பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 17, 2010

ஆயிரத்தில் ஒருவன் - இட்லிவடை விமர்சனம்

டிஸ்கி: தமிழுக்கு இந்த மாதிரி படம் புதுசு. இவங்க என்னடா படம் எடுத்திருக்க போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு சென்ற பலருக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். செல்வராகவன்! அவருக்கும் அவர் குழுவினருக்கு பாராட்டுக்கள். தமிழிலும் இந்த மாதிரி படங்கள் எடுக்கலாம் என்று நிரூபித்ததற்கு.


கி.பி சோழர் பாண்டியர் வாழ்ந்த காலத்தில் தொடங்குகிறது கதை. பாண்டியர்களின் படையெடுப்பினால் சோழர்கள் வியட்நாமுக்கு தப்பி ஓடுகிறார்கள். போகும் போது பாண்டிய நாட்டு தெய்வ சிலையை திருடிக்கொண்டு போகிறார்கள்.

என்னடா ஒரே டுபாக்கூர் கதை என்று நினைப்பு கொஞ்சம் கூட வராமல் படத்தை எடுத்தவித்ததில் தான் வெற்றியே இருக்கிறது. இடைவேளைக்கு முன் பல ஆங்கில படங்களை நினைவு படித்தினாலும், அது உறுத்தலாக தெரியாதத்தற்கு காரணம், திரைக்கதையும், ஆர்ட் டைரக்ஷனுன், அதை எடுத்திருக்கும் விதமும் தான்.

தொல்பொருள் ஆராய்ச்சியை சேர்ந்த பிரதாப் போத்தன் இதை தேடிக்கொண்டு போய், காணாமல் போகிறார்.
தொல்பொருள் துறையை சேர்ந்த ரீமா சென், பிராதப் போத்தன் மகள் ஆன்டரியா அவரை தேடி செல்கிறார்கள். இவர்களுக்கு கூலி தொழிலாளியாக கார்த்திக் செல்கிறார்.

ஏழு விதமான ஆபத்துகளை கடந்து சென்று சோழர்கள் இருப்பிடத்தை கண்டுப்பிடுக்கிறார்கள். அதற்கு பிறகு நீங்களே வெள்ளித்திரையில் பார்க்கவும். திருட்டு வி.சி.டியில் பார்த்துக்கொள்ளாம் என்று நினைப்பவர்கள். ஏமாந்து போவீர்கள். தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் இது.

முதல் பாதியில் காமெடி, விறுவிறுப்பு, குளுகுளுப்பாக செல்கிறது. கார்த்திக் ரீமாசென், ஆன்டரியாவுடன் செய்யும் குறும்புகளை என் பக்கத்து சீட் பெண் ரசித்து பார்த்தார்.

ஆண்கள் பொறாமை பட்டார்கள். மலை, மேடுகள், காடுகள்... என்று அலையும் கேமரா இவர்களின் மேற்பரப்பிலும் மேய்ந்து செல்கிறது. கேமரா ராம்ஜி!

இடைவேளை போது, ஒரு பெண்மணி பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு 'வாவ், சூப்பர்' என்று எஸ்.எம்.எஸ் செய்துக்கொண்டு இருந்தார். பெண்களுக்கும் இந்த படம் பிடித்திருக்கு!

பாண்டியனின் வாரிசாக வரும் ரீமாசென், "நான் செம கட்டையில்ல..." என்று வசனம் பேசுகிறார். அவர் உண்மையை சொன்னதால் நமக்கு அந்த வசனம் தப்பாக தெரியவில்லை. இவருக்கு குரல் கொடுத்திருப்பவர் ஐஸ்வரியா தனுஷ் என்று போடுகிறார்கள், ஆனால் இரண்டாம் பாதியில் சுத்த தமிழில் இவர் பேசும் வசனம் ரோகினியின் குரல் மாதிரி இருக்கிறது. சூப்பர்!

ஆன்டரியா நான் என்ன சளைத்தவாளா என்று தன் அனாடமி காண்பித்து நிரூபிக்கிறார். ஆனால் ரீமாசென் கோப்பையை தட்டி செல்கிறார்.

கூலிதொழிலியாக வரும் கார்த்திக் சரியான பொறுக்கியாக நடித்திருக்கிறார். இரண்டு ஃபிகர்களையும் பார்வையாலேயே துவம்சம் செய்கிறார். கேமரா செல்லாத இடங்களுக்கு இவர் பார்வை செல்லுகிறது. முதல் பகுதியில், ஆண்டரியாவை பின்னாடி தள்ளிக்கொண்டு போவதும் "பாக்கெட்டிலேயே காண்டம்" வைத்திருக்கேன் என்று வசனம்பேசுவதும், குளிருக்கு ரீமா ஆண்டரியாவை இவர் 'கையாளும்' விதம் நம் வயிற்றை சூடாக்கிறது. பீர்க்கும், ஃபிகருக்கும் வாயை திறக்கும் இவர் எம்.ஜி.ஆர் ரசிகர் !

முதல் பகுதியில் ஆன்டரியாவுக்கும், ரீமாவுக்கு வெடிக்கும் "Fuck, Bitch" என்ற வசனம், ஆங்கில யுத்தம் என்றால் பிற்பகுதியில் சுத்த தமிழில் "லிங்க தரிசன" வசனம் தமிழ் பித்தம்!. மொழி எதுவாக இருந்தால் என்ன ?

சோழமன்னனாக வரும் பார்த்திபன், பில்லி சூனியக்காரர் போல இருந்தாலும், நடிப்பில் கம்பீரமாக இருக்கிறார்.

படத்தின் பிற்பகுதியில் 13ஆம் நூற்றாண்டு தமிழை கொண்டு வரும் வசனங்கள் முதலில் சிரிப்பாக இருந்தாலும், பிறகு அதுவே சுவாரஸியமாக இருக்கிறது. இவ்வளவு தமிழ் வார்த்தைகளையா நாம் தொலைத்துவிட்டோம் ?

படம் முழுக்க பிரமாண்டம்,பிரமிப்பு தான் இந்த படத்திற்கு ஹைலைட். தசாவதாரம் முதல் காட்சியில் வரும் அரச காட்சிகளை பார்த்து பிரமித்த நாம், இதில் அதைவிட 1001 பங்கு கலை நயத்துடன் வரும் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்து. ஆர்ட் டைரக்டருக்கு சுற்றி போட வேண்டும். பல காட்சிகளில் வரும் பழங்காலத்து ஓவியங்கள், அட போட வைக்கிறது.

பல இடங்களில், நாம் பார்ப்பது தமிழ் படம் தானா என்று வியக்க வைக்கிறது. பல ஓட்டைகள் இருந்தாலும், அதற்கு மேலே பல அதிரடி காட்சிகள் இருப்பதால் நமக்கு அந்த ஓட்டைகள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

இந்த படத்தை தூக்கி நிறுத்தும் மற்றொன்று பின்னணி இசை - ‌ஜி.வி.பிரகாஷ். இன்னும் கொஞ்ச நாளில் ரஹ்மானுக்கு போட்டியாக இருப்பார். அதே மாதிரி சவுண்ட் எஃபெக்ட்ஸும் அருமை. சில இடங்களில் சின்ன சின்ன குருவி சவுண்ட், எங்கோ கேட்கும் வீணை இசை என்று கலக்கியிருக்கார்கள்.

படம் முழுக்க பலருடைய உழைப்பு தெரிகிறது, தமிழுக்கு புதிய முயற்சி, நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.


ஆயிரத்தில் ஒருவன் இல்லை, பலர்.


இட்லிவடை மார்க் 7.5/10

54 Comments:

மானஸ்தன் said...

படங்களைப் பார்த்தாலே நீர் ஏன் இந்தப் படத்துக்கு 7.5 குடுத்தீர் என்று தெரிகிறது.
வாழ்க உம் ரசனை.
:>

என்னை மாதிரி நல்லவர்கள் இங்கே வருவதால், இந்த மாதிரி படங்களை தவிர்க்கவும் (குறைக்கவும்).
:-)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

குடும்பத்துடன் காண முடியாத படம் என்று பலர் சொல்கிறார்கள், உங்கள் பதிவில் உள்ள ஸ்டில்களும் அதையே சொல்கின்றன. இருந்தாலும் படம் ஓட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். எங்கே, ஆலந்தூர் ராமகிருஷ்ணா, பரங்கிமலை ஜோதி போன்ற தியேட்டர்களிலா?

மாயோன் ! said...

படம் பார்த்தவர்களுக்காக மட்டும் எழுதி இருக்கிறேன்.. பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும்..

ஒரு மொக்கை கதையை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க படக்குழுவினர் அரைகுறைகள் இல்லை..

சொல்லவந்த உருக்கமான உறையவைக்கும் கதையை மேலே மெழுகு தடவி.. விறுவிறுப்பு ஏற்ற சில அம்புலிமாமா டைப் வியுக அலங்காரங்கள் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்..

கதை இது தான்..

கடுமையான போரில் தமது மண்ணை இழந்த கூட்டம் ஒன்று என்றாவது தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையை உணவாக்கி கண்காணாத இடத்தில் பதுங்கி கிடக்கிறது.. தாயகம் திரும்ப வேண்டிய வழியை உரைக்க - தூது வரும் - என்றுகாத்துக்கொண்டு தம்மை சுற்றி பாதுகாப்பு அரண் ஏற்படுத்திகொண்டு வாழ்கிறது..

யாரும் சுலபமாக அவர்களை நெருங்கி விட முடியாது.. நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தூது ஒன்று வந்து சேர்கிறது.. அந்த தூது சொல்லவதை நம்பி மறைவிடம் விட்டு வெளியேறியபின் தான் தெரிகிறது -தலைமை துரோகிகளிடம் ஏமாந்துவிட்டது என்று..

அசுர பலமும், சர்வ வல்லமையும் கொண்ட எதிரிகளிடம் நடக்கும் பொருந்தாத போரில் மோதி.. கடைசி வரை போராடுகிறார்கள்.. இழப்பு..இழப்பு.. தாங்கமுடியாத இழப்பு.. இறுதியில் தோற்று சிறை எடுக்கப்பட்டு அவமான படுத்தப்பட்டு.. தலைவன் இறக்கின்றான்.. தலைமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்தகட்ட போராட்டததுக்கான நம்பிக்கை விதைக்கப்படுவதுடன் முடிகிறது கதை..

எல்லோரும் சொல்வது போல அவ்வளவு விறுவிறு முன்பாதி தந்த இயக்குனருக்கு.. பின்பாதி இப்படி தர என்ன அவசியம்?

முதல் பாதி நம்மை ஆயத்தப்படுத்த வரும் விறுவிறு/துருதுரு அட்டைப் படம் / முன்னுரை..
இரண்டாம் பாதி தான் சொல்லவந்த கதை..

பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..

நிகழ்காலவரலாறு - அதுவே சற்று குழப்பமானது தான் - அதை சற்று படத்தோடு பொருத்தி பாருங்கள் - சொல்லவந்த செய்தி என்னவென்று புரியும்..

பிள்ளையாண்டான் said...

"மானாட மயிலாட', "ராணி ஆறு ராஜா யாரு" போன்ற நிகிழ்ச்சிகளை குடும்பத்தோடு மகிழ்ந்து களிக்கிறோம். இது போதாதென்று, காமெடி கிங் என்ற பெயரில், குழந்தைகளை இரட்டை அர்த்த காமெடிகள் சொல்ல சொல்லி ரசிக்கிறோம். சூப்பர் சிங்கரில், குழந்தைகளும், இளைஞர்களும் இரட்டை அர்த்த குத்து பாடல்களை பாடவிட்டு நாமும் சேர்ந்து பாடுகிறோம்.

இதில் இந்த மாதிரி படம் எடுத்தால் மட்டும், இவர்களுக்கு குடும்ப ஞாபகம் வந்துவிடும்.

வரவேற்பரைகளுக்கே வந்துவிட்ட ரியாலிட்டி ஷோக்களில் இல்லாத ஆபாசமா, சில நிமிடங்களில் வரும் காட்சிகளில் வந்துவிட்டது. திருந்துங்கப்பா!

era.murukan said...

//படத்தின் பிற்பகுதியில் 13ஆம் நூற்றாண்டு தமிழை கொண்டு வரும் வசனங்கள் முதலில் சிரிப்பாக இருந்தாலும், பிறகு அதுவே சுவாரஸியமாக இருக்கிறது. இவ்வளவு தமிழ் வார்த்தைகளையா நாம் தொலைத்துவிட்டோம் ?//

கொற்கை அருங்காட்சியகம் காப்பாளராக (curator) இருந்து ஓய்வு பெற்றவரும், பேரா.நா.வானமாமலையின் 'ஆராய்ச்சி' குழுவில் முக்கிய உறுப்பினருமான ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரனின் பின்னணி உழைப்பின் பலன் அது.

Amuthapriyan. said...

Actually Film is Really Good.

Amuthapriyan.

R.Gopi said...

ஆயிரத்தில் ஒருவன் படம், அதை நீங்கள் விமர்சனம் செய்த விதம், இரண்டும் பலே...

மானஸ்தன், பெயர் சொல்ல விருப்பமில்லை... இருவரும், கண்ணில் கர்சீஃப் கட்டிக்கொண்டு படம் பார்க்குமாறு சபிக்கப்படுகிறார்கள்...

இவ்ளோ நல்லா இருக்குன்னு சொல்லிட்டு வெறும் 7.5 தானா?. நாங்க எல்லாம் “வேட்டைக்காரன்” படத்துக்கே 45 க்கு மேல மார்க் எல்லா எடத்துலயும் பார்த்தோமே!!??

இரா. வசந்த குமார். said...

அன்பு இட்லிவடை...

கீழ்க்காணும் கண்ணியைப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

'ஆயிரத்தில் ஒருவன்' கதையின் கொஞ்சம் ஒரிஜினல் எது?

நன்றிகள்.

IdlyVadai said...

//என்னை மாதிரி நல்லவர்கள் இங்கே வருவதால், இந்த மாதிரி படங்களை தவிர்க்கவும் (குறைக்கவும்). //

இதைவிட குறைக்கலாம் ஆனால் உங்களைவிட நல்லவங்க இருக்காங்க.

Anonymous said...

wonderful movie

kggouthaman said...

விமரிசனம் முழுவதும் 'ஒரு மாதிரி'யாக எழுதிவிட்டு - ஆரம்பத்திலும் கடைசியிலும் மட்டும் 'ஆஹா, ஓஹோ' என்று எழுதியிருப்பதுபோல எனக்குப் படுகிறது. ஆயிரத்தில் ஒருவன் ஆச்சு, 'அரச கட்டளை' படத்தை எப்பொழுது எதிர்பார்க்கலாம்?

zorbathebuddha said...

ஈழத்தில் நடந்து முடிந்த போர், பிரபாகரனின் மரணம் இவை தான் “ஆயிரத்தில் ஒருவன்” படம் என்று நினைப்பதை தவிர்க்கவே முடியவில்லை.

” நில்லாடிய நிலம் எங்கே
சொல்லாடிய அவை எங்கே
வில்லாடிய களம் எங்கே
கல்லாடிய சிலை எங்கே?”

என்று பாடுவதும். தாய் மண்ணை நினைத்து ஏங்குவதும்....

எதிரிகள் சுற்றி வளைக்க போர் நடப்பதும், முதலில் நெறிப்படி நடக்கும் போர், எதிரிகளால் குண்டு வீசப்பட்டதும் மன்னன் “இது என்ன விதமான போரோ, இதை முன்னே சொல்லியிருந்தால் யாம் பயந்திருப்போம் எண்டு நினைத்தனையோ” என்று கூறி நகைப்பதும், போரில் தோற்று கைதாவதும்,

போர்க்கைதிகளிடம் நெறி மீறி வன்கொடுமை செய்வதும் (இவை எல்லாம் மிக அதிக நேரம் காட்டப்படுகிறது) இறுதியில் சோழ மன்னன்(பிரபாகரன்) இறப்பதும் இவை எல்லாம் ஈழப்பிரச்சனையையே ஒத்திருப்பது போல் தோன்றுவதாக நினைப்பதை தவிர்க்க முடியவில்லை.

இறுதியில் “சோழர்களின் பயணம் தொடரும்...” என்று திரையில் எழுத்துக்கள் காட்டி முடிகிறது படம்.

S.Mohamed said...

Good comments - IN tamil film insdustry this film create a good start to do the epic movies.

In tha padathula selva vidaya ulaippu nalla theriuthu.

வீரராகவன் said...

1)கல்கியின் மோகினி தீவு கதையை தழுவி எடுக்கப் பட்டாலும் படத்தின் பிரமாண்டம் செல்வாவை ஆயிரத்தில் ஒருவனாக காட்டுகிறது.
2)உலகில் உள்ள அனைத்து கதைகளுக்கும் கரு ஏழோ, எட்டோதான் என்று யாரோ சொன்னார்கள். பெயர் நினைவில்லை.
3) படத்தை எடுப்பதற்கும் ஆயிரம் நாட்களுக்கு மேல் தேவைப்பட்டது என்று விந்தையான பொருத்தம்.
4)இலங்கை போர் உச்சத்தை அடைவதற்கு முன்பே கதை திட்டமிட பட்டு விட்டது என்பதால் இலங்கை போருக்கும் படத்திற்கும் உள்ள ஒற்றுமை தற்செயலானதே.
5) வழக்கமான படம் எடுத்தால் விமரிசன குருவியாய் வேட்டையாடுவதும், வித்யாசமாய் எடுத்தால் தச (பத்து) அவதாரமாய் வடிவு எடுத்து பின்னுட்டங்களை போடுவதில் போட்டி போட்டு எழுதி தள்ளுவதும், ஆயிரத்தில் ஒருவர் இவ்வாறு செய்யாமல் நடு நிலையாய் விமர்சிப்பதும், (இருங்க, மூச்சு முட்டுது), இயல்பான விஷயம்தான்.
6) நான் என்ன சொல்கிறேன் என்றால், இப்படி 1,2,..6 என 1000 வரை வரிசைபடுத்தி கூறினாலும் (இங்கு இடமில்லை. இ.வ தனி பதிவாக போட்டாலும் போடுவார். அல்லது போட்டி?) இப்படம் ஆயிரத்தில் ஒன்று. கண்டிப்பாக திரையில் மட்டுமே காண வேண்டிய ஒன்று.

Nanban said...

I respect Idlyvadaiar's review that this movie deserves 7.5 out of 10.

Having said that, I am really disappointed with this movie. I am not much impressed with this movie at all.

Anonymous said...

Nice vimarisanam. Vimarisakarukku oru paarattu.

http://www.procreo.jp/labo/flower_garden.swf

Anonymous said...

good review. i liked the movie very much. i dont know still some craps are saying its not good. for them "vettaikaaran" would be the best movie for ever. nonsense.
Sundar.

Anonymous said...

review is class. how do you write ?

விவேகானந்தன் said...

இந்த மாதிரி ஒரு கதையை எடுக்க துணிந்ததர்கே செல்வா வை பாராட்ட வேண்டும். அந்தக்கால சில விசயங்களை அசிங்கம் என நினைக்கும் சிலருக்கு, மத்த படங்களில் வரும் உதட்டு முத்தம் தவறாக தெரியாதே. பல விசயங்களும் உண்மை. அதனால கண்டிப்பாக தப்பு சொல்ல தேவை இல்லை. நிறைய பேருக்கு இடைவேளைக்கு பிறகு புரியவே இல்லை. காரணம் பலருக்கும் சேரர் சோழர் பாண்டியர் பற்றி சில விஷயங்கள் கூட தெரியாது.பாராட்டப்பட வேண்டிய விசயங்களில் முந்தி நிர்ப்பது அந்த காலத்தையும் இந்த காலத்தையும் இணைத்து இருக்கும் விதம், இசை, கலை, தூய தமிழ், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். படத்தை பாருங்கள் பின் இது எல்லாம் நடக்காத ஒரு விஷயம் அதனால் இதை இதில் சொன்னது தவறு என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.

SUBBU said...

நான் படம் பாக்கும்போது இடைவேளைக்கி அப்பறம் கதை புரியல, இப்ப புரிந்தது, இன்னும் ஓர் முறை பார்க்க வேண்டும் :)

Anonymous said...

Naan netru than padam parthen. First half romba nalla irunthathu. Anal second half pakka mudiatha alavuku Violence irunthathu.. !!! ivlo violence thevaya intha kathaikku thonriyathu !

Sannasi Raj said...

ஆதித்யா, சிரிப்பொலி என்று எந்த சேனலை திறந்தாலும் வயிறு குலுங்க வைக்கிறார்வடிவேலு. அதிலும், வின்னர் பட காமெடியை பார்த்தால் விலா வெடித்துப் போகும். ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர் கதையை கேட்டால் மனசே வெடித்துப் போகும். கோடிக்கணக்கான பணத்தை போட்டு படம் எடுத்தவர் இன்று யாரும் சீண்டாத தெருக்கோடியில் இருக்கிறாராம். ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்க்கிறாராம். படம் முடிகிற நேரத்தில் இவரது நிலையை பார்த்து மனம் இறங்கிய வடிவேலு சம்பளத்தை கூட வேண்டாம் என்று தியாகம் செய்தாராம். ஆனால், படத்தின் முக்கிய கேரக்டரும், அவரது அப்பாவும் கொடுத்த டார்ச்சர்தான் இவரது இந்த நிலைக்கு காரணமாம்.

Kaipulla said...

சரியான, அக்கறை உள்ள விமர்சனம் சகோதரா....சகோதரனின் காலையே வாரிவிடும் தமிழ் நண்டுகளின் விமர்சனத்திற்கு சரியான பதிலடி.....

Anonymous said...

As 'Maayon' said, this story is the cinema-version of current-day struggle of what Eelam Fighters go thru. Leader is killed at the end and his generals sacrifice themselves as well but the war is carried over to others by next generation. Nice!

sivag said...

நல்ல படம். நல்ல விமர்சனம்... நேஷனல் அவார்ட் நிச்சயம்...

subamgurunathan said...

neengal

சீனு said...

முதல் பாதி நன்றாக இருந்தாலும், பிற்பாதி சாமனியர்களுக்கு புரியவில்லை.

அது சரி, ஏன் சோழர்களை அவ்வளவு கேவலமானவர்களாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர் என்று தெரியவில்லை. வெறும் ரத்தம், ரத்தம், ரத்தம். சைக்கோத்தனமான உள்ளது பல இடங்களில்.

இடைவேளையில் வரும் ட்விஸ்ட்+சஸ்பென்ஸும் அருமை.

மெக்கனஸ் கோல்ட், கிங் சாலமன் மைன்ஸ், மம்மி (வண்டுகள்), க்ளேடியேட்டர் என்று நிறைய டிவிடிக்கள் வாங்கியிருப்பார் போல தெரிகிறது.

டெக்னிக்கலாக, டபிள் ஷேடோ இமேஜினேஷன், சத்தத்தை வைத்து அடுத்தவரை கட்டுப்படுத்துவது என்று நிறைய செய்திருந்தாலும், ஏனோ மிக மிக கோரமாக இருக்கிறது. பெண்கள் படம் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். டாப்லஸ் சீன்கள் சில இருந்தாலும், அவை அசிங்கமாக தெரியவில்லை.

பெண்ணின் மார்பு காம்பிலிருந்து வழியும் இரத்தம், சில தலைகள் நசுங்குவது (உபயம், க்ளேடியேட்டர்) போன்ற காட்சிகள் எதற்கு?

ஏதோ 3 மெல்கிப்ஸன் படம் ஒன்றாக பார்த்தது போல் இருந்தது.

இதை போன்ற படங்களுக்கு ஆதரவு அளிக்க கூடாது. 7.5/10 = ஏழரை?

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ. ,

ரவிச்சந்திரன் , ஜெயலலிதா நடித்த, பெரியவர் K.V.மகாதேவன் இசையமைத்த, 1968 இல் வெளியான 'அன்று கண்ட முகம்' அமரர் கல்கியின் ஏதோ ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் டைட்டிலில் அவர் பெயர் காட்டப் படவில்லை என்பார்கள்.

கல்கி அவர்கள் மறைவதற்கு முன்னால் கடைசியாக எழுதிய சிறுகதையான 'மயில் விழி மான்' உம் , 'மோகினித் தீவைப்' போலவே இருக்கும்.

நன்றி!

சினிமா விரும்பி

ஏமாந்த சோணகிரி said...

இட்லி வடை விமரிசனம் உண்மையானதாக இருக்கும் என்று நம்பி படம் பார்த்து நொந்து நூலாகிய பலரில் நானும் ஒருத்தன். What a waste of Time and money. ரீமா சென்னின் தொடை மற்றும் ப்ருஷ்ட வாளிப்பில் மயங்கி 7.5 மார்க் கொடுத்தீரா அல்லது தயாரிப்பாளரிடம் கவர் வாங்கினீரா தெரியவில்லை. செல்வராகவனின் மூளை எவ்வளவு குழம்பிப் போயிருக்கிறது என்பது படத்தை பார்த்தவர்களுக்கு புரிகிறது. இந்த படத்தில் முக்கியமாக வென்றவர்கள் 1. வைரமுத்து 2. இசை G V ப்ரகாஷ். புதிய முயற்சியாம் புதிய முயற்சி. பார்க்கிறவர்கள் மண்டை காய்ந்து போய் பாயை பிறண்டப் போவது நிச்சயம். இதற்கு ‘வேட்டைக்காரன்’ எவ்வளவோ தேவலை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டூ மச்சான விமர்சனம்..

இட்லிவடையார் வயசுக்கு வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்..!

இப்பவும் ரெண்டுங்கெட்டான் வயசிலேயே தான் இருப்பதாக சீன் காட்டுகிறாரோ என்னவோ..?

Anonymous said...

yov idlyvadai.um pecha kettuttu padam parthu thalai vali dhan micham ya... konjamavathu logic irukka.. oru indian minister suthanthrama vietnam la irukka iceland-ku armed forces kondu varathu ellam ... konjam tooo much... athuvum intha kala pandyas, antha kala chozhas kooda venjense-oda sandai podrathu ellam... sutha buruda... kadaisi la padam parthu yemanthadhu than micham.

kaanamal pona archaelogist-ku enna role-nne theriyalai..loose ah suthrathai thavira.

IdlyVadai said...

//ஏமாந்த சோணகிரி//

உங்க அடுத்த கமெண்ட் ரொம்ப மோசமாக இருந்ததால் இங்கே போடவில்லை. எதற்கும் செல்வராகனிடம் அப்ளிகேஷன் போடுங்க :-)

ஏமாந்த சோணகிரி said...

நீங்கள் கவர் வாங்கியது உறுதியாகிவிட்டது. செல்வராகவனின் ‘செம கட்டை’ ‘காண்டம்’ ‘லிங்க தரிசனம்’ போற வசங்களை ஜொள்ளு விட்டு ரஸித்து அதை விமரிசனத்தில் வேறு பெருமையாக எழுதிய உங்களுக்கு என் கமெண்டை வெளியிட ஏன் தைரியம் இல்லை? செல்வராகவிடம் வாங்கிய பணம் ஜெரிக்காதென்ற பயமா!

Anonymous said...

No need westurn culture to spoil our indian culture.people like selvaragavan and his rubish thoughts(claimbimg that they are bringing the reality in movies)and movies like this enough.just couple of days back i was enjoying thuglug,kadugu etc.but now after this post as manathnan said good people should avoid comming to this blog.you could have reviwed the movie even without these photos.will you please remove atleast the last three photos?
An request from a regular reader of idlyvadai

Meriaza said...

நல்ல ஒரு படம் இது
வித்தியாசமான முயற்சி
விஜய் அஜித் போன்றவர்களின் வெந்தும் வேகாத மசாலா படங்களுக்கு எவ்வளவோ மேல்.
செல்வராகவனுக்கு பாராட்டுகள்.
குடும்பத்தோடு படம் பார்க்க வேண்டியவர்கள் Ice Age-3,Up படங்களுக்கு செல்லுங்கள்.
Ithu A grade padam.

vedhanarayanan said...

Some things that are missed out ...

1. Only three songs. The titles say, sung by Nithyasree, Bombay Jayasree, Vijay yesudas and many ..But all three songs will be most likely in midnight masala only.

2. The ruins shown, in the chola city, that the three find first, gives a feel of video game graphics. But inside the kingdom, things look very artistic compared to dasavathaaram first scene. kuddos to art director for all the artworks. And also to the visuals teams for compter graphics.

3. No one expected a historical story in second half. Second half is dragged. A bit decent show of chola people would have improved listening pleaseure. Chola king almost look like a chitr-arasar (small king) or a nomadic king which is also true as per the story.

4. The director emerges big after this movie. He probably now can compete easily with Dir Shankar.
(At the expense of his own personal life!!). Parthiban's role is kept secret till the release of the movie, not even shown in posters. That is a good technique. Karthi has less role in second half, More scope for Reema Sen. Reema has finally acted in a movie.

5. Everyone will like first half due to comedy and show of the two ladies.

6. The final war scenes should have used some graphics to show a lot more people fighting. The last scene looks similar to citizen movie.

IdlyVadai said...

Meriaza,

I am rejecting your comment even though you have supported me. Let us not attack each other with words. If one person says the post is bad, you say it is good, but with a decent language. All readers, who support me or oppose me are my friends.
Hope you will understand.
iv

Anonymous said...

””Meriaza,

I am rejecting your comment even though you have supported me. Let us not attack each other with words. If one person says the post is bad, you say it is good, but with a decent language. All readers, who support me or oppose me are my friends.
Hope you will understand.
iv””


That's the sprit.carry on IV.

அஹோரி said...

படம் நல்லா தான இருக்கு. ஏன் ஆளாளுக்கு ஒரு மாதிரி சொல்லறாங்க.

ரிஷபன் said...

//Meriaza,

I am rejecting your comment even though you have supported me. Let us not attack each other with words. If one person says the post is bad, you say it is good, but with a decent language. All readers, who support me or oppose me are my friends.
Hope you will understand.
இவ்//

இது மேலே வெளியாகியுள்ள கருத்துக்கா இல்லை வெளியிடாமல் ரிஜெக்ட் ஆனா கமென்டுக்கா ?

மேலே வெளியானதுக்கு எனில் அதில கண்டனம் சொல்ற அளவுக்கு என்னா இருக்கு ? இந்த அளவுக்கு கூட நக்கல் கூடாதுன்னா எப்படி ?

vinu said...

காசு வாங்கி எழுதியது மாறி இருக்கு ... இந்த மாதிரி டுபாக்கூர் விமர்சனம் , இட்லி வடையின் மதிப்பை கெடுக்கும்.
ஆயிரத்தில் ஒருவன்... டைம் லைனின் அப்பட்டமான காப்பி!!இந்தப் படத்தில் ஒரு ஆராய்ச்சிக்காக மர்மத் தீவுக்குச் செல்லும் பேராசிரியர் ஒருவர் காணாமல் போகிறார். அவரைத் தேடி அவரது மாணவர் குழு அதே இடத்துக்குப் புறப்படுகிறது. ஆனால் 14-ம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டுக்குள் சென்றுவிடுகிறார்கள், திடீரென்று. அவர்கள் எப்படி கடந்த காலத்தோடு போரிட்டு, நிகழ்காலத்துக்குத் திரும்புகிறார்கள் என்பது கதை.

இதை சீன் பை சீன் காப்பியடிக்கவில்லை செல்வராகவன் என்றாலும், படத்தின் கதைக் கரு ஒன்றுதான். அதுமட்டுமல்ல.. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பல காட்சிகள் கிளாடியேட்டர் மற்றும் மெக்கனஸ் கோல்டில் நாம் பார்த்தவை.

Vikram said...

\\இட்லி வடை விமரிசனம் உண்மையானதாக இருக்கும் என்று நம்பி படம் பார்த்து நொந்து நூலாகிய பலரில் நானும் ஒருத்தன். What a waste of Time and money. ரீமா சென்னின் தொடை மற்றும் ப்ருஷ்ட வாளிப்பில் மயங்கி 7.5 மார்க் கொடுத்தீரா அல்லது தயாரிப்பாளரிடம் கவர் வாங்கினீரா தெரியவில்லை. செல்வராகவனின் மூளை எவ்வளவு குழம்பிப் போயிருக்கிறது என்பது படத்தை பார்த்தவர்களுக்கு புரிகிறது. இந்த படத்தில் முக்கியமாக வென்றவர்கள் 1. வைரமுத்து 2. இசை G V ப்ரகாஷ். புதிய முயற்சியாம் புதிய முயற்சி. பார்க்கிறவர்கள் மண்டை காய்ந்து போய் பாயை பிறண்டப் போவது நிச்சயம். இதற்கு ‘வேட்டைக்காரன்’ எவ்வளவோ தேவலை.\\

ditto....

unga "marka" nambi, adichi pidichi ticketta vaangi poyi paatha - aiyo saamy :(

\\இடைவேளை போது, ஒரு பெண்மணி பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு 'வாவ், சூப்பர்' என்று எஸ்.எம்.எஸ் செய்துக்கொண்டு இருந்தார். பெண்களுக்கும் இந்த படம் பிடித்திருக்கு!\\
intervallukku appuram - after abt 40 mins - en pakkathu seat penmani - "veetukku polamma" ketadhu en kaadil vilundadhu (i am serious).

kaatu naddula cell phone signal - that too shown twice - enna kodumai?

"vettaikkaran padathil evallavu sandai kaatchigal"nnu - ippo flash aiyittu irrukku...
"aiyirathi oruvan padathil evallavu thalaigal sidarinne"nnu - oru kelvi kekkalam - was scared that my head too is going to fall down.

oru chola kinga - edho cannibal kootathu thalaivan madiru kaati irruka vendam - when he descends from his chariot - donno why some 6-7 heads were chopped off in a single stroke :-(

also,never heard of cholas having "colosseum culture" (like the romans).

climax was really a drag - thaangala.

i commented on reading the review of vettaikaran - "not sure,if idly's review is balanced" - I still stand by it ;-)

btw - indha padatha porumaiya theatrela ukkandhu paatha eenakku - oru booku parisa kudupeengala :-(

சீனு said...

//இடைவேளை போது, ஒரு பெண்மணி பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு 'வாவ், சூப்பர்' என்று எஸ்.எம்.எஸ் செய்துக்கொண்டு இருந்தார். பெண்களுக்கும் இந்த படம் பிடித்திருக்கு!//

இ.வ. ('இ'ளிச்ச 'வா'யன் அல்ல),

எந்த தியேட்டரில் படம் பார்த்தீர்கள்? சென்னையிலா? தமிழ்நாட்டில் படம் சென்னையில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. மற்ற ஊர்களிலும், கிராமங்களிலும் தான். அந்த பெண்மனி "வாவ், சூப்பர்' என்று எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டால், பெண்களுக்கு இந்த படம் பிடித்திருக்கு என்று முடிவு செய்வது 'சின்னபுள்ள தனமால்ல இருக்கு'.

முதல் பாதி தேவலை. படம் முடிந்த பிறகு அந்த பெண்ணிடம் 'படம் எப்படி' என்று கேட்டிருக்கமாட்டீர்கள்.

படம் நல்லா இருக்கோ இல்லையோ. ஆனா, அதுக்கு இவ-விடமிருந்து இப்படி ஒரு விமரிசனம் என்று தான் தெரியவில்லை.

//இந்த படத்தை தூக்கி நிறுத்தும் மற்றொன்று பின்னணி இசை - ‌ஜி.வி.பிரகாஷ். இன்னும் கொஞ்ச நாளில் ரஹ்மானுக்கு போட்டியாக இருப்பார்.//

இதிலிருந்தே தெரிஞ்சிடுச்சு, உங்க நேர்மை.

ஐயோ! ஐயோ!! ஐயோ!!!

thamizhan said...

padathin pirpagudhi nalla illai yendru solgirargal oru velai avargaluku tamil puriyavillaiyo
idlivadi photovirku nandri video clips yedhavadhu irundha podungalein.

Hari Harun R said...

really its a nice movie..........
selva and tech hard work show this....
dont compare with english movie...
using low budget selva gives hollwood movie.......

pls enthu this kind of movie ..other wise we will see only vettaikaran and villu movie only

Hari Harun R said...

தம்பிகளா dont compare with any english movie ..........ஒன்னு தமிழ் படம் பாருங்க அல்லது english படம் பாருங்க... ரெண்டும் பாத்து ஒப்பிடடீங்க ............

Anonymous said...

இ.வ

இப்போ உங்களுக்கு ரீமா பித்தம் கொஞ்சம் தெளிந்திருக்கும். நீங்கள் எழுதிய விமரிசனத்தை இப்போது மீண்டும் படித்து பாருங்கள். உங்கள் தப்பை உணர்வீர்கள் என நம்புகிறேன்

Baski said...

நல்ல முயற்சி என்ற வரையில் சந்தோசம் தான். ஆனால் கொஞ்சம் கீழ் கண்ட விசயங்களில் கவனம் கொண்டு எடுத்திருக்கலாம்.
I will give this movie 0.75/10.

"300" படத்தின் போர் முறையை காப்பி அடிக்க முயற்சி செய்திருகிறார்கள். அந்த படத்தில் ஸ்போட்டியன் வீரர்களின் மன உறுதியையும் வீரத்தையும் மிக அழகாக சொல்லியிருப்பர். சோழர்/பாண்டியர்களிடம் அப்படி ஒரு வீரம் பற்றி சொல்லியிருக்கலாம். ரீமாவின் உடல் அழகை காட்டுவதில் இருந்த கவனம் இவர்களின் வீரத்தை காட்டுவதில் இருதிருக்க வேண்டும். இந்திய ராணுவம் ஏன் வரணும். ரொம்ப எரிச்சல் அடைய செய்த விசயம்.... இந்திய ராணுவத்தை இதைவிட அசிங்க படுத்த முடியாது. நமது சினிமா இயக்குனர்களின் நாட்டு பற்று ரொம்ப மோசம்.... கண்டிப்பாக இப்படி ஒரு படத்தை ஹாலிவுட் ல் எடுக்க மாட்டார்கள். ராணுவத்தை இழுப்பானேன். ஒரு தனியார் பாதுகாப்பு / பாண்டி நாட்டு படை என சொல்லிகொள்ளலாம் இல்லையா.

ஒரு கற்பனை கதையிலாவது தமிழனை கொஞ்சம் செழிப்பாக காட்ட கூடாதா? எழுதவே கை கூசுகிறது. அபகோல்ய்ப்டோ (Apocalypto) படம் பாருங்கள். ஒரு காட்டுமிராண்டி தனம் அந்த படத்திலும் உண்டு. அதே சமயம் நாட்டு பற்று, இன பற்று பற்றி விரிவாக மேய்ந்து செல்லும். நமக்கே புரியாமல் மாயன் கலாச்சாரத்தின் சில விசயங்கள் சொல்லி செல்வார் இயக்குனர்.

கார்த்திக்கு அவரின் முதல் படத்தின் கதாபாத்திரத்தை அப்படியே இந்த படத்திலும் கொடுத்திருகிறார் இயக்குனர். ஐயோ பாவம் கார்த்திக். கொஞ்சம் வித்தியசமானவராக இந்த படத்தில் நடித்திருக்கலாம். கூலியாக லோக்கல் பாஷை பேசி நடிக்க சாபம்வாங்கிருகார் போல.

படத்தில் வரும் சோழ இனத்தவர்களை ஆப்ரிக்க பிக்மிகளை விட கருப்பாக காட்டி இருப்பது ஏன்? கலரை விடுங்க, எனக்கு தெரிந்து தினமும் குளித்து சுத்தமாக இருப்பது தான் தமிழ் பண்பாடு. ஆனால் ஒரு அழுக்கு பிண்டமாக அனைவரையும் காண்பிப்பது செல்வராகவனுக்கே வெளிச்சம்.

எல்லாம் விடுங்க, ஒரு சோக முடிவு மட்டும் வைத்தால் படம் வெற்றி பெற்று விடும் என நினைத்து முடித்திருக்கிறார். ஒரு படம் பார்த்தல் இயக்குனர் என்ன சொல்ல வந்தார் என்பது பின்பு பேசும் படி இருத்தல் வேண்டும். இந்த படம் பார்த்தால் சோழர் பற்றியோ/ பாண்டியர் பற்றியோ ஒன்னும் பெருமை பட்டு கொள்ளும் வகையில் இல்லை. நமது பண்பாட்டை பற்றி எடுக்க பட்ட "கற்பனை" படம் ஆகினும்., அதை பெருமையோடு சொல்ல தவறி இருப்பது வருத்தம் அடைய வைகிறது.

vedhanarayanan said...

Baski,
Romba alagaga sonneergal.

Anonymous said...

what a poor taste ? Only a person who received some money(bribe) would give this kind of review.

Anonymous said...

Really regret to see this movie after reading idlyvadai review. Did u guys got something on the sides from the film producer. Selvaragavan initially said that it his own imagination, can he depreciate the tamilian history with his idiocratic title board claiming to be his own imagination. Can we take a film stating that Selvaraghavan and his family members are psychopathetic family..with the score card debicting to be my own imagination. Well thatz what they tried to do. He is spoiling history. Guess he shud read "Colas" by Shastri-ji

நல்லூரான் said...

//**** இட்லி வடை விமரிசனம் உண்மையானதாக இருக்கும் என்று நம்பி படம் பார்த்து நொந்து நூலாகிய பலரில் நானும் ஒருத்தன். What a waste of Time and money. ரீமா சென்னின் தொடை மற்றும் ப்ருஷ்ட வாளிப்பில் மயங்கி 7.5 மார்க் கொடுத்தீரா அல்லது தயாரிப்பாளரிடம் கவர் வாங்கினீரா தெரியவில்லை. செல்வராகவனின் மூளை எவ்வளவு குழம்பிப் போயிருக்கிறது என்பது படத்தை பார்த்தவர்களுக்கு புரிகிறது. இந்த படத்தில் முக்கியமாக வென்றவர்கள் 1. வைரமுத்து 2. இசை G V ப்ரகாஷ். புதிய முயற்சியாம் புதிய முயற்சி. பார்க்கிறவர்கள் மண்டை காய்ந்து போய் பாயை பிறண்டப் போவது நிச்சயம். இதற்கு ‘வேட்டைக்காரன்’ எவ்வளவோ தேவலை.*****//
--- Well said Mr.Sonagiri


. எனக்கு இந்த படத்தில் பிடித்தது இடைவேளை மட்டும் தானப்பா... படத்தின் முன்பகுதியேனும் கொஞ்சம் பரவாயில்லை. பின் பகுதி ஏன் இவ்வளவு கேவலமாகவும் அருவருப்பாகவும் உள்ளது. இது பேய் படமா , வரலாற்று புனைவா, என்ன category.. இது?

இவருக்கு சோழர்கள் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு.... (நரபலி ,காட்டு மிராண்டித்தனம் etc). யாரேனும் வரலாற்றாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தேவலை. தமிழன் மானமேனும் காப்பாற்றப் படும். இதற்கு மேல் இதைப் பற்றி பேச விரும்பவில்லை. ஆனந்த விகடனில் குறைகளை அடுக்கியுள்ளனர்... பொருத்தமான விமர்சனம் தான் தந்துள்ளனர்.


மொத்தத்தில் இப்படம் செல்வ ராகவனின் முற்றிய மனச்சிதைவை மட்டுமே சொல்கிறது. நம்மையும் அதை நோக்கியே இட்டுச் செல்கிறது.

இட்லிவடை இதிலும் நீர் உமது கமல் வெறுப்புக் கொள்கையை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீ ர். ( தசாவதாரம் முதல் காட்சியில் வரும் அரச காட்சிகளை பார்த்து பிரமித்த நாம், இதில் அதைவிட 1001 பங்கு கலை நயத்துடன் வரும் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்து...
அய்யோ ராமா !!!!!!!!! )


என் நண்பன் சரியாகவே சொல்லிக் கொண்டிருக்கிறான். இட்லி வடை படிப்பதை நிறுத்து என்று!!!

metro mannan said...

This is my first comment in this blog though I am reading this blog for the last 3 years continuosly.

First of all this is the new try in tamil movie..
These kind of movie should take tamil film industry to the next level. I agree there were some negative points but we should encourage the positive points in the movie.

Namakku ennavo partha kadhal, Telephonil kadhal, Raudism ponra movie eduthal rasithu parthuvittu super endru solvom

Inge puthusaga padam edukkiren enru sollio kondu araitha maavaiye araikkum maniratnam, kamal ponravargalai mathiyil, Nijamagave puthusaga yosithirukkum selvavukuu vazhthukkal.


Irandavathu, Pala english movieskalai parthuvittu ingu vimarsikkum medavigalukku: Neengal parpathu oru tamil movie enbathu niyabagam irukkattum. Tamilil illai illai indian moviesl intha mathiri oru movie irunthal compare pannungal.Enakkennavo ivargal ellam padathai compare pannuvathu pola theriya villai. maraga naan ivvalavu english padam pathirukken ungalukku ellam theriyumo enru solvathu polave enakku ullathu :)

Aduthathu sozharkalai pattri solbavarkalukku : Starting laye disclaimer pottu vidugirargal. Its a completely fiction movie not related with any of history of chozha / pandiya. So Oru samudayam 800 years living in a forest/cave without any knowledge of outside world will live like that only(pachai kari sappiduvadhu, nagarigam illamal iruppathu).

Overall this is the film new to tamil fans and industry which needs to be encouraged...

Dont watch it in a DVD/VCD. Go to theatre and watchi it.

Anonymous said...

Personnally i like the movie.
Kadhai karpanai enralum,
Padam parkumpothu manasu romba valithathu, naan thanjavur serthavar enabathalo ennavo...
but nalla muyarchi...vaalthukkal
from SG