பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 05, 2010

The Proposal ( 2009) - விமர்சனம்

புத்தகங்களை பிரசுரிக்கும் ஒரு நிறுவனத்தில் மார்கரெட் டெட் (சாண்ட்ரா புல்லக்) நுழைந்த உடன் அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே மார்கரெட் மீதான நமது அபிப்ராயத்தை உருவாக்கி விடுகிறார் இயக்குனர். அதன் பின்னர் அவர் செய்யும் அழிச்சாட்டியங்களை எல்லாம் எவ்வளவு லாஜிக் ஓட்டையாக இருப்பினும் நம்மால் எளிதாக ஜீரனிக்க முடிகிறது.

மார்கெரெட்டின் உதவியாளராக எந்தவித ரெகக்னிஷனோ அல்லது மரியாதையோ இன்றி வேலைசெய்து வரும் ப்ரையான் ( ஆண்ட்ரூ பாக்ஸ்டன்), இவர்கள் இருவரைச் சுற்றிச் சுழலும் கதை.

மார்கரெட்டுக்கும், பிரையானுக்குமிடையில் ஏற்படும் திடீர் திருமண ஒப்பந்தம் மற்றும் அதற்கு கைமாறாக எடிட்டர் பிரமோஷன் என ஆரம்பிக்கும் இவர்களது தொடர்ச்சியான சரவெடி சிரிப்புத் தொடரில் படம் ஓடுவதே தெரிவதில்லை.

மார்கரெட் ஒரு கனடியப் பெண், விசா காலாவதியானதால் அமெரிக்காவை விட்டு வெளியேற்றம் செய்யப்படவேண்டும். அதைத் தவிர்க்க அவளது கையில் இருக்கும் ஒரே வழி தனது அமெரிக்க உதவியாளனை மணம் செய்வதுதான். எனவே இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகின்றனர். மார்கரெட்டை, ப்ரையான் திருமணம் செய்து கொள்வது, அதற்குக் கைமாறாக ப்ரையானுக்கு பிரமோஷனும், அவனது புத்தகத்தை அவளது பதிப்பகத்திலேயே வெளியிடுவதும்.

எனவே இருவரும் திருமணம் செய்துகொள்வது குறித்து அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளுக்குச் சொல்ல வேண்டுமென்பதால் அதைக் குறித்து பதிவு செய்கிறார்கள்.

அமெரிக்க சட்டதிட்டங்களைன் படி அவர்கள் உண்மையிலேயே காதலிக்கிறார்களா, அவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா என்பதை கவனிக்க ஒரு அதிகாரி சோதிக்க வருகிறார். அதிகாரிக்கு அவர்கள் சொல்வது உண்மைதானா என்பதில் பலத்த சந்தேகம்.

ப்ரையானின் குடும்பத்தில் அனைவருக்கும் மார்கரெட்டைத் தெரியும் என்பதும், ப்ரையான் உண்மையில் காதலிக்கிறான் மற்றும் அவளது விறுப்பு வெறுப்புகள் குறித்து அவனுக்கும், அவனது விறுப்பு வெறுப்புகள் குறித்து ப்ரையானுக்கும் தெரிந்திருக்கிறதா என்ற சோதனைசெய்ய வருகிறார்.

சோதிக்க வரும் போலிஸுக்கு, ப்ரையானது பாட்டியின் 90வது பிறந்தநாளுக்கு வார இறுதியில் இவர்கள் இருவரும் செல்வதாகவும், அங்கு வந்து குடியேற்ற அதிகாரி சந்திப்பதாகவும் ஏற்பாடு.

ப்ரையானின் வீடு அலாஸ்காவில் சிட்கா என்ற இடத்தில் இருக்கிறது. அங்கு சென்றபின்னர் மார்கெரெட்டுக்கு ப்ரையான் ஒரு பணக்காரன் என்பதும், மிகப்பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வருகிறது. ப்ரையானின் குடும்பத்தால் அன்புடன் வரவேற்கப்படுகிறாள் மார்கரெட்.

ப்ரையானின் அப்பாவிற்கு மகன் தனது வியாபாரத்தைக் கவனிக்க வேண்டும் என்பது ஆசை, அதைச் செய்யாமல் இப்படி நியூயார்க்கில் சம்பளத்திற்கு வேலை செய்வது குறித்து கோபம். தாயாருக்கோ, எப்படியோ மகன் மகிழ்ச்சியாய் இருந்தால் போதும்..

அப்பா மற்றும் மகனின் உரசல்கள்.., ப்ரையானின் முன்னாள் காதலி... ரியானின் அம்மா, பாட்டி மற்றும் அவர்களது அன்பு..அந்த வீட்டின் அழகான சூழ்நிலை..என எல்லாவற்றையும் மிக அழகாக செய்திருக்கின்றனர்.

அலாஸ்கா அருகிலிருக்கும் அவர்கள் ஊருக்கு ப்ரையானின் குடும்பப் படகில்தான் செல்கிறார்கள்..

அந்த சிட்கா என்ற கிராமமோ ரம்மியமோ ரம்மியம், அழகோ அழகு..

ப்ரையானின் குடும்பம் மார்கெரெட்டிடம் நடந்து கொள்ளும் விதம், மற்றும் ப்ரையானின் குடும்ப வியாபாரங்கள் நடக்குமிடங்கள் என அவனது பணக்காரத் தனத்தைச் சில காட்சிகளில் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட அந்த கடைவீதி முழுதும் அவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறது.


அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதைத் தவிர்ப்பதற்காக காதலிப்பதுபோல நாடகமாடும் மார்காரெட், ப்ரையானின் குடும்பத்தினரால் வசீகரிக்கப்பட்டு அவளது குணம் மாறுவதும், அவர்கள் குடும்ப வழக்கப்படி பிரையானை திருமனம் செய்துகொள்ள கேட்டு,பின்னர் அது நடக்க இருக்கும் சமயத்தில் வரும் விசாரனை அதிகாரியைப் பார்த்த உடன் தனது உண்மையான கதையை எல்லோர் முன்னிலையிலும் சொல்லிவிட்டு நாடுகடத்தப்படுவதற்காக போலிஸுடன் செல்வதும், அதன் தொடர்ச்சியாக ப்ரையானின் பாட்டிக்கு மார்கெரெட்டைத் திருமணம் செய்துவைப்பதற்காக போடும் சிறு நாடகங்களும், இறுதியில் இருவரும் இனைவதும்தான் கதை..

பூவேலி படத்தில் மனோரமா ஆச்சி, கார்த்திக் மற்றும் கவுசல்யாவைத் தனியாக சந்தித்துப் பெசுவதற்காக நெஞ்சுவலி நாடகம் ஆடும். அதேபோன்றதொரு காட்சி கிளைமாக்ஸில் வரும். தமிழ்ப் படத்திலிருந்து, ஆங்கிலத்திற்குப் போன காட்சியாக இது இருக்கும்.

நல்ல திரைக்கதைக்காகவும், அழகான லொக்கேஷன்களுக்காகவும், நகைச்சுவைக்காகவும், சாண்ட்ரா புல்லக்கின் அழகுக்காகவும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.

23 Comments:

மகா said...

thanks for the nice review.....

சீனு said...

கண்டிப்பா பாத்து தொலைக்கிறேன்.

அது சரி! அது என்ன லேபிள்ல "ஜெய் அனுமன்"?

VELAN said...

இது அருமையான திரைப்படம். நான் ரசித்து பார்த்தேன். எனக்கு ஒரு நல்ல காமெடி தமிழ்ப்படம் பார்த்த திருப்தி.

VELAN said...

இது அருமையான திரைப்படம். நான் ரசித்து பார்த்தேன். எனக்கு ஒரு நல்ல காமெடி தமிழ்ப்படம் பார்த்த திருப்தி.

Anonymous said...

Nalathamayanthi is also similar story line right?

jaisankar jaganathan said...

//Nalathamayanthi is also similar story line right?
//
தமிழ் படத்த பாத்து காப்பி அடிக்கிறாங்க.

Anonymous said...

// சாண்ட்ரா புல்லக்கின் அழகுக்காகவும் //

ஸ்ஸப்பா.. முடியல...

kggouthaman said...

ஆமாம் ஆமாம் நளதமயந்தி கதைதான். அப்போ எல்லாத்துக்குமே மூல கதை வேறு ஏதாவது ஒன்றோ?

subamgurunathan said...

i saw this movie in lufthansa lH759 last oct and i enjoyed it a lot, simply it is a english version of NALATHAMAYANTHI.

sreeja said...

இவ, சிரமம் பாராமல் ஒரு உதவி செய்ய வேண்டும்.

இந்த திரைபடம் வெளியான ஆண்டு மற்றும் நளதமயந்தி வெளியான ஆண்டு ஆகியவைகளை யாரிடமாவது கேட்டு குறிப்பிடவும்.

Inaya Subbudu said...

இட்லிவடை ஒரு பெண்ணா?
இந்தமாதிரி படங்கள் எல்லாம் அமெரிக்காவில் “chick flick" என்றழைக்கப்படுகிறது.

Anonymous said...

Sreeja,

as per imdb, proposal came out in 2009 ... we know lala came before ...

Bala said...

இட்லி தாத்தா

அது ரின் ரெய்நோல்ட்ஸ் Ryan Reynolds
ஆண்ட்ரூ பாக்ஸ்டன் அல்ல

டிக்கெட் வாங்கி படம் பாரு தாத்தா

kailash,hyderabad said...

ஹிந்தி படம்
Dostana (2008)ஹ்ர்த்திக் ரோஷன், அபிஷேக் நடித்ததில் இதுபோல் காட்சிகள் வருகின்றன.குடியுரிமை பிரச்சினை ,திருமணம் செய்ய முடிவெடுப்பது, ஆபிசர்செக்கிங் வருவதுஆகியவை.
என்ன, இருவரும் ஆண்கள். gay திருமணத்திற்காக விண்ணப்பிபார்கள்.ஆகா, எல்லாமே காப்பியா ?

Akash said...

@kggouthaman: எங்க‌ ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌ம் த‌மிழ்'ல‌ வெளியாக‌வே கூடாதா என்ன‌,

Anonymous said...

""Nalathamayanthi is also similar story line right?""

If iam not wrong one srilankan tamil guy is the villan.(in the story!?) Am i right?

ஜெய் ஹனுமான் said...

//// சாண்ட்ரா புல்லக்கின் அழகுக்காகவும் //

ஸ்ஸப்பா.. முடியல...//

படம் பாத்துட்டுச் சொல்லுங்கப்பூ..

Akash said...

Dostana 'la Rithik roshana... sir athu John Abraham !!

ஜெயக்குமார் said...

//Anonymous Bala said...

இட்லி தாத்தா

அது ரின் ரெய்நோல்ட்ஸ் Ryan Reynolds
ஆண்ட்ரூ பாக்ஸ்டன் அல்ல

டிக்கெட் வாங்கி படம் பாரு தாத்தா//

ஆமாம், நீங்கள் சொன்னது சரிதான். Ryan Reynolds, தான் அவரது பெயர். ஆண்ட்ரு பாக்ஸ்டன் படத்தில் அவரது பெயர்.

Anonymous said...

/*""Nalathamayanthi is also similar story line right?""

If iam not wrong one srilankan tamil guy is the villan.(in the story!?) Am i right? */

I only remember heroin is sirlankan tamilian ;)

R.Gopi said...

அசலும் நகலும் :

****************

1) Mrs. Doubtfire (1993, Robin Williams) - AVVAI SHANMUGI
2) Green Card (1990, Andie McDowell, Gerard Depardieu) – NALA DHAMAYANDHI
3) Very Bad Things (1998) – PANJA THANTHIRAM
4) What about Bob (1991, Bill Murray, Richard Dreyfuss) - TENALI
5) She-Devil (1989, Meryl Streep, Roseanne) – SATHI LEELAVATHI
6) Nine to Five (1980, Jane Fonda, Dolly Parton) – MAGALIR MATTUM
7) To Sir With Love (1967, Sidny Poitier) - NAMMAVAR
8) Planes, Trains & Automobiles (1987, Steve Martin, John Candy) - ANBE SIVAM
9) Memories of Murder (Korean Movie) – VETTAIYADU VILAIYADU

வற்றாயிருப்பு சுந்தர் said...

ரொம்ப தட்டையான விமர்சனம் இது. படத்தை இன்னொரு முறை பாத்துட்டு எழுதுங்கப்பா! வழக்கமான காதல், க்ளைமேக்ஸ்தான் என்றாலும் படத்தில் ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலதைக் கோடிட்டுக் காட்டியிருக்கலாம்!

Anonymous said...

R.Gopi, kalakareenga....