பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 26, 2010

வி ஃபார் வெண்டட்டா - விமர்சனம்

குறள் 563:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

கலைஞர் உரை:
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்


”மக்களுக்காகவே அரசாங்கம்.. அரசாங்கத்திற்காக அல்ல மக்கள்” இதுதான் ஒன்லைன், ஸாரி. டூ லைன்.

ஒற்றுமை, ஒற்றுமை என மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் உரிமைகளைப் பறித்து, அரசாங்கத்தின் கைப்பாவைகளாக வைத்திருக்கும் ஒரு சர்வாதிகார அரசாங்கத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடும் ”வி”என்பவர் மக்களின் கண்களைத் திறந்து அவர்களை உண்மையான சுதந்திரத்திற்கு அழைப்பு விடுவதும், அவர்கள் மூலம் சர்வாதிகாரத்தை ஒழிக்க “வி” மேற்கொள்ளும் முயற்சிகளுமே இந்தப்படம்.சான்ஸலர் ஆடம் என்ற அடக்குமுறையாளனின் கீழ் பிரிட்டன் வாழ்கிறது. அநியாயமான தண்டனைகளும், கொடூரமான அடக்குமுறைகளும்,சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளும், துவரம்பருப்பின் விலையைப் போல அதிகரித்த வண்ணமிருக்கின்றன.

அப்படிப்பட்ட ஆட்சியை ”வி” முக்கியமான அரசு கட்டிடங்களைத் தகர்ப்பதன் மூலம் அரசின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் ஒருசேரக் கவர்கிறார். அதில் எவி ஹெம்மாண்ட் என்கிற பெண்ணும் சூழ்நிலை வசத்தால் இதில் சம்பந்தப்பட, அவளை அரசு உளவுப் பிரிவு பின்தொடர்கிறது- எமியின் மூலமாக “வி”யைக் கண்டுபிடிக்க.

அரசு உளவு அதிகாரிகளின் கையில் சிக்க இருக்கும் ஒரு தருணத்தில் வாழ்வா, சாவா சூழ்நிலையில் “வி” யால் காப்பாற்றப்படும் எவி ஹம்மோண்ட்,வி யின் கதையை கேட்கிறாள், அப்போது, தான் யார் என்கிற உண்மை தெரியவர , காலப்போக்கில் வி யுடன் இணைந்து பிரிட்டனின் கொடூரமும்,அடக்குமுறையும் கொண்ட ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து இறக்க உதவுகிறாள்.

அடக்குமுறையை ஒழிக்க “வி” தேர்ந்தெடுப்பது வன்முறையின் பாதை. அது பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கை ஃபாக்ஸ் என்பவரின் வழிமுறை. கை ஃபாக்ஸ் பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டை குண்டுவைத்துத் தகர்க்க முயன்றார்- அதேபோன்ற ஒரு நவம்பர் ஐந்தாம் தேதியில்.

படத்தின் ஆரம்பத்தில், ஒரு குண்டுவெடிப்பை நிகழ்த்தும் முன்னர் வரும் ஒரு அருமையான இசையும், அதைத் தொடர்ந்து அந்தக் கட்டிடம் உடைந்து நொறுங்குவதையும் காட்டுவதும் அருமை. அப்போதே வி யின் ஆளுமையும் ஒருசேரக் காட்டப்பட்டு விடுகிறது.

இந்தப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான “வி” யின் உண்மையான முகம் காண்பிக்கப்படுவதேயில்லை. ஒரு சிரித்த முகமூடிதான் “வி”

ஒரு நிமிடத்திற்கு ஒன்பதுமுறை டைட்குளோசப்பில் காண்பித்தாலும் ஒட்டிவைத்த மைதா மாவாய் ஒரு உணர்ச்சியும் காட்டத்தெரியாத கதாநாயகர்கள் இருக்கும் இந்தக்காலத்தில்,படம் முழுக்க முகமூடியுடன் வந்தாலும், தனது அசாத்திய உடல்மொழியால், வசன வெளிப்பாடால், எல்லா உணர்ச்சிகளையும் அருமையாக வெளிப்படுத்துகிறார் வி.

அரசு அதிகாரிகளை வேறு ஒரு முகமூடி போட்டு ஏமாற்றும் ஒரு கட்டத்திலும், நமது மனதைக் கொள்ளை கொள்கிறார்.


எப்படி, தொடர்ந்து பொய்களைச் சொல்லிச் சொல்லி மக்களை மந்தைகளாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் காணும்போது நமது இன்றைய நிலைதான் ஞாபகம் வருகிறது.
முழு விழிப்புணர்வு அடைந்த, சுதந்திரமான நிலையில் நாம் வாழ்வது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு நாம் சுதந்திரமாக வாழ்வது போன்ற ஒரு மாயையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நமது தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. நமது கோரிக்கைகள் எதுவும் செவிசாய்க்கப் படுவதில்லை.

நம்மை ஒரு பொருட்டாகவே ஆளும் வர்க்கம் நினைப்பதில்லை. ஆனாலும் நமது அரசியல்வாதிகள் நம்மிடம் தொடர்ந்து சொல்வது, “மக்களுக்காகவே அரசாங்கம், உங்களுக்காகவே நாங்கள் உழைக்கிறோம்”.

ஆள்பவர்கள் செய்யும் அடக்குமுறைகள் அனைத்தும் நமது நலனுக்காகவே என்றும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்பவனை துரோகியாகவும், அமைதியைக் குலைப்பவனாகவும் சித்தரித்து என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடிகிறது.

அப்படிப்பட்ட ஒரு மயக்கமான நிலையில் நம்மை வைத்திருந்து, அவர்கள் விரும்பும் காரியங்களை எந்தவித எதிர்ப்புமின்றி, தொடர்ந்து செய்துவிடமுடிகிறது.

இதன்மூலம் ஒரு மந்தை மனப்பான்மை உருவாக்கப்பட்டு அரசு, மக்களுக்கு எதிராகவும், அரசின் அநியாயங்களை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதையும்,அதை,மக்கள் ஒத்துழைப்புடனே செய்துவிடுவதுடன், அதை எதிர்க்கும் யாரையும் தேசவிரோதிகளாக சித்தரிக்கவும் முடிகிறது.

மக்களின் மற்றும் அரசின் கவனத்தை ஒருசேரப் பெற பிரிட்டனின் முக்கிய இடங்களை தகர்க்கிறார் வி..

தேசிய தொலைக்காட்சி அலைவரிசையைக் கைப்பற்றி மக்களிடம் பேசுகிறார். மக்கள் அவர் பக்கம் சாய்வதும் அதை அரசு தடுக்க இயலாமலும் போகிறது.”வி” யைப்பிடிக்க ஒரு அரசு ஏஜெண்ட் முயல்கிறார். அந்த விசாரணையின் முடிவில் அவருக்கு, “தான் உண்மையின் பக்கம் இருக்கிறோமா?” என்கிற கேள்வி எழுகிறது.

டேவிட் லாயிட் எழுதிய “வி ஃபார் வெண்டட்டா’ என்ற ஆங்கில நாவலின் திரைவடிவம்தான் இந்தப் படம்.

இசை இந்தப் படத்தில் மிகப் பெரிய பலம். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல வருத்தம், துள்ளல், வெற்றிப் பெருமிதம், சோகம், திகில் என எல்லா சூழலையும் இசை மிக அழகாய் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

ஹீரோ ”வி” யின் உடையும், நடக்கும் நளினமும் கிட்டத்தட்ட ராபின்ஹுட் கதையில் வரும் ஹீரோ போலிருக்கிறது. ஆனால் வி க்கு நிகர் வி யேதான்.

வி யின் ஆங்கில உச்சரிப்பு இந்தப் படத்தின் இன்னொரு பெரிய பலம். அட்டகாசமான ஆங்கில உச்சரிப்பும், அதை உச்சரிக்கும் விதமும் நம்மைப் புன்முறுவலுடன் பார்க்க வைக்கின்றன.

வில்லனாக வரும் சான்சலர் ஆடம், வி யின் முன்பு சரியான வில்லனாக எடுபடவே இல்லை.

தொலைக்காட்சியில் வி தோன்றி நாட்டுமக்களுக்கு ஆற்றும் எழுச்சிமிக்க அந்த உரை மிகவும் அருமை.அதை தடுக்க இயலாமல் ஆள்பவர்கள் திணறுவதும், அரசு,அந்த ஒளிபரப்பை நிறுத்த முயல்வதும், அதற்குள் அந்த நிகழ்ச்சியே முடிவடைந்து விடுவதையும் நன்கு ரசிக்கலாம்.இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயமே இந்த்த் தொலைக்காட்சி உரைதான்.


ஒரு விதத்தில் நமது நாட்டு நிகழ்வுகளை ஆங்கிலத்தில் பார்ப்பது போல இருந்தது படத்தை இன்னும் நமக்கு நெருக்கமாக்கியது.
ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாகவும்,நாமறியா சில விஷயங்களை நமக்கு முகத்திலறையும் வண்ணம் சொல்லும் நிஜமாகவும் அருமையான அரசியல் த்ரில்லராகவும் உள்ளது வி ஃபார் வெண்டட்டா

ஜெய் ஹனுமான்

இவ்வளவு முகமுடிகளா ?

9 Comments:

sivaG said...

me the first

sivaG said...

நல்ல விமர்சனம்...

Anonymous said...

பாப்பார விமர்சனம் வழக்கம்போல நன்று.

kggouthaman said...

சூப்பரான விமரிசனம். வழக்கம்போல நன்று.

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்தமைக்காக இட்லி வடையை ’பொடா’வில் படார் என்று கைது செய்யப்படலாம்.

இட்லி வடை தடை செய்யப்பட்ட பொருளாக கூட அறிவிக்கப்படலாம்.
தடை செய்யப்பட்ட பொருளை வாங்குபவர்காளும் தேச துரோகிகளே. அவர்களும் பொடாவில் போடப்படலாம்.

இட்லி வடையிலிருந்து இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை.
அகிம்சை அழிந்துவிட்டதா?

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

’வி’ என்றவுடன் வி.பு என்று நினைத்து விட்டேன்.

நம்ம ஷங்கர் படம் மாதிரி பொது மக்களிடம் பேசும் காட்சியெல்லாமா இருக்கு.
நல்ல காமெடியா இருக்கு.
நம்ம மக்களெல்லம் இப்ப ரொம்ப தெளிவு.
500மிலி டாஸ்மார்க்,1000 ரூபாயும் கொடுத்தா தான் போராடுவாங்க..

clayhorse said...

ஐந்து வருடங்களுக்கு முன் வந்த படமாயிற்றே, இப்போது எதற்கு விமர்சனம்? ஏதேனும் 'வேறு' காரணங்களா? (மெக்கன்னா'ஸ் கோல்ட் விமர்சனம் எப்போது போடப்போகிறீர்கள்? :). )
http://baski-reviews.blogspot.com

Anonymous said...

sooper !!

டம்பி மேவீ said...

படம் வெளிவந்த பொழுது தூங்கி கொண்டே பார்த்தாக ஞாபகம் ...நல்ல படம்.

இது முதலில் குழந்தைகளுக்கான கார்டூன் புத்தகமாக வந்தது என்று நினைக்கிறேன் ...