பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 14, 2010

துக்ளக் 40 வது ஆண்டு விழா - லைவ் அப்டேட்


எவ்வளவு தூரம் முடியும் என்று தெரியலை. முடிந்த வரை லைவாக அப்டேட் செய்கிறேன்.

அப்டேட் 1: 5:55PM
கூட்டம் வழக்கம் போல் அலை மோதுகிறது. உள்ளே Housefull. வெளியே ஒரு LCD ஸ்கீரீன் + ப்ரோஜெக்டர் இருக்கிறது. அதை சுற்றி 100 பேர்.

கியூ அப்படியே நிற்கிறது. உள்ளே வெளியே எங்கும் செல்ல முடியாது.

படி எல்லாம் மக்கள். பொங்கல் சாப்பிட்டர்களோ இல்லையோ, இங்கே சோ பொங்குவதைப் பார்கக் கூடிவிட்டனர்.

ப்ரேஜெக்டர் ஸ்கிரீனில் நன்றாக தெரிகிறது. ஒருவர் வித்தியாசமாக வந்திருக்கிறார், ரோஸ் கலரில் கோட் சூட் எல்லாம் போட்டுக்கொண்டு. பஞ்சு மிட்டாய் விற்பவராக இருக்கலாம்.

வழக்கம் போல அமைதியாக டிஸிபிளின்டாக இருக்கிறது கூட்டம். மைக்கை ப்ரொஜெக்ட் செய்து வெவ்வேறு ஆங்கிள்களில் காண்பிக்கிறார்கள். இது தான் உண்மையான மைக் டெஸ்டிங்.

ரஜினி வருவாரா? தெரியாது. அலையன்ஸ் புத்தகம் பல விற்பனைக்கு இருக்கிறது. அதில் நிறைய சிவகுமார் புத்தகங்கள் இருக்கிறது.

அப்டேட் 2..6:10PM

தற்போது கண்ணில்பட்ட சில விஐபிக்கள் :
முன்னாள் டிவி நியூஸ் ரீடர் வரதராஜன், தற்போது துக்ளகில் எழுதும் பழ.கருப்பையா, முருகன் IAS, டைரக்டர் பாலச்சந்தர். நீலு, டைபிஸ்ட் கோபி... அட ...டோண்டு மாதிரி ஒருவர் துக்ளக் staff-உடன் பேசுகிறார். கை கொடுத்துவிட்டு தற்போது சுவற்றில் சாய்ந்து கொண்டு இருக்கிறார்.


அப்டேட் 3..6:30PM
சரியாக 6:30 மணிக்கு சோ வந்துவிட்டார். வந்தவுடன் பொங்கல் வாழ்த்து + கூடவே ஏதோ சொன்னார். கைத்தட்டல் ஒலியில் கேட்கவில்லை. துக்ளக் ஊழியர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். நமது கதாநாயகன் போல எல்லோருக்கும் பட்டை பெயர் வைக்கிறார். ஒருவர் பெயர் வாழும் வள்ளுவம் (ஆனால் இவருக்கு 4 திருக்குறள் தான் தெரியும் ) என்று. எதற்காக இப்படி வாழும் வள்ளுவரை இழுக்கிறார் என்று புரியவில்லை! அவருக்கே உரிய நகைச்சுவை.

அப்டேட் 3..6:40PM
வாசகர்கள் கேள்வி பதில் நடந்துக்கொண்டு இருக்கு. கேட்க கேட்க அப்டேட் செய்ய முடியவில்லை. அதனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அப்டேட் செய்கிறேன். நன்றி.

அப்டேட் 4..8:15PM
குருமூர்த்தி பேசுகிறார். இன்னும் சோ பேசவே ஆரம்பிக்கவில்லை.

அப்டேட் 4..8:51PM
இப்ப தான் சோ பேச ஆரம்பித்திருக்கிறார்:)

அப்டேட் 4..9:40PM
ஆண்டு விழா இனிதே முடிந்தது.

இந்த முறை கேள்வி பதிலுக்கு பிறகு நான்கு பேச்சாளர்கள் பேசினார்கள்.

குருமூர்த்தி - இப்போதைய பொருளாதாரம் பற்றி பேசினார். கொஞ்சம் பாசிடிவாக இருந்தது.

பழ.கருப்பையா - தற்போதைய அரசியல் பற்றி. இவர் பேச்சு கொஞ்சம் சிரிப்பாக இருந்தது.

பல ஆங்கில வார்த்தைகளுக்கு இவர் தமிழ் அர்த்தம் சொன்னது சிரிப்பை வரவழைத்தது.

முருகன் - இப்போதைய அரசு இயந்திரம் பற்றி பேசி, நிர்வாகம் எப்படி நடக்கிறது என்று சொன்னார்.

வக்கீல் விஜயன் - நீதித் துறை பற்றி பேசினார்.

கடைசியாக சோ, முடிவுரை மாதிரி பேசி சிம்பிளாக முடித்துவிட்டார். திமுக அரசின் பல செயல்களை அடுக்கிவிட்டு வரும் தேர்தலில் ஏன் திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்று சொல்லிவிட்டு, மாற்று அரசியல் என்று யாரும் இல்லாத காரணத்தால் அதிமுகவிற்கு போடுங்கள் என்று சொன்னார். விஜயகாந்துக்கு போடுவதால் திமுகவிற்கு தான் லாபம்
என்றார்.


வீட்டுக்கு சென்ற பின் விரிவாக எழுதுகிறேன்.

19 Comments:

மானஸ்தன் said...

இது வேறயா!! நடக்கட்டும்!
:>

மானஸ்தன் said...

///Labels: அரசியல், இட்லிவடை ஸ்பெஷல் ///

யோவ் இட்லி! இது அரசியல் இல்லையா! பத்திரிக்கை!
நீர் பண்ணுவதுதான் அரசியல்!!
:-)

லேபல்-ஐ மாத்துங்க!
:>

Anonymous said...

"Ada Kadavule... Pongalum athuvuma arasiyal kootathu poirukane. Oru Ayirathil oruvan live update kudutha evvalavu nalla irukum" - IV regular-aga padikum en patti sonnathu :)

Guru said...

இட்லிவடை யார் என்று கண்டுபிடிக்க ஓர் அருமையான வாய்ப்பு ! காமராஜர் அரங்கத்தில் யார் ஒருவர் லேப்டாப் சகிதம் அல்லது மொபைல் போனில் டிவிட்டிக் கொண்டு இருந்தாலும் அவர் தான் இட்லிவடையாக இருக்க வேண்டும்.. ப்ளீஸ் யாராவது கண்டுபிடியுங்களேன்.

Arun said...

எனக்கென்னமோ இட்லிக்கு ஹாலிலிருந்து ஒருவர் live commentry கொடுக்கராப்ல தோணுது.

Itsdifferent said...

can anyone of our "beloved" artists do this? They cant, why? they are just after money, money money.
http://www.huffingtonpost.com/2010/01/13/mia-f-new-york-times_n_422167.html

ப்ரியா said...

Good. But where is 1000il 1van FIR?
Or is it like Cho is like
1000il 1van for you?

Anonymous said...

முன்னாள் டிவி நியூஸ் ரீடர் வரதராஜன்,, typist கோபி///

இவர்களெல்லாம் VIP ya, அட ராமா..அப்புறம் சந்தியா, மீராகுமார்.. நிஜந்தன் இவுங்களும் கூடவா ! உயிரோசை நிஜந்தன் கூட கெக்கேபிக்கேன்னு சிரிப்பார்

maddy73 said...

One of the useful attempts (posts) by IV.. thanks.

I understand you really took my comment (asking you to write of your own), seriously. Well go ahead.. all the best.

Anonymous said...

iv
pongal vazhthu+somebody asked for puthandu vazhthu.cho said "i wont say now ,greet you after three months"thats why the laughter

மானஸ்தன் said...

//அப்டேட் 4..9:40PM
ஆண்டு விழா இனிதே முடிந்தது.

வீட்டுக்கு சென்ற பின் விரிவாக எழுதுகிறேன்.//

இன்னுமா வீட்டுக்கு வந்து சேரலை? (11.17 pm).

:>

IdlyVadai said...

//
இன்னுமா வீட்டுக்கு வந்து சேரலை? (11.17 pm).//

ஏம்பா எங்களுக்கும் வயிறு இருக்கு. சாப்பிட்டுவிட்டு எழுதறேன்

SAN said...

IV,
Waited till 12.30 but of no avail!
eppo update?

சோ ரசிகன் said...

//ஏம்பா எங்களுக்கும் வயிறு இருக்கு. சாப்பிட்டுவிட்டு எழுதறேன்//

ஒரு மணி நேரமா சாப்பிடுவீங்க? சீக்கிரம் எழுதுங்க!

IdlyVadai said...

//IV,
Waited till 12.30 but of no avail!
eppo update?//

ஒரு ஏழு நிமிஷம் லேட் :-)

IdlyVadai said...

//சோ ரசிகன்//

பேரை பார்த்தவுடன் நினைச்சேன். எதுக்கும் கீழே இருக்கும் கமெண்ட் + அடுத்த போஸ்ட் பாருங்க

Anonymous said...

சோ ஒரு நெகடிவ் ஆசாமி. தான் ஒரு ஜீனியஸ் என்று நினைப்பு வேறு. நடிகர் சிவகுமார் நிஜமாகவே ஒரு ஜீனியஸ். அவருடைய பேச்சை போட்டாலாவது புரயோஜனம் உண்டு.

maddy73 said...

IV.. fantastic coverage.. thanks.. nice chance for us(living outside TN / chennai) to know abt. the meeting contents.

//Anonymous said...

சோ ஒரு நெகடிவ் ஆசாமி. தான் ஒரு ஜீனியஸ் என்று நினைப்பு வேறு. நடிகர் சிவகுமார் நிஜமாகவே ஒரு ஜீனியஸ். அவருடைய பேச்சை போட்டாலாவது புரயோஜனம் உண்டு.//

IV is not 'Vaali' & you are nto 'Rama' to throw the stone(arrow) by hiding urself.. மறைந்திருந்து தூற்றும், மர்மமென்ன..?

IdlyVadai said...

Tamil MA என்று நீங்க 'தூய தமிழில்' எழுதியதை பிரசுரிக்க முடியவில்லை.
இவ