பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 10, 2010

அடடே ஸ்பெஷல்

அடடே ஸ்பெஷல் கீழே....


அடடே பேட்டி
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.​ அப்போது,​​ "திரைப்படத் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறீர்கள்.​ திரையரங்கில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளிக்கும் முன்,​​ "இரண்டு கேள்விகளும் பொருந்தி வரவில்லையே?​ அந்தக் கேள்வியை அப்படிக் கேட்கக் கூடாது.​ தனித்தனியே கேட்க வேண்டும்.​ நான் ஒரு நிருபராக இருந்து இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் பாருங்கள்' என்று நிறுத்தினார் முதல்வர் கருணாநிதி.

உடனடியாக,​​ செய்தியாளர்கள் அனைவரும்,​​ "ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அந்தக் கேள்வியை நீங்களும் கேளுங்கள்' என்றனர்.

""சினிமா கட்டணத்தை மாற்றி அமைப்பீர்களா?​ என்று ஒரு கேள்வி கேட்க வேண்டும்.​ திரைப்படத் துறையினருக்கு பல சலுகைகளை அளித்து வருகிறீர்களே.​ அவர்கள் உங்களுக்கு நன்றி காட்டுகிறார்களா எனத் தனியாக கேட்க வேண்டும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.1. அடடே கார்ட்டூன்
2. அடடே கட்டுரை - முரசொலி
பட்டங்களும் விருதுகளும் பாராட்டுகளும் தினமணி `மதி’யின் அபத்தக் கேலிச்சித்திரமும்!

இங்கே காணப்படுவது `தினமணி’ ஏட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கேலிச்சித்திரம்.

தினமணி கேலிச்சித்திரக்காரர் `மதி’க்கு கலைஞரையும் - தி.மு.க.வையும் நையாண்டி செய்வதில் ஒரு தனி சுகம் - ஜெயலலிதாவைப் பற்றியோ, பா.ஜ.க.வில் நடைபெறும் குடுமி பிடிச் சண்டைகள் பற்றியோ அவர் கண்டு கொள்ள மாட்டார். எப்போதாவது அத்தி பூத்தார்போலத்தான் அவர்களை டச் செய்வார்.

தினமணி ஆசிரியரும் அடிப்படையில் தி.மு.க. எதிர்ப்பாளரே! அவர் ஆடிட்டர் குருமூர்த்தி - துக்ளக் சோ ஆகியோரால் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு வந்தவர். அவர்களைத் திருப்தி செய்யவும் - நான் மாறிவிடவில்லை. உங்கள் ஆளாகத்தான் செயல்படுகிறேன் - என்று அவ்வப் போது காட்டிக் கொள்ள வேண்டிய விசுவாசம் காரணமாகவோ என்னவோ - அவரும் தி.மு.க. எதிர்ப்புச் செய்திகளுக்கு - மதியின் அபத்தமான கேலிகளுக்கெல் லாம் தினமணியில் முக்கியத்துவம் தரவேண்டியவராக இருக்கிறார்.

அந்த வகையில்தான் இந்த அபத்தக் கேலிச் சித்திரத்தையும் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொண்டு விட்டார் என்று கருதத் தோன்றுகிறது!

மற்றபடி -

பட்டங்கள் - விருதுகள் வழங்கப்படுவதும் பெற்றுக்கொள்வதும் ஒன்றும் தவறாகி விடாது; கேலிக்குரியதாகி விடாது.

காஞ்சி மடத்திற்கு சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் பீடாதிபதியாக இருந்தபோது அவரை மகாப் பெரியவாள் என்றும்,

அவருக்கு அடுத்த ஜெயேந்திர சரஸ்வதியை புதுப் பெரியவாள் என்றும்,

அவருக்கடுத்த விஜயேந்திர சரஸ்வதியை இளைய பெரியவாள் என்றும்,

பட்டம் சூட்டி அழைத்த, எழுதிய - பேசிய, அப்படி அழைப்பதில் - பட்டம் சூட்டி அழைப் பதில் பெருமைப்படுகிற பரம்பரையைச் சேர்ந்ததுதான் தினமணி பரம்பரை. இன்றைக்கும் காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களைப் பற்றி எழுதும்போது மகாப் பெரியவாள் என்றுதான் பார்ப்பனர்கள் அனைவரும் பய பக்தியோடு எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி என்று அழைக்கிறார்களே, அதிலே வருகிற சரஸ்வதி என்பது என்ன அப்பா அம்மா வைத்த பட்டமா?

பட்டங்கள் வழங்குவது, பொற்கிழி வழங்குவது பாராட்டுத் தெரிவிப்பது எல்லாம் பண்டைத் தமிழக வரலாற்றிலேயே காணப்படும் பெருமைக்கும் பெருமிதத்துக்கும் உரியவை தான்.

`ஆரியப்படை கடந்த’ நெடுஞ்செழியன்

`தலையாலங்கானத்துச் செறுவென்ற’ நெடுஞ்செழியன்

`நின்றசீர்’ நெடுமாறன்

கரிகால் `பெருவளத்தான்’

கடாரம் கொண்டான்

திரிபுவனச் சக்கரவர்த்தி

`திராவிடசிசு’ திருஞானசம்பந்தர்

கவிச்சக்கரவர்த்தி கம்பர்

என்றும் பண்டைத்தமிழர் வரலாற்றில் மன்னர் களுக்கும் புலவர்களுக்கும் வழங்கப்பட்ட பட்டங் களை இன்னும் இன்னும் செல்லிக் கொண்டே போகலாம்.

இசையுலகிலும் - கலையுலகிலும்

`காயக சிகாமணி’ அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்

`கானகலாதர’மதுரை மணி அய்யர்

`டைகர்’வரதாச்சாரியார்,

`செம்பைச்செல்வம்’ வைத்தியநாத பாகவதர்

`கோகிலகான இசைவாணி’ எம்.எஸ்.சுப்பு லட்சுமி

`இசையரசு’ எம்.எம்.தண்டபாணி தேசிகர்

`கொடுமுடிக்கோகிலம்’ கே.பி.சுந்தராம்பாள்

`ஏழிசைவேந்தர்’ எம்.கே.தியாகராஜபாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிக வேள் எம்.ஆர்.ராதா, கவியரசு கண்ணதாசன், கவிப் பேரரசு வைரமுத்து, இசைஞானி இளையராஜா - கலைஞானி -உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்று பட்டங்கள் புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்து கொண்டுதானி ருக்கின்றன! அது மட்டுமா?

அரசியல் - இலக்கியத் தளங்களிலும், மகா மகோபாத்தியாய - தாட்சிணாந்திய கலாநிதி உ.வே.சாமிநாதய்யர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வாகீச கலாநிதி, கி.வா.ஜகந்நாத அய்யர் (கி.வா.ஜ) பண்டிதமணி மகாமகோபாத்யாய கதிரேசன் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழ்க்கடல் மறைமலையடிகளார் - எழு ஞாயிறு தேவநேயப்பாவாணர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், மகாகவி பாரதியார்.

`அருட்செல்வர்’ பொள்ளாச்சி மகாலிங்கம், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், `ரசிகமணி’ டி.கே.சி, `பிரதிவாதி பயங்கரம்’ அண்ணங்கராச் சாரியார் அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார்,

- என்று எத்தனை எத்தனை அறிஞர் பெரு மக்கள் இசைவாணர்கள் - திரைக் கலைஞர் கள், இலக்கியச் செம்மல்களெல்லாம்.

அவர்கள் வாழும் காலத்திலேயே

பட்டப் பெயரோடு

மரியாதைக்குரியவர்களாக

அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்றும் உ.வே.சாமிநாதய்யரைப் பற்றி எழுதும்போது மகா மகோபாத்யாய என்ற பட்டத்தை விலக்கி எழுதுபவர் உண்டா? டி.கே.சி.(சிதம்பரநாத முதலியார்) பற்றிக் குறிப்பிடும்போது ரசிகமணி என்ற பட்டத்தை விலக்கிவிட்டா குறிப்பிடுகிறோம்? பாரதி என்று எழுதுவதில்லையே; மகாகவி பாரதி என்றுதானே எழுதுகிறோம். எனினும்,

முதல்வர் கலைஞருக்கு மட்டும்

பாராட்டுவிழா

பட்டமளிப்பு விழா

விருது வழங்கும் விழா

என்றால் தினமணி `மதி’க்கு வயிறு எரிகிறதே! கேலிச்சித்திரம் என்றபேரால் - அபத்தம் பொங்கி வழிய - கலைஞர் மீது பாய்ந்து பிறாண்டுகிறாரே ஏன்?

ஜெயலலிதாவை புரட்சித்தலைவி என்று அழைப் பது பற்றி நையாண்டி செய்ய மதிக்கு மனமில்லையே! அவரை - திருமணமாகாத - குழந்தையே பெறாத அவரை அம்மா என்று தினமணியும் செய்தி விமர் சனக்கட்டுரைகளில் குறிப்பிடுகிறதே! அந்த `அம்மா’ பற்றி என்றாவது மதி கேலிச்சித்திரம் வரைந் ததுண்டா?

ம்

`மதி’யின் கேலிச்சித்திரங்கள் இதுவரை இரண்டு தொகுதிகளாக வெளிவந்திருக் கின்றன!

அந்த நூல்களை வெளியிட

மதி - வெளியீட்டு விழா

நடத்த சம்மதித்தது ஏன்?

விழாவில் கலந்து கொண்டு பேசியவர்கள் எல்லாம் மதியை வானளாவப் புகழ்ந்து பேசினார்களே; அப்போது மதி எழுந்து

"என்னைப் புகழாதீர்கள்

பாராட்டாதீர்கள்

எனக்குப்பாராட்டு

பட்டம் - பரிசெல்லாம் பிடிக்காது"

என்றா தடுத்து விட்டார்! பாராட்டுகளை காது குளிரக் குளிரக்கேட்டு - மகிழ்ச்சிக்கடலில் தானே மிதந்து கொண்டிருந்தார்? இதிலிருந்து தெரிவதென்ன? ஒவ்வொரு துறையிலும் திறமை உள்ளவர்களை - ஆற்றலாளர்களைப் பாராட்டு வதும் - பரிசளிப்பதும் பட்டம் வழங்குவதும் தமிழர் வாழ்வில் வழி வழியாக வந்த வழக்கம் - சிறந்த மரபு! அந்த அடிப்படையில்தான் மதியையும் பாராட்டினார்கள்!வேறெந்தத் தலைவருக்குமில்லாத வகையில் கலைஞருக்கு மட்டும் அடிக்கடி பாராட்டு விழா, பட்டமளிப்பு விழா நடந்து கொண்டே இருப்பதற்கு காரணம் என்ன?

திரைப்படக்கலைஞர்களுக்கு - கலைஞர் தமது ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் சலுகை களை வாரி வாரி வழங்கி வருகிறார். இதோ, இப்போது திரைப்படக் கலைஞர்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்ட 90 ஏக்கர் நிலம் வழங்கி உதவி யிருக்கிறார் அதற்காக திரைப்படக் கலைஞர்கள் நன்றி பாராட்டும் வகையில் பிருமாண்டமான பாராட்டு விழாவை நடத்தி இருக்கிறார்கள்!

இதைக்கண்டு `மதி’ வயிறு எரிவானேன்? வருகிற பத்தாம் தேதி - தவத்திரு குன்றக் குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் கலைஞருக்கு திருக்குறள் பேரொளி என்ற பட்டம் வழங்கி பாராட்டு விழா நடத்துகிறார்!

- குறளோவியம் எழுதியவர் கலைஞர்

- திருக்குறளுக்கு புதிய உரை எழுதியவர் கலைஞர்

- வள்ளுவருக்கு கோட்டம் எழுப்பியர் கலைஞர்

- கன்னயாகுமரி - கடலில் வள்ளுவப் பெருந் தகையின் பிருமாண்டமான திருஉருவச் சிலையை நிறுவியவர் கலைஞர்

- கலைஞர் அரசில் திருவள்ளுவர் திருப்பெயரால்அறிஞர்பெருமக்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு - சில நாட்களுக்கு முன்னால் - தினமணியின் முன்னாள் ஆசிரியரும் தலை சிறந்த தமிழறிஞருமான ஐராவதம் மகாதேவனுக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது.

குறள் நெறியைப் பரப்பிட பல்லாற்றானும் பெருந்தொண்டு செய்த கலைஞர் பெருமகனா ருக்கு திருக்குறள் பேரொளி என்ற விருது வழங்கிப் பாராட்டு விழா நடத்துவதில் - நையாண்டி செய்து படம் வரைய என்ன இருக்கிறது?

கொண்டை உள்ளவளுக்கு

பூச்சூட்டி மகிழ்கிறார்கள்!

மொட்டைகள் வாயிலும்

வயிற்றிலும் அடித்துக் கொண்டு

முட்டிக் கொள்ளலாமா?

3. அடடே செய்தி - தினமணி
முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம் சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர்.

​ முதல்வர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் முறையாக அனுப்பப்படவில்லை.​ கேட்டபோது,​​ ""அரங்கில் நுழைவதற்கான அனுமதியையும் ​(பாஸ்),​​ ​ நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையும் தேவையென்றால் பிலிம் சேம்பரில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாய்மொழியாகக் கூறினர்.​ ​

​ புகைப்படக்காரரை அரங்கினுள் அனுமதிக்க முடியாது,​​ கலைஞர் தொலைக்காட்சியைத் தவிர மற்றவர்கள் இந்த நிகழ்ச்சியைப் படம் பிடிக்க அனுமதி இல்லை என்று கண்டிப்பாக மறுத்துவிட்டனர்.​ ​(ஆனால் ஒரு சில புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.)

​ ​ இந்தக் காரணங்களால்தான் இந்த நிகழ்ச்சியை செய்தியாகத் தர முடியவில்லை.


அடடே!

26 Comments:

Anonymous said...

சூப்பரப்பு

ஜெயக்குமார் said...

என்ன மாதிரியெல்லாம் சால்ஜாப்பு சொல்லவேண்டியிருக்கிறது..

இப்படிக் கேளுங்கனு சொன்னதுல கேவலம் இல்லை.. அதைக் கிண்டல் செஞ்சா கோபம் வருது..

என்னா பகுத்தறிவு.. என்னா பகுத்தறிவு.?

Anonymous said...

//ந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி என்று அழைக்கிறார்களே, அதிலே வருகிற சரஸ்வதி என்பது என்ன அப்பா அம்மா வைத்த பட்டமா?//

கலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன், கவிஞர், தயாளு ராஜாதி " அம்மாள்" இதெல்லாம்...?

கட்டதுரை said...

நான் எப்போதாவது என்னை “முத்தமிழ் வித்தகர்” என்றோ “தமிழ்நாட்டை வித்தவர்” என்றோ சொல்ல சொன்னேனா??

தலைவா உன் வருகை
கண்டதும் கூப்புவேன் என் இருகை

என்று வாலி அவர்களை எழுத சொன்னேனா??

கிச்சு கிச்சு கவிஞர் “ஜகத்” அவர்களை வைத்து ஜல்லி அடிக்க சொன்னேனா??

என் வீட்டை மருத்துவமனையாக மாற்றுவதற்கு யாரையாவது கேட்டேனா?

குடும்பத்து உறுப்பினர்களின் பெயர்களில் கண்டிப்பாக “நிதி” என்று சொன்னேனா?? (துரை தயாநிதி, கலாநிதி என்றெல்லாம் நான் சொல்லி வைத்த பெயர்கள் அல்ல...)

தமிழே
தமிழின் குமிழே
குமிழின் சிமிழே

என்றெல்லாம் சொல்ல சொன்னேனா?

நான் உண்டு, நமீதா உண்டு, “மானாட மயிலாட” கொஞ்சம் ஓய்வு எடுத்தால், உங்கள் நொள்ளை கண்கள் ஏன் என் மேல் பாய்கிறது?

sivag said...

கலைஞர் : என்னை யாரும் பாராட்டுவதே கிடையாது !
நிருபர் : சனிக்கிழமை திரை உலகத்தினர் பாராட்டு விழா நடத்தினார்களே...
கலைஞர் :அது போன வாரம். நான் சொல்லுவது இந்த வாரம்...

தஞ்சாவூர்க்காரன் said...

He He He Hoo Hoooh Hooo hooo

kggouthaman said...

மதியின் இரண்டு கேலிச் சித்திரங்களும் - திரைப்படத் துறையினரை கேலி செய்யும் விதமாகத்தான் உள்ளன. பட்டம் பெறுபவர்களை கேலி செய்வதாகத் தோன்றவில்லை.

சீனு said...

இந்த பாராட்டு விழா பற்றி அறிவிப்பு வந்ததும், எனக்கு முதலில் நியாபகம் வந்தது, மதியின் கார்ட்டூன் தான்.

Anonymous said...

eppudi ippdi?

Anonymous said...

Read viduthalai also.Mathy is not a brahmin, otherwise Murasoli would have used that also.

Gaana Kabali said...

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது என்ன என்ன சாதனைகள் செய்தார்கள் என்று யாராவது பட்டியலிடுங்களேன்.

இப்போது ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன செய்வார்கள் , அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்றெல்லாம் ஒரு கற்பனையை யாராவது ஓட விடுங்களேன்.

அப்போது தான் ஜே வரக்கூடாது என்று சொல்பவர்கள் முகத்தில் கரியை பூசலாம் .

ந.லோகநாதன் said...

Really very interesting news! I like this article.

Anonymous said...

அருமை அருமை....

பேருந்து நிலையத்திற்குப் பெற்றோர் பெயர் வைக்க ‍‍‍‍ "என்னையே இந்த நாட்டுக்கு தியாகம் செய்தார்கள்" என்றார்....

//""சினிமா கட்டணத்தை மாற்றி அமைப்பீர்களா?​ என்று ஒரு கேள்வி கேட்க வேண்டும்.​ திரைப்படத் துறையினருக்கு பல சலுகைகளை அளித்து வருகிறீர்களே.​ அவர்கள் உங்களுக்கு நன்றி காட்டுகிறார்களா எனத் தனியாக கேட்க வேண்டும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.///

நன்றி காட்ட வேண்டும் என்று சொல்கிறார்.... மக்கள் யோசிக்க வேண்டியது என்னவென்றால் உங்களுக்கு நன்றி காட்ட உங்கள் பணத்தையல்லவா செலவு செய்ய வேண்டும்.... ஊரான் பணத்தையல்ல.... அரசு செய்யும் கடமையைக் கூட தான் செய்ததாக சொல்லுவது முட்டாள்தனமில்லையா ?

இக்காலப் பள்ளிப் பிள்ளைகள் கூட "ஏன் தவறு செய்தாய்?" என்று கேட்டால் அடுத்த பிள்ளையும் செய்ததே என்று சொல்வதில்லை... ஆனால்....

//குழந்தையே பெறாத அவரை அம்மா என்று தினமணியும் செய்தி விமர் சனக்கட்டுரைகளில் குறிப்பிடுகிறதே!//

வக்கிரத்தின் உச்சம்.... கருணாநிதியைத் தவிர யாரும் இப்படி யோசிக்க கூட‌ முடியாது...

எனக்கு கருணாநிதி மேல் வருத்தமேயில்லை... முத்துவேலர் தமிழ்ப்படத்தில் வருவது போல கள்ளிப்பால் கொடுத்திருக்கலாம் என்ற வருத்தம் தான்....

- ‍ சேகர்

Anonymous said...

pongappaa....

Anonymous said...

இப்பதிவில் பின்னூட்டமிட்ட ஒருவரேனும் கட்டுரையில் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தரவில்லை.
::::
காஞ்சி மடத்திற்கு சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் பீடாதிபதியாக இருந்தபோது அவரை மகாப் பெரியவாள் என்றும்,

அவருக்கு அடுத்த ஜெயேந்திர சரஸ்வதியை புதுப் பெரியவாள் என்றும்,

அவருக்கடுத்த விஜயேந்திர சரஸ்வதியை இளைய பெரியவாள் என்றும்,

காயக சிகாமணி’ அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்

`கானகலாதர’மதுரை மணி அய்யர்

`டைகர்’வரதாச்சாரியார்,

`செம்பைச்செல்வம்’ வைத்தியநாத பாகவதர்
`பிரதிவாதி பயங்கரம்’ அண்ணங்கராச் சாரியார் அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார்,
::;
இதெலாம் ரைட்டுனா மு.க வை பாராட்டியதில் தவறொன்றுமில்லை.
இதே இடத்தில் ஜெ..இருந்தால் ..
இதுக்குபேர்தான் பா....ர குசும்போ?
உங்களையெல்லம் பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது! போங்க .ஆத்துல போய் தச்சு மம்மு சாட்டுட்டு உத்யோகத்த பாரும்!!

Anonymous said...

\\ஆத்துல போய் தச்சு மம்மு சாட்டுட்டு உத்யோகத்த பாரும்!!//

சரிங்க ச்சாரு ஜால்ரா @ சிக்கி முக்கு!

Anonymous said...

அறிஞர் அண்ணா, கலைஞர் என்ற பட்டதை யாரும் குறை சொல்லவில்லை.
எப்போதும் தானே கூட்டம் கூட்டி பட்டம் பெறுவதையே இருப்பதை தான் சொல்கிறோம்.
85 வயதிலும் குத்தாட்ட டான்சில் ரசிப்பு இருப்பதால் அவருக்கு நான் ஜ்ஜோள் திலகம் என்ற பட்டதை அளிக்கிறேன். நாடோடிகள் படத்தில் வரும் அந்த விளம்பர பிரியருக்கும் கலைஞருக்கும் என்ன வித்தியாசம்? முதல்வருக்கு வேறு வேலைகள் இல்லையா ?

Anonymous said...

பட்டம் கொடுப்பதில் தவறில்லை. இவருக்கு ‘கலைஞர்’ என்று ஒரு பட்டம். எல்லாரும் அப்படிக்குறிப்பிடுகிறார்கள். அதைப் பற்றி யாரும் கம்மெண்ட் அடிப்பதில்லை.
வாராவாரம் பட்டம் என்பது தான் இடிக்கிறது. நடமாடும் வள்ளுவர், குதிக்கும் இளங்கோ, பாயும் தொல்காப்பியர், உட்காரும் தமிழ், நிற்கும் சிலப்பதிகாரம், போன்ற பட்டங்களை உ.வே.சா போன்றவர்கள் சேர்த்துக் கொண்டார்களா?
மந்திரி பதவி வீட்டு மனை, நிகர் நிலைப் பலகலைக் கழகம் எல்லாம் பெறுவதற்காகத்தானே, பட்டம் கொடுக்கிறார்கள்?

Badri said...

மதியின் கேலிச்சித்திரங்கள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன என்று முரசொலி சொல்லியிருப்பது தவறான தகவல். தினமணி வாயிலாக இரண்டு தொகுதிகள் வெளியானது உண்மை. அடுத்து கிழக்கு பதிப்பகம் வாயிலாக அவரது ‘அடடே’ கார்ட்டூன்கள் 6 தொகுதிகளாக வந்து, அப்துல் கலாம் மூலம் வெளியிடப்பட்டன. அடுத்து அகலவாட்டில் உள்ள அவரது கார்ட்டூன்கள் ஒரு பெரும் தொகுதியாக இப்போது வெளியாகியுள்ளன.

அவை அனைத்தும் இங்கே கிடைக்கும்:

http://nhm.in/shop/Mathi.html

SUBBU said...

அடடே!

Anonymous said...

//கவியரசு கண்ணதாசன், கவிப் பேரரசு வைரமுத்து, இசைஞானி இளையராஜா - கலைஞானி -உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.//

லிஸ்டில் ’அல்டிமேட் ஸ்டார்’ ஏன் இடம் பெறவில்லை? சீனியரான எம்.ஜி.ஆர்.ஐ ஏன் கடைசியாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்? போர்வாள் வைகோவைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை. ’எழுச்சிக் கலைஞர்’ என்று கேப்டனுக்குப் பட்டம் கொடுத்ததே களைஞர்தானே. அதைப் பற்றி ஏன் கட்டுரையையில் குறிப்பிடப்படவில்லை. ’மக்கள் நாயகன்’ ராமராஜன் பெயரை திட்டமிட்டு மறைத்த சதிக்கு என்ன காரணம்? சின்னத் தளபதி, புரட்சித் தளபதி, கலை நிலா போன்ற பட்டங்களை இருட்டடிப்பு செய்ய யார் காரணம்? இந்த முரசொலிக் கட்டுரை ஒருதலைப் பட்சமானது. பாரபட்ச முடையது. தமிழர்கள் சோற்றாலடித்த பிண்டங்கள். ஆகவே இக்கட்டுரையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

- இளமாறன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முத்துவேலர் மகனான கருணாநிதிக்கு பட்டம் பெறுவதில் விருப்பம் இல்லை.....இல்லை...........இல்லை..........ஒத்துக்கிட்டேன்,
போதுமா?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

விமர்சனமோ பாராட்டோ அது மற்றவர்கள் மூலமாகத்தான் வரவேண்டும். “நமக்கு நாமே” ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
....பாவம் வயசாயிடுச்சி விட்டுடுங்கப்பா...

Anonymous said...

Regarding Murasoli dragging Kanchi
Sankaracharyas and their title
"Saraswathi", it only reveals the
total ignorance of Mu's clan and
followers of the Hindu scriptures,
shastras, practices and established
systems. In the instant case,
Saraswathi is one of the ten types
of titles sanyasis or monks of a
Math can add after their new name
upon becoming a monk. They are
called Dasanamas, and are as follows:
1.Aranya; 2. Aasrama 3. Bharati; . 4. Giri; 5. Parvata; 6. Puri;
7. Saraswathi; 8. Saagara;
9. Teertha and 10. Vana.

For example, Vijayanagara empire
establisher Vidya became Vidyaranya
after ascending the Sringeri math;
Bharatis and Saraswathis are widely
used. e.g. Chandrasekharendra Saraswathi, Dayananda Saraswathi
(both the 19th Century originator
of Arya Samaj order) and the present day bearer of the same name
whose headquarters are in Anaikatti, Coimbatore. Similarly,
Teertha is used in Sringeri order for example, Abhinava Vidyatheera
the previous Sankaracharya and
Bharathi Theertha Swamigal (the
present head). Similarly Bharati
is taken by the order of the Puri
Math Acharyas; also Madhvacharya
had taken the name of Ananda Teertha. I would refer these
half baked "Mu" ignoramuses to a detailed write up of the Dasanamas
in the Volume I of the 3-volume
"A Concise Encyclopedia of Hinduism"
published by Ramakrishna Math,
Bangalore.

Anonymous said...

22/2/2010 a letter in THE HINDU / Salem

Tiruvalluvar’s teachings

This refers to the report on the award ‘Tirukkural Peroli’ conferred on Chief Minister M. Karunanidhi (Feb.11). Indisputable are Mr. Karunanidhi’s contributions to the development of Tamil. His commentaries on Tirukkural are said to be neither theistic nor atheistic but based on the vision of one of the greatest of poets Tiruvalluvar. Tiruvalluvar was totally against drinking intoxicating liquor. He fervently pleaded for ‘Kallunnamai’, prohibition of liquor. I feel that the great saint Valluvar will be happy and pleased to bless us only if we follow the spirit of his teachings. We should not stop with mere aesthetic appreciation of Valluvar’s poetry but evince interest in translating his vision into reality, at least in stages. We may see heaven on earth, especially in Tamilnadu, if such a miraculous transformation is effected by the Government of Tamilnadu. The first step in this right direction will be the immediate closure of TASMAC shops, enforcing strict prohibition along with the elimination of illicit liquor production. With the World Classical Tamil Conference round the corner, it will be a great honour to the saint if total prohibition is enforced not merely for the duration of the conference but for ever. The Government should see to it that the rules prohibiting liquor should not be “more in breach than in observance”.

M. Vathapureeswaran,

Erode.

http://dailythanthi.com/article.asp?NewsID=548462&disdate=2/21/2010