பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 15, 2010

மை நேம் இஸ் கான் - விமர்சனம்


படப்பெயரைக் கேட்டவுடன் ஷாருக் கானின் வெற்றிக்கதையைச் சொல்வார்கள் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் படம் பார்த்தபின்புதான் கானின் கதைக்கும், இந்தப்படம் சொல்லும் கதைக்கும் சம்பந்தமே இல்லை என்பது.

ஒரு குரூர ஜோக் ஒன்று பல ஆண்டுகளாக உலவுகிறது.. அதாவது எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகளல்ல, ஆனால் எல்லாத்தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே என்று.

இப்படத்தில் ”கான்” என்ற தனதுப் பெயரை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஆக்கி மற்றவர்கள் அனைவருக்கும் ஒரு சிலர் செய்யும் செய்கைக்கு எப்படி எல்லா இஸ்லாமியர்களையும் பொறுப்பாக்க முடியும் எனக் கேட்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஒரு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனை செய்கின்றனர். மனவளர்ச்சி குறைந்த ( ஆட்டிஸம்) ஷாருக்கானின் கையில் பழக்க தோஷத்தால் சிறு, சிறு கற்களை வைத்து அதை உருட்டிக்கொண்டே இருக்க சோதனை செய்பவர்கள் உஷாராகி அவரை தீவிரவாதி என்ற கோணத்தில் சோதனையிடுகின்றனர். சோதனையில் அவர் ஆட்டிஸம் குறைபாடால் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான அடையாள அட்டையும் கிடைக்கிறது. அவரை போகலாம் எனச் சொல்லும்போது ”நான் அமெரிக்க ஜனாதிபதியைப் பார்ப்பேன், அவரிடம் என் பெயர் கான், நான் தீவிரவாதி இல்லை” என்று சொல்வேன் எனச் சொல்லிச் செல்கிறார். அதை அமெரிக்க அதிபரிடம் சொல்வதும், அதற்காக அவர் முயல்வதும், அதன்மூலம் ஏற்படும் சோதனைகளும், இறுதியில் அமெரிக்க அதிபரிடம் அவர் சொல்ல நினைத்ததைச் சொல்வதும்தான் கதை.

2001ல் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. ஆனால் 2010ல் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. ஏன் இப்போது இப்படம் வெளியாக வேண்டும் என்பதற்குக் காரணம் ஷாருக் இப்போதுதான் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமியப் என்ற பெயர்கொண்டதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார். செய்தியும் சூடாக இருப்பதால் உடனே படமாக்கி விட்டார்கள். அதில் உலகிற்கு ஒரு செய்தியாக “ நல்லவர் மற்ற்றும் கெட்ட்டவர் மட்டுமே உலகில் உண்டு” மதத்தை மட்டுமே காரணம் காட்டி ஒரு இனத்தையே தீவிரவாதிகளாக சித்தரிக்காதீர்கள் என தான் சார்ந்துள்ள இஸ்லாமிய மதத்திற்கு ஆதரவான செய்தியைச் சொல்லி அதைக் காசாக்கவும் செய்திருக்கிறார்.

ரிஸ்வான் கான் (ஷாருக்கான்) மற்றும் அவனது தம்பியும் அன்பான தாயால் வளர்க்கப்படுகின்றனர். ஷாருக்கின் அம்மா மனவளர்ச்சி குறைந்த தனது மகனுக்கு, உலகில் இரண்டுவிதமான மக்களே உள்ளனர். ஒன்று நல்லவர்கள், மற்றவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார். அதையே தனது வாழ்க்கையின் அளவுகோலாகக் கொண்டு வாழ்கிறார்.

காலப்போக்கில் அண்ணன் வளர்ந்து அமெரிக்கா சென்றுவிட சிறிது காலத்தில் அம்மா மறைகிறார். எனவே தம்பியையும் உடனழைத்துச் செல்கிறார். அண்ணன் அமெரிக்காவில் அழகுசாதனப் ;பொருட்களை தயாரித்துவிற்கும் கம்பெனி வைத்திருக்கிறார். அங்கு ஷாருக்குக்கு விற்பனைப்பிரிவில் வேலை. எனவே அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் பார்லர்களுக்கு விறபனைக்குச் செல்கிறார்.

கண்டு பிடித்திருப்பீர்களே, ஆமாம் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டான பின்பு கனவனைப் பிரிந்த கஜோல் ஒரு அழகு நிலையத்தை நடத்தி வருகிறார். சிறிது நாள் பழக்கத்திலேயே இருவரும் திருமணம் செய்துகொள்வோம் எனத் தீர்மானிக்கும் அளவு நட்பு வளர்கிறது. கஜோலுக்கு ஏற்கனவே சொன்ன ஒரு கசப்பான பிளாஷ்பேக்கும் உண்டு. நல்லவேளையாக அதை படமாக்காமல், ஷாருக்கே கண்டுபிடித்து பார்வையாளர்களுக்குச் சொல்லிவிடுகிறார். அதெப்படிய்யா இப்படிக் கலியாணம் செஞ்சுப்பாங்க என்பவர்களுக்கு, கஜோலும், ஷாருக்கும் நடித்தால் அவர்கள்தான் திருமணம் செய்துகொள்வார்கள் என்பதும் அது இயல்புதான் என்பதும் தெரிந்திருக்கும். மற்றவர்களுக்குத்தான் இந்த சந்தேகமெலாம் எழும்.


கஜோலை திருமணம் செய்ய ஷாருக் முடிவெடுப்பதை மதத்தைக் காரணம் காட்டி எதிர்க்கிறார் சகோதரர்.. ஷாருக்கைப் பொருத்தவரை உலகில் நல்லவர் மற்றும் கெட்டவர் மட்டுமே இருப்பதால், கஜோலை நல்லவர் என்ற அடிப்படையில் மணம்புரிகிறார். .

வாழ்க்கை கஜோலுடனும், கஜோல் மகனுடனும் இன்பமாய்க் கழிகிறது. கஜோலும் மந்திராகான் ஆகிறார். மகனும் சமீர்கான் ஆகிறான்.

இந்த நிலையில் செப்டம்பர் 11 நடக்கிறது. இரட்டைக் கோபுரத்தின்மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்கி அந்தக் கட்டிடம் அழிந்தபின்பு அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கிறது. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, அவநம்பிக்கைகள் எப்படி இருந்தது என்பதை அங்கு இஸ்லாமியர்கள் கடையில் அமெரிக்கர்கள் வந்து கிண்டல் செய்வதன் மூலமும், ஷாருக்கின் அண்ணி வேலை செய்யும் கல்லூரியில் செப்டம்பர் 11க்குப் பிறகு அவரது மாணவர்களின் பார்வை மாறும் விதத்தை வைத்தும், கஜோலின் மகனை சக மானவர்கள் ஒதுக்கி வைப்பதன் மூலமும், அவர்கள் அவனை இஸ்லாமியன் என்பதற்காக ஒசாமா பிலேடன் படத்தை அவனது பள்ளி லாக்கரில் வைப்பதன்மூலமும் அழகாக காண்பிக்கின்றனர். அந்த வெறுப்பின் நீட்சியாக கால்பந்து மைதானத்தில் வைத்து இஸ்லாமியன் என்பதற்காக அமெரிக்கச் சிறுவர்கள் அடித்துத் துவைக்கின்றனர், குற்றுயிரும் குலைஉயிருமாய் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் இறக்கிறான்,அந்த 13 வயதுச் சிறுவன்.


அவனது வெள்ளைக்கார நண்பன் இதனைப் பற்றி தெரிந்திருந்தும் கொலை செய்தவர்களால் மிரட்டப்படுவதால் சொல்லாமல் இருக்கிறான். இதனால் அச்சிறுவனைக் கொன்றவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைப்பதில்லை. மத துவேஷத்தால்தான் அமெரிக்கர்களை காவல்துறை கைது செய்வதில்லை என நினைக்க நேரிடுகிறது கஜோலுக்கு. கஜோல் காவல் அதிகாரிகளிடம் எனது மகனைக் கொன்றவர்களை நானே கண்டுபிடிப்பேன் எனக் கூறிச் செல்கிறார்,

மகன் இறந்த ஆத்திரத்தில் கஜோல் ஷாருக்கிடம், உன்னைத் திருமணம் செய்து கொண்டதாலும், எனது மகனுக்கும் “கான்” என்ற அடைமொழியை அவனுக்கு வைத்ததாலும் அதுவே அவனுக்கு எமனாக அமைந்தது. எனவே என்னைவிட்டுப்போய்விடு என ஒரு பலவீனமான தருணத்தில் சொல்லிவிடுகிறார். எனவே அப்படியே அமெரிக்கா முழுக்க சுற்றி வருகிறார் ஷாருக். ஓரிடத்தில் அமெரிக்க அதிபர் ( புஷ்) வருகைக்கு ஏற்பாடாகி இருக்கிறது. அங்கு சென்று "Mr.President, My Name Is Khan and I am not a terrorist" எனக் கத்துகிறார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றிருப்பதுபோல அவர் கூறிய டெர்ரரிஸ்ட் என்ற வார்த்தையை மட்டும் கவனிக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துவிட, அப்போது அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி சேனலுக்காக படம்பிடிக்கும் குழு ஷாருக் பேசியதையும் பதிவு செய்கிறது. அதை வைத்து ஒரு நிகழ்ச்சி தயாரிக்கவும், ஷாருக்குக்கு உதவவும் முயல்கின்றனர்.

முதலில் தயங்கும் நிகழ்ச்சி இயக்குனர் பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார். நிகழ்ச்சி ஒலிபரப்பான பின்பு ஷாருக்கின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி அவர் கைது செய்யப்படும் முன் எஃப்.பி.ஐக்கு பேசிய தொலைபேசி உரையாடலைப் போட்டுக் கேட்கிறார். அங்கு மசூதியில் நடக்கும் வெறுப்பியல் பிரச்சாரத்தைக் கூறி அதற்கு ஒரு டாக்டர் பட்டம் பெற்றவர்தான் காரணம் என்பதையும் ஷாருக் எஃப்,பி.ஐக்கு சொல்லி இருப்பது தெரியவர ஷாருக் விடுதலையாகிறார்.

ஷாருக் விடுதலைக்குப் பின்னர், காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த தீவிரவாதக்குழு உறுப்பினன் ஒருவன் ஷாருக்கைக் கத்தியால் குத்த சாக கிடந்து பின்னர் பிழைக்கிறார். ஷாருக்கைப் பற்றி முழு உண்மையும், நல்ல மனத்தையும் அறியும் கஜோல் ஷாருக்கிடம் சேர்கிறார். அட்லாண்டாவுக்கு வரும் அமெரிக்க அதிபரைப் பார்க்கச் செல்கிறார் ஷாருக், நான் தீவிரவாதி இல்லை எனச் சொல்வதற்காக. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஷாருக் செய்த உதவியைப் பற்றி தெரிந்த அதிபரே ஷாருக்கைப் பார்க்க விரும்ப அவரைச் சந்திக்கிறார் கான். அவரிடம் “ My Name is Khan and I am not a Terrorist" என்கிறார். தெரியும் என்கிறார் அதிபர். கான் என்ற பெயர் வைத்ததாலேயே என மகனை இழந்தேன் எனக்கூறும் ஷாருக்கிடம் வருத்தம் தெரிவிக்கிறார் அதிபர்.

படம் முழுக்க இஸ்லாமியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதுபோலவும், இரட்டைக் கோபுரத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றியும் அதிகம் அலட்டிக்கொள்ளவே இல்லை. அங்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடும் ஷாருக்கை மற்றவர்கள் விரோதமாகப் பார்ப்பதுபோல சித்தரித்தரிப்பது சினிமாத்தனமாக இருக்கிறது.

மசூதிகளில் நடக்கும் வெறுப்பியல் பிரச்சாரம் குறித்து காட்டிக் கொடுக்கிறார். முழு கண்கானிப்பு இருக்கும் அமெரிக்க மசூதிகளிலேயே இப்படி நடக்கிறதெனில், சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக கொலைபாதகத்தில் நேரடியாக ஈடுபட்டவனையே இன்னும் விசாரனை என்ற பெயரில் போஷித்து வரும் இந்தியாவின் மசூதிகளில் எவ்வளவு வெறுப்பியல் பிரச்ச்சாரம் நடைபெறும் எனபதை நினைக்கவே பயமாய் இருக்கிறது.


ஷாருக்கான் இந்தப் படத்தின் வெற்றிக்கு யாருக்கேனும் நன்றி சொல்வதாய் இருந்தால் அது பால்தாக்கரேவுக்கு மட்டுமே. ஒரு சராசரிப் படத்தை, இஸ்லாமிய தீவிரவாதத்தை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு எதிராக நடக்கும் வெறுப்பை மட்டும் கண்டிக்கும் இந்தப்படம் சாதாரனமாக வந்து போயிருக்கும்,. அதை இந்த அளவு பி.ஆர்.ஓ வேலை பார்த்துக் கொடுத்த பால்தாக்கரேவுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஷாருக்.

காஜோல் - ஷாருக் கெமிஸ்ட்ரி வழக்கம்போல, நன்று.


நல்லவேளை, ஷாருக்குக்கு அமெரிக்க விமான நிலையத்தைல் ஒரு அவமதிப்பு நடந்ததால் இப்படி ஊருக்கு உபதேசம் செய்ய புறப்பட்டு விட்டார் ஷாருக். இதுவரை வேறு யாருக்கோ நடந்ததால், இதெல்லாம் ஒரு மேட்டராகவே கண்டுகொள்ளப்படாமலிருந்தது.

ஒருமுறை விரும்பினால் பார்க்கலாம். பார்த்தே ஆகவேண்டிய படமல்ல.

- ஜெய் ஹனுமான்


இந்த படத்தை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க அதிபருக்கும் கோபமே வரகூடாது என்று கான் அறிவுரை சொல்லுவதாக இருக்கும் போல!.


51 Comments:

babusyed said...

SRK was frisked at US airport AFTER the filming, not Before that, i believe. need to check timeline

Anonymous said...

Whenever something like 9/11 happens you say, ‘This is not Islam.’ I believe that. But you keep telling us what Islam isn’t. You need to tell us what it is and show us how its positive interpretations are being promoted in your schools and mosques. If this is not Islam, then why is it that a million Muslims will pour into the streets to protest Danish cartoons of the Prophet Muhammad, but not one will take to the streets to protest Muslim suicide bombers who blow up other Muslims, real people, created in the image of God? You need to explain that to us — and to yourselves.

Anonymous said...

சிவசேனா எதிர்ப்பை மீறி ரசிகர்கள் கூட்டம்; ஷாரூக்கான் படம் வசூல் சாதனை


ஷாரூக்கானின் “மை நேம் இஸ் கான்” படம் சிவசேன எதிர்ப்பை மீறி வசூல் சாதனை படைக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசான போது மும்பை நகரம் முழுவதும் சிவசேனா கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல தியேட்டர் அதிபர்கள் பயந்து போய் படத்தை நிறுத்தினார்கள். ஆனால் காங்கிரசார் ஷாரூக்கானுக்கு ஆதரவாக களம் இறங்கியதும் மறுநாள் பல தியேட்டர்களில் படம் ரிலீசானது. தற்போது 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ஓடுகிறது.

இந்தி திரையுலகில் சமீபத்திய படங்களின் வசூல் சாதனையை “மை நேம் இஸ் கான்” படம் முறியடிக்கும் என்கின்றனர். தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்கள் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகின்றது. பெர்லின் திரைப்பட விழாவில் ரூ.60 ஆயிரத்துக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு சில நிமிடங்களிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் படம் சக்கைபோடு போடுகிறது. அந்த படம் ரிலீசான 3 நாட்களில் 1.86 மில்லியன் வசூலித்துள்ளது. சென்னையில் 5 தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. காதலர் தினத்தையொட்டி நேற்று இளைஞர்களும், இளம் பெண்களும் தியேட்டர்களில் நிரம்பி இருந்தனர். இதை சாதகமாக்கி பிளாக்கில் டிக்கெட் விற்பனை நடந்தது.

ஷாரூக்கான், கஜோல் நடிப்பும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இரண்டு தடவை மூன்று தடவை என ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்ப்பதாக மும்பை தியேட்டர் அதிபர் ஒருவர் தெரிவித்தார். இப்படத்தின் வெற்றியால் வேறு இந்திப்படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன.


http://www.maalaimalar.com/2010/02/15123435/CNI03101502010.html


கிழட்டுச்சிங்கம் - செல்வாக்கை இழந்துவிட்டதா ? பேசாமல் இருந்திருந்தால் படம் பப்படமாயிருக்கும். சாருக்கானுக்கு வாழ்வுதான். 'சாருவிடமிருந்து' படம் சூப்பர் - உலகத்தரம் என்று டப்பா பத்திரிக்கையில்.. அதாங்க உயிர்மையில் எழுதிவிட்டார்(?)...!

சுழியம் said...

This is the film for "others" to know that Islam is not a bad religion.

But, when are they going to take a film to their fellow muslims telling them not to do the violence?

சீனு said...

//கஜோலும் மந்திராகான் ஆகிறார். மகனும் சமீர்கான் ஆகிறான்.//

:)

khaleel said...

i dont know why you people cant understand or accept when we say not to blame the entire community for a section of its mistakes.

you dont have to be sarcastic in your review. you can plainly mention that ' i dont like muslims'.
are you trained in RSS School?

Anonymous said...

Very bad review. Don't know whether the reviewer really watched the movie or not... Here are a few of the things to clarify.

1. Rizwan Khan is frisked in the airport becos he was chanting lines from Quran.

2. SRK was interrogated at US airport during the filming when he was going to US. He didn't make this movie based on the incident that happened to him. Know the facts before writing a review.

3. Rizwan Khan is affected by Asperger's Syndrome, and they are not manavalarchi kuraindha people. People with Asperger's Syndrome are very intelligent people. Which is clearly explained in the movie.

There is many more instances where reviewer has gone wrong.

And regarding SS, I really admire that SRK didn't budge to those goondas, and Mumbaikars gave a nice slap on Thakray's face.

Anonymous said...

ippothu therikirathu nee oru RSS enru

ஜெயக்குமார் said...

ஒரு டப்பா படத்தை ஹிட்டாக்கி விட்ருச்சி போல சிவசேனா..

:-) ஷாருக் குடுத்துவச்ச ஆளுதான். பலகோடி செலவு செஞ்சாக்கூட கிடைக்காத விளம்பரம்.

ந.லோகநாதன் said...

The movie looks good... SRK proved his influence with people. i wish him to start party for the people in mumbai

பிள்ளையாண்டான் said...

இப்ப‌வே ஆர‌ம்பிச்சுட்டாங்க‌.... சாத‌னை... வ‌சூலில் அண்டா அளவுக்கு குவிச்சுது.. அவ‌தாரை தூக்கிரிச்சுன்னு...

jaisankar jaganathan said...

//கஜோலும் மந்திராகான் ஆகிறார். மகனும் சமீர்கான் ஆகிறான்.//

ஏன் SRK sri ram kumar ஆக முடியாதா. அங்க தான் இடிக்கிறது

யோசிப்பவர் said...

//இப்படத்தில் ”கான்” என்ற தனதுப் பெயரை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஆக்கி மற்றவர்கள் அனைவருக்கும் ஒரு சிலர் செய்யும் செய்கைக்கு எப்படி எல்லா இஸ்லாமியர்களையும் பொறுப்பாக்க முடியும் எனக் கேட்கிறார்.//
இதுவே படம் சொல்லும் கருத்து என்பது தெளிவு. அப்படி இருக்கையில்,
// மதத்தை மட்டுமே காரணம் காட்டி ஒரு இனத்தையே தீவிரவாதிகளாக சித்தரிக்காதீர்கள் என தான் சார்ந்துள்ள இஸ்லாமிய மதத்திற்கு ஆதரவான செய்தியைச் சொல்லி அதைக் காசாக்கவும் செய்திருக்கிறார்.
//என்று சொல்வது உங்களது துவேஷத்தையே காட்டுகிறது.

//நல்லவேளை, ஷாருக்குக்கு அமெரிக்க விமான நிலையத்தைல் ஒரு அவமதிப்பு நடந்ததால் இப்படி ஊருக்கு உபதேசம் செய்ய புறப்பட்டு விட்டார் ஷாருக். இதுவரை வேறு யாருக்கோ நடந்ததால், இதெல்லாம் ஒரு மேட்டராகவே கண்டுகொள்ளப்படாமலிருந்தது.
//ஒன்றே ஒன்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன்.
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

Subha said...

விமரிசனம் என்ற பெயரில் இப்படி படத்தின் முழு கதையையும் எழுதுவது சரியா?

Anonymous said...

இட்லி வடைக்கு நன்றி, டிவிடில வரவுட்டு பாக்கலாம்னு நெனச்சிட்டு இருந்தேன், சத்தியமா அதைக் கூடச் செய்ய மாட்டேன். இம்புட்டுக் குதிக்கிற சாரூக்கு, குண்டு வெக்குறவய்ங்களுக்கு புத்தி சொல்ற மாதிரி ஒரு படம் புடிப்பாருங்களா

Anonymous said...

Watch and read mohammed T-shirt art from Sweden at,
http://www.mohammedt-shirt.com
Please read in English.

Rakesh said...

தயவு செய்து 1 வருடம் தமிழ்நாட்டை விட்டு வேறேதேனும் மாநிலத்தில் வசிக்கவும். உங்கள் கருத்துக்கள் பல மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது

Venkatraman said...

There are some points missed in this review and i believe this is a prejudiced one two..

1. The SRK frisking fiasco happened after the movie was announced and midway thru the shooting.

2. SRK quotes for every innocent gets killed the entire generation will be suffered and also he says for the 9/11 this is the price the community has to give..

so please correct your facts before writing

வஜ்ரா said...

கோடி ரூபாய் கொடுத்தும் கிடைக்காத பப்ளிசிட்டியை சவசேனை இந்த டப்பா படத்துக்குக் கொடுத்துள்ளது. மும்பை கருணாநிதிக்கு ஏன் இந்த வெட்டி வேலை ? வயசானால் மூளை வேலை செய்ய மாட்டேன் என்கிறது. பேசாமல் மூடிகிட்டு இருந்திருந்தால் படம் நிச்சயம் ஊத்திக்கிருக்கும்.

Anonymous said...

Super Review.

Sharukh has muslims support.
That is why the movie is a hit.
Typical Muslims all support muslim people whether its A R Rahman, SharuKH khan, The painter hussian, Saddam Hussian or Osama Bin Laden.

Anonymous said...

Super Review.

Sharukh has muslims support.
That is why the movie is a hit.
Typical Muslims all support muslim people whether its A R Rahman, SharuKH khan, The painter hussian, Saddam Hussian or Osama Bin Laden.

வலைஞன் said...

ஹிந்துக்கள் பிரச்சினையை அணுகும முறையே தவறு.
ஹிந்துக்களின் பிரச்சினை மற்ற மதத்தவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இல்லை.தமக்குள் இருக்கும் வேற்றுமை தான்! .தினந்தோறும் சண்டை போடும் ஒரு தம்பதியினர்,அண்டை வீட்டில் அன்புடன் வாழும் தம்பதியினரைப் பார்த்து பொறாமை பட்டு பயன் இல்லை. ஹிந்துக்களுக்குள் இருக்கும் ஜாதி பேதத்தால் அவர்களுக்குள் ஒற்றுமை வர வாய்ப்பும் இல்லை. மேலும் இந்த மதத்தில் நாத்திகர்களுக்கு உள்ள கட்டுபாடற்ற நிலை மற்ற எந்த மதத்திலும் கிடையாது.
இந்தியாவில் பிற மதத்தவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.(குறிப்பாக கிறிஸ்துவர்கள்)
காங் மற்றும் தி.மு.க, ஹிந்து மத விரோத கட்சிகள்.அவர்கள் கையில் அதிகாரம் உள்ளவரை இந்த பிரச்சினை வளர்ந்து கொண்டே தன இருக்கும்.

செந்தில் நாதன் said...

பட கதை முழுக்க விமர்சனத்தில்.. ஷாருக் பற்றி கிண்டலும் கேலியும்.. அய்யா, உங்களுக்கு படம் பற்றிய மாற்று கருத்து இருந்தால் கருத்தை வைத்து வாதிடுங்கள், இப்படி சும்மா நக்கல் பண்ணாதிங்க..அப்புறம் பலர் இங்க சொல்லி இருக்க மாதிரி உங்கள் தகவல்களை சரி பர்ர்த்து விட்டு வெளியிடவும்..

ஒரு சின்ன வட்டத்துக்குள் வாழும் மனிதரின் விமர்சனம்.

மக்கா,
உண்மையாவே உங்களுக்கு ஒரு முஸ்லிமின் மனதுக்குள் பார்க்கும் ஆவல் இருந்தால் படம் பாருங்கள்..

Anonymous said...

//இந்த நிலையில் செப்டம்பர் 11 நடக்கிறது. இரட்டைக் கோபுரத்தின்மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்கி அந்தக் கட்டிடம் அழிந்தபின்பு அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கிறது.//

பெரிய பு....கி மாதிரி ஆரம்பத்துல கருத்து சொல்லிவிட்டு, "இஸ்லாமிய பயங்கரவாதிகள்" என்று நீங்கள் மட்டும் எழுதலாமா? உங்களது மதவெறிக்கு இதைவிட உதாரணம் வேண்டுமா? உங்களை போன்ற எழுத்து தீவிரவாதிகளுக்கு, தீவிரவாதி, பயங்கரவாதி இந்த வார்த்தைகளுடன் "இஸ்லாமிய" என்ற வார்த்தையை சேர்க்காட்டி தூக்கம் வராதா?? எப்பய்யா நீங்களெல்லாம் திருந்தபோறீங்க?? ஊருக்குதான் உப‌தேச‌மா??

படம் இங்கு அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது, அதை ஏற்றுக்கொள்ளமுடியாத நீங்களும் உள்ளூர் வ‌யிற்றெரிச்ச‌ல் கோஷ்டிதான‌ என்று ஏற்றுக்கொள்வ‌து போன்ற‌ விம‌ர்ச‌ன‌ம் சூப்பர்.

vedhanarayanan said...

It is one of the best review of yours. I cannot understand hindi so normally I donot watch Hindi movies. But many of my friends told me that, this movie is not of a type to be missed. It is similar to what you said.

And SRK is using provocative technique during the release of his film. He runs KKR team in IPL in the same way. I hope sivasena understand that and not add publicity to him. But in this case Siva Sena also wants some publicity to tackle Raj Thakeray.

And IV, you have done the most right thing by not writing about SRK and Sena publicity stunts and waste energy on an article.

ரிஷபன் said...

//விமரிசனம் என்ற பெயரில் இப்படி படத்தின் முழு கதையையும் எழுதுவது சரியா?//

நல்ல படத்துக்கு இப்படி முழுக்கதையும் விமர்சனத்தில் எழுதினால் அநியாயம்.
ஆனால் இது மாதிரி டப்பாக்களுக்கு எழுதினால் தப்பில்லை.

M Arunachalam said...

My Name is (a BIG) YAWN.

seetha said...

ஷாருகானின் தைரியம் அதிக சந்தோஷமளீகிறது. அவரொன்ரும் தன் படத்தில் , வெறுப்பை உமிழவில்லையே.

தெரியாமல் கேக்கிறேன், தாகரேயின் குடும்பத்தார், தமிழர் மற்றும் மற்ற ,மஹாராஷ்ட்டிரர் அல்லாத இந்துக்களிடம் யேசு கிறிஸ்து போல அன்பு காட்டுகிறர்களா?

இன்றைய தேதியில் அரசியல் வாந்திகளின் ஜாலராவாக எல்லாரும் இருக்கும்போது (உலக நாயகன், குழப்ப ஸ்டார்) குஷ்பு , அஜீத், ஷாருக்கான் ,இவர்களிடம் மரியாதை ஏற்ப்படுகிரது.

ரொம்பவும் காவி (சாரி சாமி என்ரு இருக்க வேண்டும்) ஆடாதீர்கள் இட்லிவடை.

R.Gopi said...

This review is so BIASED.......

Anonymous said...

I live in USA and I was there when 9/11 happened.People didn't go to that extreme like in the movie.These sort of extreme things to minority community will happen only in Islamic countries.USA is a matured democracy.USA was angry,suspicious,and scared.I know I will be called a follwer of RSS for speaking the truth.

Anonymous said...

1."பார்பணர்களை நாங்கள் எதிர்க்கவில்லை நாங்கள் எதிர்ப்பது பார்பணீயத்தை மட்டுமே!"- பகுத்த்றிவு வாதிகள்(அ) நாத்தீகர்கள்
இவர்கள் பார்பண்ரல்லாத ஒருவ்ரை எதிர்த்தது உண்டா? (எ.கா.:மஞ்சள் துண்டு மு.க,

ஆக இவ்ர்கள் ஏமாற்றுகாரர்கள்
2."பிற்பால் அனைவரும் ஓன்றே! அவர்கள் வாழும் தன்மைப்ப்டி ஜாதிகள் உண்டாயின." -ஆஸ்தீகர்கள் ,பாப்ஸ் அண்ட் அதர்ஸ்.

பிறப்பால் பார்பணர்ல்லாத ஒரு பாப்ஸையோ அல்லது ஒரு கோம்டி செட்டியோ கூற முடியுமா? (கர்னண் இருந்தான்.ஒரு பிராம்ண்ண்னுக்கு உண்டான தகுதிகளுடன் பரசுராமருக்கு பணிவிடை செய்தான்.ஆனால் பிறப்பால் சூதபுத்திரன் என்று தெரிந்த உடனே அவன் ப்ராம்ணனாக இருக்க தகுதியற்றவனாகி விட்டான். பின்னர் சாபம்.. இத்யாதி..)

ஆக இவர்க்ளும் டஏமாற்றுக்காரர்க்ளே!

3."இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை தூண்டவில்லை"

இன்று உலகில் பல (அனைத்திலும் அல்ல) வன்முறை தாக்குத்லின் பின் ஒரு இஸ்லாமிய க்ரூப்தானே இருக்கிறது?


ஆக இவர்க்ளும் ஏமாற்றுக்காரர்க்ளே!

மக்களே சாதி , சாமி , மதம் இவைகளை தவிர்த்துவிட்டு சக மனிதனை நேசிக்கக கற்றுக்கொள்ளுங்கள்.

வீரராகவன் said...

பெயர் ஹாசன் என்று முடிந்ததாலும், பஞ்சதந்திரத்திற்காக குறுந்தாடி வைத்திருந்ததாலும் கமலஹாசனுக்கும் விமானதளத்தில் சோதனையும், வேதனையும் நடந்தது. பாஸ்போர்ட்டில் ஹிந்து என்று இருந்தும் கூட! சாருக்கிற்கும் இதே நிலை. காரணம் தெளிவு. தீவிரவாதத்தை அடியோடு வெறுத்து சகோதரத்துவத்தை கடமைகளில் ஒன்றாக குரான் கூறினாலும், உண்மையான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தங்களுக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை நீக்க முயற்சி எடுக்காது இளைய தலைமுறை தவறான வழிகளில் செல்வதை வேடிக்கை பார்ப்பதுதான்.
ஒரு இமாமாவது தன் மசூதியில் எந்த இளைஞன் மத விரோதத்தையோ, வன்முறையோ தூண்டும் விதத்தில் பேசினால் தண்டிக்க முன்வருவதில்லை. எனக்கு தெரிந்து, கடலூருக்கு அருகே உள்ள ஒரு இஸ்லாமிய பெரியவர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை அமைதியாக செய்கிறார். அவர் ஆடம்பரத்தையோ, வீண் பேச்சையோ விரும்புவதில்லை. சுனாமி வந்த சமயத்தில் அவர் ஆற்றிய பணி அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்க பத்திரிக்கையாலும் புகழப்பட்டார். அவர் தன்னடக்கம் கருதி அவர் பெயரை இங்கு நான் வெளியிடவில்லை. பரங்கிபேட்டை அருகில் இருக்கும் அனைவரும் நேசிக்கும் உத்தம்ர்.
இத்தகைய படங்கள் அதிகம் வரவேண்டும்.

Anonymous said...

மை நேம் இஸ் மோடி என்று படம் எடுத்து அன்பை போதியுங்கள். ஸ்ரீ ராம் சேனா முத்தாலிக், விஸ்வ இந்து பரிஷத் தொகாடியா போன்றவர்களால்தான் இந்து மதத்திற்கு இழுக்கு.

Venkat said...

Hello,

Thanks for the movie review.

The main theme of the movie per this review is - SRK asks "how can the entire islamic community be made responsible for the acts of a few"?

If we analyse any acts of terrorism - who brings the religion to the forefront? Is it the people who were affected or the people who perpetrated it? If we watch the Dan Reed documentary on 26/11, we can see how religion was used to perpetrate a chilling crime. During and after every act of violence, are not so called Terrorists shout "God is Great" in Arabic and eventually justify what they did?


ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கூடம் - பசங்க பண்ற பிரச்னைக்கு பேர் போனதுன்னு வச்சுக்குங்க. எப்ப பாரு தெருவுக்கு வந்து பஸ் மேல கல்லடிக்கறது, போக்குவரத்தை தடுக்கறதுன்னு ஸ்கூல் பசங்க பண்றாங்க. அந்த ஏரியா சனம் என்ன சொல்லும் - "ஐயோ, ஸ்கூலா அது - சரியான பிரச்சனை புடிச்சவனுங்கப்பா. ஸ்கூலும் தடுக்காது, போலிசும் வராது. நம்ம தலை எழுத்து".

அங்க படிச்ச, படிக்கிற நல்ல பசங்க மனசு நோகத்தான் நோகும். அதுக்காக அந்த மாதிரி சொல்ற சனம் மேல பாய்ஞ்சு என்ன பிரயோசனம்? நிஜமா அந்த ஸ்கூல்ல பிரச்சனை இருக்கா, அதே ஸ்கூல்ல நல்லா படிச்ச நாம எல்லாம் நல்லா இருக்கும் போது இவனுங்க ஏன் இப்படி பண்ணி மானத்தை வாங்கரானுங்கன்னு யோசிக்க வேண்டாமா? "எல்லாருக்கும் எங்க ஸ்கூல் மேல பொறாமை. அதனால தான் எல்லாரும் எங்க ஸ்கூல் மேல பாயராங்க"ன்னு சொல்லலாமா? அதனால யாருக்கு என்ன பிரயோசனம்?

Thanks,

Venkat

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஒரு படத்திற்காக இவ்வளவு அடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. இந்த விஷயத்தின் மூலம் பலர் பணம் சம்பாதித்துக் கொண்டும் இந்தத் தீயில் குளிர் காய்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்று உணருங்கள் நண்பர்களே.. நம்மை பகடைக் காயாக்கி விளையாடுபவர்களை கண்டு கொள்ளுங்கள்.. இந்த விஷயத்தை பெரிது படுத்துவதன் மூலம் நாச வேலைகளே அதிகரிக்கும். . நன்மை ஒன்றும் விளையப் போவதில்லை. வாதத்தில் நாம் ஜெயிப்பதனால் எந்த லாபமும் யாருக்கும் இல்லை..பதிவர்களின் ஒற்றுமையும் குலையலாம்.. எனவே உணருங்கள் விழிப்பாக இருங்கள்.. உங்கள் அடுத்த பின்னூட்டத்தை மிகவும் கவனமாக எழுதுங்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

khaleel said...

since i got a little emotional yesterday i went and saw the movie. I have to say your review is very very inaccurate and impartial.
You are writing like this intentionally only to provoke everybody.
if You have strong arguments against the movie please do let us know but this is not the way to propose your view.
you have stated that Shahrukh khan is a mentally retarded person but actually it is quite contrast in the movie. he in fact he is a smart person.
Ofcourse shahrukh khan has used Thackeray very well and garnered good publicity for the movie. but its not his mistake. he just turned a problem in to a great opportunity for his movie.
as such the movie is excellent.
almost all the comments are against the article only. so please let us know your feedback for these comments.
thanks.

khaleel said...

venkat,

your analogy is very very correct and to the point. nice one.

Anonymous said...

All these propaganda on the "External Affairs" front is always beyond what is actually required, though it is surely required.

But when it comes to Internal Cleaning and disinfecting the actual disease within Islam, not even a single muslim soul comes forward.

உண்மையான இஸ்லாமியன் said...

// khaleel said...
i dont know why you people cant understand or accept when we say not to blame the entire community for a section of its mistakes.//

because,

//Whenever something like 9/11 happens you say, ‘This is not Islam.’ I believe that. But you keep telling us what Islam isn’t. You need to tell us what it is and show us how its positive interpretations are being promoted in your schools and mosques. If this is not Islam, then why is it that a million Muslims will pour into the streets to protest Danish cartoons of the Prophet Muhammad, but not one will take to the streets to protest Muslim suicide bombers who blow up other Muslims, real people, created in the image of God? You need to explain that to us — and to yourselves.//

Sakthi said...

Good review..... So called intelectuals posted thier comments in opposition.... He clearly played a role Muslim protector and publicizing his community. Why could't he make a film when train bom blast happened in mumbai and taj hotel incident.. why should he go USA and think about the incident in that country ?? Perfect black sheep. I was being fan of SRK and felt ashamed for that.
Good review

Sakthi said...

26/11 happened in USA . So that "Muslims " affected. So SRK can take a movie and released it.
When train blast and Taj ahppened, SRK was too silent.....Bcoz just indians are affects .. thats not big issue..
This movie is for Muslims( with evil mind) not for INDIANS

Anonymous said...

The story line is very poor. No one changes the kid's surname. Even if the mother marries someone else, the kids surname remains the same.

Not Good said...

//ரொம்பவும் காவி (சாரி சாமி என்ரு இருக்க வேண்டும்) ஆடாதீர்கள் இட்லிவடை//

Welden Seetha, Everytime idlyvadai Against to islam. This is Not Good For Idlyvadai Blog. Mind it.

Not Good said...

//ரொம்பவும் காவி (சாரி சாமி என்ரு இருக்க வேண்டும்) ஆடாதீர்கள் இட்லிவடை//

Welden Seetha, Everytime idlyvadai Against to islam. This is Not Good For Idlyvadai Blog. Mind it.

விஜயசக்கரவர்த்தி said...

தலைவரே உங்களுக்கு இந்தி தெரியுமா தெரியாதா? நிஜமாகவே படம் பார்த்துவிட்டுதான் எழுதினீர்களா? ஜிம்மி ஷெர்கில் படத்தில் ஷாருக்கானின் அண்ணன் இல்லை, தம்பி!

விஜயசக்கரவர்த்தி said...

விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழி என்று வரிக்கு வரி இப்படியா முழுக்கதையையும் வெளியிடுவது. இது ஒரு விமர்சனமே அல்ல. தாங்கள் இனிமேல் சினிமா விமர்சனம் எழுதாமல் இருந்தால் நன்று.

Anonymous said...

அம்பி கமல் மட்டும் தான் ஃஹேராம் போன்று படங்கள் எடுத்து காசாக்கலாம் போல சாருக்கான் எல்லாம் எடுக்க கூடாதுன்னு அம்பி சொல்லிட்டார்

Pakistani_Sharukh said...

Latest news from sify.

Movie is a Failure.

Sharukh khan fans can read here.

http://sify.com/movies/fullstory.php?id=14932058&cid=2359

Now everything is very clear.
Everything is falling in place.

After the movie shoot is over, Sharukh would have watched the full movie. After viewing he realised what a a terrible mistake he had done doing this movie.

The movie is goddamn boring and he knows it.

But then he realised that he should give this movie a instant publicity.

Because if not for this publicity, the movie probably bow out of cinemas within 2 days.

Then again he knew he can't give instant publicity? He is popular but not super popular after all. But there is one man who is capable of even over shadowing 'The great Khan'. Some one who can just grab the headlines in an instant. The man is Bal Thackeray.

So thereforth, Sharukh pissed him off and won instant publicity for this crap ' PRO muslim movie'

VERDICT IS THE MOVIE FAILURE.

Calgarysiva said...

//பாஸ்போர்ட்டில் ஹிந்து என்று இருந்தும் கூட//

இந்திய மற்றும் நாகரீக வளர்ச்சி அடைந்த நாடுகளின் பாஸ்போர்ட்டில் மதத்தை குறிப்பிட மாட்டார்கள்

நாகரீகவளர்ச்சி அடையாத இஸ்லாமிய நாடுகளில் (உ.ம். சவூதி அரேபியா) அடையாள அட்டைகள் முஸ்லிம் களுக்கு பச்சை நிறத்திலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வேறு நிறத்திலும் தந்து தாங்களின் வேற்று மத காழ்ப்புணர்ச்சியை காட்டுவார்கள்.

நாகரீகம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மனிதர்கள் அணியும் மத அடையாளங்கள் அவர்களின் மதத்தை காட்டும் உ.ம் வீபூதி, யூதர்களின் தொப்பி, முஸ்லிம்களின் குல்லா மற்றும் தாடி அல்லது புர்கா.

பாஸ்போர்ட்டுகள் அல்ல

Anonymous said...

//(கர்னண் இருந்தான்.ஒரு பிராம்ண்ண்னுக்கு உண்டான தகுதிகளுடன் பரசுராமருக்கு பணிவிடை செய்தான்.ஆனால் பிறப்பால் சூதபுத்திரன் என்று தெரிந்த உடனே அவன் ப்ராம்ணனாக இருக்க தகுதியற்றவனாகி விட்டான். பின்னர் சாபம்.. இத்யாதி..) //

This statement is wrong. He got சாபம் not because he is சூதபுத்திரன் but because he is a Kshatriya (He was able to tolerate blood wound as a Kshatriya).

Kowsigan who is not a Brahmin by birth becomes a Brahma Rishi and he only gave Gayathri manthra to the world.

இறை அடியான் said...

ஏண்டாப்பா அம்பி, மலேகான்ல குண்டு குண்டு வச்சது யாரு? கோவால குண்டு வச்சது யாரு ? பள்ளிவாசல்களில் தீவிரவாதம் போதிக்கபடுதுன்னு சொல்லறே, அப்ப ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளுக்கு உங்க வீட்லையா ட்ரைனிங் கொடுக்குற? காந்தியை கொன்ற தீவிரவாதிகள் எல்லாம் தெம்பா தெரியுராணுக, அவனுக எல்லாம்அவாளுகதானே