பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 31, 2010

சன்டேனா இரண்டு (31-1-10) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்... சினிமா ஸ்பெஷல்செய்தி # 1


பிப்ரவரி 5 ஆம் தேதி வெளிவரப்போகும் "அசல்" படத்தின் சில ஹைலைட்ஸ்.


"கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அப்படியே நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு பாடலை உருவாக்கி இருக்கிறோம் " என்றார் இயக்குநர் சரண்.

அவர் குறிப்பிடும் பாடல் "சிங்கம் என்றால் எம் தந்தைதான், தங்கம் என்றால் எம் தந்தைதான் " என்று அசல் படத்தில் இடம் பேரும் வைரமுத்துவின் பாடல். இசை அமைப்பாளர் பரத்வாஜ் சொந்த குரலில் பாடி இருக்கும் பாடல். அன்னை இல்லத்துக்கு இந்த பாடலை சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

படத்தின் சில காட்சிகளை முதல் முறையாக சிவாஜி அவர்களின் அன்னை இல்லத்திலேயே ஷூட் செய்து இருக்கிறார்கள்.

சிவாஜி பேனரில் படம் செய்து இருப்பதை திரை உலகில் தனது வளர்ச்சியாக கருதுவதாக அஜித் தெரிவித்தார்

படத்தின் டைட்டிலில் கதை-திரைக்கதை ஒத்துழைப்பு என்று அஜித் பெயரும் இடம் பெறுகிறது.

முதல் முறையாக அஜித்தின் பெயர் எழுத்தாளர் என்ற தலைப்பில் இடம் பெறுவது எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு பெருமை தரும் விஷயம். எழுத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருவதால்தான் தன்னையும் அதில் இணைத்து கொண்டு இருக்கிறார் அஜித் " என்று சொல்கிறார் படத்தின் விவாதம் மற்றும் ஸ்க்ரிப்டில் பணிபுரிந்த எழுத்தாளர் யூகிசேது.

வில்லன் மற்றும் ரமணா போன்ற பெரும் வெற்றி படங்களில் ஏற்கனவே யூகிசேது பங்குபெற்று இருக்கிறார்.


."அவர் 49 படங்களில் நடித்து இருக்கிறார். இதில் ஆர்வம் என்பதை விட, அனுபவம் அவருக்கு நிறைய உள்ளது. சொல்லும் கதை, எளிமையாக இருக்கவேண்டும். அப்போது தான் அது சி சென்டர் ரசிகர்களுக்கும் சென்றடையும் என்பதில் அஜித் தீர்மானமாக இருந்தார். முழுக்க வெளிநாடுகளில் எடுக்க பட்டாலும், ஆங்கில வசனம் அதிகம் இடம் பெறாமல் பார்த்துக்கொண்டார்" என்று தனது அனுபவங்களை பகிர்கிறார் சரண்.

"அவருக்கு இருக்கும் அனுபவத்துக்கு அவர் விரைவில் படம் டைரக்ட் செய்தாலும் ஆச்சிரிய படுவதார்க்கு இல்லை " என்று ஒரு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் சரண்.

"ஒரு படம் நல்லா வரணும்னா டீம் வொர்க் ரொம்ப அவசியம். நான் நடிக்கிற படம் சிறப்பா வர என்ன என்ன செய்யணும்மோ அதை செய்யறேன். ஒரு நடிகனா நிலையான இடம் கிடைச்சு இருக்கு.தனியா ஒரு படம் இயக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா கண்டிப்பா நான் பின் வாங்க மாட்டேன் ".என்று தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் அஜித்.

மசாலா நடிகர் என்ற இமேஜை உடைத்து ஸ்க்ரிப்ட், நல்ல தரம், தொழில் நுட்பம் என்று கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் அஜித். அதற்கு முதல் கட்டமாக தன் பெயருக்கு முன்னால் 'அல்டிமேட் ஸ்டார் " போன்ற பட்டங்களை தவிர்க்க சொல்லி இருக்கிறார். இவரை தொடர்ந்து தனுஷ், விஷால், பரத் போன்ற நடிகர்களும் பட்டங்களை துறக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.


பி.கு : அசல் படத்துக்கு இ.வ. கிட்ட இருந்து நீங்க நல்ல மார்க் எதிர்பார்க்கலாம்.காரணம், ஆ. ஓ . மாதரி இதிலும் சமீரா, பாவனா என இரண்டு ஹீரொயின்ஸ்(!) இருக்காங்க.
.

செய்தி # 2
(இந்த செய்திக்கான படம் முதலில் இருக்கு )
"ஆரோமொளே " என்னும் ஒரு மலையாளப்பாடல் அர்த்தம் புரியாவிட்டாலும், கேட்கும் போதே நம்மை கிறங்க அடிக்கிறது. இந்த பாடலில் கிதார்கள் பயன்படுத்தபட்டு இருக்கும் விதம் இதம்.

ஆஸ்கர் வாங்கிய கையோடு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து இருக்கும் "விண்ணை தாண்டி வருவாயா " படத்தில் இடம் பேரும் பாடல்தான் அது.

"ஆரோமொளே" என்று சிறு பெண் குழந்தைகளை கேரளாவில் செல்லமாக அழைக்கிறார்கள்.இந்த படத்தில் ஆரோமொளே(?) த்ரிஷா.

இந்த பாடலை பாடி இருப்பவர் அல்பொன்செ ஜோசேப் என்னும் மலையாள திரை உலகின் இசை அமைப்பாளர். பாடலை எழுதி இருப்பவர் கத்தியபுரம் ராமசந்திரன். நம்ம ஊரு வாலி , வைரமுத்து போல கேரளாவில் இவர் பெரிய சினிமா கவிஞர் .

"ஓமணபெண்ணே" என்று படத்தில் தமிழும், மலையாளமும் கலந்த மற்றுமொரு இனிய பாடல். பாடி இருப்பவர்கள் பென்னி தயல் மற்றும் கேரளாவை சேர்ந்த பாடகி கல்யாணி மேனன்.

Blazee பாடி இருக்கும் Hosanna என்னும் பாடல் ஏ.ஆர். ரகுமான் பேட்டியுடன் பி. பி. சி யில் ஒளிபரப்பபட்ட தமிழ் பாடல் என்ற பெருமைக்கு உரியது.

ஏ.ஆர். ரகுமான் சொந்த குரலில் பாடி இருக்கும் "மன்னிப்பாயா " பாடலில் முதன் முறையாக 'அன்புடைமை ' அதிகாரத்தில் இருந்து திருக்குறள்கள் இடம் பெறுகின்றன.
படத்தில் வரும் தமிழ் பாடல்கள்(?) அனைத்தும் எழுதி இருப்பவர் கவிஞர் தாமரை.

"சிம்பு , இந்த படத்தில் கதாநாயகியை காதலிக்கும் இயக்குநராக நடிக்கிறார் " என்றார் கௌதம் மேனன்.(சொந்த கதை?)."ரொம்ப எளிமையான கதைதான். நடித்து கொடுத்த சிம்புவுக்கு நன்றி " என்று பேட்டி அளித்தார் .

தேசிய விருது பெற்று இருக்கும் கௌதம் மேனன் மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

அவன் இவன் - இது விருது பெற்ற கையோடு இயக்குநர் பாலா இயக்கும் படம். விஷால்,ஆர்யா என இரண்டு கதாநாயகர்கள். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. ஏன் இளையராஜா இல்லை என்ற ஒரு கேள்விக்கு பாலா அளித்த பதில் " படத்தின் கதைக்கு சில ரீமிக்ஸ் பாடல்கள் தேவைப்படுகின்றன. ராஜாவிடம் எப்படி கேட்க முடியும். அதனால்தான் யுவனை போட்டு இருக்கிறேன் " .

வழக்கமான இருட்டு உலக மனிதர்களை பற்றி இல்லாமல் இந்த முறை முழு நீள காமெடி படம் பண்ணுகிறார் பாலா. படத்துக்கு வசனம் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.


(நன்றி, இனி அடுத்த வாரம்).

-இன்பா

19 Comments:

ஜெயக்குமார் said...

http://www.orkut.com/Main#Community?cmm=96822497

What is this club??

ஜெயக்குமார் said...

பேனர் நல்லா இருக்கு, சண்டேனா இரண்டு மாதிரி.. ஆனா கொஞ்சம் லேட்..

முகமூடி said...

//பாடலை எழுதி இருப்பவர் கத்தியபுரம் ராமசந்திரன்// - என்னடா நக்கீரன் வேலை பண்றேன்னு நினைக்காதீங்க...நீங்க கைதப்புரம் தாமோதரன் நம்புதிரிய கத்தியபுரம் ராமசந்திரன் தப்பா எழுதியிருக்கீங்க-னு நினைக்கிறேன். If so, கைதப்புரம் வெறும் பாடலாசிரியர் மட்டும் இல்லை; கர்நாடக சங்கீதத்தில ஆழ்ந்த புலமை பெற்றவர்; பாடகர், இசையமைப்பாளர் என்று பல் வேறு முகங்கள் உண்டு அவருக்கு. அவ்வப்பொழுது கொளரவ வேடங்களிலும் காட்சி தருவார். மோகன்லாலின் வெற்றிப்படமான ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா-வில் லாலுடன் பாட்டுப்போட்டியில் தோற்றுப்போவார்.

ஸ்ரீனி said...

அது ஆரொமொளே அல்ல.. ‘ஆரோமலே’..

என்ன எழவு பாட்டு அது..ஒரே இரைச்சலாத்தான் எனக்கு இருந்தது.. நீங்கள் ஆரோமொளே என்று எழுதியதின் இதனால்தான் என்று நினைக்கிறேன்...பாடலின் வரிகளை விடை இரைச்சல் தான் அதிகமாக இருந்தது..

ஓரிரு நிமிஷங்களுக்கு மேல் கேட்க எனக்குப் போறுமை இருக்கவில்லை, இந்தப் பாட்டை....

R.Gopi said...

இந்த பகுதியில் என் “சுறா” படம் பற்றிய செய்தி எதுவும் இல்லை என்பதை மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்து கூவிக்கறேன்...

தொடர்ந்து என்னை புறக்கணிப்பதன் மர்மம் என்ன என்பதை இட்லிவடையும், இன்பாவும் எனக்கு விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்...

அகில உலக “சுறா” ரசிகர் மன்ற தலைவர் “சுறா சுந்தர்”....

vedhanarayanan said...

My feeling about Ajith is this.
He is a very nice guy and helps people a lot. That is his personal profile.

His cine status today (the fans) is mostly helped by Vijay. When Kamal & Rajini's created a vacuum in cinefield, , tamil movie going younger generation needed two faces. And Vijay Ajith fit that well. But Vijay kept giving hits with hit music albums.

Amarkalam and Mugavari were Ajith's last few decent movies. Villan was a hit though. Ajith , though not able to give hits (his flops started with Red and Citizen... and continue as of today) had to be kept at the top slot as a competition to Vijay. Many nonlikers of Vijay has to take the side of Ajith. And thus he kept going. He was giving masala after masala only for his fans and never bothered a common cinema rasigan. And now Vijay seems to have fallen in the same trap.

jaisankar jaganathan said...

// R.Gopi said...
இந்த பகுதியில் என் “சுறா” படம் பற்றிய செய்தி எதுவும் இல்லை என்பதை மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்து கூவிக்கறேன்...
//
அதானால் என்ன? எந்திரன் பற்றி வரும் கோபி

R. Jagannathan said...

Ajith acted very well in Varalaaru and displayed great style in Billa. They were hits too! - R. Jagannathan

R.Gopi said...

//jaisankar jaganathan said...
// R.Gopi said...
இந்த பகுதியில் என் “சுறா” படம் பற்றிய செய்தி எதுவும் இல்லை என்பதை மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்து கூவிக்கறேன்...
//
அதானால் என்ன? எந்திரன் பற்றி வரும் கோபி//

***********

எந்திரன் பத்தி, நாங்க எழுதினது போக, மிச்சம் தானே மத்த எல்லாரும் எழுத போறாங்க... அந்த கவலை எனக்கு இல்லை...

Anonymous said...

iv
please write a post on recent controvercy about IPCC panel and its chief rajendra pachauri and exaggeration of global warming.i remember read some articles in solvanam regarding this.
thank you
deva

Gaana Kabali said...

"என்ன எழவு பாட்டு அது..ஒரே இரைச்சலாத்தான் எனக்கு இருந்தது.. நீங்கள் ஆரோமொளே என்று எழுதியதின் இதனால்தான் என்று நினைக்கிறேன்...பாடலின் வரிகளை விடை இரைச்சல் தான் அதிகமாக இருந்தது..

ஓரிரு நிமிஷங்களுக்கு மேல் கேட்க எனக்குப் போறுமை இருக்கவில்லை, இந்தப் பாட்டை...."

நண்பரே! நீங்க சொல்றது சரியில்ல. எனக்கு தெரிஞ்சி எல்லோரும் இது ரொம்ப நல்ல பாட்டுன்னு சொல்றாங்க . நீங்க மட்டும் தான் இப்படி சொல்றீங்க. அர்த்தமே புரியாம அந்த பாட்டு பல பேருக்கு புடிச்சிருக்கு.

இசை அந்த மாதிரி ! இசைக்கு மொழி தேவையில்லை.

நீங்க ஒரு தடவைக்கு மேல் கேக்க முடியலேன்னு சொல்றீங்க. நான் நூறு தடவைக்கு மேல் கேட்டுட்டேன் .பாட்டு அலுக்கலை . கேக்க கேக்க ஈர்ப்பு அதிகமாகுது. நல்ல பாட்டு.

ரகுமான் பாட்டு கேக்க கேக்க தான் இனிக்கும். ஏன்னா புதுமையான ட்யுனை மனசு உள்வாங்கி பழகிக்கொள்ள கொஞ்ச நாள் ஆகும். ஏற்கனவே பழகிவிட்ட ட்யுன்னா உடனே பிடிச்சு போகும்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை இந்த இரண்டாம் வகையை சேர்ந்தது.ஹாரிஸின் எல்லா பாடல்களுமே ஏறத்தாழ ஒரே ட்யுனில் இருப்பதால் நமக்கு உடனே பிடித்து விடுகிறது.

இப்பொழுது இந்த பாடல் பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் மீண்டும் மீண்டும் கேட்டு பாருங்கள். பிடிக்கும்.

'ஆரோமலே ' என்பதற்கு 'அன்புக்குரியவளே' என்று அர்த்தம்னு என் மலையாள நண்பன் சொன்னான்.

vedthanarayanan said...

"Tamil padam" patri yan ondrum yelutha villai? Nandraga ullathu except one scene.

ARR grammy yennavachu... anticlimax mathiri aagi vittatha?

ஜெயக்குமார் said...

இன்னிக்கு டியுஸ்டே..

ஜஸ்ட் ஞாபகப்படுத்தினேன்..

ஜெயக்குமார்

Anonymous said...

Intersting news (not connected to this post)
தாக்கரே குடும்பத்தினரின் டி.என்.ஏவும், எனது டி.என்.ஏவும், உ.பியில் உள்ளோரின் டிஎன்ஏவும் ஒன்றுதான். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான மரபணுதான்.

இதை நான் வெறுமனே சொல்லவில்லை. தாக்கரேக்களுக்கு முடிவெட்டுவோரிடமிருந்து அவர்களது முடியை சேகரித்து ஹைதராபாத் ஜீன் க்ளீனிக்கில் சோதனை செய்து பார்த்தேன். அதில்தான் இந்த உண்மை தெரிய வந்தது.

Source:http://thatstamil.oneindia.in/news/2010/02/02/swamy-s-challenge-thackeray-s-xenop.html

ஹரன்பிரசன்னா said...

Vinnai thaandi varuvaayaa songs are very superb, fresh and trend setters. Absolutely fantastic. Omana penne and Aramale are really excellent.

Baski said...

My favorite song in this movie is "Aaromole"

Don said...

I don't think the songs are Rahman's best, but might be his experiments. I find Harris Jayaraj giving his best for the movies, but I don't find Rahman as sincere as Harris. I agree with Srini,I don't like Aaromole song, the only song I find hearable in this film is 'Hossanna' and that too after hearing many times. I haven't yet come across any good songs, after Vaaranam ayiram. Harris is better artist than Rahman, atleast to me. I find Rahman as an experimenter, and even Rahman wouldn't love such songs as his fanboys force themselves to. The songs are infact incoherent mess , I wouldn't call them as songs at all. Rahman has lessons to learn from the genius Illayaraja, 'to compose for the lyrics'.

Baski said...

I condemn if someone comment on this.. without reading it fully and trying the stuff that I have mentioned...

If you guys like strings... esp.. double bass guitar.. you would love these songs... I was amazed the use of strings.. and the mixup... Undoubtedly it the debut in India for its kind. ARR mentioned "It is different" and smiled on the music release...

Esp, when it comes to high pitch western songs.. you should get into the frequency of that music.. otherwise that music will not be interesting ... rather irritating... :-D

Try singing these song.. (hope your neighbors wont sue you..).. you will fall in love with it..

But it is not a easy song .....

btw... voice of Joseph on high pitch was not that great... (that's the reason many did not like Aromale..).. I think ARR voice would have been a best fit for Aromale..

Don said...

Rahman always shows off his music, no matter how poor the lyrics are. In this film, the lyrics are poor, but music flamboyant. They don't sync. No one can say his music is poor, but it doesn't match the flow of lyrics except in hosanna song. The music stands out separately in other songs. Illayaraja goes to the extent of underplaying the music(instrumentals) for the sake of lyrics and that's how he succeeds in giving the best song. If lyrics had been better or if Rahman composed for the lyrics, then this film's songs would have been a instant hit. Illayaraja is a consistent performer unlike Rahman. Inspite of all this, Rahman's music will inspire the western folks, where lyrics are irrelevant in songs.
Had Illayaraja mixed such flamboyant music for a song like - "Twinkle Twinkle little star", he would have won an oscar.