பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 03, 2010

சென்னை புத்தகக் கண்காட்சியின் ஹீரோ!


முதல்ல படத்தை பாருங்க. இவர் என்ன யோசிக்கிறார் ?

சென்னையின் புத்தகக் கண்காட்சி, அல்லது திருவிழா. அது துவங்கிய தினம் முதலே, எப்படியாவது இன்று சென்று விட வேண்டும் என்று நாட்களை எண்ணி எண்ணி, நாட்களைக் கடத்தி ஒருவழியாக இன்று சென்றே விட்டேன். விடுமுறை தின்ங்களில் காலை 11 மணிக்கே துவங்கி விடுவதால், அதற்கு அரை மணிநேரம் முன்பே சென்று விட்டால் கூட்ட நெரிசலிலிருந்தும், அக்னி பகவானின் அனுக்ரகத்திலிருந்தும் தப்பி விடலாமென்று காலை பத்தரை மணிக்கெல்லாமே ஆஜராகி விட்டேன். ஆயினும் பத்தரைக்கு முன்னரிலிருந்தே கூட்டம் தொடங்கி விட்ட்து போலும். ஆனால் வெயில் அதிக அளவு இல்லாத படியால் அலுப்பு தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம், வெளியே காணப்பட்ட இருசக்கர வாகன்ங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வைகுண்ட ஏகாதசிக் கூட்டம் போலிருந்த்து. ஆனால் உள்ளே ஸ்டால்களில் அவ்வளவு கூட்ட்த்தைக் காண இயலவில்லை. ஒவ்வொரு ஸ்டாலிலும், ஊழியர்கள் தவிர ஒரு சிலரே தென்பட்டனர். ஆனால் வெளியே முகப்பிலேயே தென்பட்ட ப்ரூட் ஸாலட் கடைகளில் நல்ல கூட்டம். வரும்போதே என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று கைகளில் ப்ரூட் ஸாலட், காபி கோப்பை என துவங்கி விட்டனர். முகப்பில் ப்ரூட் ஸாலட் ஸ்டால்கள் தவிர, லயன்ஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த ரத்த தான முகாமும் தென்பட்டது. அதிலும் ஓரளவு ஆர்வலர்கள் தென்பட்டனர்.முதல்நாளிரவே, என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டுமென்பதை ஓரளவு பட்டியலிட்டு விட்டதால், கடைசி நேர குழப்பமும், கால விரயமும் தவிர்க்கப்பட்டது. நுழைவு சீட்டு 5 ரூபாய் கொடுத்து வாங்கினால் கூடவே ஒரு பரிசுக் கூப்பனும் வருகிறது. பெயர், முகவரி எழுதி பெட்டியில் போட்டால், குலுக்கலில் பரிசு விழுந்தால் முறையே ரூபாய் 1000, 500 என பரிசு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணமாய்க் கொடுப்பதை விட, அந்த மதிப்பிற்கு புத்தகமாகவே கொடுத்து விட்டால், பரிசுக் குலுக்கல், அர்த்தமுள்ள விஷயமாகிவிடும். கண்காட்சி அமைப்பாளர்களின் அலுவலகத்தில், ஸ்டால்கள் பற்றிய விவரங்களுடன் கூடிய சிறு கேட்லாக் தருகிறார்கள். ஸ்டால்களை இனம்காண எளிதாக இருக்கிறது.முதலில் நுழைந்தவுடன், நான் நேரே சென்றது கிழக்கு பதிப்பகம்(ஸ்டால் எண் P1). திரு. ரகோத்தமன் அவர்கள் எழுதிய ராஜீவ் கொலை வழக்கு மற்றும் தேவன் எழுதிய ஸ்ரீமான் சுதர்ஸனம் இரண்டும் வாங்க எண்ணி. நுழைந்தவுடன் பில்லிங் செக்‌ஷனில் அமர்ந்திருந்த நபரை இட்லிவடையில் வெளியான புகைப்படத்தில் பார்த்த நினைவாக இருந்தபடியால், நீங்கள்தானே பத்ரி எனக் கேட்டு எனது அறியாமையைப் புலப்படுத்தினேன். அவர், இல்லை, நான் ஹரன் பிரசன்னா என்று அறிமுகப் படுத்திக் கொண்டவுடன், அவரின் அனுமதி பெற்று அவரைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு, நோட்டமிட்டதும், ராஜீவ் கொலை வழக்கு தென்பட்டது. அதோடு, யுவகிருஷ்ணா எழுதிய சைபர் க்ரைம் என்ற புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு ரசீது பெற்றவுடன், ஹரனிடம் கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டதற்கு நாசூக்காக சிறு புன்னகையுடன் மறுத்து, நீங்கள் யாரென்று கேட்டார். பெயரைச் சொன்னதும், இட்லிவடையில் எழுதுகிறீர்களே நீங்களா என்று புன்னகைத்தவுடன், பதிலளித்து விடை பெற்றேன்.


அடுத்து நேரே சென்றது, அல்லயன்ஸ் பதிப்பகத்தாரின் ஸ்டாலுக்கு (எண் P22). கேட்லாகில் A வரிசையில், அல்லயன்ஸ் தென்படாததால், கண்காட்சி அமைப்பாளர்களிடமே சென்று கேட்டதற்கு, The Alliance Publishers, என்று T வரிசையிலிருந்த்தைச் சுட்டிக்காட்டினர். பிறகு ஒருவழியாக அல்லயன்ஸிற்குச் சென்று எல்.கே.அத்வானியின் சுயசரிதையின் மொழிபெயர்ப்பான ”என் தேசம், என் வாழ்க்கையை” வாங்கிக் கொண்டு வரும் வழியில் ”உயிர்மையின்” ஸ்டால் தென்பட்டது. அதன் வாயிலில் மனுஷ்யபுத்ரன் செல்பேசியில் பேசியவாரிருந்த்தைக் காண முடிந்தது. எங்கே சாரு இருந்தால், ஸ்டாலைக் கடப்பதற்கே இரண்டாயிரம் ரூபாய் கேட்பாரோ என்ற பயத்தில் எட்டிப் பார்த்தேன். நல்லவேளை, அவரில்லாத்தால் தைரியமாக உள்ளே சென்று நோட்டமிட்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து நேராக லிப்கோ (எண் 177-178). மகாகவி காளிதாஸன் எழுதிய ரகுவம்சம், தமிழ் பதவுரையுடன் வெளியிட்டிருக்கிறார்கள். அதையும் வாங்கிக் கொண்டு, ஸமஸ்கிருதம் – தமிழ் அகராதி வெளியிட்டிருக்கிறார்களா என்று விசாரித்தேன், இல்லையாம்.


கிட்டத்தட்ட, கல்லூரியில் படிக்கும் போதிருந்தே ரகுவம்சத்தினை முழுவதும் படித்து விட வேண்டுமென்ற தணியாத ஆவல். சாண்டில்யனின் சில நாவல்களில் ரகுவம்சத்திலிருந்தும், காளிதாஸனின் மற்ற காவியங்களிலிருந்தும் ஸ்லோகங்களை எடுத்து மேற்கோள் காட்டியிருப்பார். அதனால் அதனைப் படிக்க வேண்டுமென்ற ஆவலில், கல்லூரி நூலகத்திலிருந்தே எடுத்து வந்திருக்கிறேன் சிலமுறை. ஆனால் இரண்டு ஸர்க்கங்களுக்கு மேல் படித்த்தில்லை இன்றுவரை. நம்மிடமே இருந்தால் பையப் பைய படித்து விடலாம் என்று ஒரு நம்பிக்கையுடன் வாங்கியிருக்கிறேன். சென்னைக்கு வந்த பிறகும் கூட சிலமுறை லெண்டிங் நூலகத்திலிருந்து எடுத்து வந்தேன். ஆனால் அதே இரண்டு ஸர்க்கம் வரைதான் வாசிக்க முடிந்தது. சாரு நிவேதிதா, மிலோராத் பாவிச் எழுதிய கஸார்களின் அகராதி தவிர்த்த மற்ற நாவல்களைப் படித்து முடிப்பதற்கு முன்பாக, ரகுவம்சத்தை எப்படியும் முடித்தே ஆக வேண்டும் என்று சபதமே எடுத்துக் கொண்டிருக்கிறேன் இம்முறை. பார்ப்போம், ரகுவம்சத்தின் கடைசி அரசனான அக்னிவர்ணனின் ஆசியோடு துவங்குகிறேன்.அங்கிருந்து துவங்கி ஸமஸ்கிருத அகராதியைத் தேடி, ISKON, சின்மயா மிஷன், ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம் என அனைத்திலும் கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியாக, லியோவில் (எண் P20) கேட்குமாறு அல்லயன்ஸார் வழிகாட்டினர். ஆனால் அங்கும் ஸமஸ்கிருத்த்திலிருந்து தமிழுக்கு கிடைக்கவில்லை. ஆங்கிலம் மட்டுமே இருந்த்து. சரி பத்திற்கு இரண்டு பழுதில்லை என அதை வாங்கிக் கொண்டு வரும் வழியில், ஒருவர் வேகமாக வந்து கையில் ஒரு காகித்த்தைத் திணித்து, என்னவென்று பார்க்கும் முன்பே ஒப்புவிக்க ஆரம்பித்தார். சிறுவர்களுக்கான மாதப் பத்திரிக்கையை அனிமேட்டட் சிடி வடிவில் வெளியிடுவோர் என்பது சிறிது ஆஸ்வாசத்திற்குப் பின்னர் தெரிந்தது. (E-Balak, Satvat Infosol Pvt Ltd) அதை வாங்குமெண்ணம் ஏதுமில்லை என்று தெரிவித்த பின்னரும், டெமோ பாருங்க சார், வாங்கணும்னு கட்டாயம் இல்லை என்று சொன்னதால் அவரோடு சென்றேன். உங்க வீட்டுல இருக்கற குழந்தைக்கு என்ன வயசு என்று கேட்டார். என் வீட்டில் என் தாய் தந்தையர் இருவர் தவிர இருப்பது நான் மட்டுமே! எனவே 26 என்று சொன்னதற்கு, ஒரு மாதிரியாகப் பார்த்தார். அப்படின்னா? நான் தான் சார் வீட்டுல சின்னவன், வேற குழந்தைங்க யாரும் இல்லையென்றதற்கு, அப்படின்னா டெமோ வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டார். அவ்வகையில் சற்றே ஏமாற்றம்தான்.ரகுவம்சம், அத்வானியின் சரிதை, ஸமஸ்கிருத அகராதி ஆகிய இம்மூன்றும் முறையே மூன்று தலையணைகள் போலிருந்ததால் கை அசந்து விட்டது. தவிர இன்னொரு கையில் ஹெல்மெட் மற்றும் கேமரா. இதற்கு மேல் முடியாதென்று, சரி துவங்கிய இடத்திற்கே மீண்டும் செல்லலாமென்று கிழக்கிற்கு சென்று மறுபடியும் நோட்டமிட்டதில், ஸ்ரீமத் பாகவதத்தின் ஆடியோ புக் ஒன்று கிடைத்தது. அதையும் பெற்றுக் கொண்டவுடன், ஹரன் பிரசன்னா, நியாபகமாக பெரிய பையொன்றைக் கொடுத்து அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கு வசதி செய்து கொடுத்தார். அவருக்கும் ஒரு நன்றியைத் தெரிவித்து விட்டுப் புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தவுடன், ஸ்ரீமான் சுதர்சனத்தை மறந்து விட்டது மிகச் சரியாக நினைவிற்கு வந்தது.மொத்த்ததில், கண்காட்சியில் செலவிட்ட இரண்டரை மணிநேரம் மிகவும் உபயோகமான பொழுது. கண்காட்சி முடிவதற்குள் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு முறையாவது சென்று விட வேண்டுமென்று உத்தேசித்திருக்கிறேன். பார்க்கும் புத்தகங்களையெல்லாம் வாங்கவேண்டுமென்று ஆர்வம் தூண்டினாலும், குறையும் பர்ஸின் கனம், மனத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஆயினும் மிக்க உபயோகமான செலவு. அநேக புத்தகங்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைப்பதால் கடைகளில் வாங்குவதை விட இங்கு வாங்குவது லாபம்தான்.கணிப்பொறி மற்று இதர மின் ஊடகங்கள் வந்து விட்டதால், மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இங்கு வந்த கூட்டத்தைப் பார்த்தால் தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஜனக்கடல். விடுமுறை தினமாதலால் அநேகர் குடும்ப சகிதமாக குழந்தைகளையும் அழைந்து வந்திருந்தது நல்ல விஷயம். இளவயதிலிருந்தே அவர்களுக்கு படிக்கும் ஆர்வம் பெருக வாய்ப்பாகும். இன்னும் கண்காட்சிக்குச் செல்லாத சென்னைவாழ் மக்கள் உடனேயே செல்லவும். அட்லீஸ்ட் இந்த ஒரு மாதம் குடும்பத்துடன் சினிமா பார்ப்பதை தியாகம் செய்தால், காலத்திற்கும் அழியாத அறிவைப் பெறலாம்.

- யதிராஜ்

எல்லோரும் புத்தகக் கண்காட்சியில் இவரையே படம் எடுக்கிறார்கள், அதனால் இவர் தான் ஹீரோ !

படங்கள்

பார்கிங். ஹெல்மெட் போட்டவர் தான் இட்லிவடை


ஆங்கில கிழக்கு பதிப்பகம்


நல்ல கூட்டம். ஆனால் கடையில் ஒருவர் தான் ஏன் ?

நுழைவாயில்
நுழைவாயில் - குமுதம் குத்தகை

புத்தகங்கள்

புத்தகங்கள்


புத்தகங்கள்ஸ்டால்கள்ரத்த தானம்

பழைய பாராட்டு

மீண்டும் புத்தகங்கள்.இங்கேயும் ஒருவர் தான் இருக்கிறார்.

முதல் படத்தில் இருக்கும் நபர் என்ன யோசிக்கிறார். சரியாக சொன்னால் நிழல்கள் புத்தகம் பரிசு !

43 Comments:

ஜெயக்குமார் said...

நல்ல பதிவு.

‘” என்னைய மட்டும் தனியா விட்டுட்டுப் போயிருக்காங்களே எதுக்கு? கடையில ஆள் நிறைய இருக்குற மாதிரி தெரியுறதுக்கா”

maddy73 said...
This comment has been removed by the author.
ஜெயக்குமார் said...

இட்லிவடை கொஞ்சம், கொஞ்சமா ஓட்டலைவிட்டு வெளியே வர்ர மாதிரி தெரியுது..

எப்ப ஹெல்மெட்ட எடுக்கப்போறீங்க?

மானஸ்தன் said...

முதல் பத்தி
//ஆனால் உள்ளே ஸ்டால்களில் அவ்வளவு கூட்ட்த்தைக் காண இயலவில்லை. ஒவ்வொரு ஸ்டாலிலும், ஊழியர்கள் தவிர ஒரு சிலரே தென்பட்டனர்.//

கடைசிப் பத்தி
//கணிப்பொறி மற்று இதர மின் ஊடகங்கள் வந்து விட்டதால், மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இங்கு வந்த கூட்டத்தைப் பார்த்தால் தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஜனக்கடல். விடுமுறை தினமாதலால் அநேகர் குடும்ப சகிதமாக குழந்தைகளையும் அழைந்து வந்திருந்தது நல்ல விஷயம். //

இந்த ஒரு முரண் தவிர, நன்றாக எழுதி உள்ளீர்கள், திரு யதிராஜ். நன்றி.

kggouthaman said...

முதல் பாராவைப் படித்தவுடன் - இந்தக் கட்டுரையில் மொத்தம் எவ்வளவு 'ஆனால்' கள் உள்ளன என்று ஏதாவது கேள்வி வருமோ என்று யோசித்தேன். படத்தில் இருப்பவர் என்ன யோசிக்கிறார் என்று நான் எவ்வளவு யோசித்தாலும் - அது சரியாக இருக்காது என்று நான் யோசித்தால் அது சரியாக யோசித்ததாக இருக்காதோ என்று யோசித்துக்கொண்டிருப்பதைப் பற்றி அவர் யோசித்திருக்கமாட்டார் என்றே நான் யோசிக்கிறேன்!

மர தமிழன் said...

பிரசன்னா நிச்சயம் ஹீரோதான்.. அந்த ஆஹிரிதிக்கு குனிந்து நிமிர்ந்து சுறுசுறுப்பாய் அவர் செய்யும் வேலைகள்.. கிழக்கு கொடுத்து வைத்ததுதான்..

என்ன யோசிக்கிறார் ..?? மூணு சேர் போட்டு உக்காந்திறுக்கோமே தாங்குமா என்றா ?? ..

( Prasannaa Sir Just a Joke..Pls. )

maddy73 said...

ஹெல்மெட் போட்டவர்தான் 'இட்லிவடை'்னு சொன்ன கப்சாவை மக்கள் நம்பிடுவார்களா,இல்லை நான் தான் 'இட்லிவடை'்னு சரியாக கண்டு பிடித்து விடுவார்களா?
----
என்ன சார், நான் கரெக்டா அவர் நினைத்ததை கண்டு பிடித்து விட்டேனா ?

ஆயில்யன் said...

கம்யூட்டரை பார்த்துட்டு யோசிக்கறதை பார்த்தா - டார்கெட்டை விட்டு தாண்டி போயிட்டோமோன்னு? - இருக்குமோ? :))

Anonymous said...

Idly,

Some one is coming from India.

List of Books please...

Can you suggest Any kambaramayam, with detaiiiiiiled explanation(in tamil)..


Thanks
Bala
Texas

maddy73 said...

//அது சரியாக இருக்காது என்று நான் யோசித்தால் அது சரியாக யோசித்ததாக இருக்காதோ என்று யோசித்துக்கொண்டிருப்பதைப் பற்றி அவர் யோசித்திருக்கமாட்டார் என்றே நான் யோசிக்கிறேன்! //

Dear kggouthaman sir,
Is this called 'Visu'(not visual) effect ? sir, plz visit my blog.. I posted few more. Thanks

Arputha raj said...

நம்ம கிட்ட பேசிகிட்டு இருக்கிறவர் ஒருவேளை இட்லிவடையாக இருக்குமோ? என்று தான் போட்டோ நபர் நினைக்கிறார்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//முதல் படத்தில் இருக்கும் நபர் என்ன யோசிக்கிறார்//

"ஆச்சு, இன்னும் கொஞ்ச நாள்தான். கண்காட்சி முடிஞ்சதுக்கப்புறம், எல்லா வலைப்பூவிலயும் புத்தகங்களை மறந்துடுவாங்க...திரும்பவும் இட்லிவடை கமல் பற்றி போட ஆரம்பிச்சுடுவாரு. இப்படி புத்தகங்களை கூவி கூவி விக்கற அளவுக்கு மக்களுடைய அறிவுத் தாகம் மோசமா இருக்கே" என்று யோசிக்கிறாரோ?
(பி.கு.: நான் அப்படித்தான் யோசிக்கிறேன்)

யதிராஜ சம்பத் குமார் said...

இந்த ஒரு முரண் தவிர, நன்றாக எழுதி உள்ளீர்கள், திரு யதிராஜ். நன்றி./


மானஸ்..

அதிலும் முரண் எதுவும் இல்லை. நான் கண்காட்சிக்குப் போனவுடன் நல்ல கூட்டம். ஆனால் ஸ்டால்களில் அநேகம் பேர் இல்லை. உள்ளே நுழையும் போது வெறிச்சென்றிருந்த கார் பார்க்கிங் வெளியேறும்போது கார்கள் நிற்க இடமில்லாமல், ட்ராபிக் சிக்னல் போல் வரிசையில் நின்று கொண்டிருந்தன, தவிர என்னுடைய பைக்கைத் தேடுவதற்கு 20 நிமிடம் ஆனது.

சைவகொத்துப்பரோட்டா said...

//என்ன யோசிக்கிறார்//


இன்னைக்கு நாம டார்கெட் பண்ணின கலெக்சன் வருமா, வராதா?


இப்படிதான யோசிக்கிறீங்க Mr.ஹரன் பிரசன்னா

பலா பட்டறை said...

பாவங்க ப்ரசன்னா அத்தன கூட்டத்திலையும் (நான் போனபோது ) கட கட ன்னு புக் அடுக்கரதாகட்டும், சுத்தி சுத்தி வரதாகட்டும்...அசத்திட்டாரு :) பில் போடறவங்க தான் scaner வெச்சிக்கிட்டு அவஸ்த பட்டுக்கிட்டு இருந்தாங்க .. ம்ம்ம் என்ன யோசிக்கிறார் ..

'கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே' ன்னு யாராச்சும் கிழக்கு ஆபீச்ஸ்ல கீதோபதேசம் பண்ணினதையா .... :(

Anonymous said...

புத்தக கண்காட்சியில் உள்ள சிறப்பு புத்தகங்கள், எந்த மாதிரியான புத்தகங்கள் புதிதாக வந்துள்ளன, மக்கள் விரும்பி வாங்கும் புத்தகங்கள், இளைஞர்களை கவரும் புத்தகங்கள், இணையம், கணனியியல் , ஆன்மிகம் பற்றிய புதிய புத்தகங்கள், முதலியவை பற்றி விசாரித்து எழதியிருந்தால் பயனுள்ளதாக் இருந்திருக்கும். மற்ற ஊர்களில் இருக்கும் நாங்கள் எங்கள் சென்னை நண்பர்களை வாங்க சொல்லும்படி புத்தகங்களை பற்றி விரிவாக எழுதவும். ஜஸ்ட் அவரது தேடிய புத்தகங்கள் பற்றி எழுதியது அதிகம் உபயோகம் இல்லை.

Anonymous said...

இட்லி வடையில் சற்று உபயோகமான , ( புத்தகங்களை தேர்வு செய்ய வைக்கும் வகையில் ) புத்தக கண்காட்சி கட்டுரை எழுத சொல்லவும். பின்னுட்டம் எழுதியவர்கள் கண்காட்சிக்கு போனவர்கள் போல தெரியவில்லை.

IdlyVadai said...

//Some one is coming from India.

List of Books please...

Can you suggest Any kambaramayam, with detaiiiiiiled explanation(in tamil)..//

//மற்ற ஊர்களில் இருக்கும் நாங்கள் எங்கள் சென்னை நண்பர்களை வாங்க சொல்லும்படி புத்தகங்களை பற்றி விரிவாக எழுதவும். ஜஸ்ட் அவரது தேடிய புத்தகங்கள் பற்றி எழுதியது அதிகம் உபயோகம் இல்லை.//

விருப்ப பட்டியல் என்று புத்தகத்தில் அவர் அவர் ஒன்று சொல்லுவார்கள். என்னுடைய விருப்ப பட்டியலை இங்கே சொன்னால், இது ஒரு விருப்ப பட்டியலா என்று நீங்கள் கேட்கலாம். பலருடைய ரசனை மாறும்.

இருந்தாலும் ஒரு பட்டியல் போட முடியுமா என்று யோசிக்கிறேன் !

Anonymous said...

// ஆனால் ஸ்டால்களில் அநேகம் பேர் இல்லை.///

then you might have time to go around all the stalls and why you have not given any list of good and attractive books coming newly for thi season for the benifit of us who are planning to go for purchase.

Anonymous said...

எல்லாம் சரி.
எங்களைப் போன்ற கிழ்வர்களுக்கென ஒரு தனி டிக்கட் கவுண்டர், அரங்கத்தில் உட்காருவதற்கு (கால் வலித்தால்) சில பெஞ்சுகள் தனியாக ஒதுக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
ஒரு முதுகிழம்

மதுரை பொறுக்கி said...

1)ஆனால் உள்ளே ஸ்டால்களில் அவ்வளவு கூட்ட்த்தைக் காண இயலவில்லை. ஒவ்வொரு ஸ்டாலிலும், ஊழியர்கள் தவிர ஒரு சிலரே தென்பட்டனர். ஆனால் வெளியே முகப்பிலேயே தென்பட்ட ப்ரூட் ஸாலட் கடைகளில் நல்ல கூட்டம்.

2) கணிப்பொறி மற்று இதர மின் ஊடகங்கள் வந்து விட்டதால், மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இங்கு வந்த கூட்டத்தைப் பார்த்தால் தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஜனக்கடல். விடுமுறை தினமாதலால் அநேகர் குடும்ப சகிதமாக குழந்தைகளையும் அழைந்து வந்திருந்தது நல்ல விஷயம்.

Both points are taken from this article. which one is true?

Anonymous said...

TV paarkirar !!

Nakeeran

அதிரை புதியவன் said...

இவர் கிழக்கு பதிப்பக உழியர்ஆச்சே இவரா அவரு....

மஞ்சள் ஜட்டி said...

அவரு உக்கார்ந்து யோசிக்கிற ஸ்டைல் பார்த்தா....உங்களை (இட்லி வடையை) கண்டவுடன்...இப்படி தான் சொல்லியிருப்பாரு...

"அய்ய...(இட்லி) வடை போச்சே!!!!".....

பித்தனின் வாக்கு said...

அவர் என்ன யோசிக்கிறார்ன்னா " என்னடா இது இவ்வளவு கூட்டமும் வேடிக்கை பார்க்க மட்டும் வருது. கல்லா கட்ட மாட்டேங்குதே, அட்லீஸ்ட் ஸ்டால் போட்ட காசாவது வருமா? அது போனாப் போகுது அட்லீஸ்ட் நேத்து வந்த அந்த மஞ்ச சுடிதார் இன்னைக்கும் வருமா? இது எப்படி இருக்கு.

ரிஷபன் said...

யாரு இவரு, ஸ்டாலில் எல்லாம் கூட்டம் லேதுன்னு எழுதறதுக்கு தான் போட்டோ எல்லாம் எடுகிறாரா ?

அடுத்த வருஷம் IPL மேட்ச் Cheer girls மாதிரி நாமளும் அரேஞ் பண்ணிடவேண்டியது தான்.
கூட்டத்துக்கு கூட்டமும் ஆச்சு நம்ம போட்டோவை வச்சு காமெடி கீமெடி பண்ணாமலும் இருப்பாங்க

goindu said...

"ஒரு வேலை இவர்தான் இட்லி வடை" யா இருக்குமோ

Anonymous said...

"நுழைவு சீட்டு 5 ரூபாய் கொடுத்து வாங்கினால் கூடவே ஒரு பரிசுக் கூப்பனும் வருகிறது. பெயர், முகவரி எழுதி பெட்டியில் போட்டால், குலுக்கலில் பரிசு விழுந்தால் முறையே ரூபாய் 1000, 500 என பரிசு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணமாய்க் கொடுப்பதை விட, அந்த மதிப்பிற்கு புத்தகமாகவே கொடுத்து விட்டால், பரிசுக் குலுக்கல், அர்த்தமுள்ள விஷயமாகிவிடும். "

Hello Mr. yathiraj, please take this "PUTHAGA KANKAATCHI POOCHENDU" for asking for books instead of cash! By the way,, would you want books instead of POOCHENDU? By the way, I neither write my pakkangal as "O" or "kOnal"...but planning to start "aiyyayO... KONALmanal pakkangal"...
--IPPADIKKU
MadhuMaadhuPUBlicity meiGNANI

Anonymous said...

என்னாங்க இட்லிவடை, அவ்ளோ ஸ்கூட்டர் கார் நின்ன எடம், பக்கத்துல இருக்கற சுவிசேஷ கூட்டம், மற்றும் எதிர்ல இருக்கற பச்சையப்பன் கல்லூரி எலக்ஷன் கூட்டம் எல்லாம் சேர்ந்ததுங்க....ஆனால் புத்தக கண்காட்சிக்கும் நல்ல கூட்டம் மாலையில்... ஒவ்வொரு டிக்கெட் கெள்ண்டர்லையும் பெரிய வரிசை இருந்தது...வேட்டைக்காரன் மற்றும் கலைஞர் டிவி மற்றும் சன் டிவி எல்லாம் சேர்ந்து மக்களை புத்தகம் படிக்க தூண்டி விட்டாங்க... அவா கூட நல்லது பண்ணுவா...ஹீ ஹீ ஹீ

KVR said...

”பாரா மாதிரி நாமளும் பதிவிலே என் புத்தகம் வாங்கினா உன் புத்தகம் வாங்கிக்கிறேன்ன்னு போட்டிருக்கலாமோ”ன்னு ஹீரோ யோசிக்கிறார்.

Prasanna, just for fun. இந்த வருடம் விடுமுறையில் நான் வாங்கும் புத்தகத்தில் உனதும் நிச்சயம் இருக்கும். வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

உள்ளே அவர்கள் கொடுக்கும் பையை நம்பி புத்தகம் வாங்குபவர்கள் செல்ல முடியாது.

பொங்கல் கொண்டாட அவர்கள் விரும்பியதால் பொங்கல் விடுமுறைக்கு முன்னரே கண்காட்சி முடிவது சோகம்.

முதல்வருக்கு பேட்டரி கார் விடுபவர்கள் இவ்வளவு பெரிய ஸ்டால்களை சுற்ற முடியாதோர்க்கு பேட்டரி கார் வசதி பண்ணலாமோ...

R.Gopi said...

//kggouthaman said...
முதல் பாராவைப் படித்தவுடன் - இந்தக் கட்டுரையில் மொத்தம் எவ்வளவு 'ஆனால்' கள் உள்ளன என்று ஏதாவது கேள்வி வருமோ என்று யோசித்தேன். படத்தில் இருப்பவர் என்ன யோசிக்கிறார் என்று நான் எவ்வளவு யோசித்தாலும் - அது சரியாக இருக்காது என்று நான் யோசித்தால் அது சரியாக யோசித்ததாக இருக்காதோ என்று யோசித்துக்கொண்டிருப்பதைப் பற்றி அவர் யோசித்திருக்கமாட்டார் என்றே நான் யோசிக்கிறேன்!//

***********

கௌதமன் சார்....

நீங்க இவ்ளோ யோசிப்பீங்களான்னு நான் யோசிச்சு பார்த்து கொண்டே தூங்கி போனதில், கனவுல கூட இதை பத்தியே யோசித்து கொண்டிருந்தேன் என்பதை இந்த கணம் யோசித்து சொல்கிறேன்....

amar said...

katturaiyin mugappil "idu vilambaram" yendru irukka vendum.

Jayashree Govindarajan said...

"NHMல (கிழக்குன்னு சொல்லப்டாது!) XXXXL சைஸ் டீஷர்ட் எல்லாம் போட்டு இவிங்களுக்கும் கொடுத்திட்டாங்களா? இனிமே இவங்களையும் இதுலயேதான் பார்க்கமுடியுமா? எகொஇச?"

-- இது நான் யோசிக்கறது! :(

IdlyVadai said...

மும்பை மாமி மெனக்கட்டு வந்து இங்கே மறுமொழி எல்லாம் போடுவதை பார்த்தால் உலக நாயகன் கமலா, பிரசன்னாவா என்று எனக்கு இப்ப சந்தேகம் வந்துட்டுது. யாராவது விளக்குவார்களா ?

யதிராஜ சம்பத் குமார் said...

ஏதேது??? இட்லிவடையில் வந்து பிரசன்னாவைத் தாளிக்கிறார்போல் இருக்கிறதே?

வற்றாயிருப்பு சுந்தர் said...

ஒரு ஆளை நிம்மதியா தாடையைச் சொறிய விடாம எத்தனை கமெண்ட்டுங்க !!

பயங்கர தீவிர யோசனைல இருந்தாலும் அந்த ஒளி படைத்த கண்கள் இருக்கு பாருங்க! அங்கதான் பிரசன்னா (ஒக்காந்திருந்தாலும்) நிக்கறாரு!

புத்தாண்டு வாழ்த்துகள் பிரசன்னா!

பொடிப்பையன் said...

அவர் தன்னோட சீட்டை பார்க்பண்ண முடியாம முழிகிறாருபா...எதிர் கடையில எத்தனை பேருன்னு எண்ணிக்கொண்டு இருக்கிறார்
பொடிப்பையன்

Erode Nagaraj... said...

பழைய கணையாழி புத்தகங்கள் எங்கே கிடைக்கும்?

யதிராஜ சம்பத் குமார் said...

ஈரோடு அண்ணா :

கணையாழி இப்போது தசரா அறக்கட்டளையால் வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. அதன் முகவரி..

பழைய எண் - 7
புதிய எண் - 11
நானா தெரு,
தியாகராய நகர்
சென்னை - 600 017

தொலைபேசி : 24347354, 24349191

அங்கு பழைய இதழ்கள் கிடைக்காதபட்சத்தில் கன்னிமாரா நூலகத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஹரன்பிரசன்னா said...

இதெல்லாம் ஒரு கேள்வி, இதுக்கு இத்தனை கமெண்ட்டு. வேலய பாருங்கய்யா.

Anonymous said...

அய்யா தாங்கள் வாங்கிய புத்தகங்களிலேயே உங்களைத் தெரிந்து
கொள்ள முடிந்தது.நன்னா எழுதுங்கோ

Swami said...

Jayashree.. why are u not updating your blog ?? :( :(