பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 18, 2010

ASIAN OF THE YEAR

ரீடர்ஸ் டைஜஸ்ட்! இம்மாதாந்திரியைப் பற்றி அநேகருக்கு அறிமுகம் தேவையில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சியில் அகப்பட்டு, தன்னுடைய சுய அடையாளத்தை இழக்காமல், இன்னமும் அதே பொலிவுடன் திகழும் ஒரு மாத சஞ்சிகை. சமுதாயத்திற்கு எவ்வகையிலாவது உண்மையிலேயே உபகாரமாக இருப்பவர்களை இனம் கண்டு கவுரவிப்பதை இவ்விதழ் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அவ்வகையில், ”இவ்வருடத்திற்கான சிறந்த ஆசியர்கள்” (ASIAN OF THE YEAR) விருதை சமீபத்தில் சிலருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. அவ்விருதைப் பெற்றவர்களுள் ஒருவரைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

நன்னுஜி, தில்லியின் ஒரு சேரி பகுதியைச் சேர்ந்த நடுத்தர வயது கூலித் தொழிலாளி, தன்னுடைய ரேஷன் அட்டையைத் தொலைத்து விட்டிருக்கிறார். இதனால் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் மாதாந்திர ரேஷன் பொருட்களைப் பெற இயலாத நிலைமை. அதனால் வேறு ஒரு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அது வரவில்லை. அதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளை நேரில் கண்டும் சரியான பதிலில்லை. காரணம், அவர்கள் கேட்ட லஞ்சத் தொகையை நன்னுஜி தர மறுத்ததே!

அத்தொகையைத் தந்திருப்பதன் மூலம் நன்னுஜி தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் செய்தது வேறு. உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனமான “பரிவர்த்தன்” என்ற அமைப்பைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டிருக்கிறார். அங்கிருந்தவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், ஏன் அவருடைய குடும்ப அட்டை மறுக்கப்பட்ட்து? என்ற காரணத்தைக் கோரி விண்ணப்பிக்கச் செய்தனர். விண்ணப்பம் அளித்த சில நாட்களுக்குள் இவருக்கு ரேஷன் அட்டை வந்து விட்டது.

இந்த “பரிவர்த்தன்” அமைப்பின் சூத்ரதாரி, அர்விந்த் கெஜ்ரிவால் என்ற 41 வயது நபர். இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடியில் மெக்கானிகல் இஞ்சினியரிங்கில் பட்டம் பெற்ற இவர், தன்னுடைய சக வகுப்புத் தோழர்களைப் போல் அமெரிக்காவிற்குச் செல்லாமல், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி IRS (Indian Revenue Service) தேறியிருக்கிறார். பிறகு வருமானவரித் துறையில் கூடுதல் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அங்கு சக அதிகாரிகளின் ஊழல்கள் மற்றும் முறைகேடான வழியில் வருமானமீட்டுதல் போன்ற செயல்கள் இவரை வெறுப்படையச் செய்திருக்கின்ற்ன.

இச்சமுதாயச் சீர்கேடுகளைக் களைய வேண்டுமென்ற உன்னதமான நோக்குடன் தனியொரு மனிதராக இவர் 2000 ஆவது ஆண்டில் ஸ்தாபித்த்துதான் இந்த “பரிவர்த்தன்” அமைப்பு. தகவல் அறிவதற்கு பிரத்யேகமாக ஒரு சட்டம் வேண்டுமென்று முதன் முறையாக இவ்வமைப்பின் மூலம் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பிறகு 2005 ஆம் ஆண்டு அச்சட்டம் நடைமுறைக்கு வந்த்து, அதே ஆண்டில் தனது IRS பணியை ராஜிநாமா செய்து விட்டு முழுநேர “பரிவர்த்தன்” ஊழியராகிவிட்டார்.

ஒருமுறை, தில்லி மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு இவருடைய பரிவர்த்தன் அமைப்பினர் கூடி, அங்கு வரும் பொதுமக்களிடம், தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள லஞ்சம் கொடுக்காதீர்கள். இலவசமாகவே உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து தர அதிகாரிகளை வற்புறுத்துங்கள் என பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.

அதிலிருந்து, பரிவர்த்தன் அமைப்பின் மூலம் லஞ்சத்திற்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியா முழுவதிலும் மேற்கொண்ட இவர், ஆயிரக்கணக்கான பொதுமக்களை லஞ்சத்திற்கெதிராக குரல் கொடுக்கச் செய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, அவர்களது பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்து வைத்திருக்கிறார். அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு சிறந்த முன்மாதிரி, ஒரு மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மகசேஸே விருது பெற்றவருமான கிரண் பேடி தெரிவிக்கிறார்.

இந்நிறுவனம் எந்த அமைப்புகளிடமிருந்தும் நன்கொடை பெறுவதில்லை. மாறாக, இதற்கென இருக்கும் உறுப்பினர்கள் அதன் தேவைகளை கவனித்துக் கொள்கின்றனர். தவிர இவ்வமைப்பின் ஊழியர்களுக்கான சம்பளம், இவ்வமைப்பின் சேவை மனப்பான்மையுடைய நலம் விரும்பிகளால் தரப்படுகிறதாம். மேலும் சில நேர்மையான அரசாங்க அதிகாரிகளும் மனமுவந்து இவ்வமைப்பிற்கு நிதியுதவி செய்கின்றனர் என்றும், தவிர அவர்கள் அனைவருமே தனிமனித சமுதாயத்தின் முன்னேற்றத்தில் விருப்பமுடையவர்கள் எனவும் தெரிவிக்கிறார்.

நமது கடின உழைப்பின் மூலமே நமது ஜனநாயகத்தைத் தழைய வைக்க முடியும் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை.

நன்றி-ரீடர்ஸ் டைஜஸ்ட், தமிழில் யதிராஜ்


இவரைப் பற்றிப் படித்ததும், நம்ம ஊர் ட்ராபிக் ராமசாமி நினைவுதான் வந்தது. இவரைக் கூட ஏதாவதொரு பத்திரிக்கை, ரீடர்ஸ் டைஜஸ்டே கூட அடுத்த ஆண்டு கவுரவிக்கலாம். இவர் நிஜமான ஆயிரத்தில் ஒருவன்!30 Comments:

kggouthaman said...

சமுதாயத்திற்கு உதவுகின்ற, குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவுகின்ற இதுபோன்ற மனப்பான்மை உடையவர்கள் என்றென்றும் நன்றாக இருக்க வேண்டும். நம்ப ஊரு தகிடுதத்த அரசியல்வாதிகள் - இவர்களைப் போன்றவர்களைப் பார்த்துப் பாடம் கற்க வேண்டும்.

sathish said...

Good post ethiraj.Really we need some pepole like mr aravind in tamilnadu.
iv
I thought its your orginal post and i woderd becasue your (original) post will be like a. o
review with masala photos.later when i scroll down and relaised its ethiraj.Any good post
Yellow paint comment:
why cann't you do that one atleast in idly vadai
(any readers who reading both iv and R.G ,pl forgive me for copmparing iv to rg level

Anonymous said...

// sathish said...
Good post ethiraj.Really we need some pepole like mr aravind in tamilnadu.
iv
I thought its your orginal post and i woderd becasue your (original) post will be like a. o
review with masala photos.later when i scroll down and relaised its ethiraj.Any good post
Yellow paint comment:
why cann't you do that one atleast in idly vadai
(any readers who reading both iv and R.G ,pl forgive me for copmparing iv to rg level
//

நீங்க சொல்ல நினைத்ததை தமிழிலேயே சொல்லலாமே. இப்போது எழுதி இருப்பதில் இருந்து என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கவில்லை.

ஜெயக்குமார் said...

நல்லவர்கள், நாட்டை நேசிப்பவர்கள், புரையோடிபோன ஊழலை களைய முயல்வோர் இந்தியாவில் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். ஆனால் நடக்கின்ற அக்கிரமங்களையும், அநியாயங்களையும் கணக்கில் எடுத்தால் இப்படிப்பட்டவர்கள் இருப்பதே தெரிவதில்லை. இருப்பினும் ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற இதழ்களாவது இதுபோன்ற பணிகளைச் செய்கிறதே என சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இந்தியாவின் விருதுகளும், பட்டங்களும்கூட லஞ்சத்தால் பெறப்படும்போது பரிவர்த்தன் போன்ற அமைப்புகள் கண்டுகொள்ளப்படாமல் போவது ஆச்சரியமல்லவே..

maddy73 said...

I appreciate the responsibilities taken by சூத்ரதாரி, அர்விந்த் கெஜ்ரிவால். Really it remains of our hero "Traffic Ramasaamy".

Thanks for useful & informative post IV.

Anonymous said...

Appdina Dr. Vijay
Dr. Ramadoss

ivanga ellam Asian of the year vaanga qualified illiya? :-(

Anonymous said...

என்ன,என்ன சொன்னீங்க? டிராபிக் ராமசாமியை எந்தப் பத்திரிகையாவது கௌரவிக்கலாம் என்றா?.. அப்புறம் அதற்கு அரசு விளம்பரம் வருமா? .?

Anonymous said...

தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் குடும்பநலனுக்காகச் செயல்படுவதால் அதன் பல்கலைக்கழக அங்கீகாரத்தை வாபஸ் பெறுவதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

Link: http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1858

சைவகொத்துப்பரோட்டா said...

அர்விந்த் கெஜ்ரிவால், ட்ராபிக் ராமசாமி போன்றவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
வளர்க இவர்கள் பணி.

Anonymous said...

தமிழ்நாட்டில் - இன்றையச் சூழ்நிலையில் - இதெல்லாம் நடக்காது.
சென்னை சங்கமம், தமிழ் சங்கமம், காதலர் சங்கமம், காதலியார் சங்கமம் போன்ற சங்கமச் செய்திகளும், கல்யாண வீட்டில் வைக்கும் ஒப்பாரிகளும் - நான்கு பத்தித்தலைப்பில் அச்சு ஊடகங்களும், ஒளி ஊடகங்களும் சூடான செய்திகளாக வெளிவரும்போது, தன்னலமற்ற சமுதாயத்தொண்டரைப் பற்றி நீங்களும் நானும் ஒளிமங்கிப்போன ரீடர்ஸ் டைஜெஸ்டும்தான் பேசிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
அ. நாமதேயன்

R.Gopi said...

//இவரைப் பற்றிப் படித்ததும், நம்ம ஊர் ட்ராபிக் ராமசாமி நினைவுதான் வந்தது. இவரைக் கூட ஏதாவதொரு பத்திரிக்கை, ரீடர்ஸ் டைஜஸ்டே கூட அடுத்த ஆண்டு கவுரவிக்கலாம். இவர் நிஜமான ஆயிரத்தில் ஒருவன்!//

------------

ட்ராஃபிக் ராமசாமி அவர்களுக்கு இது போன்றதொரு கவுரவம் கிடைத்தால் கோடிக்கணக்கான நம் போன்றவர்கள் பெருமை கொள்ளலாம்...

இட்லிவடை... வாழ்த்துவதில் என்ன வஞ்சனை... இவர் ஆயிரத்தில் ஒருவன் அல்ல... பல பல கோடிகளில் ஒருவன் என்று வாழ்த்துவோமே...

SUBBU said...

//நம்ப ஊரு தகிடுதத்த அரசியல்வாதிகள் - இவர்களைப் போன்றவர்களைப் பார்த்துப் பாடம் கற்க வேண்டும்//
இதெல்லாம் நடக்கின்ற காரியமா :((

விவேகானந்தன் said...

தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி முழுமையாய் தெரிந்துகொள்ள என்ன செய்யலாம்? நிறைய பேருக்கு தெரியவில்லை என்னையும் சேர்த்து. தெரிய படுத்தவும், எந்த துறைக்கு யார் யாரிடம் மனு கொடுக்க வேண்டும் என்பது போன்றவற்றை.

Anonymous said...

டிராஃபிக் ராமசாமி எந்த இனத்தை சேர்ந்தவர்?

IdlyVadai said...

//தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி முழுமையாய் தெரிந்துகொள்ள என்ன செய்யலாம்? நிறைய பேருக்கு தெரியவில்லை என்னையும் சேர்த்து. தெரிய படுத்தவும், எந்த துறைக்கு யார் யாரிடம் மனு கொடுக்க வேண்டும் என்பது போன்றவற்றை.//

புத்தகக் கண்காட்சியில் 25 ரூபாய்க்கு தகவல் அறியும் சட்டம் பற்றிய புத்தகம் விற்றார்கள். எல்லோரும் அதை வாங்கினார்கள். 3000+க்கு மேல் விற்றதாக சொல்லுகிறார்கள். நானும் வாங்கினேன், அதை பற்றி தனி பதிவாக இந்த வாரம் முடிந்தால் போடுகிறேன்.

வலைஞன் said...

Dear இட்லி வடை,

அப்படியே ஒரு பதிவு மறைந்த திரு ஜோதிபாசுவிற்க்கும் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
உயிருடன் இருக்கும் போதே தன் சமாதிக்கு இடம் "பிடித்து" வைத்துக்கொள்ளும் நம் ஒப்பற்ற பகுத்தறிவு (அ)சிங்கங்களுக்கு மத்தியில்,தன் உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக்கு அளித்துள்ள இந்த உயர்ந்த கம்யூனிஸ்ட் தலைவரை பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்
நன்றி

வலைஞன் said...

//டிராஃபிக் ராமசாமி எந்த இனத்தை சேர்ந்தவர்?//
"மனித"...(உண்மையான)

வலைஞன் said...

திரு சோவும், அர்விந்த் கெஜ்ரிவால் வழியை பின்பற்றலாம்.துக்ளக் பத்திரிக்கை நடத்துவதை விட இப்போதைக்கு இது பயனுள்ள வேலை.No offense meant to anyone pl.

vedhanarayanan said...

Nice post.

Why don't we elect man of the decade in TN. Let us not initate a survey here. Surveys have become very abundant now. I propose traffic ramaswamy , Dr swaminathan.....

வலைஞன் said...

//தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் குடும்பநலனுக்காகச் செயல்படுவதால் அதன் பல்கலைக்கழக அங்கீகாரத்தை வாபஸ் பெறுவதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.//

ஒடுக்கப்பட்ட இனத்தை எதிர்த்து உயர்சாதியினரின் சதி.ஒன்றுபட்டு முறியடிப்போம்.

maddy73 said...

//புத்தகக் கண்காட்சியில் 25 ரூபாய்க்கு தகவல் அறியும் சட்டம் பற்றிய புத்தகம் விற்றார்கள். எல்லோரும் அதை வாங்கினார்கள். 3000+க்கு மேல் விற்றதாக சொல்லுகிறார்கள். நானும் வாங்கினேன், அதை பற்றி தனி பதிவாக இந்த வாரம் முடிந்தால் போடுகிறேன்.//

waiting.. waiting for the information (post).

Anonymous said...

Do you guys know of any proposals/books about rooting out corruption other than RTI?. I heard K.G.Balakrishnan(CJI) himself, once saying Indian judiciary doesn't even have laws to confiscate the property of those who took bribes. Bribes are now more organised in government, there's a percent for everyone till the highest authority. I had to bribe, even to get my degree certificate from Madurai kamaraj university.

Anonymous said...

But readers digest Asian of the Year is "Jockin Arputham" of Darawi(Mumbai slum). http://www.readersdigest.com.sg/rd/rdhtml/en/magazine/mag_content.jsp?p=0&cid=7789

Please provide the link to readers digest for your story.

Anonymous said...

""But readers digest Asian of the Year is "Jockin Arputham" of Darawi(Mumbai slum). http://www.readersdigest.com.sg/rd/rdhtml/en/magazine/mag_content.jsp?p=0&cid=7789

Please provide the link to readers digest for your story.

""
எதிராஜ் or இட்லி வடைஇன் பதில் என்ன?

IdlyVadai said...

//""But readers digest Asian of the Year is "Jockin Arputham" of Darawi(Mumbai slum). http://www.readersdigest.com.sg/rd/rdhtml/en/magazine/mag_content.jsp?p=0&cid=7789

Please provide the link to readers digest for your story.

""
எதிராஜ் or இட்லி வடைஇன் பதில் என்ன?//

யதிராஜ் நாளை வந்து இதற்கு பதில் சொல்லுவார். அவர் எழுதியதில் "இவ்வருடத்திற்கான சிறந்த ஆசியர்கள்” (ASIAN OF THE YEAR) விருதை சமீபத்தில் சிலருக்கு வழங்கி கவுரவித்துள்ளது" என்று சொல்லியிருக்கார். அதனால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கலாம் என்பது என் எண்ணம்.
காத்திருப்போம்.

ஸ்ரீராம். said...

இதுமாதிரி எத்தனை அமைப்புகள் வந்தாலும் பணம் (லஞ்சம்) வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட ஆரம்பித்து விட்ட தமிழக மக்களை மாற்ற முடியுமா?

Anonymous said...

Hello Readers

Many wanted link to the original article.

Here is a link to the original article in RD Asia. Looks like you need membership to read the complete article.

http://www.readersdigest.com.sg/rd/rdhtml/en/magazine/mag_content.jsp?cid=7789

KCDesi

யதிராஜ சம்பத் குமார் said...

But readers digest Asian of the Year is "Jockin Arputham" of Darawi(Mumbai slum). http://www.readersdigest.com.sg/rd/rdhtml/en/magazine/mag_content.jsp?p=0&cid=7789

Please provide the link to readers digest for your story.//

அனானி குறிப்பிட்டுள்ளதும் சரிதான். ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் இவ்வாண்டு ஆறு பேருக்கு இப்பட்டத்தைக் கொடுத்துள்ளது. அதில் அனானி குறிப்பிட்டுள்ளவரும் அடங்குவார். வாரம் ஒன்றாக அறுவரையுமே எழுதலாமென்றிருந்தேன். அதற்குள் தனிப்பட்ட வேலைகளின் குறுக்கிட்டால் சிறு தடங்கல் ஏற்பட்டுவிட்டது.


இணைய பயனாளர்கள் சந்தா செலுத்தினால் தவிர அனைத்து கட்டுரைகளையும் ஆன்லைனிலேயே படிக்க முடியாது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இவரைப் பற்றிப் படித்ததும், நம்ம ஊர் ட்ராபிக் ராமசாமி நினைவுதான் வந்தது. இவரைக் கூட ஏதாவதொரு பத்திரிக்கை, ரீடர்ஸ் டைஜஸ்டே கூட அடுத்த ஆண்டு கவுரவிக்கலாம். இவர் நிஜமான ஆயிரத்தில் ஒருவன்!//

நான் அவரை கௌரவப் படுத்திட்டேன். http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_23.html

mommu said...

I saw this movie on the first date. Intially i was not liked this movie. After few day i got chance to read the Cholar articles in wikipedia (http://en.wikipedia.org/wiki/Chola_Dynasty). Really intresting articke & I very much eager to watch this movie again !. Yep in selvaragavans interview on 26/1/2010 he specified about the second part of this movie.. All shooting has done and expect to be released in the same year..