பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 29, 2010

எஸ்.ராஜம் – மறையாத ஓவியம் - அஞ்சலி


91 வருடங்கள் நிறைவான வாழ்வு வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கலைக்காகவே செலவு செய்த ‘சங்கீத கலாச்சாரியா’ எஸ்.ராஜம், இன்று மாலை 7.35 மணி அளவில் காலமானார்.

அவர் கடைசியாக என்னிடம்(லலிதா ராம்) தெரிவித்த விருப்பம், கோடீஸ்வர ஐயருக்கென்று ஒர் தினம் கொண்டாடி, நாள் முழுவதும் அகண்டமாக அவர் பாடல்களைப் பாட வைக்க வேண்டும் என்றது.

அதை நிறைவேற்ற இறையருள் வேண்டும்.

- லலிதா ராம்

இட்லிவடை சார்ப்பில் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

9 Comments:

maddy73 said...

Though I was not aware of him earlier I found his very nice drawings posted in IV. Fantastic artiste.. certainly it's a huge loss to the 'artistic world'.

May his soul rest in peace.

kggouthaman said...

உயர்ந்த கலைஞருக்கு, எங்கள் அஞ்சலி.

பாரதி மணி said...

மறைந்த கலைஞர் திரு. எஸ். ராஜம் அவர்களுக்கு அஞ்சலி.

அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், அவரை தில்லியில் எனக்கு அறிமுகப்படுத்தியது என் நெருங்கிய நண்பர் பிரபல கடம் வித்வான் மறைந்த கே.எம். வைத்யநாதன் (ராஜேஷ் வைத்யா-மோகன் வைத்யாவின் தந்தை). அறுபதுகளில் Indian Council for Cultural Relations ஆப்ரிக்கநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய ஒரு இசைக்குழுவை தேர்ந்தெடுத்தது. அதில் ஹிந்துஸ்தானி கலைஞர்களுடன், தமிழ்நாட்டிலிருந்து, எஸ்.ராஜம், மிருதங்கவித்வான் கமலாகர் ராவ், M.N.கந்தசாமிப்பிள்ளை மற்றும் கே.எம்.வைத்யநாதன் இருந்தார்கள். எல்லோருக்குமே அது தான் முதல் வெளிநாட்டுப்பயணம்.

அவர்களுக்கு தேவையான விஸா, இந்திய அரசு கொடுக்கும் தினக்கூலி ஐந்து டாலருக்கான RBI Exchange Permit, ஏர் இந்தியாவிலிருந்து டிக்கெட் இவைகளை பெற்றுக்கொடுப்பதில் உதவியாக இருந்தேன். நான் வேலையிலிருந்த பிர்லா நிறுவனத்தின் (நைஜீரியா) லாகோஸ் கிளைக்கு போன் பண்ணி, இவர்கள் அங்கு போகும்போது தங்க வசதி செய்து கொடுத்தேன்.

அதை இசைவிழா சீஸனில் பார்க்கும்போதெல்லாம் சொல்லி நெகிழ்வார். (மணி சார்! லாகோஸிலே எங்களுக்கு செலவே இல்லை. உங்க ஆபீஸ் நன்னா கவனிச்சுண்டுது. ஒரு வாரத்திலே 35 டாலரும் மிச்சம்!)பக்கத்திலிருப்பவர்களிடமும் என் கல்யாணகுணங்களை விவரிப்பார். எனக்கு கூச்சமாக இருக்கும்.

அதிர்ந்து பேசாதவர். நல்ல ஆத்மா! நேராக வைகுண்டத்துக்குத்தான் போயிருப்பார். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

பாரதி மணி

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சில மாதங்கள் முன்பு, எஸ். ராஜம் பற்றிய ஆவணப் படம் எடுப்பதாகவும் அதில் நான் பங்குபெற வேண்டும் என்றும் லலிதா ராம் எனக்கு எழுதியபோது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

முதலில் பிரபல பாடகரான மாயவரம் ராஜம் அய்யர் அவர்களுடைய பெயருடன் இவர் பெயரை சம்பந்தப்படுத்தி நான் குழம்பினேன். பிறகு இவர் பற்றிய எல்லா தகவல்களையும் லலிதா ராம் அனுப்பி, அதை நான் படித்தபோது, மிகவும் பிரமிப்பாக இருந்தது.

அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போனதில் வருத்தமாக இருந்தாலும், லலிதா ராம் ஆரம்பித்து வைத்திருக்கும் முயற்சியை பரிபூரணமாக்க என்னால் முடிந்தவற்றை செய்து முடிப்பதே அந்த உயர்ந்த கலைஞருக்கு எங்களால் முடிந்த அஞ்சலி.

யதிராஜ சம்பத் குமார் said...

அவரது ஆன்மா இறைவனின் திருவடிகளில் அமைதியடைய எனது பிரார்த்தனைகள்.

Anonymous said...

முழுமையான கலைஞர் பௌர்ணமி சந்திரன் மறைவது போல் மறைந்து விட்டார்.
அவர் ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திக்கவே வேண்டாம். வாழ்ந்தபோதே சாந்தியாக வாழ்ந்த ஆத்மா அது.
இன்று ஹிந்துவில் அவர் காலமான செய்தியைப் போட்டிருக்கிறார்கள். ஓரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ கூட போடவில்லை. படம் போடவேண்டிய அளவுக்கு அவர் தகுதி பெற்வில்லை போலும்... - கமலா

vedhanarayanan said...

Condolence for the family. It is a great loss. And I always feel a death is personal loss to the diseased, may be great people should live 200 years.

ஸ்ரீனி said...

அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறேன்.

R. Jagannathan said...

Regret our prayers / wishes were not answered. Perhaps it was too late to reach the ears of the Lord. My hearty condolences to the bereaved family and friends, fans. - R. Jagannathan