பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 15, 2010

துக்ளக் 40-ஆவது ஆண்டுவிழா - பகுதி 2

கேள்வி பதிலுக்கு அப்புறம் நாலு பேர் பேசினாங்க என்று சொன்னேன்ல. இதோ ரெண்டு பேர் பேசினது. ( படத்தில் இருப்பது இல.கணேசன், பி.ஜே.பி பற்றி என்ன சொல்லுவார் சோ என்று கவலையாக இருக்கிறார் )

வக்கீல் விஜயன் - நீதித்துறையின் நிலை

நீதித்துறை என்பது நீதிபதிகளால் மட்டும் ஆனது அல்ல. வக்கீல்களும் அதன் முக்கியக்கூறு.

இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் மோசம். வக்கீல்களும் அப்படியே. எதேச்சாதிகாரமும் தான்தோன்றித்தனமும் தமிழக வழக்கறிஞர்களிடம் ரொம்பவே பெருகிவிட்டது. வக்கீல்கள் நீதிமன்றப்புறக்கணிப்பு 30 நாட்கள் நடந்தது மட்டும் அல்லாமல், பல காவலர்களைத் தாக்கியுள்ளனர். அதை எதிர்த்து காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழக்குத்தொடர்ந்துள்ளார்களே தவிர, அரசாங்கம் ஒரு வழக்கைக்கூடத் தொடரவில்லை. வழக்கறிஞர்களைத் தேர்வுசெய்வதில் நெறிமுறைவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டபின் regulate செய்யப்படவேண்டும். Bar Council சக்தியற்றதாக ஆகிவிட்டது. regulatory bodyயே strike நடத்த நம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். இந்த நாட்டில்தான் கல்லூரி முடித்ததும் நேராக practice செய்யப்போகலாம். சட்டம்படித்தவர்கள் எல்லாருமே வழக்கறிஞராக ஆகிவிட முடிகிறது நம் நாட்டில்.

அடுத்ததாக நீதிபதி பதவி. நான் அறிந்தவரை கடந்த 29 வருடங்களாக accommodative justice தீர்ப்புகள் மட்டுமே இந்தியாவில் வழங்கப்பட்டிருக்கின்றன. எல்லாமே அந்தந்த அரசு சார்ந்தும், அவ்வப்போதைய சூழலைத் தணிக்கும் வகையிலேயே இருந்திருக்கின்றன. கடந்த பத்துவருடங்களாகத்தான் lobbying நீதிபதிப் பதவிக்கும் தேவை என்று அறிந்திருக்கிறேன். சட்டத்தில் நீதிபதிப் பதவிக்கு இடஒதுக்கீடு கிடையாது. ஆனால் நடைமுறையில் அதைத்தான் செய்கிறார்கள். காமராஜர் ஒருமுறை நீதிபதி பதவி தொடர்பாகச் சொல்லும்போது, “இடஒதுக்கீட்டை BDO லெவலோட நெறுத்திக்கோங்க, இங்கல்லாம் கொண்டுவராதீங்க”ன்னு சொன்னார். senior advocate என்று ஒரு accreditation இருக்கிறது. திறமையான வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு merit accreditation. இது ஒரு பதவியோ, பணம் சம்பந்தப்பட்ட ஒரு titleஓ கிடையாது. ஆனால் merit accreditationலேயே இடஒதுக்கீடு வேண்டும் என்று இப்பொழுது கேட்கின்றனர்.

முருகன் IAS - அரசு இயந்திரம், நிர்வாகம்

ஃப்ரான்சில் முதல் உலகப்போரிலிருந்து இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட காலத்தில் பல ஆட்சியாளர்கள் பதவியேற்றனர். கிட்டத்திட்ட ஒவ்வொரு ஆறு மாதத்திற்கொரு முறை ஆட்சிமாற்றம் நடக்கும் ஒரு ஸ்திரமற்ற தன்மை இருந்தது. ஆனால் அந்த நாடு அப்பொழுதும் வேறு எந்தப்பிரச்சனையையும் சந்திக்காமல் பிழைத்ததன் காரணம் அங்கிருந்த strongஆன அரசு இயந்திரம்தான். ஆட்சி, நீதித்துறை என்று எல்லாமே சிக்கலில் இருந்தாலும், ஒரு நாட்டின் ஆட்சித்துறை மட்டும் சரியாக இருந்துவிட்டால் அந்த நாட்டு மக்களுக்குப் பிரச்சனை இருக்காது.

1967லிருந்து கடந்த ஆட்சிக்காலத்தைவிட, கடந்த 44 மாதங்களில் இத்துறை பல மடங்கு கெட்டுவிட்டது. நீங்கள் பார்த்திருக்கலாம், கோடிக்கணக்கில் விவசாயக்கடன் ரத்தானதாக வந்த விளம்பரங்களை. ஆனால், உண்மையில் மாவட்ட ஆட்சியர்களின் கையில் கடன் தள்ளுபடி பண்ணிய உத்தரவு வந்துசேரவே இல்லை. ஒரு விண்ணப்பம் பணியகத்திற்கு வந்துசேர்ந்தால் அடுத்தடுத்து steps என்னென்ன செய்யவேண்டும் என்று தெளிவாக district office manual (DOM) குறிப்பிடுகிறது. உதாரணமாக, மனு மூன்று நாட்களுக்குள் பதிவுசெய்யப்படவேண்டும், மனுவின் மீதான நடவடிக்கை 5 நாட்களுக்குள் எடுக்கப்படவேண்டும் போன்றவை. ஆனால் அது ஏட்டில் மட்டுமே உள்ளது.

ஒவ்வொரு சாதாரண, எளிமையான வேலைகளுக்கும் ஆட்சியரின் தலையீடு தேவைப்படுகிறது. அல்லது பணம் தேவைப்படுகிறது. இவையெல்லாம் அனுபவபூர்வமாக நானே சந்தித்திருக்கும் பிரச்சனைகள். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களெல்லாம் கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில்வளர்ச்சியில் வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நாம் ஜார்க்கண்டை, பீஹாரை விடப் பின் தங்கிப்போக ஆரம்பித்திருக்கிறோம். இதே நிலை நீடித்தால் தமிழ்நாட்டிலும் மாவோயிஸ்ட்கள் தோன்றும் நாள் வெகுதொலைவில் இல்லை. எங்கெல்லாம் government fail ஆகிறதோ அங்கெல்லாம் இதுபோன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். மக்களின் பிரச்சனையை மக்களே தீர்த்துக்கொள்ள ஆரம்பிப்பார்கள்.

சிறுதொழில்கள் மற்றும் small scale industriesதான் தமிழ்நாட்டின் பலமாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுதோ நாலாயிரம்கோடியில் மூலதனம் போடத்தயாராக இருக்கும், 1000 பேருக்கு வேலை தரும் நிறுவனங்களை வளர்க்கவே முயற்சிகள் நடைபெறுகின்றன. 25 லட்சத்தில் இயங்கும் ஒரு SSI 20 பேருக்கு வேலை தரும். அதை ஊக்குவிப்பதோ, கடன்வழங்கவோ இப்பொழுது விழைவதில்லை.


தொடரும்...

5 Comments:

மானஸ்தன் said...

மணி 1.35 am ஆச்சுப்பா!! மிச்சத்தையும் சீக்ரம் போடுங்க!!
தூக்கம் வருது! :>

ஆயிரத்தில் ஒருவன் said...

உஷார்>>>>>>>>>>>>>


ஆயிரத்தில் ஒருவன் = 50/100

நாணயம் = 20/100

குட்டி = -50/100

தெலுகு ஆர்யா பார்த்தவர்கள் குட்டி படம் பார்த்தா "BLOOD" கண்டிப்பாக உஷார்.
-பாதிப்பு அடைத்தவன் "SAME BLOOD"

amaithi appa said...

இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் மோசம். வக்கீல்களும் அப்படியே//

நூறு சதவிகிதம் உண்மையே, கடந்த ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு
கட்-ஆப் மதிப்பெண் நாற்பது சொச்சம்..! இந்த நிலையில் எப்படி நல்ல வழக்கறிஞர்கள் உருவாக
முடியும்? எஞ்சினியரிங் படித்துவிட்டு வேலை தேட விரும்பும் மாணவர்களும், பெற்றோரும் மனம் மாறி
சுயமாக, கௌரவமாக தலை நிமிர்ந்து சமுகத்தில் வாழ, வழக்கறிஞர் படிப்பை தேர்ந்தெடுத்து,
நல்லமுறையில் கல்வி கற்று, தமக்கும், நாட்டுக்கும் பாடுபட வேண்டும்.
அரசும் சட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும்.
இதற்கு திரு.விஜயன் மற்றும் இ.வ. முழு முயற்சி எடுக்கவேண்டும்.

Anonymous said...

எஞ்சினியரிங் படித்துவிட்டு வேலை தேட விரும்பும் மாணவர்களும், பெற்றோரும் மனம் மாறி
சுயமாக, கௌரவமாக தலை நிமிர்ந்து சமுகத்தில் வாழ, வழக்கறிஞர் படிப்பை தேர்ந்தெடுத்து,
நல்லமுறையில் கல்வி கற்று, தமக்கும், நாட்டுக்கும் பாடுபட வேண்டும்.
அரசும் சட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும்///.


அமைதி அப்பா சொல்வது சரியே....! இதுகுறித்து இ.வ. தனிப் பதிவு போடலாமே....!

kggouthaman said...

அரசு இயந்திரம், நிர்வாகம் பற்றி முருகன் ஐ ஏ எஸ் கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழக வாக்காளர்கள் நிச்சயம் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.