பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 10, 2010

போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் அறிவிப்பு

போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகமாக அறிவிப்பு

நமச்சிவாய

அன்பர்களே,

போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோவில் ஒரு புராதனமான சரித்திரப் புகழ்
வாய்ந்த கோயிலென உங்களுக்கு அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.

இக்கோயிலின் புராண வரலாறைக் காண்போம்:

சீதா தேவியை ஸ்ரீ ராமர் தேடி வந்த காலத்தில் ஒர் அடர்ந்த காட்டை
அடைய நேர்ந்தது. அப்போது அவர் கால் ஒரு நெல்லி மரத்தின் வேரில் இடறியது.
நெல்லி மரத்து வேரின் அடியில் சிவலிங்கம் இருப்பதை உணர்ந்தார். அதன் மீது
கால் பட்டதால் தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை நீக்கிட ஒரு மண்டல காலம்
தினம் ஒரு நெல்லிக்கனியை மட்டும் உண்டு கடுமையான தவம் புரிந்தார்.

ஸ்ரீ ராமரின் பக்தியில் உள்ளம் கனிந்த சிவபெருமான், பூமியை
பிளந்து விஸ்வரூப தரிசனம் அருளினார். பரவசமடைந்த

ஸ்ரீ ராமர் ஐயனைக் கட்டி அணைத்தார். சிவபெருமானின் பெருங் கருணையால் அந்த
விஸ்வரூபம் அமிர்த லிங்கமாய் மாறியது.

ஸ்ரீ ராமர் சிவபெருமானை பூஜித்து, சீதை இருக்கும் இடத்தை
அறிந்தார். ஸ்ரீ ராமர் சிவனாரை வணங்கி குருவாக ஏற்றுக் கொண்டதால்,
இக்கோயில் குருஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. தொண்டை மண்டலத்தின் நவகிரஹ
கோயில்களில் இதுவே குருஸ்தலமாக அமைகிறது. சிவபெருமானே குருவாக
வீற்றிருப்பது இத்தலதின் தனிப்பெரும் சிறப்பாகும்.

ஸ்ரீ ராமருக்கு குருவாக எழுந்தருளியதால், அமிர்த லிங்கத்துக்கு
ராமநாதீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது.

இதன் சிறப்பை இன்றும் நினைவுகூறும் வகையில் இங்கு தீர்த்தமும்
சடாரியும் வழங்கப் படுகிறது.

இந்த தான்தோன்றி அமிர்த லிங்கத்திற்கு முதலில் யார் கோயிலை
அமைத்தார் என்கிற கேள்விக்கு இன்றளவும் முழுமையான பதில் வெளிப்படவில்லை.

ராஜகோபுரமும் விமானமும் கட்டும் கலை தொடங்கும் முன் இக்கோயிலை
கடியிருக்க வேண்டும். களப்பிரர்கள் கோயில்கள் கட்டியிருப்பதாக ஆதாரம்
இல்லை. ஆகையால், இக்கோயிலை ஆதிகால சோழர்கள் கட்டியிருப்பார்கள் என்று
கருதப்படுகிறது. அதன் பின், பலர் இக்கோயிலில் திருப்பணி
செய்திருக்கிறார்கள். இந்தத் தகவல்களை கோர்த்துப் பார்க்கும் போது,
இக்கோயில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக தெரியவருகிறது.

அண்மையில் இக்கோயிலில் திருப்பணி வேலை தொடங்கிய போது, பல
கல்வெட்டுகள் கிடைத்தன.

பிற்கால சோழர்களும் இங்கு திருப்பணி செய்திருப்பதையும், தானங்கள்
அளித்திருப்பதையும் அவற்றில் காணலாம். ராஜேந்திரசோழன் காலத்தில் இவ்விடம்
திருப்பெருங்கோயில் என்று பிரசித்தி பெற்று திகழ்ந்திருப்பதையும்
கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது.

8-ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் திருப்பணி செய்ததற்கு இங்குள்ள
சண்டிகேஸ்வரர் சிற்பம் சரித்திரச் சான்றாக அமைந்துள்ளது.

சிவபெருமானின் நல்லாசியால் சரித்திரப் புகழ்வாய்ந்த இக்கோயிலின்
முதல் கட்ட திருப்பணி வேலைகள் இனிதே நிறைவடைந்து, வரும் 18.02.2010,
வியாழன் (மாசி மாதம் 6-ஆம் நாள்) காலை 8.30 மணி முதல் 10.00 மணிக்குள்
மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

புதிதாக விமானம் கட்டியபின் நடக்கும் முதல் கும்பாபிஷேகமாக
இருப்பதால், இது மிகவும் கோலாகலமான விழாவாகும்.

இந்தச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் பங்கு பெற்று இறைவன்
சிவபெருமானின் கருணை மழையில் திளைத்து இறையருள் பெறுமாறு மிகப்
பணிவன்போடு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்

முகவரி: Uthara Rameshwara Bhaktha Samajam

Ramanatheeswarar Thirukovil,

Eswaran Kovil Street,

Porur, Chennai – 600116.

Tamil Nadu, India.

திருப்பணியிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்ற, பங்கு பெற இருக்கும்
அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,

உத்தர ராமேஸ்வர பக்த சமாஜம்

http://uthararameshwaram.org


கோயில் போகும் வழி:


Other images:

படங்கள்:
http://uthararameshwaram.org/images/image1.jpg
http://uthararameshwaram.org/images/image3.jpg
http://uthararameshwaram.org/images/image4.jpg
http://uthararameshwaram.org/images/image5.jpg

11 Comments:

SUBBU said...

//ஒரு மண்டல காலம்// அப்படி என்றால் எவ்வளவு காலம், ஏன் மஞ்சள் கமெண்ட் மிஸ்ஸிங் ? !!

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

snkm said...

நன்றி!

kggouthaman said...

புதிய தகவல்களுக்கு நன்றி.

Anonymous said...

" அப்போ ராமர் போரூர் வழியாதான் லங்கா போனாறா? அட நான் இதுவரைக்கும் மதுராந்தகம் (ஏறி காத்த ராமர்) வழியாதான் போனர்னு நென்ச்சுக்னு இருந்தம்பா"
இன்னும் எத்தனபேரு இந்த மாதிரி கெளம்ப போறாங்களோ ராம்ர் கதய வச்சிக்கிட்டு? ஏதோ இந்த மட்டும்,'எங்க எள்ளு தத்தா இந்த வீட்ல இருந்தப்ப ராமர் லங்கா போறப்போ இங்கன எறங்கி சோடா குட்ச்சுட்டு போனார்னு கத சொல்லி ,இப்ப வீட்ட ரிப்பேர் பண்ணணும் காசு குடுங்கன்னு கேக்க்காம இருந்தா சரி!
இதற்கு செலவு செய்த பணத்தை வைத்துக்கொண்டு ஒரு பள்ளிக்கூட்மோ அல்லது சுகாதர மைய்யமோ திறந்திருந்தால் ஏழை மக்கள் பயன் பெற்று இருப்பார்கள்.
இந்த மாதிரி சாமி ,கடவுள் என்று மக்களை ஏமாற்றுவதை தவிர PAPPSU களுக்கு வேற வேலையே இல்லையா?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
R.Gopi said...

அருமையான தகவலுக்கு நன்றி...

தலைப்பு ரொம்ப வித்தியாசமா இருக்கே...

//"போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகமாக அறிவிப்பு"//

அனானி.... தி.க.தலைவர் சுமார் 5000 கோடி அளவு வைத்து இருக்காராம்... கொஞ்சம் கொடுக்க சொல்லுங்க... நீங்க சொன்னதை செய்து விடலாம்...

Anonymous said...

""அனானி.... தி.க.தலைவர் சுமார் 5000 கோடி அளவு வைத்து இருக்காராம்... கொஞ்சம் கொடுக்க சொல்லுங்க... நீங்க சொன்னதை செய்து விடலாம்...""
கோபி நீங்க துபாய்ல இருக்கிறதா இல்ல சொன்னாங்க? எப்போ 'தலைக்கு' ஆடிட்டர் ஆனீங்க?
உங்க பின்னாடி அசிங்கம்னு சொல்ன்ற..! தொடச்சுகறத்துக்கு பதிலா .. அதோ பாரு ..அவன் பின்னாடியுந்தா அசிங்கம்.. அப்படீனனு சொல்றீங்களே ! ஞாயமா?

Anonymous said...

//ஸ்ரீ ராமர் சிவபெருமானை பூஜித்து, சீதை இருக்கும் இடத்தை
அறிந்தார்//
Does it mean Hanuman did not find where Seetha was kept?:)
P.S: Naan thi.ka illai.

Anonymous said...

//////ஸ்ரீ ராமர் சிவபெருமானை பூஜித்து, சீதை இருக்கும் இடத்தை
அறிந்தார்//
Does it mean Hanuman did not find where Seetha was kept?:)
P.S: Naan thi.ka illai.

//////
அதே !அதே!
அனானி
எல்லாமே சுத்த ஹம்ப்க்!

பி.கு:நான் சாதரண மனிதன்

Arun said...

What ever may be the story.But the history and analysis about when the multitier architecture came in to vogue was excellent and very much insightful. Idly Vadai-ku intha idly vadai vasaganin nandrigal! Kalakareenga thala vazhthukkal!