பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 16, 2010

துக்ளக் முதல் இதழும், முதல் கடிதமும்.

துக்ளக் முதல் இதழ் பற்றி சோ 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' என்ற புத்தகத்தில் சொல்லியிருப்பார். அதிலிருந்து சில பகுதிகளும், முதல் 'வாசகர்' கே ஜி கௌதமன் அவர்களின் கடிதமும் இந்த பதிவில். முன்னால் 'கே.ஜி' என்ற இருந்தாலும் இவர் நமக்கு சீனியர்.

பழைய துக்ளக் வாசகரும் இட்லிவடை வாசகர் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!


துக்ளக் முதல் இதழ் வரலாறு ( சில பகுதிகள் )


படத்தை கிளிக் செய்தால் படிக்கலாம்.
( நன்றி: அதிஷ்டம் தந்த அனுபவங்கள், அல்லயன்ஸ் )
அன்புள்ள இட்லிவடை,
பின்னூட்டத்திற்குப் பின்னூட்டமாக - நீங்க கேட்டிருந்த விவரம் எனக்குப் பெருமகிழ்ச்சியளித்தது.
மிக்க நன்றி.என் முதல் கடிதம் பற்றி சுருக்கமாகச் சொன்னால், சோ அவர்கள், துக்ளக் இதழின் முதல் இதழின் அட்டையில், இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போல ஒரு
கேலிச்சித்திரம் வெளியிட்டிருந்தார். ( பார்க்க படம் )

இதில், துக்ளக் வாசகர்கள் எல்ல்லோரும் கழுதைகள் என்கிற ஓர் அர்த்தமும் இருந்ததுபோல தோன்றிற்று எனக்கு. எனவே, ஒரு தபால் கார்டில், இவ்வாறு எழுதி அனுப்பினேன்:

அன்புள்ள ஆசிரியருக்கு,
முதல் இதழின் அட்டையிலேயே ஆசிரியரையும், துணை ஆசிரியரையும் அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஐடியா யாருக்குத் தோன்றிற்று?
க கொ கௌதமன்
நாகப்பட்டினம்


(க கோ கௌதமன் நாகப்பட்டினம் என்பது தவறுதலாக க கொ கௌதமன் நாகப்பட்டினம் என்று பிரசுரம் ஆகியிருந்தது :-) )


இந்தக் கடிதம் துக்ளக்கின் இரண்டாவது இதழில், ஆசிரியருக்குக் கடிதங்கள் "டியர் மிஸ்டர் துக்ளக்" பகுதியில் முதல் கடிதமாக பிரசுரம் ஆகியது.

பாலிடெக்னிக் சக மாணவர்கள் தொடங்கி - வீதியில், சுற்றுப்புறத்தில் உள்ள மாமா மாமிகள் வரை எல்லோரும் என்னை ஒரு ஹீரோ மாதிரி, அடுத்த துக்ளக் வரும் வரையில் பார்த்துக்கொண்டிருந்தனர்.


பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கல் மாதிரி புது 'புது வருட பிறப்புக்கு' அடுத்த நாள் கழுதை பொங்கல் ஸ்பெஷல் என்று இந்த பதிவை வைத்துக்கொள்ளுங்களேன் !

27 Comments:

கௌதமன் said...

தன்யனானேன்! மிக்க நன்றி.

Unknown said...

//அன்புள்ள ஆசிரியருக்கு,
முதல் இதழின் அட்டையிலேயே ஆசிரியரையும், துணை ஆசிரியரையும் அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஐடியா யாருக்குத் தோன்றிற்று?
க கொ கௌதமன்
நாகப்பட்டினம் //

ithu than unmaiyana comment

சைவகொத்துப்பரோட்டா said...

//முதல் இதழின் அட்டையிலேயே ஆசிரியரையும், துணை ஆசிரியரையும் அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஐடியா யாருக்குத் தோன்றிற்று?//

படித்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது, நன்றி திரு.க கொ கௌதமன்

asir said...

கழுதை பொங்கல் ஸ்பெஷல் என்று இந்த பதிவை வைத்துக்கொள்ளுங்களேன்


thirumbavum nakkal

R.Gopi said...

kgkouthaman Sir...

Unga Kazhudhai comment Kalakkal........

வலைஞன் said...

மேலும் ஒரு குறிப்புக்கள் :

முதல் இதழ் 14/1 அதிகாலை கடைகளுக்கு வந்தது காலை 6 மணிக்கு விற்று தீர்ந்தது.ஒரு பிரதிக்காக கடை கடையாக பலர் அலைந்தனர்

இதே போல் பிப் 1, 1971 இதழ் அரசினால் தடை(பறிமுதல்) செய்யப்படும் என்று அறிந்து ஒரு நாள் முன்னதாகவே கடைகளுக்கு அனுப்பப்பட்டு சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது ( ஹிந்து கடவுள்களை மிக அசிங்கமான அநாகரீகமான முறையில் இழி வுபடுத்தி நடந்த ஊர்வலத்தை போற்றி, பாராட்டி,ரசித்து ஆதரித்த மு.க அரசு,அந்த புகைப்படங்களை வெளியிட்ட துக்ளக் இதழை தடை செய்தது !!!)

1970 களில் தமிழ் நாட்டில் இருந்த இரண்டே ஆண்கள் திரு சோ வும் திரு ஜெயகாந்தனும் தான் !!

என்ன இருந்து
என்ன?அராஜகமும்,அக்கிரமும்,40 ஆண்டுகளில் கப்பும் கிளைமாக வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன

வலைஞன் said...

நன்றி திரு கௌதமன்
உங்கள் போட்டோவும் துக்ளக் முதல் இதழ் வந்தபோது எடுக்கப்பட்டது என கருதுகிறேன்.என்ன சரியா?
;-))

கானகம் said...

உங்கள் கேள்விக்கு சோ ஏதாவது பதில் எழுதினாரா, ஆசிரியர் என்ற பெயரில்?

இருந்தாலும் அருமையான கேள்வி..

கௌதமன் said...

// வலைஞன் said...
நன்றி திரு கௌதமன்
உங்கள் போட்டோவும் துக்ளக் முதல் இதழ் வந்தபோது எடுக்கப்பட்டது என கருதுகிறேன்.என்ன சரியா?//
இல்லை வலைஞன் - அதற்கு ஓராண்டு கழித்து (1971) எடுக்கப்பட்ட போட்டோ :- இங்கே சென்று பாருங்கள் :--
http://engalblog.blogspot.com/2010/01/blog-post_04.html

நல்லதந்தி said...

துக்ளக்கின் முதல் இதழ் அட்டடையைப் பார்த்தவுடன் பரவசமாய் இருந்தது.
(ஆரம்பமே இந்த கன ஜோரா!)

இட்லிவடையில் பொங்கலன்று சக்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது என்று எழுதலாம் என்றுதான் நினைத்தேன், தூர்தர்ஷன் ஞாபகம் வந்ததும் (ரொம்பவும் கேவலமாக இருந்ததால்)விட்டுவிட்டேன்!

மாலோலன் said...

What is the answer given by mr cho?
iv
i used to get thugluk two weeks lateras i am overseas.i am sure in next copule of issues there will be covearge,may be i wll read in march.but this time i managed to on the same day just n cas of iv'Thanks a lot for a ecellent post

cho visiri said...

வலைஞன் said
//1970 களில் தமிழ் நாட்டில் இருந்த இரண்டே ஆண்கள் திரு சோ வும் திரு ஜெயகாந்தனும் தான்//

It appears, JK has changed and Cho remains same.

Anonymous said...

COW-தமன் பார்த்தால் பசு மாதிரி இருக்கிறார். ஆனால் நக்கல் செய்வதில் புலியாக இருக்கிறார்.

செய்திகளை முந்தித் தருவது தினத்தந்தி-- அது அந்தக்காலம். செய்திகள் நடப்பதற்கு முன்பே தருவது இட்லி வடை.இது இந்தக்காலம். இது உண்மை, அமெரிச்க வாசகர்களைக் கேளுங்கள்.
அவர்கள் 14ம் தேதி நடந்த கூட்ட வர்ணனையை 13’ம் தேதியே படித்து விட்டார்கள், - டில்லி பல்லி

Madhavan Srinivasagopalan said...

நன்றி, இட்லி-வடையாரே! நன்றி, கௌதமன் சார். கழுதைக்குக் கூடத் தெரியும் 'துக்ளக்' வாசனை (அருமை).
(கவனிக்க 'கூடத் தெரியும்').

நான் கூட முதல் இதழுக்கு கடிதம் எழுதிருக்கலாந்தான்.. என்ன செய்ய, நா அப்ப பிறந்திருக்கவில்லையே!

Madhavan Srinivasagopalan said...

"Anonymous said...
COW-தமன் பார்த்தால் பசு மாதிரி இருக்கிறார். ஆனால் நக்கல் செய்வதில் புலியாக இருக்கிறார்.
செய்திகளை முந்தித் தருவது தினத்தந்தி-- அது அந்தக்காலம். செய்திகள் நடப்பதற்கு முன்பே தருவது இட்லி வடை.இது இந்தக்காலம். இது உண்மை, அமெரிச்க வாசகர்களைக் கேளுங்கள்.
அவர்கள் 14ம் தேதி நடந்த கூட்ட வர்ணனையை 13’ம் தேதியே படித்து விட்டார்கள், - டில்லி பல்லி"//

அனானி, கௌதமன் சார் அடிச்சது நக்கல்னா , நீங்க அடிச்சது (அமெரிச்க வாசகர்களைக் கேளுங்கள்.
அவர்கள் 14ம் தேதி நடந்த கூட்ட வர்ணனையை 13’ம் தேதியே படித்து விட்டார்கள் ) என்ன சார்...?
ஒருவேளை, கௌதமன் சார்தான், 'அனானி' பேர்ல இந்த கமெண்டு போட்டாரோ?

(-!-) said...

என்னடா இப்டி ஒரு பதிவு போட்டாருன்னு பாத்தேன்.

திரு KGG பேரை அண்ணா என்று மரியாதையோடு சொன்னா அதுல "தமன்னா" வருதே!

வளர்க உம் பணி, இட்லி!
:>

Koteeswaran said...

nadigar thilagam avargal, muthal prathi patri oru comment adichar--

கௌதமன் said...

அடி ஆத்தீ ! எப்பவுமே மாலைத் தூக்கம் போடாத நான் இன்றைக்கு இட்லி வடை பதிவு தந்த சந்தோஷத்தில், இரண்டு மணி நேரம் தூக்கம்போட்டுவிட்டு வந்து இட்லி வடை ரிவிசிட் செய்தால் - மாடி எழுபத்துமூன்றும், மானஸ்தனும் என் பெயரை சந்திக்கு இழுத்து கந்தலாக்கி வெச்சிருக்காங்களே - இட்லி வடை அப்பவே சொன்னாரு - அவருக்கு 'ஆர்டிகிள் அனுப்பறவங்க ரொம்பப் பேரு அப்புறம் ரொம்ப பீல் பண்ணுவாங்க'ன்னு. அதனோட அர்த்தம் இப்போதான் புரியுதுடா சாமி!

raman said...

முதலாளி ஆக இருப்பது என்றும் மகிழ்ச்சிதான். முதல் கடிதத்துக்கு, முதல் கேள்விக்கு, முதல் இன்னும் என்னென்னவோவுக்கேல்லாம் மரியாதையை அதிகம். முதல் இதழ் பார்த்து முதல் கேள்வி கேட்டு அது அச்சடிக்கப் பட்ட அதிர்ஷ்டம் சேர்ந்து பெற்ற வாசகர் கௌதமனுக்கு ஓ போடவேண்டியதுதான்.

பெசொவி said...

என்னடா.....இந்த கௌதமன் சார் சூப்பரா பின்னூட்டமெல்லாம் போடராறேன்னு ஆச்சரியப் பட்டுக்கிட்டு இருந்தேன். இப்பதான் புரியுது, முப்பது வருஷங்களுக்கு முன்னாடியே "துக்ளக்"குக்கு முதல் பின்னூட்டமிட்டவர் என்பது.
வாழ்த்துகள் கௌதமன் சார், நன்றி இட்லிவடை!

கௌதமன் said...

// இப்பதான் புரியுது, முப்பது வருஷங்களுக்கு முன்னாடியே "துக்ளக்"குக்கு முதல் பின்னூட்டமிட்டவர் என்பது.
வாழ்த்துகள் கௌதமன் சார்,//

நாப்பது வருஷமுங்கோ !!

Madhavan Srinivasagopalan said...

//Gowthaman felf "மாடி எழுபத்துமூன்றும், மானஸ்தனும் என் பெயரை சந்திக்கு இழுத்து கந்தலாக்கி வெச்சிருக்காங்களே"//

அண்ணே, தப்பா பீல் பண்ணாதீங்க.., உண்மையிலே, உங்க மேல உள்ள நல்ல அபிப்ராயத்திலதான், நான் அப்படியெல்லாம் சொன்னேன்..

//நாப்பது வருஷமுங்கோ !!//என் வயசே, அதவிடை கம்மிங்கோ.... அதனால, தப்புன்னா மன்னிச்சுடுங்கோ

ஆதி மனிதன் said...

ஒரே நாளில் இட்லி வடையில் ஹீரோ ஆகிவிட்ட "எங்கள்" KGG அண்ணாவை... வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம்.

ஏதோ அறியாம நாங்க தப்பும் தவறுமா ஏதும் பின்னூட்டங்கள் இட்டுருந்தோமானால் மன்னித்து விடுங்கள்.

damildumil said...

Dear Idlyvadai,

Would you please give me the link to buy this book online. It's really tempting me to buy this book after reading your post.

Baski said...

Good info about Thuglak.
Thanks to KG Gouthaman Anna... Nice to know about you sir.

கௌதமன் said...

// Baski said...
Good info about Thuglak.
Thanks to KG Gouthaman Anna... Nice to know about you sir.//
Thank you Baski.
Thank u for not following Manas.
Maanasthan would have said,
Gou... thamanna...

thiruchchikkaaran said...

இந்தக் கட்டுரையையும் படியுங்கள்.

மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் சோ தான் புதிய ஜகத் குருவா?


http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/17/is-cho-the-jagath-kuru-now/