற்கு ஒரு அற்புத ஞானோதயம் இப்பொழுது பிறந்திருக்கிறது. இனி புடவைதான் கட்டப் போகிறாராம். அம்மணிக்கு புடவை கட்ட தெரியுமா என்று கேட்டவுடன் கோபமாக "நாகர்கோயில் பொண்ணுக்கு புடவை கட்ட தெரியாதா ?" என்று கேட்டிருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன ? நாகர்கோயிலுக்கு பெண்களால் இப்படி கூட ஒரு பெருமை இருக்கு.பெண்களுக்கு சிகப்பு கலர் பிடிக்குமா என்று தெரியாது. ஆனால் மம்தா ரயில் நிலையங்களில் இருக்கும் சிகப்பு நிறத்தை அகற்றுவதற்காக திட்டமிட்டுள்ளார். ஏன் இவருக்கு சிகப்பு கலர் என்றால் இத்தனை அலர்ஜி?? கட்சிதான் விரோதிகள் என்றால் அவர்களுடைய கலர் கூடவா? டெல்லி செங்கோட்டை நிறத்தையும் ரயில்வே சிக்னல் நிறத்தையும் மாற்றாமல் இருந்தால் நல்லது. பெண்கள் முடிவு செய்தால் அதற்கு அப்பீல் ஏது?ஆனால் பெண்கள் சுயேச்சையாக முடிவெடுக்கத் தெரியாது என்று லாலு சொல்லியுள்ளார். "நான் என் மனைவியை கூப்பிட்டு இப்படிதான் ஓட்டு போட வேண்டும்" என்று சொன்னால் அவர் மாற்றி ஓட்டு போட மாட்டார் என்று அடித்து சொல்லியுள்ளார். லாலுவை பார்த்தால் பாவமா இருக்கு.காதில் வந்து விழுந்த செய்தி ஒன்று இருக்கு புதிய சட்டமன்றம் திறப்பு விழாவுக்கு பாதுகாப்பு செலவு மட்டும் 24 கோடியாம். நம்பும்படியாக இல்லை ஆனால் அபப்டி இருந்தால் சட்டசபை கட்டிட செலவில் 10% இந்த செலவு. நம்ம பணம் எப்படி எல்லாம் வீணாகிறது என்று பாருங்கள். தொப்பி போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் 2கோடி ரூபாய் செலவில் நமக்கு எல்லாம் சேர்ந்த்து தோட்டா தரணி மூலம் பெரிய தொப்பியாக போட்டிருக்கிறார்கள். நம்ம தொகுதி எம்.எல்.ஏ தண்ணி வரலை, லைட் வரலை என்றால் இவ்வளவு செலவு செய்வாங்களா ?


எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த தகவல் உரிமை சட்டத்தில் "எங்க தொகுதி எம்.எல்.ஏ யாரு?" என்று அறிய மனு கொடுக்கலாமா ?


பதிலை எதிர்ப்பார்க்கும்,

இட்லிவடை

20 Comments:

Anonymous said...

naanthan firstu!!!!!

Anonymous said...

தொகுதிக்கு வழி தெரியாமல் தவிக்கும்
எம் எல் எ களுக்கு
வழிகாட்ட தனி வாரியம்
விரைவில் அறிவிப்பு வரும்

Anonymous said...

இந்த தகவல் உரிமை சட்டத்தில் "இட்லி வடை யாரு?" என்று அறிய மனு கொடுக்கலாமா?

Anonymous said...

இந்த பேய் கூத்து எங்கு நடந்தது?

Vikram said...

Isn't it the same mayawathi who,some days back,threw up her hands saying there are not enough funds in the State to compensate the victims of a temple stampede?

//புதிய சட்டமன்றம் திறப்பு விழாவுக்கு பாதுகாப்பு செலவு மட்டும் 24 கோடியாம். நம்பும்படியாக இல்லை ஆனால் அபப்டி இருந்தால் சட்டசபை கட்டிட செலவில் 10% இந்த செலவு. நம்ம பணம் எப்படி எல்லாம் வீணாகிறது என்று பாருங்கள். தொப்பி போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் 2கோடி ரூபாய் செலவில் நமக்கு எல்லாம் சேர்ந்த்து தோட்டா தரணி மூலம் பெரிய தொப்பியாக போட்டிருக்கிறார்கள். நம்ம தொகுதி எம்.எல்.ஏ தண்ணி வரலை, லைட் வரலை என்றால் இவ்வளவு செலவு செய்வாங்களா ?
//

I think this nation has gone to a stage beyond repair.

varuthatudan :-(

Vikram..

jaisankar jaganathan said...

// எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாலான மாலை.//

மாயாவதிய வுட்டுட்டு மாலைய மட்டும் கடத்த முடியுமா.

kggouthaman said...

நல்லா கிட்டக்கப் போயி பாருங்கப்பா - எல்லாம் நம்ம ஊரு 'எம் ஜி யார் ' படம் போட்ட நோட்டுங்களா இருக்கப் போகுது!

Anonymous said...

//இம்மாதிரியெல்லாம் கூட தடை விதிக்க முடியுமா எனத் தெரியவில்//

Long ago, couples in that nation had to take the permission of the King to engage in sexual activity. When the permission was granted, they put a board outside their bedroom stating
'Fornication Under Consent of the King' Thats how the 'F' word came about.

-Ram

Not Good said...

Sucks

Han!F R!fay said...

\\எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த தகவல் உரிமை சட்டத்தில் "எங்க தொகுதி எம்.எல்.ஏ யாரு?" என்று அறிய மனு கொடுக்கலாமா ?\\


உந்த பினிஷிங் டச் ரொம்ப புடுச்சுபோசுங்க.....பிராது குடுத்து தான் பாக்கறது....

Baski said...

//சில 2 கோடி என்கிறார்கள், சிலர் 5 கோடி என்கிறார்கள். கலைஞர் தொலைக்காட்சியில் 20 கோடி என்றார்கள். //
சில கேள்விகள்.

இவை யாவும் எந்த திட்டத்தில் சுட்ட பணமோ?
இதை கட்டியவனுக்கு எவ்வுளவு கூலி கொடுத்திருப்பார்கள்?
இந்த பணத்தை எப்படி இந்த திருட்டு கும்பலிடம் (அரசியல்வாதிகள்) காப்பாற்றி மேடை வரைக்கும் கொண்டு வந்தது? சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுற கும்பலாச்சே?
இந்த மாலை இப்போ எங்கே இருக்கு?
இந்த மாலையை செய்யும்/கொண்டு வரும் போது கவனத்தில் கொள்ளப்பட்ட பாதுகாப்பு எப்படி?

//இந்த மாலையை கட்சி தொண்டர்களிடம் வசூலித்து போட்டார்கள் என்று சொன்னார்கள். //

சில கேள்விகள்....

நம்ம ஐ.டி துறையை வைத்து காமடி கீமடி பண்ணலீயே?

மாயாவதிக்கு பின்னாடி கூலிங் கிளாஸ் போட்டு நிற்பவர் யார்? (அவர் தான் "அந்த தொண்டரோ?").

பொதுவாக பிரபலங்கள் தங்களுக்கு அணிவிக்கும் மாலை, சால்வைகளை பொதுமக்களுக்கு அங்கேயே கொடுத்துவிடுவது உண்டு. அம்மையார் மாலையை அப்படியே மக்களுக்கு தூக்கி போடுவார்களா ?

1-Anony said...

No need for RTI. Full updated list is available.

http://www.assembly.tn.gov.in/rep_const_no.asp

Question can be: whether the person is mentally fit and still remembers his constituency? There could be some Narco analysis done!

Anonymous said...

மாயவதி மாலையை மதுரை பினபற்றிடலாம். ஜூன் மாதம் வேறு வருகிறது. பயமாக இருக்கிறது.....

R.Gopi said...

புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டமன்ற கட்டிடத்திற்கு ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியை வைத்து 2 கோடி செலவில் டம்மி குல்லா போட்ட அகில உலக டகால்டிகள் சங்க தானை தலைவர்“தல” வாழ்க..........

Anonymous said...

இது இன்னா பிசாத்து எங்க கலீன்னர் எடைக்கு எடை துட்டு பார்தவருப்பா சும்மா படங் கட்டாதீங்கப்பா

Anonymous said...

//எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த தகவல் உரிமை சட்டத்தில் "எங்க தொகுதி எம்.எல்.ஏ யாரு?" என்று அறிய மனு கொடுக்கலாமா ?//

நன்று

jaisankar jaganathan said...

//இது இன்னா பிசாத்து எங்க கலீன்னர் எடைக்கு எடை துட்டு பார்தவருப்பா சும்மா படங் கட்டாதீங்கப்பா
/

மாயாவதிக்கும் ஜெயலலிதாக்கும் அடுத்து தான் கலைஞர் வரார். அத தெரிஞ்சுக்க அனானி

James Arputha Raj said...

I agree with rest of your post except these parts.

//அதாவது சிறுவன் செய்யும் ஆட்சியும், கூட்டணி ஆட்சியும், பெண்கள் செய்யும் ஆட்சியும், நல்ல ஆட்சியாக இருக்காது என்று.

This is such short-minded view about women and I didn't expected it from you :(

//பாக்கிஸ்தான் அணிக்கு என்ன கவலை, அவர்களை சப்போர்ட் செய்ய தான் ஷாருக் கான் இருக்கிறாரே!

This is so uncalled for!! why this has anything to do with sharukh?? now you are talking like Bal Thakery...

I still think you are open-minded person... don't disappoint us.

IdlyVadai said...

//James Arputha Raj //

அது நகைச்சுவை/நக்கல் வேற எந்த உள் அர்த்தமும் அதற்கு இல்லை.

ஜீயார் said...

இது உங்களுக்கு James Arputha Raj


...This is such short-minded view about women and I didn't expected it from you...

இது வரை பெண்களால் நடத்தப்பட்ட ஆட்சியில் பல பழிவாங்கல் நடவடிக்கைகள் நடந்துள்ளன. பரமசிவன் கழுத்து பாம்புகளாகவே பெண்கள் ஆட்சி செய்துள்ளனர். ஒட்டு மொத்த இந்தியா அரசியலையே இந்திராகாந்தி சிறைக்குள் கொண்டு வரவில்லையா? முதல் முறை ஆட்சிக்கு வந்த ஜெ ஆடிய ஆட்டங்கள் நினைவிற்கு வரவில்லையா? கட்சியினர் அனைவரையும் தன் காலில் விழவைத்து ரசிக்கும் அவரது எண்ணம் புரியலையா? மாயாவதி யின் அத்துமீறல்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இவர்கள் போல் ஆடம்பரப்பிரியையாக இல்லை என்றாலும் பிடிவாதத்தில் தான் பெண் என்று நிறுபிக்கும் மம்தா பானர்ஜியை பார்த்தும் எங்களால் பெண்களின் அரசியலை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. 1,2க்கே இப்படினா 33சதம் வந்தா என்ன பண்ணவோ?

இது உங்களுக்கு

இவ

சாருக் என்ன பண்ணினார்? பாகிஸ்தான் வீரர்களுக்கு சப்போர்ட் பண்ணினார். எதுக்கு பண்ணினார். அவங்க சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கா? கிரிக்கெட் விளையாடத்தானே? திறமை எங்கே இருந்தாலும் அதை பாராட்டணும். உதாரணம் சொகைல் தன்வீர் இருந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் ஐபிஎல் ல் ஜெயித்தது. இரண்டில் தோற்றதற்கும் இப்போ கடைசி இடம் வாங்கபோறதற்கும் அதுதான் காரணம். மைன்ட் இட்