பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 08, 2010

3 இடியட்ஸ் - விமர்சனம்

வழக்கமாக சினிமா விமர்சனம் எழுதும் போது முதலில் 'எச்சரிக்கை' என்று போடுவது தான் வழக்கம் ஆனால் இந்த படத்துக்கு பிராத்தனை என்று ஆரம்பிக்கிறேன். நகைச்சுவை படம் ஆனால் படம் முழுக்க நான் பயந்துக்கொண்டே பார்த்தேன். அந்த பயத்தினால் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கிறேன்...

பிராத்தனை: இறைவா, தயவு செய்து இந்த படத்தை தமிழில் ரிமேக் செய்கிறேன் என்று யாரும் சொதப்பாமல் இருக்கணும்.

3 இடியட்ஸ் என்று படம் பெயர் இருந்தாலும் படத்தில் எல்லோரும் செம இண்டெலிஜெண்ட். நல்ல இசைக்கு மொழி தேவையில்லை அதே போல ஒரு நல்ல திரைப்படத்துக்கும் என்று நிருபிக்கிறது இந்த படம்.

திரைக்கதை: திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த திரைப்படம் எடுத்துக்காட்டு. டிவிஸ்ட், செண்டிமெண்ட், நகைச்சுவை இருக்க வேண்டும் என்று நினைத்து காட்சிகளை புகுத்தாமல் கதையோட்டத்திலே அவைகளை சொன்னதற்கு சபாஷ்!. போனஸாக நம் மனப்பாடம் செய்து தங்க மெடல் வாங்கும் கல்வியமைப்பு, டாக்டர், என்ஜினியராக வர வேண்டும் என்று பிறந்த பத்தாவது நிமிஷம் கனவு காணும் நம் பெற்றோர்களையும் ஒரு குட்டி குட்டி, குழந்தைகள் அவர்கள் விருப்பம் போல விடுங்கள் என்ற மெசேஜ் - அட !. பாடம் பார்த்துவிட்டு யோசித்தால் அமீர் கானை அலைந்து தேடும் படலம் நமக்கு கதை சொல்ல என்று புரியும், திரைக்கதை நுணுக்கம்!. ஒருவொரு சீனையும் அழகாக செதுக்கியிருக்கிறார்கள். !

கதை: தமிழ் படம் என்றால் கதை சொல்லலாம் உங்களுக்கு புரியும். இது ஹிந்திப் படம், கதை சொன்னால் உங்களுக்கு புரியாது அதனால் சொல்லவில்லை. முழு கதையும் சொன்னால் படத்தை அனுபவிக்க முடியாது என்ற காரணத்தால் இரண்டு வரி - கல்லூரியில் சேரும் மூன்று பேர் சுற்றி நடக்கிறது கதை. எப்படி நண்பர்கள் ஆகிறார்கள். கறார் புரொஃபசர். அங்கே நடக்கும் கூத்துக்கள் தான் கதை. சில இடங்களில் ஸ்டூடண்ட்ஸ் ( தெலுங்கு ), முன்னாபாய் எம்.பி.பி.எஸ் ( ஹிந்தி ) படத்தை நினைவு படுத்தினாலும் கதை ஸ்டிராங்காக இருந்தால் ஹீரோ பற்றி கவலை பட வேண்டாம் என்று நிருபிக்கும் படம் இது! கட்டிபிடி வைத்தியம் மாதிரி, “ஆல் இஸ் வெல்” என்று இந்த படத்தில் வருகிறது

நம்ம கோலிவுட் மக்கள் "இவர் தான் ஹீரோ" இவருக்கு ஏற்ற கதை சொல்லுங்க என்று கேட்பதை எப்போது விடுவார்களோ அன்று தான் இவர்கள் உருப்புடுவார்கள். அதே போல "சார் இந்த சீன் இருந்தா நல்லா இருக்கும் என்று ஹீரோ ஃபீல் செய்கிறார்" என்று ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சீன் வடிவமைத்து SMS-இல் வசனம் வந்து.. இவை எதுவும் இல்லாமல் இந்த படத்தை செய்திருக்கிறார்கள்.

நடிப்பு: எப்படி எல்லோரும் நடிக்கிறார்கள் என்று ஹிந்திப் படம் வியக்க வைக்கிறது.
44 வயதில் காலெஜ் சேரும் மாணவனாக எப்படி இவரால் முடிகிறது ? வந்தவுடனேயே சுவிங்கமை மேலே போட்டு, இரண்டு மொட்டை தலையை அடித்துவிட்டு திரும்ப சுவிங்கமை வாயில் வாங்கி தலையில் இருக்கும் கூலிங் கிளாஸ் வந்து விழும் எண்டரி, அல்லது 'ஆழ்வார் பேட்டை ஆண்டவா' என்று ஹீரோ வர்ஷிப் செய்யும் பாடல் என்று எதுவும் இல்லாமல், ஒன்றும் தெரியாத குழந்தை மாதிரி வந்து போகிறார் அமிர்கான். படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் கூட பேசாமல் எப்படி இவர்களால் படம் எடுக்க முடிகிறது ? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாங்களேன் ?

காலேஜ் ஸ்டுடண்ட் எப்படி பையை மாட்டிக்கொள்வார், எப்படி நடப்பார், எப்படி ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்வார், டிரஸ் செய்துக்கொள்வார் என்று அழகாக எல்லாவற்றையும் கொண்டு வந்திருக்கிறார்.

அமீரின் நண்பர்களாக வரும் மாதவன், ஷர்மான் ஜோஷியும் ஓவர் ஆக்ட் செய்யாமல் கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள். ஜப் வி மெட் படத்தில் பார்த்த கரீனா கபூர் மாதிரி இல்லை என்பது கொஞ்ம் வருத்தம். வயது அதிகமாக தெரிகிறது அம்மனிக்கு!.

முசுடு, கிடுக்கிப்பிடி புரொஃபசராக வரும் போமன் இரானி முதலில் பார்க்க கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தாலும் சம்பவங்களின் தோரணத்தால் அவர் கேரக்டர் அழுத்தம் பெருகி நாடகத்தன்மை மறைந்துவிடுகிறது.

அப்பறம் சொல்ல மறந்துவிட்டேன் இவர்களுடன் இன்னொரு மாணவர் சத்தூர் வருகிறார், முக்கியமான கதாப்பாத்திரம் ஆனால் படம் முடிந்த பின்பு தான் அது நமக்கு தெரியும்!.

எடிட்டிங், ஒலிப்பதிவு, இசை: படம் ஆரம்பித்து 10 நிமிஷத்தில் இசை பிரமாதம் என்று சொல்ல வைக்கிறது. பாடல்கள் எப்ப வருகிறது ( ஒரு பாடல் தவிர ) எப்ப போகிறது என்று தெரிவதில்லை. இயற்கையை இயற்கையாக காண்பிக்கும் ஒளிப்பதிவு, தேவையிலாமல் டார்ச் லைட் அடித்தும், நீல கலர் ஃபில்டர் போட்டு இருட்டு செய்தும் எதையும் காண்பிக்கவில்லை. ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு செல்வதை நம் உணரமுடியாத எடிட்டிங். தேவையில்லாமல் ஹீரோவை ஸ்டில் செய்தும், வில்லனுக்கு பஞ்ச் வைக்கும் போது ஹீரோவை ஒரே ஸ்கிரீனில் ஐந்து ஹீரோவாக காண்பிக்கும் மாயாஜாலம் போன்ற செலவு எதுவும் செய்யாமல் எடுத்திருக்கிறார்கள்.

தமிழில் இதை நிச்சயம் ரீ-மேக் செய்வார்கள். மூன்று ஹீரோ சப்ஜட் அதனால் ஹீரோவுடன் டம்மியாக இரண்டு பேர் நடிக்க ஒத்துக்கொள்ளுவார்கள். அவர்கள் இரண்டு பேரும் ஹீரோவுக்கு கூஜா தூக்குவார்கள், காதலுக்கு ஹெல்ப் செய்வார்கள், தியாகம் செய்வார்கள். அப்படியே செய்தாலும் அமீர் கான் ரோலை யார் செய்வார்கள் ? விஜய், அஜித், சூர்யா, விகரம், ரஜினி, (மேக்கப் போட்ட) கமல், பரத் என்று யாரை யோசித்தாலும் பயமாக இருக்கிறது. யாராவது இருக்கிறார்களா ? இருந்தால் சொல்லுங்க நீங்க "இண்டலிஜண்ட்" என்று நான் ஒத்துக்கொள்கிறேன்!


படத்தில் கதை தான் ஹீரோ, நடிகர் ஹீரோ இல்லை என்று அழுத்தமாக சொல்லும் படம். இது மாதிரி தமிழ் படங்களை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள், இல்லை என்றால் கோலிவுட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மஸ்லி பவர் எக்ஸ்டரா இட்லிவடை செலவில் தருகிறேன்.


இட்லிவடை மார்க்: படத்தில் மார்க் வாங்குவதை பற்றி மெசேஜ் சொல்லுகிறார்கள். அதனால் நானும் திருந்திவிட்டேன். இந்த படத்துக்கு( மட்டும் ) மார்க் கிடையாது !

48 Comments:

saivakothuparotta said...

//ஒரு பஞ்ச் டயலாக் கூட பேசாமல் எப்படி இவர்களால் படம் எடுக்க முடிகிறது ?//

பஞ்ச் டயலாக் மட்டும் இல்ல, ஹீரோ ஒரே ஆளா ரவுண்டு கட்டி ஒரு ஊரையே அடிக்கிற
சீன் இல்லாமலும் படம் எடுக்க பாடம் நடத்துங்கப்பா...

இப்படிக்கு அன்புடன் said...

இது '3 IDIOTS' படத்தின் விமர்சனமா? அல்லது மொத்த தமிழ் சினிமாவை பற்றிய விமர்சனமா? அல்லது இரண்டுக்கும் இருக்கும் வேற்றுமைகளை அலசும் பதிவா?

ஜெயக்குமார் said...

எங்களின் ஆழ்வார்பேட்டை ஆண்டவனையும், உடலும், உயிரும் அவருக்கே என இருக்கும் ரஜினியையும் கிண்டல் செய்து எழுதியிருப்பதிலிருந்தே இந்தப் படத்தின் தரம் புரிகிறது.. இதெல்லம் ஒரு படமா? தமிழில் யாராவது பார்ப்பார்களா? என்ன கொடுமையோ, இப்படிப்பட்ட மோசமான தமிழ்ப்படம்போலல்லாது இருக்கும் ஒரு திரைப்படத்தை ப்பார்த்துவிட்டு அதற்கு விமர்சனமும் எழுதும் இட்லிவடையை எப்படித் திட்டுவதென்று தெரியவில்லை..

பாவப் பரிகாரமாக பெண் சிங்கம் படத்தின் விமர்சனத்தை பின்னூட்டப் பெட்டியை தூக்கி விட்டு எழுதி போக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

Anu said...

நான் பாக்கத்தான் இடியட்டு ,
பாஞ்சா ராக்கெட்டு !

ஐயையோ ! கண்ணக் கட்டுதே!

Mottai said...

Vishal. :)

SUBBU said...

யாரும் ரீ-மேக் என்று சொதப்பாமல் இருந்தா சரிதான் !!

அப்துல் சலாம் said...

சத்யமான வரிகள் .....

IdlyVadai said...

ராஜேஷ் நன்றி. திருத்திவிட்டேன்.

maddy73 said...

//முசுடு, கிடுக்கிப்பிடி புரொஃபசராக வரும் போமன் இரானி முதலில் பார்க்க கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தாலும்//

போமன் இராணி! ... முன்னா பாய் பி எம்.பி.பி.எஸ் ல் மிக நன்றாக நடித்து, தனது திறமையை காட்டியவர். ('நினைத்தேன், எழுதுகிறேன்' - ஆனால் நான், 'சோ' அல்ல)

jaisankar jaganathan said...

////ஒரு பஞ்ச் டயலாக் கூட பேசாமல் எப்படி இவர்களால் படம் எடுக்க முடிகிறது ?//

பஞ்ச் டயலாக் மட்டும் இல்ல, ஹீரோ ஒரே ஆளா ரவுண்டு கட்டி ஒரு ஊரையே அடிக்கிற
சீன் இல்லாமலும் படம் எடுக்க பாடம் நடத்துங்கப்பா...//

repeataiiiiiiiiiii

Anonymous said...

Iv
Asusual your review is biased.Fine it may be a good movie.Does it mean that there is no good movie in tamil at all? is ammer is not acting in masala movie? Why you compare with tamil industry ? people are different and they have their own taste.Does it mean that a man enjoying the commericial movie with punch daligues etc are having bad taste?
if so it shows your colour easily?
You threads are always like that only.you people are the best.rest are uselees.only your taste is good
others are bad. even in the blogs you guys thing that you are the only one who knows every thing and blobber any thing.(eg.like dondu(horibleand one step headhe claims he is proud to indetify himself as thread in 2010-shit yakie!)bala harn and in yr blog ethiraj,srivathsanec)
can we compare your writings with sujatha ? if we do my view is yours all are rubbish
The people who comes regularly (even though we don't like!)
are the real idiots !!
i expect a un baised article ( i know it wll not happen) from idly vadai.

Anonymous said...

Imagine if Simbu and Santhanam gang, remakes it.

உண்மையான இஸ்லாமியன் said...

//You threads are always like that only.you people are the best.rest are uselees.only your taste is good//

அடங்கொய்யால, ஏம்ப்பா அனானி, தமிழ் படத்தைக் குறை சொல்றவனெல்லாம் பூணூல் கோஷ்டியா? அடப்பாவிகளா, நாட்டுல உண்மையச் சொல்றவனெல்லாம் அய்யருங்க மட்டும்கிறமாதிரி இல்ல உங்க கமெண்ட்?

உண்மையான இஸ்லாமியன் said...

//You threads are always like that only.you people are the best.rest are uselees.only your taste is good//

அடங்கொய்யால, ஏம்ப்பா அனானி, தமிழ் படத்தைக் குறை சொல்றவனெல்லாம் பூணூல் கோஷ்டியா? அடப்பாவிகளா, நாட்டுல உண்மையச் சொல்றவனெல்லாம் அய்யருங்க மட்டும்கிறமாதிரி இல்ல உங்க கமெண்ட்?

சோம்பு said...

"3 இடியட்ஸ் - விமர்சனம்"

ஓன்னு இங்க இருக்கு மத்த ரெண்டு எப்பொ வரும்??

R. Jagannathan said...

Dear IV, Why don't you simply enjoy a good movie - whether it is in Hindi or any other language? I don't think you would have enjoyed the movie "3 Idiots" as you had been thinkingof a possible Tamil remake all the time. You have to recall that Aamir's earlier "Ghajini" was a remake of a Tamil film.
You could have dealt with the controversy of Aamir / Vidhu Vinod Chopra's blocking out Chetan Bhagat's name after using his story as the base - irrespective of the changes in the screen play. Do you appreciate it? - R. Jagannathan

மணியன் said...

என் கருத்துகள் சில:
1.எனக்கு மிகவும் cliche'd ஆகத் தோன்றியது. அமீரின் தாரே சமீன் பர் மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் முன்னாபாயும் அவ்வப்போது வந்து நினைவு படுத்தினார்கள்.
2.தமிழ் படவுலகிற்கு நீங்கள் பொமன் இரானியாக இருக்காதீர்கள்...படத்தின் மெசேஜே அவரவர் பாணி அவரவருக்கு. மற்றவரைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளக்கூடாது. நம்ம குத்துப்பாட்டும் நடனமும் அவர்களுக்கு வருமா ?
3.Pa பார்க்கவில்லையா ? தமிழர்கள் எடுத்த இந்திப்படம் நன்றாக உள்ளதே.

அப்துல் சலாம் said...

//The people who comes regularly (even though we don't like!)
are the real idiots !!//

த்ரீ இடியட்ஸ் பார்த்தாச்சா அனானி

மகேஷ் (Magesh) said...

மசாலா படங்கள் என்பது தமிழ் திரையுலகின் ஏகோபித்த சொத்து அல்ல. ஹிந்தி படங்களிலும் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் மசாலா படங்களே வந்து பலதும் தோல்வி அடைகின்றன.

தமிழாக இருந்தாலும் ஹிந்தியாக இருந்தாலும் கதையை வைத்து படம் எடுப்பவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். என்ன, தமிழின் முன்னணி ஹீரோக்கள் இந்த மாதிரி படங்களில் அதிகம் நடிப்பதில்லை.

Anonymous said...

"அடங்கொய்யால, ஏம்ப்பா அனானி, தமிழ் படத்தைக் குறை சொல்றவனெல்லாம் பூணூல் கோஷ்டியா? அடப்பாவிகளா, நாட்டுல உண்மையச் சொல்றவனெல்லாம் அய்யருங்க மட்டும்கிறமாதிரி இல்ல உங்க கமெண்ட்"
Dear freind
Thats not my view.My view is they thing they are the oly people knows everything and rest of the people know nothing.Pasisa egoists
----------

"""//The people who comes regularly (even though we don't like!)
are the real idiots !!//

த்ரீ இடியட்ஸ் பார்த்தாச்சா அனானி""""
sorry for the mistake My comment should be
"""The people who comes regularly to this idly vadai blog post(even though we don't like!)
are the real idiots !!

SAN said...

IV,
Ask the anony to write 2 lines without any grammatical errors and then he can comment.
Stupid moron.

M Arunachalam said...

படத்தை விடுங்கள். உமது விமர்சனத்தில் உள்ள ஓட்டைகள் இவை:

//நல்ல இசைக்கு மொழி தேவையில்லை அதே போல ஒரு நல்ல திரைப்படத்துக்கும் என்று நிருபிக்கிறது இந்த படம்.//

This is BS review. Without knowing Hindi and knowing the difference between the Hindi words 'chamatkaar' and 'balaatkaar', a non-Hindiyite would not have been able to enjoy one sequence in 3 Idiots.

// ஒருவொரு சீனையும் அழகாக செதுக்கியிருக்கிறார்கள். !//

Is it so? I felt the climax (?) scene where Aamir & friends do the delivery for Kareena's sister & the scene's ending where the baby will cry after hearing "all is well" was TYPICAL OF A BOLLYWOOD/INDIAN MASALA MOVIE.

Recently, in TN, police have arrested a boy, who was a minor, along with his doctor-parents, for having performed delivery for a pregnant lady patient as per the instructions of his parents. "3 Idiots" also has a similar sequence but no semblance of police action or realism in that scene. Totally cinematic.

Moreover, the hospital scenes where Aamir tries to bring back emotions to Sharmon Joshi after his head injury are also 'cliched'.

//கட்டிபிடி வைத்தியம் மாதிரி, “ஆல் இஸ் வெல்” என்று இந்த படத்தில் வருகிறது//

Oh... I see. Is this not equivalent to a punch-dialogue?

//வந்தவுடனேயே சுவிங்கமை மேலே போட்டு, இரண்டு மொட்டை தலையை அடித்துவிட்டு திரும்ப சுவிங்கமை வாயில் வாங்கி தலையில் இருக்கும் கூலிங் கிளாஸ் வந்து விழும் எண்டரி,//

Loosu IV, For the Mottai Boss character in Sivaji, Rajini had to give such an electrifying entry to suit the mood of the scene. Likewise, Aamir's entry in "3 Idiots" is more brainy to suit his character. If you have neither brawn nor brain, you can't understand either.

//ஒன்றும் தெரியாத குழந்தை மாதிரி வந்து போகிறார் அமிர்கான்.//

The biggest logical mistake in 3I is Aamir Khan's skullduggery going totally unnoticed by the authorities - even till the end.

People like IV are willing to forget such a blatant and basic mistake but trying to make a huge issue out of "1 man fighting with 10 people" routine, which is practiced ALL OVER WORLD CINEMA FOR AGES.

//படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் கூட பேசாமல் எப்படி இவர்களால் படம் எடுக்க முடிகிறது ? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாங்களேன் ?//

உங்களுக்கு சொல்லி குடுத்தா, நீங்களும் அதே மாதிரி பஞ்ச் டயலாக் வெச்சி படம் எடுப்பீங்க. அத பாக்க சகிக்காது.

In Aamir's last movie, Ghajini, he has also acted as a typical masala film hero, fighting with dozens of goons at the same time. So, whether it is Hindi or Tamil or any language, depending upon the director and story, such things are common place. So, in order to praise "3I" there is no need to degrade Tamil or other language movies or heroes.

Even Raj Kumar Hirani (director)'s previous movies, the hero bashes many people, isn't it?

So, it is the plot/story of the movie which dictates these things.

According to me, "3 Idiots" is not the best movie of either Aamir (TZP) or Rajkumar Hirani (LageRaho).

Anonymous said...

""IV,
Ask the anony to write 2 lines without any grammatical errors and then he can comment.
Stupid moron.""
Dear stupid monkey
Thank you very much for your Deasent advice.its semms to be you did your studies in london and came to cheenai.I will improve

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.


If you read the book and see the film, you'll be disappointed big time!

நாவலாசிரியர் சேத்தன் பகத் மற்றும் படத் தயாரிப்பாளர்களிடையே காண்ட்ராக்ட் எப்படிப் போடப் பட்டதோ தெரியாது. ஆனால் '5 Point Someone' புத்தகத்தை ஒவ்வொரு வரியும் அனுபவித்த பின் படம் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இவருடைய Core ஐ அப்படியே எடுத்துக் கொண்டு திரைக்கதையை இஷ்டத்துக்குத் திருப்பி விட்டிருக்கிறார்கள்! After doing this, எதோ பொத்தாம் பொதுவாக படக் கடைசியில் துளியூண்டு கிரெடிட் கொடுத்தது சரியல்ல ; படம் தொடங்கும் போதே டைட்டில்களில் பிரதானமாக மூலக் கதாசிரியர் பெயர் வந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

நன்றி !

சினிமா விரும்பி

SAN said...

IV,
Here is the news item from Business Line:

3 idiots' to be made in Tamil
Varada Bhat

Mumbai, Jan. 7

After shattering all box office records, Aamir Khan's blockbuster film 3 idiots will see a Tamil remake soon.

When asked, Mr Rajkumar Hirani, Director of 3 idiots confirmed the development to Business Line. “We are in advanced talks with few production houses that have shown interest in making the film in Tamil,” he said.

According to sources, a deal is likely to be stuck with south-based Gemini Films Circuit for the remake rights of the movie for around Rs 10 -15 crore. However, Mr Hirani said nothing has been finalised yet.

Earlier, the studio had purchased the remake rights of Munnabhai movies for all the four South Indian languages.

Made with a budget of around Rs 45 crore, 3 Idiots has already raked in over Rs 240 crore in just ten days.

Arun Parthepan said...

But the plot misses some exciting parts from the book like operation pendulum and the final speech by the professor during convocation.

They compensated very well indeed.

I would appreciate if they leave this without remaking :-)

But if they did, I would prefer the casting to be this way.

Rancho - Arya
Farhan - Madhavan.R/Prasanna
Raju - Nithinsatya/ Siva(saroja)

Vijay said...

//விஜய், அஜித், சூர்யா, விகரம், ரஜினி, (மேக்கப் போட்ட) கமல், பரத் என்று யாரை யோசித்தாலும் பயமாக இருக்கிறது.//

அதென்னய்யா (மேக்கப் போட்ட) கமல் ?? கமல் காலேஜ் ஸ்டுடென்ட் போல இல்லைன்னாலும் அவரால் மேக் அப் இல்லாமல் நடிக்க முடியும். கமல் வேறு ஆளாக தெரிய தான் மேக் அப் போடுறார், ஆனால் ரஜினி ரஜினியாக தெரியவே மேக் அப் போட்டா தான் உண்டு

(விக் வைத்த ) ரஜினி என்றோ (பக்கெட் நிறைய மேக் அப் போட்ட ) ரஜினி என்றோ சொல்ல தைரியமில்லாத "ரஜினி ஜால்ரா" தானே இந்த இட்லிவடை

maddy73 said...

why people fight here on expressing their views?

For a healthy society, all should join together & a 'team-work' is needed.
(he... he... plz read my latest post on 'team-work' from http://madhavan73.blogspot.com )

thanks all & particularly IV.

Baski said...

///////////////
Blogger இப்படிக்கு அன்புடன் said...

இது '3 IDIOTS' படத்தின் விமர்சனமா? அல்லது மொத்த தமிழ் சினிமாவை பற்றிய விமர்சனமா? அல்லது இரண்டுக்கும் இருக்கும் வேற்றுமைகளை அலசும் பதிவா?
/////////////

Well said.... :-)

அமீர்கான் படங்கள் எபோதுமே(?) சூப்பர்.
தாரே ச்மீன் பர், ரங் தே பசந்தி, லகான் போன்ற ஈடு இணை யற்ற படங்களில் இவர் நடித்துள்ளார். I feel, he never tried to dominate in his movies. A great quality in him, esp in such industry.

ஆனால் வழக்கம் போல் உங்க வாய்க்கு அவலாக மொத்த தமிழ் சினிமாவையும் இழுத்துடீங்க?
நிறைய நல்ல தமிழ் படங்களும் இருக்கிறது. வேணுமுனா சொல்லுங்க நியாபக படுத்துகிறேன்.

பிள்ளையாண்டான் said...

ஒப்பிட்டு பார்ப்பது நமது தேசிய குணம் என்பதை மீண்டும் அழுத்தமாக நிருபித்திருக்கிறீர் இட்லிவடை.

நீங்கள் படத்தைப் பற்றி சொன்ன எல்லா விஷயங்களும் உண்மையே. அற்புதமான படம். ஒத்துக் கொள்கிறேன்.

ஹிந்தி திரைஉலகம் வேறு, தமிழ் திரைஉலகம் வேறு. இந்த படத்தை அப்படியே தமிழில் எடுத்தால், படித்தவர்கள் அல்லது கல்லூரி வாழ்க்கை மட்டும் தெரிந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய அபாயம் உண்டு. "ஆ" மற்றும் "ப்" சென்டர் மட்டும். நீண்ட காலமாக பழகி விட்ட விஷயங்களை மாற்ற இயலாது....

sendhil said...

I think you have written the review after seeing the vijay's latest movie.

Anonymous said...

We enjoyed 3 Idiots a lot... 5 of our friends no one knows hindi that much... we enjoyed the movie with english subtitle in New jersey... I felt shame that i didnt learn hindi yet... If I know hindi i wuld hav enjoyed the movie to the core..

I m worried now ... gemini's got the remake rights in tamil and telugu... damn sure they r gonna spoil the plot in the name of region changes to be made in screen play.

Kadavuley.... enna koduma idhu....

psp said...

its a nice movie in all aspects, thst all no need of a comparison..
but of course we have to accept that hindi film industry is more creditable as far as the range of the variety of the stories and freedom(political and social) is concerned.

வந்துட்டான்யா said...

//can we compare your writings with sujatha ? if we do my view is yours all are rubbish
The people who comes regularly (even though we don't like!)
are the real idiots !!//

அனானி!!

Bloody hell - where did IV say that his writings are better than Sujatha? Just because you want to criticize, you have written whatever has come to your mind.

1. இது ஒரு அருமையான படம் - இ.வ சொன்ன மாதிரி தமிழில் இந்த மாதிரி (இதையே அல்ல) படம் எடுக்க வேண்டும். இன்றைக்கு விஜய் முதல் கமல் வரையில் டப்பிங் படம் எடுக்கவே விரும்புகிறார்கள். அங்கிங்கு சினிமாத்தனம் இருந்தாலும், இந்த படத்துக்கு 5/5 கொடுக்கலாம். இ.வ சொன்ன மாதிரி திரைக் கதை சூப்பர் - திரைக் கதையை நம்பி படம் எடுக்கும் சிலரில் நம்ம மணிரத்னமும் இருக்கிறார் என்பது ஆறுதல்.

2. நிறைய பேர் சேத்தன் பகத் பற்றி எழுதியிருக்கிறார்கள். சேத்தன் ஒன்றும் முட்டாள் இல்லை - அவர் தன்னுடைய கதையை நல்ல விலைக்கு விற்றிருக்கிறார், அவருக்கும் சோப்ராவிற்க்கும் ஒரு ஒப்பந்தம் கூட கைழெத்தாகி இருக்கிறது. படம் வெற்றி அடைந்தவுடன், எங்கே எல்லாரும் ஆமிர் கானை மட்டும் பற்றி பேசுகிறார்களே, தன்னை மறந்து விட்டார்களே என்று ஒன்னும் இல்லாத விஷயத்தை கொளுத்திப் போட்டு குளிர் காய்ந்திருக்கிறார். சோப்ராவின் websiteல் போய் பாருங்கள் - கொடுத்த காசுக்கு மேலே சோப்ரா discretionary bonus வேற கொடுத்திருப்பது தெரியும்.

Anonymous said...

I think in Tamil version they will make Chatur Ramalingam character as a Paappan, afterall they are the easy and soft target in TN and Tamil Cinema.

I would like all the characters including Aamir's as common men with neutral names.

Anony8 said...

The movie was awesome.
Amir even in this age looks perfect for a college student. Madhavan doesn't fit in as a College student, though they've justified it by making it a flashback.

My casting for Tamil version.

Amir Khan - Vinay or Surya
Madhavan - Prasanna or Shakthi
Shami - Shantanu Bhagyaraj

Javed Jaffrey - Prithvi
Chatur - Dhanush
Virus - Prakash raj or CJ.Baskar

Kareena - Swathy or Shreya

முகமூடி said...

கஜினி - Momentoவின் தழுவல்
முன்னாபாய் MBBS - Patchy Adamsன் தழுவல்; கவனிக்கவும் - காப்பி அல்ல!! முருகதாஸ், ஹிரானி நம்மவர்க்கு ஏற்றார்போல் திரைக்கதை அமைத்தது அவர்கள் சாமர்த்தியம். ஹிந்தி படங்கள் மசாலாக்கதைகளை மட்டுமே நம்பி இல்லை; அருமையான கதை கொண்ட பல சிறிய படங்கள் வருகின்றன; அதற்கு (ஒரு)காரணம் அவர்களுடைய மார்க்கெட் மிகப்பெரியது (குறிப்பாக urban mass). இந்த மாற்றத்திற்கு வித்திட்டது தென்னிந்திய இயக்குனர்கள் - ராம் கோபால் வர்மா, மணிரத்னம் போன்றோர்க்கு பங்கு உண்டு என்றால் மிகையாகாது. வெகுநாட்களுக்கு பிறகு ஹிந்தியில் வந்த பஞ்ச் டயலாக் மசாலா படம் Wanted; போக்கிரியின் ரீமேக் - வசூல் அள்ளியது. இது தெலுங்கில் இருந்து வந்தாலும் ஏதோ ப்ரேசில் படத்தின் தழுவல்தான்...நம் காக்க காக்க (City of Gods)உட்பட. தமிழில் நல்ல படைப்புகள் வராமல் இல்லை; ஆனால் போதாது;தமிழில் ஆடைச்சுதந்திரம் வந்த அளவிற்கு கருத்துச்சுதந்திரம் வரவில்லை. வந்தால் இன்னும் சாதிக்காலம்....வரும்மென்று நம்புவோமாக.

மஞ்சள் ஜட்டி said...

//விஜய், அஜித், சூர்யா, விகரம், ரஜினி, (மேக்கப் போட்ட) கமல், பரத் என்று யாரை யோசித்தாலும் பயமாக இருக்கிறது.//

இவர்களுக்கு பதிலா...

ரஜினி, எம்.எஸ்.பாசக்கார், கிரேன் மனோகர் நடிச்சா ????

சே.வேங்கடசுப்ரமணியன். said...

//தமிழில் இதை நிச்சயம் ரீ-மேக் செய்வார்கள்// ஆமாம் ...ஆமாம்..அதில் ஒருவர் இந்து,மற்றவர் முசுலீம்,இன்னொருவர் கிருத்துவர்.

Arun said...

Directorதான் படத்தோட ஹீரோனு புரியவெக்கர படம். தமிழ்ல இப்படி படங்கள் வந்தா சந்தோசம்தான்.

தமிழ் சினிமாக்காக எதுக்கு இத்தன பேரு வக்காளத்து வாங்கராங்கன்னு புரியல... அவங்கவங்க தலைவர், தலைவலி எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு பாத்தா உண்மை புரியும்.

நல்ல பதிவு. இட்லி சூப்பர். சட்னில காரம் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சி, பரவாயில்லை.

முகுந்த் அம்மா said...

இட்லி வடை அவர்களே,

நான் நீண்ட நாட்களாக உங்கள் வலைதளத்தை வாசித்து வந்திருந்தாலும், இதுவே என்னுடைய முதல் பின்னோட்டம்.

என்னுடைய கருத்துப்படி 3 idiots படம் இந்தியாவில் உள்ள 5-10% மக்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் பற்றியது. இந்தியாவில் உள்ள பல பள்ளிகளில் அதுவும் கிராமபுற பள்ளிகளில் அறிவியல் சம்பந்தமான பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. ஆசிரியர்கள் இருந்தால் தானே அவர்கள் செய்வது சரியாய் தப்பா என்று சொல்ல.

R.Gopi said...

லேட்டஸ்ட் செய்தி :

இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது.. படத்தின் பெயர் “ஒரே அறிவாளி”.. அவரே மூணு வேஷத்திலும் நடிக்கறாராம்... அதே மேக்கப்மேன் தான் இந்த படத்திலும்....

Xathish said...

Prasanna, Surya, Arya, Bharath, Daniel Balaji( vettaayadu vilayadu main villain), Karthik all can do an acceptable job on this story. There are so many talented actors in tamil cinema, but they are underrated.

Anonymous said...

Matter romba simple. Idly vadaiku 3Idiots romba pidichiruku. Tamil padam (mukyama Tamil heroes) suthama pudikala. Adhan oru kanla vennai, innoru kanla sunnambu. Kuppaigal ellam mozhigal-leyum undu. Tamilleyum 'Mozhi'-yum undu. Aamir Khan-ne pala abathangallai kuduthavar. Similarly, can you imagine someone like Salman Khan doing 3 Idiots? On second thougths, may be he is the most appropriate choice since he would have been the natural choice to play an idiot! In other words, be it Kamal, Rajini, Aamir or Salman, it is simply "Avar Avar Vaazhkai, avar avar padhai".

Anonymous said...

/***R.Gopi said...
லேட்டஸ்ட் செய்தி :

இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது.. படத்தின் பெயர் “ஒரே அறிவாளி”.. அவரே மூணு வேஷத்திலும் நடிக்கறாராம்... அதே மேக்கப்மேன் தான் இந்த படத்திலும்....
***/

Did you mean super star rajinikanth?

Anonymous said...

நாம்(தமிழர்கள்) எந்தளவுக்கு முட்டாள்கள் என்பதற்கு இந்த படமும், இந்த விமர்சனமும் ஒரு உதாரணம்.

இதில் வரும்(காமெடி வில்லன் போல்) ஒருவர் உகாண்டாவில் பிறந்து(அதாவது தமிழ்நாடாம்), பாண்டிசேரியில் படித்தவர் என்று சொல்லிகொள்ளூவார், அவரில் ஆங்கில, ஹிந்தி உச்சரிப்புகள் தமிழர்கள் பேசுவதை(அப்படியே அல்ல) போல் காட்டபட்டிருக்கும்.அவருக்கு ஹிந்தி தெரியாதாம் ஆனால் இந்தியனாம்.

தன்னை ஒருத்தன் கிண்டல் அடிப்பதையே அறிய முடியாமல் உறக்கத்தில் இருப்பது காலகொடுமை.

SAN said...

IV
Saw the movie today.Enjoyed thoroughly.

அனானி அல்ல said...

//இதில் வரும்(காமெடி வில்லன் போல்) ஒருவர் உகாண்டாவில் பிறந்து(அதாவது தமிழ்நாடாம்), பாண்டிசேரியில் படித்தவர் என்று சொல்லிகொள்ளூவார், அவரில் ஆங்கில, ஹிந்தி உச்சரிப்புகள் தமிழர்கள் பேசுவதை(அப்படியே அல்ல) போல் காட்டபட்டிருக்கும்.அவருக்கு ஹிந்தி தெரியாதாம் ஆனால் இந்தியனாம்.

தன்னை ஒருத்தன் கிண்டல் அடிப்பதையே அறிய முடியாமல் உறக்கத்தில் இருப்பது காலகொடுமை//

அட, ஆமால்ல அனானி, இவன எங்கையோ பாத்திருக்கமேனு நெனச்சா, நம்ம ஆளு..

வடக்கத்தானெல்லாம் என்னமோ பெரிய பிராக்டிகல் அறிவாளி மாதிரியும், தெற்கிலிருந்த வர்ரதெல்லாம் மனப்பாட கோஷ்டி மாதிரியும் படம் காட்டியிருக்காங்க..

என்னோட கண்ணத்தொறந்துட்டீங்க அனானி..

சே, அனானிக கூட இப்ப எப்படி கருத்துச் சொல்றாங்க பாருங்க..