பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 11, 2010

அப்படியே ஷாக்காயிட்டேன்!

இன்று சென்னையிலும், அதை சுற்றி உள்ள தமிழகத்திலும், புயல் மற்றும் கன மழை. எல்லோரும் கையில் இரண்டு குடையையுடன் சென்ற காட்சி பல டிவியில் காண்பித்தார்கள்.

சில மாதங்களுக்கு முன் கொட நாட்டில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒருவழியாக மெதுவாக நகர்ந்து கொஞ்ச நாள் முன்பு சென்னை வந்து மையம் கொண்டது மக்கள் அறிந்ததே! அதன் எதிரொலியாக முரசொலி எதுவும் இல்லாமலேயே இன்று சென்னையிலும், தமிழகத்தில் பல இடங்களில் லேசான மற்றும் கன மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் எப்படி இந்த அதிசயம் என்று இன்னும் குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதே போன்று தினமும் வந்தால் சட்டசபை முழுவதுமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையமாக மாறி, அங்கு இப்போதெல்லாம் ரெகுலராக வரும் பெரியவருக்கு உயர் அழுத்தமாக அமைந்து விடும் என்று சென்னையில் சங்கமித்துள்ள பல கலை நிபுணர்களும் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் இன்று இரவு முதல் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகாலை வரையிலும் சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவிக்கிறது. இதன் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் தண்ணீர் டாஸ்மாக்-நீர் மாதிரி கரை புரண்டோடி காவிரி நதி நீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூட சிலர் நினைக்கிறார்கள்.

அதற்குப் பிறகும் இதே நிலை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்றும், போயஸ் கார்டனுக்கு முன் யாரும் முற்றுகையிட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

வேளச்சேரியில் மனதை மயக்கும் சாரல் இருந்ததால் மக்கள் "குடும்பத்துடன்" மகிழ்ச்சியுடன் இருந்ததாக அறியப்படுகிறது.

தைலாபுரத்தில் வானம் மேக மூட்டமாக கொஞ்சம் மப்பும் மந்தாரமாக இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பென்னாகரம் பகுதியில் இந்த மழை நடுவிலும் வேறு மழையும் பெய்யும் என்று லோக்கல் வானிலை வட்டாரத்தில் சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சுற்றியுள்ள சில இடங்களில் கடுமையான சூறாவளி வீசும் என்று தெரிகிறது. அங்கே நிலைமை பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது என்றும், மதுரையில் கடல் இல்லாதால் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. இருந்தால் 100 முதல் 200 அடி எழும்பியிருக்கும் என்று வானிலை அதிகாரிகள் கருத்து சொன்னார்கள். இதே நிலை தொடர்ந்தால் ஜூன் மாசத்தில் உலகத் தமிழர் மாநாட்டுக்கு முன்போ பின்போ சுனாமி கூட வரலாம் என்றும் பேர் சொல்ல விரும்பாத மூன்று பேர் பேட்டி குடுத்தனர்.

இன்று திங்கட்கிழமை, மற்றும் மழை காரணமாக வேட்டைக்காரன் படத்துக்கு சுத்தமாக கூட்டம் இல்லை. சன் டிவி கேமரா மேனை தவிர வேறு யாரும் இல்லாதால் தியேட்டர் உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று திக்குமுக்கு ஆடினார்கள் என்று உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த மழையினால் மெரினாவில் இருக்கும் அழுக்கும், சிலைகளும் சுத்தமாயின என்றும் சொல்லுகிறார்கள். புயல் சின்னமாக கடலோர பகுதிகளில் முதல் முறையாக ரொம்ப நாளைக்குப் பிறகு இரட்டை இலை கொடி பறக்கவிடப்படுள்ளது என்றும், இந்தப் புயல் தொடர்ந்தால் சிங்காரச் சென்னை என்ற கனவு பலித்தாலும் பலிக்கும் என்றும் இலை மறை காயாக சில டிவிக்களில் இன்று காலை முதல் தொடர்ந்து ஒரே செய்தி வாசிக்கப்பட்டது.

இதுக்கு மேல எல்லாத்தையும் பச்சையாச் சொல்ல முடியாது

23 Comments:

மானஸ்தன் said...

//"அப்படியே ஷாக்காயிட்டேன்!"//
இப்ப நானும்தான் :>

kggouthaman said...

நானும் செய்திகள் பார்த்துத் திகைத்துப் போனேன்.
இரண்டாயிரத்துப் பதினொன்றுக்கு இது நல்ல தொடக்கம். இதே மாதிரி தொடர்ந்தால்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ரொம்ப நாளைக்குப் பிறகு பச்சை பெயிண்ட் அடித்த பதிவு - காரணமானவரை "ஜெய" ஹே என்று வாழ்த்துகிறேன்!

ஜெயக்குமார் said...

கருணாநிதியும் 2001 லிருந்து 2006 வரை சட்டசபைக்குள்ளேயே வராமல் கையெழுத்து மட்டும் போட்ட்சு சென்றவர்தானே ராசா..அப்பல்லாம் யாரும் கேட்டதாகவோ, இப்படி படம் போட்டு பொருள்விளக்கியதாகவோ ஞாபகமில்லை..

குறிப்பு: நான் அ.தி.மு.க அனுதாபி கிடையாது

Guru Prasath said...

Sorry I don't understand. Any hidden news. Please explain. What is IV talking about?

Priya said...

Thai pirantha vali pirakkum nu solluvunga,nallathu nadantha sari..

Anonymous said...

Ofcourse, the news be may an interesting one; BUT WITH REGARD TO THE PREENTATION: ;THAMIAHANAI PRANTHU THOLAITHTHANAL WE HAVE NO OTHER GO EXCEPT TO READ THESE RUBBISH AND BEAR THE SAME"

SUPPAMANI

மிளகாய் பொடி said...

செல்வி அவர்கள் சட்டபேரவைக்கு வந்தார்னு directa சொல்லிட்டு போகவேண்டியது தானே??

சீனு said...

Same blood...

ஆதி மனிதன் said...

//மிளகாய் பொடி said... செல்வி அவர்கள் சட்டபேரவைக்கு வந்தார்னு directa சொல்லிட்டு போகவேண்டியது தானே??//

இட்லி வடைக்கு ஆட்டோனா பயம். இல்ல இ.வ?

Kameswara Rao said...

இ வா,

இன்னாபா இது ஆடோன்ன யாருக்குத்தான் பயம் கிடையாது அதுகுனன்கட்டி தம்மாதூண்டு மட்டேருக்கெல்லாம் ஆட்டோ உட்டா கட்டுபிடியாகதுபா, இந்த பதிவுக்கு ஆடோன்ன துக்ளக்ல வரதுக்கு varusham புல்லா புக் பண்ண வேண்டியது தான். என்ன கண்ணு சொல்ற...
அட உன்ன தான்பா இட்லி

காமேஷ்

Anonymous said...

சரி.. இன்ஸ்பெக்டருக்கு முதல் உதவிசெய்து, அவர் பசி, பிணி, மூப்பு ஆகிவைகளிலிருந்து நிரந்தர நிவாரணம்,மற்றும் இன்ஸ்பெக்டர் குடும்பம் 7 லட்ச ரூபய் பெற உதவிய அமைச்சருக்கு உலக மனித நேய விருது கொடுப்பததற்கு தீர்மானம் நிரைவேற்றப்படும்-- அதாவது புயல் இன்று தொடராமல் இருந்தால். --டில்லி பல்லி

சாதாரண கிராமத்தான் said...

இட்லி தங்கள் விஷயத்தை நேராக சொல்லாமல் சுற்றி வளைத்து ஏன் சொல்கிறீர்கள். முன்னாள் முதல்வர் சட்ட சபைக்கு வந்ததைத்தான் செய்தி ஆகியிருக்கிறீர்கள். ஆனாலும் அந்த முன்னாள் முதல்வரின் படம் சற்று அதிகம்தான். அதை விட காமெடி இவர் பேசிய வுடன் வாழும் வள்ளுவர் பேசியதுதான். ஒரு தலைவன் இருக்கிறான் ... என்ற எம் ஜி ஆர் இன் பாடல் தன்னைத்தான் குறிப்பதாக சொல்லுகிறார். அந்த படம் வந்த நேரத்தில் அவர் இவரின் கட்சியில் இருந்தார் என்றலும் அதன் பிறகு தனி கட்சி தொடங்கியவுடன் அண்ணாதான் தன் தலைவர் எண்டு கூறியது எல்லாம் வரலாறு. எம் ஜி ஆர் தன்னை எப்படி எல்லாம் சொன்னார் என்பதையோ அல்லது தான் எப்படி எம் ஜி ஆர் ஐ "நாகரிகமாக" திட்டினேன் என்பதையோ சொல்வாரா. இந்நாளுக்கு எத்தனை கூட்டணி இருந்தாலும் இன்னும் எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர் என்று சொல்வதும், முன்னளுக்கு அனைத்து மீடிங்களிலும் இறுதியில் அண்ணாவுக்கும் எம் ஜி ஆருக்கும் நாமம் போட்டலும் இடைதேர்தல் தோல்வி பயத்தால் சட்ட சபையிலேயே எம் ஜி ஆரின் பாடலை படும் நிலைமைக்கு வந்ததும் தமிழனுக்கு எங்கே தெரிய போகிறது. அவனுக்கு யார் நாமும் தேவை இல்லை. வாங்கி பழகிவிட்டான். வாங்கி வாங்கி சிவந்த கரங்கள் அவனுடையது.

Anonymous said...

சும்மா பப்ளிசிட்டி ஸ்டண்டு. ஒரு வருஷம் கொட நாடு பங்களாவில் சொகுசா இருந்து விட்டு இப்போ பத்திரிகைகளில் முதல் பக்கம் செய்தி வர சும்மா ஒரு ஸ்டண்டு இது. இதை பெருது பண்ணும் பத்திரிகைகளும் இதை தெரிந்து தான் செய்கின்றன என்பது கொடுமை.

Lakshmi said...

Neenga kalku'nga chitapu...

வலைஞன் said...

அன்புள்ள இட்லி வடை,
நீங்களும்,சோவும் அம்மாவை அளவுக்கு மீறி ஆதரிப்பதாக நினைக்கிறேன்.எதோ மு.க சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைக்கும் ஒரே தீர்வு ஜெயா என்று நினைக்கிறீர்கள்.
இது முற்றிலும் தவறு.இவர்கள் இருவரும் கொள்ளை அடிப்பதிலோ,அராஜகத்திலோ ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை.பின்னவர் ஒரு fascist உம் கூட !!
காங்,ராமதாஸ்,விஜயகாந்த்,சரத்குமார் ஆட்சியமைத்தால்(!) அது நல்லா ட்சியாக அமைய ஒரு சதவிகித வாய்ப்பாவது உள்ளது.ஆனால் ஜெய-முக ஆட்சி 100% காட்டாட்சி யாகத்தான் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.
நம் மாநிலத்தின் இரு சாபங்கள் அவ்விருகட்சிகளும்.

R.Gopi said...

”ஜெய ஹோ”........

டன்மானடமிழன் said...

வலைஞன் said..
//ராமதாஸ்,விஜயகாந்த்,சரத்குமார் ஆட்சியமைத்தால்//

ஜெ - கருணா வையும்
கடவுளாக்கிவிடுவார்கள்...

சாக்கடைக்கு பயந்து
சேப்டிக் டேங்கில் விழுந்த கதையாகிவிடும்...

sreeja said...

// காங்,ராமதாஸ்,விஜயகாந்த்,சரத்குமார் ஆட்சியமைத்தால்(!) அது நல்லா ட்சியாக அமைய ஒரு சதவிகித வாய்ப்பாவது உள்ளது. //

நல்ல வேளை அங்கே ஒரு ஆச்சர்ய குறி.

cho visiri said...

Guruprasathjee said....
//Sorry I don't understand. Any hidden news. Please explain. What is IV talking about?//

In fact we are sorry to note that you have not understood.....

Two clues are more than sufficient.
One is given Green Highlighter has been used.
Second clue is .... well, you just see the (inset) photo.

By the way, are you not aware of the significance of Kodanadu?!

Guru Prasath said...

Cho Visiri:

I didn't know that Jaya has visited Assembly yesterday. Later I came to know about this. Thats why the confusion.

IdlyVadai said...

//Guru Prasath //

By mistake I deleted your comment and then added it again.
-iv

Anonymous said...

vijayakanth and ADMK combination is soon expected. Already communist support ADMK. Will Amma be back as a bigger hurricane in this money-minded TN?