பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 03, 2010

சன்டேனா இரண்டு (3-1-2010) செய்தி விமர்சனம்

இந்த வார செய்திகள் ...ஆங்கில புத்தாண்டு ஸ்பெஷல்.


செய்தி # 1


ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் அதன் வரலாறு குறித்து தினமலர் இதழில் வந்த ஒரு சிறப்பு கட்டுரை எழுதபட்டு இருந்தது. அதன் படி, கிறிஸ்தவர்களால் மட்டுமே கொண்டாட பட்டு வந்த ஆங்கில புத்தாண்டு பின்னர் உலக மக்கள் அனைவருமே மொழி, இன, மத பாகுபாடு இன்றி, ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாகக் கருதி கொண்டாடுகின்றனர் என்று விளக்கம் தருகிறது அந்த கட்டுரை.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன், இளவேனிற்காலம் தொடங்கும், மார்ச் மாதம் முதல் தேதியில், பாபிலோனில் உள்ள மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். இதையொட்டியே, ரோமானியர்கள் மார்ச் ஒன்றாம் தேதியை ஆண்டின் தொடக்க நாளாக கருதி விழா எடுத்தனர். அந்த காலக் கட்டத்தில், மார்ச்சை முதல் மாதமாக கொண்டு, ஒரு ஆண்டுக்கு, 10 மாதங்கள் இருந்தன. தற்போது, 9வது மாதமாக செப்டம்பரும், 10வது மாதமாக அக்டோபரும், 11வது மாதமாக நவம்பரும், 12வது மாதமாக டிசம்பரும் உள்ளன. ஆனால் முன்பு, 7வது மாதமாக செப்டம்பரும், 8வது மாதமாக அக்டோபரும், 9வது மாதமாக நவம்பரும், 10வது மாதமாக டிசம்பரும் இருந்தது.லத்தீன் மொழியில் "செப்டம்' என்றால் "7', "அக்டோ' என்றால் "8', "நவம்' என்றால் "9', "டிசம்' என்றால் "10' என்றும் பொருள்படும். கி.மு.153ம் ஆண்டில், ரோமாபுரியை ஆட்சி செய்த இரண்டாவது ரோமானிய அரசன் நுமா பொன்டிலிஸ் ரோமன் காலண்டரில், ஜனவரியை முதல் மாதமாகவும், பிப்ரவரியை இரண்டாவது மாதமாகவும் திருத்தி அமைத்தார். அப்போதுதான், ஜனவரி ஒன்றாம் தேதிக்கு, புத்தாண்டு இடம் பெயர்ந்தது.

போப் 12ன் கிரிகோரி காலத்தில் கிரிகோரியன் காலண்டர் முறை உருவாக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கத்தோலிக்கர்களும், பிராடஸ்டன்டுகளும் இந்த காலண்டரை ஏற்றுக் கொண்டனர். இதன் பின், உலகில் உள்ள அனைவரும் கிரிகோரியன் காலண்டர் முறையை ஏற்றுக் கொண்டு, அதை பின்பற்றி வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டுக்கு சில பிரபலங்கள் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்திகளின் தொகுப்பு.


குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் :

". இந்த புத்தாண்டு ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும், நலத்திற்கும் பாடுபடவும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரிவுணர்வை வலுப்படுத்தி மக்களை ஒருங்கிணைக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்" என்று தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி :

" 2009ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டப்பேரவைக்கு நடந்த எல்லா இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றி தந்துள்ளனர். 2011ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைக்கான பொது தேர்தலுக்கு முந்தைய ஆண்டான இந்த ஆண்டில் (2010) மக்களுக்கு ஆற்ற வேண்டிய அளப்பரிய பணிகளை எண்ணிப் பார்க்கிறேன். இந்த ஆண்டில்தான் சட்டப்பேரவைக்கான புதிய கட்டிடம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகியவை திறக்கப்பட உள்ளன. தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு மீண்டும் நிலைநாட்டும் பணியாக கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த அரசு ஆயத்தமாகி வருகிறது. புத்தாண்டு நாளில் புதுமை காண்போம். புதியன படைப்போம். புதிய வரலாற்றை உருவாக்குவோம்"

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் :

"ஆசிரியர்கள், அறம்சார்ந்த கல்வியையும், வாழ்க்கை முறைகளையும் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.நம்நாடு, 2020ல் நிச்சயம் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இருக்கும். அதற்கு, நம் கல்வித்தரம் உயர்த்தப்பட வேண்டும். அறிவியலும், ஆன்மிகமும் இணைந்த கல்வியை மாணவர்கள் பெறவேண்டும். நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரம் நடவேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால், 100 கோடி மரங்கள் நம்மால் நடமுடியும். "10 லட்சம் மக்கள், 10 லட்சம் மரம்' என்ற இயக்கத்தை, முனைப்புடன் அனைவரும் செயல்படுத்த முன்வரவேண்டும்.

நாட்டில் வறுமை மற்றும் பிரச்னைகளை ஒழிக்க கல்வியே சிறந்த மருந்து. "புரா' திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களை முன்னேற்ற வசதி படைத்தவர்கள் முன்வர வேண்டும். நாட்டில், 7,000 "புரா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு உயர்கல்வி முக்கியம். உயர்கல்வி அளிக்க, நம்நாட்டில் நூற்றுக்கணக்கான பல்கலை தேவைப்படுகிறது.உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டும் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆகையால், இன்னும் 10 ஆண்டில், இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இருக்கும்.


தனிமனித ஒழுக்கம் என்பது சமுதாய சூழலுக்கு முக்கிய தேவை. வரும் 2030ல் இந்தியர்கள் நிலவில் நடப்பார்கள்.அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தலா 5,000 அணுசக்தி ஆயுதங்கள் உள்ளன. அவற்றை 2,000 ஆக குறைக்க, இருநாட்டு தலைவர்களும் சமீபத்தில் கூடி பேசியுள்ளனர். இது, வரவேற்கத்தக்க ஒன்று ".
இவ்வாறு, அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.


செய்தி # 2

2010 வருடத்தின் மிக பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ள படங்கள் என்று இந்து பத்திரிக்கை சில படங்களை குறிப்பிட்டு இருந்தனர். அவற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த படங்கள்.

முதலாவது, "எந்திரன்" என்று உங்களுக்கு சொல்ல தேவையே இல்லை.

இரண்டாவது,

சந்திரமுகி படத்திற்கு பின்னர் சிவாஜியின் பேனரில், அஜித் நடித்து வரும் அசல்.

அஜித்-சரண் - பரத்வாஜ் வெற்றி கூட்டணியின் படம் என்பதால் இந்த படத்தின் ஆடியோ உரிமைக்கு மட்டும் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது ஐங்கரன் நிறுவனம். அசல் படத்தை வாங்கி வெளியிட வழக்கம் போலவே சன் டிவி முயற்சி செய்ய, ஆனால் தயாரிப்பாளர் பிரபு மறுத்துவிட்டதாக தெரிகிறது.

அசல் படத்தை, இசை வெளியீடு முதல் படத்தின் ரிலீஸ் வரை ப்ரமோட் செய்வதில் பொறுப்பு ஏற்று இருக்கிறது குமுதம். ஆனந்த விகடனை போல குமுதமும் பட தயாரிப்பில் விரைவில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மூன்றாவதாக,

மூன்று வருடங்களாக செல்வராகவன் உருவாக்கி இருக்கும், ஒரு வழியாக பொங்கலுக்கு வெளிவர இருக்கும் ஆயிரத்தில் ஒருவன்.

பருத்தி வீரன் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆந்டிரியா நடித்து இருக்கும் படத்திர்க்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நீண்ட இடை வேளைக்கு பின் ஒரு பாடலை பாடி இருக்கிறார் பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்கள்..
சர்வதேச தரத்தில், நமது தமிழ் வரலாற்று பின்னிணியில் படம் இருக்கும் என்கிறார் செல்வா. சன் உட்பட எல்லா சேனல்களும் படம் பற்றிய செய்திகளை பாகுபாடு இன்றி ஒளிபரப்பியது நம் உலக தொலைகாட்சிகளில் இதுவே முதல் முறை என்று தெரிகிறது.

இந்த 2010 எல்லோருக்கும், உங்களுக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.


(நன்றி..இனி அடுத்த வாரம்).

- இன்பா

18 Comments:

இலவசக்கொத்தனார் said...

இட்லி வடை கூட கனகவேல் காக்க படத்தை ஆட்டத்தில் சேர்க்காததை வன்முறையாகக் கண்டிக்கிறேன்!!

சைவகொத்துப்பரோட்டா said...

பி.பி.ஸ்ரீநிவாஸ் மீண்டும் பாட வைத்ததற்கு ஜி.வீ.பிரகாசுக்கு நன்றிகள்.

இது முந்தைய பதிவுக்கனானது.

//காது வழியாக நெஞ்சை தொடும் இசை//

கேட்டேன், இந்த வார்த்தைகள் உண்மை.

பலா பட்டறை said...

இந்த 2010 எல்லோருக்கும், உங்களுக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

thanks inba..
thanks iv

ஜெயக்குமார் said...

சண்டேனா ரெண்டு நன்று. பிரதீபா பாட்டிலின் செய்தியைத் தயாரித்தவர் நல்ல செய்தியாய தயாரித்திருக்கிறார். கருனாநிதி வழக்கம்போல..அப்துல்கலாம் அவர்கள் இன்னொரு பிஸ்மில்லாகான்..

இன்பா உள்ளிட்ட எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Yurekha ! said...

//"அக்டோ' என்றால் "8', "நவம்' என்றால் "9', "டிசம்' என்றால் "10' என்றும் பொருள்படும்.//

In Tamilil kooda than.....

Dhasam (10) - Decem
Nava (9) - Novem

Udane, ithu Tamil alla vadamozhi enru vadakkirkku idly vadai vakkalathu vanginaal, nan poruppalla..... :)

Ashta (8) - Octo ?????

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

"நச்" பூமராங் போட்டியில் வென்றதற்கு பரிசாக தாங்கள் அனுப்பிய புத்தகம் கிடைத்தது. நன்றி. (புத்தகம் பிடித்திருக்கிறது-என் ரசனைக்கு ஏற்றது.)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இன்பாவுக்கும் இட்லிவடைக்கும் மற்றும் எல்லா பதிவுலக நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

precibalance said...

The report about the new year is totally wrong. This is how his story is built up as history.The calendar is called Gregorian calender. Gregory was a Christian priest .

While travelling in India He met one Kidambi Gopala srinivasa desikan. After learning the astrology astronomy Gregory asked his guru to set the date of his god's birth day.

Since Hindus celebrate the birth day based on stars for humans and Thithi for Avatars Shri Kidambi srnivasan said based on the description two days are possible for birth of Jesus. One on 25th December and Jan 6th or 7th transition.

Catholics opted to celebrate based on star so a star plays a role in Christmas decoration. Other christians who take Jesus as messanger only celebrate on Jan 6th or 7 th.

Further the calender adopted from Kidambi Srinivasa gopala desikan proved to be a appropriate one the world started adopting from 1923 and spread every where.

Since surya udayam was the day break for hindus Gregory adopted the same time as mark of respect to his guru. So when day breaks in India the new starts for the whole world.

the fact of the secular Gregorian calender is so. Not the bull shit you or dinamalar writes.

There was no clock how mid night can be found.

கிரி said...

என்னை பொறுத்தவரை எந்திரனுக்கு பிறகு அதிக எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ள படம் ஆயிரத்தில் ஒருவன், ட்ரைலர் அசத்துகிறது படம் அசத்துமா!

அசல் ... அஜித்திற்கு இந்த முறையாவது படம் நன்றாக இருக்க வாழ்த்துக்கள் (இயக்குனர் சரண் சமீப படங்கள் எல்லாம் ஊத்தி மூடி விட்டது, இந்த முறை இருவருக்குமே முக்கியமான படம்)

Anonymous said...

Compare the messages of the two
Presidents, the present and the
previous ones, to the Nation on
the advent of the New Year with
that of TN's CM Mr. Karunanidhi.
The extent of their wider vision
will be very clear.

Anonymous said...

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15942

"அழகிரி பேரவையை துவக்கி, ஆதாயம் தேடுபவர்கள் மீது கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தி.மு.க., தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தர்மலிங்கம் என்பவர், "அகில இந்திய மு.க.அழகிரி பேரவை' என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கி, மாநில அளவில் நிர்வாகிகளை நியமித்து வருவதாக தலைமைக் கழகத்திற்கு தகவல் வந்தது. இதுபோன்ற கட்சி சட்டதிட்டங்களுக்கு முரணான, ஆதாயம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களோடு கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படித் தொடர்பு வைத்துக் கொண்டால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது

jaisankar jaganathan said...

//முதலாவது, "எந்திரன்" என்று உங்களுக்கு சொல்ல தேவையே இல்லை//

எந்திரன் தேவையே இல்லை

மானஸ்தன் said...

// இலவசக்கொத்தனார் said...
இட்லி வடை கூட கனகவேல் காக்க படத்தை ஆட்டத்தில் சேர்க்காததை வன்முறையாகக் கண்டிக்கிறேன்!!
//
இதை நான் "வ*லி*" "மொ*லி*கிறேன்".

:>

maddy73 said...

"அக்டோ' என்றால் "8', "நவம்' என்றால் "9', "டிசம்' என்றால் "10' என்றும் பொருள்படும்./

Whether or not "Yurekha " agrees, the fact remains FACT & the FACT is 'sapt(h)a(m)' - 7, 'Ashta(m)' - 8, 'Nava(m)' - 9, 'Dasa(m)'-10 in sanskrit.

'Saath, Aat(h), Nav, Dus' (respectively for 7, 8 9 10) in Hindi too & most of the indian languages (including Tamil) have the impact of 'Sanskrit'.

Anonymous said...

IV - oru 6 weeks munnadi intha Azhagiri pervai pathi IV blog-il padithathaga gyabagam. See news: http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1001/03/1100103021_1.htm

Anonymous said...

Mani's Ravanan illai enbathu migavum varutham. Athuvum Shankar's Enthiran irukum bothu

thiru said...

I read about the months in an year differently. July and August came in between...July is named after King Julius Ceaser and August is after King Augustus.
If March is the first month, how come september is 7th as explained in the blog? This cannot be...
Does any body know better and clarify...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// thiru said...
I read about the months in an year differently. July and August came in between...July is named after King Julius Ceaser and August is after King Augustus.
If March is the first month, how come september is 7th as explained in the blog? This cannot be...
Does any body know better and clarify..
//

The original Roman year had 10 named months Martius "March", Aprilis "April", Maius "May", Junius "June", Quintilis "July", Sextilis "August", September "September", October "October", November "November", December "December", and probably two unnamed months in the dead of winter when not much happened in agriculture. The year began with Martius "March". Numa Pompilius, the second king of Rome circa 700 BC, added the two months Januarius "January" and Februarius "February". He also moved the beginning of the year from Marius to Januarius and changed the number of days in several months to be odd, a lucky number. After Februarius there was occasionally an additional month of Intercalaris "intercalendar". This is the origin of the leap-year day being in February. In 46 BC, Julius Caesar reformed the Roman calendar (hence the Julian calendar) changing the number of days in many months and removing Intercalaris.

For a detailed history, pl. read http://www.crowl.org/Lawrence/time/months.html