பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 24, 2010

சன்டேனா இரண்டு (24-1-10) செய்திவிமர்சனம்


இந்த வார செய்திகள் .... 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' ஸ்பெஷல்.

செய்தி # 1

"சுதந்திரம் அடைந்த பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்" என்று சொன்னார் காந்தியடிகள்.
ஆனால்,அவ்வாறு நடக்கவில்லை. மாறாக, இந்தியாவின் மூலை, முடுக்கு எல்லாம் பரவிகிடந்த காந்தியின் புகழை தனது அரசியல் லாபதுக்கு முழுமையாக பயன்படுத்தி கொண்டது காங்கிரஸ் கட்சி .

காந்தியின் கைத்தடி, பதவி நாற்க்காலியின் கால் என மாற்றப்பட்டது. பொது உடைமையாய் இருக்க வேண்டிய காதராடையும், கைத்தறியும் கட்சியின் தனி உடைமை என்று சொந்தம் கொண்டாடி கொண்டார்கள்.

நமது பள்ளி பாட புத்தகங்களிலும், வரலாற்றிலும் காந்தி அவர்கள் மட்டுமே முன்நிறுத்தபட்டார்.

காந்தி தாத்தா, நேரு மாமா என்று உறவுகளாய் குழந்தைகள் மனத்தில் அறிமுகபடுத்தபட்டு, பின்னர் காங்கிரஸ் கட்சியை காந்தி நிறுவினார் என்று திட்டமிட்ட பாடதிட்டம் உருவாக்கபட்டு, அது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. தங்களின் சுயநல அரசியலுக்காக காந்தியின் முகத்தில் வெளிச்சம் காட்டிய அரசியல்வாதிகள் , நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட பல தியாகிகள் முகத்தில் இருட்டு அடித்தனர்.

அவ்வாறு மறைக்கபட்ட மாவீரர்களில் முதன்மையானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். ஏப்ரல் 1891 இல் இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.

ஒருமுறை நேதாஜி சென்னை வந்தபோது மாடிப்படி ஏறுகையில், வரவேற்க இரண்டு, இரண்டு படிகளாக தாவிச் சென்றார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் . இவரிடம் அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார் நேதாஜி. தமிழக பார்வர்ட் பிளாக்கின் கிளையை துவங்கி வைத்து, அதன் தலைவராக தேவரை அறிவித்தது மட்டுமல்லாமல், "தேவர் தென்னாட்டு போஸ்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் போஸ்.

சுவாமி விவேகானந்தர் அவர்களின் ஆன்மீக வழியில் நடந்த போஸ், "வேதாந்தமும், பகவத் கீதையுமே பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மக்களை வழி நடத்தும் கருவிகள் " என்று அறிவித்தார்.

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல" என்று முழங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்க பட, ஆனால் 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது.

சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு ஜனவரி 23ந்தேதி (நேற்று) , 113 வது பிறந்த நாள்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய முழு விவரங்களுக்கு இங்கே செல்லவும் .

http://www.netaji.org/செய்தி # 2

சென்னையில் நேதாஜி நினைவு இல்லத்தை எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் பராமறித்து வருவதாக ஒரு கட்டுரை படித்தேன்.

அந்த கட்டுரையில் இருந்து...

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் 3,4,5 ஆகிய தேதிகளிலும், பின் 1940 ம் ஆண்டு, ஜனவரி 10,11 ஆகிய தேதிகளிலும் வந்து தங்கியுள்ளார்.

தேச பக்தரான அய்யாசாமி என்ற பொறியாளர், 1930ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தங்கினார் நேதாஜி. இப்போது, அய்யாசாமியின் பேரனான, எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும், புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்.

நேதாஜி வந்து தங்கியிருந்த போது ஆன செலவு, தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போகிறது. கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட பல அரிய படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்தும் போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும், இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது காங்கீரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

நேதாஜியின் தமிழக வருகையை சரியான ஆவணங்களுடன், நிறைய ஆதாரங்களையும் கொண்டு ஒரு சாட்சியாக நிற்கும் இந்த நினைவு இல்லத்தை பராமரிப்பது தற்போது தனஞ் ஜெயாவிற்கு சிரமமாக உள்ளது. வாடகைக்கு விட்டால், ஒரு நொடியில் வர்த்தகமயமாக்கி, இதன் அருமை தெரியாமல் செய்துவிடுவர்.

ஆகவே, நேதாஜியின் நினைவுகளை தாங்கி நிற்கும் இந்த இடத்தை, அதன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்க விரும்புவர்களும்,நேதாஜி நினைவு இல்லத்தை சுற்றிப் பார்க்க விரும்பு பவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 09381001793.

(நன்றி..இனி அடுத்த வாரம்)

-இன்பா
நேற்று அவர் பிறந்த நாள் என்று எவ்வளவு பேருக்கு நினைவு இருந்தது ?

32 Comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல தகவல்கள், நன்றி.

cho visiri said...

Nethaa itself means leader. Nethaajee means respectful leader.
But still , the TERM "Nethajee" refers to the One and only Subhsh Chandra Bose.

We do require another Nethaajee and another Vallabh Bhaai patel.

Guru said...

நேற்று அவர் பிறந்த நாள் என்று எவ்வளவு பேருக்கு நினைவு இருந்தது ?
காலெண்டர்லெலாம் போட்ருந்தாங்களே நேதாஜி பிறந்த நாள்னு இதை விட வேற என்ன வேணும்?

வெட்கமாய் இருக்கிறது இப்படி ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம் என்று.. பாருங்கள் ஜனவரி 30 அன்று தியாகிகள் தினம் (காந்தி நினைவு தினம்) இதைக் கூட மறக்கடிக்கும் அளவுக்கு அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளைக்கு பிறந்த நாள் கோலாகலம் எப்படி இருக்கும் என்று..

சுதந்திர வேள்வியில் தம்மை எரித்துக் கொண்ட எத்தனை தியாகிகளை நாம் மறந்து விட்டோம் அல்லது மறக்கடிக்க செய்து விட்டோம் என்பது வேதனையாக இருக்கிறது.இன்று அரசியலில் ஒரு தலைவரை பெற்றெடுத்ததை தியாகமாக சொல்லிக் கொண்டு அவர் பெற்றோர் பெயரை எங்கெல்லாம் வைக்கலாம் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.அந்தோ பரிதாபம்.!
வரும்காலத்தில் நம் சந்ததியினரை சுதந்திரத்தின் வரலாறு அறியாமல் செய்த பெருமை இந்த (இன்றைய) தியாகிகளை சேர இருக்கிறது.

kggouthaman said...

// ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல" என்று முழங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். //
நல்ல கருத்துதான்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில், இதையே, இப்படி மாற்றிச் சொல்லலாம்.
"வோட்டு என்பது வாக்காளர், வேட்பாளரின் தகுதி, தியாகம், சேவை மனப்பான்மை போன்ற தன்மைகளை பார்த்து, தானே மனமுவந்து அளிப்பதேயன்றி, நோட்டுப் பிச்சை பெற்றுக்கொண்டு, வோட்டுப் பிச்சை அளிப்பது அல்ல"

கிருஷ்ணமூர்த்தி said...

ஒருவர் பிறந்தநாள், இறந்த நாளை எல்லாம் நினைவு வைத்துக் கொண்டு, மலர் வளையம் வைத்தும் ஊர்வலம் நடத்தியும் கொண்டாடினவர்களால் மட்டும் என்ன நடந்தது?

நினைவு வைத்துக் கொள்ளவேண்டியது இவர்கள் பிறந்த நாளையா அல்லது இவர்கள் நடத்திய போராட்டங்கள், அதன் படிப்பினைகலையா?

இன்பா, கொஞ்சம் தெளிவாத்தான் எழுதுங்களேன்!

ராஷா said...

இந்தியாவின் மறக்கடிக்கபட்ட வரலாறுகளில் ஒன்று..

"The Great Leader" நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்.

எல்லா பெருமையும் காங்கிரசுக்கே...

யதிராஜ சம்பத் குமார் said...

நல்ல பதிவு. இன்பாவிற்கு பாராட்டுக்கள்!!

நேதாஜியை மட்டுமல்ல, பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும், தேசப் பற்றாளர்களையும் காங்கிரஸ் கட்சி மறந்தே போய்விட்டது. இன்றைய நிலையில் காங்கிரஸாரைப் பொருத்தவரை சோனியாதான் தியாகி.

ஒருகாலத்தில் தேசத்தைக் கட்டமைத்த காங்கிரஸ், இன்று அதே தேசத்திற்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Anonymous said...

மாடிப்படி ஏறுகையில், வரவேற்க இரண்டு, இரண்டு படிகளாக தாவிச் சென்றார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்/////

அய்யோ அய்யோ

ஜெயக்குமார் said...

யதிராஜ சம்பத்குமாரின் வார்த்தைகள்தான் எத்தனை உண்மை.

//ஒருகாலத்தில் தேசத்தைக் கட்டமைத்த காங்கிரஸ், இன்று அதே தேசத்திற்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்//

இந்தியாவின் வரமாக இருந்த காங்கிரஸ் இன்றைய தேதியில் சாபமாகி விட்டது.. காங்கிரஸ் ஒழியும் நாளில் இந்தியா இன்னுமொரு விடுதலை அடையும்..

R. Jagannathan said...

Greetings to all on the occassion of our Republic Day. We have to remember with gratitude all our forefathers who fought for out freedom. I like to comment on the need to preserve a building in Chennai in memory of Netaji. He had stayed there for 5 days some 70 years ago. If some one can really dig into the history, there will be hundreds of places where Netaji would have stayed in his life time visiting people. So also many other known leaders as Mahatma, Rajaji et al. Will it be practical to maintain all the buildings for ever? Does one require monument to remember the greats? It may be ok if a monument is erected at any one place in India for the great people and it should be really significant. We have also to remember that there are lakhs and lakhs of people who have suffered / imprisoned / lost their wealth and families while fighting for the Independance led by these leaders. They are our unsung heroes. I don't deem their sacrifices any less than the Netajis. So, it is enough if all of us remember the freedom fighters whenever possible and there is no need to maintain / visit a monument on a single day. I do hope there are readers who will share my view. Thanks,
- R. Jagannathan

பிள்ளையாண்டான் said...

நல்ல பதிவு.. வரவேற்கப்படவேண்டிய கருத்துக்கள். அரசியல் காரணங்களுக்காக, அழிக்கப்பட்ட மற்றுமொரு தலைவர்...

Anonymous said...

//1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். ஏப்ரல் 1891 இல் இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.//

1920 & 1891 என்ன சொல்ல வர்றீங்க? 1891-ல விலகீட்டு திரும்ப 1920-ல சேந்தாரா?

அமைதி அப்பா said...

//1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார்//.

இன்றைய தினத்தில் தலைவராக விரும்புகிறவர்களில் எத்தனை பேருக்கு, எழுத படிக்க தெரியும் என்று நினைத்துப் பார்த்தால், நாடு எவ்வளவு பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை உணரலாம்....!
.

Anonymous said...

Vanakkam..

Well said Mr. Jagannathan!!
I completely go with u..
The moral learnt from the lives of such great personalities is wat matters more and not mere treasuring the monuments!

Wat, I think, we have to do is to apply the old values we got to know, towards the good of the present..

//there are lakhs and lakhs of people who have suffered / imprisoned / lost their wealth and families while fighting for the Independance led by these leaders. They are our unsung heroes//

This is undoubtedly true!

//நேற்று அவர் பிறந்த நாள் என்று எவ்வளவு பேருக்கு நினைவு இருந்தது ?//

23rd January Netaji oda birthday nu enaku epavum marakkaadhu, as it is the birthdate of my mother too ;)

Sooryagandhi..

Anonymous said...

Vanakkam..

Well said Mr. Jagannathan!!
I completely go with u..
The moral learnt from the lives of such great personalities is wat matters more and not mere treasuring the monuments!

Wat, I think, we have to do is to apply the old values we got to know, towards the good of the present..

//there are lakhs and lakhs of people who have suffered / imprisoned / lost their wealth and families while fighting for the Independance led by these leaders. They are our unsung heroes//

This is undoubtedly true!

//நேற்று அவர் பிறந்த நாள் என்று எவ்வளவு பேருக்கு நினைவு இருந்தது ?//

23rd January Netaji oda birthday nu enaku epavum marakkaadhu, as it is the birthdate of my mother too ;)

Sooryagandhi..

Avinash Srinivasan said...

நேதாஜியின் பிறந்த நாளைப் பற்றி ஜெயா டிவி பார்த்து தெரிந்து கொண்டேன். (நேரம்!)

maddy73 said...

Sincere Solute to the 'GREAT NETA-JI', 'Netha' means 'thalaivar' & 'JI' adds respect.

//சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். ஏப்ரல் 1891 இல் இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.//

Something wrong in years..

Anonymous said...

Netaji cried in Andaman prison but unable to do anything!!!!

http://www.jeyamohan.in/?p=1196

Anonymous said...

http://www.jeyamohan.in/?p=1311

Anonymous said...

நல்ல பதிவு.

Hats off to Inba

முகமூடி said...

நேதாஜியும் காந்தியடிகளும் அரசியலில் கொள்கையில் இருதுருவங்களாக இருந்தாலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பும், மரியாதையும், மதிப்பும் இன்றைய சூழலில் பெறும் ஆச்சரியமே. இருவரும் ஓரே சிறையில் இருந்தபொழுது நேதாஜி காந்திக்கு உணவு சமைத்து போடுவாராம். காந்தியின் ஆதரவில்லாமல் காங்ரஸ் தலைவராக இருந்த ஒரே தலைவர் நேதாஜி என்றால் அவருக்கிருந்த ஆதரவும் அன்றைய அரசியலில் இருந்த ஜனநாயகமும் புலப்படும்.

பாவேந்தன் said...

இன்பா, காங்கிரஸ் வரலாற்ற மாத்திடுச்சுனு சொல்லி நீங்கதான் தப்பான வருஷங்கள சொல்லறீங்க. இவ இன்பா post யும் படிச்சுட்டு post பண்ணுங்க. இத சில பேரு point out பண்ணியும், சில பேரு இவ நம்பி "இவ"வே comment பண்றீங்க... சபாஷ்...

Anonymous said...

இந்திய தேசிய ராணுவத்தின் அவலநிலையும் தோல்விகளும் சுபாஷிடம் சொல்லப்படும்போது அவமானமும் மனக்கசப்பும் மீதூற செய்வதறியாமல் அவர் எரிந்துவிழுகிறார். திட்டுகிறார். கண்ணீர் விட்டுக்கொண்டு அவர்களிடம் மேலும் போராடும்படி சொல்கிறார். என்.என்.பிள்ளை காட்டும் சுபாஷ் சந்திர போஸ் இலட்சியவாதத்தின் மேகமயமான கனவுலகில் இருந்து போர் என்ற அப்பட்டமான யதார்த்தத்தின் முள்காட்டுக்குள் விழுந்து தவிப்பவராகக் காட்சியளிக்கிறார்.

Anonymous said...

சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார்.

ஏப்ரல் 1891 இல் இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.

Before his birth how he இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.

Anonymous said...

‘‘வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஜோதிபாசு 2009 ஜனவரி 31&ம் தேதி அன்று அறிக்கை வெளியிட்டார். அதில் ஒரு முக்கியமான வரலாற்று உண்மையைக் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். ‘நான் முதல்வராக இருந்தபோது வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். அப்போது மேற்குவங்காளத்தில் உள்ள பராக்கா அணை சம்பந்தமாக இருதரப்புக்கும் நிலவும் நீண்ட கால பிரச்னைக்கு உடன்பாடு செய்துகொள்வதென முடிவு செய்தோம். ஆனால், அந்த உடன்பாட்டில் மாநில முதல்வர் என்ற முறையில் நான் கையெழுத்திட முடியாது. இந்தியாவின் பிரதமர்தான் கையெழுத்திட முடியும். இதனால் உடனடியாக அப்போதைய பிரதமர் தேவகவுடாவிடம் வலியுறுத்தி... நானும் வங்கதேச பிரதமரும் செய்துகொண்ட உடன்பாட்டை செயல்பட வைத்தேன்’ என கூறியிருக்கிறார் ஜோதிபாசு.

இந்த ஒப்பந்தத்தின் போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் நாடாளுமன்றத்தில், ‘இன்று வங்கதேசத்துடன் இந்தியா செய்துகொண்டுள்ள உடன்பாட்டை உருவாக்குவதற்கு மேற்குவங்க முதல்வர்தான் முக்கியக் காரணம்’ என்றார்.

மேற்குவங்காள மக்களை பாதித்த பராக்கா அணை பிரச்னையில், மாநில முதல்வராக இருந்தபோதும் அடுத்த நாட்டுடன் பேசி சுமுகத் தீர்வு கண்டார் ஜோதிபாசு. ஆனால், இலங்கையில் ஈழத் தமிழர்கள் துடிக்க... அதைப் பார்த்து தமிழகத் தமிழர்களும் துடிக்கிற நிலையில், ‘எல்லாம் இந்திய அரசின் கைகளில்தான் இருக்கிறது’ எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் கலைஞர். ஜோதிபாசுவின் நண்பர் என சொல்லும் கலைஞர் எல்லாவற்றையும் டெல்லியிடமே ஒப்படைத்துவிட்டார். ஈழ விஷயத்தில் நண்பர் ஜோதிபாசுவின் வழியை கலைஞர் பின்பற்றலாமே?’’

Anonymous said...

டோண்டுவ கேக்கணும், சுபாஷுக்கு துபாஷி வேல பாத்தேன்னு கத விடுவாரு!!

Anonymous said...

Please also write about how Gandhi/Nehru/Congress tried to sabotage, overshadow and attacked Netaji before and after his "so-called" Death.

Truth will ultimately come out after the de-classification of KGB, UK and Japan secret docs on Netaji.

Gokulathilsuriyan said...

காந்திஜி ., நேருஜி பிறந்தநாள் தெரியும்..!
நேதாஜி பிறந்தநாள்...?

நம்ம பல பேருக்கு தெரியாது..
அந்த நாள் -
ஜனவரி 23

நம்ம நேதாஜியை
ஜெர்மனிய வரலாறு
"உயர்ந்த புரட்சி வீரன்" கொண்டாடுது..

ஆனா., இந்தியா..?

ஜெயித்தால் புரட்சியாளன்..,
தோற்றால் தீவிரவாதி..! - இது தான்
புரட்சியாளர்களுக்கு கிடைக்கும் பரிசு..

" சுதந்திரம் " அகிம்சை வழியில் வந்ததால்
நேதாஜியின் புரட்சி வழி தப்புங்கிற
மாதிரியே ஒரு மாயை உருவாக்கிட்டாங்க..

கட்டபொம்மனும்., மருது சகோதரர்களும்
செய்தது சரின்னா..
நேதாஜி செய்தது மட்டும் எப்படி
தப்பாகும்..?

நேதாஜி பிரிடிஷ்காரனை எதிர்த்தார்
கூடவே
அகிம்சையையும் எதிர்த்தார்..,

"சுதந்திரம்" என்பது
பிச்சை கேட்பதில்லை..,
நாமே எடுத்துக்கொள்வது என்றார்.

மக்கள் சக்தியை வீணடிக்கிறார் என்று
காந்திஜி மீதுகூட அவருக்கு
கோபம் இருந்தது..

உங்க வீட்டுல யாரோ வந்து.,
உங்களையே அடாவடி.,
அதிகாரம் பண்ணினா..
நீங்க என்ன பண்ணுவீங்க..?

* " வெளிய போங்கன்னு..! "
உண்ணாவிரதம் இருப்பீங்களா..?

- இல்ல..,

* நாலு தட்டு., தட்டி துரத்துவீங்களா..?

முன்னது காந்தி வழி.,
அடுத்தது நேதாஜி வழி..
இப்போ நீங்களே முடிவு பண்ணுங்க..!

" நேதாஜி " - இந்த உயர்ந்த தலைவனை
பற்றி ஒரு பிளாக்கில் எழுதிவிட முடியாது..
ஆனா.,
ஒரு புத்தகத்தை மட்டும்
பரிந்துரை செய்ய முடியும்.

" நேதாஜி - ஆதனூர் சோழன், நக்கீரன் பதிப்பகம் "

புத்தகத்தை படிச்சவுடனே
மனசு வலிக்கிறதையும்.,
நரம்புகள் துடிக்கிறதையும்
உங்களால தடுக்கவே முடியாது..

இது நாள் வரைக்கும்
நேதாஜி பத்தி தெரியாதது
தப்பில்ல.., - ஆனா..
இனிமேலும் தெரிஞ்ச்சிக்காம
இருக்கிறது ரொம்ப தப்பு..!

jaisankar jaganathan said...

//இந்தியாவின் வரமாக இருந்த காங்கிரஸ் இன்றைய தேதியில் சாபமாகி விட்டது.. காங்கிரஸ் ஒழியும் நாளில் இந்தியா இன்னுமொரு விடுதலை அடையும்..
//

repeataiiii

Anonymous said...

A good write up. But before complaining about others let us introspect why did not Idly Vadai tell it in advance. How many of us educate our children on Indian freedom movement. Let us not bring Congress Party and the Drawadian movement into the picture. It is our inability and cowardice(including mine) that leads to all the anarchism that is present. Somebody must bell the cat and take up the cudgels. India requires a second freedom movement to liberate it from the cultural and moral devaluation. Why not Idly Vadai start a movement. Let us all start educating our children about freedom movement and the sacrifices made by all the past greats.

ஆதி மனிதன் said...

//...1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். ஏப்ரல் 1891 இல் இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.//

1920 மற்றும் 1891 வருட கணக்கு எங்கோ இடிக்கிறதே!

Kameswara Rao said...

"நேதாஜியின் பிறந்த நாளைப் பற்றி ஜெயா டிவி பார்த்து தெரிந்து கொண்டேன். (நேரம்!)" Atleast You came to know about this through Jaya TV what about other Channels did they say anything about this I do not remember ..

There are many unsung heroes who have lost their lives following Nethaji and others true...

You should see what is being done to other leaders why Gandhi has a home or a Centre in all the places in India and why not one for Nethaji in Tamilnadu...

Kamesh