பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 07, 2010

கலைஞர் - கிழக்கு - சோ( படத்தை கிளிக் செய்தால் படிக்கலாம் )
கலைஞர் உரை கீழே ( புதிய அப்டேட் )

இன்றைக்கு இந்த விழாவிலே கலந்து கொண்டு ஆறு பேருக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் வீதம், ஆறு இலட்சம் ரூபாயை இந்த அமைப்பின் சார்பில் வழங்குகின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மேடையில் நான் அறிவித்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த தொகையில் ஒரு கோடி ரூபாயை அறக்கட்டளை நிதியாக வங்கியிலே டெபாசிட் செய்து - அதிலிருந்து கிடைக்கின்ற வட்டியிலிருந்து - இந்தப் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறும் போது - அந்த விழாவில் தமிழ் விற்பன்னர்கள், தமிழ் வித்தகர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள் - இவர்களுக்கு எல்லாம் பரிசிலாக வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு என்னுடைய வேண்டுகோளை இந்தச் சங்கம் ஏற்று கடந்த ஆண்டுகளில் தம்பி கண்ணதாசனின் புதல்வர் தம்பி காந்தி அந்தப் பொறுப்பையேற்றுக் கொண்டு அதற்குப் பிறகு இந்த ஆண்டு நம்முடைய அருமை நண்பர் சேதுசொக்கலிங்கம் அவர்கள் அந்தப் பொறுப்பையேற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏதோ வழங்குகின்றவர்களிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டதாக நான் கருதவில்லை. இரண்டு பேரும் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் தான். நான் தமிழ்நாட்டைக் குறிப்பிடவில்லை - செட்டிநாட்டைக் குறிப்பிடுகிறேன். (கைதட்டல்) அவர்கள் இருவரும் - அந்தத் தொகையிலிருந்து கிடைக்கின்ற வட்டியைக் கொண்டு, அறக்கட்டளையின் சார்பாக நாணயமாக வழங்கப்பட வேண்டும் என்பதிலே அக்கறை உள்ளவர்கள் என்பதை நான் மிக நன்றாக அறிவேன். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடைபெறுகின்ற நேரத்தில் எல்லாம், இந்த விழாவினைக் காண வேண்டும், இதிலே கலந்து கொண்டு இந்தப் பரிசிலைப் பெறுகின்ற தமிழ் ஆர்வலர்கள் யார்யார், அறிஞர்கள் யார்யார், எழுத்தாளர் கள் யார்யார் என்பதை அறிந்து கொள்வதிலே மிகுந்த ஆர்வம் காட்டக் கூடியவன். அப்படிப்பட்ட நான் இன்றைக்கு இந்த விழாவிலே ஒருவேளை அவர்கள் அழைக்காமல் விட்டிருந்தால்கூட, இங்கே முன் வரிசையிலே அமர்ந்திருக்கின்ற தமிழ்ச் சான்றோர் களுடைய பக்கத்திலே ஒருவனாக அமர்ந்து இந்த விழாவினை காணுகின்ற வாய்ப்பினை நானாகத் தேடிக் கொண்டிருப்பேன். ஏனென்றால் புத்தகக் கண்காட்சி யின் மூலமாக பெறுகின்ற பயன், பெற்றுள்ள பயன், பெற வேண்டிய பயன் - இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது இந்த நாட்டிற்கு எவ்வளவு இன்றியமையாதது அது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆயுதங்களுக்கு தருகின்ற முக்கியத்துவத்தைவிட புத்தகாலயங்களுக்கு சிறப்பு தருகின்றனர்

அதனால்தான் நம்முடைய நாட்டிலே மாத்திரமல்ல, நம்முடைய நாட்டை வெல்லுகின்ற அளவிற்கு பிற நாடுகளில் ஆயுதங்களுக்குத் தருகின்ற முக்கியத்து வத்தை விட, சிறப்பை விட, பெருமையை விட புத்தகாலயங்களுக்கு சிறப்பு தருகிறார்கள். புத்தகங்களுக்கு பெருமை தருகிறார்கள். அந்த அளவில் தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டு காலமாகத்தான் அத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. அந்த எழுச்சிக்கு வித்திட்டவர் களிலே பலர், மேடையிலும் இருக்கிறார்கள், என் எதிரிலும் வீற்றிருக்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் நான் நன்றியினை, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் ஒரு எழுத்தாளன்தான். கடந்த 70 ஆண்டுக் காலமாக எழுதிக் கொண்டிருப்பவன். இன்னும் எழுதிக் கொண்டிருப்பவன். நாளைக்கும் எழுதப் போகிறவன். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கப் போகிறவன். இன்றைக்கு இங்கே புகழப்பட்ட முதலமைச்சர் என்ற இந்தப் பதவிக்கு நான் உரியவன் என்ற முறையிலே அல்ல - இந்தப் பதவியிலே பொறுப்பேற்றிருப்பவன் என்ற நிலையிலே அல்ல - நான் இந்த நிலையிலே இன்றைக்குப் பாராட்டப்படுகின்ற, சிறப்பிக்கப்படுகின்ற நிலையில் இல்லா விட்டாலும், இதை விடப் பெருமையாக எதை கருதுவேன் என்றால், எனக்கு அண்மையிலே கொல்கத்தாவிலிருந்து வருகை தந்து, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் சார்பாக அளிக்கப்பட்ட அந்த விருதைப் போல் - இன்றைக்கு என் முன்னால் என்னுடைய வாழ்த்துக் களோடு வழங்கப்பட்ட விருதுகளைப் போல ஒரு விருது எனக்கு வழங்கப்படுமேயானால் - முதலமைச்சர் பதவியை விட அது மூவாயிரம் மடங்கு, முப்பதாயிரம் மடங்கு பெரியது என்று நான் கருதக் கூடியவன். (கைதட்டல்) ஏனென்றால் என் எழுத்து பாராட்டப் பட்டால், என் எழுத்து சிறப்பிக்கப்பட்டால், என் எழுத்தை பிறர் ஒருவர் புகழ்ந்து பேசினால் அதிலே ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட என் ஆட்சியைப் புகழ்ந்து பேசும் போது அந்த மகிழ்ச்சி ஏற்படவில்லை.

முதலமைச்சர் பதவியை விட எனது எழுத்துக்களை பாராட்டுவதில்தான் மகிழ்ச்சி

எவ்வளவு கஷ்டத்திற்கிடையே - எவ்வளவு சிக்கல்களுக்கிடையே - எவ்வளவு பிரச்சினை களுக்கிடையே இந்த ஆட்சியின் மூலமாக நமக்குக் கிடைத்த புகழ் என்பதையெண்ணி ஒருக்கணம் நான் அதற்காக செலவிடுவேன். ஆனால் என் புத்தகத்தை நீங்கள் பாராட்டி, என்னுடைய எழுத்தை நீங்கள் பாராட்டி, அதற்காக எனக்கு சிறப்பு செய்கிறீர்கள், எனக்கு வாழ்த்து கூறுகிறீர்கள் என்றால் அதிலே ஏற்படுகின்ற மகிழ்ச்சி, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற நிலையிலே எனக்கு ஏற்படுவதில்லை.

அதனால்தான் அண்மையிலே கூட அலுத்துப் போய் விட்டது எனக்கு என்பதை எண்ணியெண்ணி நான் ஒரு நிகழ்ச்சியிலே சொன்னேன் - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு நான் வேறு ஒரு திக்கில் என்னுடைய பயணத்தைத் தொடருவேன், மக்களோடு இருந்து கொண்டே அந்தப் பயணத்தைத் தொடருவேன், அதிகாரத்திலே, அரசாங்கத்திலே இருந்து கொண்டல்ல அதை நான் செய்யப்போவது என்று குறிப்பிட்டிருக் கிறேன். எனக்குள்ள ஆசை, ஜெயகாந்தனுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது - எனக்குள்ள ஆசை வைரமுத்துக்குப் பக்கத்திலே உடகார்ந்திருக்க வேண்டும் என்பது - எனக்குள்ள ஆசை அறவாணனுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது - எனக்குள்ள ஆசை, நம்முடைய பெரிய மீசைக்காரர், வா.மு. சேதுராமனுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது - அந்த ஆசை தான் எனக்கு உள்ளதே தவிர, அரசு கட்டிலிலே வீற்றிருக்க வேண்டும் என்ற ஆசை அல்ல. அதன் காரணமாகத் தான் நீங்கள் என்னை அழைத்தீர்கள் என்றால், தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். நான் எனக்கிருக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த வாய்ப்பின் வாயிலாகக் கிடைத்த தொகையை மற்றவர்களுக்கு வழங்க - புத்தகத் தொண்டினை ஆற்ற - எழுத்தார்வத்தை வளர்க்க - அதைப் பயன்படுத்துகின்ற நிலையிலே நான் இன்றைக்கு இந்த விழாவிலே கூட கலந்து கொண்டு இந்த விருதுகளையெல்லாம் வழங்குகின்ற அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறேனே அல்லாமல் வேறல்ல.

நம்முடைய நல்லி குப்புசாமி அவர்கள் குறிப்பிட்டார்கள். என்னுடைய வாழ்க்கையிலே நடந்த பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து இங்கே வழங்கினார்கள். என்னுடைய நகைச்சுவை உணர்வைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள். அவர் நகைச்சுவையையும் அறிந்தவர் - நகையின் சுவையையும் அறிந்தவர். அதனால் அவர் அதைப்பற்றி இங்கே குறிப்பிட்டார்கள்.

ஒன்றை நான் இவ்வளவு பேருக்கு மத்தியிலே குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன். புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு இங்கே பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான் கடந்த ஆண்டு என்று கருதுகிறேன். இங்கே விருதுகள் வழங்கப்பட்ட போது ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்பட்ட விருது பற்றி ஒரு சில சொல்ல வேண்டியிருக்கின்றது.

வழங்கியது தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அதைப் பெற்றவர்கள் எப்படி தவறு செய்திருக்கிறார்கள் என்பதை நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் என்னைக் காணும் போதெல்லாம் வழக்கமாக ஒரு நூலைத் தருவதுண்டு. சில நாட்களுக்கு முன்பு அப்படி அவர்கள் தந்த நூல் சென்னையின் வரலாற்றை விளக்கும் நூல். அது ஒரு பெரிய தடிப் புத்தகம். 600 பக்கங்களைக் கொண்டது. சென்ற ஆண்டு அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத் தாளருக்கு இங்கே விருது வழங்கப்பட்டிருக்கின்றது. நான் மரியாதையோடு, அன்போடு, உணர்வோடு, தமிழ் ஆர்வத்தோடு இந்தப் புத்தகக் கண்காட்சி தொடர்ந்து இத்தகைய அருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளோடு நான் அளித்த அந்த ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கருணாநிதி அறக்கட்டளை யின் மூலம் வழங்கப்பட்ட விருதுகளில் ஒன்றை அந்த எழுத்தாளர் பெற்றிருக்கிறார்.

அப்படி விருது பெற்றவர் எழுதிய புத்தகம் ஆயிற்றே என்று அந்த "சென்னை" என்ற பெயர் கொண்ட புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். எப்போதுமே என்னிடம் ஒரு புதிய புத்தகம் கிடைத்தால் இரவோடு இரவாக - ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் படித்து முடித்து விடுவது என் வழக்கம். அப்படி இரவு முழுவதும் படித்து நான் அந்த புத்தகத்தை நிறைவு செய்தேன். அந்தப் புத்தகத்தில் "சென்னை - காலவரிசை" என்று ஒன்றைத் தொகுத்துள்ளார். அதில் எந்தெந்த ஆண்டு போர்த்துகீசியர் ஆண்டார்கள், ஆங்கிலேயர்கள் எப்போது ஆட்சியைப் பிடித்தார்கள் என்ற வரலாறெல்லாம், சரித்திரக் குறிப்புகள் எல்லாம் உள்ளன. அதில் 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு 1967ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியில் அமர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் யார் தலைமையிலே ஆட்சி அமைந்தது என்று குறிப்பிடவில்லை. யார் முதலமைச்சராக இருந்தார் என்று குறிப்பிடவில்லை. தேர்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு தேர்வு செய்த எழுத்தாளர் ஒருவர் எழுதிய புத்தகம் அது. அதிலே தான் 1969இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு - நான் முதல் அமைச்சராக ஆனது பற்றியோ - எனக்கு முன்பு முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களுடைய செயல்முறைத் திட்டங்களைப் பற்றியோ எதுவுமே இல்லை. 1971இல் பொதுத்தேர்தல் நடைபெற்று மீண்டும் தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது பற்றி சென்னை என்ற அந்த நூலில் ஒரு வரி கூட இல்லை. 600 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. இடம் இல்லை என்று சொல்ல முடியாது.

1977ஆம் ஆண்டு பற்றிக் குறிப்பிட்டு என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக ஆனார்

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நான் மகிழ்கிறேன். அதன் பிறகு 1991ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டு ஒரு மாதம் மட்டும் முதல்வராக இருந்த திருமதி ஜானகி அம்மையார் அவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 1996ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டு நான்காவது முறையாக முதல் அமைச்சராக நான் ஆனேனே, அது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று தேடித் தேடிப்பார்த்தேன். எந்தக் குறிப்பும் கிடையாது. அதிலே வந்தால் தான் எனக்குப் பெருமை என்பதற்காக அல்ல. அதிலே கூட வரவில்லையே என்ற வருத்தம் தான். மாறாக அந்த ஆண்டில் கோயம்பேடு காய்கறி அங்காடி திறக்கப்பட்டதை சென்னையின் புகழ் மிக்க செய்திகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் திறந்தவன் யார் என்றாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. அதே ஆண்டில் தான் - ஏற்கனவே அண்ணா அவர்களால் சென்னை ராஜ்யத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டிருந்த போதிலும், சென்னைக்கு மெட்ராஸ் என்ற பெயர் மாற்றப்படாமல் இருப்பதை எண்ணிப் பார்த்து - "சென்னை" என்று நான் ஆணை பிறப்பித்தேன். அந்தச் செய்தியை வெளியிட்டுள்ள அந்த நூல் அதைச் செய்தது யார் என்று குறிப்பிட்டிருக்கிறதா என்றால் இல்லை. அதன் பிறகு 1998ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்டது தமிழ் நாட்டிலே தான், சென்னையிலே தான். ஆனால் சென்னை வரலாறு எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தில் அந்தப் பல்கலைக் கழகத்தை யார் தொடங்கியது என்ற செய்தி குறிப்பிடப்படவில்லை.

இது இங்கே குறிப்பிடப்பட்ட புத்தக ஆசிரியருக்கு நான் விடுக்கின்ற அன்பான கேள்வி. அப்படி என்ன இந்தக் கருணாநிதி தவறு செய்து விட்டான்? அப்படி என்ன தாழ்ந்து போய் விட்டான் - தமிழனாகப் பிறந்தான் என்ற ஒன்றைத் தவிர வேறென்ன தாழ்வு அவனுக்கு? அவன் தமிழ்ச் சமுதாயத்திலே குறிப்பிடப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்தான் என்பதைத் தவிர அவனுக்கு வேறென்ன தாழ்வு? எனவே ஒரு புத்தகத்தை வெளியிடும்போது - அந்தப் புத்தகத்தை ஆராய்ந்து பார்த்து - மூன்று பேர், நான்கு பேர் குழுவாக அமர்ந்து - இன்றைக்கு செய்ததைப் போல விருதுகளை வழங்குகின்ற நேரத்தில் - அந்த விருதுக்கு உரிய புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறாரா என்பதை விருது வழங்குகின்ற நான் மாத்திரமல்ல, அதை ஆய்வு செய்து, தேர்வு செய்த குழுவினர் மாத்திரமல்ல - எல்லாவற்றையும் விட முக்கியமாக அதை எழுதிய ஆசிரியரே எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த விருதைப் பெற தகுதியானவர் தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இது நான் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு விழாவில் உங்கள் மனதை சோகத்தில் ஆழ்த்துவதற்காகச் சொல்கின்ற செய்தி அல்ல. அடுத்த ஆண்டு முதல் இது போன்ற நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு வழங்குகின்ற விருதுகளை வழங்குகின்ற நேரத்தில் இன்னும் உன்னிப்பாக, இன்னும் கவனமாக நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இதைச் சொல்லுகிறேனே அல்லாமல் வேறல்ல. எனவே அந்த முறையிலே இந்தப் புத்தக கண்காட்சி இன்றைக்கு 33வது ஆண்டாக நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்ற நண்பர்களுக்கும், இடையிலே இடைவெளி ஏற்பட்டாலும், அந்த இடைவெளியை நிரப்பி விட்டு அங்கே பொறுப்பேற்க வருகின்ற இளம் தோழர்களுக்கும், அருமை நண்பர்களுக்கும், புரவலர்களுக்கும், புலவர்களுக்கும், பெருந்தகையாளர்களுக்கும், சான்றோர்களுக்கும், எல்லா பெரு மக்களுக்கும் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த விழாவிலே கலந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இந்த வாய்ப்பிலே சிலவற்றைச் சொன்னேன் என்றால், அது தமிழகத்தின் நன்மைக்காக சொல்லப்பட்டது என்று நீங்கள் கருதிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு - தவறு இழைத்திருப்பேன் எனில் பொறுத்தருள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு இந்த அளவோடு விடைபெற்றுக் கொள்கிறேன்.
( நன்றி: முரசொலி )

33 Comments:

Anonymous said...

ivar eppovume ippadi dhan boss; idhukku poi feel pannitu irukkalama?

பாரதபுத்ரன் said...

இவர்தான் ஜாதியை ஒழிக்க சமத்துவபுரம் திறந்ததாக மார்தட்டிக் கொள்பவர்..

தமிழகத்தின் துரதிருஷ்டங்களில் ஒன்று இவரைப் போன்றவர்களை முத்தமிழ் வித்தகர், வாழும் வள்ளுவர் என உசுப்பேத்திவிட்டு, அவரை நம்பவும் வைத்து, அதன்காரனமாய், இப்படி உளரவைக்கின்றனர்.

சோ வின் இந்தக் கட்டுரை, நாளைய தமிழக வரலாற்றில் கருனாநிதியின் ”தான்” என்ற அகம்பாவத்தின் உச்சத்தில் செய்த இந்த கீழ்த்தரமான வேலைக்கு ஒரு அத்தாட்சி..

இல்லையெனில்,அடுத்த தலைமுறையினரை கருனாநிதியை சமத்துவபுரம் கண்ட காவலன் என சொல்ல வைப்பார்கள் .. இன்று ஈ.வெ.ராமசாமி நாயக்கரை, பெரியார் என்று சொல்ல வைத்ததுபோல..

நல்லவேளை, தமிழ் ஹிந்துவில் சுப்புவின் போகபோகத் தெரியும் வந்ததோ, வெங்கடேசனின் பெரியாரின் மறுபக்கம் வந்ததோ, கொஞ்சம் இவர்களின் உண்மையான முகம் பற்றி தெரிந்துகொண்டேன்..இல்லையெனில் நானும் இவர்களை சமூக நீதி காத்த உத்தமர்கள் எனவே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்..

விவேகானந்தன் said...

என்ன சொல்றது. ஒன்னு இவரு அல்லது அந்த அம்மா, வேற மாற்றம் வேண்டும் தான் ஆனா அதற்க்கு ஆள் தான் இல்லை. அட கருணாநிதிய பத்தி அப்பவே நம்ம கவிஞர் கண்ணதாசன் எழுதி இருக்கார் "நான் பார்த்த அரசியல்" புத்தகத்தில். முடிந்தால் படித்து பாருங்கள்.

விவேகானந்தன் said...

என்ன சொல்றது. ஒன்னு இவரு அல்லது அந்த அம்மா, வேற மாற்றம் வேண்டும் தான் ஆனா அதற்க்கு ஆள் தான் இல்லை. அட கருணாநிதிய பத்தி அப்பவே நம்ம கவிஞர் கண்ணதாசன் எழுதி இருக்கார் "நான் பார்த்த அரசியல்" புத்தகத்தில். முடிந்தால் படித்து பாருங்கள்.

R.Gopi said...

ஹலோ

கையில காசு வாங்குனோமா, “தல”ய நெம்ப நல்லவருன்னு புகழ்ச்சியா சொன்னோமான்னு இல்லாம, அவரை மறுபடியும் “பச்சை/மஞ்சள்/சிவப்பு/ நீல கவிதை” எழுத வச்சுடாதீங்க....

SUBBU said...

ம்ம்ம் என்னத்த சொல்ல!!!

டன்மானடமிழன் said...

தமிழ் மொழியின்
தமிழ் இனத்தின்
ஒரே ஒரு சிங்கம் ;-)

வாழ்க! வாழ்க! வாழ்க!

maddy73 said...

Is it right to scan & post (in idlivadai) a page of a commercially published book ?

Doesn't this violate copyright?

thiru said...

When we are giving importance to people more than their deserving, they gain undue power and strength and future generation and naive people will be misguided.

This is how Tamil Nadu has been misguided by Politicians....

What will be the "response" from Jeyakanthan and others in favor of Kalaignar??

sathappan said...

What else you can expect from So.. ma..Cho ? He knew how to twist a issue. If same said by Advani or jaya ????-
We can guess what so..Ma.. Cho will write about that.
we knew color of so...ma..cho.
Who mind about so..ma. cho in TN or India.

Sathappan

Anonymous said...

If Chos is right I appreciate him.I am wondering why the publisher has not given the same response.In fact such a response should have come from the publisher and translator.If the book omits names of all former C.Ms except two MK has no reason to complain.But I think one has to read the book before saying something final about this.Anyway as far as Kizhaku, all is well as long as their publicatuons sell well.

Anonymous said...

MK should stop talking in public. At this age, these are baby talk.

சீனு said...

விடுங்க பாஸ். இவங்க எப்பவுமே இப்படித்தான்...அடிச்சு விட்டுகிட்டே இருப்பாங்க...

சோம்பு said...

SOORIYAN SUTTUM ERIYAVILLAI KIZHAKKU...

sathappan said...

I am sorry I have written without reading the article. What Mr. Cho has written is right. My apologies.

kaliraj said...

அவர் அப்படித்தான்

kaliraj said...

தமிழ் மொழியின்
தமிழ் இனத்தின்
ஒரே ஓர் (அ)சிங்கம் ;-)

வாழ்க! வாழ்க! வாழ்க!

நாரத முனி said...

"கருணாநிதி கருணாநிதி கருணாநிதி"

சொல்லிட்டேன் சார்.. இல்லேன்னா இட்லிவடைய தட பண்ணிடபோறார்!!

Anonymous said...

அந்த ஒரு கோடியும் மக்கள்கிட்டேந்து அடிச்ச பணம் தானே??

Anonymous said...

Mr.. சூ சாரி சாத்தப்பன்,

what do u know about Mr. Cho? He has made condemns even against advani, whenever its required..

Anonymous said...

Mu. Ka's words are insulting. Mr.Muthaiya should return whatever he got through this "award"

IdlyVadai said...

30ஆம் தேதி கலைஞர் என்ன பேசினார் என்பதை அப்டேட் செய்துள்ளேன்.

மானஸ்தன் said...

//எனவே அந்த முறையிலே இந்தப் புத்தக கண்காட்சி இன்றைக்கு 33வது ஆண்டாக நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்ற நண்பர்களுக்கும், இடையிலே இடைவெளி ஏற்பட்டாலும், அந்த இடைவெளியை நிரப்பி விட்டு அங்கே பொறுப்பேற்க வருகின்ற இளம் தோழர்களுக்கும், அருமை நண்பர்களுக்கும், புரவலர்களுக்கும், புலவர்களுக்கும், பெருந்தகையாளர்களுக்கும், சான்றோர்களுக்கும், எல்லா பெரு மக்களுக்கும் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த விழாவிலே கலந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இந்த வாய்ப்பிலே சிலவற்றைச் சொன்னேன் என்றால், அது தமிழகத்தின் நன்மைக்காக சொல்லப்பட்டது என்று நீங்கள் கருதிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு - தவறு இழைத்திருப்பேன் எனில் பொறுத்தருள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு இந்த அளவோடு விடைபெற்றுக் கொள்கிறேன்.
////

ஒரு Ph.D. thesis அளவுக்கு இந்த புஸ்தகம் எழுதினவரைத் திட்டிட்டு, "சின்னதா ஒரே வரில" இந்த அளவுக்கு அருமையா முடிச்சுருக்கற தானைத் தலைவருக்கு ஈடு இணை இல்லை இந்தத் திருநாட்டில். :>

Anonymous said...

I didn't see anything wrong in the kaliyar comment...He is expressing his point of view..

வலைஞன் said...

இறைவா!இந்த கோழிச்சண்டையை இன்னும் எத்தனை வருஷம் சகிப்பது!
சோவிற்கும் வேறு வேலை இல்லை.
கலைஞருக்கும் வேறு வேலை இல்லை
பின்னவர் ஒரு செய்யுள் சொன்னால் முன்னவர் அதற்கு பொழிப்புரை.
இது கடந்த 40௦ ஆண்டுகளாக தொடர்கிறது.இடையில் பின்னவர் Brunei sultan அளவிற்கு பணம் சேர்த்தாகி விட்டது.
விடுங்கய்யா 2011இல ஒரு ஒட்டிற்கு எவ்வளவு கொடுப்பார்கள் என ஒவ்வொரு தமிழனும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கான் நீங்க என்னடான்னா??

Baski said...

கேவலமான பேச்சை, அழகாக தொகுத்து பேசி இருக்கிறார்.

எடுத்தர்கெல்லாம் கடிதம் எழுதும் மு.க. இந்த கேள்வியை முத்தையவிடமோ/கண்ணதாசனிடமோ கடிதம் மூலம் கேட்டிருக்கலாம்.
இருவரையும் அசிங்க படுத்துவதாக நினைத்து தானே அசிங்கப்பட்டு கொண்டார் (வழக்கம் போல்).

புகழ் மாலை மட்டும் கேட்டு/படித்த அறிஞருக்கு, கருத்தும்/வரலாறும் அவர் புகழ் பாடாத போது வரும் கோவம் நியாமானதே. ;-)


சிறந்த திரைக்கதைக்கு/வசனத்திற்கு தமிழக விருது எப்படி நியாமகாக கொடுக்கப்பட்டதோ, அதே போல் இனி விருது கொடுக்கும் படி கண்ணதாசனிடம் கேட்டுகொள்ளபடுகிறது. :-)

Anonymous said...

I admire at Cho, for bravely standing upto the TN royal family which owns almost the entire state.

Even JJ and other opposition don't have this much guts and valour.

cho visiri said...

maddy73 asked...
//Is it right to scan & post (in idlivadai) a page of a commercially published book ?

Doesn't this violate copyright?//

There are three things.
First,There are many followers of idlyvadai who do not read Thuklag. They get enlightened and from this view point alone the Question loses its weight.
Secondly, the iv does not derive any value/intrinsic value from this.

Last, but not the least, Thuklag
one does not find any "warning"(in the copies of Thuklag) against such reproduction by any form - electronic print or any other media. (I think many weekly journals do print such "warning".)

As an aside, this small news.There is a school in West Mambalam, Chennal called Ahobhila Mutt Oriental School. The Ahobhilamutt filed a suit against the management on the ground that the School Management can not use the name as the Mutt is not running the school. That suit was dismissed. (Ofcourse this is irrelevant to the subject herein).
As one more Aside, this comment has nothing what soever to do with my username.

valaignan said...

//I admire at Cho, for bravely standing upto the TN royal family which owns almost the entire state.
Even JJ and other opposition don't have this much guts and valour.//

As of now Mr.Gnani in O pakkakngal is bolder than Cho as far as opposing the emperor goes!
But the Emperor is a PANANGATTU NARI..
to be bothered for all these pin pricks.
He has fooled all the people for sometime and fooling some people for all the time and that is enough for him.He has achieved whatever he has wanted and set as his target.
in his life starting from an early age.HE IS A WINNER. We may call him a SINNER but he is least bothered.
The problem with us, Indians, is we bring philosophy whenever we fail practically and console ourselves.My views may irritate many but if they think calmly about what are all the emperor has done in a DEMOCRACY,you would not but admire him.He is a STRATEGIST PAR EXCELLENCE
I also consider that Mr.Traffic Ramaswamy to be more useful than Mr.Cho Ramaswamy
As the writer Ms Sivasankari said once,Mr.Cho is just a nerunji mull;can only prick forever!
Mr.Cho can not rule this state(TN) even for a minute even in his present state of goodness and honesty and straightforwardness,whereas if the emperor sheds even 50% of his bad qualities he would turn TN to a model state in India.Thats the power of skill and talent
Sorry if my views offend anybody
God save the nation

Mukhilvannan said...

I also consider that Mr.Traffic Ramaswamy to be more useful than Mr.Cho Ramaswamy
As the writer Ms Sivasankari said once,Mr.Cho is just a nerunji mull;can only prick forever!

Loko binna ruchi!

கலைஞர் விசிறி! said...

இந்த செய்தியை படித்தவுடனே ஏதாவது கலைஞரை ஏதாவது திட்டனும்னு கோவமா வந்தது - ஆனா சாக்கடைல போய் ஏன் கல்ல வீசியெரியனும்னு தான் சும்மா விட்டுட்டேன்! மானஸ்தன் மாதிரி - “தானைத் தலைவர் வாழ்க!!”

Anonymous said...

Muthiah Sir ! Where are u ?
what is your response?
Dont u feel u r morally obliged to return the money with interest ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//விருது வழங்குகின்ற நான் மாத்திரமல்ல, அதை ஆய்வு செய்து, தேர்வு செய்த குழுவினர் மாத்திரமல்ல - எல்லாவற்றையும் விட முக்கியமாக அதை எழுதிய ஆசிரியரே எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த விருதைப் பெற தகுதியானவர் தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா//

இந்த உபதேசம் "நமக்கு நாமே" விருதுகளுக்கும் பொருந்தும், தலைவரே!