பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 15, 2010

துக்ளக் 40-ஆவது ஆண்டுவிழா - பகுதி 1

கொஞ்சம் பெரிய டிஸ்கி:
லைவ் அப்டேட் செய்யலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்தாதாலும், தொடர்ந்து நகைச்சுவை தோரணம் போல ஜோக்ஸ் வந்துக்கொண்டே இருந்ததாலும், பக்கத்துல இருந்தவங்க சந்தேகமாகப் பார்க்க ஆரம்பித்ததாலும், பொறுமையாக வீட்டுக்கு வந்து காலையில் செய்த பொங்கலை சாப்பிட்டுவிட்டு நான் பார்த்ததை/கேட்டதை நினைவிலிருந்து எழுதுகிறேன். அதனால் அங்கே இங்கே சில தப்புகள் இருக்கலாம். இருந்தாலும் நம்ம சி.பி.ஐ. மாதிரி நீங்களும் அதையெல்லாம் கண்டும் காணாம விட்டுட்டு, சந்தோஷமாப் படிங்க.அரங்கம் நிரம்பி வழிந்தது என்று சொன்னால் நிரம்பிவழிதலை அதிகமாக மதிப்பிடுகிறோம் என்று அர்த்தம். அங்கேயிருந்தது சொன்னமாதிரி அவ்வளவுக்கூட்டம். சோ வரும் வரையில் கூட்டமாகிய கடலில் நீந்தித் திளைக்க, படகு ஓட்டிக் களிக்க, வேடிக்கைப்பார்க்க, இடம்பிடிக்க, ஊர்வம்பு கேட்க என்று நேரம் சிட்டாய்ப்பறந்தது. ஒரு சாம்பிள் ஊர்வம்பு:

நபர் 1: இவ்ளோ பேர் வந்துருக்காங்களே...? இன்னும்கொஞ்ச நேரத்துல ஹிந்து ராம் கூட வந்துடுவார்.
நபர் 2: அவரெல்லாம் இங்க வரமாட்டார்.
நபர் 1: ஏன், ஏதாவது தெரிஞ்சுக்க வருவாரே.
நபர் 2: அதெல்லாம் வரமாட்டார்.
நபர் 1: அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
நபர் 2: சாமிபடம் இருந்தா அந்தப்பக்கம் அவர் வரவே மாட்டார்.

எனக்கு ஒன்றும் புரியாமல் என்ன சாமிபடமா என்று அவரிடம் விசாரிக்க அந்த நபர் எனக்கு விளக்கினார். "இப்ப பகவத்கீதை ஓடிகிட்டு இருக்கு, அப்பறம் அப்பறம் காமராஜர் அரங்கத்துல நிறைய கடவுளர்கள் படம். இருக்கு பாருங்க என்று என்னிடம் காண்பித்தார். உங்களுக்கு கூட சு.சாமியின் ஜாடை இருக்கு. அதனால கூட இருக்கலாம் என்று ஜோக் அடித்தார்.

சரி அவரிடம் அந்த பிங்க் சொக்கா அன்பரை பற்றி ஆர்வமாகக் கேட்டேன். ஓ அந்த ரோஸ் கலர் ஆசாமியா!! மனுஷர் பேர் எம்.ஜி.யாராம். எங்கு என்ன நடந்தாலும் வந்துவிடுவாராம். இவருக்கு பயந்துக்கொண்டுதான் இந்த முறை ரஜினி வரவில்லையா என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன். அதற்கு மாறுவேஷத்தில் வந்திருப்பார் யாருக்கு தெரியும் என்றார். உடனே பளிச்சென்று, சே சே அந்த மாதிரி கமல் தான் வருவார் என்றேன். அதற்கு பிறகு அவர் என்னுடன் பேசவில்லை!

சரி மேல நிகழ்ச்சிக்கு போகலாம்.

மொதல்ல "பட்டமளிப்பு விழா"!

கருணாநிதி மட்டும்தான் தன்னைத்தானே புகழ்ந்துக்கலாமா என்ன?
சோ சொன்ன மாதிரி... “எதுக்கு உங்க அப்பா அம்மா பேரை ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனுக்கு வைக்கறீங்க? நானும் அவங்க பேரை என்சைக்ளோபீடியா, டிக்‌ஷ்னரின்னு எல்லா இடத்திலும் தேடினேன். எதுலயுமே அவங்க பேர் இல்லையே.”ன்னு ஜெயலலிதா கேட்டாங்களாம். அதுக்கு கருணாநிதி சொன்னாராம், “என்னை இந்த நாட்டுக்கே தந்துருக்காங்களே” ! அது எவ்வளவு பெரிய தியாகம் ?

அப்படின்னு சொல்லி சோ டென்ஷனா சொன்னார். அந்த அளவுக்கு தற்பெருமை அதிகமாகிப்போச்சு. அப்போ நம்ப அம்மா அப்பாவெல்லாம் வெறும் வெட்டி போலருக்கு அப்டின்னு சொன்னார்.

நிர்வாகச்செம்மல் உதயஷங்கர், வாழும் வள்ளுவர் பட்டம் குடுத்ததும், ”பட்ட மகிழர்” தன் பாக்கெட்லேர்ந்து எதையோ எடுத்தார். உடனே, சோ, “என்ன என் பேரைக் கெடுத்துடுவீங்க போலருக்கே? எல்லாரும் என்னவோ குடுத்துப் பட்டம் வாங்கினதா நெனச்சுக்கப்போறாங்கங்கற மாதிரி பொருள்பட சொன்னார்.

சத்யாவுக்குப் பட்டம் சமூகநீதிக்காவலர் சத்யா. ஏன்னா, ஸ்வீட் எல்லாம் ஆஃபீஸ்ல டிஸ்ட்ரிப்யூட் பண்ணினா, எல்லாருக்கும் சரிசமமா அவர்தான் பகிர்ந்துகுடுப்பாராம். நாவுக்கரசர் ஸ்வாமிநாதன் - இவர் பேசறது ஒண்ணுமே புரியாது.

ஆற்றல் அரசு ஷண்முகம் - நல்லா காப்பி ஆத்துவார்.

துர்வாசரின் பெயர் வண்ணநிலவன். மிச்ச பேரெல்லாம் இதைவிட மொக்கை.

சரி அடுத்த நியூஸ்: ஹிந்துமஹா சமுத்திரம் 5வது பகுதி வெளியிடப்பட்டது. சுசித்தரா ஆனந்த். சோவின் பேத்தியாம்.மகளிருக்கு முக்கியத்துவம் இல்லைன்னு யாரும் இனிமேல் சொல்லிடமுடியாது.


அடுத்தது கேள்வி-பதில்!

கோவைலேர்ந்து கந்தசாமின்னு ஒருத்தர் வந்திருந்தார். ஒரு மினி சொற்பொழிவாற்ற ஆரம்பித்ததும், அவருக்களித்த வாய்ப்பை babyoverஆக கட் பண்ணவேண்டியதாகிவிட்டது. மைக்பிடித்த தமிழன் வாய் சும்மா இருக்குமா?

அவரைத் தவிர மற்ற எல்லோரும் கேள்விகளை மட்டுமே கேட்டனர்.

சில Snippets மட்டும் இங்கே.

செம்மொழி மாநாடு - English மாநாடு நடத்தியா ஆங்கிலம் வளர்ந்தது?

இந்தமாநாட்டுலல்லாம் என்ன பண்ணப்போறாங்க? கலைஞருக்கு மேலும் நாலு பாராட்டு கிடைக்கும். அவருக்குதான் பாராட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும்னு அவரே சொல்லிட்டாரே...

அகதிகள் (இலங்கை அகதிகள் அல்ல)?
வரட்டும், வந்து வசதியா இருக்கட்டும். ஆனால் திரும்பி அவங்க நாட்டுக்கே போகறதுக்கு அரசாங்கம் வழி பார்க்கணும். இங்கயே வசதியா தங்க வழிசெய்யும் முயற்சில ஈடுபடக்கூடாது.

இத்தனை வருடங்களாக கலைஞரை விமர்சனம் செய்து பத்திரிக்கை நடத்தி வந்ததால் உங்களுக்கு என்ன பயன்/பலன்?

பதில்: இந்த கூட்டத்துக்கு இத்தனைப்பேர் வந்திருக்க மாட்டீங்க. அதுதான் பலன்.

பிஜேபியின் எதிர்காலம்? அதிவானியால் வாஜ்பாய் அளவுக்கு வளரமுடியவில்லையே...?
அத்வானி ந்ல்ல தலைவர். திறமையானவர். பல துறையில் அனுபவம் உள்ளவர். புதுத்தலைவர் மேல எனக்கு எந்த விரோதமும் கிடையாது. அவரை முன்னப்பின்ன தெரிஞ்சாதானே விரோதம்? பிஜேபி நல்ல தலைவர்களைத் தெரிவுசெய்யவேண்டும். பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். வாஜ்பாய்க்கு அத்வானி campaign பண்னினார். அத்வானிக்கு யாரும் இல்லை. அதனால்தான் வாஜ்பாய் அளவுக்கு அத்வானி வரவில்லை.

DMK, ADMK - எதுக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கு?
உண்மையான செல்வாக்கு பணம் கொடுக்காமல் தேர்தல் நடத்தினாதான் தெரியும்.
DMK = strong alliance + பணம்.
ADMK இன்னும் கொஞ்சம் strong allianceல் கவனம் செலுத்தணும் என்றார்.

எங்கே பிராமணன் 9:30 மணிக்கு ஒளிபரப்ப முடியுமா? வீட்டிலுள்ள அறிவுஜீவிகள் எல்லாம் 8:00 மணிக்கு மெகாசீரியல்கள் பார்க்கிறார்கள். தட்டிக்கேட்க முடியவில்லை. ஒரு வீட்டில் இதனால் சண்டையில் டீ.வீ.யே உடைக்கப்பட்டது.
நான் சொல்லி எல்லாம் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற மாட்டார்கள். ஆனால் சண்டையெல்லாம் போடாதீர்கள். எங்கே பிராமணனனும் அதைத்தானே சொல்கிறது? விட்டுக்கொடுங்கள். எப்படியும் அவங்கதான் ஜெய்க்கப்போறாங்க. கடைசீல பண்றத மொதல்லயே பண்ணிடுங்களேன்!!!

Christianity வேகமாகப் பரவிக்கொண்டு வருகிறதே?
கட்டாயமாகவோ, மிரட்டியோ, ஆசைகாட்டி/அனுகூலங்கள் செய்தோ மதம்மாற்றுவதுதான் குற்றம். ஒருவர் கிறிஸ்துவத்தைப் பற்றி அறிந்துகொண்டு, அந்த மத நூல்களை எல்லாம் படித்து புரிந்துகொண்டு மாறுவதில் எந்த குற்றமும் இல்லை.

இப்படி சில சுவாரஸியமான கேள்விகள். மற்ற கேள்வி பதில்கள் எல்லாம் சுமார் தான்.
மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்று அடுத்த பகுதியில்.......

தொடரும்.......

2 Comments:

மானஸ்தன் said...

உண்மையைச் சொல்றது இட்லிவடை.
சொல்றத செய்யறதும் இட்லிவடை.

:>

kggouthaman said...

// நம்ம சி.பி.ஐ. மாதிரி நீங்களும் அதையெல்லாம் கண்டும் காணாம விட்டுட்டு, சந்தோஷமாப் படிங்க.//

நம்ம சி பி ஐ - கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்பவர்களை மட்டும்தான் கண்டும் காணாம விட்டுடுவாங்க; உங்க மாதிரி 'துக்ளக்' பற்றிக் கட்டுரை எழுதுபவர்களை எல்லாம் - பிடிச்சாங்கன்னா முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க - ஜாக்கிரதை!