பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 08, 2010

அஜித் - வேட்டி கட்டின ஆம்பளை

நாம் உடுத்தும் பல உடைகள் இன்று பெண்களும் போடுகிறார்கள். ஜட்டி, ஜீன்ஸ், குர்த்தா என்று அடிக்கிக்கொண்டே போகலாம். ஆனால் வேட்டி ? அதை இன்னும் ஆம்பளைகள் மட்டும் தான் உடுத்துகிறார்கள்( பார்க்க படம் )


நண்பர்களுக்கு வணக்கம்,

பலர் ஏன் அஜித் பேச்சு பற்றி இட்லிவடை இன்னமும் கண்டுகொள்ளவில்லை என்று கேட்டார்கள். அவர்களுக்காக என் கருத்தை சொல்லுகிறேன். மற்றவர்களுக்குக் கோபம் வரலாம், ஒன்று செய்ய முடியாது.

உண்மையைப் பேசுபவர் பெயர்தான் பகுத்தறிவுவாதி, "எங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக உருக்கி எடுத்த அவதாரம், கலைஞர்' என்று முன்னணி நடிகர் ஜால்ரா தட்டிவிட்டு நான் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொண்டார்.

வீடுகள் கட்டப்படும் இடத்துக்கு கலைஞர் நகர் என்று பெயர் வைக்க வேண்டும், அவர் சிலையை வைக்க வேண்டும் என்று தன் பேச்சில் கலைஞரை வேட்டையாடினார் விஜய். ஆனால் என்னை ஏன் அரசியலிலிருந்து துரத்திவிட்டீர்கள் என்று கேட்க இவருக்கு தைரியம் இல்லை.

அன்று பேசிய மற்ற நடிகர்களைக் காட்டிலும் அஜித் சுமாராகவே நடிப்பார். அவருக்கு நடிக்கத் தெரியாததற்குக் காரணம் அவர் பேச்சில் தெரிந்தது. அவர் பேசியது, இதோ.

மூன்று அடியில் உலகை அளந்த கடவுளை நேரில் பார்த்ததில்லை. ஐந்தரை அடி உயரத்தில் ஒரு தமிழ்நாட்டை முதல்வர் உருவத்தில் பார்க்கிறேன். திரைப்பட தொழிலாளர்களுக்கு இடம் கொடுத்ததற்காக, அவரை பாராட்டினால் அது சுயநலம். அறுபது வருடத்துக்கும் மேலாக தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்த மாபெரும் தலைவரை பாராட்ட வந்திருக்கிறேன். தமிழர்கள் சூரியனுக்கு பொங்கலன்று நன்றி தெரிவிப்பதை போல, இந்த சூரியனுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். சினிமா உலகிற்கு நிறைய சலுகைகள் செய்திருக்கிறீர்கள். சமீப காலமாக சினிமா துறையினர் மீது கோபம் இருக்கிறது. தேவையில்லாத விஷயங்களில் அவர்கள் தலையிடுவதால். சென்சிட்டிவான விஷயங்களில் இன்டஸ்ட்ரி தலையிட வேண்டியதில்லை என்று சொல்லுங்கள். இங்கிருக்கிற ஒரு சிலர் எங்களை கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள். நாங்களும் வருகிறோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். காவிரியில் தண்ணீர் விடவில்லை என்றால் நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்துகொள்ளுங்கள். நாங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது? சினிமா எளிதானதல்ல. புதுமுகமாக இருந்தாலும் ஸ்கிரீன் டெஸ்ட் செய்துதான் வருகிறார்கள். ஒவ்வொருவரும் உழைக்கிறார்கள். அப்படி உழைத்தால்தான் அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். ஒரு பக்கம் எங்களை அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள்; வந்தால் மிரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் வரட்டுமே. முதல்வர் இதற்கு முடிவு சொல்ல வேண்டும்.

தமிழ் திரையுலகத்துக்குக் கலைஞர் செய்துள்ள உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும், நன்றி விசுவாசத்திலும்தான் நான் இங்கு வந்துள்ளேன்"
என்றார். உண்மையை பேசினார், உடனே எல்லோரும் பரபரப்பு பேச்சு, தைரியமான பேச்சு என்று போடுகிறார்கள். அப்படி என்றால் மற்றவர்கள் பேசிய பேச்சு பொய் என்று தானே அர்த்தம் ஆகிறது ?

நடிகர் சங்க, பெஃசி சங்க நிர்வாகிகள் சார்பில் பேசிய வி.சி. குகநாதனும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு யாரையும் வற்புறுத்துவதில்லை என்று சொன்னார்கள். அப்படி என்றால் முதல்வர் அருகில் உட்கார்ந்து இருந்த ரஜினி ஏன் எழுந்து நின்று கைத்தட்டினார்? அவர் சூப்பர் ஸ்டார் என்பதால் எழுந்து நின்று கைத்தட்டினாரா ?

அஜித் பேசிய வீடியோவை கொடுத்துள்ளேன். இந்த வீடியோ எடுத்தவர்கள் "இவனுக்கு கட்டம் கட்டிடுவாங்க என்பது பின்னால் இருந்து கேட்கிறது. நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு இருக்கறவனுக்கு கட்டம் கட்டுவது என்பது தமிழ் நாட்டின் தற்போதய சாபக்கேடான நிலைமை.

என்னை இனிமேல் யாரும் அல்டிமேட் ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம் என்று முன்பு அஜித் சொன்னார். ஆனால் இனிமேல் தான் இவரை இப்படி கூப்பிட வேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது.

48 Comments:

Avinash Srinivasan said...

பேசி பேசியே கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லைன்னு, என்றுமே மனதில் தோன்றுவதை பேசும் தலைக்கு ஒரு சல்யுட்!

Balaji Manoharan said...

தல போல வருமா !!!!!

Guru said...

அஜித் அசல் ஹீரோ என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டார்.அவருக்கு கலைமாமணி,டாக்டர்,பத்மஸ்ரீ சுண்டல்கள் எல்லாம் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்.ஜால்ராகளுக்கு நடுவே ஒருவர் பறை அறைந்தது எல்லார்க்கும் அறைந்தது போல் இருந்திருக்கும். அதனால் தான் குகநாதன் பொங்கி எழுந்துவிட்டார்.

யதிராஜ சம்பத் குமார் said...

பலரும் பேசத் தயங்குவதை அஜீத் பேசியுள்ளார். பாராட்டுக்கள்!!

sivag said...

அஜித்தின் அட்டகாசமான தைரியமான பேச்சு.தமிழ் திரை உலகில் உண்மையை மட்டும் பேசுபவர்களில் அஜித் முதன்மையானவர்.

R.Gopi said...

எப்போதும் எந்த விழாவிலும் கலந்து கொள்ள அஜித் விரும்புவதில்லை...

ஆயினும், இங்கு வந்திருப்பது முதல்வருக்காக என்று சொன்னது பாராட்டத்தக்கது...

அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் தீர்வு எடுக்கும் நிகழ்வுகளுக்கு நடிகர்களை அழைப்பதும், வந்தால் ரவுண்ட் கட்டி திட்டுவதும் (ரஜினியை கண்டபடி சொத்தைராஜ் ஹொகேனக்கல் மேடையில் திட்டியது நினைவுக்கு வந்தது), வராமல் இருந்தால், தமிழின துரோகி என்பதும் (இதற்கு திட்டுவதற்கு பாரதிராஜா தலைமை வகிப்பார்) கால காலமாக நிகழ்ந்து வருகிறது...

ஆனால், அதே திட்டத்தை நிறைவேற்றாமல் அரசு கிடப்பில் போட்டதை யாராவது (இந்த புல் தடுக்கி பயில்வான்கள்) கேட்க முடியுமா அந்த ”தலை”வரிடம்??

நண்பர்கள் சொன்னது போல், பூனைக்கு மணி கட்டி விட்டார்... இனி பார்ப்போம்... என்ன நடக்கிறதென்று...

இந்த நிகழ்ச்சிக்கு விஜயகாந்த் வரவில்லையா?? இல்லை என்றால், அவர் நடிகர் (!!??) இல்லையா??

”தலை” இந்த விஷயத்தில் “தல”யை ஆமோதிப்பது போல் பேசியது கவனிக்கத்தக்கது...

மதுவதனன் மௌ. / cowboymathu said...

//ஆனால் வேட்டி ? அதை இன்னும் ஆம்பளைகள் மட்டும் தான் உடுத்துகிறார்கள்( பார்க்க படம் )//

நிரம்ப இரசித்தேன் இந்த வசனத்தை. அஜித்தை பிடிப்பதற்கு அவரது சினிமா தாண்டிய செயற்பாடுகளே காரணம்.

கிருஷ்ணமூர்த்தி said...

கதறக் கதறக் கற்பழிப்பு என்று செய்திகளைப் படித்திருக்கிறோம்! கதறக் கதறக் கட்டாயமாகத் தூக்கி வந்து பாராட்டு! பாராட்டுவிழாவில் எவ்வளவு அதிகமாகக் கூஜா சொம்பு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கு என்று இதையே பிழைப்பாக வைத்துக் கொண்டிருந்தால், இப்படி ஒரு நாள் யாரோ ஒருவர் வாய் விட்டுச் சொல்கிற அல்லது கதறுகிற நிலை வரும் என்பது தெரிந்தது தான்!

காகித ஓடம் கடலலை மீது போவது போலே.......!

டன்மானடமிழன் said...

thanks...இ.வ.

லேட்டா போட்டாலும்
Good presentations

many more thanks.

சீனு said...

இது ஒரு விதத்துல சிங்கத்தின் குகையிலேயே சென்று பேசிய பேச்சுத்தான்.

இந்த நிகழ்ச்சி கூட அவர் விருப்பப்பட்டு வந்திருப்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா என்ன?

//அறுபது வருடத்துக்கும் மேலாக தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்த மாபெரும் தலைவரை பாராட்ட வந்திருக்கிறேன்.//

இதுவும் கூட பொய்யாக இருக்கலாம். ஆனால், கமலுக்கு இல்லாத தைரியம், ரஜினிக்கு இல்லாத தைரியம் அஜித்துக்கு. இனி, மெல்ல கட்டம் கட்டுப்படுவார். யார் கண்டா? இனி, ரெய்டு நடக்கலாம். வீடு இடிக்கப்படலாம்.

தல போல வருமா?

ரஜினி வெளிப்படையா பாராட்டிட்டார். கமல் உள்ளுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்.

Hats off...

சீனு said...

//என்னை இனிமேல் யாரும் அல்டிமேட் ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம் என்று முன்பு அஜித் சொன்னார். ஆனால் இனிமேல் தான் இவரை இப்படி கூப்பிட வேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது.//

என் சார்பாக ஒரு ரிப்பீட்டு...

Shankar said...

Hats of to thalaaaaaaaa,,,,Thala pola varuma Kandippa varathu,,varamudiyathu

சைவகொத்துப்பரோட்டா said...

பொருத்தமான "தலை"ப்பு

IdlyVadai said...

பல பேர் இங்கே அந்து அஜித்துக்கு சல்யூட், ஹாட்ஸ் ஆப், பாராட்டுக்கள் என்று சொல்லுவதை பார்த்தால் நிறைய ரஜினி ரசிகர்கள் இருப்பர்கள் போல :-)

Anonymous said...

அஜீத் உண்மையைத் தான் பேசினார். ஆனால் அது கழகத்திற்கோ, கண்ணின் மணிகளுக்கோ பிடிக்காதே! இனி ஏதாவது காரணம் பார்த்திருப்பர், சரியான சமயத்தில் அவரைப் போட்டுப் பார்த்து விடுவார்கள். பாவம் அஜீத்! நுணலும் தன் வாயால் கெடும் என்பதை அப்பாவியாய் நிரூபித்து விட்டார்.

ஆனால், இதுபோன்ற கேளிக்கை விழாக்களில் எல்லாம் கலந்து கொள்ள வேண்டாம், சினிமாக் காரர்களை அதிகம் முன்னிலைப் படுத்த வேண்டாம். நாம் மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று தலைவரிடம் இளையவர் சொன்னதாகவும், ஆனால் அது உடன்பிறப்புகளால் புறந்தள்ளப்பட்டதாகவும் தகவல் மீடியாவில் கசிந்து கொண்டிருக்கிறது.

அஜீத் மனசாட்சியுள்ள மனிதர். அது தலைவரின் மறைந்த மனசாட்சியாக இருக்குமோ?

- நடராஜன்

முகிலன் said...

அஜீத்துக்குப் பாராட்டுகள்.

Anonymous said...

//ரஜினிக்கு இல்லாத தைரியம் அஜித்துக்கு.//

ajitha munna vaaramalara ellaam "vaai kozhuppu nadigar"-nu thaan kuripiduvaanga

crsathish said...

தல போல வருமா !!!!!

மர தமிழன் said...

அஜித்தும், கங்குலியும் ஒரே சாயல்ல இருக்கறாமாதிரியே இருக்கு, ஒத்த கருத்தில் அவர் பனியன கழட்டி சுத்தின ஆம்பள இவர் வேட்டி கட்டின ஆம்பளை ..:))

Anonymous said...

http://www.starajith.com/media_display.php?id=1786

அஜித் வேண்டாம் என்றாலும் .. அவர் ராசி இக்கு பொலிடிக்ஸ் ல வந்து ஒரு கலக்கு கலக்குவார் என்ற தோன்றுகிறது

Anonymous said...

iv
rajni's support by giving a standing ovation at the very moment has a message in itself .by doing so he sends a strong message to every one that ajith "thani aal illa".othervise ajith might have faced some serious problems .thank rajni for timing backup
regards
devaraj

இரா.சுரேஷ் பாபு said...

// ஆனால் வேட்டி ? அதை இன்னும் ஆம்பளைகள் மட்டும் தான் உடுத்துகிறார்கள்( பார்க்க படம் )//

மிகவும் ரசித்தேன்...
தல போல வருமா...

vedhanarayanan said...

Rajini also talked like this 15 years back while sharing platform with JJ. And he later switched sides and switched again. If JJ wins now, everyone including Rajini will have a function to honour JJ. What is the compulsion in their life... investments...marriage halls, farm houses, land encroachments , land notifications, loans for productions...

Erode Nagaraj... said...

ஆஹா... வேஷ்டி இன்னமும் ஆண்கள் தான் உடுத்துகிறார்கள்.... இன்னும் கூட ஆண்கள் தான் மீசை வைத்துக்கொள்கிறார்கள்... இன்னமும் குழந்தைகளை பெண்கள் தான் சுமக்கிறார்கள்...

ChanDrU said...

Thala Rocks and proves to be the True Man in Kollywood....

THALA ROCKSSSSSSSSSSSS

Anonymous said...

He has some balls to say that when the chief criminal was around.

Vanjapugalchi ani at its best.

pachhamilaka said...

சினிமா நண்பர்கள் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்,அஜித் நல்ல மனிதர் என்று ,நிருபித்திருக்கிறார் இதுதான் அசல்

Anonymous said...

இதுக்குபேர்தான் சொந்த சொலவில் சூன்யமோ?

Anonymous said...

MGR uyirudan irukum pothu V.C.Guganathan avarku allakai....ippo Kalaingaruku....anal iruvarum thani ani kondavargal......jalra adipavargaluku ellame onuthan......VCG Unaku paiyanurla oru veedu confirm......

Anonymous said...

Not just me, Most of his loyal fan base like Ajith as a human being more than an actor.

More over most of the actors have no backbone. Ajith showed he is different.

But we have to wait and see, he'll take a severe beating indirectly from all the people he exposed in front of CM.

Calgarysiva said...

அப்போதைய முதல் அமைச்சர் மேடையிலயே எதிர்த்தவர் ரஜினி இன்றைய முதல்வரை பக்கத்திலிருந்து எதிர்க்கிறார் அஜித்தை சப்போர்ட் செய்யும் சாக்கில்

சபாஷ் அஜித் உங்களுக்கு ரஜினியின் ஆசி உண்டு

சூப்பர் ஸ்டாரும் அல்டிமேட் ஸ்டாரும் வரும் கால முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் (ஆண்டவா தமிழகத்தை உன்னாலும் காப்பத்த முடியாது ஆகையால் தண்ணி தெளித்துவிடு)

சினிமா தொழிலாளர்களுக்கு பொது நிலத்தை அளிக்க மக்களுக்கு இஷ்டமா? இல்லையா என கேட்க வேண்டமா? இவர் பாட்டுக்கு அள்ளிதர இவர் வீட்டு சொத்தா?

Anonymous said...

1945ஆம் ஆண்டு முதல் இதுவரை நான் திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி முதல் மனோகரா உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

​எனினும்,​​ நான் கலையுலகில் உச்சகட்டத்தை அடைந்து விட்டதாக கருதவில்லை.​ அதனால்தான் எந்த விதமான ஆணவமும்,​​ அகம்பாவமும் என்னை அணுகாமல் அடக்க ஒடுக்கமாக இந்தத் துறையில் இதுவரையில் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.​ இன்னமும் எழுதிக் கொண்டேயிருக்கிறேன்


அரசியல் மற்றும் கலைத் துறைகளில் நான் கற்றுக்கொண்ட அடக்கம் ஒடுக்கம் என் உணர்வோடு கலந்துவிட்டது.

புகழுரைக்கு மயங்காதீர்:​ "இந்திரனே,​​ சந்திரனே' என்றெல்லாம் புகழ்ந்து உங்களைத் தூக்கி நிறுத்துபவர்கள்,​​ அதே வேகத்தில் உங்களை கீழேதூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பார்கள்.​ இதை மனதில் கொண்டு,​​ அவர்கள் உங்கள் காதருகே பேசும்போதெல்லாம் நீங்கள் காது கேளாதோராகிவிட வேண்டும்.

மற்றவர்களைப் பற்றி உங்களிடம் அவர்கள் கோள்மூட்டும் போதெல்லாம் நீங்கள் வாய் பேசாதோராகிவிட வேண்டும்.​ இப்படி ஒரு விரதத்தைக் கடைப்பிடிப்பீர்களேயானால்,​​ கலை உலகிலும் சரி,​​ அரசியல் வட்டாரத்திலும் சரி,​​ மொத்தத்தில் பொதுவாழ்க்கையிலே உயர்ந்ததோர் இடம் உங்களுக்கு கிடைத்தே தீரும்.

இல்லையேல்,​​ எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும்,​​ கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல்,​​ தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அந்தக் கோபுர கலசத்தின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

VARATHARAJAN RAMANUJAM said...

THE MEAN OF SPEAK WHILE NEEDED WAS PROVED BY AJITH SPEECH....

வலைஞன் said...

உலகத்தோடு ஓட்ட ஒழுகல் கல்லார்
பல கற்றும் அறிவிலாதார்! (வள்ளுவர்)

மேற்கண்ட குறளை தல க்கு யாராவது புரியவைப்பது நல்லது!

SUBBU said...

தலயோடா நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு !!

சீனு said...

//அஜித்தும், கங்குலியும் ஒரே சாயல்ல இருக்கறாமாதிரியே இருக்கு, ஒத்த கருத்தில் அவர் பனியன கழட்டி சுத்தின ஆம்பள இவர் வேட்டி கட்டின ஆம்பளை ..:))//

இதை நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனா, 2 பேருக்கும் சில விஷயத்துல பயங்கர ஒற்றுமை இருக்கு. (2 பேருக்கும் பொதுவா நக்மா இருந்தாலா?;))

Don said...

Ajith is clear not to get involved in politics. The same problem is faced by Amitabh Bachan, SRK. Ajith doesn't realize the fundamental fact that he can't afford privacy after coming into public life(film star) much like politics. Even if he sneezes, it'll be shown in media. And people will protest if he has different opinions than theirs. It's all the problem with public life as such. There is no escape to it. It's the media that has to help him by ignoring him.

Anonymous said...

I am very proud to tell that I am Ajith fan

ஆதி மனிதன் said...

மஞ்சள் பஞ்ச சூப்பர்.

Anonymous said...

/It's the media that has to help him by ignoring him / :)

Impossible, media was never good with Ajith because he speaks the truth .Poor man, hereafter we can get good DVD copy of his new movies before its release date for a cheaper price.

DMK will surely make a point to teach a good lesson to shut his mouth

Thala fan said...

வாழ்த்துக்கள் தல.

அவர் கருத்தை தெளிவாக மரியாதையாக தான் சொல்லியிருக்கார். இதில் மு.க. மனம் புண் பட வாய்ப்பில்லை.
விவேக் பேசியதை ஒப்பிட்டால் இவர் உணர்சிவசபடாமல் பேசியிருப்பது தெரியும். Moreover he is not accusing M.K.

தொடை நடுங்கிகளும், ஜால்றாகளும் மட்டும் வாழும் ஊரில் இவர் பேசியது வேண்டுமென்றால் வித்தியாசமானதாக இருக்கலாம்.
குனிய குனிய குட்ட தான் செய்வார்கள். நிமிர்ந்து பேச பழக வேண்டும். ஒரு சில கைபொடிகள் இவருக்கு எதாச்சும் தொந்தரவு கொடுக்க முயற்சிக்கலாம். கண்டிப்பாக துணிந்து, நிதானமாக செயல்பட்டால் பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்பில்லை. அதாவது தல போன்றவர்களுக்கு இது பிரச்சனையாகாது.

எனக்கும் உள்ளுக்குள்ளே ஒரு சிறு உணர்வு. இது தலையின் அரசியல் பிரவேசத்திற்கு அடிகல் ஆக இருக்குமோ?. ;-)

All is well.

சிண்டுமுடி சிகாமணி said...

/// ஆனால் வேட்டி ? அதை இன்னும் ஆம்பளைகள் மட்டும் தான் உடுத்துகிறார்கள் ////

அப்படியா, சேர நன்னாட்டில் பெண்கள் முண்டும் லுங்கியும் அணிவதாய் தோன்றுகிறதே.

வேட்டி கட்டின ஆம்பளை எனும் வார்த்தை பிரயோகத்தில் இட்லி வடை சொல்ல விரும்புவது என்ன.

கருணா நிதி வேட்டி கட்டியிருக்கிறார். கமல் ரஜினி வேட்டி கட்டவில்லை.

ஜானு... said...

தல சொல்வது சரிதான் அவர் வேலை சினிமாவில் நடிப்பது அதை செய்கிறார் பிறகு ஏன் மற்ற விசயங்களில் தேவையில்லமால் ஈடுபடசொல்கிறார்கள் என்ற ஆதாங்கம் நியாமானது தான், அதுபோல் ரசிகள் மன்றங்களையும் கலைத்துவிட சொல்லி அவர்கள் வேலையையும் ஓழுங்க பார்க்க சொல்லலாமே.....

சிவசண்முக போன்ற திவிர ரசிகர்கள் தல பேச்சை கேட்டு சந்தோசத்தில் தலை கால் புரியாமல் இருப்பவர்கள் இதையும் யோசித்து, ரசிகர்களுக்கும் தல என்ற ஒன்று அதில் மூளை என்ற பகுதி இருக்கு என்பதை உணர்த்தவேண்டும்

Ajeeth said...

This is really atrotious.

People,

Please understand Ajith's feeling.

He is a real Man who rocks.
While no actor/actress did not have the courage to disclose the facts, He came out with the real solution.

SALUTE HIM!!!!

THALA is GREAT!!!!!!...

Kumar Saravana said...

இன்றய காலகட்டத்தில் மனதில் பட்டடதை யாரும் தைரியமாக சொல்ல மாட்டார்கள்... ஆனால் வேட்டி கட்டின ஆம்பளை அப்படி சொன்னதுக்கு தலைக்கு ஒரு சல்யூட்...
தல போல வருமா.............

vel said...

Always thala is proving i am different from others.I am very proud to tell that I am Ajith fan.

Ratnam said...

இரட்டை வேடத்தில் அஜித்தின் 50 வது படம்! (more details in 'திரை நிலா அஜித்' magazine june2010 edition in www.emagaz.in)

thala panneer said...

//என்னை இனிமேல் யாரும் அல்டிமேட் ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம் என்று முன்பு அஜித் சொன்னார். ஆனால் இனிமேல் தான் இவரை இப்படி கூப்பிட வேண்டும் என்று நமக்குத் தோன்றுகிறது.//