பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 30, 2010

தமிழ்நாட்டில் ஆயுத கலாச்சாரம் !

தமிழ் நாட்டில் பெருகி வரும் ஆயுத கலாச்சாரம் மேல் விவரங்கள் கீழே...


1. பிறந்த நாள் காணும் அழகிரியை, நான் முன்கூட்டியே வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். கடந்தாண்டு அவரது பிறந்த நாள், மாநாடு போல் நடந்தது. அதில், தி.மு.க.,வின் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக நானும், அழகிரியும் இருப்போம் என உறுதி எடுத்துக் கொண்டோம். - ஸ்டாலின் ஜனவரி 2010

2. எனது பெரியப்பா கருணாநிதியின் மனதில் நமக்கு தனி இடம் உண்டு. அவர் மனோகரா உள்ளிட்ட பல திரைப்பட வசனம் மூலம் நமது சமுதாயத்தை உயர்த்தி உள்ளார். அந்த வசனத்தை உச்சரித்த பெருமை நடிகர் திலகம் சிவாஜிக்கு உண்டு. கருணாநிதியும் நடிகர் திலகம் சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றவர்கள். - நடிகர் பிரபு டிசம்பர் 2009

3. தி.மு.க.வும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி - கலைஞர் மு.கருணாநிதி செப், 2009

4. மூப்பனாருக்கு பிறகு அந்தக் கட்சி காங்கிரசுடன் இணைந்து விட்டது. மூப்பனாரும், நானும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இணைந்து செயல்பட்டோம். நானும், வாசனும் அதுபோல் இணைந்து செயல்படுகிறோம். - கே..வி.தங்கபாலு - ஜூலை, 2008

5. பா.ம.க.,வுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும், கொள்கை ஒன்று தான். ராமதாஸ், அண்ணன் என்றும், தான், தம்பி என்றும், இரண்டு கட்சிகளும், இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படும் - திருமாவளவன் செப், 2009


வலையுலகில் இட்லியும், வடையும் இரட்டை குழல் துப்பாகியாக செயல்படுகிறது - அனானி ஜனவரி, 2010


15 Comments:

ஜெயக்குமார் said...

இனிமேல் இதுபோன்ற மொக்கைகள் போட்டால் இரட்டைக்குழல் துப்பாக்கியால் தாக்கப்படும் சாத்தியம் அதிகம்..

:-)

யதிராஜ சம்பத் குமார் said...

தமிழ்நாட்டிற்கு இத்தனை இரட்டைத் தலைவலிகளா?

சீனு said...

"ஏண்ணே...???"(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).

santa said...

sema comedy!!!

மைக் முனுசாமி said...

பதிவு எழுதறதுக்கு சரக்கு இல்லைங்கறதுக்காக இப்படி எல்லாமா பதிவு போடுவது..??

இட்லி வடை - நேத்து சுட்டது ஆறிபோச்சி.. நல்லா இல்லை...

மைக் முனுசாமி said...

பதிவு எழுதறக்கு சரக்கு இல்லைன்னு இப்படியா பதிவு போடறது..

வழக்கம் போல யாரையாவது அனுப்ப சொல்லி (?) போட வேண்டியதுதானே...

அமைதி அப்பா said...

நிறைய துப்பாக்கிகள் உள்ளன, யார் எடுத்து சுடுவது என்பதுதான் இங்கு பிரச்சினை....!
.

வெற்றி said...

ஒன்னு விட்டு போச்சுங்க..

'தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் இனி இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்படும். - வைகோ பொடாவில் இருந்து வெளியே வந்த போது கலைஞர் :)

Anonymous said...

மற்றவர்கள் போடும் தகவலகளை எடுத்துப் போடும் இட்லி - வடைதான் உண்மையில் இரட்டைக் குழல் துப்பாக்கி. விஷயங்களைச் ‘சுடுவதில்’ இட்லலி வடையை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை.
மேலும் சில இரட்டைக் குழல் துப்பாக்கிகள்:
திரை உலகில்: ரஜினி, கமல்
டி.வி, சேனல்: தயா- கலா
கலைஞர் கவிஞர்கள்: இரண்டு ‘V' -- வைரமும் வாலியும்.
நாடக காமெடியர்: கிரேசி, சேகர்
-டில்லி பல்லி

R.Gopi said...

தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இனி இணைந்து ”இரட்டை குழல் துப்பாக்கி”களாக செயல்படும்..... கலைஞர் கருணாநிதி - ஜெயலலிதா கூட்டறிக்கை...

கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னதின் விளைவுதான் மேலே படித்த விபரீத ஆசை...

maddy73 said...

விழா மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு, சில பேச்சாளர்கள் 'கத்தி' பேசுகிறாகள்.. -- அது கூடத்தானே !

கொடும்பாவி-Kodumpavi said...

பித்தம் முத்தி போய் புத்தியை தாக்கியதன் விளைவு இந்தப் பதிவு.
-கொடும்பாவி

kggouthaman said...

தொடர்ந்து அரசியல் கோமாளிகள் உதிர்க்கும் நகைச்சுவை வெடிகளை, கேட்டு, சிரித்து அனுபவிப்பதில் நானும் இட்லிவடையும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்படுவோம் என்று நான் இதன் மூலம் உறுதி கூறுகிறேன்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இவர்கள் அரசியலில் இருப்பதால், வறுமையும் வறட்சியும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் மக்களை வாட்டுவதுதான் உண்மை..

Anonymous said...

பாமக , விடுதலை சிறுத்தை கட்சிகளின் கொள்கை ஒன்றுதான் . ஜாதிகள் மட்டும் வெவ்வேறு. அதனால் தான் இரண்டு கட்சிகளாக செயல் படுகின்றனர். நல்ல ஆளுங்கய்யா இந்த அரசியல்வாதிகள்.