இன்று 100வது சர்வதேச மகளிர் தினம்.
மகளிர் தினம் என்றால் என்ன ?
எப்படி காதலர் தினம் இந்தியாவிற்குள் வந்ததோ, எப்படி வடக்கே இருந்த பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம் தெற்கு பக்கம் வந்ததோ அதே போல தான் இந்த மகளிர் தினமும் சில ஆண்டுகளாக இந்தியாவில் களை கட்டியுள்ளன. Lux, Fair & Lovely, Garnier போன்ற நிறுவனங்களுக்கு நன்றி. இந்த 'தினங்கள்' எல்லாம் வெறும் வியாபாரமே ! சரி,
நாம் மகளிர் தினத்தை எப்படி கொண்டாடுகிறோம் ?
1. கீழே உள்ளது போல பெண்கள் ஆட்டோ ஓட்டும் படம், பெட்ரோல் போடும் படம் என்று செய்திதாள்களில் படம் போட்டு சில டப்பா செய்திகளை போடுகிறோம். இதில் சொல்லும் உண்மை என்ன ? மகளிர் ஆண்களுக்கு சமமாக எதையும் செய்கிறார்கள் என்று சொல்லுகிறோம் (விக்ரம் படத்தில் வரும் ஜோக் தான் நினைவுக்கு வருகிறது). இதை விட நல்ல வேலைகளை செய்யும் பெண்களை ஏன் அவர்கள் காண்பிக்க மறுக்கிறார்கள். இன்றும் என்ஜினியரிங் காலேஜில் மெகனிக்கல் பிரிவை எடுப்பதில் பெண்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது தான் உண்மை. சில வேலைகளை ஆண்கள் செய்வது தான் சரி, எப்படி நர்சிங் தொழில் ஆண்களுக்கு சரி வராதோ அதே மாதிரி.
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்ற எதிர்ப்பு தெரிவித்து வந்த இடையூறுகளை தாண்டி பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனைப்படைக்கிறார்கள் என்று நான் காட்டும் படங்களை பாருங்கள்.



2. இன்று மட்டும் பெண்கள் பிரியங்கா சோப்ரா போல ஸ்கூட்டி ஓட்ட வேண்டும்.
இன்று வரும் விளம்பரங்களை பாருங்க. பெண்கள் ஸ்கூட்டி ஓட்ட வேண்டும். பல மேக்கப் சமாசாரங்களை உபயோகித்து பளிச் என்று தெரிய வேண்டும். நாளையிலிருந்து டைடு, ரின் எது விலை கம்மியோ அதை உபயோகித்து துணி துவைக்க வேண்டும். என்றாவது சலவை சோப்பு விளம்பரத்தில் ஆண்கள் வந்துள்ளார்களா ? பெண்கள் யோசிக்க வேண்டும்.
3. இன்றைய ஸ்பெஷல் செய்திகள் சில
* சர்வதேச மகளிர் தினத்தில் முழுவதும் மகளிரே இயக்கும் விமானம் மும்பை-அமெரிக்காவுக்கு 14 மணி நேர தொடர் பயணம். இதற்கு இந்த ரிஸ்க் இதனால் யாருக்கு என்ன லாபம் ?
* மகளிர் திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடி வாழ்த்துச்செய்தியில் கருணாநிதி பெருமிதம். டாஸ்மார்க் போன்ற திட்டங்களால் எவ்வளவு பெண்கள் வீட்டில் அழுகிறார்கள் என்று யாராவது கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
* மகளிர் மசோதா என்று அரசியல் செய்வது. நம் நாட்டில் எவ்வளாவு மகளிர் லோக்சபாவிற்கு செல்கிறார்கள் என்ற புள்ளி விவரம். உண்மை புரிந்தால் சரி.
* தலைவர்களின் மகளிர் தின வாழ்த்து. இப்படி கூட ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆனால் அதற்கு கீழே நித்தியானந்தாவுடன் மற்ற நடிகைகள் என்ற செய்தி. பெண்களை எவ்வளவு கொச்சை படுத்த முடியுமோ அவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள்.
4. மகளிர் தினம் என்றால் என்ன ?
1908 - மார்ச் 8. நியூயார்க் நகரின் பஞ்சாலைகள் அனைத்தும் சினிமாவில் ஃபிரீஸ் செய்ததுமாதிரி அன்று நின்று போயின. அவற்றில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.
"ஆண்கள் சமமாக பெண்களுக்கும் சம்பளம் கொடு!"
"எட்டுமணி நேரம் மட்டும் வேலை செய்வோம்!" என்று கோரிக்கை வைத்து வெற்றியும் பெற்றனர்!"
கிளாரா ஜெட்கின், ரோஸா லக்ஸம்பர்க் ஆகியோரின் பெருமுயர்ச்சியால் 1910 ஆண்டு கோபன்ஹேகனின் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு கூட்டப்பட்டபோது அந்த மார்ச் 8ஐ சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்ட முடிவெடுக்கப்பட்டது.
"வாட் ? உழைக்கும் பெண்கள் தினமா ? நோ நோ" என்று மறுத்துவிட்டது அமெரிக்கா.
பிறகு 1945ல் ஐ.நா. சபை அமைக்கபட்டபோது அக்கோரிக்கையை அமெரிக்கா தடுத்துவிட்டது. எனினும் 1975 "உழைக்கும்" என்பதை எடுத்துவிட்டு வெறும் மகளிர் தினமாக வைத்தால் ஓ.கே என்று அமெரிக்கா ஒப்புக்கொள்ள ஒருவழியாக மார்ச்-8 மகளிர் தினமானது.
( என் பழைய பதிவிலிருந்து )
பெண் - எனும்
பதம் ...
இரண்டே
இரண்டு எழுத்து;
அதை ஏத்தி -
அப்புறம் ஏத்து ...
( கவிஞர் வாலி )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, March 08, 2010
100வது சர்வதேச மகளிர் தினம்
Posted by IdlyVadai at 3/08/2010 12:33:00 AM
Labels: செய்திவிமர்சனம், வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










18 Comments:
மகளிர் திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடி வாழ்த்துச்செய்தியில் கருணாநிதி பெருமிதம். டாஸ்மார்க் போன்ற திட்டங்களால் எவ்வளவு பெண்கள் வீட்டில் அழுகிறார்கள் என்று யாராவது கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
மிகவும் பொருத்தமான வார்த்தை.
வி. ஸ்ரீகுமார்...................
மஞ்சள் கமென்ட் பச்சை மாதிரி தெரியுது.
ஆனா பச்சை இல்லை , என் சிற்றறிவுக்கு எட்டலை.
குறளுக்கு மு.க. எழுதினா மாதிரி இதுக்கும் யாரவது உரை எழுதினா தேவலை
Very Good One IV...
அட, (உழைக்கும்)
மகளிர் தினத்துக்கு பின்னால இப்படி ஒரு கதை இருக்கா, தகவலுக்கு நன்றி.
//என்றாவது சலவை சோப்பு விளம்பரத்தில் ஆண்கள் வந்துள்ளார்களா ? பெண்கள் யோசிக்க வேண்டும்.//
இதை....இதைத்தான் நானும் கேட்டிருக்கேன்,என் வலைப்பூவைப் பாருங்கள்.
சலவை சோப்பு சலவைப் பவுடர் விளம்பரங்களில் ஆண்களைப் பார்த்ததில்லை. ஆனால் வீட்டுக்கொரு வாஷிங் மெஷின் உள்ளதால், யாரும் இதைப் பற்றிக் கவலையும் படவில்லை. ஆனால், பாத்திரம் கழுவப் பயன்படும் சோப்பு - (கரையவே கரையாது) டிராப்பு - (ஒரு துளி போதும்) விளம்பரங்களில் - ஆண்கள்தான் அதிகம் காணப் படுகிறார்கள்.
ஆஹா... இந்த பதிவுலேயும் மு.க. தனமான சண்டைகள் ஏன்?
மகளிர் தின வாழ்த்துக்கள்...
//பெண் - எனும்
பதம் ...
இரண்டே
இரண்டு எழுத்து;
அதை ஏத்தி -
அப்புறம் ஏத்து ...
( கவிஞர் வாலி )//
நம்ம வாலி என்னாவோ சொல்ல வர்றாருன்னு தெரியுது... ஆனா, என்ன சொல்றார்னு தெரியலியே..
ரிஷபன் சொன்ன மாதிரி மு.க.அவர்கள் கிட்டவே கேட்டு பார்ப்போம்...
சரிண்ணே,
//முழுவதும் மகளிரே இயக்கும் விமானம் மும்பை-அமெரிக்காவுக்கு 14 மணி நேர தொடர் பயணம். இதற்கு இந்த ரிஸ்க் இதனால் யாருக்கு என்ன லாபம் ?//
எதுக்கு ரிஸ்க்குனு கேக்குறதுல இருந்தே நீங்க அவங்க மேல வச்சிருக்குற நம்பிக்கை தெரியுது.. அதுல யாரு அமைச்சர்களும், பிரதமருமா போறாங்க.. யாரோ அமெரிக்காவுக்கு பஞ்சம் பொளைக்கப்போறவங்கதான? ஏதாச்சும் நடந்தா அனுதாபம் தெரிவிச்சுக்கலாம், மகளிர் மசோதாவ இன்னும் 10 வருஷத்துக்கு தள்ளிப்போட்டுக்கலாம்.. அப்படினு நெனச்சிருப்பாய்ங்களோ?
//Adhai eaththii appuram adhai eaththu//
Height arrogance, giving an impression that Females are only objects of pleasure (for m...s.
//சலவை சோப்பு சலவைப் பவுடர் விளம்பரங்களில் ஆண்களைப் பார்த்ததில்லை. ஆனால் வீட்டுக்கொரு வாஷிங் மெஷின் உள்ளதால், யாரும் இதைப் பற்றிக் கவலையும் படவில்லை. ஆனால், பாத்திரம் கழுவப் பயன்படும் சோப்பு - (கரையவே கரையாது) டிராப்பு - (ஒரு துளி போதும்) விளம்பரங்களில் - ஆண்கள்தான் அதிகம் காணப் படுகிறார்கள்.
//
இப்ப எல்லாம் துணி துவைக்கிறது ஆண்கள் வேலை தல
" இதற்கு இந்த ரிஸ்க் இதனால் யாருக்கு என்ன லாபம் ? "
இதில் என்ன ரிஸ்க் .. ??!!
என்னை பொறுத்த வரை மகளிர் தினமே தேவை அற்றது..அதும் இந்தியர்கள் ஆகிய நமக்கு இது முற்றிலும் தேவை அற்றது..மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு நாம் ஒன்றும் அவர்களை பிரித்து வைத்து விடவில்லை.மகளிரின் பெருமையை எடுத்து சொல்ல அன்னையர் தினம் ஒன்றே போதுமானது.அதை நாம் சரியாக கொண்டாடினால் போதுமானது.இந்த மாதிரி பெயரவில் கொண்டடுவதற்கு பதில் அவர்களுக்கு சமுகத்தில் என்ன என்ன தேவை என்று பார்த்து அதை சரி செய்தாலே போதுமானது.
அப்புறம் கொலம்பஸ் டே, ப்ரெசிடென்ட்ஸ டே எல்லாம் எப்போ கொண்டாட ஆரம்பிக்கப்போறோம்?
மிக பெரிய சதி----- லல்லுவும் முலாயமும் மன்மோஹனுடன் இணைந்து நடத்தும் மோசடி அம்பலம் -பார்க்க இன்றிய தினமணி
ராஜ்யசபா மீண்டும் கூடுவதற்கு முன்பு ராஜ்யசபா ஊழியர்களும், பாதுகாவலர்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதாவது உறுப்பினர்களின் டேபிள் மீது உள்ள அசையும் பொருட்களான டேபிள் வெயிட் உள்ளிட்டவற்றை அகற்றினர். அதேபோல எலக்ட்ரானிக் கடிகாரங்களும் அகற்றப்பட்டன. உறுப்பினர்கள் வீசி எறி்ந்து ரகளையில் ஈடுபட்டு விடாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியை நேற்று உறுப்பினர்கள் குறி வைத்ததால், அவரது இருக்கைக்கு அருகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உறுப்பினர் யாரும் அவரது டேபிளை நெருங்கி விடாத வகையில் பாதுகாவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது.
இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.
இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?
Source: Dinamani
உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.
இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?
இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.
இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.
இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?
அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?
அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
Post a Comment