பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 21, 2010

சன்டேனா இரண்டு (21-02-10) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்...அரசியல்.



செய்தி # 1

கம்யுனிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை. போராட்டம் என்பது அதன் வழிமுறை என்று அடிக்கடி கூறுவார்கள். கடந்த சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்ட கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலோர் தங்களது சொத்துகணக்கை ஆயிரங்களில் காட்டி இருந்தார்கள். நான் சந்தித்த, மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்க தலைவரும், கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டவரும் ஆனா திரு. பாலகிருஷ்ணன் மிக எளிமையானவர். சைக்கிளில் செல்லும் மனிதர்.

நல்லகண்ணு உட்பட நாம் இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். அக்கட்சியின் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர் திரு. டபிள்யு. ஆர். வரதராஜன் ஒரு கடிதம் எழுதிவிட்டு, காணமல் போய் விட்டார்.

"நான் கட்சிக்காக பல போரட்டங்களை நடத்தி இருக்கிறேன். பல போராட்டங்களில் பங்கு எடுத்து இருக்கிறேன். ஆனால்,வாழ்க்கை என்னும் போராட்டத்தில், நான் நிலைகுலைந்து விட்டேன். எனது இல்லம் உட்பட எங்கும் எனக்கு பட திறப்புகளோ, இதர நிகழ்ச்சிகளோ நடத்த பட கூடாது. தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை முடக்கி அதை கட்சிக்கு கொடுத்து விட வேண்டும். இறந்த பிறகு எனது உடல் மருத்துவ ஆய்வு பணிக்காக ஒரு மருத்துவ கல்லூரியில் ஒப்படைக்கபட வேண்டும் " என்று அக்கடிதத்தில் எழுதி இருக்கிறார் அவர்.

அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனாலையே அவர் மனமுடைந்து சென்று விட்டார் என்றும், ஒழுங்கின நடவடிக்கை எடுத்து அவரை பொறுப்பில் இருந்து கட்சி மேலிடம் நீக்கி விட்டது. அதுவே நிஜ காரணம் என்றும் பேசப்படுகிறது.

வாழ்க்கையே ஒரு போர்க்களம் என்பது தோழர்களுக்குதான் என்று படித்து இருக்கிறேன். கட்சி பிரச்சினையோ இல்லை வாழ்க்கை பிரச்சினையோ ஒரு அனுபவம் வாய்ந்த முதிர்ந்த கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல், இப்படி ஒரு கடிதம் எழுதிவிட்டு ஒதுங்கி சென்று விட்டது எதை காட்டுகிறது?

செய்தி # 2

அயோத்தி பாபர் மசூதி பற்றி ஒரு முறை கவிஞர். மு. மேத்தா அவர்கள் ஒரு கவிதை சொன்னார்.

"பாபர் மசூதியும்
பஸ்ஸில் பயணம் போகும் பெண்ணும் ஒன்றுதான்
இடிப்பதற்கு என்றால் வருவார்கள்.
யாரும்
கட்ட வரமாட்டார்கள்"


பாஜகவுக்கு செல்வாக்கு சரிவு ஏற்ப்படும் போதெல்லாம் எழுப்பபடும் விவகாரம் ராமர் கோவில். சமிபத்தில் இந்தூரில் நடந்த பாஜக கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அதன் தலைவர் நிதின் கட்க்காரி ஆற்றிஇருக்கும் ஒரு உரையின் சாராம்சம்,

"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அயோத்தி பிரச்சினைக்கு கோர்ட் மூலம் தீர்ப்பு காண இயலாது. ஏனெனில், கோர்ட் தீர்ப்பு என்பது ஒரு சாராருக்கு சாதகமாகவும், இன்னொரு சாராருக்கு பாதகமாகவும் இருக்கும். எனவே, இந்துக்களின் உணர்வுகளை மதித்து, அயோத்தியில் கோவில் கட்ட முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க முன் வர வேண்டும். அவ்வாறு, அவர்கள் செய்தால், மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக அது அமையும். ராமர் கோவில் கட்டிய பிறகு, போதுமான நிலம் அங்கு இருந்தால், அவர்கள் மசூதி கட்டி கொள்ளலாம் " .

"நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றால், எங்கள் ஆட்சியில் அப்துல் கலாம் எப்படி ஜனாதிபதி ஆகியிருக்க முடியும் " என்று ஒரு கேள்வியும் எழுப்பி இருக்கிறார் அவர்.

அயோத்தி வழக்கு விசாரணை முடிந்தாலும், கோர்ட் தீர்ப்பை இன்னும் நூற்றாண்டுகளுக்கு வெளியிட மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு கூடுதல் செய்தி:

தல அஜித்துக்கும், அவருக்கு ஆதரவு தந்த தலைவர் ரஜினிக்கும் சினிமா துறைக்குள் ஏகப்பட்ட எதிர்ப்புகளும், உள்குத்தல்களும் துவங்கி விட்டன.

பெப்சி அமைப்பின் தலைவர் வி.சி. குகநாதன் வெளியிட்டு இருக்கும் ஒரு அறிக்கையை பாருங்கள்.

"சினிமாவுக்காக நமது முதல்வர் கருணாநிதி எவ்வளவோ செய்து விட்டார். அவருக்கு முறையாக விழா எடுக்கிறோம். அதில் பங்கேற்பதில் என்ன கஷ்டம். சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிலர் ஆதரவு தருகிறார்கள். வற்புறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா? நாங்கள் மிரட்டவில்லை; வற்புறுத்தினோம்.

ஊரோடு ஒத்துப் போகணும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும் எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலோ கொண்டு வந்தோமோ... அதே போல் இருக்கும் இடம் தெரியாமலும் செய்து விடுவோம். நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம். என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரம் கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்கு தெரியும் " என்றார்.

மிக வெளிப்படையாக ஒரு மிரட்டல் விடுத்தது இருக்கிறார் குகநாதன். கட்ட பஞ்சாயத்தும், ரவுடியிசமும் செய்வோம் என்று ஒரு பொது மேடையில் பேசப்படும் அளவுக்கு இருக்கிறது நம் சினிமா துறை.

ஆமை புகுந்த வீடு என்று சொல்வார்கள். அதுபோல அரசியல் புகுந்த எல்லா துறைகளும் இப்படித்தான் இருக்கும்.

(நன்றி இனி அடுத்த வாரம்).

-இன்பா

25 Comments:

Anonymous said...

//ஆமை புகுந்த வீடு என்று சொல்வார்கள். அதுபோல அரசியல் புகுந்த எல்லா துறைகளும் இப்படித்தான் இருக்கும்//

http://www.tamilonline.com/

என்ற தளத்தில் விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் பேட்டி வெளியாகியிருக்கிறது. இதே கருத்தைத் தான் அவரும் சொல்லியிருக்கிறார். சினிமாவும் அரசியலும் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் சொறிந்து விட்டுக் கொண்டால் நாடு எப்படி உருப்படும்?

Anonymous said...

>>>ஆமை புகுந்த வீடு என்று சொல்வார்கள். அதுபோல அரசியல் புகுந்த எல்லா துறைகளும் இப்படித்தான் இருக்கும்.

There is no relationship between politics and these kind of activities.

தலைவர்கள்மீதிலான பக்தி நெறியை (Hero Worship) வளர்க்க நினைப்பவர்கள் அடைமொழியைப் பயன்படுத்துகிறார்கள். போற்றிப் புகழ்ந்துரைப்பதெல்லாம் பாடிப் பரிசில் பெறும் புலவர் மரபின் புனைந்துரைகளே. இத்தகைய புலவர்களை ‘வாழிப் புலவர்கள்’, ‘வாளிப் புலவர்கள்’ என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வாளிப் புலவர்களோ வேந்தர்களுக்குக் கால்களில்மேல் நீர் பெய்துவிடுகின்ற திருப்பணியைத் திறம்படச் செய்கின்றவர்களாகவும், அந்த வேந்தர்கள் கண்காட்டுகின்ற திசையில் பாய்கின்ற வாளி(அம்பு)களாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் விளைகின்ற தீங்கு அதிகம். வேந்தர்களின் கருத்துகளோடு மாறுபடுபவர்களை வசைபாடுவதும், மிரட்டுவதும்தான் இவர்களுடைய முதன்மையான பணியாக இருந்துவருகிறது.

தமிழர்கள் ஆட்சியிலிருக்கும் தமிழ்நாடு பசுமைசோலையாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றது,அனைத்துத் தமிழர்களும் பாசக்கார பயபுள்ளைகளாக இருக்கும்போது தமிழரல்லாத தமிழ் நடிகர்களை ஒழித்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.இந்த மாதிரிதான் பிரச்சினையை திசைதிருப்பப் பார்க்கிறார்கள் சில கருத்தஆடுகள்,பாசகார தலைவரும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.இந்தப் பிரச்சினை உச்சத்தை அடைந்ததும் இதனை பெரிசுபடுத்த வேண்டாமென ஒரு அறிக்கையும் விட்டு மாபெரும் பிரச்சினையை ஒரே வார்த்தையில் நீக்கிய மாபெரும் தலைவனுக்கு பாராட்டு விழா என்று ஒரு விழாவுக்காக காத்திருக்கிறாரோ என்னமோ?

jaisankar jaganathan said...

//பாபர் மசூதியும்
பஸ்ஸில் பயணம் போகும் பெண்ணும் ஒன்றுதான்
இடிப்பதற்கு என்றால் வருவார்கள்.
யாரும்
கட்ட வரமாட்டார்கள்"
//

நான் இருக்கிறேன் கட்டுறதுக்கு. மேத்தா கவலைப்படவேண்டாம்

Guru said...

ஆமை புகுந்த வீடு என்று சொல்வார்கள். அதுபோல அரசியல் புகுந்த எல்லா துறைகளும் இப்படித்தான் இருக்கும்

Repeatttuuu

ஸ்ரீராம். said...

//"நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றால், எங்கள் ஆட்சியில் அப்துல் கலாம் எப்படி ஜனாதிபதி ஆகியிருக்க முடியும் " என்று ஒரு கேள்வியும் எழுப்பி இருக்கிறார் அவர்"//

இவர்களுடைய அரசியல் பேச்சில் இந்த மாதிரி சாதனைப் பட்டியல் வாசித்து அவரையும் சங்கடப் படுத்துகிறார்கள்.
என்ன அரசியலோ?
சொத்து சேர்ப்பு வழக்கில் நீதிபதி தினகரன் பெயர் வரும் வரை அவர் என்ன ஜாதி என்று யாருக்கும் தெரியாது. வீரமணி போன்றோர் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். ஜாதி பற்றி பேசக் கூடாது, ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறி விட்டு ராயப்பா பற்றி கூறும்போது அவர் வன்னியர் என்று கழக ஆட்சி கணக்கு காட்டுவதும் இந்த மாதிரி அரசியல் பேச்சுகளுக்கு ஒரு உதாரணம்

ஜெயக்குமார் said...

போராட்டமெல்லாம் சாதாரனர்களுக்கு மட்டுமே.. தலைவர்கள் எல்லாம் சமரசங்களுக்கும், தான் சொல்லிக்கொடுப்பதை தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் இருப்பதற்குமே..

மு.மேத்தா எழுதியது கவிதையா? அவரோட நண்பர்களிட்டம் சும்மா கிண்டல் செஞ்சுக்கிட்டிருந்தார்னு நெனச்சேன்..

சினிமாத் துறையினரின் கவார்ச்சி அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுகிறது. இல்லையெனில் புவனேஸ்வரியெல்லாம் ஒரு கட்சி மீட்டிங்கில் பேசமுடியுமா?

நடிக, நடிகைகளுக்கும் அவர்களின் சமூகவிரோத அல்லது இருட்டில் செய்யும் தொழிலுக்கு பாதுகாப்பு வேண்டுவதால் அரசியல்வாதிகளுக்கு இவர்களின் ஆதரவு. இருவரும் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழவேண்டியது அவசியம்.

மற்றபடி அரசியல்வாதிகள் அரசியலை நுழைய முடியாத அளவு சாக்கடையாக மாற்றி வருகிறார்கள்.

Anonymous said...

//பாபர் மசூதியும்
பஸ்ஸில் பயணம் போகும் பெண்ணும் ஒன்றுதான்
இடிப்பதற்கு என்றால் வருவார்கள்.
யாரும்
கட்ட வரமாட்டார்கள்"//

This is Not Good For.......Blogspot?

Anonymous said...

The Hindu sentiments for that "place" is v much understandable. But nobody can understand or comprehend the support of Muslims to a fanatic terrorist Babar who demolished the Ram temple and built babar masjid over it.

is it bcoz they always side with terror and terrorists?

சீனு said...

//எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலோ கொண்டு வந்தோமோ... அதே போல் இருக்கும் இடம் தெரியாமலும் செய்து விடுவோம். நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம். என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரம் கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்கு தெரியும்//

இது மிரட்டல் இல்லையாம். வற்புறுத்தலாம். போங்கடா போக்கத்தவங்களா...

அது ஏங்க அஜித்தை விமர்சிப்பவர்கள் எல்லாம் தி.மு.க. அனுதாபிகளாகவே இருக்கிறார்கள்? புரியல.

லேட்டஸ்ட் அப்டேட்...

"மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத்"

தல தல தான்...

சீனு said...

ஈழத்தமிழர்களை காத்த(?) தமன்னா...மன்னிக்க தன்மானத்(!) தலைவர் திருமாவின் பேருரை...

ரஜினி - அஜீத்துக்கு திருமாவளவன் கண்டனம்!

ரஜினிகாந்த், அஜீத் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் தமிழ் இன விரோத செயலாக உள்ளது என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

"கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது.

அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும்.

நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது.

விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள். விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.

இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது.

தமிழகத்தில் தமிழ் இனௌணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலை ச் சிறுத்தைகள் அனுமதிக்காது", என்று தெரிவித்துள்ளா

Anonymous said...

தனக்கு தர வேண்டிய எழு லட்சத்தை ஏமாற்றிவிட்டார் என்று நடிகை அனாமிகா மீது சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் புகார் கொடுக்க, இந்த செய்தி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வந்தது. அது வந்து சில நாட்கள்தான் ஆகியிருக்கும். தன்னை கற்பழிக்க முயற்சித்தார். காலில் விழுந்து கெஞ்சினார் என்று ஜாக்குவாரின் டங்குவாரை அறுத்திருக்கிறார் அனாமிகா.

Source:http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2005/may/280505a.asp

கால்கரி சிவா said...

//பஸ்ஸில் பயணம் போகும் பெண்ணும் ஒன்றுதான்
இடிப்பதற்கு என்றால் வருவார்கள்.
யாரும்
கட்ட வரமாட்டார்கள்//

மு.மேத்தா என்ன சொல்ல வருகிறார். ப்ஸ்ஸில் இடிபட்ட பெண்ணை யாரும் கட்ட மாட்டார்கள் என சொல்லுகிறாரா அல்லது பஸ்ஸில் பெண்கள் வந்தால் இடிக்கத்தான் செய்வோம் என்கிறாரா.

அயோத்தியில் இருந்த கட்டிடம் இடிபடுவதற்கு முன் இவர்களுக்கு அயோத்தி எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா அல்லது இவர்களில் எத்தனை பேர் அயோத்திக்கு போய் தொழுகை செய்திருக்கிறாகள் அந்த கட்டிடம் இடிபடுவதற்கு முன்.

தங்களின் அரபு எஜமானர்களின் மனம் குளிர இந்திய மக்களின் வரி பணத்தில் அரபுநாட்டுக்கு தானே புனித பயணம் போனார்கள்..

இவர்களுக்கு மத நல்லிணக்க எண்ணம் என்று ஒன்று இருந்தால் பாஜக தலைவர் சொன்னதுபோல் அயோத்தியில் இவர்களே முன் வந்து கோயில் கட்ட அனுசரிக்க வேண்டும்.

நான் முன்பே சொன்னதுபோல் இவர்களிடம் நாம் இணக்கமாக இருந்தால் மத நல்லிணக்கம் அவர்களுக்கு அமைதி மார்க்கம் என்று பெயர்.. நல்ல காலமய்யா

Anonymous said...

மாயமனா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களி்ல் ஒருவரான டபிள்யூ.ஆர். வரதராஜன் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை போரூர் ஏரியில் அழுகிய நிலையில் அவரது உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

வலைஞன் said...

திரு வரதராஜன் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!
ஒரு நல்ல தலைவருக்கு ,மனிதருக்கு ,இப்படிப்பட்ட முடிவு வந்திருக்க வேண்டாம்.என்ன செய்வது!

வலைஞன் said...

கழகங்களின் (இரண்டையும் சேர்த்துதான் சொல்கிறேன்)
அகம்பாவம்,
ஆணவப்போக்கு நாளுக்கு நாள் வலுக்கிறது.நல்லவர்களை ஆதரிப்போம்.அதிகம் பணம் கொடுப்பவருக்கு வாக்களிப்போம் என்ற மனப்பான்மை நம்மில் பலருக்கு வந்திருப்பது அச்சத்தை அளிக்கிறது!

rajatheking said...

"ஜாகுவார் தங்கதிடம் சில கேள்விகள் .."
..
www.kingraja.co.nr

இந்த blog அ பார்க்கவும் ...

R. Jagannathan said...

It is sad that a communist leader has met with this type of end. It is clear that his wife and family are threatened by another claimant for the wealth left behind. People in politics have to be careful or earn thousands of crores and get them divided amongst all his families when alive. You got it.

I also refer to the news of George Fernandez who is untraceable and his case is also a similar one to that of W. R. Varadarajan. Another illegal connection threatening his original family. He was a terror and a Gunda in the 70s in Bombay - Vikhroli industrial belt as a trade union leader and even there were talks of murders attributed to him. How is the ill-gotten wealth helping him mow? There in no one to feed him even one morsel of food. Will the politicians and industrialists who amass wealth pass to think?

-R. Jagannathan

ஆதி மனிதன் said...

//"மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத்"
தல தல தான்...//

அவசரப்பட்டு பாராட்டிடாதீங்க. இப்படிதான் பெரிய தல குசேலன் அப்பா சொன்னாரு. முதல "மன்னிக்கவும்" அப்புறம் மன்னிப்பு கேக்கல "வருத்தம்" தான் தெரிவிச்சேன்னு. இப்ப சின்ன தல. ஒரு வாரம் கழிச்சு நான் அப்படி சொல்லவே இல்ல, என் பேச்ச தவறாக திரிச்சிட்டாங்கனு. என்னவோ போங்க.

யதிராஜ சம்பத் குமார் said...

தமிழகத்தில் நல்லதைப் பேசினால் பைத்தியக்காரப் பட்டம்தான் மிஞ்சும். அஜித்தையும், ரஜினியையும் வேஷதாரிகள் என்று தூற்றியுள்ளார் தமிழகத்தின் இனமான குத்தகைதாரர் பாரதிராஜா. அஜித் தமிழனே இல்லை என பொங்கியெழுந்துள்ளார் தங்கர் பச்சான்.

Anonymous said...

--ஞாநி
கலைஞர் கருணாநிதிக்கு வாராவாரம் யாராவது ஒரு பாராட்டு விழா நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முன்பு தமிழக, இந்திய, உலக வரலாற்றிலேயே யாருக்கும் இந்த மாதிரி பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டதில்லை என்றே தோன்றுகிறது. கின்னஸ் புத்தகத்தில் கூட இது இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது.
துதிபாடிகள் பேனலில் ரஜினியும், கமலும் வெகு வேகமாக வாலி. வைரமுத்துவை முந்திக் கொண்டுவிட்டார்கள். பரூக் அப்துல்லா முதல் குன்றக்குடி அடிகள் வரை நாட்டின் பல மூலைகளிலிருந்தும் வந்து பாராட்டுகிறார்கள். காஞ்சிபுரத்தில் வருடம் 365 நாளும் ஏதாவது ஓர் உற்சவம் நடக்கும். அதுபோல கலைஞரின் சாதனைகளுக்காக தினசரி ஒரு பாராட்டு விழா நடத்தவேண்டும் என்று துரைமுருகன் பேசுகிறார்.
ஜகத்ரட்சகனுக்கும் துரைமுருகனுக்கும் என்றே புதிய இலாகாவாக இவென்ட் மேனேஜ்மெண்ட் என்று ஒரு துறையைத் தொடங்கி அதற்கு மந்திரிகளாக்கிவிடலாம். ஒவ்வொரு வாரமும் யாரையெல்லாம் எந்த ஊரிலிருந்தெல்லாம் அழைக்கலாம், பாராட்டுக் கவியரங்கம் கருத்தரங்கங்களுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்றெல்லாம் திட்டமிடுவதற்கு ஒரு தனிச் செயலகமே வேலை செய்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
ஏன் இப்படி நடக்கிறது?
முதுமை இன்னொரு குழந்தை பருவம் என்பார்கள். குழந்தையைக் கொஞ்சுபவர்கள் என்னென்வோ சொல்லிக் கொஞ்சுவார்கள். அதற்கெல்லாம் அர்த்தமே கிடையாது. அன்பு மட்டும்தான் அர்த்தம். குழந்தையும் அந்த அபத்தமான, மிகையான கொஞ்சல்கள் புரியாமலே, தனக்குக் கிடைக்கும் அன்பின் சுகத்தில் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டிருக்கும். இன்று கருணாநிதியின் நிலைமை அப்படித்தானோ?
இல்லை,. அப்படியும் இருக்க முடியாது. ஏனென்றால் இப்போது அவரைக் கொஞ்சுபவர்கள் ஒன்றும் அன்பில் சீராட்டவில்லை என்பது அவருக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும் அனபல்ல. ஆதாயம்தான் ஆதாரம் என்பது எல்லாருக்கும் தெரியும். பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தால் இந்த ஜால்ராக்கள் எல்லாரும் தன்னைப் பொய்யாகப் புகழுகிறார்கள். மிகையாகப் புகழுகிறார்கள். உள்ளுக்குள்ளே அஜீத் மாதிரி புழுங்கிக் கொண்டே வெளியிலே நடிக்கிறார்கள். தான் மட்டும் முதலமைச்சராக இல்லாவிட்டால் இதில் பாதி பேர் கண்ணிலேயேபடாமல் ஓடிப்போய்விடுவார்கள் என்ற யதார்த்த உண்மைகள் கொஞ்சசூண்டு சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்கே புரிந்துவிடும். கலைஞர் போன்ற கூர்மையான அறிவுடையவருக்கு நிச்சயம் புரியாமல் இருக்க முடியாது.
ஆனால் எல்லாமே அவருடைய முழு சம்மதம். வழிகாட்டுதலில்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் முன் தினமே போய் விழா மேடை அலங்காரத்தைப் பார்வையிட்டுவிட்டுச் செல்கிறார். அப்படியானால் உளவியல் ரீதியாக அவருக்குத் தன்னைப் பற்றிய பாராட்டுகளை ஓயாமல் மணிக் கணக்கில் கேட்டுக் கொண்டே இருப்பதில் ஏதோ சுகம் இருக்கிறது. அப்படி இருப்பது உளவியல் சிக்கலா என்பது மருத்துவர்களின் ஆராய்ச்சிக்குரியது அல்லது வேறு ஏதோ மன உளைச்சலிலிருந்து இதுதான் அவருக்கு ஆறுதலாக இருக்கிறது என்றும் அனுமானிக்கலாம். அப்படியானால், இதுதான் அவருக்கு மருந்தாக இருக்கிறது என்று அர்த்தம்.

Anonymous said...

--contd
அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை என்று அறிந்து அவற்றிலிருந்து அவருக்கு விடுதலை தருவதுதான் உண்மையான தீர்வாக இருக்க முடியும் அதை அவருடைய குடும்பம்தான் செய்யமுடியும்; செய்ய வேண்டும் அதைச் செய்யாமல் லட்சக்கணக்கான ரூபாய்களையும் பலருடைய நேரத்தையும் உழைப்பையும் வாராவாரம் பாராட்டு விழாக்களில் வீணடித்துக் கொண்டிருப்பது அபத்தமானது.
என் கவலையெல்லாம் இந்த அபத்தங்கள் கலைஞருடன் முற்றுப்புள்ளியடையாமல் அடுத்த வாரிசுடன் கமாவாக ஆகிவிடுமோ என்பதுதான்.
கலைஞர் ஜூன் மாதத்துக்குப் பிறகு பதவிகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். முன்டே நான் சுட்டிக்காட்டியதைப் போல் செய்வதைச் சொல்வோம்; சொன்னதைச் செய்வோம் என்பது தி.மு.க.,வின் பிரசார வாக்கியம். அவர் ஓய்வு பெற்றபிறகு அழகிரியும், கனிமொழியும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும் தி.மு.க.,வில் மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை.
அடுத்த முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கும் ஸ்டாலினுக்கும் அடுத்த முதலமைச்சராக வர ஆசைப்படுபவர்கள் என்று நாம் கருதக்கூடிய அழகிரி, கனிமொழி ஆகியோருக்கும் கருணாநிதியின் அனுபவம். ஆற்றல் எதுவும் இல்லாதபோதும் அவருக்கு நிகராதன பிரும்மாண்ட கட் அவுட் வழிபாடுகள் இப்போதே நடக்கின்றன. கருணாநிதிக்கு ஜகத்ரட்சகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி மாதிரி இவர்களுக்கும் இவென்ட் மேனேஜ்மெண்ட் குழுக்கள் உருவாகிவிட்டன.
அழகிரியும் கனிமொழியும் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்பது தெரியவில்லை குறைந்தபட்சம் அடுத்த தி.மு.க., முதல்வராக வரும் வாய்ப்பு 99 சதவிகிதம் உள்ள ஸ்டாலினை நான் பணிவன்புடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து நீங்களாவது இந்த அபத்தங்களை இப்போதே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கிப் படிப்படியாக நிறுத்த வேண்டும். நீங்கள் ஒரு கூட்டத்துக்கு நிகழ்ச்சிக்கு வந்தால் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்கு தெருவை நாசப்படுத்தி பத்தடிக்கு ஒரு ஃப்ளெக்ஸ் வைப்பதை உடனே நிறுத்தச் சொல்லுங்கள்.
இப்படிப்பட்ட வழிபாடுகள், ஆராதனைகள், ஆர்ப்பாட்டங்கள், கெடுபிடிகள், ஒரு அரசியல் தலைவரை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிடும் என்பதற்கு இரண்டு உதாரணங்கள் உங்கள் கண் முன்னாலேயே இருக்கின்றன. ஒருவர் ஜெயலலிதா இன்னொருவர் திருமாவளவன்.
ஆந்திர அரசியலில் அண்மையில் நடந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சிரஞ்சீவியின் கட் அவுட் அரசியலுக்கு முன்னால் (மறைந்த) ராஜசேகர் ரெட்டியின் (உருட்டல் மிரட்டல் ப்ளஸ் உதவித்திட்ட) அரசியல் அடிபட்டுவிடும் என்று அரசியல் நோக்கர்கள் சொன்னார்கள். அப்படி ஆகவில்லை, காரணம் ரெட்டியின் அரசியல் அதன் கோளாறுகளை மீறி மக்களுடன் நெருக்கமாக இருக்க முடிகிறது. கட் அவுட் அரசியல் அல்ல அது உண்மையில் அரசியல் தற்கொலைக்குச் சமம்.

பாலா said...

//ஆமை புகுந்த வீடு என்று சொல்வார்கள். அதுபோல அரசியல் புகுந்த எல்லா துறைகளும் இப்படித்தான் இருக்கும்//


பின்னிட்டீங்க தலைவா

யதிராஜ சம்பத் குமார் said...

நடிகர் திருமா இப்போதிருக்கும் கூட்டணிக்குத் தக்கவாறு வசனம் பேசியிருக்கிறார். அதில் குறை காண்பதற்கு ஏதுமில்லை. தவிர இதைக் கண்டிக்கவில்லையெனில் அவருடைய இனமான வியாபாரத்திற்கு வேறு குந்தகம் ஏற்பட்டு விடும். அவருடைய நிலை புரிந்து கொள்ளக் கூடியதே.

ராஜ ராஜ சோழன் மற்றும் கரிகாற் பெருவளத்தானின் பேரன் சீமான் கண்டனம் ஏதாவது தெரிவித்திருக்கிறாரா? ஏதும் இருப்பின் நண்பர்கள் தெரியப்படுத்தவும்.

Anonymous said...

// போராட்டமெல்லாம் சாதாரனர்களுக்கு மட்டுமே.. தலைவர்கள் எல்லாம் சமரசங்களுக்கும், தான் சொல்லிக்கொடுப்பதை தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் இருப்பதற்குமே.. //

Namakku ellaam vaai koosaama pesuradhuku mattum dhaan theriyum...... Indha maadhiri criticise panradhuku munnaadi namba enna panninom nu konjam yosichu paakanum.....onnum mudiyala na, atleast comment panravangala pathi MUZHUSA therinjiruka naavadhu paakanum!!! OK??

Anonymous said...

கால்கரி சிவா, Do you know where is Tennur pillaiyar Temple? Tomorrow if someone smashes down the Temple and says you don't come there for Prayer, so we have decided to smash it and you go to char dham for pilgrimage and not to this temple, then what would be your reaction. Muslims go to middle east for pilgrimage (called Hajj) because it is one of the five duties which has to be performed by every muslim. period. It just happen to be in middle east because that's where Islam has originated from. It's not to fill the pockets of Arab, who I think already have plenty. I am not a muslim and I found these details from Web, so that I can speak the truth, rather than speculating it.