பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 28, 2010

௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்

நண்பர் யோசிப்பவர் பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும் என்று தெரியாது ஆனால் முன்பு வலைப்பதிவு (கிமு என்று வைத்துக்கொள்ளுங்கள் ) எழுத ஆரம்பித்த காலத்தில் 'பிங்க்' கலர் வலைப்பதிவு வைத்துக்கொண்டு ( பெண்களே இப்ப எல்லாம் அந்த கலர் வலைப்பதிவை வைத்துக்கொள்வதில்லை ) புதிர்களை கேட்டுக்கொண்டு இருந்தார். பல சமயம் சுவாரஸியமாக இருக்கும், இப்போழுதும் கலரை மாற்றிவிட்டு தொடர்ந்து அதே மாதிரி கேட்டுக்கொண்டே இருக்கிறார். வலைப்பதிவு வைத்துள்ளவர்கள் மூளையை உபயோகப்படுத்தி யோசிக்கவும் முடியும் என்று இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறார்.

அவர் விஞ்ஞான சிறுகதை தொகுப்பு... சரி நீங்களே கீழே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்....

நண்பர்களே,


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், வருகின்ற பெப்ரவரி மாதம் 3ம் தேதி, எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகத்தார், இத்துடன் மேலும் ஒன்பது நூல்களை அன்று வெளியிடுகிறார்கள். விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இடம் : ரோட்டரி புத்தகத் திருவிழா, தமிழ் அரசி திருமண மண்டபம், மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர்.
நாள் : 03-02-2010.
நேரம் : மாலை 6.30 மணி.

பி.கு.:- இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிங்கன்னு நான் சொல்லலை. வாங்கிப் படிச்சீங்கன்னா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-)இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிப்பேனு நான் சொல்லலை. ஓசியில அனுப்பினா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-). வாழ்த்துகள்

6 Comments:

சி. சரவணகார்த்திகேயன் said...

'௨௲௧௧' - அப்படின்னா 2011 தானே?

மானஸ்தன் said...

//இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிப்பேனு நான் சொல்லலை. ஓசியில அனுப்பினா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-). வாழ்த்துகள்
//

மஞ்சளில் ஒரு வாழ்த்தைப் போட்டுட்டு ஓசியில் ஒய்யாரம் பண்ண நினைக்கும் இட்லியைக் கண்டிக்கிறேன்!

:>

R.Gopi said...

//இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிப்பேனு நான் சொல்லலை. ஓசியில அனுப்பினா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-). //

*********

இந்த புக்கை ஓசியில அனுப்பினா நல்லா இருக்கும்னு சொல்லல... ஆனா, இலவசமா கொடுத்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்...

(இலவசம் தான் இப்போது நாடெங்கும் இடறும் ஒரு வார்த்தை)

யோசிப்பவர் said...

அன்பு இ.வ.,

எனது புத்தகம் குறித்து பதிவிட்டதற்கு நன்றி!!

உங்களுக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. இட்லிவடையில் வந்த முதல் ‘விருந்தினர் பதிவு’ என்னுடையதுதான்(என்று நினைக்கிறேன்). அப்பொழுது மஞ்சள் பெயிண்ட், லேபிள் போன்ற ‘அதி நவீன வசதிகள்’ இல்லாத கிமு காலம். என்னுடைய சொந்தப் பெயரில் எழுதியிருந்தேன். அது எந்தப் பதிவென்று இப்பொழுது உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

பிகு: இதைக் கூட ஒரு புதிராகப் போடலாம்!! ஆனால் எத்தனை பேர் வேலைமெனக்கெட்டு இதை ஸால்வ் செய்வார்கள்?

கிரி said...

இவரோட ஒரு விஞ்ஞான கதை படித்து இருக்கிறேன்.. ரொம்ப சுவாராசியமாக இருந்தது..

வாழ்த்துக்கள் யோசிப்பவர்!

மாயவரத்தான்.... said...

"இ.வ"ரோட பேரு 'யோசிப்பவர்'. ஆனா தன்னோட பதிவை கண்டுபிடிக்க ஒரு புதிர் போட்டு அடுத்தவங்கள யோசிக்க வெக்கிறாரே?!