பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 05, 2010

வலையுலகப் படைப்பாளிகள்! - தினமணி கட்டுரை

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.

இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.

உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.

தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.

நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.

நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.

வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.

÷இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

( நன்றி: தினமணி )

எல்லோருக்கும் இட்லிவடையின் வாழ்த்துகள் !

17 Comments:

பலா பட்டறை said...

எல்லோருக்கும் இட்லிவடையின் வாழ்த்துகள் !//

புரியுது .....!!:)

SUBBU said...

எல்லோருக்கும் வாழ்த்துகள் !!

Anonymous said...

பலே தினமணிக்கும் இ.வ.க்கும்

- ஈஸ்வர்

maddy73 said...
This comment has been removed by the author.
jaisankar jaganathan said...

//ஹீ, ஹீ! ஒருநாள் என் வலைப்பூ ( BLOG) பற்றியும் யாரவது எழுவார்களா?
//
...........???????????????????????

maddy73 said...

ஹீ ஹீ! ஒருநாள் என் வலைப்பூ பற்றியும்(Blog) யாராவது எழுதுவார்களா?

பொடிப்பையன் said...

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வலையுலக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சங்கம் அமைத்தால் என்ன? (வலையுலக தமிழ் சங்கம்). இது பற்றி விவாதிக்க இ.வ ஏற்பாடு செய்தால் என்ன?..
நன்றி "-பொடிப்பையன்-"

வால்பையன் said...

முழுமையான பகிர்விற்கு நன்றி!

maddy73 said...

// jaisankar jaganathan said... ஹீ, ஹீ! ஒருநாள் என் வலைப்பூ ( BLOG) பற்றியும யாராவது எழுதுவார்களா?//

http://madhavan73.blogspot.com

Anonymous said...

it would have been more useful, if the links to their blogs were given in the article.

Prabakaran said...

சிறப்பாக செயல்படுகிறீர்கள் வாழ்த்துக்கள்

Asir said...

Ithula IDLI VADI Peyar illai..

so down down

Anonymous said...

GO AHEAD WITH NEW PACE

NO said...

அன்பான நண்பர் திரு இட்லி வடை,

சுமார் ஒரு வருடமாக தமிழ் வலைத்தளங்களை கவனிப்பவன் என்ற முறையிலும், பல சமயங்களில் காட்டமாக பின்நூட்டம் இட்டவன் என்ற முறையிலும் இதை எழுதுகிறேன்.

Peer review என்றொரு வழிமுறை இருக்கிறது! அறிவியலுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கிடையாது! வரலாறு, சமூக ஆய்வு போன்ற துறைகளிலும் எந்த ஒரு கருத்து நிலை நிறுத்தலுக்கும் இந்த வழிமுறை தேவை. இல்லாவிடில், சொல்லப்படுவது வெறும் யூகங்கள் அல்லது திரிபுகள், அல்லது நேரடி பொய்கள் என்று ஆகிவிடும்.

இந்த செயல்முறையின் வழிவராது பலவகை திரிபுகளும், குப்பைகளும் காலம்காலமாக எழுதப்பட்டவைதான். எனினும், அங்கீகாரம் இல்லாததால், இதை பிரசுரிப்போரும் அதிகம் இல்லை, படிப்போரும் மிக சொற்பமே. விளும்புகளில் மட்டுமே இவைகளை கொட்டும் போலிகள் இருந்து வந்திருக்கின்றனர்!

அனால் வலைதள எழுத்துகள் இந்த கட்டுப்பாட்டை தகர்க்க நினைக்கிறது!

Bloggers and their readers are a new breed that circumvent this process of systematic knowledge collection, aggregation, analysis, draft, experimentation, conclusion, peer review and final publication. கண்டபடி பலவகையானவைகள் எழுதப்படுகின்றன.

இது எங்கே போகின்றது, இதற்க்கு விளைவுகள் இருக்குமா, அல்லது ஒரு passing phenomenon தானா, குறிப்பாக தமிழ் வலைதளங்களில் நடப்பது என்ன போன்றவையைப்பற்றி மிக விரிவாக தகவல்களை சேர்த்துகொண்டிருக்கிறேன். நேரம் கிடைத்தால், will try to stack it in a systematic way, analyse and review it and put it across for readers.

Briefly சொல்லவருவது, வலை உலகத்தினால் பல வகை கருத்து பரவல், அதுவும், மிக துரிதமாக இருக்கலாம், ஆனால் அது நல்லதா என்பது எனக்கு
சரியாக புரியவில்லை.My observation says that this audience is exteremely limited and morover most of them have an agenda to grind which in terms make them to seek out only what they want to see. This may change, but where it leads is something that should come after carefull observation and analysis. Hope I could come out with atleast a draft id at all I have the time and energy.

நன்றி

பின்குறிப்பு - படைப்பாளிகள் என்று சொல்வதே தவறு என்று கருதுகிறேன். இங்கே எழுதப்படுபவை 99.9% படைப்புகள் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். வேறு தமிழ் சொல் கொண்டு வரவேண்டும்.

Amudhinee said...

Sir,

Could you please give the link to all the web sites mentioned in this article.

ரிஷபன் said...

//Bloggers and their readers are a new breed that circumvent this process of systematic knowledge collection, aggregation, analysis, draft, experimentation, conclusion, peer review and final publication. கண்டபடி பலவகையானவைகள் எழுதப்படுகின்றன.

படைப்பாளிகள் என்று சொல்வதே தவறு என்று கருதுகிறேன். இங்கே எழுதப்படுபவை 99.9% படைப்புகள் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். //

நானும் ரௌடி தான் ( வலைத்தளம் இருக்கே ) என்றாலும் கூட வலைபூக்களை பற்றிய இந்தக் கருத்துகளுடன் ஓரளவுக்கு ஒத்துப் போகிறேன்.

இருந்தாலும் வலை உலகம் மூலம் அவதூறுக் கருத்துக்கள் அவ்வளவு வேகமாக பரவும் அபாயம் இல்லை என்றே நினைக்கிறேன்.படித்த, நல்ல வேலை உள்ள வர்க்கத்தினர் தான் வலைத்தளங்களின் வாசகர்கள் அவர்களுக்கு குப்பைகளை ஒதுக்குவது பெரிய விஷயமாக இருக்காது.

Erode Nagaraj... said...

எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதும் விவாதிப்பதும் படைப்பாகாது.