பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 03, 2010

8 ஜஸ்ட் ஃபார் லாஃப்

சும்மா...

1. தேர்தல் கமிஷனுக்கு 60 ஆம் ஆண்டு விழா. உடனே அரசியல் தலைவர்கள் டெல்லி சென்று கும்மி அடித்திருக்கிறார்கள். நிறைய அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சில் தேர்தலில் பண பலம், அடியாள் பலம், குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இப்போ இருக்கற தேர்தல் கமிஷன் என்ன செய்ய முடியும்? அரசியல் லாபத்துக்கு நம்ம "பெருந்தலைவர்கள்" இந்த மாதிரி ரவுடிகளை நிற்க வைத்திவிட்டு "நவீன் சாவ்லா" தலைமையிலான தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும் என்றால் சிரிப்புதான் வருகிறது.

டிக்கெட் பிளாக்கில் விற்க அனுமதிக்கக்கூடாது என்று தியேட்டர்காரர்கள் போலீஸில் புகார் செய்தால் எப்படி இருக்கும்?அதே போல தான் இதுவும். கிரிமினல் பின்னணி உள்ள வேட்பாளர்களை நிறுத்துவது அரசியல் கட்சிகள்தான் இதில் பி.ஜே.பி முதல் இடம், காங்கிரஸுக்கு இரண்டாவது இடம்.

குற்றப்பின்னணி உள்ள எம்.பிக்கள் பி.ஜே.பியில் - 43, காங்கிரஸில் - 41. மொத்தம் 153 பேர் இருக்கிறார்கள். அதில் 74 பேர் கிரிமினல் குற்றம் புரிந்தவர்கள். கிரிமினல் குற்றம் புரிந்தவர்களில் 14% பெண்கள். இந்த அழகில் இவர்களுக்கு 33% கொடுத்தால் கேட்கவே வேண்டாம்!


2. போன வாரம் மராத்தி தெரிந்தால்தான் மும்பையில் டாக்ஸி ஓட்டலாம் என்ற சட்டத்துக்கு மட்டுங்காவில் இருக்கும் பாம்பே ஞானம் ஆமாம் என்று வரிந்துக்கட்டிக்கொண்டு வந்தார். அவர் செய்த சப்போர்டைப் பார்த்துவிட்டு "மும்பை மராத்திகளுக்கே" என்று ஆரம்பித்துவிட்டார்கள் சேனா கட்சிக்காரர்கள்.

மஹராஷ்டிராவில், மாமன் பால்தாக்கரே இம்மாதிரியான பிராந்திய வெறியைத் தூண்டி விடுவதில் சட்டாம்பிள்ளையாகத் திகழ்ந்தார். இடையில் மருமான் ராஜ்தாக்கரேவுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் உதயமானதுதான் நவநிர்மாண்சேனா. ஒரு குரங்கிடம் பூமாலை சிக்கினாலே சின்னாபின்னமாகிவிடும். பல குரங்குகள் ஒன்று சேர்ந்தால்? அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மொழி மற்றும் பிராந்திய வெறியை வளர்ப்பதில் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற பலப்பரீட்சை மாமனுக்கும் மருமானுக்குமிடையே நடைபெற்று வருகிறது. இந்த நாடகத்தின் குரங்காட்டியாக காங்கிரஸ். உன்னை விட நான் பெரியவன் என்று நிரூபிக்கும் முயற்சியாக ராஜ் தாக்கரே, மும்பையில் நடைபெற்ற ரயில்வே தேர்வுகள் மற்றும் மத்திய அரசுத் தேர்வுக்காக வந்திருந்த வட இந்திய மாணவர்களை அடித்து விரட்டினார்; மராத்தி அல்லாத டாக்ஸி டிரைவர்கள் அவரது அடுத்த குறி; இப்படியாக இவர் அரங்கேற்றிய அராஜகங்களை வேடிக்கை பார்த்த்து ஆளும் மாநில காங்கிரஸ். காரணம், சிம்பிள். ராஜ் தாக்கரே மீது அடக்குமுறையைக் கையாண்டால், மொழிவெறிக் கொள்கையுடைய கட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு கூட்டணி அமைந்து விடும். அப்படி ஏற்பட்டால் அங்கு ஓட்டு பெறுவது சுலபம். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியின் இன்றைய கதி இதுதான். பொடா சட்டம் முதலில் "சேனா குரங்குகள்" மீது பாய வேண்டும்.

மும்பை மராத்திய மைந்தர்களுக்கே என்று அறைகூவலிடும் சிவசேனையை காங்கிரஸ் கண்டிக்கவில்லை, மாறாக அதனைக் கண்டிக்கும் பாஜகவை சிவசேனாவுடன் உறவை முறிக்கத் தயாரா என்று கேட்கிறது. இதிலிருந்தே காங்கிரஸின் கொள்கை நன்றாக புரிகிறது. இதுதான் காங்கிரஸின் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் லட்சணம். மனு சிங்வி சொல்கிறார், பாஜக எங்களைப் பார்த்து கொள்கையைக் காப்பி அடிக்கிறது, சுயபுத்தி இல்லையென்று. இவர்களது கொள்கை என்ன? மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தம் என்பதா? அப்படியென்றால் ஏன் நவநிர்மாண் சேனா மீதோ அல்லது ராஜ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் மீதோ நடவடிக்கை ஏதுமில்லை? டாக்ஸி ஓட்ட மராத்தி தெரிந்திருக்க வேண்டும், அங்கேயே 15 ஆண்டுகாலமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற கேலிக்கூத்தான சட்டம்? இவர்களைப் பொருத்தவரை தேசிய ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெறும் வெளிவேஷம்தான். மற்றபடி ஓட்டே பிரதானம். மாமிக்கள் யோசிக்க வேண்டும்.


3. மத்திய அரசு தரும் பணத்தில்தான் இலவச கலர் டி.வி.​ வழங்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருந்தார். நம்ம முதல்வர் வழக்கம் போல தனது வெட்டித்தனமான கேள்வி-பதில் அறிக்கையில் ஈ.வி.கே.எஸ்.​ இளங்கோவன் கூறுவது தவறு.​ இப்படித்தான் சில தவறான தகவல்களை அவர் அடிக்கடி சொல்லறார் என்றும், இலவச கலர் டி.வி. தமிழக நிதியில் இருந்துதான் கொடுக்கப்படுகிறது என்றும் ரொம்பத் தெளிவா விளக்கி இருக்காரு. தமிழக நிதி என்றால் நம்ம வரிப்பணமே. இவரேதான் கொஞ்ச நாள் முன்னாடி கடன் வாங்காம ஆட்சி பண்ணறது கஷ்டம் என்று ஒரு பெரிய அறிக்கை விட்டு இருந்தாரு. இப்டி ஊதாரித்தனமா பல இடங்களிலும் கடன் வாங்கியாணும் ஓசி சரக்கு குடுத்து ஓட்டு வாங்கும் வித்தைய வரும் தலைமுறைக்கு நல்லாவே கத்துக் கொடுத்துருக்கார் பெரியவர். இதப் படிச்சா காமெடியா இருக்கா கடுப்பா இருக்கா என்று மக்கள்தான் முடிவு செய்யணும்.

4. தமிழ் நாட்டிலேயே எனக்கு மட்டும்தான் "அடுத்த தலைமுறை" மீது மிகுந்த அக்கறை உள்ளது. பென்னாகரம் இடைத்தேர்தலில் 45000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னது யாரு? ரொம்ப சரியா கெஸ் பண்ணினீங்க! தன்னோட அடுத்த தலைமுறையான அன்புமணிக்காக பாராளுமன்றத் தேர்தல் சமயத்துல பச்சையம்மா காலுல விழுந்து கூட்டணி வெச்சு, போட்டியிட்ட எல்லா இடத்திலும் மண்ணைக் கவ்வி, இப்போ தனித்து விடப்பட்டுள்ள "பல கலர் அவதாரபுருஷன்" இடைத்தேர்தல் ஜுரத்தில் உளறியிருக்கும் காமெடிதான் இது.


5. சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் ரெண்டு நாள் முன்னாடி பிரபாகரன் மரணச் சான்றிதழ் வரலை என்று ஒரு தகவல் அறியும் சட்டம் வழியாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருந்தார். நேத்திக்கு நம்ம உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மரணச் சான்றிதழை இலங்கை கொடுத்து விட்டது என்று பேட்டி அளித்துள்ளார்!

6. பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோரின் முடியில் டிஎன்ஏவை டெஸ்ட் செய்து பார்த்து விட்டேன். அவர்களது டிஎன்ஏவும், சக இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றாகவே உள்ளன. எனவே மராத்தியர்கள், பிற இந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று இனியும் தாக்கரேக்கள் கூறிக் கொண்டு திரியக் கூடாது என்று சுப்ரமணிய சுவாமி அதிரடியாகச் சொல்லி இருக்காரு.
இதை அவர் வெறுமனே சொல்லவில்லையாம். தாக்கரேக்களுக்கு முடிவெட்டுவோரிடமிருந்து அவர்களது முடியை சேகரித்து ஹைதராபாத் ஜீன் க்ளீனிக்கில் சோதனை செய்து அதன் முடிவை வைத்துதான் சொன்னாராம்!


7. இது நிஜமான "Just for Laughs"
8. இது ஒரிஜனல் :-)

என்னுடைய அவதார் படத்தின் விமர்சனம் பற்றி பலர் விமர்சித்தார்கள். ஆனால் அவதார் படம் அப்பட்ட ஹிந்தி படத்தின் காப்பி என்று தற்போது தெரிந்துள்ளது. ஃபுரூப் கேட்பவர்கள் கீழே பாருங்க.

முதலில் போஸ்டர்


முடக்கு வாதம் யாருக்கு முதலில் வந்தது ? நீங்களே பாருங்க..


சப்னா அஸ்மி நடிப்பு அவர்களுக்கு சுட்டு போட்டாலும் வராது. இருந்தாலும் காப்பி அடிக்கிறாங்க. என்ன தைரியம் !


அட பாவிகளா இந்த சீனை கூட விட்டு வைக்கவில்லை. இது மாதிரி எல்லாம் உங்களால முடியாது


( Source: http://www.fakingnews.com/2010/01/rajesh-khanna-breaks-his-silence-accuses-james-cameron-of-plagiarism/ )


நேற்று செவ்வாய்கிழமை என்று ஞாபகப்படுத்திய அன்பருக்கு இந்த பதிவு சமர்பணம்

21 Comments:

Anonymous said...

IV, please give credit to FakingNews for the Avatar comparison

http://www.fakingnews.com/2010/01/rajesh-khanna-breaks-his-silence-accuses-james-cameron-of-plagiarism/

IdlyVadai said...

எனக்கு மெயில் நேற்று மெயில் வந்தது. தகவலுக்கு நன்றி

அநன்யா மஹாதேவன் said...

இந்த அவதார் நக்கல் எல்லாம் ரெம்ம்ம்ப ஓவர், ஆமா, சொல்லிப்புட்டேன்.

இது யாருடைய யோசனையா இருந்தாலும் அவங்களுக்கு என் பாராட்டு. கலக்கிட்டாங்க.அம்புட்டுதேன்.

பிள்ளையாண்டான் said...

அவதார் கதை, "வியட் நாம் காலனி" யோட உல்டான்னு சொல்லி, மலையாள சேட்டன்மார்கள் மெயில் அனுப்பிட்டு இருந்தாங்க. (தமிழ் "வியட் நாம் காலனி" மலையாள படத்தின் ரீ மேக்.) படிச்சீங்களா? இது என்ன புது கரடியா இருக்கு...

kggouthaman said...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்துருக்கீங்க. ஒவ்வொன்றுக்கும் சிரிச்சுட்டேன். அவதாருக்கு அதிகமாகவே.

நாஞ்சில் பிரதாப் said...

அவ்தார் மேட்டரு செம ஜோரு தலைவா...

SUBBU said...

:-)

SUBBU said...

:-)

SUBBU said...

உங்க followers 900+, வாழ்த்துகள் :)))

jaisankar jaganathan said...

//இது நிஜமான "Just for Laughs"
//

சரியா தெரியலை. பெரிய screen ல போட முடியுமா?

Don said...

I was surprised to find the moderate paper like Hindu reacting vehemently to Thackeray - http://beta.thehindu.com/opinion/columns/siddharth-varadarajan/article99488.ece

Even M.K couldn't keep mum on the issue(good gesture by MK!) - http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article99789.ece

If congress thinks it can eliminate Shiv Sena once for all, it can do it now. I think Shivsena led itself to the trap. What they'll do with their mannu supporters when the whole India is against them. How about denying citizenship to mannus ?. These sectarian parties should be banned atleast now as their core principle is to divide India. If the govt had a law that doesn't allow sectarian,caste/creed/religion based organisations(with sectarian,divide and rule policies), then Telangana issue would not be there. And organisations like SIMI,Hurriyat etc wouldn't exist at all.

Singa Muthu said...

நான் வழிமொழிகிறேன்

Anonymous said...

What about the DK, PDK, DMK, NTK (Naam Tamizhar Katchi) and our DBW (Dravida Blog Writers), who spout hatred against a particular community in Tamilnadu, day in and day out?
What about the Chief Minister of TN (who is the CM not only for his Dravida citizens but for all those living in TN) abusing Hindu religion and a particular community calling them AVALL, IVALL etc.
Are they not preachers of hatred?
Are they not on par with Thackerays?

R.Gopi said...

இது தான்யா “சிரிப்பு”னு சொல்ல வச்ச பதிவு.... ராஜேஷ்குமார் பாவம்.

மஞ்சள் கமெண்ட் அடிஷனல் கலகல..

Anonymous said...

My question to IV and all those comment-writers :: Suppose tomorrow if Chennai's all autos, grocery shops, and say jewelry shops etc are taken over by Telugus or Malayalees, would you parrot "Chennai is for all Indians, and not just for Tamils"?

Even without this happening, we call Telugus as "Gul---" and Malayalees as "Mal---".

Thalaivaliyum, palvaliyum thanakku vanthaalthan athan vali puriyum.

maddy73 said...

'origina'l is always 'original'

Don said...

Though I don't agree with Thackerays, but let's explore the roots of the issue. Chennai realestate has skyrocketed due to the invasion from neighbouring states. There should be something to prevent such mass migrations in search of job/living or whatever. Such mass migrations brings with it lots of issues like traffic, healthcare and is a big headache to the govt. The industries should have been distributed evenly to different locations. It's ultimately govt's failure to distribute industries that led to development of selected areas and eventually led to issues like Telangana, Mumbai etc.

R. Jagannathan said...

// குற்றப்பின்னணி உள்ள எம்.பிக்கள் பி.ஜே.பியில் - 43, காங்கிரஸில் - 41. மொத்தம் 153 பேர் இருக்கிறார்கள். // The rest are trying to get into the list!

// மும்பை மராத்திய மைந்தர்களுக்கே என்று அறைகூவலிடும் சிவசேனையை காங்கிரஸ் கண்டிக்கவில்லை, // Incorrect. Today's papers carry Rahul's objection and Sena's retaliation. My opinion is all drivers will learn one of the local languages as it is required for their survival. Though SivSena is militant, their intention to help the Maharashtrians cannot be faulted.

// "Just for Laughs" // I took the links from this youtube video and saw Mr. Bean's videos - one, his treatment by the dentist and two, his driving the car by sitting on a chair on top of the car. They are good too!

-R. Jagannathan

Agni said...

If I am right, Chidambaram did not say Sri Lanka has given the death certificate. He has said something like Sri Lanka has given India some proof of Prabhakaran's death. This document is not the same as a death certificate. This is an important technicality and one that is likely to keep the myth (or otherwise) of Prabhakaran's existence alive.

Anonymous said...

The picture AAVTAAR IS NOT YOURS ; ONLY THE REVIEW IS YOURS ; i HOPe i AM RIGHT
sUPPAMANI

Selvakumar said...

along with Ramadoss joke, subbi samy's joke takes the cake of the century. eppadi ellam pinnuraal.. iva aathukaari kandikkavae maattaala itha ellam..

namma thala mudiya ivar kaiya vaikkaama paarthukanum.