பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 02, 2010

வெள்ளிக்கிழமை - சினிமா விமர்சனம் - பெர்ஃப்யூம்

பெர்ஃப்யூம் - ஒரு கொலைகாரனின் கதை எனத் தொடங்கும் படத்தின் ஆரம்பம் முதல் வரை கடைசிவரை இருட்டு. படத்தில் கடைசிவரை எங்குமே வெளிச்சமான ஒரு காட்சி கூட கிடையாது. 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த கதையென்பதால் அதற்கேற்ற கலையமைப்புகள் கொண்ட, அக்காலத்திய பிரான்ஸ் நாட்டை நம்முன் வைக்கிறது திரைப்படம்.


இந்த விமர்சனம் 'அடல்ட்ஸ் ஒன்லி' ரகம். அதனால் பெண்கள், மற்றும் குழந்தைகள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நமக்குத் தெரிந்த நறுமனப் பொருட்கள் என்பது அத்தர், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், பாண்ட்ஸ் ட்ரீம் பவுடர் டால்க் முதல் இன்றைய யார்ட்லி வரை... அதன் மூலம் யாரையும் கவர்கிறோமோ இல்லையோ, விரட்ட விடாமல் செய்து கொண்டிருக்கிறோம்..

ஆனால் உலகின் மிகச் சிறந்த வாசனைத் திரவியத்தைக் கண்டுபிடிப்ப்பதற்காக ஒருவன் செய்யும் சோதனைகளும், அதற்காக அவன் செய்யும் கொடூரமான கொலைகளும்தான் கதை.

படம் ஆரம்பிக்கும்போதே ஒருவனை கை, கால் கழுத்து எல்லா இடத்திலும் இரும்புப் பட்டையால் பிணைத்து, சங்கிலியில் கட்டி இழுத்து வருகின்றனர்.

அவனுக்கான தீர்ப்பை உரக்கப் படிக்க ( கையை வெட்ட வேண்டும், காலை வெட்ட வேண்டும், மண்டையை பிளக்க வேண்டும், இறுதியில் சாகும்வரை அவனைத் தொங்க விட வேண்டும்) கீழே நிற்கும் மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். அவன் யார், அவனுக்கு எதற்கு இவ்வளவு கொடூர தண்டனை? ஏன் மக்கள் அனைவரும் இப்படிப்பட்ட கொடூர தீர்ப்பைக் கேட்டு ஆர்ப்பரிக்கின்றனர் என்பதற்கான விடைதான் இப்படம்..

அங்கிருந்து, பின்புலத்தில் அவனைப் பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டே நகர்கிறது படம்.

கூச்சலும், அழுக்கும், சேறும், சகதியும் கொண்ட ஒரு இடத்தில் ஒரு தாய் குழந்தையைப் பிரசவிக்கிறாள். ஆனால் அதைப் பிரசவித்ததுமே தொப்புள்கொடியை அறுத்து அந்தக் குழந்தையை காலால் சாக்கடைக்கு அருகில் தள்ளிவிட்டு சென்றுவிடுகிறாள். சிறிது நேரத்தில் குழந்தை அழும் சப்தம்கேட்டு அங்கிருப்போர் கீழே பார்த்தால் அழுக்கோடு அழுக்காய் உடலில் தாயிடம் இருந்து துண்டிக்கப்பட்ட தொப்புள்கொடியுடன், உடலை சுத்தம்கூட செய்யப்படாத ஒரு குழந்தை கிடக்கிறது. அதனது தாயார் யார், யார் என எல்லோரும் நாலாபுறமும் தேட அக்குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்கின்றனர். குழந்தையை அனாதையாய் விட்டுச்சென்றதற்கு தண்டனையாக அவளை தூக்கிலிடுகின்றனர்.

இது நமது கதாநாயகனால் ( பென் விஷாவ்) அவனறியாமலேயே ஏற்படும் முதல் கொலை.

பிறந்த முதல் கணத்திலிருந்தே தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களின் மனத்தை நுகரும் அவன், உலகின் அனைத்து விதமான வாசனை, துர்நாற்றம் எல்லாவற்றையும் அறிந்துகொண்டும், அடையாளம் கண்டுகொண்டுமிருக்கிறான்.. அவனது வாழ்நாள் முழுதும் வாசனை பிடிப்பதை மட்டுமே செய்துவருகிறான்.


அனாதையாக எடுக்கப்பட்டு சிறுவர் இல்லத்தில் வளர்க்கப்பட்டு, அங்கிருக்கும் வார்டனால் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு விற்கப் படுகிறான். குறிப்பிட்ட விலைபேசி வாங்கும் தோல் பதனிடும் தொழிற்சாலையின் முதலாளி, வார்டனுக்கு பனத்தைக் கொடுக்காமல் கழுத்தை அறுத்துவிட்டு இந்தச் சிறுவனை அவனுடன் அழைத்துச் செல்கிறான். அங்கு இதர அடிமைகள் வேலை செய்வதைக் காட்டிலும் அதிகமான நேரமும், அளவும் வேலையைச் செய்கிறான். அங்கும் அவன் வாசனை நுகர்தலையும் வித விதமான வாசனைகளையும், நாற்றங்களையும் அடையாளம் கண்டுகொண்டே இருக்கிறான்..

ஏதோ ஒரு வாசனை அவனைக் கவர அந்த வாசனை வரும் திசையைப் தொடர்ந்தபடியே செல்ல அங்கு பழம் விற்பவள் ஒருத்தியின் முதுகுப் புறத்தை வாசனை பிடிக்கிறான். அந்த மனம் அவனை மயக்கம் கொள்ள செய்கிறது. அவள் அவனிடம் இருந்து சென்றுவிட, அந்த வாசனைக்காக அவன் அவளைப் பின் தொடர்கிறான். அங்கு அவளது வீட்டில் அவள் அறியாவண்ணம் அவளது பின்புறத்தில் அமர்ந்து அவளை வாசனை பிடிக்க, யாரோ அவளருகில் இருப்பதை உனரும் கனத்தில் அவள் சட்டென திரும்பிப்பார்த்து வீலிடுகிறாள்.

அங்கு யாரோ வரும் சப்தம் கேட்கிறது. உடனே அவளது சப்தத்தை அடைக்க வாயைப் பொத்துகிறான். வந்தவர்கள் செல்ல சிறிது நேரம் ஆகிறது. அவர்கள் சென்றபின்பு அவளை அவன் விடுவிக்கும்போது மூச்சுத்திணறி இறந்திருப்பாள். அதன் பின்னர் அவளது ஆடைகளையெல்லாம் கழற்றிவிட்டு அவளை ஆவேசமாய் நுகர்கிறான்.. அவளது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மிக மிக ஆவேசமாய் நுகர்கிறான். அதன் பின்னர் அவளை நிர்வாணக் கோலத்திலேயே விட்டுச் செல்கிறான். அவனறியாமலேயே, எந்தவித திட்டமுமின்றி அவன் செய்யும் முதல் கொலை இது.

அவன் முதலாளி அனுப்பிவைக்க தோலை கொண்டுபோய்க் கொடுப்பதற்காக ஒரு வாசனைத் திரவியம் விற்கும் கடைக்குச் செல்கிறான். அங்கு கடை முதலாளி, புதுப்புது வாசனைத் திரவியங்களின் வரவால் வியாபாரம் ஏதுமின்றி இருக்கிறார்.அந்தக் கடை முதலாளியை இவன் மாஸ்டர் என அழைக்கிறான். அவர் அவன் கொண்டுவந்த தோலைக் கீழே உள்ள அறையில் வைத்துவிட்டுச் செல்லுமாறு சொல்ல, கீழே வாசனைத்திரவியங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் சேமிப்பறையைக் காண்கிறான். அங்கு “ அமோர் அண்ட் ப்ஸைக்” என்ற பெயரில் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் பிரபலமான வாசனையை உணர்கிறான். அவரிடம் தன்னால் அந்த “அமோர் அண்ட் ப்ஸைக்” வாசனைத் திரவியத்தை உருவாக்க முடியும் என்கிறான். அதற்கு ஒரு வாய்ப்புத் தருமாறும் கேட்கிறான். உனக்கு என்ன தெரியும், ஒரு வாசனைத் திரவியத்தை உருவாக்குவதற்கான சூத்திரம் உனக்குத் தெரியுமா எனக் கேட்கிறார். அதற்கு அவன், எனக்கு வாசனைகள் தெரியும், அதன் பெயர்கள் தெரியாது என்கிறான். இருப்பதிலேயே சிறிய குடுவையைக் கொடுத்து அமோர் அண்ட் ப்ஸைக்கை இதில் தயார் செய் எனக் கூற எந்தவித அளவுக்குடுவையோ, கணக்கோ இன்றி தனது நுகர்தல் திறனை வைத்தே அதன் உட்பொருட்களை தனது நுகர்தல் மூலமே கண்டுபிடித்து மிகச் சரியாய் செய்து காண்பிக்கிறான். அதை நுகரும் அந்தக் கடையின் முதலாளி ஆம், இது அமோர் அண்ட் ப்ஸைக் தான் என அசந்துவிடுகிறார். மாஸ்டர், இது ஒன்றும் நல்ல வாசனையல்ல, இதைவிட சிறந்த வாசனையை உருவாக்க முடியும் என்கிறான். அவன் முதலில் உருவாக்கிய வாசனைத்திரவியத்தையே இன்னும் சில பொருட்கள் சேர்த்து மேம்படுத்துகிறான். அதை முகர்ந்து பாருங்கள் என கடைக்காரரிட்டம் சொல்ல அவர் அதை பின்னர் சோதித்துக் கொள்வதாகக்கூறுகிறார். அவரிடம் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுமாறும் கேட்கிறான். ஆனால் பதிலேதும் சொல்லாமல் வாசலைச் சாத்துகிறார். அவன் போன பின்பு அவன் தயாரித்த வாசனைத் திரவியத்தை முகர்ந்து பார்க்கிறார். அதன் வாசனையின் மயக்கத்தில் பலவகையான மலர் தோட்டங்கள் அவர்முன் விரிகின்றன, ஒரு பெண் வந்து அவரிடம் ஐ லவ் யூ சொல்லிச் செல்கிறாள்.அவனது திறமையைக் கண்டு அவனை தோல்பதனிடும் தொழிற்சாலை முதலாளியிடமிருந்து 50 பிராங்குகளுக்கு விலைக்கு வாங்கி தன்னுடனே வைத்துக் கொள்கிறார். இவனை விற்ற அந்த முதலாளி உடனே விபத்தில் இறக்கிறார். வாசனைத் திரவியதொழில் ரகசியங்களையும், சிறந்த வாசனைத்திரவியங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொடுக்குமாறு வேண்டுகிறான். அவரும் அவருக்குத் தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுக்கிறார். உலகிலேயே அனைவரும் விரும்பக் கூடிய ஒரு சிறந்த வாசனையை உருவாக்கவே முடியாது என்கிறார். தன்னால் செய்துவிட முடியும் என அவன் சொல்கிறான். அவனது ஆராய்ச்சி சிலசமயத்தில் ஏடாகூடமாக இருக்கிறது. ஒருநாள் பூனையை கொதிக்கும் பானையில் போட்டு வாலைவடிகட்டுவானில் அதன் வாசனையை திரவிமயமாக்க முயல்கிறான். அதனைப் பார்க்கும் அவனது முதலாளி, ஒரு நல்ல வாசனைத் திரவியம் தயாரிப்போன் இப்படிச் செய்யமட்டான் எனக் கூறிவிட்டு, உனது சோதனைகளுக்கு நீ உட்ஸுக்குத்தான் போக வேண்டும் எனச் சொல்லி, அதற்கான அனுமதியையும் தர முன் வருகிறார். அதனைப் பெற்றுக்கொண்டு உட்ஸுக்கு வரும் அவன், அங்கு வாசனைத் திரவியம் தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறான். அங்குதான் அவனது உண்மையான (?) ஆராய்ச்சிகள் ஆரம்பமாகின்றன. வரும் வழியில் அவனது வாசனை என்ன என்பதைக் குறித்த அவனது சந்தேகத்திற்கு உடலை தேய்த்துத் தேய்த்து முகர்ந்து பார்க்கிறான். ஒரு வாசனையும் தெரிவதில்லை. அருவியில் நன்கு தேய்த்துக் குளித்த பின்னரும் அவனிடம் எந்த வாசனையும் இருப்பதில்லை. அதை உணரும் கனத்தை மிக அழகாக படமாக்கி இருப்பார்கள். உலகையே மயக்கப்போகும் வாசனைத் திரவியம் தயாரிக்க விரும்புபவனுக்கு வாசனையோ, குறைந்த பட்சம் வீச்சமோ கூட இல்லை..

அங்கு அவன் விரும்பும் வாசனை கொண்ட பெண்னை கொன்று அவளை கொதிக்கவைத்து அதிலிருந்து அவளது வாசனையைப் பெற முயல்கிறான். ஒரு முழு பெண் உடலை நீரில் கொதிக்க வைத்தும் அவன் நினைக்கும் வாசனைத் திரவியத்தை அவளது உடம்பிலிருந்து எடுக்கமுடியாமல் தோல்வியானதும், மிருக கொழுப்பை அவன் தேர்வு செய்யும் பெண்களின் உடலில் தடவி அதை வழித்து எடுத்து வாலைவடித்தல் மூலம் அவன் விரும்பும் அந்த பெண்வாசனையைப் பெறுகிறான். அதை சோதனையும் செய்து பார்க்கிறான். கிட்டத்தட்ட 12 பெண்களின் உடலில் இருந்து பெறப்போகும் அந்த வாசனைகளின் தொகுப்பில் உருவாகப்போகும் வாசனைத் திரவியம் உலகையே மயக்க வல்லது. அதை நோக்கித்தான் இந்தக் கொடூரப் பயணம்.

இந்த முயற்சியில் முதலில் ஒரு விலைமாதில் ஆரம்பித்து, ஒவ்வொருவராகக் கொன்று கடைசியில் உள்ளூர் பெரிய மனிதரின் மகளைக் கொன்று எடுக்கும் திரவியத்துடன் அவனது சோதனை முற்றுப் பெறுகிறது. 12பெண்களிடமிருந்து எடுக்கப்பட்ட அந்த வாசனைத் திரவியங்களை ஒரு குறிப்பிட்ட அளவில் ஒன்று சேர்த்து ஒரு புதிய வாசனைத் திரவியம் உருவாக்குகிறான். அந்த வாசனைத் திரவியத்தை அணிந்திருக்கும் அவனை ஒரு தேவதையெனக் கொண்டாடுகின்றனர், அவன் கொலை செய்த பெண்ணின் தகப்பன் உட்பட. அவனது ஆராய்ச்சி முற்றுப்பெறுகிறது. அவன் அந்த வாசனையைப் பயன்படுத்தி அனைவரையும் மயக்கி உட்ஸிலிருந்து வெளியே வருகிறான்.

நேரடியாக அவன் தாயின் வாசனைத் தேடிச் செல்கிறான். அந்த இடம் முழுவதும் மாறி இருப்பினும் அவனது பழைய வாசனையை அங்கு கண்டுபிடிக்க முடிகிறது. அவன் தயாரித்த அந்த வாசனைத் திரவியத்தைத் தலையில் இருந்து ஊற்றி அப்படியே மாயமாகிவிடுகிறான்..


இந்தப் படத்தில் முழுநிர்வாணக் காட்சிகள் அதிகம். நம்மூர் நாயகிகள் கவர்ச்சி என்ற பெயரில் செய்யும் அசிங்கங்களைவிட இயல்பான அழகில் எந்தவிதமான காம எண்ணங்களையும் தூண்டாத வகையில் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதாநாயகன் அவன் வாசனை எடுக்க விரும்பும் பெண்களை கொன்று, அவர்கள் உடலிலிருந்து வாசனையை எடுத்துவிட்டு, தலைமுடியையும் வெட்டிச் சென்று அவன் வேலைசெய்யும் இடத்திலேயே புதைத்து வைக்கிறான். எல்லாப்பெண்களுமே கற்பழிக்கப் படாமல் இருப்பர். ஒவ்வொருவரும் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருப்பர்.

படத்தில் கதாநாயகன் மீது குற்றம் சாத்தப்பட்டு அவனை கொலைசெய்ய ஒருவனையும் நிறுத்தி வைத்திருப்பர். சிறையிலிருந்து வெளிவரும்போது கீழேயிருந்து ஒரு பாட்டிலை எடுத்து ( அவன் உருவாக்கியது) அந்த வாசனைத் திரவியத்தை மேலே பூசிக்கொண்டதும், அடுத்த காட்சியில் ஜெயிலர் அணிந்திருந்த உடையில் பல்லக்கில் வந்து இறங்குவான்.

அவன் கொலை செய்யப்பட வேண்டிய இடத்தில் எறி நின்றதும், அவன் உருவாக்கிய வாசனைத் திரவியத்தை துணியில் தெளித்து அதன் வாசனையை காற்றில் பரவ விடுவான்.. அப்படியே மொத்தக் கூட்டமும் தன்னிலை மறந்து ஒருவருக்கொருவர் நிர்வாணத்தில் திளைப்பர். எல்லோரும் அந்த வாசனையில் மயங்கி அவனை ” நீயொரு தேவதை” என ஆர்ப்பரிப்பர். அப்படியே கீழேயிறங்கிச் சென்றுகொண்டேயிருப்பான்..


படத்தில் கதை நடப்பது 18ம் நூற்றாண்டில். அப்போது நடக்கும் அடிமை முறை, கட்டிடங்கள், உடைகள், குதிரை வண்டிகள், பல்லக்குகள் என பார்த்துப் பார்த்துச் செய்திருப்பர்.

கதாநாயகன் ஒரு விலைமாதிடம் சென்று அவளிடம் வாசனை சேகரிக்க அவளது உடம்பில் மிருகக் கொழுப்பைத் தடவுவான். அதுவரை சும்மா இருக்கும் விலைமாதுவின் பூனை அப்போது வித்தியாசமாய் குரலெழுப்பும். அதன் பின்னர் அவளைக் கொன்றுவிட்டுச் சென்றுவிடுவான். அவளது உடம்பிலிருந்த வாசனையை எண்ணெயாய் மாற்றிய பின்பு அதை உடம்பில் ஒரு சொட்டு விடுவான். பூனை அந்த வாசனையை அறிந்து எஜமானியைத் தேடிவரும். மிக நுட்பமாய் அவன் மனித உடலிலிருந்து வாசனையைப் பிரித்தெடுக்க ஆரம்பித்துவிட்டான் என்பதைச் சொல்லுமிடம் அது.

உட்ஸில் கொலைகாரன் கிடைக்காமல் எல்லொரும் தத்தமது பெண்களை வீட்டில் போட்டு அடைத்து வைத்து பாதுகாக்க, அப்போது ஒருவன் அந்தக் கொலைகாரனைப் பிடித்து விட்டார்கள், அவன் எல்லாக் குற்றத்தையும் ஒப்புக்கொண்டுவிட்டான் என்ற செய்தியோடு ஒரு கடிதம் வரும். அப்பொது அந்த ஊரின் பெரியவர், பிடிபட்டவன் நம்மூரில் கொலை செய்தவன் இல்லை. அவனிடமிருந்து அப்படி வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது என்பார்.. நம்முர் காவல்நிலையங்களை ஞாபகப் படுத்தும் இடம் அது.

இறுதியில் எல்லோரையும் மயக்கி நிர்வாணத்தில் திளைக்கும் காட்சியில் கிட்டத்தட்ட ஆயிரம்பேர் ஆண், பெண் பேதமின்றி நிர்வாணமாய் இருப்பார்கள். எப்போதோ படித்த நிர்வாணத்திருவிழா பற்றிய செய்தியை நினைவு படுத்தியது அது.


நல்ல திரைக்கதையுடன், சிறந்த ஒளிப்பதிவுடன், டாம் டிக்வேர் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் மிகச் சிறந்த வித்தியாசமான முயற்சி.

இட்லி வடை என்ன வாசனை என்று ... சரி வேண்டாம்.

13 Comments:

IdlyVadai said...

டில்லி பல்லி ஜெய் ஹனுமானிடம் பிழைகள் பற்றி சொல்லுகிறேன். நன்றி.

இவ.

Balaji said...

Enna vara vara neraya english padam parkarel??? hmmm!!!!

zorbathebuddha said...

நாயகன் மேலதிக வாசனை தாயாரிப்பு முறையை கற்க செல்வது “உட்ஸ்” அல்ல “க்ராஸி” என்று ஞாபகம். அதேபோல் விலைமாதுவின் வளர்ப்பு மிருகம் பூனை அல்ல நாய்.

மேலும் ஒன்றை கவனித்தால்... நாயகன் சென்ற இடத்தில் அவனை சார்ந்தவர்கள் அனைவரும் இறக்க நேர்வது தெரியும்.
முதலில் தாய். பின்பு ஆசிரம நிர்வாகியான் பெண், பின் விலைக்கு வாங்கிய எஜமான், பின் முதல் மாஸ்டர், பின் இரண்டாவது மாஸ்டரும் அவளுடைய கணவனும்....

நான் பார்த்து வியந்த படங்களிலேயே முதன்மையானது. ஐந்து முறை பார்த்திருப்பேன்.

உங்களின் விமரிசனம் தட்டையாக உள்ளது. என்ன ஒரு உணர்ச்சிகரமான படம் அது. அதன் இசையைப் பற்றி நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்.

Anonymous said...

வார்த்தை இதழை இழுத்து மூடிவிட்டார்களே இரண்டு வருடத்துக்குள். ஏன்?

Shankar said...

ஆம். அது கிராஸி. நீர் குறிப்பிட்டிருப்பது போல் உட்ஸ் அல்ல. மேலும் அந்த விலைமாதுவின் நாய். பூனை அல்ல. முழுநிர்வாணக்காட்சிகள் கதையோட்டத்துடன் இருப்பதால் காமமில்லை. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது.

maddy73 said...

'saambhar' smells better than vadai & idli.

Anonymous said...

It was a chilling drama.
The period being pre-industrial medieval time makes the story somewhat believable too.

Selvakumar said...

முதன்முதலில் வாசனை திரவியம் தயாரிக்கும் காட்சி நீங்கள் கூறுவதுபோல மிக நன்றாக படமாக்கப்பட்டிருக்கும். ஒரு வருடத்திற்கு முன்பு பார்த்த நியாபகம்.

Dharmaraj said...

//அவளது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மிக மிக ஆவேசமாய் நுகர்கிறான். அதன் பின்னர் அவளை நிர்வாணக் கோலத்திலேயே விட்டுச் செல்கிறான். அவனறியாமலேயே, எந்தவித திட்டமுமின்றி அவன் செய்யும் முதல் கொலை இது.//

மேலும் அந்தப் பெண் இறந்த சிறிது நேரத்தில் அவளுடைய வாசனை அவள் உடலை விட்டு போயிருக்கும். அந்த நேரத்தில் வாசனையை தேடுவானே!!! அருமை... அதற்கு பின்பு தான் உடல் வாசனையை தக்க வைத்து கொள்ள யோசிபான். இந்த படம் ஒரு silent horror. u can feel the perfume smell while watching the movie.

வால்பையன் said...

//உங்களின் விமரிசனம் தட்டையாக உள்ளது. என்ன ஒரு உணர்ச்சிகரமான படம் அது. அதன் இசையைப் பற்றி நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்.//

இது தான் எனக்கும் தோணுச்சு!

வால்பையன் said...

நாயகன் கண்ணில் படும் அனைத்து பொருள்களிலும் வாசனையை தேடுவது மிக முக்கியமான உளவியல் கூறு!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இட்லிவடையாரே..

உம்மைக் கெடுத்தது யாராக்கும்..?

இது போன்ற படங்களை பார்க்காமல் என்.ஹெச்.எம்.மில் அடுத்த புதுமையாக என்ன செய்யலாம் என்று யோசிக்கலாமே..?

ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்..?

Narayanan said...

kadaisiyil hero perfumai thalayil ootrikondu kaanamal poga maatar.. thalayil ootri kondathum andha vasanai ellarayum mayakki,ellarum avarai kadichu saaptruvaanga..