பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 01, 2010

தேவனும் நானும் - கடுகு

எல்லோருக்கும் 2010 புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

புத்தாண்டு பரிசாக கடுகு அவர்கள் எழுதிய தேவனும் நானும் என்ற கட்டுரையை இட்லிவடை வாசகர்களுக்கு ஸ்பெஷலாக அளிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.....


தேவனும் நானும் - கடுகு

துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம். மல்லாரி ராவ் கதைகள் போன்ற நகைச்சுவைக் கதைகளையும், மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான்
சுதர்சனம், லக்ஷ்மி கடாக்ஷம் போன்ற அற்பதமான குடும்ப நாவல்களையும் எழுதி, கல்கிக்கு அடுத்தபடியாக தனது பெயரை எழுத்துலகில் இடம்பெறச் செய்திருப்பவர் திரு. தேவன். என் அபிமான எழுத்தாளர்.

பள்ளிக்கூட வயதிலலேயே பத்திரிகை ஆர்வமும் ஓரளவு எழுத்து ஆர்வமும் இருந்த எனக்கு, தேவன் ஒரு எழுத்துலக 'ரஜினி! என் வயது ஒத்த இளஞர்கள் விஜயா, வாஹினி, ஏ.வி.எம் ஸ்டூடியோ - வாசல்களிலும்,, கோடம்பாக்கம் ரயில்வே கேட்டருகேவும் (இன்றைய ஃப்ளை ஓவர் இருக்கும் இடத்தில் இருந்த கேட் மூடியிருக்கும்போது யாராவது நடிகர், நடிகைகள் கார் வந்து நிற்காதா என்று வாயைப் பிளந்து) காத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்,, தேவனைச் சந்திக்க வேண்டும் என்ற வெறி எனக்கு ஏற்பட்டது. (பின்னால் நான் ஒரு பிரபல(?) நகைச்சுவை எழுத்தாளனாக ஆனதற்கு இது ஒரு அறிகுறி என்று நான் எழுதினால் "போடா தற்குறி" என்று நீங்கள் தூற்றக்கூடும்.

ஐம்பதுகளில் ஒரு நாள், ’சென்னை அரண்மனைக்காரத் தெருவில் ஒரு நிகழ்ச்சியில் தேவன் பேசுகிறார்’ என்ற செய்தியை தினசரியில் பார்த்தேன். எப்படியாவது அந்த கூட்டத்திற்குச் சென்னை செல்லவேண்டும் என்ற தீவிரம் பற்றிக்கொண்டது. நான் செங்கல்பட்டுவாசி. சென்னைக்குப் போய் வர இரண்டு ரூபாயாவது தேவைப்படும். என் ஆர்வத்திற்குத் தடை போட விரும்பாத என் அப்பா இரண்டு ரூபாய் கொடுத்தார். இது சற்று பெரிய தொகைதான். வேறு ஏதோ செலவைக் குறைத்துக் கொண்டு தான் அப்பா கொடுத்திருக்கிறார்.
மேரிஸ் ஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடைசி வரிசையில் நிற்கத்தான் இடம் கிடைத்தது. மீட்டிங் முடிந்து வெளியே வந்த தேவனை மிக அருகில் சில நிமிடங்கள் பார்த்துப் பரவசம் அடைந்தேன். மாரிஸ் மைனர் காரில் விகடன் எழுத்தாளர் கோபுவைத் தன்னுடன் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

”ஆஹா,பார்த்துவிட்டேன் தேவனை! ஐயோ அவருடன் பேசவேண்டுமே!. (சரி, என்ன பேசப் போகிறேன்? அவருடன் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” - உற்சாகத்தில் குதித்தேன்! ஒரு நாள் விகடன் ஆபீசுக்குப் போய் அவரைப் பார்த்துவிட முடிவெடுத்தேன்.

* * * *

மவுண்ட்ரோடில், வாலாஜா ரோடு சந்திப்பு மூலையில் விகடன் அலுவலகம் இருந்தது. (இன்று அங்கு ஒரு இட்லி - வடை ஹோட்டல் இருக்கிறது என்று நினைக்கிறேன்).கீழே பிரஸ் ஒரே பயங்கர சப்தத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. படி ஏறி மாடிக்குச் சென்றேன். ஒரு கதவைத் திறந்து உள்ளே போனேன். நிறைய அறைகள். அரைக்கதவு போடப்பட்டவைகளாக இருந்தன. ஒரு வயதான ஆசாமி "யாருங்க வேணும்" என்று கேட்டார். "எடிட்டர் தேவனைப் பார்க்கணும்" என்றேன். ஒரு துண்டு காகிதத்தைக் கொடுத்து "பேர் எழுதிக் கொடுங்க" என்று சொன்னார். எழுதிக் கொடுத்தேன். தேவன் அறை பத்தடி தூரத்தில் தான் இருந்தது. உள்ளே போன பெரியவர் அரை நிமிஷத்தில் வெளியே வந்தார். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே "சார் உள்ளே வரச் சொன்னார்" என்றார். அவர் என்னைப் பார்த்த விதமும் சொன்ன விதமும் சற்று வித்தியாசமாக இருந்தது.

”என்னடா இந்த அரை டிக்கெட் பையன் . பெயரை எழுதிக் கொடுத்ததும் ஆசிரியர் ’உடனே வரச்சொல்’ என்று சொல்லிவிட்டாரே” என்று வியப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கவேண்டும்.
ஓரளவு அதற்கான காரணத்தை என்னால் ஊகிக்கமுடிந்தது. காரணம் அந்த துண்டு காகிதத்தில் நான் என் பெயரை எழுதிக் கொடுக்காமல் வேறு ஒன்றை எழுதிக் கொடுத்தேன்.
அது என்ன?

இருங்கள் முதலில் ஒரு சின்ன தகவலைக் கூற வேண்டும். அந்தகால விகடன் தலையங்கங்கள் சற்று வித்தியாசமாய் இருக்கும். விகடன் ஆசிரியரை ஸ்ரீமான் பொதுஜனம் சந்தித்து, அன்றைய நாட்டு நடப்பைப்பற்றி ஏதாவது கேட்க,. அதற்கு விகடன் ஆசிரியர் பதில் கூறுவது போல் (லேசான நகைச் சுவையுடன்) தலையங்கங்கள் இருக்கும்.
ஆகவே நான் என் பெயருக்குப் பதில் காகிதத்தில் "ஸ்ரீமான் பொதுஜனம்" என்று குறும்புத்தனமாக எழுதிக் கொடுத்திருந்தேன்..

நகைச் சுவை உணர்வு உள்ள தேவன் ”யார் இந்த விஷமக்காரன்” என்ற ஆர்வத்துடன் "வரச் சொல்" என்று உடனே சொல்லிவிட்டார். தேவன் அறைக்குள் நுழைந்ததும், அவர் சட்டென்று எழுந்து நின்று உற்சாகமாக ”வாங்கோ, வாங்கோ” என்று என்னை அழைத்தார்.

மறக்கமுடியுமா அந்த அற்புத கணத்தை?. அறையில் வால் வாலாக "கேலி" புரூஃப்கள். அச்சு மையின் மணம். எங்கு நோக்கிலும் காகிதங்கள், புத்தகங்கள். எதிரே தூய கதர் அரைக் கைச் சட்டையில் என் அபிமான எழுத்தாளர்! இரண்டு கைகளையும் பிடித்து என்னை வரவேற்றார். அந்தக் கணம் அவரது எழுத்துத் திறமையும் நகைச்சுவை திறனும் மின்சாரம் போல் என் உடலில் பாய்ந்திருக்கவேண்டும்.

அப்போது நான் மாணவன்.. எழுதும் ஆர்வத்தைவிட பத்திரிகைகளைப் படிப்பதில் தான் மிக்க ஆர்வமுடையவனாக இருந்தேன். என்னைப் பற்றியும், அவருடைய கதைகளைப் நான் பற்றியும் சிறிது நேரம் பேசிவிட்டுப் புறப்பட்டேன். "அடிக்கடி வருவேன்" என்றேன். "வாருங்கள் " என்றார். அதன் பிறகு பல தடவை அலுவலகம் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன், ஓவியர் கோபுலுவை அறிமுகம் செய்து வைக்கும்படி ஒரு சமயம் அவரைக் கேட்டுக்கொண்டேன். "அதுக்கென்ன . வாங்கோ " என்று அழைத்துக் கொண்டு போனார் கோபுலுவின் அறைக்கு! (அறை என்பதைவிட அரை என்பதே சரியாக இருக்கும். எவ்வளவு பெரிய மேதை அவர். அவ்வளவு குறுகிய இடத்தில் இருந்துகொண்டு அற்புதமான கார்ட்டூன்களையும். தெய்வ உருவங்களையும் வரைந்திருக்கிறார்.) அழைட்ய்ஹ்துக் கொண்டு போய் என்னை அறிமுகம் செய்து வைத்தார். கோபுலுவும் நானும் என்று கட்டுரை எழுதும் அளவுக்கு கோபுலுவிடம் என் நட்பு வளர்ந்தது! அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.).

தேவனுடன் என் நட்பு மேலும் நெருக்கமடைய உதவியது விகடன் இதழில் வந்த கதையில் இருந்த ஒரு சிறிய தவறுதான்.

விகடனில் வந்த ஒரு கதையில் ” ....அன்று அமாவாசை. ஆதலால் சுப்பிரமணிய ஐயர் இரவு பலகாரத்தை முடித்துவீட்டு, வாசலில் கயிற்றுக் கட்டிலை எடுத்துவந்து போட்டுக் கொண்டு, மேல் துண்டை சுருட்டி தலைக்கு வைத்துக் கொண்டு விச்ராந்தியாகப் படுத்துக்கொண்டார். குளிர் காற்று லேசாக வீசிக்கொண்டுருந்தது. தூரத்தில் யாரோ பேசிக் கொண்\டிருந்தது லேசாக மிதந்து வந்து காதில் விழுந்தது.) ஆகாயத்தில் நக்ஷத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. பால் போல் இருந்த நிலவோளி மனதுக்கு இதமாக இருந்தது.."
இதைப் படித்துக் கொண்டு வந்த நான் சட்டென்று படிப்பதை நிறுத்தினேன். "
என்னது? பாராவின் முதல் வரியில் அமாவாசை;. கடைசி வரியில் பால் நிலவா?
அடுத்த வாரம் தேவனைச் சந்திக்கச் சென்றேன். பொதுவாகப் பேசிவிட்டு "அமாவாசை " விஷயத்தைச் சொன்னேன்


அதிர்ச்சி அடைந்தார். குறிப்பிட்ட இதழை தேடி எடுத்துப் பார்த்தார்.
"ஆமாம் .... தப்பு தான் ...." என்று சொன்னார். ”ரொம்ப தேங்க்ஸ்... நல்லகாலம். எங்கிட்டே சொன்னீங்க .... இனிமே ஒண்ணும் செய்ய முடியாது." என்றார்.
உதவி ஆசிரியரின் கவனக் குறைவு என்றாலும் பொறுப்பு தன்னுடையதாக அவர் கருதினார். மிகவும் சஞ்சலமடைந்தார்.
இந்த தவறு, எங்களுடைய நட்பிற்கு மேலும் நெருக்கம் தந்தது. அது மட்டுமல்ல, நான் கதை ஒன்றும் எழுதி அவரிடம் கொடுக்காததால் என்னை நெருங்கவிட்டார் என்றும் நினைக்கிறேன்.

* * * *

செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள ஆத்தூர் கிராமத்தில் இருந்த ராமகிருஷ்ணா பள்ளியில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா நடத்துவார்கள், அந்த காலகட்டத்தில் ஆத்தூரில் விவசாயப் பண்ணை வைத்திருந்த திரு. ஸ்ரீனிவாஸ ஐயர் (சோவின் தந்தையார்) விழாவை தடபுடலாக நடத்த உதவி வந்தார். பிரபல பாடகர்களைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வார். கல்கி போன்றவர்களை தலைமை வகிக்கச் சொல்வார். அவ்ருடைய பண்ணையில் தடபுடலக விருந்து அளித்டது உபசரிப்பார்.
அப்படி ஒரு நவராத்திரி வ்ழாவின்போது. கல்கி தலைமை வகித்தார். அன்று தேவன் அவர்களையும் அழைத்திருந்தார். .தேவனும் வந்தார். அவ்வளவுதான் தேவனுடன் அப்படியே ஒட்டிக்கொண்டேன். விழா முடிந்ததும் இரவு உணவு இருந்தது. நான் சாப்பிடப் போகவில்லை. சாப்பிடச் சென்ற தேவன், என்னைக் காணாமல் வெளியே வந்து ”உள்ளே வாங்க” என்று கூப்பிட்டுப்போய் பக்கத்தில் உட்காரச் செய்தார்.
பல விஷயங்களைச் சொன்னார். தன் கதைகள் புத்தகமாக வராத வருத்தத்தையும் பேச்சுவாக்கில் சொன்னார். நிறைய பக்தி விஷயங்களைப் பேசினோம்..முருகன் பெருமைகளைச் சொன்னார். தன்னிடமிருந்த அரிய வலம்புரி சங்கைப் பற்றிச் சொன்னார். அவர் பேசிய பல விஷயங்கள் இப்போது நினைவில்லை. நானும் ”அவரைப் ப்ற்றி ஒரு கட்டுரை எழுதுவேன், எனக்கும் அந்த தகுதி வரும்” என்று நான் அப்போது கனவிலும் கூட நினைத்ததில்லை. அரண்மனைக்காரத்தெரு செயின் மேரீஸ் ஹாலுக்கு வெளியே நின்று ஆர்வத்துடன் பார்த்த அதே அரை டிக்கெட்டு பையனாகத் தான் அவருக்கு எதிரே எப்போதும் இருந்து வந்தேன்.

* * * * * *

தேவன் தன் தொடர்கதை அத்தியாயங்களின் தலைப்பில் ஏதாவது ஒரு இலக்கியத்திலிருந்து அழகிய இலக்கியப் பாடலைப் போடுவார். அந்த பாடல்களை எல்லாம் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வேன். உதாரணத்திற்கு ஒரு பாடலைத் தருகிறேன்.
தடித்த ஓர் மகனை தந்தையீண்டு அடித்தால, தாய் உடன் அணைப்பாள். தாய் அடித்தால்
பிடித்து ஒரு தந்தை அணைப்பான், இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனித நீ ஆதலால், என்னை
அடித்தது போதும் அணைத்திட வேண்டும். அம்மை அப்பா இனி ஆற்றேன். (திரு அருட்பா.)

பக்திரசம் ததும்ப, வடபழனி முருகனைப் பற்றி இவர் எழுதிய பல வர்ணனைகளைப் படித்து, நான் முருகனின் தீவிர பக்தனாகிவிட்டேன். பின்னால். டில்லி போனபிறகும் சென்னை வரும்போதெல்லாம் வடபழனி முருகன் கோவிலுக்கு போகாமல் இருக்கமாட்டேன்.
தேவனின் கதாபாத்திரமான குடவாசலை மனதில் வைத்துக் கொண்டுதான் என்னுடைய கமலா-தொச்சு கதைகளில் வரும் என் மைத்துனன் தொச்சுவை உருவாக்கினேன். தொச்சுவும் இன்று வாசகர்களின் அபிமானம் பெற்ற கேரக்டராகி விட்டான்!

"தேவன் அறக்கட்டளையினர் 2006'ல், , எனக்கு தேவன் விருது அளித்தார்கள், இவ்வளவு பெரிய கௌரவம் எனக்கு கிடைக்கும் என்று நான் கனவு கூட கண்டதில்லை!

இறைவா,தேவனுடன் பழக எனக்கு வாய்ப்பு தந்த உனக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?
பின் குறிப்பு. தேவன் எழுதிய கதை. கட்டுரைகளை எல்லாம் சென்னை அலையன்ஸ் பிரசுரம் பிரசுரித்துள்ளார்கள்.


பொங்கல் பரிசாக கடுகு அவர்கள் எழுதும் அடுத்த 'நானும்' கட்டுரையை உங்களை போல நானும் எதிர்ப்பாக்கிறேன்.


மற்ற கடுகு எழுதியதை இங்கே படிக்கலாம்

16 Comments:

மானஸ்தன் said...

இட்லிவடை குழுமத்திற்கும், கூடிக் கும்மி அடிக்கும் வாசகர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ரிஷபன் said...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

MugaMoodi said...

Amazing column; no wonder why Kadugu sir's writing has Devan's flavour. Sir, innum neraya ezhuthuga...idli vadayil kaduga thaalippu pramaadham..besh..besh

யதிராஜ சம்பத் குமார் said...

என்னென்று சொல்வது? முதன் முதலாக கடுகு அவர்கள் இட்லிவடையில் “..... நானும்” கட்டுரை எழுதத் துவங்கிய போது, தேவனும் நானும் கட்டுரையை எழுத வேண்டும் என விண்ணப்பித்திருந்தேன். என்னுடைய மனோரதம் இவ்வளவு விரைவாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை. கடுகு அவர்களுக்கு, இட்லிவடைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இப்புத்தாண்டு அனைவருக்கும் எல்லா நலங்களையும் பெற்றுத் தந்து, பாரத தேசத்தைப் பற்றியுள்ள தீய சக்திகளை சம்ஹரித்து, எங்கும் அமைதி, அமைதி, அமைதி என்பதே நிலவ வேணுமாய் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

அனைவருக்கும் இந்த 2010-ஆம் ஆண்டு மட்டுமல்லாது இனிவரும் ஆண்டுகளும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

Anonymous said...

அன்புள்ள இட்லி-வடைக்கு,
தேவன் அவர்கள் கட்டுரை நான் எழுதியதுதான் என்றாலும், இப்போது படிக்கும்போது என் கண்களில் லேசாக நீர் திரையிட்டது.
பல அரிய வாய்ப்புகளையும், அனுபவங்களையும், சந்திப்புகளையும், கொஞ்சம் திறமையையும் தந்த இறைவன், வலையுலகில் முன்னணியில் உள்ள இட்லி வடையின் ஆதரவையும் எனக்குப் பெற்றுத் தந்தானே, அதற்கு நான் எப்படி நன்றி தெரிவிப்பேன்? -- ----கடுகு

ஸ்ரீராம். said...

கடுகு அவர்கள் கட்டுரை ரசித்துப் படித்தேன்..ஓவியர் கோபுலு பற்றியும் விரைவில் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்...

jaisankar jaganathan said...

இட்லிவடை குழுமத்திற்கும், கூடிக் கும்மி அடிக்கும் வாசகர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

IdlyVadai said...

//வலையுலகில் முன்னணியில் உள்ள இட்லி வடையின் ஆதரவையும் எனக்குப் பெற்றுத் தந்தானே, அதற்கு நான் எப்படி நன்றி தெரிவிப்பேன்? -- ----கடுகு//

இதை படித்த போது நிஜமாகவே கண்கள் பணித்தது ,இதயம் இனித்தது. உண்மையில் நாங்கள் ( இட்லிவடை குழுவினர் + வாசகர்கள் ) தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Litmuszine said...

Not relevant to this post!

Did you see the Mani sankar Aiyer- Karan interview in which Karan revealed that 'A.R.Rehman' was dullest/stupidest person he ever interviewed??

If the video is not working, try the podcast.

R. Jagannathan said...

I pray for a very Happy New Year to IV and all its followers. After your providing Srimaan Kadugu's blogsite ID, I have been following it regularly. His Devanum Naanum is very well written and we felt his experience as ours. No doubt it is a matter of pride to have known the great Devan and be his friend. After some decades, I am sure someone will write Kadugum Naanum with pride.

-R. Jagannathan

kggouthaman said...

தேவன் கதைகளை முதலில் படித்து இரசித்துவிட்டு, ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த நாட்களில், பிரிட்டிஷ் கவுன்சிலில் - சில நாவல்கள் படித்த காலத்தில் - ஸ்ரீமான் சுதர்சனத்தின் மூல நாவல் எது என்று தெரிந்துகொண்டேன்.

Anonymous said...

ஸ்ரீமான் சுதர்சனத்தின் மூல நாவ்ல் எது?..கேள்விப்பட்டதில்லையே... ரஜத்தி மணொரதம் MRS BLANDINGS BUILDS HER DREAM CASTLE என்று சொல்வார்கள். - டில்லி பல்லி

Kameswara Rao said...

Hi IV

Wishing you and our readers a HAPPY AND PROSPEROUS 2010

Sreemaan Kadugu's writings are very good eager to read his other "Naanums" its a great pleasure that Mr. Kadugu has worked with Devan and seen Mr.Kalki
hope he writes his experiences with mr kalki also

kamesh

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்ல நல்ல கட்டுரைகளை வாரி வழங்கப் போகும் கடுகு சாருக்கும் இட்லிவடைக்கும் என் நன்றிகள்! (வரப் போகும் பதிவுக்கு "முன்"னூட்டம் போட்டவன் என்ற விருதை எனக்கு நானே வழங்கிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்)

kggouthaman said...

// ஸ்ரீமான் சுதர்சனத்தின் மூல நாவ்ல் எது?..கேள்விப்பட்டதில்லையே... //
The book is:
I'd do it again - written by Frank Tilsley.