பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 22, 2010

நான் தப்பாக எதுவும் சொல்லவில்லை - அஜீத் பேட்டி

அஜீத் பேட்டி ஒன்றை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நேற்று வெளியிட்டது. வழக்கம் போல சில கேள்விகளை மட்டும் தமிழ் நாளிதழ் செய்தியாக பிரசுரித்தது. சிலர் நாளிதழ்கள் முக்கியமான வார்த்தைகளை முழுங்கிவிட்டது. அதனால் முழு பேட்டி ஆங்கிலத்திலேயே கீழே...

‘I HAVE NOT SAID ANYTHING WRONG’
He’s in the thick of a controversy that is threatening to split the Tamil film industry. The police and security guards have formed a cordon around his house and film unions are demanding apologies from him, but actor Ajith Kumar maintains that he only spoke his mind. On February 6, he asked chief minister M Karunanidhi to put an end to stars being forced to appear in public to show support for political agitations. The actor opens up in an interview with Bhama Devi Ravi


QWhen you spoke out, was it because you had been manipulated? Was it the result of personal suffering?
It was not a prepared speech, but a spur-of-the-moment thing. It came from the bottom of my heart. I have not said anything wrong. I have only expressed the truth and whatever is happening now validates my speech that the industry is being held to ransom by a handful of people.
QWhen actors and sports icons are created by society. Don’t you think they owe it to society to take a stand on social and political issues?
It is debatable that only celebrities owe society. Every citizen owes society. But when there is a sensitive political issue, we always have a classic case of too many cooks spoiling the broth. When there is a political issue, we owe it to the government and the agencies concerned to sort it out. I have a great regard for our political system, and I only hope that the political leaders empathise with the film fraternity.
QWhy can’t a star freely express an opinion on an issue?
There is one group that feels there is a need for stars to come out and endorse issues, but there is another group that says it is not a star’s business. We are caught in the crossfire. When an actor wants to take a bigger step and enter politics actively, he is prevented, even ridiculed. If you think stars should not enter politics or territories not familiar to them, you should not expect them to endorse social issues.Why is his nativity and loyalty to the land questioned? If you have a million people following a star and if he has a voice that is heard, and he wants to take a bigger step, why stop him?
QDo you think nativity is an issue here?
It is becoming so everywhere. When a fan buys a ticket for a movie or a cricket match, he does not question who is sitting next to him, his colour, creed or religion. That is the power of the arts. It binds people of an entire nation. So bringing in a communal flavour is appalling. Look at the fan base of any actor or sportsman. Fans are from different regions, strata and language groups but they are united by the sport or the cinema.
QSpeaking of cinema, would you play the role of a suicide bomber or a Naxal?
After what has happened in the past few days, I do not feel like facing the camera again. There is not much creative freedom for artistes. If you say an actor should not smoke on screen because he can influence a generation, agreed. But if that same actor wants to enter politics and influence a generation, people ask, ‘What is your business here?’
QBut you have signed your 50th film...
Yes. I have given a commitment to producer Dayanidhi Alagiri, which I will honour. But the one thing I want to do after my nativity became an issue is to get back to motor sports and do India proud. My entry for F2 has been accepted and I will be participating in the eight-country European circuit from April to October. The state should be proud that eight of the 10 top motorsports persons are from Tamil Nadu. Apart from Narain Karthikeyan and Karun Chandhok — both of whom will hopefully make it to F1, we also have Armaan Ebrahim, Parthiva Sureshwaren, myself, Aditya Patel and Ashwin Sundar in various categories. Among the bikers, we have V Naren Kumar, Preetam Dev Moses and Dileep Rogers. I hope the sport gets more sponsorship. I also wish Chennai would have a street motorsport rally, like the ones abroad.

( நன்றி: TOI )
விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? என்று திருமா போன்றவர்கள் அறிக்கை விடுகிறார்கள். பேச்சு சுதந்திரம் என்பது என்ன என்று திருமாவுக்கு தெரியாது. உங்களுக்கு ரஜினியே எழுந்து நின்று கைத்தட்டினார் அதனால் திருமா, சீமான் போன்றவர்களிடம் பயப்பட தேவையில்லை.

41 Comments:

கிரி said...

Excellent interview by Ajith!

All his questions are valid. Nadigar Sangam warned Rajini because of Rajini once again confirmed the Ajith speech (http://www.youtube.com/watch?v=jkJ4UjLvUEg).

Everyone (Cini Nattamai's) is saying that they are not threatening actors then what about V.C.Guhanathan last speech!!!

Anonymous said...

first

Anonymous said...

second

ரிஷபன் said...

பட்டர்ப்ளை எபெக்ட் என்பாங்களே அது இது தானா ? யாரோ யாருக்கோ பாராட்டுவிழா எடுக்க , அது "தலை" காமிராவே துறந்துவிடுவேன் -னு சொல்ல வைக்குதே.
இவர் மன்னிப்பு கேட்கலைன்னா பெப்சி ஒத்துழைப்பு தராதமே !! அடுத்த தயாரிப்பாளர் யாருன்னு தெரிஞ்ச பிறகுமா ?

kggouthaman said...

// நான் தப்பாக எதுவும் சொல்லவில்லை - அஜீத். //
சரியாகச் சொன்னதுதான் பிரச்னையே!

san said...

There were lots of issues going on....Why everyone giving this much response for this????....
It happens only for the Cinema Stars Why....Tell me Why...Tel me Why????????????????????

lok said...

இதுவரை எனக்கு பிடிக்காத நடிகர் அஜித் , இவருடைய மேடை பேச்சுக்கு அப்புறம் நான் தலையுடைய ரசிகன் :)
இவருடைய பேச்சுக்காக... மொக்கை படமானாலும் பார்பதாக முடிவு செஞ்சிட்டேன்

Anonymous said...

There where lots of issues .....
Why Everyonegiving this much repsonse for this Matter???
It happens only in India....
Like Slumdog Millionare.....
Why??????
Tell me Why??????

பிள்ளையாண்டான் said...

சீமானோ, திருமாவோ அவங்களா பேசலை... யாரோ ஆட்டி வைக்கிறாங்க... இவங்க ஆடுறாங்க....

தல சொல்றதப் பார்த்தா, அடுத்த படம் வருமா? அங்கேயும் ஒரு வில்லங்கம் இருக்கே!

மகா said...

nice HEAD line....

jaisankar jaganathan said...

அடுத்த பேட்டி . என் வார்த்தையை பத்திரிகையாளர்கள் மாற்றீ விட்டார்கள்

Anonymous said...

Rajini is a joker. So, you do not need to take Rajini as an advantage in Ajith's action. Whatever Ajith said is his view and I am so glad to know that he is not backing up from his statement even after a big mess. Hats off to him

ஜெயக்குமார் said...

அதாகப்பட்டது சினிமா கூட்டமைப்பின் தலைவர்களை பகைத்துக் கொண்டு யாரும் இருந்துவிட முடியாது என விடுக்கப்பட்ட நேரடி மிரட்டலுக்கு இந்த நிமிடம் வரை அசராமல் எதிர்த்து நிற்கும் தலைக்கு வணக்கங்கள்.. இவர் மற்றும் ரஜினி உறுதியாய் இருந்தால் தலைவர்கள் என சொல்லிக்கொள்பவர்களை தூக்கி வெளியே வீசிவிடுவார்கள்.

aru said...

தல வேட்டி கட்டின ஆம்பளையா..
காரியத்துக்காக விசை மாதிரி முதுகு சொரிய மாட்டாரு..தல தல தான்..

அடங்கமறு said...

தன்மானச்'அ'சிங்ககம் திருமாவின் அறிக்கை.
""இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்."

குஷ்பு விவகாரத்தில் இந்த நாய்கள் நடத்திய வன்முறைக்கு இவ்ர்களை குண்டாஸ் ஆக்டில் உள்ளே போட்டிருந்தால் இன்று 'இது' இதுமாதிரி பேசாது!
தமிழன்,தமிழ்மண்..
எல்லா ம்னுஷனுக்கும் இருக்கிறதை போல்த்தான் 'தமிழ்னுக்கும் ' ரெண்டு காலு,ரெண்டு கை,ஒரு தல் இத்யாதி..இல்ல தம்மிழனக்கு .'அது' ம்ட்டும் ரெண்டோ? ஆ.. ஊ..னா தம்ழ்ன்,தமிழ்னு கெளம்பி வ்ந்துரானுங்க.திருமாவெல்லாம் ஒரு அரசியல்வாந்தி! கேவ்லம்! எந்த அழ்குல எம்பி வேற! இன்னும் அமைச்சராகதுதான் பாக்கி?

Anonymous said...

In Tamil Nadu speaking ones mind out is a problem. Where is Kanimozhi and Karthik Chidambaram of Karuthu to defend Ajith. Thiruma and others can only speak of dalits or Lankan Tamils. There are so many Islamic Mercenries fighting in Taliban etc. Can anybody from Vidulai Siruthigal go to Srilanka and perform atleast humanitarian work. They don't consider Brahmins whose mother tongue is Tamil as tamilians. They will rather have a North Indian Chief Secretary than a Tamil Brahmin. Till today the Chief Secretary & DGP and many of the District Collector are north indians. They will not say a single word against Sonia who is only a citizen of India by choice. They will fall at her feet to get some ministerial berths for their family. No Brahmin has ever raped a dalit or set fire to any dalit colony. Only caste hindus do that including the vanniyars but Thiruma will keep a studied silence. It was Dalit boys who were beaten black and blue in the law college. Thiruma is yet to say a single word on that. Has Thiruma started the training camps for developing dalits to IAS and IPS Officers. The reservation for the creamy layer will go only against poor dalits. But the great Thiruma is supporting that cause. One has to see the poor condition in which all the district hostels of dalits students are there. Many of them are occupied by non-dalit politicians. Where is Thiruma. He is siding Karunanidhi only for his NIKE shoes and high quality of living. Why not he say that he will live only in hut and wear no footwear till the last dalit in Tamil Nadu is able to wear a shoe. Let him spell out his contribution to the ccause of dalits. When one group of Tamils are suffering here why should he talk of lankan Tamils. He deserves only to be ignored.

lok said...

/* Anonymous said...
There where lots of issues .....
Why Everyonegiving this much repsonse for this Matter???
It happens only in India....
Like Slumdog Millionare.....
Why??????
Tell me Why?????? */
ஜனநாயக நாட்டில் கோடியில் சம்பாதிக்கும் ஒருவருக்கு தனிமனித உரிமைகள் அடக்கபடுகின்றன ..
இந்த அடக்குமுறைக்கு உட்பட்டவர்கள் வேறு ஒரு நாட்டின் தனிமனித உரிமைகள் மீதான அடக்குமுறை பற்றி கூடம் போட்டு பேசுகிறார்கள்
சினிமாக்காரர்கள்... கூத்தாடிகள் என்ற ____ பார்வையில் இருந்து விலகி, இதில் இருக்கும் அரசியல் சமூக பிரச்சனையை ஆராய வேண்டும்.
" It happens only in India.... " நாராயணா இந்த NRI தொந்தரவு தாங்கமுடியல!!!

பிள்ளையாண்டான் said...

மேற்க்கண்ட பதிவை, அட்சரம் பிசகாமல் தட்ஸ்தமிழ் வெளியிட்டுள்ளது.

படிக்க...

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத்

R.Gopi said...

சினிமாவில் அசிங்க அரசியல் நுழைந்து விட்டது... “டங்குவார் பித்தளை” நாடார் அமைப்புகளை கூட்டி தன் டகால்டி வேலையை ஆரம்பித்து விட்டான்... அதே பித்தளைக்கு இப்போது வி.சிறுத்தைகள் ஆதரவு வேறு... ம்ம்ம்...

கிரி சொன்னது போல், சினி நாட்டாமைகள் நடிகர்களை மிரட்டுவதில்லை, மிரட்டவில்லை என்றால், அவரின் கடைசியாக வந்த அறிக்கையின் சாராம்சம் என்ன?

அது என்ன சமாதான புறா விடும் தூதா?? கொஞ்சலா?

என்ன நாடுடா இது?? எங்கடா போகுது??

ஜெயக்குமார் said...

// It happens only in India.... " நாராயணா இந்த NRI தொந்தரவு தாங்கமுடியல!!//

:-)

ரிப்பீட்டேய்

IdlyVadai said...

மேற்க்கண்ட பதிவை, அட்சரம் பிசகாமல் தட்ஸ்தமிழ் வெளியிட்டுள்ளது.

படிக்க...

ஆங்கில பதில் இது

After what has happened in the past few days, I do not feel like facing the camera again. There is not much creative freedom for artistes. If you say an actor should not smoke on screen because he can influence a generation, agreed. But if that same actor wants to enter politics and influence a generation, people ask, ‘What is your business here?’

தட்ஸ் தமிழ், தமிழ் மொழிபெயர்ப்பு

//கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், 'நடிகனுக்கு இங்கே என்ன வேலை?' என்கிறார்கள்.//

Agreed - missing in tamil. Agreed ?

Anonymous said...

Anonymous! Do not worry too much about tamil brahmins. They know how to survive.The present Chief Secrstery is a Brahmin.There have been other brahmin secrateries during previous 'Kazhkams"' rule also

Anonymous said...

தல தலதான் ..மனதில் பட்டதை பேச பயபட தேவை இல்லை ......
எந்த கொம்பன் வந்தாலும் உன்னை அடிச்சுக்க முடியாது .........
thala rocks

Anonymous said...

விட்டுக்கொடுப்போம்;விட்டு ஓடமாட்டோம்

அப்பா டக்கர் அமீர்பர் said...

I appreciate Ajeet your are a clever chap. Malayalee blood runs in you - tricky boy.

If you dont want to come for the function, tell your colleagues "Mate i am not interested please don't force me". you don't have guts to say this to your colleagues but in front of cheif minister you talked funny and that idiot ranjikanth appreciated it.

Did kalaingar forced you to attend, NO HE IS NOT. Why you brought this issue in to public.Karunanidhi is very gentle in this issue,not even he made a single comment about your speech.

Drama,very cheap publicity like those politicians. Welcome to politics - lead those 'C' and 'B' class youth and some anti DMK 'A 'class peoples.

If you and rajni don't want to attend meeting or function " SAY BIG NO " and that is your right. please don't cryin public. You and Rajinkanth scared about malayalees and kannadighas.

Learn from KAMALHASSAN how to behave in public.

Krish said...

HE is a real "Super Star"....I am proud of him.

Producers will come to Ajith coz he can make money for them.

KVK said...

Dear friends,
Recently i happened to view a trailor of the film and see the site www.operation- ellalan.com. After seeing it all my present troubles seemed senseless and it made me spend two sleepless nights.Kindly gothrough the site and share your views with me.I seriously want to discussthis with some friends

Don said...

The problem is not what he said, but "where" he said. He could have privately informed MK instead of in a public gathering, tarnishing DMK's image. I was surprised, it was only one(jaquar) who tried to make use of the situation. I expect more like this from Ajith and also from Rajini. When more and more celebs start speaking foolishly , the press will learn to ignore them. A new business model for celebs - "First speak whatever you have in mind ,then publicly apologise for it and get paid by the press for the news you created" .

Don said...

A nice article in dinamani - http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=201434&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

உண்மை விழம்பி said...

ஐயா!!!! அஜீத்.

மேடையில் வந்து மைக் பிடித்ததும் தான் என்ன பேஸ்ஸப் போறேன்னு யோசிச்சா, பெரிய டேஞ்சர்.

தலைமைகிட்ட சொல்றேன்னு ஜால்ஜாப்பு வாங்கினாலும் அவர்கிட்ட சொல்லணும்னா ஒரு கடிதம் எழுதி கொடுத்திருக்கணும். பப்ளிக்கா பேசினதால தான் விவகாரம் ஆயிப் போச்சு.

இது ஒரு மாயச் சுழல்.

முண்ணனி நடிகனுக்கு இப்படி பாராட்டுக் கூட்டத்தில் தலை காட்டுவதில் பைசாவுக்கு பிரயோஜனமில்லை. என்றாலும் நாளை வேறு ஏதாவது பிரச்சனை வந்தால் தீர்த்து வைக்க அரசும், அரசியலும் கண்டிஷனா வேணும்.

அரசியல் தலைவர்களுக்கு விழா வெரி இம்பார்ட்டண்ட். மக்களை சென்றடைய ஒரு பப்ளிசிட்டி வெகிகிள்.

காசு பார்க்க கலைஞர் டீ வீக்கு சான்ஸ்.

மறந்து போன குத்தாட்டத்தை மீண்டும் குமுட்டியெடுக்க யெஸ்டர் கலைஞர்களுக்கு வாய்ப்பு.

பரபரப்பு கிளம்பினால் பேட்டி எடுக்க பத்திரிக்கைகள் கீயூவில் நிற்கிறது.

நம்மைப் போல் பாமரன் தான் பாவம். அடுத்த வீட்டுல என்ன நடக்குது என்ற விவகாரத்த விட்டுபுட்டு நம்ம வீட்டுல அடுத்த வேளை அடுப்பெரிய செய்ய வேண்டியதை மறக்காமல். சும்மா வேடிக்கை பார்க்கத்தான் என்றால் ஓகே,

Anonymous said...

‘தானே கேட்டு தானே பதிலும் சொல்லிக் கொள்ளும்’ பாணியிலான அவரது அறிக்கையில் , “…இந்திரனே, சந்திரனே என்றெல்லாம் புகழ்ந்து, உங்களைத் தூக்கி நிறுத்துபவர்கள், அதே வேகத்தில் உங்களை கீழே தூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பர்….

…இல்லையேல், எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல், தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும், கோபுரக் கலசத்தின் நிலைதான் ஏற்படும்…” என்று குறிப்பிட்டிருப்பார். நடிகர்களை தன் மீது எச்சமிடும் காக்கைக் கூட்டம் என்று சொல்லாமல் சொல்லியிருப்பார் கருணாநிதி (இவர் கோபுரமாம்!).

-மனதில் எந்த அளவு வன்மம் இருந்தால் 90-ஐ நெருங்கும் ஒரு முதியவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.

Anonymous said...

இவ்வளவு கடுப்புடன் பேசும் கருணாநிதி ஒன்றை மட்டும் வசதியாக மறந்துவிடுகிறார்… பறவைகளை எப்போதாவது ஒருமுறை தன்னருகில் வரவழைத்தால் பிரச்சினையில்லை. அருகே பரஸ்பர ஆசையாய் பார்த்து, கொஞ்சி குலாவி உடனே அனுப்பி வைத்துவிடலாம். சதா சர்வகாலம் தலையைச் சுற்றி பறக்க வைத்துக் கொண்டே இருந்தால் அந்த பறவைகள் எச்சத்தை எங்கே போடும்… தலை மீதுதானே!

arul said...

thalaiku thevar peravai atharavu kodukkum

vellachamy said...

'இவ்வளவு கடுப்புடன் பேசும் கருணாநிதி ஒன்றை மட்டும் வசதியாக மறந்துவிடுகிறார்… பறவைகளை எப்போதாவது ஒருமுறை தன்னருகில் வரவழைத்தால் பிரச்சினையில்லை. அருகே பரஸ்பர ஆசையாய் பார்த்து, கொஞ்சி குலாவி உடனே அனுப்பி வைத்துவிடலாம். சதா சர்வகாலம் தலையைச் சுற்றி பறக்க வைத்துக் கொண்டே இருந்தால் அந்த பறவைகள் எச்சத்தை எங்கே போடும்… தலை மீதுதானே' 100% agreed

Anonymous said...

http://www.envazhi.com/wp-content/uploads/2010/02/suriya-stills-003.jpg

மேலே உள்ள சுட்டியில் நீங்கள் பார்க்கும் படம் போன வருஷம் வெளியான ஒரு திரைப்படத்தில் இடம் பெற்றது.

படத்தின் பெயர் ‘சூர்யா’. வந்த சுவடே தெரியாமல் போன படம்தான்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியின் ஸ்க்ரீன்ஷாட் இது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் விதவிதவிதமான படங்களை சுவரில் ஒட்டிவைத்து தினமும் வணங்குவதுபோல அந்த பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். (ரஜினி நடித்த படங்களின் வீடியோவும் படத்தில் இடம்பெறும்.)

படத்தில் ரஜினியை நோக்கி கும்பிட்டபடி இருக்கும் பையனின் பெயர் விஜய சிரஞ்சீவி.

பையனுக்கு அப்பனின் பெயர் ஜோக்கர் தங்கம்… ஸாரி ஜாகுவார் தங்கம்!

ஆங்… சொல்ல மறந்துட்டேன்.. படத்துக்கு ‘டைரடக்டரும்’ இந்த ஜோக்கர்தான். ரஜினி தமிழரா இல்லையா என்ற விவரமெல்லாம், தன் ஸ்கார்ப்பியோ மீது தானே கல்லை விட்டடிக்கும் வரை தெரியவில்லை போலிருக்கிறது!

Source: Envazhi.com

Ajith said...

// Anonymous said...
தல தலதான் ..மனதில் பட்டதை பேச பயபட தேவை இல்லை ......
எந்த கொம்பன் வந்தாலும் உன்னை அடிச்சுக்க முடியாது .........
thala rocks //

ippadiye usupethi usupethi..udamba rana kalam aakitaanagpaa..

Anonymous said...

Come on.. Idly...

Your past four posts are about Ajith and Rajini....

I feel it is too much... You can take some break to update Ajith news.. and continue after few weeks... Now write something else...

I am a regular reader of your blog... I would expect a wide coverage which you have been doing all these years..

Anonymous said...

"பாராட்டு விழா எனக்கு வேண்டாம்"
என்று அறிக்கை விட்டார் அரசன்.....!
மந்திரிகள் புரிந்து கொண்டு ...........
நாள் ஒரு துறைக்கு பாராட்டு விழா
நடந்தது ..........!

கொலை கூட செய்தார்
அரசன் .......!
"என்ன அழகாய் கொலை செய்கிறார்"
என்று கவியரங்கம்...........
பாராட்டு .....!

ஒரு கவிஞன்
பாராட்டினான் "நீ கொலை செய்து
எங்களை உயிர்பித்தாய்
என் உயிர் பித்தாய்" என்று
வார்த்தையில் விளையாடினான் ...!

வார்த்தையில் விளையாடிவிட்டு
எனக்கு பணம் வரவில்லை என்று
புலம்பிக்கொண்டு போனான்.........!

"நீ சாப்பிட்டதால் நாங்கள் பசியாறினோம்"
என்று சொன்னான் விவசாயத்துறை
அமைச்சர்....!

"உங்கள் வீடு ஒளிர்கிறது நாடு ஒளிர்கிறது"
என்று சொன்னான் மின்துறை அமைச்சர்....!

"உன் மகள் கவிதை எழுதுகிறாளா
சரி தமிழ் மாநாடு நடத்திவிடலாம் அரசரே" என்றான்
கலைத்துறை மந்திரி....!

கடைசியில் அரசன் சொன்னான்
"நாட்டிற்க்கு உண்டான அனைத்து சாலைகளும்
என் வீட்டிலிருந்தே தொடங்குகிறது,
என் மகளுக்காய் மகளிர் மாநாடு
என் பேரன் தலைமை தாங்க வேண்டுமே இளைஞர் மாநாடு,
ஒரு மகனுக்கு பாண்டிய நாடு,
இன்னொரு மகன் அடுத்த தலைவன் "

"நாடு நன்றாய் இருக்கிறது" என்றான்
மக்கள் அமைச்சர் முழித்தனர் .................!
"எனக்கு நாடு தான் வீடு வீடு தான் நாடு
என் வீடு நன்றாய் இருக்கிறது நாடு நன்றாய் உள்ளது ............
எனக்கு பாராட்டு விழா வேண்டாம் "
என்றான் ..........!"

கலைத்துறை உடனே ஏற்பாடு செய்தது
"வீடை நாடாய் கருதும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்று .......
கலைத்துறையின் ஒரு தலை கொதித்தது ......................
எதற்கு நான் வர வேண்டுமென்று
'தலை' துண்டிக்க ஆணையிடப்பட்டது ...........!

"தமிழ் உணர்வு என்றால் அரசனை பாராட்டுவது ,
அந்த உணர்வு இல்லை நீ தமிழன் இல்லை
என்று அந்த 'தலை' துண்டிக்க பட்டது
தண்டிக்க பட்டது .........!

நூறாம் அகவையில் தனக்கு
தானே சிலை வைத்தான் தானை
தலைவன் ............!
வரலாறு எழுதியது
"தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன் என்று"
கலைத்துறை அப்பொழுதும் பாராட்டு விழாவிற்கு
தயாரானது ............!
Author:http://vennirairavugal.blogspot.com/2010/02/blog-post_22.html

Anonymous said...

கலைஞர் கருணாநிதிக்கு வாராவாரம் யாராவது ஒரு பாராட்டு விழா நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முன்பு தமிழக, இந்திய, உலக வரலாற்றிலேயே யாருக்கும் இந்த மாதிரி பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டதில்லை என்றே தோன்றுகிறது. கின்னஸ் புத்தகத்தில் கூட இது இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது.
துதிபாடிகள் பேனலில் ரஜினியும், கமலும் வெகு வேகமாக வாலி. வைரமுத்துவை முந்திக் கொண்டுவிட்டார்கள். பரூக் அப்துல்லா முதல் குன்றக்குடி அடிகள் வரை நாட்டின் பல மூலைகளிலிருந்தும் வந்து பாராட்டுகிறார்கள். காஞ்சிபுரத்தில் வருடம் 365 நாளும் ஏதாவது ஓர் உற்சவம் நடக்கும். அதுபோல கலைஞரின் சாதனைகளுக்காக தினசரி ஒரு பாராட்டு விழா நடத்தவேண்டும் என்று துரைமுருகன் பேசுகிறார்.
ஜகத்ரட்சகனுக்கும் துரைமுருகனுக்கும் என்றே புதிய இலாகாவாக இவென்ட் மேனேஜ்மெண்ட் என்று ஒரு துறையைத் தொடங்கி அதற்கு மந்திரிகளாக்கிவிடலாம். ஒவ்வொரு வாரமும் யாரையெல்லாம் எந்த ஊரிலிருந்தெல்லாம் அழைக்கலாம், பாராட்டுக் கவியரங்கம் கருத்தரங்கங்களுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்றெல்லாம் திட்டமிடுவதற்கு ஒரு தனிச் செயலகமே வேலை செய்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
ஏன் இப்படி நடக்கிறது?
முதுமை இன்னொரு குழந்தை பருவம் என்பார்கள். குழந்தையைக் கொஞ்சுபவர்கள் என்னென்வோ சொல்லிக் கொஞ்சுவார்கள். அதற்கெல்லாம் அர்த்தமே கிடையாது. அன்பு மட்டும்தான் அர்த்தம். குழந்தையும் அந்த அபத்தமான, மிகையான கொஞ்சல்கள் புரியாமலே, தனக்குக் கிடைக்கும் அன்பின் சுகத்தில் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டிருக்கும். இன்று கருணாநிதியின் நிலைமை அப்படித்தானோ?

- ஞாநி குமுதம்

Anonymous said...

இல்லை,. அப்படியும் இருக்க முடியாது. ஏனென்றால் இப்போது அவரைக் கொஞ்சுபவர்கள் ஒன்றும் அன்பில் சீராட்டவில்லை என்பது அவருக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும் அனபல்ல. ஆதாயம்தான் ஆதாரம் என்பது எல்லாருக்கும் தெரியும். பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தால் இந்த ஜால்ராக்கள் எல்லாரும் தன்னைப் பொய்யாகப் புகழுகிறார்கள். மிகையாகப் புகழுகிறார்கள். உள்ளுக்குள்ளே அஜீத் மாதிரி புழுங்கிக் கொண்டே வெளியிலே நடிக்கிறார்கள். தான் மட்டும் முதலமைச்சராக இல்லாவிட்டால் இதில் பாதி பேர் கண்ணிலேயேபடாமல் ஓடிப்போய்விடுவார்கள் என்ற யதார்த்த உண்மைகள் கொஞ்சசூண்டு சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்கே புரிந்துவிடும். கலைஞர் போன்ற கூர்மையான அறிவுடையவருக்கு நிச்சயம் புரியாமல் இருக்க முடியாது.
ஆனால் எல்லாமே அவருடைய முழு சம்மதம். வழிகாட்டுதலில்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் முன் தினமே போய் விழா மேடை அலங்காரத்தைப் பார்வையிட்டுவிட்டுச் செல்கிறார். அப்படியானால் உளவியல் ரீதியாக அவருக்குத் தன்னைப் பற்றிய பாராட்டுகளை ஓயாமல் மணிக் கணக்கில் கேட்டுக் கொண்டே இருப்பதில் ஏதோ சுகம் இருக்கிறது. அப்படி இருப்பது உளவியல் சிக்கலா என்பது மருத்துவர்களின் ஆராய்ச்சிக்குரியது அல்லது வேறு ஏதோ மன உளைச்சலிலிருந்து இதுதான் அவருக்கு ஆறுதலாக இருக்கிறது என்றும் அனுமானிக்கலாம். அப்படியானால், இதுதான் அவருக்கு மருந்தாக இருக்கிறது என்று அர்த்தம்.
அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை என்று அறிந்து அவற்றிலிருந்து அவருக்கு விடுதலை தருவதுதான் உண்மையான தீர்வாக இருக்க முடியும் அதை அவருடைய குடும்பம்தான் செய்யமுடியும்; செய்ய வேண்டும் அதைச் செய்யாமல் லட்சக்கணக்கான ரூபாய்களையும் பலருடைய நேரத்தையும் உழைப்பையும் வாராவாரம் பாராட்டு விழாக்களில் வீணடித்துக் கொண்டிருப்பது அபத்தமானது.
என் கவலையெல்லாம் இந்த அபத்தங்கள் கலைஞருடன் முற்றுப்புள்ளியடையாமல் அடுத்த வாரிசுடன் கமாவாக ஆகிவிடுமோ என்பதுதான்.

- ஞாநி குமுதம்

Anonymous said...

கலைஞர் ஜூன் மாதத்துக்குப் பிறகு பதவிகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். முன்டே நான் சுட்டிக்காட்டியதைப் போல் செய்வதைச் சொல்வோம்; சொன்னதைச் செய்வோம் என்பது தி.மு.க.,வின் பிரசார வாக்கியம். அவர் ஓய்வு பெற்றபிறகு அழகிரியும், கனிமொழியும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும் தி.மு.க.,வில் மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை.
அடுத்த முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கும் ஸ்டாலினுக்கும் அடுத்த முதலமைச்சராக வர ஆசைப்படுபவர்கள் என்று நாம் கருதக்கூடிய அழகிரி, கனிமொழி ஆகியோருக்கும் கருணாநிதியின் அனுபவம். ஆற்றல் எதுவும் இல்லாதபோதும் அவருக்கு நிகராதன பிரும்மாண்ட கட் அவுட் வழிபாடுகள் இப்போதே நடக்கின்றன. கருணாநிதிக்கு ஜகத்ரட்சகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி மாதிரி இவர்களுக்கும் இவென்ட் மேனேஜ்மெண்ட் குழுக்கள் உருவாகிவிட்டன.
அழகிரியும் கனிமொழியும் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்பது தெரியவில்லை குறைந்தபட்சம் அடுத்த தி.மு.க., முதல்வராக வரும் வாய்ப்பு 99 சதவிகிதம் உள்ள ஸ்டாலினை நான் பணிவன்புடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து நீங்களாவது இந்த அபத்தங்களை இப்போதே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கிப் படிப்படியாக நிறுத்த வேண்டும். நீங்கள் ஒரு கூட்டத்துக்கு நிகழ்ச்சிக்கு வந்தால் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்கு தெருவை நாசப்படுத்தி பத்தடிக்கு ஒரு ஃப்ளெக்ஸ் வைப்பதை உடனே நிறுத்தச் சொல்லுங்கள்.
இப்படிப்பட்ட வழிபாடுகள், ஆராதனைகள், ஆர்ப்பாட்டங்கள், கெடுபிடிகள், ஒரு அரசியல் தலைவரை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிடும் என்பதற்கு இரண்டு உதாரணங்கள் உங்கள் கண் முன்னாலேயே இருக்கின்றன. ஒருவர் ஜெயலலிதா இன்னொருவர் திருமாவளவன்.
ஆந்திர அரசியலில் அண்மையில் நடந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சிரஞ்சீவியின் கட் அவுட் அரசியலுக்கு முன்னால் (மறைந்த) ராஜசேகர் ரெட்டியின் (உருட்டல் மிரட்டல் ப்ளஸ் உதவித்திட்ட) அரசியல் அடிபட்டுவிடும் என்று அரசியல் நோக்கர்கள் சொன்னார்கள். அப்படி ஆகவில்லை, காரணம் ரெட்டியின் அரசியல் அதன் கோளாறுகளை மீறி மக்களுடன் நெருக்கமாக இருக்க முடிகிறது. கட் அவுட் அரசியல் அல்ல அது உண்மையில் அரசியல் தற்கொலைக்குச் சமம்.
தற்கொலை என்றதும் இந்த வாரத் தமிழக சாதனை பெரும் கவலை தருகிறது. தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்திய சராசரியைப் போல இரண்டு மடங்கு இங்கே அதிகம். இந்தியாவிலேயே தற்கொலையில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது.

இலவச டி.வி. ஏறத்தாழ இலவச அரிசி, இலவச விவசாய மின்சாரம், மருத்துவக் காப்பீடு என்றெல்லாம் தமிழ்நாட்டில் தேனும் பாலும் தெருவெல்லாம் ஓடுவது போல கலைஞர் கருணாநிதியின் ஆட்சி சித்திரிக்கிறது. ஆனால் தேசிய சராசரியை போல இருமடங்கு இங்கே தற்கொலை என்றால் மக்கள் மத்தியில் வாழ்க்கை பற்றிய பெரும் அதிருப்தியும் மன உளைச்சலும் நிலவுவதாகத்தானே அர்த்தம்?
தலைவரின் மன ஆறுதலுக்கு 365 நாட்களும் பாராட்டுவிழா நடத்த துரைமுருகன்கள் இருக்கிறார்கள். மக்களின் மன ஆறுதலுக்கு? டாஸ்மாக்கும் மானாட மயிலாடவுமா?

- ஞாநி குமுதம் அய்யோ, பாராட்டுறாங்க....!