பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 07, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 7-1-2010

புத்தாண்டில் முனியின் முதல் கடிதம்...

அன்புள்ள இட்லிவடை,

ஆயிற்று, 2010 வந்தாச்சு. புத்தாண்டு வாழ்த்துகள்.

கடந்த 2009 ஆன் ஆண்டு தமிழ் பத்திரிகைகளில் இடம்பெற்ற பிரபலம் யார் என்று ஒரு போட்டி வைத்தால் அதற்கு சரியான விடை நீ நினைப்பதுபோல் ரஜினியோ, கமலோ, அசினோ, நயனோ இல்லை அது பிரபாகரன் தான். எப்படியோ அவரைப் பற்றி நியூஸ் போடவில்லை என்றால் தமிழ் பத்திரிகைகளுக்குத் தூக்கம் வராது. இந்த முறை புத்தகக் கண்காட்சியில் எல்லா ஸ்டால்களிலும் பிரபாகரன் பற்றி இரண்டு புத்தகமாவது இருக்கிறது; போன வருடம் வீரப்பன், சாரி வீரப்பர். பிரபாகரன் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய இயந்திரத் துப்பாக்கியை சிங்கள ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று படத்துடன் செய்தி வெளியிட்டது. பிரபாகரனுக்கு தமிழ் மீடியா மிகவும் கடமைப்பட்டுள்ளது.

பத்திரிகை மீடியாவுக்கு சம்பந்தமில்லாமலும் தமிழகத்தில் என்னென்னவோ புரட்சி எல்லாம் நடக்கிறது. காந்தி பற்றி எழுதிக்கொண்டிருந்த ஜெயமோகன், சாரு திடீர் என்று தன் புத்தகத்தை மேடையில் கிழித்ததால்- அதற்குமுன் சாரு ஆளைத்தான் கிழிகிழியென்று கிழித்துக் கொண்டிருந்தார்-- உடனே நான் இனிமேல் உயிர்மையில் எழுத மாட்டேன் என கலைஞர் போல அறிக்கைவிட்டு தலை முழுகிவிட்டார். விசிலடிச்சான் குஞ்சுகளை திருப்திப்படுத்த சாரு எடுக்கும் வழமையான ஸ்டண்டுக்கு வழவழா கொழகொழாவென்று மனுஷ்யபுத்திரன் ஒரு ஃபீலிங்ஸ் காவியச் சிந்து பாடியிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் யார் பெரிய கோமாளி என்று போட்டி வைத்தால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இவர்கள்தான் இப்படி என்றால் ஜெயமோகன், சாருவை வைத்து, 'நானும் பெரிய ரௌடிதான்!' என்று காட்டநினைக்கும் முற்போக்கு வலைப்பதிவர்கள் தங்கள் 'கருத்துகளை'ச் சொல்ல ஆரம்பித்துவிட ஆங்காங்கே பிற்போக்கு நாற்றம். என்னவோ இவர்கள்தான் இலக்கிய உலகை எடுத்துநிறுத்துவதுபோலவும், கருத்துச் சொல்லாவிடால் காலை விடியாதுபோலவும்... ஒரே ஆறுதல், இந்தக் குப்பைகளை எல்லாம் மெஜாரிடி தமிழ் மக்கள் படிப்பதில்லைல்; இல்லை என்றால் இறைவன்தான் இவர்களைக் காக்க வேண்டும்.

"இறைவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று, எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்"-- இது ஜக்குபாய் டைட்டில் பஞ்ச். ஆனால் தற்போது சரத்குமார், ஸ்ரேயா நடித்துள்ள படம் "ஜக்குபாய், ஜனவரி மாத இறுதியில் வெளியாகவிருந்த சூழ்நிலையில் இந்தப் படத்தின் திருட்டு வி.சி.டி, மற்றும் டி.வி.டி.க்கள் விற்பனையாகின. "இறைவா திருட்டு விசிடிகளிடமிருந்து காப்பாற்று, ஹீரோக்களின் சம்பளத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று இருக்க வேண்டும். உடனே கண்டனக் கூட்டம் போட்டுப் பேசியிருக்கார்கள். அதில் ரஜினி, "திருட்டு வி.சி.டி.க்கள் வருவதற்கு யார் காரணம்? எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது? நம் ஆட்கள்தான் (சினிமாக்காரர்கள்) இந்தத் தவறை செய்கிறார்கள். நமக்குள் ஒற்றுமை இருந்தால் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கலாம்" என்று பேசியிருக்கிறார். ஒற்றுமை இல்லை என்று எதை வைத்துச் சொல்லுகிறார் என்பதையும் அவரே சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

ரஜினி பற்றிச் சொல்லிவிட்டு கமல் பற்றிச் சொல்லவில்லை என்றால்... கமல் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? " திருட்டு வி.சி.டி. மூலம் சம்பாதிப்பவர்கள், அந்தக் கருப்புப் பணத்தை என்ன செய்வார்கள்? கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில் போடுவார்கள். அதையடுத்து..? தேச விரோத செயல்களுக்குத்தான் இதுபோன்ற கருப்புப் பணம் உதவுகிறது. நல்ல காரியத்துக்குப் போய்ச்சேருவதில்லை. உங்கள் தலையில் விழும் குண்டுகள் தயாரிக்கத்தான் இந்தப் பணம் உதவுகிறது என்று மக்களுக்கு உணர்த்த வேண்டும்" என்ன சொல்ல வருகிறார் கமல்? மும்பையில் தான் இந்த மாதிரி குண்டுகள் அதிகம் வெடிக்கிறது என்பதால் இதற்கு நிச்சயம் மும்பை மாமி பதில் சொல்லுவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

'வேட்டைக்காரன்' திரைப்பட விசிடி வேட்டையில் தமிழக போலீசார் காட்டும் மும்முரத்தை சன் டிவியில் தினமும் காண்பிக்கின்றனர். மற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் வாக்கை மற்றவர்களின் பட விசிடி வேட்டையிலும் போலீசார் காண்பிக்கலாம் அல்லது விசிடியை முற்றிலும் ஒழிக்க அனைத்துத் தயாரிப்பாளர்களும், படம் எடுத்தவுடன் அதனை சன் பிக்ஸர்ஸிற்கு விற்று விடலாம். இதனால் திருட்டு விசிடி என்பது குடும்பப் பிரச்சனையாகி, விரைவில் ஒழித்துக் கட்டப்படும்.

சரி, திரைப்பட விருது வழங்கும் விழாவில் விஜய், அஜீத் த்ரிஷா, நயன்தாரா என ஏகப்பட்ட கலர் ஃபுல் பிரபலங்கள் மிஸ்ஸிங். ஏன் என்று உனக்காவது தெரியுமா?

அகி என்ற நிறுவனம் இளையராஜாவின் 2000 ஆவது வருடம் வரைக்கும் இசையமைத்த பாடல்களுக்கான பிரத்யேக உரிமையை வைத்துள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி சீரியல்கள், விளம்பரப் படங்கள், செல்பேசி நிறுவனங்களில் காலர் டியூன்கள் போன்றவை அனுமதியில்லாமல் பயன்படுத்தப்படுவதால் அவர்களின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. அதே போல 2000 ரூபாய்க்கு இளையராஜா பற்றிப் பேசி பிழைப்பு நடத்துவதற்கும் இந்தத் தடை உண்டு என்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

நேற்றைய தினம் கூகிள் நிறுவனம் தனது தயாரிப்பான செல்பேசியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனிற்கு பெரும் போட்டியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கூகிள் நிறுவனம் மொபைல்களுக்கான ஆபரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைத்து வெளியிட்டது. அது பரவலாக மோடோரோலா மற்றும் சாம்சங் நிறுவனத்தால் அதிக அளவு அவர்களது செல்பேசியில் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் கூகிள், பிரபல மொபைல் தயாரிப்பாளர்களான HTC யுடன் இணைந்து தயாரித்த தனது முதல் செல்பேசியை சந்தையில் இறக்கியுள்ளது. 1GHz ஸ்நாப்டிராகன் பிராசஸர், 5 மெகா பிக்ஸல் கேமரா, மற்றும் 9.4 செமீ டச் ஸ்க்ரீன் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை $580. விரைவில் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இங்கிலாந்திற்கும் வரப் போகிறதாம்.

நம்ப சிதம்பரம் எஸ்.எம்.எஸ். பிரியராம். செல்போனில் பேசுவதைவிட அதன்மூலம் குறுந்தகவல் அனுப்புவதுதான் அதிகம். சோனியாஜிக்கு சூடான அரசியல் தகவல்கள் கூட குறுந்தகவல் மூலம்தான் அனுப்புவார் ப.சி.! பேசுவதற்கு பயம் என்றும் காரணம் சொல்லுகிறார்கள். அப்படியா?

இனிமே மிஸ்டு கால் வந்தால் அது உன் காதலியிடமிருந்து இருக்காது. வேறு ஏதாவது போலியிடமிருந்து இருக்கலாம் என்று ஏர்டெல் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. ஆகவே +92 என தொடங்கும் சில எண்களில் இருந்து உனக்கு மிஸ்டு கால் வந்தால் 'அவங்களிடமிருந்து' என்று நினைத்து திரும்ப அழைக்காதே. ஜாக்கிரதையாக இருக்கவும். பெண்களுக்குத்தான் இந்தப் பிரச்சினையே இல்லை. அவர்கள்தான் எல்லாருக்கும் மிஸ்டுகால் போடுவார்கள்.


முருகதாஸ் திரும்பவும் கஜினியை ஹிந்தியில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அஜ்மல் கசாப் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஃபீல் செய்கிறார். இவர் கனவு பலிக்குமா?

லிபர்ஹான் அறிக்கை 17 ஆண்டுகள் கழித்து வந்ததில் பலருக்கு சந்தோஷம். ஆனால் ராமருக்குத்தான் கொஞ்சம் வருத்தமாம். நான் வனவாசம் இருந்ததே 14 ஆண்டுகள் தான், இந்த ரிப்போர்ட் வந்தது அதைவிட அதிகமாக இருக்கிறதே; என் சாதனையை அசால்டாக லிபரன் முறியடித்துவிட்டார் என்று வருத்தமாம்.


மன்மோகன் சிங் ரொம்ப நல்லவர். தவிர, அவர் ஒரு மாடல் பிரதமர் என்று கேள்விப்படிருக்கிறோம். அதற்கு அர்த்தம் இப்பொழுதுதான் புரிந்தது


ICC க்கு எப்போதுமே ஆஸ்திரேலிய பாசம் அதிகம். சென்ற மாதம் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் போது, சுலைமான் பென் என்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்து வீச்சாளருக்கும், ப்ராட் ஹாடின், மிட்செல் ஜான்ஸன் ஆகியோருக்குமிடையே மைதானத்தில் வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டு சிறிய கைகலப்பு வரை சென்றது. தவறு இரு அணியினரின் மீதும் சரிபாதியளவில் இருந்த போதும், சுலைமான் பென்னிற்கு 50% அபராதம் மற்றும் இரண்டு போட்டிகளில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டது. அதே போட்டியின் கடைசி நாளன்று கிறிஸ் கெயிலிடம், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். ஆனால் ICC ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையுமே தண்டிக்கவில்லை. பெயருக்காக 20% அபராதம் மட்டும் விதித்து விட்டுவிட்டது. இத்தனைக்கும் ஆஸ்திரேலிய காப்டன் ரிக்கி பாண்டிங் உட்பட அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களுமே மைதான ஒழுங்கீனத்திற்குப் பெயர் போனவர்கள். ICC யின் இந்த பாரபட்சமான போக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் பத்திரிக்கைகளில் பொரிந்து தள்ளி விட்டனர்.

புத்தகக் கண்காட்சியில் சில பதிப்பகங்கள் போலிப் பெயரில் பல ஸ்டால்களை வைத்து ஒரே புத்தகங்களை விற்பது எரிச்சலாக இருக்கிறது என்று வாசகர்கள் சொல்வதாக மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறார். போன முறையும் அதை தான் சொன்னார். உண்மையில் இது வாசகர்களின் கருத்தா அல்லது மனுஷின் புலம்பலா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் விஷயமுள்ள சரக்கு உடனே விற்று விடும். உப்பு சப்பில்லாத பலகாரம் பல கடைகளிலிருந்தாலும் யாரும் வாங்கப் போவதில்லை. சரக்குள்ள விஷயம் ஏதாவதொரு மூலையில் முடங்கி இருந்தாலும் உடனே விற்று விடும். இது எல்லோருக்கும் தெரியும் என்பது அவருக்குத் தெரியவில்லை!

அமர் சிங் இப்பொழுது பி.ஜே.பி வீட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் கலந்துக்கொள்கிறார். என்னடாவென்று பார்த்தால் இவர் இப்பொழுது சமாஜ்வாடி கட்சியை விட்டுவிட்டாராம். இனி உத்திரப் பிரதேச பி.ஜே.பிக்கு நல்ல காலம் தான்!

40 ரெட்டைத்தெரு குறும்படமாகிறது. அதில் அவரே அவராக( இரா.முருகன்) நடிப்பதுதான் செய்தி. கவிஞர்களைத் தொடர்ந்து இப்பொழுது எழுத்தாளர்கள். பா.விஜய்க்குப் போட்டியாக வந்துவிடுவாரோ?

இராமேஸ்வரத்தில், முதியவர் தரையிலிருந்த தண்ணீரில் விழுந்தார். யாருமே அக்கறை கொள்ளாததால், விறைத்து இறந்தார். சாலையில் பலர் இருந்தும் இந்த நிலைமை. விரிவான செய்திகளுக்கும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் ஜெயா செய்திகளைப் பார்க்கவும். மனிதாபிமானம் எங்கே? என்று நேற்று ஒரு மெயில் வந்தது. அவருக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்குமே என்று இந்தச் செய்தி கீழே..

சினிமாக்களைப் பிரபலப் படுத்தும் பல்வேறு உத்திகளுக்கிடையே இது கொஞ்சம் வித்யாசமானது. பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும், நடிகை ஜெனிலா டி’செளசாவும் இன்றிரவு (புதன்கிழமை) முழுவதும் ஒரு காரில் தனியாக தங்கப் போகின்றனராம். எதற்காக? தங்களுடைய அடுத்த படமான Chance Pe Dance'ஐ பிரபலப் படுத்துவதற்காக.


இது மாதிரி ஜெயமோகன், சாரு ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும். வாசகர்கள் கற்பனை செய்து பின்னூட்டம் போடலாம். நல்ல கற்பனைக்கு 2 states புத்தகம் பரிசு. மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்புடன்
முனி

22 Comments:

மானஸ்தன் said...

:>

ரிஷபன் said...

//முருகதாஸ் திரும்பவும் கஜினியை ஹிந்தியில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அஜ்மல் கசாப் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஃபீல் செய்கிறார். இவர் கனவு பலிக்குமா?//

கசாப் இந்தியா வந்ததே பாலிவுட் படங்களில் நடிக்கத்தானே !!

சொல்ல முடியாது நம்ம நாட்டில இதெல்லாம் நடந்தாலும் நடக்கும்

மணிகண்டன் said...

ஸ்ரேயா படம் போடுங்க. அசின் வேணாம் !

யதிராஜ சம்பத் குமார் said...

சாருவும் ஜெயமோகனும் உயிர்மை பதிப்பகத்தின் விளம்பர தூதுவர்களாக நியமிக்கப்பட்டு, உயிர்மையை ப்ரமோட் செய்வதற்காக ஒரு மாலைப் பொழுதில் உயிர்மை ஸ்டாலில் இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அவர்களிருவரும் காரில் ஓரிரவு முழுவதும் என்றால் என்னவோ போலிருக்கிறது.

சாரு : இதோ வெளியே நல்ல காற்று வீசுகிறது. காலடியில் கடற்கரை இருக்கிறது. மிலோராத் பாவிச் எழுதிய நூல்களில் கஸார்களின் அகராதியின் அட்டைப்படம் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். மற்ற நாவல்களின் அட்டைப்படங்களை இன்னும் பார்க்க வேண்டும். ஆனால் என் தலையெழுத்து ஜெயமோகனுடன் உட்கார வேண்டிய நிலை.

உடனே ஸ்டாலில் குழுமியுள்ள சாருவின் அபிமான வாசகர்கள் கைதட்டுகின்றனர்.

மனுஷ்யபுத்ரன் இதனைத் தட்டிக் கேட்காத காரணத்தால் வெறுப்ப்டைந்த ஜெயமோகன் உடனே எழுந்து 20 பக்க அளவில் சுருக்கமாகத் தான் எழுதி வைத்திருந்த சாரு பற்றிய, அவர் எவ்வாறு பின் நவீனத்துவத்திற்கும், முன் நவீனத்துவத்திற்கும் இடைப்பட்ட நிலையில் குழம்பி நிற்கிறார் என்ற உரையை வாசித்து விட்டுக் கிளம்புகிறார்.

Anonymous said...

சாரு,ஜெயமோகன்,மனுஷ்யபுத்திரன்,இட்லிவடை -4 பேரையும் ஒரே காரில் அடைத்து ஒரு நாள் இருக்கச் சொன்னால் என்ன ஆகும் :).

Anonymous said...

இட்லிவடை,அடுத்த வார உயிரோசைமையில் உமக்கு அர்ச்சனை இருக்கிறது :).

Anonymous said...

//புத்தகக் கண்காட்சியில் சில பதிப்பகங்கள் போலிப் பெயரில் பல ஸ்டால்களை வைத்து ஒரே புத்தகங்களை விற்பது எரிச்சலாக இருக்கிறது என்று வாசகர்கள் சொல்வதாக மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறார். போன முறையும் அதை தான் சொன்னார். உண்மையில் இது வாசகர்களின் கருத்தா அல்லது மனுஷின் புலம்பலா என்று தெரியவில்லை.//

Regardless of whether this is MP's view or that of others as he claims, I think there is some merit in his complaint. It appears that Kizhakku has done what they have done to circumvent some stupid BAPASI regulation. Unfortunately they got too cute and from my own experience and from what I heard from a few other friends is that, yes it is damn irritating!

Anonymous said...

/***சரக்குள்ள விஷயம் ஏதாவதொரு மூலையில் முடங்கி இருந்தாலும் உடனே விற்று விடும். இது எல்லோருக்கும் தெரியும் என்பது அவருக்குத் தெரியவில்லை!***/


Absolutely idiotic!!!!விற்பதெல்லாம் நல்ல கத்தரி காய் ஆகி விடாது, முனி....விற்காதது எல்லாம் தரம் தாழ்ந்தவை அல்ல, உதாரணம் பாரதி...

ஜெயக்குமார் said...

முனி பின்னிப் பெடலெடுக்குறாரு..

பிரபாகரனும், இலங்கைத் தமிழர்களும் தமிழக பத்திரிகைகளுக்கு நியூஸ் பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்ளும் கல்பதருவே அன்றி அவர்களைப் பற்றிய எந்தவிதமான கவலையும் அவர்களுக்குக் கிடையாது.. இன்றைக்கு பிரபாகரன் அவர்களின் தகப்பனார் இறந்த செய்தியை இலங்கை அறிவித்திருக்கிறது. அவர் செய்த ஒரே பாவம் பிரபாகரனின் தகப்பனாராக இருந்தது மட்டுமே..

ஜக்குபாய் திரைப்படம் வெளீயானது குறித்து ரஜினி சொன்னது அனைத்தும் உண்மை. அண்ணன் சேரன் ரசிகர்களை அருவாவோடு அனுப்பச் சொல்கிறார், ரொம்ப பொறுப்பாக..

ரஜினி, நோ,நோ அது தப்பு.. லா அண்ட் ஆர்டரை நம்ம கையில எடுக்கக் கூடாது, ரசிகர்களை தப்பா உபயோகப் படுத்தக் கூடாது என்கிறார்..

கமல் என்னதான் பகுத்தறிவு வாதம் வேஷம் போட்டாலும் அவர் பார்ப்பனர்தான்.. அவர், ஞானி இஅவர்களெல்லாம் என்னதான் குட்டிக்கரனம் அடித்தாலும், உண்மையாய் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கப் போவது சட்டைக்குள் நெளியுது பூனூல் போன்ர பதிவுகளும், பார்ப்பனன் என்ற அடைமொழிகளும்..வாயைத் திறக்காலமாவது இருந்து தொலைக்கலாம்.

Anonymous said...

agree Jayakumar
"கமல் என்னதான் பகுத்தறிவு வாதம் வேஷம் போட்டாலும் அவர் பார்ப்பனர்தான்.. அவர், ஞானி இஅவர்களெல்லாம் என்னதான் குட்டிக்கரனம் அடித்தாலும், உண்மையாய் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கப் போவது சட்டைக்குள் நெளியுது பூனூல் போன்ர பதிவுகளும், பார்ப்பனன் என்ற அடைமொழிகளும்..வாயைத் திறக்காலமாவது இருந்து தொலைக்கலாம்"

dont you think Idli Vadai also belong to the above category...

look at his blog on the book exhibition..look at the books that he has got...Book on Advani, Book on Raghu vamsam...(Ram isa fictional character is another story)

I hate the self righteous attitude of Brahmins...

-Kannan

சீனு said...

//விசிலடிச்சான் குஞ்சுகளை திருப்திப்படுத்த சாரு எடுக்கும் வழமையான ஸ்டண்டுக்கு//

யாருன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு...

சீனு said...

//கசாப் இந்தியா வந்ததே பாலிவுட் படங்களில் நடிக்கத்தானே !!

சொல்ல முடியாது நம்ம நாட்டில இதெல்லாம் நடந்தாலும் நடக்கும்
//

என்னங்க இது. நீங்க ரொம்ப லேட் பிக்கப். இந்த ஸ்டேட்மென்ட ஏற்கனவே கசாப் சொல்லியாச்சு...

Anonymous said...

சாரு உக்கார போற காரு கேரளா ரிஜிஷ்ட்ரேஷேன் வேனும்பானே??

Anonymous said...

சாரு, ஜெமோ இருவரும் ஒரே காரில் (வேறு வழியில்லாமல்) அமர்ந்திருக்கின்றனர். சாருவின் முகத்தில் கடுகடுப்பு. ஜெமோவின் முகத்தில் வழக்கம் போல் கிண்டலான சிரிப்பு.

ஜெ.மோ - என்ன சாரு, சௌக்யமா, புத்தகத்துக்கு மேல புத்தகமா கிழிச்சு... சாரி.. எழுதித் தள்ளுறீங்க போலருக்கே... வாழ்த்துக்கள்..

சாரு (உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டு, தனது போனை எடுத்து யாருடனோ பேசுகிறார்) - அடேய், உனக்கு அறிவில்லை. கொஞ்சமாவது பண்பாடு இருக்கா... உணர்ச்சி இருக்கா... எத்தனை தடவை உன்னை திட்டினாலும், அவமானப்படுத்தினாலும் ரோஷமே வராதா... இந்த மாதிரி எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி டார்ச்சர் பண்ணாதேன்னு எத்தனை தடவி சொல்லியிருக்கேன். அறிவு கெட்ட முண்டம். முட்டாள். சுரணையில்லாதவனே.... போ, போய் உன் ‘அஞ்சலி’ நல்லெண்ணெய் வியாபாரத்தைக் கவனி...

ஜெ.மோ (கடுப்பாகி, தனது லேப் டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு டைப் செய்ய ஆரம்பிக்கிறார்) - இந்த வரிகளை நான் எழுதும் போது காது வலியோடுதான் எழுதுகிறேன். இந்துத்வா, ஆர்.எஸ்.எஸ். வெறியன்... என்று எத்தனையோ கூப்பாடுகளைக் கேட்டாகி விட்டது. இந்தக் கையாலாகாத கும்பல்களால் இலக்கியத்துக்கு எந்தப் பயனும் விளையப்போவதில்லை. மேலும்.....

(என்று எழுதிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கார் கதவுகள் திறந்து கொள்ள, அங்கே ரஜினியும் கமலும் நிற்கின்றனர். இருவரும் இணைந்து நடிக்கப் போகும் படத்திற்கு சாருவும், ஜெமோவும் இணைந்து வசனம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, இரு எழுத்தாளர்களும் உடனே கை குலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுகின்றனர். சுபம்)

- கோபால்சாமி

மணிகண்டன் said...

ஸ்ரேயா படம் போடுங்க. அசின் வேணாம்

cho visiri said...

/ரஜினி பற்றிச் சொல்லிவிட்டு கமல் பற்றிச் சொல்லவில்லை என்றால்... கமல் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? " திருட்டு வி.சி.டி. மூலம் சம்பாதிப்பவர்கள், அந்தக் கருப்புப் பணத்தை என்ன செய்வார்கள்? கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கோயில் உண்டியலில் போடுவார்கள். அதையடுத்து..? தேச விரோத செயல்களுக்குத்தான் இதுபோன்ற கருப்புப் பணம் உதவுகிறது. நல்ல காரியத்துக்குப் போய்ச்சேருவதில்லை. உங்கள் தலையில் விழும் குண்டுகள் தயாரிக்கத்தான் இந்தப் பணம் உதவுகிறது என்று மக்களுக்கு உணர்த்த வேண்டும்" என்ன சொல்ல வருகிறார் கமல்? மும்பையில் தான் இந்த மாதிரி குண்டுகள் அதிகம் வெடிக்கிறது என்பதால் இதற்கு நிச்சயம் மும்பை மாமி பதில் சொல்லுவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.//

I donot know what Mumbai Aunti would say.
But this is my (Gujarat Uncle) take on Kamal's view;-
Well. You stop producing Fims. Video piracy would die. Money flow to Antisocial elements will be checked ( if your theory holds good). Secondly, how dare you place both God and Anti social elements on the same footing. Certainly God do not require your money. The money collected in temples is used only of benefit of public at large.
Please think twice before you speak. Do not play double role in real life.

kggouthaman said...

மணிகண்டன் - கட்டுரையில் முனி சொல்லி இருப்பது அசின் - நயன் இருவர் பெயர்கள் மட்டுமே. எனவே நீங்க ஸ்ரேயா ஜபம் எவ்வளவு பண்ணினாலும் பலன் இருக்காது!
அசினை விட்டால் 9 தான்!

Vijay said...

இந்த கற்பனை சூழ்நிலைக்கு கமல் பதிலளித்தால் இப்படி தான் இருக்கும் :-

ஜெயமோகனும் சாருவும் எப்படி பார்த்தாலும் பேசி சமாதானமாக மாட்டார்கள், நிச்சயம் கைகலப்பில் தான் முடியும் ஆகவே

ஒரே காரில் ஓர் இரவு
ஜெனிலியாவும் சாஹித்தும் இருந்தால் கார் காதலால் குலுங்கும் , ஆனால்
ஜெயமோகனும் சாருவும் இருந்தால் கார் கைகலப்பால் குலுங்கும்

(நல்லா இருந்தா பரிசை கமலுக்கு குடுத்துடாதீங்க !! )

மணிகண்டன் said...

ஓகே சரி :)-

ஸ்ரேயா படம் போடுங்க ! கட்டுரை வேணாம் !

முகமூடி said...

முனி லிபர்ஹான் இருக்கட்டும் 1984 சீக்கியா் படுகொலை அதுக்கும் முன்னால போபால் விஷவாயு....இதுக்கெல்லாமே இன்னும் குற்றவாளிகளை புடிச்சபாடில்ல அவசரப்பட்டா எப்படி?
..................................

maddy73 said...

//நீ நினைப்பதுபோல் ரஜினியோ, கமலோ, அசினோ, நயனோ இல்லை //

அசினோட படத்தை உங்க பதிவுல எப்படியாவது போடுறதுன்னு முடிவேடுத்ததுக்காக, இப்படி ஒரு பில்டப்பா?

நடத்துங்க.. நடத்துங்க..!

R.Gopi said...

//அதே போல 2000 ரூபாய்க்கு இளையராஜா பற்றிப் பேசி பிழைப்பு நடத்துவதற்கும் இந்தத் தடை உண்டு என்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.//

யப்பா... நான் சமீபத்துல பார்த்ததில், இது போன்றதொரு அதிரடிய பார்க்கலேப்பா சாமி........