பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 28, 2010

ஒரு நிமிஷம் ப்ளீஸ் !ஆறு மாசமாய தமிழ்ஸ்டுடியோ.காம் உடன் இணைந்து எஸ்.ராஜத்தின் மீது ஆவணப்படம் எடுத்து வருகிறேன். ஷூட்டிங் எல்லாம் முடிந்தாகிவிட்டது. எடிட்டிங் வேலை முடிய இன்னும் ஒரு மாசம் ஆகும்.

விரைவிலேயே, ஒரு ஜீனியஸை அவர் இருக்கும் போதே ஆவணப்படுத்திய பெருமையை அடையப் போகிறோம் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன்.

போன ஞாயிற்றுக் கிழமை கூட அவரைச் சந்தித்தேன். கொஞ்சம் தளர்ந்திருந்தாலும், உற்சாகமாகப் பேசினார்.

திங்கள் முதல் மூச்சுத் திணரலாம். நேற்றிலிருந்து பல்ஸ் குறைந்து கொண்டே வருகிறதாம். என்ன சொல்லியும் மனது கேட்க மாட்டேன் என்கிறது.

Positive thoughts-க்கு பவர் உண்டாமே!

இணைய அன்பர்கள் எல்லோரும், அவர் பிழைத்தெழ ஒரு நிமிடம் பிரார்த்தியுங்களேன்.

நமக்குக் கொடுப்பினை இருப்பின், அவர் பிழைத்தெழக் கூடும்.

- லலிதா ராம்.

16 Comments:

Anonymous said...

நிச்சயம் பிரார்த்தனை செய்வோம். இசை மட்டுமல்ல; ஓவியத்திலும் மகத்தான சாதனை படைத்தவர் அவர். நேற்றே மணியம் செல்வனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தகவலைச் சொன்ன போது பகீர் என்றது எனக்கு. வரும் வாரத்தில் அவரைச் சந்திக்கத் திட்டம் வைத்திருந்தோம். திடீரென்று இப்படி உடல்நலமில்லாமல் போய் விட்டது வருத்தத்தைத் தருகிறது.

இந்த ஜீனியஸ் பிழைத்தெழ வேண்டும். அவரிடமிருக்கும் பல ஆவணங்கள் உலகுக்குத் தெரிய வேண்டும். பிரார்த்தனை செய்வோம்.

- ARS

ராஷா said...

//Positive thoughts-க்கு பவர் உண்டாமே!//

உண்டு பிரார்திப்போம்

ரவிபிரகாஷ் said...

லலிதா ராம், ஓவியர் ராஜம் பற்றிய தங்கள் ஆவணப்பட முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. நிச்சயம் அவர் உடம்பு பூரண குணமாகி, தங்கள் ஆவணப்படத்தைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டத்தான் போகிறார்.

* ஓவியர் எஸ்.ராஜம் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

* இவர் முகத்தை உன்னிப்பாகப் பாருங்கள். யார் ஞாபகமாவது வருகிறதா? வேறு எந்தப் பிரபலத்தின் ஜாடையாவது தெரிகிறதா? நானே சொல்லி விடுகிறேன். இவர் பிரபல வீணை மேதை-கம்-திரைப்பட இயக்குநர் எஸ்.பாலசந்தரின் அண்ணன் ஆவார். இந்தப் பதிவைப் படிக்கும் மற்ற வாசகர்களுக்காக இதைச் சொல்கிறேன்.

* ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் இவரின் அருமையான படங்கள் வெளியாகியுள்ளன.

* இவரின் ஒரிஜினல் படங்களை வீணை எஸ்.பாலசந்தர் தமது வீட்டின் மேல் கூரையில், கோயில்களில் மேல் கூரையில் படங்கள் வரையப்பட்டிருக்குமே, அது போல வைத்து அழகுபடுத்தியிருந்தார் அந்த நாளில்.

* ஓவியர் ராஜம் என்று அறியப்பட்டாலும் இவர் பெரிய சங்கீத வித்வானும் ஆவார். சங்கீத உலகில் இவர் பிரசித்தமானவர்.

cho visiri said...

I join your prayers.........

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

I pray to the almighty for earlier recovery

பாரதி மணி said...

நம் பிரார்த்தனை வீண்போகாது. லலிதாராம், ஆவணப்படத்தை திரு. ராஜம் முன்னிலையில் வெளியிடும் வாய்ப்புக்கிட்டும்.

சகோதரர் பாலச்சந்தருக்கு முற்றிலும் மாறானவர். நம்மிடையே இருக்கும் மூத்த கதாநாயகர்களில் ஒருவர். அவர் வரைந்த நவக்கிரகங்கள் பிரசித்திபெற்றவை.

பிரார்த்தனை செய்வோம்.

vedhanarayanan said...

Lalith Ram,

Definitely my prayers for his best health and recovery. I read your article on him.

I was impressed by his memories on ambi dikshitar and the incident about why he thought thyagaraja's song rather than MSD song.

And his thoughts on Vivathi ragas shows such great people are not preaching only tradition, but also like to think laterally.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

திரு. ராஜத்திற்கு நான் தான் டப்பிங் பேசவேண்டுமென்று நான்கு மாதமாக லலிதா ராம் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நானும் இந்தியாவுக்கு உடனே கிளம்பித் தொலைக்காமல் பயங்கரமாக லேட் செய்து விட்டேன்.

அடுத்த வாரமாவது நான் போய்ச் சேர்வதற்குள் அவர் உடல்நிலை சரியாகி விடவேண்டும், ஆண்டவா.

இன்று நானும் அதற்காகவே ஸ்பெஷலாகப் பிரார்த்திக்கிறேன். ஒரு மாபெரும் ஜீனியசுடன் பழக எனக்குக் கொடுப்பினை இருக்கவேண்டும்.

R. Jagannathan said...

My sincere prayers for the recovery of Shri Rajam to good health soon. Thanks to 'Ravi Prakash'for the write up. I hope IV will publish some of Shri Rajam's paintings for those who have not seen them. - R. Jagannathan

ஆதி மனிதன் said...

ஆதிமனிதன் ஜாயின்ஸ் தி பிரேயர். With God's grace he will get well soon.

Ram said...

இ.வ: பதிவுக்கு நன்றி.

இவ வாசகர்களே

பிரார்த்தனைகளுக்கு நன்றி. விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

ராஜத்தைப் பற்றிய விவரங்களில் சில இங்கே: http://carnaticmusicreview.wordpress.com/2009/12/27/rajam/

லலிதா ராம்

வலைஞன் said...


பிரார்த்திக்கிறோம்!

Anonymous said...

Of course I also pray. There are
now left very few multifaceted
geniuses. He has a Midas touch on
any art that he has taken up.
Many may not know that he had also
acted in films. I recall his role
as Lord Muruga coming in the guise
of a naughty teenager who pushes
an innocent looking man into a
lake in front of M. K. Thyagaraja Bhagavathar in the
film Siva Kavi. It was way back in
1943.
I pray with all my heart for his
very speedy recovery.

Anonymous said...

ஓவியர் ராஜம் பற்றி ஒரு சின்ன ANECDOTE இங்கு தருகிறேன்.
ஐம்பதுகளில் கலைமகள் ஓவியங்களால் கவரப்பட்ட நான், அவற்றைப் பார்த்து நான் வரைய ஆரம்பித்தேன். சுமாராக படங்கள் வந்தன. (சுமாராக என்பது கூட

மிகையான மதிப்பீடுதான்.) ஓவியம் வரையும் ஆர்வம் காரணமாகவும் அரசு கலைக்கல்லூரியின் முதல்வராக இருந்த தேவிபிரஸாத் ராய் சௌத்ரியின் (உழைப்பாளர்

சிலை இவர் கை வண்ணம்தான்) பிள்ளை பாஸ்கர் என் கல்லூரி நண்பன் என்பதாலும் அடிககடி அங்கு போவேன், அங்கு நடைபெறும் ஓவியக் கண்காட்சிகளை நீண்ட

நேரம் ரசித்துப் பார்ப்பேன்.அப்படி ஒருசமயம் பார்த்தபோது ஒரு ஓவியம் அச்சு அசலாக ராஜத்தின் ஓவியம் மாதிரியே இருந்தது. ஒவியர்: ராஜலக்‌ஷ்மி. என்று

போட்டிருந்தது, (அதுதான் பெயர் என்று நினைக்கிறேன். அன்றைய ராஜலக்‌ஷ்மி தான் இன்றைய மிஸர்ஸ். ஒய்.ஜி. பி. அந்த காலத்தில் குமுதத்தில் ஜலக், ராஷ்மி

என்ற பெயர்களில் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.)
வீட்டுக்கு வந்து பழைய மலர்களைத் தேடியதில் .முந்தைய வருஷ கலைமகள் தீபாவளி மலரில் வந்திருந்த ஓவியமேதான் .என்று நிச்சயமாகத் தெரிந்தது.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பிரசுரத்தில் ஓவியரின் முகவரி இருந்ததால், அவருக்கு ஒரு கடிதம் எழுதி போட்டேன். ஒய்.ஜி. துரைஸ்வாமி என்பவர் பதில்

போட்டிருந்தார். ”என் சகோதரிதான் இந்த ஓவியங்களை வரைந்தவர். ஓவியர் ராஜத்திடம் இவர் ஓவியப் பயிற்சி எடுத்துக்கொண்டார். ராஜம் ஸ்கெட்ச்

போடுவார்..அதை பார்த்து இவள் போடுவாள். எப்படி பெயிண்ட் செய்வது என்பதை, தான் வரைந்த படத்தில் அவர் கோடி காட்டுவார். இவளும் அதை புரிந்து கொண்டு

பெயிண்ட் செய்வாள். பார்க்கப் போனால் இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வரையப் பட்டவை. உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி,. முடிந்தால் எங்கள் வீட்டிற்கு

ஒரு நாள் வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று எழுதி இருந்தார்.
சேத்துப்பட்டு சேட் காலனியில் அவர்கள் வீடு. ஒரு நாள் போய்ப் பார்த்தேன்.’ ’ராஜலக்‌ஷ்மி’யையும் பார்த்ததாக ஞாபகம்.
இவரைத் தவிர, ராஜம் அவர்களிடம் வேறு யாராவது ஓவியம் பயின்றார்களா என்பது தெரியவில்லை..

ராஜம் அவர்கள் விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். MORE THINGS ARE WROUGHT BY PRAYER THAN THIS WORLD DREAMS OF.

ஆகவே பிரார்த்திபோம்.--- கடுகு

sowri said...

My prayer goes with him

Ram said...

91 வருடங்கள் நிறைவான வாழ்வு வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கலைக்காகவே செலவு செய்த ‘சங்கீத கலாச்சாரியா’ எஸ்.ராஜம், இன்று மாலை 7.35 மணி அளவில் காலமானார்.

அவர் கடைசியாக என்னிடம் தெரிவித்த விருப்பம், கோடீஸ்வர ஐயருக்கென்று ஒர்ய் தினம் கொண்டாடி, நாள் முழுவதும் அகண்டமாக அவர் பாடல்களைப் பாட வைக்க வேண்டும் என்றது.

அதை நிறைவேற்ற இறையருள் வேண்டும்.

லலிதா ராம்