பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 29, 2010

கோவா - FIRநாம் நிறைய கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம். அடுத்த பந்து ஹாட்ரிக் என்று வரும் போது பிராபபிலிட்டி தியரியின் படி நிச்சயம் அது ஹாட்ரிக்காக இருக்காது. இருந்தாலும் ஆர்வத்துடன் பார்ப்போம் அதே போல் தான் கோவா படமும். அதே ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றேன், ஆனால் ஹாட்ரிக் இல்லை. அவ்வளவு ஏன்? வெறும் டிரிக் கூட இல்லை.

சவுந்தர்யா ரஜினிகாந்த் பெருமையுடன் வழங்கும் என்று முதலில் போடுகிறார்கள். நிச்சயமாக கடைசியில் போட முடியாது.

கதை: கிராமத்து இளைஞர்கள் மூன்று பேர் பெண்களை டாவு அடிக்க கோவா செல்கிறார்கள். சில சமயம் கரு சிதைவு நடக்க வாய்ப்புள்ளது. அது இந்த படத்தில் நடந்திருக்கிறது.

திரைக்கதை: மேலே சொன்ன கதையை திரையில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சீனில் "நாகிர்தனா நகிர்தானா" என்று வந்தால் அடுத்த சீனில் 'கண்கள் இரண்டால்' என்ற பாடல் வருகிறது. வேட்டைக்காரன், சிவாஜி என்று பல படங்களின் காட்சிகள், பாடல் என்று spoof செய்து காமெடி பண்ணியிருக்கிறார்கள். ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் ஒட்டவே இல்லை.

இசை: யுவன் சங்கருக்கு லிட்டில் இசைஞானி என்று புதிய பட்டத்தை கொடுத்திருக்கிறார்கள். அதனாலே என்னவோ லிட்டிலாக இருக்கு இசை. இளையராஜா, எஸ்.பி.பி., சித்ரா சேர்ந்து பாடிய பாடல் கண்ணை மூடிக்கொண்டு கேட்பது நலம்.

சில வாரங்களுக்கு முன் இளையராஜா தன் பாடல்களின் முழு உரிமையையும் அகி என்ற நிறுவனத்துக்கு கொடுத்தார். "விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள், சீரியல் தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் அவர்களுடைய நிகழ்ச்சிகளில் அல்லது தயாரிப்புகளில் எனது இசையை அப்படியே பயன்படுத்தினாலோ, அல்லது வேறு வடிவத்தில் மறு பதிப்பு செய்தாலோ அதற்கான அனுமதியை அகி மியூசிக்கிடமிருந்து பெறவேண்டும்" என்றார் ஆனால் இந்த படம் முழுக்க 'கண்கள் இரண்டால்' என்ற பாடல் 10 நிமிஷத்துக்கு ஒரு முறை வருகிறது. அனுமதி வாங்கியிருப்பர்கள் என்று நம்புவோம்.

நடிப்பு: எல்லோரும் எதோ செய்திருக்கிறார்கள். பியா, பிரேம்ஜியின் காதலியாக வரும் வெளிநாட்டுப்(Melanie Marie) பெண் பார்க்க நல்லா இருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு 'ஃபென்டாஸ்டிக்' என்று ரஜினி சொன்னது இவர்களை பார்த்தா என்று எண்ண தோன்றுகிறது! சொல்ல மறந்துவிட்டேன், சினேகா பணக்கார பெண்ணாக வந்து அவரை காதலிக்கும் இரண்டாவது கணவனை அறைகிறார். அறை விடும் போது நல்ல மியூசிக், நமக்கு விழும் அறை மாதிரி ஒரு ஃபீலிங்.

வசனம்: ஜெய் தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசும்போது மக்கள் சிரிக்கிறார்கள். இதே மாதிரி யாராவது ஹிந்தி படத்தில் எடுத்திருந்தால், உடனே தமிழனை எப்படி நக்கல் செய்திருக்கிறார்கள் என்று வரிந்துக்கட்டிக்கொண்டு வருவார்கள்.

புதுமை: சம்பத் - ஆகாஷ் ஹோமோவாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ஹாலிவுட் ரேஞ்சுக்கு போயிருக்கிறது. பழைய ஃபிளாஷ் பேக் காட்சிகளில் படத்தில் 'சீ' செண்டரில் காண்பிக்கப்படும் கோடு விழுந்த பிரிண்ட் மாதிரி காண்பித்தது. தசாவதாரத்துக்கு போட்டியாக ஒருவர் பல கெட்டப்பில் வருகிறார் ஸ்கூல் வாத்தியாராக, கல்யாண மந்திரம் சொல்லும் பூசாரியாக, போலிஸாக, பைலட்டாக என்று.. எதற்கு வருகிறார் என்று தான் தெரியலை!


50-50 என்ற பிஸ்கெட் அசட்டு தித்திப்புடன் இருக்கும். சாப்பிட்டு முடித்தபின் இனிப்பா-உப்பா என்று தெரியாது. படம் முழுக்க அதே மாதிரி இருக்கு. சீரியஸ் படமா? காமெடி படமா? என்று தெரியாமல். என்ன படம்பா என்று கேட்க வைக்கிறார்.


அப்பறம் சொல்ல மறந்துவிட்டேனே சிம்பு, நயன் கூட கடைசியில் வருகிறார்கள். வெறுத்து போய் சீக்கிரம் வீட்டுக்கு வந்தவர்கள் அவர்களை பார்க்க முடியாது.

இட்லிவடை மார்க் - 4.5/10


18 Comments:

jaisankar jaganathan said...

//படத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் செய்யுங்க. நான் செய்வதாக இல்லை //

இந்த உறுதி மொழி என்னா ஆச்சு

Vikram said...

naan naalaikku "tamilpadam 2009" polamnu irruken - thayuvu senju "padam nallave illannu" oru vimarsanam pottudunga...
nimmadiya poyi paapen :-)

Shankar said...

Nicely written,,, Exactly depicts my mind abt this movie... was abt to miss nayan and simbhu since i was fed up and was about to start but some how peeped from outside the theatre hall to see them

Gowri Shankar said...

மட்டமான விமர்சனம். படம் நன்றாகவே இருக்கிறது. வெங்கட் பிரபுவிடமிருந்து ஒரு ஜாலியான படத்தை எதிர்பார்த்தோம். அவர் ஏமாற்றவில்லை. வர வர உங்கள் விமர்சனங்கள் மிகவும் "misleading" ஆக இருக்கின்றன.

வாழவந்தான் said...

படத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் செய்யுங்க. நான் செய்வதாக இல்லை !

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா...

Anonymous said...

Sneha pathi onnume sollalaye... Etho Bikini appadinu sonnange...

யதிராஜ சம்பத் குமார் said...

வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்தாலே தெரிகிறது படம் எந்த லட்சணம் என்று. இதற்கு தயாரிப்பாளர்களையோ, இயக்குனரையோ சொல்லிக் குற்றமில்லை. மக்களுடைய ரசனையின் தரம் நாளுக்கு நாள் தாழ்ந்து வருகிறது. அதற்கேற்றாற்போல் அவர்களும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர். கொள்ளும் பாத்திரத்தின் வடிவைத் தானே தண்ணீரும் பெறும்??

ஜாலியான படம் என்றால் என்ன? அரை நிர்வாணமாக ஆடுவதுதான் ஜாலியா?

முகமூடி said...

அப்ப படம் கண்டிப்பா நல்லா இருக்கும்!! இவ-வின் அவதார், ஆ.ஒ. விமர்சனங்கள் அதற்கு சாட்சி. அதுவும் அவதார் விமர்சனம் கொடுமை. படம் புரியலனா ஒரு மொழிபெயர்ப்பாளருடன் சென்று பார்க்கவேண்டியதுதானே!! அதைவிட்டு மேம்போக்கா நுனிப்புல் மேய்ந்தால் என்ன அர்த்தம். சிறு பிள்ளைத்தனமால்ல இருக்கு!!

அதி பிரதாபன் said...

படம் நன்றாக இருக்கிறது. விமர்சனம் சரியில்லை.

அதி பிரதாபன் said...

சுப்ரமணியபுரம் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

vedhanarayanan said...

I havenot seen the movie. But kankal irandal moveies music director is James vasanth and not ilayaraja. The hat trick comparision is good.

IdlyVadai said...

//ஜேம்ஸ் வசந்தன்.//

கண்கள் பாடலுக்கு ஜேம்ஸ் வசந்தன் என்று தெரியும். அதனால் தான் எழுதினேன்.
இளையராஜா என்றால் யுவனுக்கு இல்லாத பர்மிஷனா ?

அதி பிரதாபன் said...

//dlyVadai said...
கண்கள் பாடலுக்கு ஜேம்ஸ் வசந்தன் என்று தெரியும். அதனால் தான் எழுதினேன்.
இளையராஜா என்றால் யுவனுக்கு இல்லாத பர்மிஷனா ?//
இப்போது புரிந்தது.

விஜயசக்கரவர்த்தி said...

மிகச்சரியான விமர்சனம்.ஜெய் பேசும் அரைகுறை ஆங்கிலம் தவிர படத்தில் பெரிதாக காமெடியும் இல்லை. லேசாக காம நெடி தான் இருக்கிறது. ஆனாலும் இதற்காக படத்திற்கு "A" தேவை இல்லை. இதை விட மோசமான படங்கள் முன்னமே U/A வாங்கி இருக்கின்றன.
மற்றபடி படம் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லை!

விஜயசக்கரவர்த்தி said...

இன்னும் எத்தனை திரைபடங்களுக்குதான் "கண்கள் இரண்டால்" பாடலையும், பாக்யராஜின் "நாதின்தின்னா" வையும் உபயோகிப்பார்கள்! சுத்த போர்!

kailash,hyderabad said...

ஐயா, எனக்கொரு உம்ம (உம்மா இல்லை ) தெரிஞ்சாகணும்.
படம் நல்லாருக்கா ? இல்லையா ?
படத்தை ஒருதடவ பாக்கலாமா கூடாதா ?
படம் ஓடுமா ,ஓடாதா?
(வடிவேலு ரஜினியிடம் கேட்பதுபோல் படிக்கவும்.)

Anonymous said...

Valueless....time-pass movie...

I feel it is just a compilation of non-senses...

btw.... We people don't have values.. we never proud of what we are....

It is just the Demand - Supply theory...

vedhanarayanan said...

//ஜேம்ஸ் வசந்தன்.

கண்கள் பாடலுக்கு ஜேம்ஸ் வசந்தன் என்று தெரியும். அதனால் தான் எழுதினேன்.
இளையராஜா என்றால் யுவனுக்கு இல்லாத பர்மிஷனா ?

//

This is a good proof of that There can be two different interpretations of a writing. Well done IV.