பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 27, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - FIR

முன்குறிப்பு: இட்லிவடை, 'முப்பது நாட்களில்' புத்தகம் எதுவும் படிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், உடனே எழுதி அனுப்புகிறேன். (எவ்வளவு அடிச்சாலும்...நான் ரொம்ப நல்லவ!!!)

Jsri, நான் இட்லிவடை மாதிரி எல்லாம் இல்லை, உண்மையில் படம் பார்த்து விட்டு தான் எழுதுகிறேன். அப்புறம் இந்த படத்தில் டப்பிங் மிக அருமை.

முக்கிய குறிப்பு:
"காதல், கவிதை போன்ற வாத்தைகளை கேட்ட மாத்திரத்தில் "...ஐயோ சாமி ஆள விடுங்க" என்று ஓடுபவர்கள், இந்த படத்தை வெறுக்க கூடும்.

அதையும் விட முக்கியமாக வயசானவர்களுக்கும் இந்த படம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

கதை: 'விண்ணை தாண்டி வருவாயா' என்ற தலைப்பையும், "ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன், மன்னிப்பாயா?" என்ற பாடல் வரிகளையும் கோர்த்து, நீங்கள் ஒரு கதையை ஊகம் பண்ணி வைத்து இருந்தீர்கள் என்றால்,your guess is intact.

தமிழில் எல்லாரும் "வித்தியாசமாக படம் எடுக்கிறோம்" என்று கிளம்பி விட்டதில், 'முழு நீள காதல் கதை' என்பது ஒரு மறக்கப்பட்ட விஷயம் ஆகிவிட்ட, இன்றைய தமிழ் பட டிரெண்டில் படம் முழுக்க, லவ், ரொமான்ஸ், இளமை என்று கலர்புல்லாக பொங்கி வழிவதால் இது ஒரு வித்தியாசமான படம் என்று சொல்லலாம்.

பொதுவாக கவுதம் மேனனின் கதாநாயர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பெண்ணை பார்த்ததும் "what a woman ?" என்று காதலில் விழுந்து துள்ளி குதிப்பார்கள். பக்கத்தில் இருக்கும் சுவர், கதவு எதிலாவது சாய்ந்து கொள்வார்கள். நெஞ்சில் குத்தி கொள்வார்கள். கவிதையாய் காதலை சொல்வார்கள். 'காதலிக்காக சாகலாம்' என்பார்கள். காதலி நினைவில் கண்ணீர் விட்டு கரைவார்கள். Foul language பேசுவார்கள்.

கதாநாயகி, தன்னிம்பிக்கையும் தெளிவுமாய் இருப்பாள். தனக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பாள். இதிலும் அச்சு அசலாக தன்னுடைய hero/heroin பார்முலாவை மாற்ற வில்லை அவர். சொந்த கதை, சொந்த கதை என்று ஒரே மாதிரி பீலிங் விடுவதை கொஞ்சம் குறைங்க கவுதம்!

மின்னலே படத்தில், ரீமா சென் மாதவனை பார்த்து, "நீ அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் தானே வருவதாக சொன்னாய்? இப்போ எப்டி வந்த?" என்பார். அதற்கு மாதவன், "flight காலியா இருந்துச்சு, அதன் ஏறி வந்துட்டேன்" என்று சொல்வார். இந்த படத்திலும் இந்த மாதிரி மெல்லிய நகைச்சுவை வசனங்கள் உண்டு.

அதிலும் தன்னை தானே கலாசிக்கொள்ளுவது தான் எவ்வளவு சுகமான விஷயம்?
-"நான் கவுதம்மேனன் கிட்ட தான் அசிஸ்டன்ட் ஆக சேர வேண்டும்" என்று சிம்பு சொல்லவும், "என்ன, தமிழ்ல இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறியா?" என்று ஒருத்தர் கேட்கிறார்.

-"அவனவன் காதலுக்காக America போறான்...நான் ஆலப்புழா போக மாட்டேனா??" என்று சிம்பு சொல்றார்.
-"நம்ம friends ஆக இருக்கலாம்" என்று த்ரிஷா சொன்னதும், பின்னணியில் ரஹ்மான் 'முஸ்தபா முஸ்தபா' ட்யூன் போடறார்.

சீராக போகும் கதை,வழக்கமான பாதையில் தான் பயணிக்கிறது என்றாலும் படத்தின் முடிவு சற்று அதிர்வை ஏற்படுத்தும் twisty யான முடிவு தான். சில இடங்களில் காட்சியமைப்புகள் விறுவிறுப்பாக இல்லாததால் நமக்கு சற்று தளர்வாக இருக்கிறது.

சிம்பு: இப்போது இருக்கிற வளரும் தலைமுறை ஹீரோக்களில், பாட்டு, நடனம் என்ற நிறைய திறமைகள் இருக்கிற ஒரு promising ஹீரோ ஆனாலும் விரல் வித்தை, நயன்தாரா என்று தடுமாறிக்கொண்டு இருந்த career இல் ஒரு நல்ல பிரேக் கிடைத்து இருக்கிறது இவருக்கு. நீங்களா இது? இவ்வளோ நல்லா நடிக்க வருமா உங்களுக்கு?

நான் ரவுடி, நான் மாஸ் ஹீரோ, நான் Don, நான் வித்தியாசமான படங்கள் பண்ண போறேன் என்று தமிழ் ஹீரோக்கள் ஆளாளுக்கு ஒரு ரூட்டை எடுத்ததில், மவுன ராகம் கார்த்திக், அலைபாயுதே மாதவன் இந்த மாதிரி இடங்கள் காலியாக இருக்கின்றன.சிம்புவுக்கு நன்றாகவே பொருந்துகிறது இந்த ரோல்.இதை maintain பண்ணவும்.

த்ரிஷ்: என்ன கலர்? என்ன ஒசரம்? என்ன ஸ்லிம்? இவங்க தலைமுடிய இறுக்கமா பின்னல் போட்டு, தாவணி பாவாடை கட்டி விட்டு, குத்து பாட்டுக்கு ஆட விட்டுடுவாங்க நம்ம ஊருல. இவங்க composition க்கு தகுந்த மாதிரி இவங்களுக்கு அமைந்த ஒரே ரோல் இது வரைக்கும் ஆயுத எழுத்து மீரா. அடுத்து இப்போ Jessie...Perming / கலரிங் பண்ண தலைமுடி, ஸ்டைலான காஸ்ட்யூம்கள் என்று கலக்கலாக இருக்கிறார். தன்னுடைய வேலையை ரொம்ப நல்லா பண்றார்.ஆனால், close -up ஷாட்களில் சற்று வயதான மாதிரி இருக்கிறது...அல்லது வயது தெரிகிறது என்று சொல்ல வேண்டுமா?

ரஹ்மான்: ரஹ்மான் இசையை பற்றி சொல்லுவது 'இட்லி வடைக்கே சட்னி சாம்பார் அனுப்பற' மாதிரி. அதோடு இந்த படத்தின் பாடல்களை பற்றி இணையத்தில் ஏற்கனவே எல்லாரும் எழுதி தள்ளி விட்டார்கள். அதனால் 'படத்துக்கு ஏற்ற வருடும் பின்னணி இசை'என்ற ஒரு வரியோடு முடித்து கொள்கிறேன்.

பாடல்கள் படம் ஆக்கப்பட்ட விதம் ரம்மியமான "feel good ", என்றாலும் எல்லா பாடல்களிலும் த்ரிஷாவும் சிம்புவும் அழகான காஸ்ட்யூம்களில் ஒரே மாதிரி ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். Hosannaa பாடல் கேட்க கேட்க திகட்டாத மாதிரி பார்க்க பார்க்க அலுக்காது.

காமிரா: படத்தின் நிறைய காட்சிகள் கோவாவிலும் கேரளாவிலும் எடுக்க பட்டு இருப்பதால், குளிர்ச்சியாக இருக்கிறது.

சின்மயியின் குரல் Jessie ரோலுக்கு நன்றாக பொருந்துகிறது.

காக்க காக்க ஜோ, வாரணம் ஆயிரம் சமீரா, வேட்டையாடு ஜோ(?) என்று தன்னுடைய ஹீரோயின்களை பெரும்பாலும் போட்டு தள்ளி விடுவார் கவுதம். ஒரு காட்சியில், "Why does this hug feel so special" என்று சிம்பு கேட்கவும், "ஒரு வேளை இது தான் கடைசியாக இருக்கலாம்" என்று த்ரிஷா சொல்ல, நான் "சரி இவங்களும் காலி" என்று யூகித்தேன். அது சரியா தவறா என்று நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

My Verdict: Visual/Musical treat, served with lots of love.

- ப்ரியா கதிரவன்


சபாஷ் சரியான போட்டி ( ஜெய் ஹனுமானுக்கு!)


11 Comments:

ஜெயக்குமார் said...

இது விமர்சனம். நச்சுனு இருக்கு.. விரல் வித்தை இல்லாமல் சிம்பு படமா?

நம்ப கஷ்டமாத்தான் இருக்கு..

தர்ஷன் said...

நல்லா இருக்கு விமர்சனம்

Anonymous said...

கிளைமாக்ஸில் பார்வையாளர்களுக்கு ஒரு ஷாக் தருவதற்காக மட்டுமே அப்படியொரு திருப்பத்தை வலிந்து திணித்தது போன்ற உணர்வு. இது சென்னையைத் தாண்டி ரசிகர்களைச் சேருமா தெரியவில்லை. தியேட்டர் ஆபரேட்டர்கள் எனும் சூப்பர் எடிட்டர்களால் கத்தரித்து வீசக்கூடிய வாய்ப்பும் உண்டு! இடைவேளைக்குப் பிந்தைய சில காட்சிகள் இழுவை.

R.Gopi said...

விமர்சனம் நன்றாக எழுதப்பட்டுள்ளது...

அந்த அளவுக்கு படம் வொர்த்தான்னு தெரியல...

சிம்பு விரல் வித்தை காட்டாத படம் எல்லாம் ஒரு படமா??!!! அப்படின்னும் ஒரு யோசனை வந்து போகிறது..

திரிஷாவுக்கு வயாசாச்சா என்ற ஆராய்ச்சி பலே ரகம்...

மொத்தத்தில் படம் தேறுமா, தேறாதா என்று பார்த்தவர்கள் சொல்லலாம்...

ரிஷபன் said...

பேஷ் பேஷ் விமர்சனம்-னா இப்படி தான் இருக்கனும்


சிம்பு நல்ல நடிகர். அருமையான டான்சர். நாம ஆடினா தமிழ் நாட்டுக்கே பார்டின்னு ஒரு பாட்டில் சொல்வாரே அது நிஜம்.அவர் தனிப்பட்ட வாழ்கையைப் பற்றி நாம் கவலைப் பட ஏதுமில்ல.

Not Good said...

பஞ்சாயத்து தீர்ப்ப யாராவது மதிக்கலேன்ன "அந்த விரல" விரல" ஆட்டி நடிக்கும்ல அந்த "தம்பி" படத்த பஞ்சாயத்து டிவில நூறு தடவை பார்க்கனும்டி தெரியும்ல"

Anonymous said...

Nice review by Priya mam.. I want to watch this movie at once :)

Seems this movie is so interesting ;-) unlike Rocket Singh

Pengal kooda indha maadhiri ezhudhuvaanga {{ this is for IV }} appadinu prove pannitaanga Priya..

Idhu varaikum paarthadhula,, Priya eppavume correct a dhaan ezhudhuraanga nu sollalaama,,, or naanum avangalum ore alaivarisai la think panrom nu sollalaama?? ;)

Anyhow, NICE REVIEW FOR A NICE MOVIE(we hope)!!

Shankar said...

ஏஆர் ரஹுமானின் பின்னணி இசை,பாடல்கள்,ஒளிப்பதிவு இவைதான் படத்தின் உண்மையான ஹீரோ. மத்தபடி படம் பெரிய மொக்கை. இங்கு (வான்கூவர்)தமிழ் சினிமா ரிலிஸ் என்பதே அபூர்வம்...சரியென்று போய் பார்த்தால்....மொக்கை.

Not Good said...

Very Boaring Flim, Ar Rahman Very special and Fresh Music. Goutham What You To Next?

Anonymous said...

Boring movie. Its like a documentary movie..full of close up shots, 90% of the movie in just 2 locations. They keep showing the lead pair alone thru out the movie.Average background score. The movie is like the sort of projects people do during the "bench period".

Anonymous said...

good review..
was wondering what was the contribution of Simbu? well if you wann to know more should watch it

Or other wise it's OKay!

For Simbu:
I personally feel even a novice would have been a better choice.

Over all:
6/10 if nothing available!