பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 25, 2010

உண்மை சம்பவம்

இட்லிவடை நண்பர்களுக்கு,

வாகனம் ஓட்டும் போது தலைகவசம் அணிவது எவ்வளவு முக்கியம் என்பதைக் குறித்தும், செல்போனை வாகனம் ஓட்டும் போது பயன்படுத்தக்கூடாது என்பதைக்குறித்தும் உதாசீனப்படுத்தும் நண்பர்களுக்காக என் வாழ்க்கையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு துயர சம்பத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். (இதைப் படித்து சிலரேனும் இதை பின்பற்றக்கூடும் என்ற நம்பிக்கையில்)

நான் கேரளா மாநிலம் திருச்சுர் மாவட்டத்தில் உள்ள கொப்பரக்குளம் எனும் ஒரு இடத்தை சார்ந்தவன். பல வருடங்களாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். ஊரில் எனது சித்தப்பா, சித்தி மற்றும் அவர்களது மகன்கள் ஆகியோர் உள்ளனர். இதில் இரு தம்பிகள் துபாயில் பணிபுரிந்து வந்தனர்.

இதில் மூத்த தம்பிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு இடைவெளியில் ஊருக்கு வந்தான். ( பெயர் Jijeesh வயது 29.) பிப்ரவரி 21 தேதி திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது. இதனிடையில் 18.02.2010 அன்று மாலை 6 மணியளவில் இருசக்கரவாகத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள டைலர்கடைக்கு சென்றுவருவதற்காக தலைகவசம் அணியாமல் காதில் செல்போனை வைத்துக்கொண்டு வண்டியை அதிவேகத்தில் ஓட்டிச்சென்றுள்ளான் எதிரே எதிர்பராத பாலத்தின் திருப்பத்தில் மிகமெதுவாக வந்துகொண்டிருந்த ஆட்டோவின் மேல் அதிவேகத்தில் மேதி வண்டி பாலத்தின் சிமென்ட் சுவரில் சரிந்து தலை சுவரில் இடித்தது. மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவுவின் காரணமாக, ஒரு இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 19.02.2010 அன்று காலை உயிர் பிரிந்தது. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவனது வாழ்க்கை கனவு அவனது அப்பா, அம்மா மற்றும் அவனை மணம்முடிக்க இருந்த அந்த பெண் ஆகியோரின் கனவு அனைத்தையும் தகர்த்தெறிந்து அவன் எங்களை மீளாத்துயரில் விட்டுச்சென்றான்.

இதை ஏன் குறிப்பிட விரும்புகிறேன் என்றால். தலைவசம் அணிந்தும், வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்தமாலும், அதிவேகத்துடன் வண்டியை ஓட்டாமலும் இருப்பது. நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதால்.

அவனது புகைப்படத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன். முடிந்தால் வெளியிடவும்.

16 Comments:

ரா.கிரிஷ் said...

எனது தம்பியின் செய்தியை உடனே தளத்தில் இட்டதற்கு எனது நன்றி இதை பார்த்தேனும் வாகனஓட்டில் கவனமாக இருக்கவும்.

TAMIL said...

kandipa idha pathu nalu peru thirundanum sir,kandipa nanum nalu peruku itha solren

சுரேஷ் கண்ணன் said...

இறந்தவரின் குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

இம்மாதிரியான சம்பவங்களை உபதேசங்களாக மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ளலாம்,தவறில்லை.

நான் இருசக்கர வாகனம் ஓட்டுவதில்லை (ஓட்டத் தெரியாது) என்கிற தைரியத்தில் இந்தப் புகாரை முன்வைக்க விரும்புகிறேன். :-)

சமீப சாலைகளில் பைக் இளைஞர்கள் குறுகிய சந்துகளில் கூட அதிவேகமாக மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டு விரைவதைக் கண்டு அதிர்ச்சியும் எரிச்சலும் அடைந்திருக்கிறேன். இவ்வளவு அவசரமாக சென்று எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

சில சமயங்களில் "நீ எங்கனா முட்டிக்கிட்டு சாவுடா. என் மேல ஏத்திட்டுப் போயிட்டியனா நானும் எங்க குடும்பமும் இல்ல அவஸதைப்படணும்" என்று (சுயநலமாக) கூட நினைக்கவோ /சொல்லவோ தோன்றியதுண்டு.

"அரசு மருத்துவமனைகளின் எலும்பு மற்றும் நரம்பு சிகிச்சைப் பிரிவுகளை ஒருநாள் முழுவதும் பார்வையிட வேண்டும்' என்பதை இருசக்கர வாகனம் லைசன்ஸ் தருவதின் ஒரு விதியாக கூட ஆக்கலாம் போலிருக்கிறது.

இ.வ.வின் சமூக அக்கறைக்கு பாராட்டும் வாழ்த்தும்.

ராமுடு said...

I heard one incident that few college student went to bombay for tour (with college friends and professors). Before leaving bombay they wanted to take group photo in railway station. Since its large group, they were not able to cover all in one snap and all of them suggested to take the photo from bogi. This is suburb area of bombay. When one guy (aged 20 yrs) climbed up in bogi and when he flash the camera, he got a shock of 40,000 V sparked from electric line and through his camera his body was charged.

He was threwed away of about 30 feet and was in hospital for 2 days and died last week.

we should use cell phone, if it is necessary. Otherwise use landline. But our generation & younger generation wont pay attention to these matters.

மோகன் குமார் said...

இறந்தவரின் குடும்பத்துக்கும் அந்த பெண்ணின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

மிக அவசியமான பதிவு இது. ஹெல்மட் போடுவோர் கூட அருகில் தான் உள்ளது என போடாமல் செல்வதும் உண்டு. வண்டி ஓட்டும் பொது செல் போன் பேசுவது பெரும் தவறு.

சுரேஷ் கண்ணனின் பின்னூட்டம் மிக சரி. இளைஞர்கள் இவ்வாறு வேகமாய் ஓட்டும் போது தெருவில் செல்லும் குழந்தைகள் மேல் மோதினால் என்னாவது? இந்த பிரச்சனை எப்படி தீருமோ?

SATHEESH said...

PRESS னா என்ன இ.வ . நிறைய பேர் அவர்களுடைய இரு சக்கர வாகனத்தில் " PRESS" என்று எழுதிக்கொண்டு helmet அணியாமல் செல்கிறார்கள் . இதற்கு என்ன சொல்வது ? ஊருக்கு தான் உபதேசமோ ?

enRenRum-anbudan.BALA said...

அவர் குடும்பத்திற்கு இரங்கல்கள் ! மற்றபடி, சுரேஷ் கண்ணன் சொல்வதை வழிமொழிகிறேன்.

Anonymous said...

hats off for a socially resposibleupdate.Idly vadai must carry on more crusades like this than conscentrating on cine folk.the pity is even doctors talk on mobile while driving.drunken driving has become a fashion among youth.more than 70% of road deaths are due to drunken driving.the police merely let them off. i dont want to dwell on this much.many youngsters drive without licence and their parents permit it. You go to any school and there will be many children coming in motorcycles. How is it possible. In Vijay TV NEEYA NANA programme one girl had the audacity to say that they don't have licence but get away by talking in English to the Trafficman. They do not know that they can't even get compensation from any source. The parents and the school authorities must enforce that their children can touch the vehicle only after getting licence. Most of the parents are falsely proud that their children can drive even at an young age. It is like being proud that my son can consume liqour even at a young age. This is more risky than even having liqour. All those who read Idli Vadai must atleastt vow that they will not permit their children to drive without licence, or talk while driving. Use of plastics is another area in which Idli Vadai can contribute. The plastic bags will ensure that Tamil Nadu becomes a dessert in 10 years time. They prevent accumulation of ground water. While many State govts. have enacted strict laws against plastics and implement the same with vigour. TN govt. has done precious little. Let socially conscious Idli Vadai take up the issue.

thangaraj said...

"அரசு மருத்துவமனைகளின் எலும்பு மற்றும் நரம்பு சிகிச்சைப் பிரிவுகளை ஒருநாள் முழுவதும் பார்வையிட வேண்டும்' என்பதை இருசக்கர வாகனம் லைசன்ஸ் தருவதின் ஒரு விதியாக கூட ஆக்கலாம் போலிருக்கிறது.
I am agree Mr.Sureshkannan words thank you idlyvadai

Anonymous said...

அரசு மருத்துவமனைகளின் எலும்பு மற்றும் நரம்பு சிகிச்சைப் பிரிவுகளை ஒருநாள் முழுவதும் பார்வையிட வேண்டும்' என்பதை இருசக்கர வாகனம் லைசன்ஸ் தருவதின் ஒரு விதியாக கூட ஆக்கலாம் போலிருக்கிறது.


Good suggestion....

சைவகொத்துப்பரோட்டா said...

சிறு அலட்சியம் நம் உயிரையே எடுத்து விடும், அவருக்கு அஞ்சலி.

கல்வெட்டு said...

சுரேஷ் கண்ணன் சொன்னது...
//"அரசு மருத்துவமனைகளின் எலும்பு மற்றும் நரம்பு சிகிச்சைப் பிரிவுகளை ஒருநாள் முழுவதும் பார்வையிட வேண்டும்' என்பதை இருசக்கர வாகனம் லைசன்ஸ் தருவதின் ஒரு விதியாக கூட ஆக்கலாம் போலிருக்கிறது.//

சுரேஷ்,
தனி மனித ஒழுக்கம் என்பது விதிகளால் வருவது இல்லை. அது சுய புரிதல் மற்றும் பக்குவத்தால் வருவது.

இணையத்தில் பிளாக் எழுதும் பலர் சாலைவிதிகளைப் கடைபிடிப்பது இல்லை.

சாரயம் குடிப்பது தவறல்ல. ஆனால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது எவ்வளவு தவறு. இன்னும் இரண்டு சக்கர வாகனத்தில் போய் இரண்டுபேரும் குடித்துவிட்டு வந்து பதிவு எழுதிக் கொண்டுதான் உள்ளார்கள்.

அது போல காரில் போய் கார் ஓட்டுபவர் முதல் அனைவரும் குடித்துவிட்டு வந்து பதிவு எழுதிக் கொண்டுதான் உள்ளார்கள்.

***
எத்தனை கூமுட்டைகள் சின்ன வயதில் (10 15 வயதில் )தன் குழந்தைகளுக்கு ஸ்கூட்டி அல்லது வேறு இரு சக்கர வாகனத்தை கொடுத்து ஓட்டச் சொல்லிவிட்டு " ஆகா என் பையன் இப்பவே புடுங்குவான்" என்று ஜம்பம் அடிக்கிறார்கள் தெரியுமா?

**


நீங்கள் சொன்னபடி "அரசு மருத்துவமனைகளின் எலும்பு மற்றும் நரம்பு சிகிச்சைப் பிரிவுகளை ஒருநாள் முழுவதும் பார்வையிட வேண்டும்" என்று சட்டம் போட்டால் , அப்படிப் பார்த்துவிட்டதாக சான்றிதழ் வாங்கவும் கொடுக்கவும் இதே கூட்டம் இருக்கும்.

பிளாக்கில் டிக்கெட் வாங்கி (அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட) படம் பார்த்து விமர்சனம் எழுதுபர்களும் , அயல்நாட்டு படங்களை மட்டும் திருட்டு டிவிடியில் பகிரங்கமாக போட்டுக் காட்டி அதையும் பெருமையாக ஒரு சேவைபோல சொல்லும் ஒருவகையான சேதாரக் கும்பல்தான் அதிகம் பதிவுலகில் ..எனவே நீங்கள் சொல்வது கதைக்காவாது.

:-(((

.

வீரராகவன் said...

பள்ளியில் படிக்கும்போதே, பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும்போதே டூவீலர், பைக் வாங்கி கொடுத்து பிள்ளைகளை குட்டிசுவராக்கும் முட்டாள் பெற்றோர்கள் திருந்தினால் ஒழிய இதற்கு வேறு வழியில்லை.
கோவையிலுள்ள கோவைப்புதூரில் உள்ள ஒரு பள்ளி முதல்வர் பணக்கார பெற்றோர்கள் அவன் டியூஷன் செல்வதற்காக என்று மாணவர்களுக்கு பைக் வாங்கி கொடுப்பதையும் தங்களால் கண்டிக்க இயலவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். மேலும் கோவையில் பல பள்ளி முதல்வர்களும் இது குறித்து கவலைப் படுகின்றனர். இது முழுக்க முழுக்க பெற்றோர்கள் செய்யும் தவறு.
பொதுவாகவே சாலை விதிகளை ஓட்டுபவருக்கு மட்டுமல்ல நடப்பவருக்கும் சேர்த்து என்பதை மறந்து லாரி வந்தால் ஓடிப் போவதையும், ஸ்கூட்டி போன்ற வண்டிகள் ஹாரன் அடித்தால் கூட ஒதுங்காமல் பிரேக் பிடிக்கவில்லையென்றால் திட்டுவதும், நான் பார்த்திருக்கிறேன். பாதசாரிகளுக்கு பொறுப்பு வரவேண்டும். என் நண்பர் இராஜேந்திரனின் அண்ணன் இதே போல் விபத்தில் சிக்கி இறந்தார்.
எமது அனுதாபங்கள்.
திருந்துங்கய்யா ! காசா பணமா, திருந்தித்தான் பார்ப்போமே

Suresh S R said...

நான் ஏற்கனவே இதில் அடிப்பட்டவன்.
என்னுடைய இரு சக்கர வாகனம் காரின் மீது மோதி, நான் கீழே விழுந்து தலை road-ல் மோதியது.
தலை கவசம் அணிந்திருந்தபடியால் வெறும் கால் எலும்பு முறிவுடன் தப்பித்தேன்.

தலை கவசம் தான் என்னுடைய உயிரை காத்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

தேவையே இல்லாத, இது போன்ற அபத்த இழப்புகள் தமிழ்நாட்டில் தொடர்வது ஒரு மிகப் பெரிய சோகம்.

ஒவ்வொரு முறை நான் சென்னையில் கார் ஓட்டும்போதும் பல டூ வீலர்கள், ஆட்டோக்கள், பஸ்கள், சாலை விதிகளையும், டிரா1பிக் லைட்டையும் மதிக்காமல் வேண்டுமென்றே சீறிப்போவதைப் பார்த்து நான் ’திக்’குறுகிறேன். சென்னையின் பல முக்கிய தெருக்களில் ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் ராங் சைடில் ஓட்டுவதும், கண்டபடி ஒருவரை ஒருவர் ஓவர்டேக் செய்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.

பொதுவாகவே நம் தெருக்களின் நிலைமை அவலம். குண்டு குழிகள், திடீர் பள்ளங்கள், எரியாத விளக்குகள்.

இதில் தண்ணி அடித்து விட்டுத் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும், ஹெல்மெட் போன்ற பாதுகாப்புகள் அணியாமல் வெகு வேகமாக ஓட்டுவதும் முட்டாள்தனத்தின் உச்சகட்டம் என்பதை ஏன் நம் இளைய சமுதாயம் உணர மறுக்கிறது? இது தான் ஆண்பிள்ளைத்தனம், பௌருஷம், ரௌத்திரம், வீரம் என்று ஏன் இவர்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

சென்னையை விட போக்குவரத்து பல்மடங்கு அதிகமாக உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெரு நகரங்களில் சாலைவிதிகள் மிக ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுகின்றன. போலீசிடம் மாட்டினாலோ, ஆட்டோமேடிக் காமெராவில் சிக்கினாலோ பெரும் பண இழப்பு தான். லஞ்சம் என்பது கிஞ்சித்தும் கிடையாது.

ஆனால், நாம் மட்டும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம்?

வரிசையில் நிற்கமறுத்து பந்தாவாக எல்லோரையும் புறந்தள்ளி அடாவடியாக முதலில் உள்ளே நுழைவது, எல்லோருக்கும் பொதுவான சாலைவிதிகளை வேண்டுமென்றே மீறுவது, பொது இடங்களில் காறிக்காறி எச்சில் உமிழ்வது, பிறர் உரிமைகளை மிகச் சாதாரணமாக மறுப்பது -இதையெல்லாம்தான் நம் புதிய சமுதாயம் புத்திசாலித்தனம், ஃபேஷன் என்று நினைத்துக் கொண்டிருப்பது ஒரு பெரிய சமூக அவலம்.

கொஞ்சம்கூட அவசியமே இல்லாமல் ஒரு வாலிபன் இப்படி இறந்திருப்பதில் அவன் சார்ந்த குடும்பத்திற்கு எவ்வளவு சோகம், படிக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.

kggouthaman said...

வண்டியின் பதிவு எண் எதுவோ, அதையே ஒரு பட்டையில் பொறித்து, அதை தலைக் கவசத்தில் ரிவட் செய்து, இந்தத் தலைக்கவசத்தைக் காட்டினால்தான் அந்த ஓட்டுனருக்கு உரிமம் என்று ஒரு ஷரத்தை கொண்டுவந்தால் - நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.