பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 09, 2010

இதை நாம் கண்டிக்க முடியாது !

நேற்றிரவு ஜெயா தொலைக்காட்சி செய்தியின் முக்கியச் செய்திகளில் ஒரு நபர் நடுரோட்டில் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் காண்பித்தார்கள். கால்களை நல்லவேளையாக கிராபிக்ஸின் மூலம் மறைத்திருந்த்தால் முழுவதும் தெரியவில்லை. இருந்தாலும் மிகவும் கோரமாக இருந்த்தால் அணைத்து விட்டேன். இன்று கெளதமன் அவர்கள் ராஜிவ் பதிவின் பின்னூட்ட்த்தில் கொடுத்திருந்த இணையச் சுட்டி அதுவென்று தெரியாமல் போய் பார்த்தேன். மிகவும் ரணமான காட்சி, உலுக்கிவிட்டது. பின்பு இன்னொருவர் இதை பதிவாக போடசொன்னார், தட்டி கழிக்க பார்த்தேன் முடியவில்லை.

நடந்தது இது தான். வெற்றிவேல் என்ற சப்-இன்ஸ்பெக்டர் நட்ட நடு ரோட்டில் வெட்டப்பட்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மரணத் தறுவாயில் துடித்துக் கொண்டிருந்தார். அதை ஒரு கும்பல் சினிமா ஷூட்டிங் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த்து. அந்த கும்பலில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மற்றும் அவர்களது அடிப்பொடிகள் அடக்கம். சொல்லவே வெட்கமாக இருக்கிறது. அங்கிருந்த அனைவரும் வெட்டுண்டு கிடந்தவருக்கு உதவாமல் ஏதோ காலில் அசிங்கத்தை மிதித்துவிட்ட உணர்வில் முகச்சுளிப்போடு இருந்தனர். போலீசார் கர்ம சிரத்தையாக தப்பி ஓடுபவர்களைத் துரத்தும் பணியிலீடுபட்டிருந்தனர். வெற்றிகரமாக வெறும் கையுடன் திரும்பினர் பின்னர்.

அமைச்சர் பெருமக்கள் 108 ஆம்புலன்சிற்கு போன் செய்து விட்டு காத்திருந்தனராம். அது வரும் வரையில் அவரது உயிர் காத்திருக்கவில்லை. போய்விட்டது. வெற்றிவேலைவெட்டிப் போட்டவர்களை விட அவர் துடிப்பதை வேடிக்கை பார்த்தவர்கள் ஈவிரக்கமற்ற கொடும்பாவிகள். வெற்றிவேல் மரணத்தப் பார்க்குங்கால் மனித நேயமும் மரணித்து விட்ட்து என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வீடியோ ரொம்ப மோசமாக இருப்பதால் இங்கே போடவில்லை. தினமலர் சைட்டில் இருக்கிறது. தமிழில் சினிமாவில் இந்த மாதிரி காட்சி வந்தால் வயல்ன்ஸ் என்று சொல்லி 'A' சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். ஆனால் நிஜமாகவே இது மாதிரி நடந்தால் ? யார் சான்றிதழ் கொடுப்பார்கள் ? இருக்கவே இருக்கார் எஸ்.வி.சேகர்!

நான் எந்த கட்சியை சேராதவராக இருந்தாலும் எனக்கு பேச வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், வீட்டில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, போன்ற திட்டங்கள் தமிழக முதல்வர் கலைஞரை 6-வது முறையாக முதல்வர் ஆக்கும். புதிய சட்டமன்ற கட்டிடத்தில் கலைஞருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும். எனது பிறந்த நாளுக்கு துணை முதல்வர் எனக்கு `அல்வா' கொடுக்காமல் `பால்கோவா' கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று சட்டசபையில் பேசியிருக்கார்.


உடனே "இது என்ன ஆட்சி ? உடனே அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்" என்று ஆரம்பித்துவிடாதீர்கள். நாம் எப்படி ஆட்சி செய்பவர்களை கண்டிக்க முடியும், நாம் தான் காசு வாங்கிகொண்டு ஓட்டு போடுகிறோமே!


40 Comments:

பிள்ளையாண்டான் said...

அவரைக் காப்பாற்றுவது குறித்து, துணை முதல்வர் மற்றும் அண்ணன் அழகிரி அவர்களின் அனுமதிக்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருந்தோம். அவர்களின் அனுமதி பெற்று காப்பாற்றுவதற்க்குள், பாவம் அவருக்கு உயிரை வைத்துக் கொண்டு இருக்க தெரியவில்லை.

அமைச்சர்கள் ‍ இவ்வாறு பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்கள். என்னுடைய கோபம் எல்லாம் கூடியிருந்த பொதுமக்கள் மீது தான்!

Kothandaraman said...
This comment has been removed by the author.
SAN said...

IV,
I was really ashamed to be born as a human being after seeing the visuals.
Where is the humane in all of us?
The way the person bled to death was heart rendering and look at the silence on the part of the government and the murderers (i mean the ministers - when they could not save a life and busy watching him to die).
Even the tamil print media has not given any coverage to this event.Spineless people.Even if the old man sneezes these media will make a headlines out of it.Do we really have to live with this virus?Only God will answer to this!!

Kothandaraman said...
This comment has been removed by the author.
Kothandaraman said...

Vettkam.
Vedhanai.

Eppadi konjam kooda manidhaabimaaname illama ivvallavu per irukkaangallo?

When he begged for water...the guy who gave him..."poured" it from a few feet away as if feeding a animal. Che...Enna kodumai idhu?

If they had taken him in any of the cars or vans available there, then there was a chance of his life being saved. But who cares for a life? That too a policeman? They are there to take care of the ministers and not vice-versa.

All this done by ministers inspite of Supreme Court ruling that "A person should be administered immediate medical attention without fear of retribution for whoever who admits him".

We really need a "ANNIYAN" for this.

Pray that Shri. Vetrivel's soul rests in peace (actually would be happy if it comes and haunts all those --------).

:-( :-( :-(

ஜெயக்குமார் said...

மனிதம் செத்துவிட்டது, அது இது என நாம் பேசாமல் உருப்படியாய் சிந்திப்போம். வெற்றிவேலின் ஆத்மா சாந்தியடைவதாக.

முதலில் இதுபோன்ற சம்பவங்களில் உதவ நினைத்து உதவுபவரை ஏதோ அவர்தான் அந்த விபத்துக்கோ, கொலைக்கோ காரணம்போல போலிஸ் நடத்துவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது, ஆபத்தில் / விபத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவியவர் விரும்பினால மட்டுமே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவேண்டும்

அவர் விரும்பினால் மட்டுமே கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல அனுமதிக்க வேண்டும்.

இதைச் செய்தாலே மக்கள் நிச்சயம் உதவுவார்கள். தற்போதுள்ள நிலையில் யாராவது உதவினால் அவரை உடனே போலிஸ் குற்றவாளியை கைது செய்து அழைத்துச் செல்வதுபோல செல்கின்றனர்.

அப்படி உதவ விரும்புபவரையும் சுற்றியுள்ள மக்கள் உனக்கு எதுக்குய்யா இந்த வேண்டாதவேலை.. நாளைக்கு கோர்ட்டு கேசுன்னு அலையப் போறியா என தானும் உதவாமல், பிறரையும் உதவ விடாமல் தடுத்து விடுகின்றனர்.

தேவை சட்டத்தில் மாறுதலும், காவலர்கள் உண்மையிலேயே “நமது நண்பனாக” நடந்துகொள்வதும் மட்டுமே. மற்ற மனிதாபிமானமெல்லாம் தான் பாதுகாப்பாய் உனரும் கனம் நிச்சயம் வரும்.

மனதிற்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.. கண்முன்னால் ஒரு உயிர் பிரிவது தெரிந்தும், உதவாமல் இருந்த அமைச்சர் பெருந்தகைகளை கடவுள் நரகத்தில் தள்ளாமல் இருக்கட்டும்..நல்ல புத்தி கொடுக்கட்டும்..

எப்படி மன அமைதி கொள்வது எனத் தெரியவில்லை.

Anonymous said...

No point in blaming the ministers or media, will we do this if we were in the site?. I don't think many will. Either we will be rushing away imagining we're too busy or even worse foolishly stay there as a active observer of the scene. How many of us have the will to help the man we find desolated, in the corner of our streets?. What morale do we have, to expect love,sympathy,humanity from others when we ourselves lack them?

Palanivel Raj G said...

இங்கு காட்டாட்சி நடப்பதற்கு இதை விட வேறு நல்ல உதாரணம் தேவை இல்லை... இலவச தொலைகாட்சி , இலவச ஆயுள் காப்பிடு கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் இவர்களை நினைத்தால் .. அவர்களை போல் சொல்ல வேண்டும் என்றால்.. நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த .... இதற்க்கு ஒரே வழி தான் உண்டு... மாற்றம்... அது முதலில் நம்மிடம் இருந்து ஏற்பட வேண்டும்.... தினம் ஒரு கொலை... சில கொள்ளைகள்.... காவல் துறைக்கு அமைச்சர்களுக்கு பாதுகாப்பு கொடுபதற்கும் , அப்பாவி மக்களிடம் ஹெல்மட், லைசென்ஸ் பெயர் சொல்லி பணம் பரிபதர்க்கும் நேரம் போகும் போது மக்களை யார் காப்பாற்றுவது.....

Anonymous said...

Wonder what Rajini would say now looking at bomb culture?

வீரராகவன் said...

இ.வ தட்டி கழிக்க பார்த்தது சரியில்லை. இது போன்றவை மறுபடியும் நிகழ கூடாது என்றால், சொரணை கெட்ட தமிழனுக்கு உறைக்கிறவரை மறுபடி மறுபடி இதை பதிவாக போட வேண்டும். சாலையில் இறந்த முதியவர் பற்றி நான் எழுத சொன்னதற்கு தயங்கினீர்களே. 108 கூப்பிடுங்கள் என்று எனக்கு அட்வைஸ் வேறு. இப்போது என்ன சொல்கிறீர்கள்?
இப்படி எஒவ்வொருத்த்ரா இறந்து தமிழ் நாடு சுடுகாடாக மாற வேண்டுமா?
ஏன் பதிவு போட தயக்கம்?
இனி சாலை விபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்த்த ஒவ்வொருத்தனையும் தண்டிக்காமல் விடக்கூடாது. இவனுங்க சொந்தம் என்றால் இப்படி தள்ளி நின்று எதுக்கோ தண்ணிர் ஊத்தற மாதிரி, இரத்த கறை படாமல் தள்ளி நின்னு... சே எழுதறதுக்கே கை வரமாட்டேங்குது. நடுங்குது.
இ.வ கண்டிப்பாக இப்படிபட்ட அநீதிகளை, அக்கிரமங்களை பதிவிடனும். இல்லையென்றால் யாரையும் நக்கல் அடிக்காமல் தேமே என்று பிடித்தது, பிடிக்காதது, வெந்தது, வேகாதது எல்லாம் போட்டு எழுதுங்க.

Anonymous said...

JJ has deplored the contradictions between "kalaignar kAppeettu thittam" and the health minister not rushing to save Shri.Vetrivel. S.Vee.Shekar can answer that

வலைஞன் said...

திரு வெற்றிவேல் ஒரு நாய் வளர்த்திருந்தால் அது கூட எதாவது செய்திருக்கும் ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்கள் இந்த காட்சியை வேடிக்கை பார்க்கின்றனர்

இந்த வீடியோ 2 நிமிடங்களில் நம்மை 5000௦௦௦ ஆண்டுகள் பின்னோக்கி தள்ளி விட்டது

தயவு செய்து யாரும் இதற்கு எந்த அரசியல் கட்சியையும் குறை சொல்ல வேண்டாம் அங்கு மானுடம் தோற்று விட்டது மனித நேயம் மறைந்துவிட்டது

இது ஒரு கிராமத்தில் நடந்திருப்பது எனக்கு மிக கவலையை தருகிறது.கிராம மக்களிடம்தான் ஈவு இரக்கம் மிஞ்சி இருக்கிறது என நம்பி இருந்தேன்.ம்ம்ம்ம்

ஒரு வேண்டுகோள்! போனவர் போய் விட்டார்.அவர் குடும்பத்தையாவது நல்ல முறையில் காக்க உரிய ஆணை இடுமாறு அனைவர் சார்பிலும் முதலமைச்சரை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

எங்களை மன்னித்து விடுங்கள் வெற்றிவேல் அவர்களே!உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம்

Anonymous said...

பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு - அதுவிலும் முக்கியமா நம்ம தமிழ் நாடு
சாரே ஜஹான் சே அச்சா

Anonymous said...

:No point in blaming the ministers or media, will we do this if we were in the site?. I don't think many will. Either we will be rushing away imagining we're too busy or even worse foolishly stay there as a active observer of the scene. How many of us have the will to help the man we find desolated, in the corner of our streets?. What morale do we have, to expect love,sympathy,humanity from others when we ourselves lack them?

::
anony
go to hell! you said thad we cant blame the ministers? Bloody they are on the site .cant they take some steps? if common man take steps then it become police ,court etc.BUT THE minister can take steps
I AM SURE whoever expressed their views in this blog would tried,if they were in the site! may be you would do all those you wrote.

when ever dmk is rulling rowdys are out of cnotrol
.mk can realese more goondas in eve of republic day.
latesT
T.N.GOVT HAS announced rs 7 lack as compoensation

Anonymous said...

Indians here can't help a fellow Indian struggling for life in our own land and we cry about racism in Australia..

Anonymous said...

Athu MGR nadicha Vettaikaran - athuku B1G1 free... IT nadicha Vettaikaran ku illa...

Narathar velai arambam aiduchu dooooi...

சைவகொத்துப்பரோட்டா said...

நான் அந்த வீடியோ பார்க்க வில்லை, ஆனால் செய்திதாளில் படிக்குபோதே
மனம் வலித்தது. மனித தன்மை சுத்தமாக செத்து விட்டது.

Anonymous said...

பெட்ரமாக்ஸ் லைட்டேஏஏ வேணுமா?

துணை முதல்வர்:
ரெண்டு மந்திரி suspend பண்ணலாமா ?
முதல்வர்:
no.
1. கான் , சிறுபான்மை இன வங்கி
2 . MRK, நல்ல ஒருங்கிணைப்பாளர். அவரால் கலகம் பல வெற்றி பெற்று இருக்கு.

deal / no deal, banker a koopitu oru amount solla sollu. we can give..

7 lakhs.

R.Gopi said...

மனிதம்.... இது மறைந்து நெடுநாட்கள் ஆகிவிட்டது...

வேடிக்கை பார்த்த பொதுமக்களை காட்டிலும், அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரியை அமைச்சர் நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும்... ஆனால், செய்யவில்லை..

பரவாயில்லை... அடுத்த முறையும் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு, அவருக்கே ஓட்டு போடுங்கள்....

karunanithi said...

why all of you guys pointing your fingers at government.. what about these reporters / cameramen who took this video? didn't they do anything?? Were they planning to use this to make some money?!!

ராஜசுப்ரமணியன் said...

மனித நேயம் வேண்டாம், சாதாரண அறிவு COMMON SENSE இருந்திருக்க வேண்டாமா? அந்த அமைச்சர்களின் காரில் திரு வெற்றிவேலை அழைத்துப் போயிருக்கலாமே - எதற்கு 108 ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருந்தார்கள்?

அமைச்சர்கள் கூடவே AK47 ஏந்திய ஒரு பட்டாளம் வருமே, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

அமைச்சர்களின் மெத்தனத்தைக் கண்டித்து முதல்வர் ஏதாவது சொன்னாரா, இல்லை செய்தாரா?

வெட்கமாகவும், அதைவிட வேதனையாகவும் உள்ளது. தமிழ்நாடு “எங்கேயோ போய்விட்டது”

Rajesh said...

Guys, some bombs have been thrown at the victim. Any man in his senses will be fearful of any undetonated bombs around the victim.

It is a standard practice in all first aid situations - if u are not sure about ur own safety, don't try to help. What if there is another bomb that foes of when some one goes near. It is not an accident site, it is a site where there has been an explosion.

Just put yourselves there

Anonymous said...

இது போன்ற போலீஸ் கேஸ்களில் ஆம்புலன்ஸுக்கு வெயிட் செய்வதைத் தவிர பொது சனம் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?


ஆட்டோவில் போட்டு ஆஸ்பத்திரிக்கி எடுத்துக்கொண்டு போகவும் முடியாது...போலீஸ்காரர்கள் செய்யவேண்டியது அது.

Sara said...

@Rajesh: brilliant analysis there. Do the ambulance personnel also have bomb disposal squad with them? Somebody has to go and help the injured man, in the absence of specialists. Nobody had the intention to do it. If I had been there, I would have done it. Even if one person does it, more will come to help.

sreeja said...

Thanks for your post.

விவேகானந்தன் said...

அட இந்த மந்திரிகள விடுங்க, கூடவே ஒரு கலெக்டர் அங்க இருந்திருக்காரு அத நெனச்சாதான் எனக்கு பத்திக்கிட்டு வருது. பரதேசி IAS-ல என்ன கிழிச்சான்னு தெரியல..!? எல்லோரும் மஞ்சள் கமென்ட்டை கொஞ்சம் யோசிச்சு பாருங்க... அப்பறம் மனிதாபி மானம் செத்துருச்சு, மங்காணி செத்துருச்சுன்னு சொல்லலாம்.... தப்பு எல்லாம் நம்ம மேலடா பக்கிகளா...

Anonymous said...

Now Rasa is busy with the 2nd spectrum - http://dailypioneer.com/174283/Milking-BSNL-Max-imum-is-in-Raja%E2%80%99s-spectrum.html

"Kanna nee killadi ba"
I've never seen anyone so explicitly (applying Namam)fooling Indians ever before.

Kameswara Rao said...

IV

I went saw that video.. manithathanmai sethu vittathu kudumba aatchi... sun tv netru iravu oru vari cheithi indru athai patri mooch (I am watching it in Botswana) enna kodumai saami ithu oru si ku intha kethi indraya thagaval one more lady SI has been attacked... vare vaa..

kamesh

SANKAR said...

இன்று காலை திருனெல்வேலி ஜங்சன்
பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏற வந்தவர் மேல் ஒரு பஸ் ஏறி விட்டது.உடனே
அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்
அவரை ஆட்டோவில் போட்டு உடனே
மருத்துவம்னைக்கு சென்றார்.அந்த ஆட்டோ டிரைவருக்கு இருந்த உணர்வு
மெத்த படித்தவருக்கும் அமைச்சர்களுக்கும் இல்லையே.

சீனு said...

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் உயிருக்கு போராடும் போது, உதவாமல் போனால், அவர்கள் மேல் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். கண்டிப்பாக எடுக்க வேண்டும். இவர்களெல்லாம் என்ன அமைச்சர்கள்.

இதில் தமிழக மீடியாக்கள் சுத்தமாக கண்டுகொள்ளவில்லை என்பது இன்னும் கொடுமை. ஜெயா டி.வி.யாவது (அரசியல் காரணங்களுக்காக) இந்த கொடுமையை வெளியிட்டது. மற்ற சேனல்கள் கேவலம்...வட நாட்டு மீடியாக்கள் தான் வழக்கம் போல் (டி.ஆர்.பி.க்காக) அழுத்து கொண்டு இருந்தது.

சில நாய்கள் (உதவி கூட செய்யாமல்) இதை படம் பிடித்திருப்பதை என்னவென்று சொல்வது?

இவர்கள் நாயினும் கேவலமானவர்கள்.

//உடனே "இது என்ன ஆட்சி ? உடனே அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்" என்று ஆரம்பித்துவிடாதீர்கள். நாம் எப்படி ஆட்சி செய்பவர்களை கண்டிக்க முடியும், நாம் தான் காசு வாங்கிகொண்டு ஓட்டு போடுகிறோமே!//

இதை நானும் வழிமொழிகிறேன். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் வரை, இதை போன்றவை நடக்கும். (இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். இந்த நிலமையின் ஆரம்பம் மக்களின் அறியாமையும், பொறுப்பற்றத்தனம்).

Baski said...

//
முதலில் இதுபோன்ற சம்பவங்களில் உதவ நினைத்து உதவுபவரை ஏதோ அவர்தான் அந்த விபத்துக்கோ, கொலைக்கோ காரணம்போல போலிஸ் நடத்துவதை நிறுத்த வேண்டும்.
//

Well said Jeyakumar.

Why these people hesitated to help? (forget ministers/police they never have humanity after entering into such profession).

I feel: 'people hesitated because of Law.'

There should be a law change:

A person who helps an accident victim (or attempt murder victim) should be treated with due respect and he should able to continue his normal life after helping a needy.

Also doctors should be allowed to save such people without police intervention. I don't know which stupid wrote a law that police case is first then treatment.

And it should be publicized also. Otherwise tomorrow this can happen to anyone of us.

SUBBU said...

SV சேகர் என்ன சொல்ல வர்ரார்-னு எனக்கு புரியல :((

Anonymous said...

ஆகா.. எண்ண ஒரு மனிதாபிமமான மக்கள். என்ன துடிப்பு என்ன ஆவேசம், ஏன்... விஷுவலா கண்டதாலா. ஏண்டா நீங்க பேப்பர்ல தினமும் படிச்சதிலியா, படிப்போம்.. ஆனா உறைக்காது. Reason, we don’t put our self on that situation and feel it. We you care and feel for the fellow human being when in distress. We don’t have the right to comment on this பாண்டரங்கள்..

Anonymous said...

சட்டக் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டபோது, தினகரன் பத்திரிகை எரிக்கப்பட்டபோது, அலுவலக ஊழியர்கள் எரிக்கப்பட்டபோது, அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக பேசாமல் வேடிக்கை பார்த்தது தமிழ் நாடு போலிஸ். இப்போது போலிஸ்காரர் கொல்லப்படும்போது அரசியல்வாதிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

அதர்மம் நடக்கும்போது வேடிக்கை பார்த்தால், வேடிக்கை பார்த்தவர்களை அப்புறமாக அதர்மம் அழிக்கும்.

What goes around comes around.

kggouthaman said...

பதிவிற்கு நன்றி. இட்லிவடை போன்ற - அதிக வாசகர்கள் உள்ள பதிவுகளில் - இந்த மாதிரி செய்திகள் இடம் பெற வேண்டும், ஒரு awareness ஏற்படுமாயின், எதிர்காலத்தில் - வேடிக்கை பார்க்கும் அலட்சிய போக்குகள் குறையும் என்ற எண்ணத்தில்தான் நான் அந்த சுட்டி அனுப்பினேன். இ வ - இந்த மாதிரி சூழ் நிலைகளில் - பொது மக்கள், அடி பட்டவருக்கு என்ன செய்யலாம், எப்படி உதவலாம் - என்ற விவரங்களை, மருத்துவர்கள் மற்றும் நீதித் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் பேட்டி கண்டு எழுதினால் - வாசகர்களுக்கு எதிர் காலத்தில் உதவியாக இருக்கும்.

Anonymous said...

Number of police and collector were busy with their cellphones waiting for orders from higherups. One policeman was seen pouring water on the injured inspector who as sitting at that time.

The main reason for this situation is the torture faced by "helpers" on later dates by courts/police. Supreme court should clearly exempt "helpers" from court/police station enquiries.

Baski said...

//சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் உயிருக்கு போராடும் போது, உதவாமல் போனால், அவர்கள் மேல் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். கண்டிப்பாக எடுக்க வேண்டும்.//

Seenu,
Okie. What will be the situation if a guy helps? (and unfortunately if the victim dies?)


//இ வ - இந்த மாதிரி சூழ் நிலைகளில் - பொது மக்கள், அடி பட்டவருக்கு என்ன செய்யலாம், எப்படி உதவலாம் - என்ற விவரங்களை, மருத்துவர்கள் மற்றும் நீதித் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் பேட்டி கண்டு எழுதினால் - வாசகர்களுக்கு எதிர் காலத்தில் உதவியாக இருக்கும்.//

Gouthaman sir,

Nobody knows the Do's and Dont's. (Even ministers/police/etc).. Such essential things has to clearly updated to public. A responsible CM should have rose to such occasion and would have taken steps to avoid such bad situations.. (or asked Attorney General..etc about your questions and explained public)..

Idly is another blogger like us.. he can google and put some info here.. nothing much he can do.

Unfortunately those 'responsible' people are busy for "Chemmozhi Maanadu".. statue (pose) in new assembly.. etc.

Anonymous said...

vijayakanthukku oottu potrunthaa
antharathula irunthu kuthichi fight panni SI-ya kaappathi iruppaaru

think practically...

Anonymous said...

i feel very bad reading this post.
reading the comments i remember sujatha's < ARISI sirugathai

சாதாரண கிராமத்தான் said...

“ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்று எம்ஜிஆர் கூறியது அண்ணாவை நினைத்துத் தானே தவிர, கருணாநிதியை நினைத்து அல்ல. அந்த சமயத்தில் நான் அரசியலிலேயே இல்லை. அப்போது எனக்கு வயது 15. மாணவியாக பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் போது ‘தலைவி இருக்கிறார்’ என்று என்னை எப்படி கூற முடியும்?"
ஜெயலலிதாவின் பதிலில் கொஞ்சம் கூட logic இல்லை. அவர் கேள்வியிலும்தான். ஜெயலலிதாவுக்கு தலைவர் எம் ஜி ஆர். அப்படி இருக்க அவர் எப்படி தலைவி இருக்கிறார் என்று பாட முடியுமோ தெரியவில்லை. அங்கே இருப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனவச்சிரிப்பு, எத்தனை காலம்தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே மற்றும் பல பாடல்கள். இந்த பாடல்கள இவர் ஆட்சியில் இருக்கும்போதுதான் படப்பட்டதா என்று தெரியாது. பாடல் மற்றும் ஆண்டுகளை யாரவது தெளிவு படுத்துங்களேன். இதை எல்லாம் என்னை பார்த்துதான் பாடினார் என்று வாழும் வள்ளுவர் சொல்வாரா. இந்த பெயரினால் தானோ என்னவோ இவளவு பெரிய விளக்கவுரை சட்டமன்றத்தில் சொல்லிருக்கிறார்.
my blog: http://sollaninaikkiren.blogspot.com/