பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 18, 2010

ரா ரா ரஜினி !

வழக்கமாக ஆவி, பேய், பிசாசு, பூதங்களை வைத்து நம் ஆட்கள் படம் செய்வார்கள். மொழிக்கு தகுந்தார் போல அந்த பேய் தமிழ், தெலுங்கு, கன்னடம் இல்லை மலையாளம் பேசும். எந்த மொழி பேசினாலும் படத்தில் காதலனைக் கொன்ற கொடூரனை காதலி நொங்கெடுக்கும்.

விஷயம் இது தான். இப்படி சினிமாவில் வந்த பேய் அதில் நடித்தவர்களை பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. கன்னடமொழியில் தனது வேலையை காட்டியிருப்பதால், தமிழ் நடிகர் ஒருவர் அதன் தீங்கிலிரிந்து தப்பிக்க பரிகாரம் செய்து வருகிறார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.


கடைசியாக ஆப்த மித்ரா-2” (கன்னட சந்திரமுகி-2) நடித்து படம் வெளிவருவதற்கு முன்பே விஷ்ணுவர்த்தனை கொன்றது படத்தில் வந்த 'நாகவல்லி' தான் என்று நம்புகிறார்கள்.

இதற்கு முன்பு ஆப்த மித்ரா-1ல் நடித்த சவுந்தர்யாவையும் கொன்றது இதே 'நாகவல்லி' என்கிறார்கள் அதற்கு காரணம் - 2004ல் சவுந்தரியா ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார், படம் ரிலீசுக்கு ஒருமாதம் முன்னர்!

அதன் தமிழ் ரீமேக்கில் நடித்தால் உங்களுக்கு ஏதேனும் கெடுதல் வரலாம் என யாரோ கொளுத்திப்போட, ரஜினி சந்திரமுகி-2 வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.

இந்த நாகவல்லியிடம் தப்பிக்க தற்போது ரஜினியின் குடும்பமே பரிகாரம் செய்ய மைசூர்ப்பக்கம் உள்ள கோவில்களுக்கு சென்று வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சென்று சில யாகங்கள் செய்து முடித்துள்ளார்கள்.

பயப்பட அளவே இல்லைபோல...சரி, அப்படியே நாகவல்லி பழிவாங்க ஆரம்பித்தாலும் மோகன்லாலிடமிருந்தல்லவா அது தொடங்க வேண்டும்? அவர்தான் நாகவல்லியின் காதலனை முதன்முதலில் மலையாளத்திரையில் கொன்றவர். அங்கே ஜெயராம் மாதிரி ஆட்கள் இருப்பதால் பேய்களுக்கு பயம் போல.

படம் பார்த்த நமக்கும் ஏதேனும் ஆகாமல் இருக்க நாகவல்லியை பிரார்த்தனை செய்யுங்கள். நமக்கெல்லாம் யாகம் செஞ்சு கட்டுபடி ஆகாது.


பின்னூட்டம் போடும் அன்பர்கள் ஜாக்கிரதையாக போடுங்க. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகப் போகிறது!


( Source: TOI )


22 Comments:

Anonymous said...

Enna kodumai sir ithu?

Kannan said...

'ரஜினி நடிக்க போகிறார்' என்ற செய்தியை கேள்விப்பட்டு 'நாகவல்லி' என்ன பரிகாரம் செய்ததோ நல்லவேளை அவர் சந்திரமுகி-2 வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்.

ஜெயக்குமார் said...

சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..

kggouthaman said...

அப் ...... அங் .............. சிக் ..........
பா ஆ ஆ ........ஆ --- ??? யா
கா ............. சீக் .......உம ... ஆ ...உம

சைவகொத்துப்பரோட்டா said...

//Enna kodumai sir ithu?//

ரிப்பீட்...யேய்.........

jaisankar jaganathan said...

gouthaman உங்க comment புரியலியே.

//'ரஜினி நடிக்க போகிறார்' என்ற செய்தியை கேள்விப்பட்டு 'நாகவல்லி' என்ன பரிகாரம் செய்ததோ நல்லவேளை அவர் சந்திரமுகி-2 வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்.
//

repeataiii

Anonymous said...

patha vechitiye parattai ;)

அமுதப்ரியன் said...

சந்தேகங்கள்:
[1] ஒரு வேளை தனக்கும் அஜீத் நிலைமை வந்துடக்கூடாதுன்னு யாகம் பண்றாரோ என்னமோ?

[2] வேட்டைக்காரன் படத்தை சன் வெளியிட்டு மிகப்பெரிய(ஹிஹிஹிஹி) வெற்றி அடைந்தது போல் தனது எந்திரன் படமும் வெற்றி(டத்தை)யை அடைந்து விடக்கூடாது என்று யாகம் செய்கிறாரோ என்னமோ?

[3] தைரியலட்சுமியை மட்டும் நேரில் சந்தித்து கூப்பிட்டு விட்டு விருமாண்டியை நேரில் அழைக்கவில்லை என்பதற்காக தனது எந்திரன் படத்திற்கு 2010 சிறந்த படம் விருது வழங்காமல் போய் விடுவாரோ என்பதற்கு பயந்து யாகம் செய்தாரோ என்னமோ?

[4] அதிமுக்கியமாக தனது அடுத்த படத்தை P.VASU அவர்கள் இயக்க கூடாது என்று நினைத்தாரோ என்னமோ?

அட போங்கப்பா போய் வேலையைப் பாருங்க, நமக்கு நேரமேயில்லை.

அமுதப்ரியன்

blogpaandi said...

ithu eppdi irukku?

Anonymous said...

// patha vechitiye parattai ;) //

:O :O :O :O :O :O

Anonymous said...

இன்னும் ஆயிரம் பெரியார் பிறந்து வந்தால்கூட உங்களைமாறி ஆட்க்களையெல்லாம் மாற்றவே முடியாது! இட்லிவடை,நீங்கள் ஓரு பொறுப்பான(??) பதிவர் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீங்களும் பேய், பிசாசு என்ரு பதிவு போட்டு இந்த மாதிரி மூடநம்பிக்கைகளை மேலும் வளர்க்கலாமா? ஏற்க்கனவே மக்கள் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறார்கள்.அதுவும் ஒரு பிரபல நடிகரின் படத்தை போட்டு இந்த பதிவு.. இனி.. கிளம்பு அந்த கோயிலுக்குன்னு ஒரு கூட்டம் இப்பவே தயாராகிவிடும்.அதுவும் "சூப்பர்" நடிகரே போய் வந்து விட்டாரே!!.இன்னும் ஒரிரு மாதங்களில்
அந்த சாதரண கோயில் மிகவும் பிரபலமாகிவிடும்!!
"ஊர் உருப்படாது சார்"

கக்கு - மாணிக்கம் said...

சந்திர முகி வேண்டாம் என்பது நல்ல விஷயம் தானே. எனக்கு என்னவே திரை உலகமே இல்லை என்ற நிலை வந்தால் இங்குள்ள " அமைதி" சுவர்கத்தில் கூட இல்லை, கிடைக்காது. ஒரு பத்து வருடம் திரைப்படங்களே இல்லை என்றால் தமிழகம் எவ்வளவு அமைதி பூங்கா வாக இருக்கும். டிவி களையும் சேர்த்தே சொல்கிறேன்.

Anonymous said...

பார்ட் - 3யை தலைவர் கதை-வசனத்தில், குடும்ப நிறுவனம் தயாரித்தால் ஆவி, பேய் எல்லாம் பயந்து ஓடி விடாதா ஓடி?

அது சரி பேயாக யாரை நடிக்க வைக்கலாம்?

ஹ..ஹ..ஹ..ஹா.... லக லக லக லக கலா கலா?

Anonymous said...

Those temples will get more crowd,IV will get more chances to sell stale stuff.

ஆதி மனிதன் said...

ஆரம்பிச்சிட்டாங்க டோய். இப்படியெலாம் பயம் காட்டினா சன் டி. வி. எந்திரன வாங்காதுன்னு/கேக்காதுன்னு யாரு சொன்னா?

ரிஷபன் said...

கெளதமன் சாரை தாக்கிடுச்சு போலருக்கே !!!!
பின்னூட்டம் இடுபவர்கள் ஜாக்கிரதைய இடவும் என்று இட்லி சொல்லியதை கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கிட்டு இருக்க கூடாதா ?

Anonymous said...

This is a really very funny posting. I was under so much work pressure and when I read this I rolled out laughing - some relief really.
For once your yellow band comment is a genuine rib tickler not politically marinated....or is it??

Anonymous said...

// கெளதமன் சாரை தாக்கிடுச்சு போலருக்கே !!!!
பின்னூட்டம் இடுபவர்கள் ஜாக்கிரதைய இடவும் என்று இட்லி சொல்லியதை கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கிட்டு இருக்க கூடாதா ? //

Aiyo.....I cannot stop laughing :O

செங்குட்டுவன் said...

தவறான ஆன்மீகத்தை தமிழகத்தில் பரவ விட்டவர்களில் ரஜினி முதன்மையானவர். எல்லா தவறுகளையும் செய்து விட்டு மாதம் ஒரு முறை திருவண்ணாமலையை கிரிவலம் வந்து விட்டால் எல்லா பாவங்களும் போய்விடும் என்ற மாயதோற்றத்தை உருவாக்கியவர் இந்த ரஜினி. இவர் போலி ஆன்மீகவாதி .தனி மனித ஒழுக்கம் தான் ஆன்மீகத்தின் முதல் படி என்பதை அறியாத இவர் ஆன்மீகத்தின் அடிப்படையே தெருயாதவர் எனலாம்

R.Gopi said...

//தனி மனித ஒழுக்கம் தான் ஆன்மீகத்தின் முதல் படி என்பதை அறியாத இவர் ஆன்மீகத்தின் அடிப்படையே தெருயாதவர் எனலாம்//

செங்குட்டுவன்.... ரஜினியிடம் என்ன தனிமனித ஒழுக்கமின்மையை கண்டு விட்டீர்கள்... மற்றவர்கள் இவரை விட எந்த அளவு மேல் என்று சொல்ல முடியுமா??

வாய் இருந்தா எதை வேண்டுமானாலும் பேசுவதா சார்??

Silicon Sillu said...

அவர் மைசூர் ஹோட்டல் லில் தங்கினர், அங்கிருந்து பல கோயில்களுக்கு போனார் என்பது மட்டுமே செய்தி. அப்படி இருக்கும்போது அவர் யாகம் வளர்த்தார் என்றும், பேய் ஓட்ட பூஜை செய்தார் என்றும் அதற்கு ஒரு நாராசமான கான்றனத்தையும் நீங்களே சொல்வது செம காமெடி. ரஜினி எது செஞ்சாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கு. ஆனா எப்பவும் ரஜினிக்கு ஜால்ரா மட்டுமே போடும் இட்லிவடை என் இப்போ இப்படி ஒரு செய்தி போட்டு நடுநிலை வேஷம் போடுது

அது மட்டுமில்லை, ரஜினி ஒரு மூடனம்பிக்கைவாதியாகவோ போலி ஆண்மிகவாதியாகவோ இருப்பதால் யாருக்கு என்ன நஷ்டம், ஆனால் போலி பகுத்தறிவுவாதி கருணாநிதி இருக்கும் வரை தமிழகத்தை காப்பாத்தயாராலும் முடியாது

- கமல் ரசிகன்

பொற்கோ said...

இனி என்ன சூப்பர் ஸ்டாரு ? சும்மா ஸ்டார் கூட இல்ல இனி. எழுதி வச்சுக்கோங்க இட்லி. இப்படியே சூ.ஸ் போய்கிட்டு இருந்தா இமய மல தான் கடைசில சொல்லிப்புடுங்க.