பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 12, 2010

அவதார் - விமர்சனம் ( புதிய காப்பி )

பழைய படம் புதிய காப்பி என்று விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். அதே போல தான் இந்த விமர்சனமும்..

இந்திப் பெயர் கொண்டு அவதாரம் என்ற பொருள்படும்படி அமெரிக்க தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜேம்ஸ்கேமரூன் எடுத்த இந்தத் திரைப்படத்தை, வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தபோது ஐமாக்ஸில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.


இந்தப் படத்தை 3டியில் பார்க்காதவர்கள் ஒரு அருமையான அனுபவத்தை இழப்பார்கள். நல்ல இருக்கையில், இதமான குளிர்பதனத்தில், சுத்தமான 3டி கண் கண்ணாடி அணிந்து இந்தப் படத்தை ரசித்தேன். தியேட்டரில் பார்ப்பதைப் போலில்லாமல் பாண்டோரா உலகத்திற்கே சென்று வந்த அனுபவத்தை அது வழங்கியது.

ஒரு மனிதனின் கற்பனா சக்திக்கு அளவேயில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். பல திரைப்படங்களிலும் சே, கலக்கிட்டான்யா, இனிமே இப்படி ஒரு படம் வரப்போறதில்லை என எத்தனையோ படத்தைப் பார்த்துப் பேசி இருப்போம். ஆனால் இந்தப்படத்தை பார்த்தபின்பு நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம், நமக்குக் கிடைத்திருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எப்படிப் பட்ட கற்பனாசக்தி / வறட்சி கொண்டவர்கள் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஒரு பேட்டியில் ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்திற்கான கரு டைட்டானிக் திரைப்படம் தயாரிபதற்கு முன்பே உதித்ததாகவும், ஆனால் அவர் மனதில் நினைப்பதை நிஜத்தில் எதிர்பார்க்கும் அளவு தொழில்நுட்பம் வளராதபடியினால் அவர் நினைத்தபடி எடுக்க இயலாதென்பதால் தொழில்நுட்பம் வளரும்வரை காத்திருந்ததாகவும் சொல்லியிருந்தார்.

கேமரூனின் மனவிசாலத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரனம் வேண்டாம்.

சரி, படமாவது ஏதாவது கொலை, கொள்ளைகளை நியாயப்படுத்தும் படமா, இல்லை ஏசுதான் சாமி மற்றதெல்லாம் ஒன்றுமில்லை எனும் படமா, இல்லை உலகம் முழுக்க அமெரிக்கா செய்யும் அட்டூழியங்களைச் சொல்லும் டாக்குமெண்டரியா, எதுவும் இல்லை.. பின்னர் ஏன் இப்படி உலகம் முழுதும் மக்கள் சாரிசாரியாக இந்தப்படத்தைக்காண குவிகிறார்கள்?

எப்படி அமெரிக்காவில் இருக்கும் ஒரு இயக்குனரால் உலகம் முழுக்க இருக்கும் மக்களின் மனம் கவரும்படி படமெடுக்க முடிகிறது.?

அதை கனவில் நினைக்கவும், நினைவில் உருவாக்கவும் சாத்தியமும் பட்டிருக்கிறது?

ஏனெனில், படம் சொல்வது இன்றைய உலக நடப்பை. நமது மனதிற்கு தெரிந்த உண்மைகளான, நமது வசதிகளுக்காக காலில் போட்டு மிதித்துவிட்ட மனிதாபிமானம், சக உயிர்களைப் பேணும் குணம், இயற்கையை வணங்கும் நமது ஆதி குணம், இவையெல்லாம்தான் இப்படி இந்தப் படத்தின் பால் வசீகரிக்கிறது என்பதுதான் உண்மையாய் இருக்க முடியும்.

நம்மிடம் இருந்த ஒரு குணத்தை இன்னொருவனிடம் காணும்போது ஏற்படும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியே / அன்பே அல்லது ஒத்த அலைவரிசை உள்ள ஒருவனைக் காணும்போது ஏற்படும் ஆனந்தமே இப்படத்துடன் நம்மை ஒன்றச் செய்கிறது.

இயற்கையுடன் இசைந்து வாழ்வது நமது மரபு. மரங்களை வணங்கினோம், வணங்குகிறோம், நதியை வணங்கினோம், வணங்குகிறோம், மலையை வணங்கினோம், விலங்குகளை நமது கடவுளுடன் இனைத்து நாம் நேசித்தோம். அதை நமது அடுத்த தலைமுறைக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்தோம்.

ஆனால் நாகரீகத்தின் பெயராலும், உலகமயமாக்கல், வணிகமயமாக்கலின் பெயராலும், அரிசியும், கோதுமையும் எப்படி விளைகிறது, மண்புழு எப்படி இருக்கும், காட்டு விலங்குகள் என்றால் என்ன, எப்படி மழை பொழிகிறது, அதற்கான ஆதார வளங்கள் என்ன, மரங்கள், சுத்தமான காற்று என்று எதைப்பற்றியும் கொஞ்சம்கூட தெரியாத, அல்லது புத்தகத்தில் மட்டுமே பார்த்து வளரும் ஒரு பொறுப்பற்ற தலைமுறையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்த பொறுப்பற்ற தலைமுறையை உருவாக்கிய, அந்த இயற்கையை வணங்கிய பெரியவர்களான நாமும், இயற்கையை சுரண்டலுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க, ஐரோப்பியர்களும் சேர்ந்து தங்களை இந்தப் படத்தில் மீட்டெடுக்கின்றனர்.

படம்பார்க்கும் ஒவ்வொருவரும் ஆரம்பம் முதல் இறுதிவரை அந்த உலகத்திலேயே கிட்டத்தட்ட வாழ்கின்றனர். அப்படி வாழும் உணர்வை நமக்குக் கொடுப்பதுதான் ஜேம்ஸ் காம்ரூனின் சாதனை...

ஒரு அபூர்வ தனிமத்தைக் கைப்பற்ற பாண்டோரா என்ற கிரகத்திற்கு மனிதக் குழு ஒன்று செல்கிறது. அவர்களைப் பற்றிய தகவல்களை முழுதும் பெற்று அந்தக் கிரகத்தில் வாழும் மனிதர்களைப் போன்ற மனிதர்களை செயற்கையாக உருவாக்கி அங்கே உலவவிட்டு அதைக் கைப்பற்ற நினைக்கிறது மனிதர் குழு.

அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் கதை.

ஆனால் அந்த உலகத்தைச் சிருஷ்டித்து, உயரமான, நீலநிறம்கொண்ட, ஒருவருக்கொருவர் நேசித்து வாழும் ஒரு மனிதகுலத்தை பாண்டோரா கிரக வாசிகலாக கான்பித்து, வில்லன்களாக மனிதகுலத்தைக் காண்பித்தாலும் பேராசை கொண்டு உலகையே தனது காலனியாக்கி சுரண்டலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மக்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் போல இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது.

அதில் பாண்டோரா கிரக மக்களின் வாழ்க்கை முறை, சக உயிர்களுடனான அவர்களது தொடர்பு முறைகள், இயற்கையை வணங்கி வாழும் முறை, ஒரு பெரிய மரத்தைச் சுற்றி அந்த கிரகத்தின் வாழ்க்கையின் அச்சானி இருப்பது என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார் இயக்குனர்.


மனிதர்கள் உள்ளே நுழைந்ததும் அந்த கிரகத்தின் சமநிலை கெடுகிறது. மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளை கண்டு படம்பார்க்கும் நமது மனம் பதைக்கிறது, கொஞ்சம்கூட இரக்கமின்றி இன்னொருவரது சொத்தை அபகரிக்கத் துடிக்கும் நமது வல்லரசுகளின் நிஜமுகம் அங்கு தெரிகிறது. தனக்குப் போக மீதமுள்ளதுதான் பிற உயிர்கள் மற்றும் மனிதன் வாழ்வதற்கு என எண்ணும் அவர்களது அகங்காரம் அதில் தெரிகிறது. அவர்கள் பாண்டோரா கிரக வாசிகளால் வீழ்த்தப்படுவது நமக்கு உவகை அளிக்கிறது.

இதைக் கானும் ஒவ்வொரு குழந்தைகளும் மனம் மாறினால் உலகம் எப்படி அமைதியாய் இருக்கும்? நிச்சயம் ஒரு சிறு சலனமாவது ஏற்பட்டிருக்கும் இந்த உலகத்தில். அதை ஏற்படுத்தியிருந்தால் நமது மனதில் இன்னும் ஈரமிருக்கிறது என்பது மீண்டும் நிரூபனம் ஆகும். ஜேம்ஸ் கேமரூனின் உழைப்பிற்கு நாம் கொடுக்கும் சிறந்த மரியாதையாகவும் இருக்கும்.

புத்தாயிரம் ஆண்டு ஆரம்பித்து வந்த திரைப்படங்களில் இதைவிட சிறந்த படம் வந்ததில்லை என்பேன் நான்.

- ஜெய் ஹனுமான்15 Comments:

kggouthaman said...

படம் எப்படியோ இருக்கட்டும். உங்க விமரிசனம் நன்றாக இருக்கிறது.

Anonymous said...

I go with Gouthaman sir..

Rather than commenting on the film that it is good or not good or this or that,,,,it is nice that we realise the jist of the movie..

That is the success of any movie taken....that it transforms :) at least one person who has watched the movie!!

I hope the article has helped us for the same..

santa said...

ஏன் இவ்வளவு தாமதமான review? இருந்தாலும் அருமை..

Guna said...

நல்ல விமர்சனம், நாம் இழந்துவிட்ட சில விஷயங்களை பண்டோரா கிரகத்தில் பார்க்கிறோம் என்பதுதான் படித்தின் அடி நாதம். இதை எல்லாம் நாம் இழந்து விட்டோமே என்று வருத்தப்பட்டே படத்துடன் ஒன்றிவிடுகிறோம். 3 d இல்லாமல் படம் பார்ப்பது வேஸ்ட்.

முகமூடி said...

இவ எழுதின சொத்தை விமர்சனத்திற்கு இது ப்ராயசித்தம். அவதாரின் தொழில்நுட்பத்தை புகழ ஹிந்துவின் ஒற்றை வரி போதும் - ”even tears have never been so real”

சைவகொத்துப்பரோட்டா said...

நிஜமாகவே நல்ல படம், உங்க விமர்சனமும் இயல்பு.

வலைஞன் said...

ஒரு நல்ல படத்திற்கு உதாரணம் அவதார் என்றால் ஒரு சிறந்த விமரிசனத்திற்கு உதாரணம் இது!

ஜெய் ஹனுமானின் கடாக்ஷம் தொடர வேண்டுகிறோம்!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இணையற்ற ஒரு படத்திற்கு இணையற்ற ஒரு விமர்சனம்.. தம்மாத்துண்டு படம் எடுத்து சேனலுக்கு சேனல் பேட்டி கொடுக்கும் நம் இயக்குனர்கள் உணர்வார்களா?

Anonymous said...

http://valpaiyan.blogspot.com/2010/02/1411.ஹ்த்ம்ல்

வால் பையனின் இந்த பதிவை பார்த்தீங்களா.. எவ்வளவு பின்னூட்டம்!!

Anonymous said...

KGG அண்ணா, உம்ம ப்ளாகுல உம்ம பதிவுகள் ஒன்னையும் காணுமே.. நீரும் டோண்டு மாதிரி ரிடையர் ஆன பெருசு தானே.. ஏதாவது அனுபவ பதிவுகள் போடலாமொள்யோ?

Paul Amirtharaj said...

Movie is technologically good. It will bag Oscar for best movie and direction but not for the story because it is poor.

kggouthaman said...

// Anonymous said...
KGG அண்ணா, உம்ம ப்ளாகுல உம்ம பதிவுகள் ஒன்னையும் காணுமே.. நீரும் டோண்டு மாதிரி ரிடையர் ஆன பெருசு தானே.. ஏதாவது அனுபவ பதிவுகள் போடலாமொள்யோ?//

ஹி ஹி - இப்படி எல்லாம் சொன்னா - நான் 'எங்கள்' பதிவுகளில் எதெல்லாம் நான் எழுதினதுன்னு லிஸ்ட் போட்டுடுவேனா?

Anonymous said...

//ஏசுதான் சாமி மற்றதெல்லாம் ஒன்றுமில்லை எனும் படமா//

இது தேவைதானா?

ஸ்ரீராம். said...

ரெண்டு நாள் ஊர்ல இல்லைன்ன அதுக்குள்ள இ.வ. ள எத்தனை புது போஸ்ட்ஸ்? தினமும் வந்து பார்த்தா மட்டும் ஒண்ணு ரெண்டு தான் இருக்கும்!
அது சரி, டிசம்பரில் புதிய பதிவர்கள் பற்றி, கவர்ந்த பதிவர்கள் பற்றி வாசகர்களை கேள்வி கேட்டிருந்தீர்களே, என்ன ஆச்சு? எங்களுக்கும் சொல்ல மாட்டீர்களா?
பிரபலர்களின் கட்டுரை ரெகுலராக வாங்கி போடப் போவதாகச் சொன்னதும் என்னாச்சு?

vedhanarayanan said...

Finally I saw the movie. Nothing big deal.

With minimum technology , What Selvaraghavan has done in AO is almost equivalent to Avatar.

Screenplay is weak. First half is like a documentary.

The biggest challenge in this movie is to mix animation part and real characters in 3D.